நேசம் மறவா நெஞ்சம்-30Nesam Marava Nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, பிரியா டியர்?
அந்த எடுபட்ட வினோத்து,
நம்ம அழகுராணி சுதாவைக்
கூட்டிக்கிட்டு ஊரை விட்டுப்
போகும் பொழுதுதான்
அம்புடுவான்-னு நெனச்சேன்
ஆனாக்க உள்ளூரிலேயே
கெஸ்ட்டு அவுஸ்சுலேயே
இவிங்கக்கிட்ட வினோத்து
பெய அம்புட்டுக்கிட்டானே
ஹா... ஹா... ஹா.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சுதாவைப் பத்தி நான் நெனைச்சது
கொஞ்சம் கூட தப்பில்லை
கொஞ்சம் கூட பிசகலை
என் நெனப்புக்கு தப்பாம
அவளும் ஏதும் பண்ணல,
பிரியா டியர்

ஏதோ சின்னப் புள்ளை என்னளவுக்கு இல்லாட்டியும்,
கொஞ்சூண்டு அழகாயிருப்பதால்
கொஞ்சம் மண்டைக்கனம்
புள்ளைக்கு ஏறிடுச்சு போல
இதில் சுதாவை குற்றம்
சொல்வதில் எந்தவித
பிரயோஜனமுமில்லை
எல்லாம் சுத்தி இருக்கிறவங்க
வறண்டி வம்புக்கு இழுக்கிற
கோறாமைதான், பிரியா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ வாசுவும் நல்ல
பையனாயிட்டான்
பின்னே அப்பாவாகப்
போறான்-ல?
இனியும் பருப்பு சே, சே,
பொறுப்பு வராட்டி எப்படி?

அடேய் கண்ணா,
கோகுலக்கண்ணா மன்னா
மணிவண்ணா ரொமான்ஸ்
மன்னா
ஏற்கனவே நீ சைக்கிள் கேப்புல
கெடா வெட்டுவ
இப்போ அவங்கக்கா சொல்லி
நீயி கயலுப்புள்ள மேல
பைத்தியமா இருக்கிற விஷயம்,
நூசு, ஊருக்கே தெரிஞ்சு
போச்சே, கண்ணா
கோகுலக்கண்ணா
இனி உன்னை கையில்
பிடிக்க முடியுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த அழகான நாவல்
முடியப் போகுதா-ன்னு நானே
கேட்க நெனச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க,
பிரியா டியர்

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு
இவ்வளவு ஆகாது, பிரியா டியர்
இன்னும் ஒரு வாஆஆஆரம்
கழிச்சுத்தான் கடைசி லாஸ்ட்
அப்டேட்டாஆஆஆ?
இதெல்லாம் ரொம்பவே
அராஜகம், அநியாயம்
அக்கிரமம்
இதனை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன், யூவரு ஆனரு
பிரியா டியர்

செரி, செரி உங்களோட
வீட்டுக்காரரும், மகனும்
மலைக்கு போறதாலே
ஏகப்பட்ட ஜோலி இருக்கு-ன்னு
உங்களுக்கு ஒரு வாரம்
லீவ் வழங்கப்படுகிறது,
பிரியா டியர்
சோஓஓஓஓ, சட்டுப்புட்டுன்னு
வந்து லாஸ்ட் அப்டேட்டை
நல்ல புள்ளையாக கொடுங்க
பார்க்கலாம், பிரியாபிரகாஷ் டியர்
 
Last edited:

Banupathal

Well-Known Member
superbbb ud :)....nxt ud one week aprem nu solli shock kuduthutingalea:oops::eek:athum ilama end card poda poringala....kayal kannan ellaraium miss pannuvene ...
 

laksh14

Well-Known Member
உள்ளே வந்த கயல் இங்கு மயங்கிகிடந்த சுதாவை பார்க்கவும் அவளிடம் பதறியபடி ஓடியவள் அங்கிருந்த தண்ணிரை எடுத்து சுதாவின் முகத்தில் தெளிக்க..... ராமன் அங்கிருந்த சூழ்நிலையை புரிந்தவன் தன் பங்குக்கு வினோத்தை வெளுத்தான்.... அவனுக்கு அன்று மல்லிகா மயங்கியது ஞாபகத்திற்கு வந்தது.......



“இவனுக ரெண்டு பேரையும் போலிஸ்ல புடுச்சுகுடுத்துருவோமா......”



“வேணாம்ணே.... போலிஸ்க்கு போனா நம்ம குடும்ப பொண்ணுக பேரு கெட்டு போயிரும் யாருக்குமே தெரியாம நடந்தத நாமளே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மாதிரி ஆகிரும்.... இதுக்கு வேற வழிதான் யோசிக்கனும்” என்று யோசித்தவன்..... ராமனிடம் ஒரு யோசனையை தெரிவிக்க...... அதன்படி வெளியே சென்றுவிட்டு பத்து நிமிடத்தில் வந்த ராமனின் கையில் இருந்த ஸ்டாம்ப் பேப்பரில் தங்களுடைய குடும்பத்துக்கோ... குடும்ப பெண்களுக்கோ எந்த ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் தானும் இந்த தயாரிப்பாளரும்தான் காரணம் என எழுதி இருவரும் கையெழுத்து போட்டனர்.....



கண்ணன் வினோத்திடம் “உன்னைய இனிமே ஊருபக்கம் பாக்கவே கூடாது அப்புடி ஏதாச்சும் பாத்தா நாங்களே காயத்தை உண்டாக்கிட்டு கூட உன்னைய போலிஸ்ல புடிச்சுக் குடுத்துருவோம் பாத்துக்க......” இருவரும் பல்லை புடிங்கிய பாம்பின் நிலைக்கு வந்தனர்.....



மயக்கம் தெளிந்த சுதா வாசுவிடம் மன்னிப்பு கேட்க....” உம்மேல தப்பு இல்ல நான்தான் முதல்லயே உன்கிட்ட இவன பத்தி சொல்லியிருக்கனும்....தப்பு எம்மேல வச்சுக்கிட்டு உன்னைய குறை சொல்லி என்ன பண்ணுறது.... எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்..... இவன் உன்கிட்ட பேசுறான்னு என்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கலாம்.....”



சுதா வாசுவின் காலில் விழுந்து மன்னுப்பு கேட்டாள்..... “ஏய் விடு விடு.... எந்திரி நாம முதல்ல கண்ணனுக்குதான் நன்றிய சொல்லனும்..... தம்பி மட்டும் நேரத்துக்கு தகவல் சொல்லைனா.... என்ன ஆகியிருக்குமுன்னு நினைச்சே பாக்க முடியல.....”



கயல் கண்ணனிடம் சென்று” ஏங்க நான் ரெண்டு இவன அடி போட்டுட்டு வரவா.....” .என்று காதுக்குள் கேட்க......



கண்ணன் சிரித்தபடி” ஏண்டி.......”



“அன்னைக்கு மயக்க மருந்து குடுத்தான்ல... அப்ப நானும் மல்லிகாவும் நினைச்சோம் எப்பவாச்சும் மாட்டுனான்னா அன்னைக்கு ஆளுக்கு ரெண்டு கொட்டு வைக்கனும்னு......... இன்னைக்கு கொட்டவா......”



“அப்பா........ எவ்வளவு பெரிய தண்டனை..... குடு.... குடு”



கண்ணனின் கைபிடித்தபடியே வினோத்திடம் சென்றவள்... வினோத்தின் தலையில் நான்கு கொட்டு வைத்தாள்.....



“என்னடி ரெண்டுன்னு சொல்லிட்டு நாலு கொட்டு வைக்குற....”

“அதுவா எனக்கு ரெண்டு மல்லிகாவுக்கு ரெண்டு........”.

“அப்பா..... கணக்குல புலிடி....சரி வாங்க வீட்டுக்கு போவோம்....”வீட்டுக்கு கிளம்ப... சுதா மீண்டும் மயங்கி விழவும்.... அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல அவள் தாய்மை அடைந்திருப்பது தெரிந்தது.... வாசுவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.....



கண்ணன் வாசுவையும் சுதாவையும் தங்கள் வீட்டிற்கு வந்து காலையில் செல்லலாம் என்று கயலும் கண்ணனும் மீண்டும் மீண்டும் அழைக்க.... இருவரும் கண்ணன் வீட்டிற்கு வந்தனர்..... சுதாவை மாடிக்கு கூட்டிச் சென்று குளிக்கச் சொல்ல சுதா கயலின் கையை பிடித்து அழுது கொண்டிருந்தாள்.......



“விடுக்கா.... அதுதான் ஒன்னும் நடக்கலைல... மாமாதான் கரெக்ட் டயத்துக்கு வந்து காப்பாத்திட்டாங்கள்ள.....”



“அதுக்கில்லடி நான் உன்குடும்பத்துக்கு பண்ண துரோகத்துக்கு வேற ஒருத்தரா இருந்தா திரும்பிகூட பாத்திருக்க மாட்டாங்க..... ஆனா உங்க வீட்டுக்காரரும் ... மாமியார்... கொழுந்தன்களும் என்கிட்ட பேசுறதே பெருசுடி.......இன்னைக்கு மட்டும் உங்க வீட்டுகாரரு உதவிபண்ணாட்டா என்மானமே போயிருக்கும்....”



“ஏய் விடுக்க நீ என்ன பண்ணுன.....”



“உனக்கு எதுவுமே தெரியாதா... உங்க வீட்ல ஒன்னுமே சொல்லலையா.....”

“ம்கூம்..... என்ன சொல்ல இருக்கு.....”.

அப்போதுதான் சுதாவுக்கு இவர்கள் கயலிடம் ஒன்று சொல்லலையோ என தோன்றியது.... தன் மனசாட்சி கேட்காமல்.... தான் திருமணத்துக்கு முன் வாசுவை காதலித்தது முதல் திருமணத்துக்கு முன் அப்பத்தாவிடம் பேசியது வரை அனைத்தையும் சொன்னாள்......



கயல்.... அப்ப தப்புபூராவும் அக்காவோடதுதானா.... நாமதான் தேவையில்லாம இவருகிட்ட கிறுக்குத்தனமா பேசி அவரு மனச கஷ்டப்படுத்தியிருக்கோம்... ச்சே...ச்சே.. நமக்கு புத்தி எப்பத்தான் வருமோ.....



“அக்கா.... நீ போய் குளி.... நான் போய் அத்தைக்கு உதவி பண்ணுறேன்.....” மாற்றுடையை கொடுத்துவிட்டு கீழே இறங்க.....



முற்றத்தில் ராமன் முத்துவோடு வாசு பேசிக்கொண்டிருக்க சாவித்திரியிடம் சென்றவள்....” அத்தே என்னத்த பண்ண.....”



“ஒன்னும்மில்லடா இட்லி ஊத்தி சட்னி வச்சிட்டேன்.... வடை தட்டியிருக்கேன் போதும்ல....”

“போதும்த்த...”

“கண்ணன் கொல்லப்புறத்துல குளிக்கப் போனான் அவன் குளிச்சிட்டான்னா கொஞ்சம் இலை வெட்டி வாங்கிட்டு வாத்தா.....”



கயல் கத்தியை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறத்திற்கு செல்ல அப்போதுதான் பாத்ரூமில் இருந்து கண்ணன் குளித்துவிட்டு வெளியே வர.... வெற்று மார்பில் தலை துவட்டியபடி வந்தவனை கண்டவளுக்கு...... மேலும் காதல் பொங்கியது.... அப்பா........ நாம இவர போய் தப்பா நினைச்சுட்டோம்......ஆனா அக்காவ பத்தி தப்பா ஒரு வார்த்தைகூட சொல்லலையே....



“என்னடி இப்புடி பாத்துக்கிட்டு இருக்குற..... மச்சான கண்ணுவைக்காத...”.

கண்ணனை எட்டி அணைத்தவள்”.....ப்பா.....நல்லா வாசமா இருக்கிங்க” என்றபடி அவனை வாசம் பிடித்தவளை....

சற்று தள்ளி நகர்த்தி இருளுக்குள் கூட்டிச்சென்றவன்.....”என்னடி ஆச்சர்யமா இருக்கு நீயே வந்து என்னைய கட்டிப்புடிச்சிருக்க..... இது கனவு இல்லைல்ல.....” என்றபடி அவள் கன்னத்தை கடித்தவன் அவள் கத்த வாய் திறக்கவும் அவள் உதட்டை சிறை செய்திருந்தான்..... கயல் கண்ணன் முத்தத்தில் மூழ்கி கொண்டிருக்க சாவித்திரியின் குரல் கேட்கவும் அவனை விலக்கினாள்....



“எங்க அக்கா பண்ணுனத எல்லாம் ஏங்க நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை.... இப்பதான் அக்கா சொன்னா.....” அவன் கழுத்தில் கை கோர்த்தபடி கேட்டு கொண்டிருக்க......

“ அவுக அப்புடி பண்ணுனாலும் எனக்கு உன்னைய புடிச்சுதாண்டி கல்யாணம் பண்ணினேன்.....”



“அப்பத்தா சொன்னாங்க நீங்க ரொம்ப கோபமாத்தான் ஒத்துக்கிட்டிங்கன்னு.....”



“ஆமாடி பறக்கா வெட்டி மாதிரி உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொல்றியா.... என்னைக்கு முதல்முதலா ராத்திரி வந்து எங்கழுத்த புடிச்சிகிட்டு தொங்குனியோ..... அன்னைக்கே.... மச்சான் ஒம்மேல ஆசை வச்சுட்டேன்டி..... பாவம் சின்ன வயசாயிருக்கியேன்னு நினைச்சேன்..... ஆனா கடவுள் எனக்கே எனக்குன்னு உன்னைய படச்சிருக்குறார்டி..... அப்புறம் நான் யாரப்பாத்தாலும் அது நடக்குமா......”அவன் கயல் இடுப்பை வளைத்து தன் வெற்றுடம்பு அவள்மேல் படுமாறு நன்கு இறுக்கி அணைத்தவன்...... அவள் உச்சியிலிருந்து தன் முத்தத்தை ஆரம்பிக்க.....



“ஏங்க..... இப்புடி பண்ணுனா என்ன அர்த்தம்....”.அவன் முதுகில் கைகோர்த்தபடி.... அவனிடம் மயங்கியபடியே........கண்ணன் காதிற்குள்.....” நான் இலைவெட்டதான் வந்தேன்..... வெட்டித்தாங்க.... அவுகள்ளாம் சாப்புடனும்ல....”



கண்ணன் தன் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தவன் ......”..சரி இப்ப போ ஆனா ராத்திரி மச்சான நல்லா கவனிக்கனும் புரியுதா......”



“ம்கூம்.....நான் இன்னைக்கு அக்காவோட படுத்துக்கிறேன்....... அவ பாவம்ங்க... ரொம்ப பயந்துபோய் இருக்கா.... இன்னைக்கு மட்டும் படுக்குறேன்.....”



“போடி...போடி……” என்று கோவித்துக் கொள்ள கயல் கண்ணன் பாணியில் அவனை கொஞ்சி கொஞ்சி வழிக்கு கொண்டுவந்தாள்.....



இவள் கொஞ்சுவதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது....” பரவால்லடி வரவர நீயும் நல்லா தேறிட்ட....”



அனைவரும் சாப்பிட கயலை அந்த குடும்பம் தாங்குவதை கண்டு சுதாவுக்கு குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை..... சாவித்திரியாகட்டும்... முத்து ராமனாகட்டும் கயலிடம் அன்போடு பேசுவதை பார்த்தவளுக்கு தான் ஒரு நாள்கூட தன் மாமியாரிடம் இப்புடி நடந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்டாள்...... நாம் எதை கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்பி வரும் என்பதை புரிந்து கொண்டாள்.... சுதா மனதார கண்ணனிடம் மன்னிப்பு கேட்க......

“ விடுங்க யாருக்குள்ள யாரு மன்னிப்பெல்லாம் கேக்குறிங்க.....எல்லாரும் ஒரே சொந்தகாரங்களாயிட்டோம் மன்னிப்பெல்லாம் தேவையில்ல.....”
சாவித்திரியிடம் மன்னிப்பு கேட்க...”.கயலுதான் இந்த வீட்டுக்கு வரனும்னு ஆண்டவன் எழுதிவச்சுட்டான் அதை நாம மாத்தலாம்னு பாத்தா முடியுமாத்தா... எல்லாரும் எங்கயிருந்தாலும் சந்தோசமா இருங்கத்தா...”




.அனைவரும் சாப்பிட்டு முடிக்க கயல் கடைசியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்... கண்ணன் அவள் மறுக்கமறுக்க அவளுக்கு எடுத்து வைத்து அவளை கெஞ்சி கொஞ்சி சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தான்... ராமனும் முத்துவும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து அடுப்படியில் வைத்து தன் தாய்க்கு உதவி செய்து கொண்டிருக்க... சாவித்திரி பாலை காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தவர்...... கண்ணனுக்கும் கயலுக்கும் மட்டும் பாதாம் பாலை காய்ச்சி கொடுக்க.....



“அம்மாடி...... இப்பவே வயிறு புல்லா இருக்குத்தே..... இனிமே வயிரு தாங்காது வெடிச்சிரும்...ப்ளிஸ்த்தே.... நான் நாளைக்கு குடிச்சுக்குரேன்.....”



“ம்ம்ம்கூம் இப்பவே இப்புடி மெலிவா இருக்க நாளபின்ன புள்ளக்குட்டிய தாங்குறதுக்கு சக்தி வேணாமா.....”

குழந்தை என்றதும் கண்ணன் கயலை பார்த்தவன்.... கண்ணை சிமிட்டி கண்ணாலேயே மிரட்டினான்.....” ம்ம்ம்... குடி....நீ என்னையும் என் பொண்ணையும் தாங்கனும்ல…..” என்று மெதுவாக கயல் காதுக்குள் கிசுகிசுக்க... அங்கு ஒரு சந்தோசமான காதல் இருவருக்குள்ளும் தோன்றி இருவர் முகத்திலும் தனி ஒளியாய் பிரகாசித்தது..... கயலுக்கு வெட்கமாகவும்.... கண்ணனுக்கு ஒரு பெண்ணின் மனதை வென்ற கர்வம் கம்பீரமாக வெளிப்பட்டது.......





இனி.......................???????.



தொடரும்...................
suprrrrbbb
 

Chittijayaram

Well-Known Member
Very nice epi mam, Sudha ku ippavavadu budhi vanthade, Sudha vasu nalla purimjikita Vinoth nee un life enda ponnaium parkave kudaduda, Anni nu kuda parkama Ava kitta ye tappa nadakura un Kai ya udaichita erukanum, kayal & kannan azhagana kadal Jodi, Kayal nalla therita ma super sikirama Oru ponnai pethi kuduma kannan ku, nice epi mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top