இவங்க ரெண்டு பெரும் இந்த dialog பேசினா நல்லா இருக்குமா? கியூட்டிபாய்ஸ்
"அண்ணே பொண்ணு சும்மா லட்டு மாத்ரி இருக்காண்ணே. என்னா கலரு என்ன அழகு" கிளீனர் வழிய ஆன்ஷி அவர்களை பயப் பார்வை பார்த்து வைக்க க்ளீனரின் மண்டையில் கொட்டிய டைவர்
"ஏண்டா அக்கா தங்கை கூட பொறந்தவன் பேசுற பேச்சாடா இது?"டைவர்
"அக்கா தங்கைக கூட பொறக்காதவன் மட்டும் பேசலாமா?"கிளீனர்
"அவன் ஒரு அம்மா எங்குற பொண்ணு வயித்துல தானே பொறந்தான்" இது டைவர்.
"என்ன சொன்னாலும் மடக்குறாரே இருங்க வரேன். அப்போ அண்ணே அநாதனு ஒரு ஜாதி இருக்கே அவனுங்க" கிளீனர் டைவரை புத்திசாலித்தனமாக கேட்டு மடக்கியதாக புன்னகைக்க
அவனை முறைத்து பார்த்தவர் "யாரடா அனாதை அம்மா, அப்பா கூடப் பொறந்தவங்கனு எல்லாரும் இருந்தும் வயசான காலத்துல பெத்தவங்கள அனாதை ஆசிரமத்துல கொண்டு போய் விடுறானுங்களே அவனுங்க தான் அனாதை. பெத்தவங்க யாருன்னே தெரியாம வளந்து பாசத்துக்காக ஏங்கி தன்னை மாதிரி உறவே இல்லாம யாரும் இருக்கா கூடாதுனு நினைக்கிறவன், கூட இருக்குறவங்களை மதிச்சு, அன்பையும் காட்டி, பாதுகாப்பை பத்தியும் நினைக்கிறாங்களே அவங்க மனிசன்" டைவர் லெக்ச்சர் அடிக்க
"விட்டா ஓவரா பேசியே கொல்லுறாரே, இவர் கூட குப்பை கொட்ட முடியலடா சாமி, சரிண்ணே சரிண்ணே இந்த பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க" தலையை சொறிந்தவாறே கிளீனர் சொல்ல
இவர்கள் என்ன பேசுறார்கள் என்று புரியாமல் முழித்த ஆன்ஷி கிளீனர் இரண்டு கைகளையும் தன் புறம் திருப்ப மீண்டும் மனதில் பயப் பந்து உருண்டது.
"ஐயோ இந்த பொண்ணு வேற ராஜஸ்தான் பொண்ணா இருக்காளே! எனக்கு வேற ஹிந்தி தெரியலையே! சரி சைகை பாசையாலேயே சொல்லுவோம்" என்று தாக்குள்ளேயே பேசிக் கொண்டவர் கையை ஆட்டி ஆட்டி தமிழில் சொல்ல தமிழை கற்ற ஆன்ஷி அவரை தெளிவாக புரிந்துக் கொண்டாள்.
"இந்த பொண்ணு நீ எதுக்கு என் வண்டில ஏறினனு எனக்கு தெரியல, நா தமிழ் நாட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். எங்கள பார்த்து நீ பயப் பட வேண்டியதில்லை. எனக்கும் உன்ன மாதிரி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க" அவர் பேசும் போது குறுகி கிட்ட கிளீனர்
"யாரு உங்களுக்கு இந்தப் பொண்ணு மாதிரி? அங்கவை சங்கவை மாதிரி ரெண்டு பொண்ணுங்கள பெத்துட்டு பேசுற பேச்சப்பாரு"
"நீ மட்டும் பால்ல குளிச்சி வெள்ளையா இருக்கியா?"
"உங்க பொண்ணு அங்கவை உங்க காச பூரா பாயர் அண்ட் லாவல்லி வாங்கியே கரைகிறாளே சொல்லி வைங்க அவ கிட்ட என்னதான் அங்கவை பாயர் அண்ட் லாவல்லி பூசினாலும் ஐஸ்வர்யா ராய் ஆகா முடியாது"
"சைக்கிள் காப்ல என் பொண்ணையே கிண்டலடிக்கிறியா" டைவர் மீண்டும் க்ளீனரின் தலையில் கொட்ட ஆன்ஷிக்கு தோன்றியதோ இவர்களால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது மட்டுமே.
சினேகமாக அவர்களை பார்த்தவள் சைகை மொழியால் பேச புரியாமல் இவர்கள் குழம்ப தமிழில் எழுதி காட்டவே
"ஓஹ் கோயமுத்தூரா நம்ம ஊர் தான் அம்மணி பத்திரமா கொண்டு போய் விட்டுடுறோம். நீ முன்னாடி வந்து உக்காரு" டைவர் உட்சாகமாக சொல்ல
ஸ்டெப்னியை மாற்றியவர்கள் "போலாம் ரைட்" கிளீனர் சொல்ல லாரி கோயம்புத்தூரை நோக்கி புறப்பட்டது.

Last edited: