ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser
ரிஷி ஸ்ரீராமுக்கு கதை சொல்லியவாறே தூங்க வைத்துக்கொண்டிருக்க, அறையினுள் நுழைந்தாள் கயல்.
"இன்னும் தூங்கலையா?"
"கத சொன்னா ஆயிரம் கேள்வி கேக்குறான். எங்க தூங்க" நொந்து போய் ரிஷி.
தனக்குள் நகைத்தவள் அறையின் வெளிச்சத்தை குறைத்து விட்டு ஸ்ரீராமை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுக்க அடுத்த கணம் கண்ணயர்ந்திருந்தான் அவன்.
மனைவியை அணைத்துக் கொண்டு "நா தூங்க வச்சா மட்டும் தூங்கல நீ வந்த உடனே தூங்கிட்டான்"
"லைட்ட போட்டு வச்சிருந்தா தூங்க மாட்டான் கேள்வி தான் கேப்பான். சரி தூங்குங்க. ரொம்ப டயடா இருக்கு" என்றவள் கண்மூடிக் கொள்ள
"எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு" என்றவன் அவளின் கால் மாட்டில் அமர்ந்து கால்களை பிடித்து விட
"என்னங்க பண்ணுறீங்க?" என்றவாறே எழுந்தமர்ந்து கணவனை தடுக்கலானாள் விழி.
அந்த இருட்டிலும் அவளின் மெட்டி பளபளக்க "உன் காலுக்கு மெட்டி அழகா இருக்கில்ல" என்று தடவி கொடுக்க கயலின் மேனி சிலிர்த்தது.
அன்று நடந்த தாலி பெருக்கும் நிகழிச்சியின் போது தாலியை கட்டி முடித்தவன் குங்குமத்தை வகுட்டில் விரல் கொண்டு வைக்க அவனுக்கும் சிலிர்த்தது.
உடனே எழுந்து மனைவியை தூக்க இளசுகள் எல்லாம் கோரஸாக ஓ.. போட எதையுமே கண்டு கொள்ளாமல் மனைவியை கதிரையில் அமர்த்தி மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் பாதத்தை தனது தொடையின் மீது வைத்து சட்டை பாக்கட்டி வைத்திருந்த மெட்டியை எடுத்து அணிவித்திருந்தான்.
அவனின் இச்செயலை கண்டு முதலில் திகைத்த கயல் உள்ளம் குளிர காதலாக கணவனையே பாத்திருக்க, அடுத்து அவன் காலை முத்த மிட வெக்கிச் சிவந்தாள்.
"அண்ணா அண்ணிக்கு மெட்டியெல்லாம் வாங்கி இருக்கீங்க. இந்த தங்கச்சிக்கு ஒண்ணுமில்லையா?" அகல்யா பொய்யாய் முறைக்க
"உனக்கில்லாமலையா?" என்றவன் ஒரு ஜோடி கொலுசை கையில் கொடுத்து "நானே போட்டும் விடணுமா?" கண்ணடித்தான்.
"அன்னைக்கி நீங்க எல்லாருக்கும் கிப்ட் கொடுத்தீங்களே" கயல் அன்றைய நாளின் நினைவுகளில் முகம் மலர
"எத்துணை கிப்ட் கொடுத்தாலும் அகல்யாவுக்கு கொடுத்த கிப்ட் தான் எனக்கு பிரயோஜனமா இருக்கு" என்றவன் மனைவியை அணைத்துக்கொள்ள
"என்ன புரியலையா? அவ சொல்லாம கொள்ளாம ஆஜராக்குறா என் பொண்டாட்டிய ரொமான்ஸ் பண்ணவே முடியல இப்போ கொலுசு போட்டிருக்கால்ல அவ வரும் போதே நான் உஷாராகிடுவேனே"
"தேறிட்டீங்க" என்றவள் கணவனை கன்னத்தில் முத்தம் வைக்க
"இதெல்லாம் பத்தாது வார் பேபி" என்றவன் அதிகாரத்தை தன் வசமாகிக் கொண்டான்.

Last edited: