ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 93.

அர்ஜூன் நீலநிற பென் டிரைவை அனைத்தையும் எடுத்தான். இது எல்லாமே என்னவென்று பாருங்கள். அவங்க பிசினஸ் மற்றும் அந்த போதை மருந்து பற்றிய விவரம் கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றான் அர்ஜூன்.

வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என்று தாரிகா ஜன்னல் வழியே பார்த்து, அர்ஜூன்..அர்ஜூன்..என்று கத்தினாள். மற்றவர்களும் வந்து பார்த்தனர்.

வெளியே அடியாட்கள் அர்ஜூன் வீட்டு கேட்டை உடைத்துக் கொண்டிருந்தனர்.

அனைத்தையும் உள்ளே எடுத்து வையுங்கள் என்று தாரிகாவையும் அந்த பொருட்களையும் ஓர் அறைக்குள் தள்ளி விட்டு அர்ஜூன், சைலேஷ், பிரதீப், சந்துரூ கெத்தாக வெளியே வந்தனர்.

அவர்களை கண்ட ஆட்கள் என்னடா ஒருவன் தான் என்று நினைத்தால் நால்வர் இருக்கிறார்கள்.

அதனால் என்னடா நாம எட்டு பேர் என்றான் மற்றொருவன்.

வாங்கடா என்று அனைவரும் களத்தில் இறங்கினார்கள். ஸ்ரீ நிலையால் கோபமுடனும் வருத்தமுடனும் இருந்த நம் ஆட்கள் மொத்த கோபத்தையும் வந்தவர்களிடம் இறக்கினார்கள்.

வந்த ஆட்களோ விழுந்தடித்து ஓடினர்.மறுபடியும் உள்ளே சென்றனர். இனி எதற்காகவும் மறைய வேண்டாம் அர்ஜூன்.நாம் நேரடியாகவே மோதலாம். ஸ்ரீயை மட்டும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றான் சைலேஷ்.

எனக்கும் அதான் சரி என்று படுகிறது பிரதீப்பும் கூற, சரி என்றான் அர்ஜூன்.

சாரி..என்னால் அவர்கள் முன் வர முடியாது சந்துரூ கூறினான்.

நீங்களும் சண்டை போட்டீங்க தானே? அவளோட ஆட்கள் உங்களை பற்றி கூற தான் செய்வார்கள்.

சரி.நடப்பது நடக்கட்டும். வாங்க வேலையை பார்ப்போம் என்று அனைவரும் லேப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தனர்.

டாக்டரும் செவிலியரும் வெளியே வந்தனர். அர்ஜூனை அழைத்தார்.

அந்த பொண்ணுக்கு சர்ஜரி தேவையில்லை. ஆனால் ஒரு வாரத்தில மறையாது ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்றார்.

ஓ.கே சார். அவர் மருந்து சீட்டை கொடுத்தார். இப்பொழுதே வாங்கி வா. எப்படி போடுவது என்று சொல்கிறோம் என்று மற்றவர்கள் அருகே வந்து பார்த்து, நான் நினைச்சதை விட நீ சீக்கிரமே வேலைய ஆரம்பிச்சுட்ட போல..என்று கதவை திறந்து கேட்டை பார்த்து விட்டு, அவர்களை பார்த்தார்.

சார், சண்டைன்னா சட்டை கிழிய தானே செய்யும் என்றான் சந்துரூ.

சந்துரூ நீ பேசாத? முன்னாடியே இந்த பொண்ணு விசயத்தை கவனிக்காம விட்டுட்ட என்று அவரும் திட்டினார்.

சார்..எனக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை? உங்களுக்கே தெரியும்? எனக்கும் அந்த பொம்பளைக்கும் ஆகவே ஆகாது. அதான் விலகி இருந்தேன். ஆனால் ஸ்ரீ, நிவாஸிடம் பிரச்சனை என்றால் அழைக்க சொல்லி நம்பர் கூட கொடுத்தேன்.

சரி விடு அர்ஜூன் மருந்துடன் வர, ஸ்ரீயிடம் அர்ஜூனை அழைக்க, தாரி நீ போ என்றான் அவன்.

அட, சும்மா வாடா என்று அவனை டாக்டர் இழுத்து வந்தார்.தாரிகாவும் வந்தாள் அவர்களுடன். ஸ்ரீயை பார்த்து கண்ணீரை தேக்கினான் அர்ஜூன். அவளது கையில் எப்படி செய்வதென்று போட்டு காண்பித்தார் செவிலியர்.இருவரும் பார்த்துக் கொண்டனர். குளித்தவுடன் நன்றாக துடைத்து விட்டு, இதை போட்டு காயவிடணும் காலையும் இரவும் என்றார்.

காயவிடணுமா? தாரிகா கேட்டாள்.

அது கஷ்டம் தான். ஆனால் காய்ந்தால் தான் சீக்கிரம் சரியாகும் என்றார்.

அர்ஜூன்,அவளுக்கு இது தேவையா? அவள் கஷ்டப்படுவாள். ஒத்துக் கொள்ளவே மாட்டாள்.

இல்ல தாரி. இது அவளோட எதிர்காலத்துக்கு நல்லது என்றான் அகிலை மனதில் வைத்துக் கொண்டு.

நீ என்ன தான் சொல்ல வர?

அகில் அவளை எதுவும் சொல்லி விடக் கூடாது என்றான்.

என்னடா, அவளை உனக்கு பிடிக்கும் தானே! காதலிக்கிறாய்ல?  ஒரு வேளை அவளுக்கு நடந்ததை பார்த்து உன்னோட காதல் காணா போச்சா?

அர்ஜூன் தாரிகாவை அடித்து விட்டான்.

என்ன பேசுற? யோசிச்சு பேசு என்றான்.மற்றவர்கள் இவர்களை பார்க்க, புரிஞ்சுக்கோ தாரிம்மா. அவள் முதலில் என்னுடன் பேசுவாளோ? என்று கேட்டான்.

டாக்டர் அர்ஜூனை பார்த்து, யாராவது அவளுடன் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கணும்.ஒரு வாரம் தொடர்ந்து போடுங்கள். மதியம் இரண்டை தாண்டியது.

ஸ்ரீ எழுந்தாள்.டாக்டர் செவிலியரிடம் மட்டும் சில விசயத்தை சொல்லி சென்றார்.

அவளது அறையில் சத்தம் கேட்டு செவிலியரும் தாரிகாவும் உள்ளே சென்றனர். நீ இருக்கக்கூடாது.. நீ இருக்கக் கூடாது.. என்று ஆளுயர்ந்த கண்ணாடியை தன் கையால் அடித்து நொறுக்கி கையை இரத்தமாக்கி இருந்தாள் ஸ்ரீ.

ஸ்ரீ என்று பதறி தாரிகா அருகே வர, அர்ஜூனும் மற்றவர்களும் அவள் சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்து ஓடி வந்தனர்.

ஸ்ரீயை பார்த்து அதிர்ந்தனர்.ஸ்ரீயோ தாரிகாவிடம், வராதே..வராதே..என்று கத்திக் கொண்டு உடைந்த பெரிய கண்ணாடி துண்டை கையில் வைத்துக் கொண்டு,

வராதே ஜிதின்..வராதே..என்று ஆக்ரோசமாக கத்திக் கொண்டு ஸ்ரீ அதை வைத்து தன் கையை கிழித்தாள்.

ஸ்ரீ..நோ…என்று அர்ஜூன் கத்திக் கொண்டே அவளை நெருங்கினான்.

வராதடா ஜிதின்..உன்னை கொன்னுடுவேன்.ஜிதின் வராதே..வராதே..அவள் கத்த, அவளுக்கு இரத்தம் கொட்டியது. இதை பார்த்து தாரிகா மயங்கினாள். சந்துரூ அவளை தூக்கிக் கொண்டு சோபாவில் கிடத்தி அவளை கவனித்தான்.

பைத்தியம் போல் அவள் மீண்டும் வராதே.. வராதே..என்று மீண்டும் கண்ணாடி துண்டை அவளது கழுத்தில் வைக்க அர்ஜூன் துடித்து போனான்.

ஸ்ரீம்மா..நான் வரல..வரல..கத்திக் கொண்டு அங்கேயே நின்றான். நீ அதை கீழே போடு. நான் வர மாட்டேன் என்று சத்தமாக கத்தினான்.

அவள் கீழே போட்ட மறுநொடியே, ஸ்ரீயை பார்த்து ஒரு பாடல் பாடினான். பள்ளியில் ஸ்ரீ முதலாக பாடிய பாடல். அவள் அழுது கொண்டே வேண்டாம்.. வேண்டாம்.. என்று கத்தினாள்.

அர்ஜூன் அவளை நெருங்கி பாடலை நிறுத்தி, இட்ஸ் மீ அர்ஜூன்.

ஸ்ரீ இங்கே பார்.நான் அர்ஜூன் என்று அவளை உலுக்கினான். ஜிதின் இல்லை. அவன் இங்கே வர முடியாது. இது நம்முடைய வீடு என்றான்.அர்ஜூன் காதலை மெச்சுதலாக பார்த்தனர் அங்கிருந்தவர்கள்.

அர்ஜூன்..அர்ஜூன்..அர்ஜூன்..என்று கத்தி அழுதாள்.அர்ஜூன்..அர்ஜூன்.. தோய்ந்த குரலில் அவள் கேட்க, ஸ்ரீ நான் தான். அர்ஜூன் தான்..அர்ஜூன் தான் என்று அழுதான் அவள் கையை பார்த்தவாறு.

அர்ஜூன்..அர்ஜூன்.. என்று அவனது மார்பில் முட்டி சாய்ந்து தோய்ந்து தவித்து கதறி அழுதாள். அவன் அப்படியே கீழே அமர்ந்தான். அவன் மடியிலே அவளும் அமர்ந்து அழுது கொண்டே,

எனக்கு என்னையே பிடிக்கல அர்ஜூன். என்ன கொல்ல சொல்லு அர்ஜூன். நான் அம்மா கிட்ட போகணும். எனக்கு அம்மா வேணும் அர்ஜூன்.

பிரதீப் செவிலியரை பார்த்து சைகை செய்ய, அவர்களருகே சென்று அவளது கையை பார்க்க ஆரம்பித்தார்.

அர்ஜூன் அவனை நான் நம்பினேன். அவன் என்னை.. கதறி அப்படியே மயங்கினாள் அவன் மார்பிலே.

சிஸ்டர்..சிஸ்டர்..அவன் பதற,இரத்தம் வெளியேறிய மயக்கம் தான் எழுந்துடுவாங்க சார் செவிலியர் கூறினார். தாரிகா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சார், அவங்க உடம்பு, மனசு ரொம்ப வீக்கா இருக்கு. அவங்கள தனியா விட்றாதீங்க. தவறான முடிவேதும் எடுத்து விடாமல் என்று அவளது கையில் கட்டு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் சாப்பிடக் கொடுங்கள். மருந்தை ஒரு நேரம் கூட மறக்காமல் போட சொல்லுங்கள் என்று அவர் கிளம்பினார்.

ஸ்ரீயை மடியில் வைத்த அர்ஜூன் சுவற்றில் தலை சாய்த்து கண்ணை மூட, பிரதீப் யோசிக்காது இரத்தமாகிய அவ்விடத்தை சுத்தமாக்கினான். பின் ஸ்ரீயை தூக்க வந்தான்.

அண்ணா! அவள் இருக்கட்டும். நீங்க அனைவரும் சாப்பிட்டு, அதை சரி பாருங்கள். இன்றே முடிக்கணும் என்றான் அர்ஜூன்.

உன் ஆடையும், ஸ்ரீ ஆடையும் இரத்தக்கறையாக உள்ளது. முதலில் குளித்து சாப்பிடு என்று பிரதீப் கூற, சாப்பாடா? என்று ஸ்ரீயின் கட்டிட்ட கையை காட்டி, அவள் நிலையை பார்த்து எப்படி அண்ணா சாப்பிட முடியும்? அழுதான். பிரதீப் அவனுக்கு ஆறுதலாய் அணைக்க, அவங்க தனியா இருக்கட்டும் என்றாள் தாரிகா. அர்ஜூனும் சோர்வுடன் மடியில் தன் ஏஞ்சலை சுமந்து கொண்டு தூங்கினான்.

தீனாவும் பொண்ணுங்களும் வண்டியில் சென்று கொண்டிருக்க, ஜானுவும் புவியும் ஏதோ யோசனையிலே வந்தனர். இதை பார்த்த தீனா அவர்களிடம் பேச்சு கொடுத்தான்.

ஜானு, அர்ஜூன் சரியில்லாதது போல் தெரிந்தது? என்ன விசயம்னு தெரியுமா? தீனா கேட்க, ஜானு சாலையை வெறித்தவாறு இதயா ஸ்ரீயை நினைத்து அழுதது,பிரதீப் துகிராவால் சிரித்தது, அர்ஜூன் சோர்வு அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளை உற்று பார்த்து விட்டு, புவனாவை பார்த்தான். அவளோ செடி மரங்களை பார்த்தவாறு ஸ்ரீயை பற்றி தான் யோசித்தாள். புவனா சிறுவயதில் ஸ்ரீயை ஹீரோ போல் பார்த்திருப்பாள். இப்பொழுது அவளுக்கு தாங்க முடியாத பிரச்சனை என்று தெரிந்து அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மனம் அதிலே உழன்று கொண்டிருந்தது.பின் தன் அண்ணனது காயத்தை நினைத்த அவள் கண்ணில் மணி உருண்டோட, சட்டென வண்டியை நிறுத்தி விட்டு,புவியை பார்த்தான்.வண்டி குலுங்கி நிற்க,இருவரும் சட்டென நினைவிற்கு வந்தனர்.

கீழே இறங்கி தீனா புவனா அருகே வந்தான்.

நீ எதுக்கு அழுற? கேட்டான்.

நான்..என்று தருணை நினைத்து மேலும் அழுதாள்.ஜானு பதறி, என்ன ஆச்சு புவி?

அண்ணா இதுவரை ஹாஸ்பிட்டலுக்கு சென்றதே இல்லை. அவனுக்கு தலையில் எவ்வளவு பெரிய கட்டு போட்டுருக்காங்க.அவனால் எழ முடியாத அளவு முதுகு, கை, கால்களிலும் அடி பட்டுள்ளது. அவனுக்கு ரொம்ப வலிக்கும். கஷ்டமா இருக்கு ஜானு என்று அழுதாள்.

தீனா பயங்கரமாக சிரித்தான். அவனை பார்த்து புவனா மீண்டும் அழுதாள்.

டேய், ஏன்டா சிரிக்கிற? மெண்டல் பிடிச்சிருச்சா? ஜானு திட்டினாள்.

இதுக்கெல்லாம அழுவாங்களா? அவன் நல்லா தான் இருக்கான். எனக்கும் தான் எத்தனை முறை புல்லட் உள்ள போயிருக்கு என்று அவனது சாகசத்தை கூறி பெருமையடித்தான்.

போதும் நிறுத்துறியா? உனக்கு அம்மா, அப்பா, அப்பத்தா, எல்லாரும் பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டாங்க. ஆனால் அவள் நிலை வேறு. அம்மாவை அவள் தான் பார்த்துக் கொள்கிறாள். அப்பாவும் வேலைக்கு செல்ல வேண்டும். அதனால் அங்கிள் இன்று மாலையே தருண் அண்ணாவை விட்டு அவரும்,அம்மாவிற்காக புவியும் கிளம்பிடுவாங்க. அண்ணாவை யார் பார்ப்பார்கள்? என்ன தான் ப்ரெண்ட்ஸ் இருந்தாலும் சொந்த உறவு போல் முடியுமா? உனக்கு எப்படி இதெல்லாம் புரியும்? எங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும் என்று ஜானுவும் அழுதாள்.

அவன் செய்வதறியாது, ஜானு என்று மெதுவாக அழைத்தான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

ஏன் இப்படி பேசுற? நாமெல்லாம் ஒரே குடும்பம் தானே?

இல்லை. நீங்க யாரும் என்னோட குடும்பம் இல்லை.எனக்கு என்னோட பிரதீப் அண்ணா மட்டும் தான் என்று தன்னுடைய பையில் இருந்த கீ செயினை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.

என்னோட அம்மா, அப்பா இல்லாம அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? அவனுக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னு தான் சிறு வயதிலே அவனை விட்டு செல்ல நினைத்தேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று வளர வளர புரிந்து கொண்டேன்.என்னை என் அண்ணாவிடம் மீண்டும்  சேர்த்ததற்காக உன்னோட அப்பாவிற்கு கடமை பட்டிருக்கிறேன்.

எனக்கு பெற்றோர்கள் இல்லை என்று நான் கவலைப்பட்டதே இல்லை. எனக்கு எல்லாமாய் என்னோட அண்ணா இருந்தான். எனக்கு முதல் முறை பெற்றோர் இல்லை என்று வருத்தப்பட்டது அண்ணாவிற்காக தான். அவனுக்கு உடல் நலமில்லை என்றாலும் அவன் வேலையை அவன் தான் செய்வான். நான் செய்ய வந்தால் விடவே மாட்டான். அப்பொழுது தான் அண்ணாவின் தனிமை, கஷ்டம் அனைத்தும் புரிந்தது.ஆனால் என்னால் இதுவரை அவனுக்காக என்று எதுவும் செய்ததில்லை அழுதாள் ஜானு.