என் காதல் தீ 13

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....

அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன். எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்கப்பா... அடுத்த பகுதி எப்படியும் வெள்ளி தான் தர முடியும்னு நினைக்கிறேன். அதற்கு இடையில் முடிந்தால் ஒரு குட்டி எபியோடு வந்துவிடுகிறேன்.


HelloGuruPremaKosame.jpg
அந்த ஒற்றை படுக்கை அறை ப்ளாட்டினுள் அனைத்து பொருட்களையும் அதனதன் இடத்தில் சரியாக வைத்திருக்கிறோமா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர் நிரல்யாவும் கதிரும். அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் வந்திருந்தனர், கதிரின் கட்டளைப்படி.

நிரல்யாவிற்கு இதில் துளியும் விருப்பமில்லை. தந்தையர் இருவரும் இருப்பதால் ஏதோ சகஜமாக அவளிடம் பேச முயற்சிக்கிறான் கதிர். அவர்களை விட்டு பிரிந்து வந்தால் அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவளுக்கு. அந்த பயமும் சரிதான் என்பது போல் இரட்டை படுக்கை அறைகளை கொண்ட ப்ளாட்களாக பார்க்க ஆரம்பித்தான் கதிர். அவன்மேல் காதல் இல்லாவிடினும், சிறிதளவு ஈர்ப்பு தோன்றிவிட்டிருந்த நிரல்யாவின் மனதிற்கு இது சிறிது சுணக்கத்தை அளித்தது. அவன் இடைவெளி வேண்டியே இருப்பிடம் மாற்றுகிறான் என்பது மிகத் தெளிவாய் புரிந்தது. இருப்பினும், அவன் தன்னையும் வீடு பார்க்க அழைத்துச் சென்றது ஆறுதலாய் இருக்க, அவனுடன் சென்றவள் பல காரணங்கள் கூறி ஒவ்வொன்றாய் நிராகரித்தாள்.

கதிரும் கல்லூரிக்கு அருகிலேயே வீடு வேண்டும் என்று கண்டிஷனிட்டதால், அடுத்து ஒற்றை படுக்கை அறை கொண்ட ப்ளாட்களை பார்க்க, தன் எண்ணம் ஈடேறியதில் முதல் வீட்டையே ஒத்துக்கொண்டாள் நிரல்யா. இதோ, தற்போது அபிராமியின் உதவியுடன் வீட்டில் குடிவந்தும் விட்டனர்.

தினமும் காலை, மாலை இருவேளையும் மேற்கொள்ளும் பயணத்தில் துவண்டுவிடுபவளுக்காகவே இந்த முடிவை எடுத்திருந்தான் அவன். அவள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிந்தவர் ஒருவரை பிற வேலைகள் செய்வதற்கு உதவிக்கும் வைத்துவிட்டான். ஆனால், அவனது இந்த செயலே இருவரையும் இறுக்கிப் பிடிக்கும் என்பதை அவன் அறியவில்லை.

கதிரின் இந்த முடிவால் பெரியசாமிக்கும் மாணிக்கத்திற்கும் மனவருத்தம் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் தனியாக சிலகாலம் சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அதற்கு ஒத்துக்கொண்டனர். மூவரையும் அவன் முதலிலேயே அழைத்திருந்தாலும் யாருக்கும் ஊரை விட்டு வர மனமில்லை. எனவே, அடிக்கடி தங்களை வந்து பார்க்குமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.

********

அபிராமி அளித்துச் சென்ற சப்பாத்தியை சாப்பிட்ட இருவரும் தங்களது படுக்கை அறைக்கு செல்ல, அங்கே முழு நீளத்தையும் அடைத்து சிரித்தது பெரிய மரக்கட்டில் ஒன்று. ஸோஃபாவில் படுக்கலாம் என்று நினைத்து ஹாலுக்கு வந்தவனுக்கு முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி மீண்டும் இளித்தன அங்கே அழகுற வீற்றிருந்தன ஒற்றை இருக்கை கொண்ட சோஃபாக்களும் டீப்பாயும். தன்னால் அங்கே உறங்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது அவனுக்கு. இவற்றை எல்லாம் பார்த்து தன் வாய்க்குளேயே சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள் நிரல்யா. வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கியவள் அவள்தானே!

ஒரு நொடி பால்கனிக்கு சென்று உறங்கலாமா என்று அந்தப் பக்கம் பார்வையை வீசியவனின் எண்ணம் புரிந்தவள், “அங்க எல்லாம் உங்களால படுக்க முடியாது, ரொம்ப சின்ன இடம். உள்ளயே வாங்க” என்று சென்றுவிட்டாள்.

ஆனால், உள்ளே வந்தால் இருவரும் ஒரே கட்டிலில் படுக்க வேண்டி வரும் என்று அங்கேயே நின்றிருந்தவனைக் கண்டவள், “ஹலோ மிஸ்டர். கதிர்நிலவன், எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் கிடையாது. உங்கள் கற்புக்கு நான் கியாரெண்டி” என்று வாயாலேயே வாரெண்டி கார்டு அளித்தவள், “இந்த உத்தமர் தன் காதலியிடம் சொக்கத்தங்கமாகவே ஒப்படைக்கப்படுவார்” என்று அவனை கடுப்பேற்றிவிட்டாள்.

அதில் அவள் எண்ணப்படி கடுப்பானவன், உள்ளே சென்று கட்டிலின் ஒர் ஓரம் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன் விரைவில் தூங்கியும் போனான். ஆனால், தூங்காமல் அதுவரை நடந்தவற்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா.

***********

அன்று தோழிகள் மூவரும் வெளியில் சென்றிருந்தனர். அம்மாவிற்கு அன்பளிக்க புடவை வாங்க வேண்டுமென்று அஞ்சலி கூறியதால் அவளுடன் சென்றனர் மிஷாவும் நிரல்யாவும். ஒரு பிரபலமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவள் ஒவ்வொரு தளமாய் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் மிஷா அஞ்சலியை பார்த்து கேட்டாள், “ஏண்டி, அங்க வைத்திருக்கிறது கூரைப்பட்டு தான?” என்று.

அதற்கு பதிலளித்த அஞ்சலியும், “ஆமாம்டி, இதேதான் என் அம்மாவோட முகுர்த்தப்பட்டு. அதுல தான் என்ன தொட்டில்ல போட்டாங்க” என்க, கேட்டுக்கொண்டிருந்த நிரல்யாவோ, “முகுர்த்தப்பட்டுல தொட்டில் கட்டுவாங்களா?” என்று வினவினாள்.

“கட்டுவாங்க டீ. இப்படி பருத்தி ஆடைல செய்யுற கூரைப்புடவைய முகுர்த்தத்துக்கு கட்டுறவங்க அவங்களோட குழந்தைய இதுல தான் தொட்டில் கட்டி போடுவாங்க. முதல் குழந்தைக்கு கொஞ்ச நாள் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க. இரண்டாவது குழந்தைக்கு அந்த துணி போகுற வரைக்கும் யூஸ் செய்வாங்க. நான் சும்மா இருக்காம என் கைல வெச்சிருந்த ஸ்பூனை வைத்து அதை கிழிச்சுட்டேன்” என்க,

அதை கேட்ட மிஷாவோ, “உனக்கு அப்புறம் யாரும் யூஸ் செய்யாம செய்துட்டியேடி” என்று அஞ்சலியை கலாய்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலி வீட்டிற்கு ஒரே பெண் என்று.

இங்கே நிரல்யாவோ, தீவிரமான ஆராய்ச்சியில் இருந்தாள். அவளுக்கு பருத்தி ஆடையா இல்லை சில்க் சாரி முகுர்த்தப்பட்டாய் இருந்ததா என்று. எவ்வளவு யோசித்தும் அவள் அன்று என்ன புடவை அணிந்திருந்தாள் என்று நியாபகம் வரவே இல்லை. வீட்டிற்கு சென்று திருமண ஆல்பத்தில் பார்க்க வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். (அதுக்குள்ள தொட்டில் கட்ட போயாச்சா?)

************

வீட்டில் முதல் வேலையாக தங்கள் அறைக்கு விரைந்து அலமாரியில் திருமண ஆல்பத்தை தேடியவள் அதனை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து புரட்டலானாள்.

ஒவ்வொரு புகைப்படமாக பார்த்து ரசித்துக்கொண்டு வந்தவள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தம் கொண்டது நிஜம். கதிரின் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க, நிரல்யாவோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் இருந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. வந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஆல்பத்தை அதனிடத்தில் வைக்கப் போக, அங்கே ஒரு ஓவியம் இருந்தது. என்னவென்று விரித்து பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.

நிரல்யாவை ஓவியமாய் தீட்டியிருந்தான் அவளது கண்ணாளன். சிலிர்த்துப்போனாள் அவள் அதன் கீழே இருந்த தேதியைக் கண்டு. அவர்கள் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீட்டியிருந்தான் அந்த ஓவியத்தை. அதனை தன் அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு மீண்டும் அதனிடத்தில் வைத்தவள் வெளியேறி சென்றுவிட்டாள். மகிழ்ச்சியுடன் துக்கமும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.

இதுவரை அவளுக்கு கதிருடனான திருமணத்தில் காதல் இருக்கக்கூடும் என்று அவள் எண்ணியிருக்கவே இல்லை. அதுவும் கதிர் அவளை காதலித்திருப்பான் என்று? இப்பொழுது அவள் ஓவியத்தைக் கண்டதும் அவன் அவளை எவ்வளவு விரும்புகிறான் என்று ஐயம் திரிபர தெரிந்தது அவளுக்கு. இடது புருவத்தினுள் ஒளிந்திருக்கும் மச்சத்தைக் கூட அதில் தீட்டியிருந்தானே!

மனம் முழுக்க காதலுடன் தன்னை கரம் பிடித்தவனுக்கு தான் அளித்தது என்னவென்று அவளுக்கு நினைவிற்கு வர, எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாமா என்று தோன்றியது சில நிமிடங்கள். தன் தந்தைக்காக அவனுடன் வாழ துணிந்துவிட்டவளுக்கு அவன் மேல் இதுவரை காதல் என்ற உணர்வு சுத்தமாக வரவே இல்லை. ஆனால், இன்று அவன் காதலை உணர்ந்த பிறகு ஏனோ, அதனை அனுபவிக்க ஆவல் கொண்டது மனது.

பலாப்பழத்தின் சுவை அறிய அதன் முட்களை பொறுத்துத்தான் ஆகவேண்டும் அல்லவா? துன்பங்களை கடக்காமல் காதலும் இனிக்காதே.

***********
 

lekha_1

Writers Team
Tamil Novel Writer
தலைப்பொங்கல் தாய்வீட்டு சீருடன் சிறப்பாக ஏற்பாடானது நிரல்யாவிற்கும் அவள் கணவனுக்கும். காலையில் வழக்கம்போல கதிர் விரைந்து கீழே சென்று அன்றைய நாளுக்கான வேலைகளை கவனித்தான். பொங்கல் வைக்க தேவையானவற்றை மூன்று பெண்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப்பின், தான் செய்யவேண்டியவற்றை முடித்தவன் ஹாலில் அன்றைய நாளிதழுடன் அமர்ந்து கொண்டான். நிரல்யாவும் தயாராகிவர மேலே சென்றிருந்தாள். தன்னை மெய்மறந்து அதனுள் மூழ்கடித்துக்கொண்டிருக்க, அவன் கவனத்தைக் கலைத்தது அந்த கொலுசொலி. அபிராமி போலும் என்று நினைத்தவன் எங்கும் பார்வையை திருப்பவில்லை. ஒரு மெல்லிய கணைப்பு கேட்கவும், யாரென்று பார்த்தவன் திகைத்து நின்றுவிட்டான். அவன் வரைந்த ஓவியம் உயிர் கொண்டு நின்றிருந்தது எதிரில்.

45454532_370045920236248_273777011771689754_n.jpg
ராமர் பச்சை கலரில் கோல்டன் பார்டருடன் இருந்த புடவையில் அதற்கு தகுந்தாற்போல ரோஸ் மற்றும் தங்க நிறத்தில் ரவிக்கையுடன் தலைமுடியை கொண்டையிட்டு (முனியம்மா கொண்டையில்லைங்க… இப்போ எல்லாம் கொண்டைலயே நிறைய்ய ஃபேஷன் இருக்கே, அதுல ஒன்னு!) அதனை சுற்றி மல்லியை சூடி அதற்கு ஏற்றாற்போல் நகைகளணிந்து தேவதையென நின்றிருந்தாள் நிரல்யா.


“வாவ் அண்ணி… சூப்பரா இருக்கீங்க…” என்ற அபி, நிரல்யாவிடம் இருந்து சிறுமுறைப்பையும் பெற்றுக்கொண்டாள். இத்தனை நாட்களின் பழக்கத்தில் இருவரும் நெருங்கிய தோழிகளாகியிருந்தனர். அபியை விட சிறியவளான நிரல்யா தன்னை பெயர் சொல்லி விளிக்குமாறு கேட்டிருக்க, அவளை அண்ணி என்று அழைப்பதுதான் தான் அண்ணனுக்கு அளிக்கும் மரியாதை என்று அதனை அன்போடு மறுத்துவிட்டிருந்தாள் அபி.

நிரல்யாவை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்த அபி, “ஒன்னு மட்டும் குறையுது” என்று கூறி, தன் அண்ணனையும் அண்ணியையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று கதிரிடம் குங்குமத்தை கொடுத்து வைத்துவிடச் சொன்னாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “சீக்கிரம்னா… இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” என்று அபி அவசரப்படுத்த, குங்குமத்தை எடுத்து அவள் முகம் நோக்கினான் கதிர். நிரல்யாவின் கண்களும் அவனை நோக்க, அதில் தெரிந்த சம்மதத்தில் மெலிதாக வியந்தான் அவன். இதற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் அவனது கை உயர்ந்து அவள் நெற்றியில் திலகமிட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி இருக்க, அந்த மோனநிலையை கதிரின் விலாவில் ஒரு குத்துவிட்டு கலைத்தாள் அபி.

“உங்க பொண்டாட்டியை சைட் அடிச்சது போதும்னா… போய் செங்கல் எல்லாம் அடுக்கியாச்சான்னு பாருங்க”

“என்னையா கிண்டல் செய்யற? நீயும் மச்சானும் என்கிட்ட மாட்டுவீங்கல, அப்போ பாத்துக்குறேன்” என்று நிரல்யாவை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கே இருந்து வெளியேறினான்.

போறானே போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல்போல

போறானே போறானே போவாமத்தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல்போல

போறானே போறானே போவாமத்தான் போறானே

அழகா நீ நெறஞ்சே

அடடா… பொந்துக்குள் புகையப்போல

“ம்ம்கும்… இவங்க மச்சான் அப்படியே என்ன பாத்துட்டாலும்… நான் என்ன கலர் புடவை கட்டிருக்கேன்னு கூட தெரியாது அவருக்கு” என்று நொடித்துக்கொண்ட அபி, நிரல்யாவை அழைத்துக்கொண்டு அங்கே இருந்து அகன்றாள்.

போறாளே போறாளே காத்தோட தூத்தல்போல

போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

சூரியப்பொங்கல் வைப்பதற்கான ஆயத்த வேலைகள் எல்லாம் நிரல்யாவும் அபியும் செய்ய, பாட்டி செய்முறைகளை விளக்கிக்கொண்டிருந்தார்.

பருவம் தொடங்கி ஆச வச்சேன்

இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்

நிரல்யா செய்வதையெல்லாம் ஒரு மரத்தடியில் சாய்ந்து நின்று யாரிடமோ பேசியவாறே பார்த்துக்கொண்டிருந்தான் கதிர். அவன் பார்வை தன்னை மேய்வதை உணர்ந்தவளும் அவனை அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள்.

மழையில் நனைஞ்ச ஆட்டப்போல

மனச நீயும் நனச்சுபுட்ட

அவ்வாறு ஒருமுறை நிரல்யா தன்னை பார்ப்பதை கண்டுகொண்டவன், ‘என்ன?’ என்று சைகை செய்ய, மாட்டிக்கொண்டவளுக்கு குரலே எழும்பவில்லை.

ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா

பொண்ணு மனச கொஞ்சம் புனைய வாய்யா

மெல்ல ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தவளை ஏற இறங்க பார்த்த கதிர் சிரிப்புடன் திரும்பிக்கொள்ள, ஊஃப் என்று தன்னை ஆசுவாசப்படுத்தியவள், “எக்ஸ்-ரே கண்ணு” என்று அவனை செல்லமாக வைதவள் பொங்கல் பானையை அலங்கரிக்கலானாள்.

ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா

டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா

அபியிடம் ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டே வேலைகளை செய்துகொண்டிருந்தவளைக் கண்டவன் அந்த கண்ணழகியின் கன்னங்குழியில் மீண்டும் விழுந்தான்.

அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச

சிறு கன்னங்குழியிலே பதுக்கிறுச்சே

சின்ன சின்ன தொறத்தி பொண்ணு

கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிடுச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல்போல

போறானே போறானே போவாமத்தான் போறானே

போறாளே போறாளே காத்தோட தூத்தல்போல

போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

அனைத்தும் முடிந்து பொங்கல் வைக்க ஆயத்தமாகையில் நிரல்யாவை வைக்குமாறு அழைக்க, அவள் திருதிருவென்று விழித்தவாறு கதிரைக் கண்டாள்.

கிணத்து நிலவா நான் இருந்தேன்

கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட

என்னவென்று அவன் யோசிக்க, தன் உதட்டை பிதுக்க, அவளை கண்களாலேயே தைரியப்படுத்தி செய்யுமாறு கூறினான்.

உன்ன பார்த்து பேசையிலே

ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்

அவன் அளித்த தைரியத்தில் பாட்டி கூறக் கூற ஒவ்வொன்றாய் செய்தவளுக்கு எல்லாம் சரியாக வரவேண்டும் என்ற நினைவும் மட்டுமே இருந்தது. பொங்கல் பொங்கியபின் அதனை இறைவனுக்கு படைத்து வழிப்பட்டுவிட்டு பகிர்ந்து உண்டவர்களின் கண்களில் ஒரு மெச்சுதல் வரவும், நிரல்யாவின் முகத்தில் சிரிப்பு அரும்பியது.

மூக்கணாங்கவுன போல உன் நினைப்பு

சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

கதிரும் அவளை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்க்கவும், அவன் வைத்துவிட்ட குங்குமம் கன்னத்தில் இறங்கியது வெட்கம் என்னும் பெயர் கொண்டு. தவிப்பும் வெட்கமும் போட்டி போட நின்றிருந்தாள் நிரல்யா. கணவன் வாய்வார்த்தையாய் எதுவும் சொல்லவில்லையே தன்னுடைக்கு. அவனுக்காக பார்த்துப்பார்த்து செய்ததாயிற்றே!

அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு

பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு

கைகழுவ கதிர் செல்ல, அவன் பின்னே பூத்துவாலையை எடுத்துச் சென்று அவள் நீட்ட, அதனை வாங்கி கைகளை துடைத்துக்கொண்டவன், அவள் கன்னம் தீண்டி காதோரம் குனிந்து, “செமயா இருக்கேடி” என்று காதுமடலில் ஒரு முத்தம் வைத்து விலகினான்.

அடி மஞ்சக்கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம்

மனசுக்குள்ளே வைச்சு பூட்டிக்கிட்டேன்

உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து

என் காயத்துக்கு பூசிகிட்டேன்

போறாளே போறாளே காத்தோட தூத்தல்போல

போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

அழகா நீ நெறைஞ்சே

அடடா… பொந்துக்குள் புகையப்போல

போறானே போறானே காத்தோட தூத்தல்போல

போறானே போறானே போவாமத்தான் போறானே

கதிர் சென்று வெகு நேரம் ஆன பின்பும் அவன் மூச்சுக்காற்று தன் காதுமடலில் மோதும் உணர்வு தோன்ற, அதனை அனுபவித்தபடி அங்கேயே வேறூன்றி நின்றுவிட்டாள் நிரல்யா.


தொடரும்


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top