E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

sugi_283

New Member
One of the most rememberable stories which I read. Thanks for such a wonderful story sis. Totally surrendered in your writing. Out of my control with my emotions while reading the story
 
நன்றி நன்றி மட்டுமே. வேறு வார்தைகள் இல்லை விவரிக்க.மனம் நிறைந்த நாவல்.
 

Jarsha

New Member
வார்த்தைகளால் வடிக்க முடியாத அற்புதமான படைப்பு... பல நாட்களுக்குப் பிறகு ஒரு கதை படிக்கும் போதே சிரித்து அழுது ஆச்சரியப்பட்டு எல்லாவிதமான நவரசங்களையும் கொண்டு வந்து விட்டீர்கள். சுதா சாப்பிட்டு கண்ணனுக்கு கொடுக்கும் நெல்லிக்கனி போல் புளிப்பாக இருந்தாலும் கடைசியில் தண்ணீர் குடித்து இனிக்கும் இனிப்பு சுவை போல ஒரு நல்ல முடிவு.... வாழ்த்துக்கள்...
 

vetrimathi

Well-Known Member
இறுதி அத்தியாயம்

ஏதோ இப்போது தான் சேர்ந்து இருக்காங்க அதுல கொஞ்சம் தனிமை தராமல் எல்லோரும் நந்தி போல பாவம் பிள்ளைகள்....

சுதாவின் தந்தை பரதன் சுசிலா விற்கு தெரியும் என்பது கூடுதல் தகவல் என்று நினைக்கிறேன்....

குட்டி பையன்.. அச்சோ… அவன் பேர கேட்கவே இல்லையே… அவன் பேரென்ன?” நிறைய குட்டி இருக்காங்க யார் கேட்டாங்க சுசி....

சுதா & கார்த்திக் பந்தம் & வேதனை விளக்கம் அருமை...

தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் தாயின் மனநிலையில் கார்த்திக் என்ன ஒரு அழகான வரிகள்...
அவன் செயல்கள் அனைத்தும் சுதாவின் நலன் மட்டுமே.. லின்டா பாவம் என்று தோன்றுகிறது அவர்களது முதலிரவில் கூட சுதாவை பற்றி அதிகம் பேசியிருப்பான் போல.....

எல்லோரும் கண்ணன் கிளம்பியதும் பின்னாடியே ‌வந்தாச்சி போல அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு....

இடுப்பு வலியோடு பிருந்தா வந்து நிற்பாள் என்று ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. நாங்களும் தான்....

ஃப்ரண்ட் காக பதறும் ஜான்சி உண்மையில் ஜான்சி அருணா பிருந்தா நட்பு பாராட்டுக்குரியது.....

எப்படியோ அருணா மூலமாக ஜான்சி க்கு அஷோக் பிருந்தா பற்றி கூறிவிட்டீர்கள்...

சுதாவ ஏன் அந்த கோவிலுக்கு வந்தானு கேட்ட ஜான்சி தான் ஏன் வந்தேனு சொல்லி இருந்த ஒரு முப்பது எபிசோட் முன்னாடியே கதை முடிந்து இருக்கும்...

கதை இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணமாதலால் ஜான்சி மன்னிக்கலாம்....
ஜான்சி யிடம் கண்ணன் நன்றி சொல்வதும் அதற்கு அவளின் பதில் கைதட்டல் உங்களுக்கு...

நிறைய விசயங்களை பார்வையில் உணர்த்தும் விதமாக அருமை சகோதரி....

கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி பின்னால் சாய்பவளை எப்போதும் போல தாங்கும் ஜீவன்...

சுதாவிடம் பிருந்தா கல்யாணம் நிருத்தியதற்கு கண்ணனின் இரண்டு சொட்டு கண்ணீர் அதில் அவனில் என்றுமே சுதா மட்டுமே என்ன ஒரு அழகான வெளிப்பாடு....

தாலி குத்துகிறது என்று கண்ணன் எப்போ சொன்னான்...

இஷா கண்ணன் & சுதாவின் இளவரசி கூறும் டேஷ்ட் மழலை மொழி என்றும் இனிமை, அங்கயும் சுதா நெல்லி எப்படி தருவாள் என்று மறைத்து கூறினாலும் நாங்கள் கண்டுகொண்டோம்...

கண்ணன் & ஜோ உறவிற்கு இணையாக கார்த்திக் & சுதா உறவை கூறி பாராட்டை பெறுகின்றீர்....

சுசிலாவின் இந்த புதிய அவதாரம் சிறப்பு...

சுசிலா>கண்ணன் & சுதா>இஷா

பால்ராஜ் & ஷாலினி > டேனி & ஜான்சி > அருள் & அபிநயா..

தேவசகாயம் & ஷாந்தா>அனி,கார்த்திக் & லின்டா>ஜோசப் & ஜேன்..

சதிஷ் & நீலாவதி>தீபக்கின் & ரேனு>க்ரிஷிகா

ஜீவன் & பிருந்தா
வெங்கட் & ஜென்னி> (பெயர் கூறா அவர்கள் மகன்)

அருணா & அருணா கணவன்> (அவங்க இரண்டு பசங்க)

இப்படி எல்லா கதாபாத்திரங்களையும் அருமையாக படைத்து அவர்களை சுதா & கண்ணன் வாழ்க்கையில் கச்சிதமாக பொருந்தி 79 அத்தியாயங்களாய் எங்களை ஆட்சி செய்த மாயக்காரி நீங்கள்.

சிரிக்க வைத்தீர்கள், காதலிக்க கற்றுத்தந்தீர், அயவைத்தீர், சிந்திக்க வைத்தீர்.. குழப்பத்தில் புலம்ப வைத்தீர்... இப்படி அனைத்து விதமான உணர்வுகளை அடுக்கடுக்காக அளித்து அசரவைத்தீர்..

மொத்தத்தில் உங்கள் எழுத்துகளுக்கு அடிமையா அலையவிட்டீர்...

நன்றி நன்றி....

ஷோபா சகோதரி அவர்களுக்கு நான் ஒரே சோகமாகவும் & கோவமாகவும் இருக்கேன் 25th ல் இனிமே அடுத்த பதிப்பு எப்போதும் வரும் அதில் என்ன குண்டு வைத்துள்ளீர்களோ என்று காத்துக் கிடக்க முடியாது.. ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்தீர்கள்?

நான் உங்களை மன்னிக்கவேண்டும் என்றால் உடனடியாக விரைவில் இதைவிட அழகான கதையுடன் வரவும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top