ராமநாதபுரம் மாவட்டம்

Advertisement

Pramo

Well-Known Member
இராமநாதபுரம் மாவட்டம் : இராம்நாட் என்றும் முகவை(வைகை நதி கடலில் கலக்கும் இடம்) என்றும் சொல்வாங்க.
சேதுபதி அரசர்களிலேயே புகழ்பெற்றவரான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி ராஜாவால் ஆட்சி செய்யபட்டது.
இராமலிங்க விலாசம் (தர்பார் மண்டபம்)
கெளரி விலாசம் (விருந்தினர் மாளிகை) இராஜராஜேஸ்வரி கோவிலும் அரண்மனை வளாகத்திலே இருக்கு.…
இப்போ அரண்மனை ஒருபகுதியில் சேதுபதி குடும்பத்தினர் இருக்காங்க. ஒரு பகுதி இராமநாதபுரம் அரசுக் கல்லூரியாகவும் அரசு பெண்கள் கல்லூரியாகவும் கொஞ்ச காலம் இருந்துச்சு… இப்பொழுது அரண்மனையின் முகப்புப் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்களும் தமிழக அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்படுது.

PicsArt_05-22-05.07.01.png

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்கள் :
180px-Ervadidargah.jpg
இஸ்லாமிய வழிபாட்டு தலம்: ஏர்வாடி – ஏர்வாடி தர்கா

cameringo_20170319_074223.jpg
கிறிஸ்தவ வழிபாட்டு தலம்: ஓரியூர் – புனித அருளானந்தர் கிறிஸ்தவ தேவாலயம்

இந்துக்கள் ஆன்மிகத் தலங்கள்:
Ramanathaswamy_temple7.JPG
இராமேஸ்வரம்
- இராமநாதசுவாமி கோயில்
images (8).jpeg
உத்தரகோசமங்கை – ( சங்ககால இலவந்திகைப்பள்ளி) மங்களநாத சுவாமி கோவில்
images (5).jpeg
திருப்புல்லாணி - ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்( 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்று)
images (16).jpeg
திருவெற்றியூர் - பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்
images (6).jpeg
திருவாடானை – (திருஆடானை- தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று) ஆதிரத்தினேசுவரர் கோயில்
blogger-image--1927805191.jpg
உப்பூர் – வெயிலுகந்த விநாயகர் கோவில் ( இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் வழிப்பட்ட ஸ்தலம்)
2017-12-30.jpg
தேவிபட்டினம் – கடலில் (நவபாஷனம்) நவகிரகங்கள் ஶ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில் உள்ளது.
 
R.viji

Well-Known Member
இராமநாதபுரம் மாவட்டம் : இராம்நாட் என்றும் முகவை(வைகை நதி கடலில் கலக்கும் இடம்) என்றும் சொல்வாங்க.
சேதுபதி அரசர்களிலேயே புகழ்பெற்றவரான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி ராஜாவால் ஆட்சி செய்யபட்டது.
இராமலிங்க விலாசம் (தர்பார் மண்டபம்)
கெளரி விலாசம் (விருந்தினர் மாளிகை) இராஜராஜேஸ்வரி கோவிலும் அரண்மனை வளாகத்திலே இருக்கு.…
இப்போ அரண்மனை ஒருபகுதியில் சேதுபதி குடும்பத்தினர் இருக்காங்க. ஒரு பகுதி இராமநாதபுரம் அரசுக் கல்லூரியாகவும் அரசு பெண்கள் கல்லூரியாகவும் கொஞ்ச காலம் இருந்துச்சு… இப்பொழுது அரண்மனையின் முகப்புப் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்களும் தமிழக அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்படுது.

View attachment 3183

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்கள் :
View attachment 3184
இஸ்லாமிய வழிபாட்டு தலம்: ஏர்வாடி – ஏர்வாடி தர்கா

View attachment 3185
கிறிஸ்தவ வழிபாட்டு தலம்: ஓரியூர் – புனித அருளானந்தர் கிறிஸ்தவ தேவாலயம்

இந்துக்கள் ஆன்மிகத் தலங்கள்:
View attachment 3186
இராமேஸ்வரம்
- இராமநாதசுவாமி கோயில்
View attachment 3187
உத்தரகோசமங்கை – ( சங்ககால இலவந்திகைப்பள்ளி) மங்களநாத சுவாமி கோவில்
View attachment 3188
திருப்புல்லாணி - ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்( 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்று)
View attachment 3189
திருவெற்றியூர் - பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்
View attachment 3190
திருவாடானை – (திருஆடானை- தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று) ஆதிரத்தினேசுவரர் கோயில்
View attachment 3191
உப்பூர் – வெயிலுகந்த விநாயகர் கோவில் ( இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் வழிப்பட்ட ஸ்தலம்)
View attachment 3192
தேவிபட்டினம் – கடலில் (நவபாஷனம்) நவகிரகங்கள் ஶ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில் உள்ளது.
ராமநாதபுரம் சுற்றி பார்த்த சந்தோசம்
 
Pramo

Well-Known Member
சேதுகரை – ஹனுமன் கோவில் (இங்கிருந்து தான் ராமர் பாலம் இலங்கை வரை கட்டப்பட்டது)
images (9).jpeg
தீவுகள்:
பாம்பன் தீவு, அப்பா தீவு, குருசடை தீவு, முயல் தீவு,
முளித் தீவு, தலையாரித் தீவு, புள்ளிவாசல் தீவு, உப்புத்தண்ணித் தீவு
சுற்றுலாத் தலங்கள்:
• தனுஷ்கோடி
acj-1405-dhanushkodi-ghost-town-4.jpg
• ஆதாமின் பாலம் (இராமர் பாலம் or இராம் சேது)
1280px-AdamsBridge02-NASA.jpg
• மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
397.png
• அரியமான் கடற்கரை
20140130_121637.jpg
• பாம்பன் பாலம்
51452.jpg
• அப்துல் கலாம் மணிமண்டபம் – பேய்கரும்பு
images (14).jpeg
• இராமநாதபுரம் அரண்மனை
220px-S-TN-44.jpg
முதுகுளத்தூர் – காஞ்சிரான்
குளம் பறவைகள் சரணாலயம்
சித்ரன்குடி பறவைகள் சரணாலயம்
• அழகன்குளம் பறவைகள் சரணாலயம்
Chitrangudi_Bird_Sanctuary_Tamil_Nadu_1.jpg
25.jpg

Tourism தான் main இங்க. மீன் பிடித்தல், மீன் ஏற்றுமதி, இறால் வளர்ப்பு, கருவாடு வியாபாரம் சங்கு, சிப்பில கலை பொருள்கள் செய்து விற்பது பனஓலை பொருள்கள்( பாய், பெட்டி, விசிறி போன்ற பொருள் எல்லாம் அருகில் உள்ள கிராமங்களில் செய்வாங்க ) மாடு, ஆடு,கோழி வளர்த்தல், கருவேல மரத்தை எரிச்சி அந்த கரியை கேரளாக்கு அனுப்புவாங்க..
விவசாயம் னா மிளகாய், நெல் பருத்தி, சில பயறு வகைகள், கத்தரிக்காய் , வெண்டைகாய் சீனி அவரைக்காய் இப்படி சில காய்கள், தென்னை பயிரிடுவதை பார்திருக்கேன்…
இந்த ஊருக்கு வேற சிறப்பு ஒன்னுமில்ல… ஸ்பெஷல் உணவுனு எதுவும் கிடையாது மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு வாசம் நிறைய இருக்கும்., பரோட்டா சால்னா ,நொங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பதநீர், பனங்கள் (கள்)
கருவேல மரம், பனைமரம் நிறைந்த இடம்
குடிநீர் காக பல மைல் தூரம் போவாங்க கிணறு இல்லனா ஊத்து நீர் ஊறும் வர காத்திருந்து அல்லனும் இப்டிதான் நான் வீட்ல சொல்ல கேட்டிருக்கேன் இப்போ காவேரி கூட்டு குடிநீர் குழாய் சுற்றி காலி குடங்கள் தான் காத்திருக்குது அப்டி இல்லனா எல்லா தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு தண்ணீர் வண்டியின் ஹாரன் சத்தம் தான்…bcoz வேற source இல்ல. நாகாட்சி என்ற இடத்தில் இருந்து கொண்டு வருவாங்க well water தான்
இங்க ஊரணிகள் முன்ன நிறைய இருந்தது இப்போ எல்லாம் கட்டிடங்கள் covert ஆகிட்டு கம்மாய்ல தண்ணீர் இல்லாத காலங்களில் வெள்ளரிக்காய் விதைபாங்க அதுவும் ஒரு வியாபாரம்.
அனைத்து முன்னணி நகை, ஜவுளி கடைகளின் கிளைகள் சமீபகாலமாக இங்கேயும் இருக்கு.
மெட்ரிக், சிபிிஎஸ்சி, ஆர்ட் அண்ட் சயின்ஸ், என்ஜினீயரிங், பாலிடெக்னிக், ஐடிஐ எல்லா கல்லூரியும் இருக்கு திரையரங்கங்கள், ஷாப்பிங் மால் நிறைய சூப்பர் மார்க்கெட் எல்லாம் இருக்கு…
முக்கியமா ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட் ஒரு ரயில்வே ஸ்டேஷன் தான் எங்க ஊர்ல இருக்கு……;)
என் சொந்த ஊர் என்னவோ இந்த ஊர் தான் but birth place வேற ஒரு ஆறு வருஷம் தான் சேர்ந்தவாக்கில் இங்க இருந்திருக்கேன் மற்றபடி அப்போ அப்போ visiting தான் so இவ்வளவு தான் இந்த ஊர் பற்றி எனக்கு தெரிந்தது…
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top