உன் கண்ணில் என்னை கண்டேன் epi 3

Advertisement

Karthikpriya

Active Member
3rd epi கொடுத்திருக்கேன் பிரண்ட்ஸ் படித்துவிட்டு கமெண்ட் கொடுங்க பிரண்ட்ஸ்


உன் கண்ணில் என்னை கண்டேன்
3

காலை 9.00 மணி, ஸ்கூல் பெல் அடிக்கும் ஒலி கேட்டு அனைத்து சிறாக்களும் தன் வகுப்பு கூண்டிற்குள் வந்தடைகின்றன.
9.30 மணியளவில் வர்ணாவும் சித்துவும் ஒருவழியாக கதை பேசியவாறே பள்ளியை வந்தடைந்தனர். ஸ்கூல் கேட் அருகில் வந்ததும் வர்ணா தன் வாட்சை பார்க்கிறாள்.
வர்ணா, “ஐயையோ டைம் 9.30 ஆகிடுச்சு டா, போச்சு இன்னைக்கும் மேம்கிட்ட திட்டு வாங்க போறேன். “ என பயத்தில் அலறுகிறாள்.
சித்தார்த், “என்ன இன்னைக்கும்னு சொல்ற, அப்போ தினமும் லேட்டா வந்து திட்டு வாங்குவாயா?”
வர்ணா, “ஆமாம் ஆமாம். போதும் ரொம்ப பேசிட்டே இருக்க, உன்னால தான் இன்னைக்கு லேட். இப்போவும் பேசிட்டே இருக்காம உள்ளே வாடா” என கூறி அவனை இழுத்துகொண்டே ஓடுகிறாள். இதை கேட்ட சித்தார்த் தன் வாயில் கை வைத்து, “நானா பேசிட்டே இருந்தேன்” என முனகிக்கொண்டே அவள் பின்னால் ஓடிவருகிறான்.
கிளாஸ் வாசலில் வந்து நின்ற வர்ணா, “மே ஐ கம் இன் மேம்?”என மெதுவாக கேட்கிறாள்.
மேடம், “ஏன் லேட்?” என கோபமாக கேட்கிறார்.
வர்ணா, “மேம் இந்த பையனோட சைக்கிள் பங்ச்சர் மேம் ரெண்டு பேரும் சேர்ந்து தள்ளிகிட்டே ஸ்கூல் வந்தோம் மேம். இவனுக்கு பர்ஸ்ட டே ஸ்கூல் மேம் அதனால கிளாஸ் தெரியாம முழிச்சிட்டு இருந்தான் மேம் அவனை கூப்பிட்டுட்டு வரதுக்கு தான் மேம் லேட்டா ஆகிடுச்சு.” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறுகிறாள்.சித்தார்த் வாயில் கை வைத்து “ஆ” என இவளை பார்க்கிறான்.
மேடம், “சரி சரி உள்ளே வா தினமும் தாமதமா வர. தினமும் ஒரு புது கதை சொல்ற. ஒரு நாளாவது சீக்கிரம் வர ட்ரை பண்ணு. போ போய் உட்காரு.” என்று கூறி வர்ணாவை உள்ளே அனுப்புகிறார்.
சித்தார்த்தை நோக்கி, “வாட்ஸ் யுவர் நேம்? இண்ட்ரோட்யூஸ் யுவர்ஸெல்ப்(what’s your name? Introduce yourself).” என கேட்கிறார்.
சித்தார்த், “ஐம் சித்தார்த். ஐம் பிரம் திருச்சி. மை பாதர்ஸ் நேம் இஸ் ஞானசேகர். மதெரஸ் நேம் இஸ் அமுதா. ஐ ஸ்டெடீட் இன் தனலட்சுமி ஸ்ரீனிவாசா மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்.”
மேடம், “ஓகே சைல்ட் டேக் யுவர் சீட்”என கூறி அவனை அனுப்புகிறார். வகுப்பு ஆரம்பித்ததும் அனைவரும் அமைதி ஆகிறார்கள்.
பள்ளி இடைவெளி நேரத்தில் அனு என்னும் மாணவி தனக்கு பிறந்தநாள் என கூறி சித்தார்த்திற்கு சாக்லேட் தருகிறாள். சித்தார்த் ஒரு சாக்லேட் எடுத்ததும், “பரவாயில்லை இன்னும் ஒரு சாக்லேட் எடுத்துக்கோ.” என கூறுகிறாள்.
இதை கேட்ட அருள் (குண்டு பையன்), “என்னை மட்டும் ஒன்னு தான் எடுக்கணும்னு பத்து தடவ சொல்லிட்டு சாக்லேட் கொடுத்த. இவனுக்கு மட்டும் இன்னும் ஒன்னு எடுத்துக்க
சொல்ற?” என சண்டைக்கு வந்தான்.
அருளை பார்த்து முகத்தை அழகாக சுளித்த அனு, “நீ என்னைக்காவது ஒரு சாக்லேட்டோட நிறுத்தி இருக்கயா? அத்தனை தடவை சொல்லியும் நீ பத்து சாக்லேட் குறையாமல் எடுத்த தான?”என கோபமாக கேட்கிறாள்.
அருள், “அப்போ மட்டும் இல்லை இப்போவும் எடுப்பேன் என கூறி கை நிறைய சாக்லேட்டை அள்ளி கொண்டு வகுப்பில் இருந்து ஓடுகிறான். அனுவும் அவனை துரத்திக்கொண்டே ஓடுகிறாள். வகுப்பே சிரிப்பலையில் மூழ்குகிறது.
இப்படியே மகிழ்ச்சியாக சில மாதங்கள் கரைகிறது.சித்து வர்ணாவின் அப்பா வெங்கட்டுக்கு செல்லம் ஆகிறான். அதே போல் வர்ணாவும் சேகர் மற்றும் அமுதாவின் செல்லக்குட்டி ஆகிறாள்.
சுபத்ரா படிப்பில் பிஸியாக இருந்ததால் தனிமையில் தவித்த அமுதாவுக்கு உற்ற துணையாகி போகிறாள்.
சித்து விஜயாவிடம் தினமும் வர்ணாவுடன் சேர்ந்து தொலைபேசியில் பேசிவிடுவான். அவன்தான் அன்று நடந்த முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் விஜயாவிடம் கூறுவான்.வர்ணா செய்யும் குறும்புகள் அனைத்தையும் ஒன்று விடாமல் விஜயாவிடம்
சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top