ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 90.

கல்லூரியில் காலை இடைவேளையின் போது அகில், நித்தி, யாசு, அபி கேண்டீன் சென்றனர். அங்கிருந்த பவதாரணியின் தோழிகள் பவியை பற்றி பேசுவதை பார்த்து நித்தி கோபமுடன் அவர்கள் முன் வந்து நின்றாள்.

என்ன? அவர்கள் கேட்க,

அங்கிருந்த ஜூஸை அவர்கள் அனைவர் மீதும் தொடர்ந்து ஊற்ற, யாசுவும் அபியும் அவளை தடுத்தனர்.அகில் அவர்களை முறைத்தவாறு நின்றான்.

அவள் உங்களை தோழியாக தானே நினைக்கிறாள். நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்? திட்டினாள்.

அந்த பவிக்கு இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேணும்டி? அவளை காப்பாத்திட்டாங்க. அகிலிடம் நாம ஏதும் சொல்லி இருக்கவே கூடாது. அவள் எவ்வளவு பெரிய பணக்காரப் பொண்ணு. அவங்க பெற்றோர் தான் பணத்தை வைத்து சமாளித்து விடுவார்களே? அதையும் மறைத்திருப்பார்கள் ஒருத்தி ஏளனமாக முகபாவனை காட்டினாள்.

அவ இல்லைன்னா..நாம பணத்துக்கு எங்கே போவது?மற்றொருத்தி கேட்க,

அவளும் பாவம்டி.. இன்னொருத்தி சொல்ல,

பாவமா? அவளா? அவள் நம்மை விட பணக்கார பொண்ணு. அழகாக இருக்கா. அவ பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்க. நம்மள ஒருத்தன் கூட கண்டுக்கவே மாட்டிகிறானுக. அவளை வேற ஏதாவது செய்யணும்.

அவ இனி கல்லூரிக்கு வருவாளா?

வருவா.நாம் எப்பொழுதும் போல் அவள் பின்னே சுற்றுவோம். நமக்கு தேவையான அனைத்தும்  கிடைக்கும். அவளுக்கு வேற பிரச்சனை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

வந்தானா சரி தான்.அவர்கள் பேசுவதை கேட்டு தான் நித்தி அவ்வாறு செய்திருப்பாள்.

தோழியா? அவளா? அவள் தான் எங்கள் முதல் எதிரி.

நீங்க அவளோட அப்பாவி தனத்தை பயன்படுத்திக் கொள்கிறீர்களா?

அப்பாவியா? அவளா? எத்தனை பசங்களை மயக்குகிறாள்? அவளா அப்பாவி?

ச்சீ..என்னடி ப்ரெண்ட்ஸ் நீங்க? அவள் யாரையும் மயக்கவில்லை. உங்களுக்கு அவள் மீது பொறாமை. உங்களுக்கு முன்பே அவனை பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் அவளிடம் கூறவில்லை என்று பெரிந்து தள்ளினாள்.

அங்கிருந்த ஒரு பொண்ணு தெனாவட்டாக, ஆமாம் தெரியும். அவனுக்கு உதவி கூட செய்தோம். அவளை அனுப்பியதே நாங்க தான். அகில் இடையில் வரலைன்னா. அவள் கதை நேற்றே முடிந்திருக்கும் அவள் முடிப்பதற்குள் அவளை கன்னத்தில் அறைந்தான் அகில்.

எவ்வளவு கேவலமான பொண்ணுங்க நீங்களாம்? உங்களை பார்க்கவே அருவருப்பா இருக்கு என்று அவர்கள் பேசுவதை கேண்டியனில் இருக்கும் அனைவரும் கேட்டனர். அங்கிருந்த பொண்ணுங்க பவி தோழியாக நடித்தவர்கள் அருகே வந்து, அவரவர் கையில் இருப்பதை தூக்கி அவர்கள் மீது எறிந்தனர்.

நித்தி அவர்களிடம், இனி பவி அருகே தோழின்னு எவளாவது வாங்க அப்புறம் பார்த்துக்கிறேன் கோபமாக அவர்களை மீண்டும் அடிக்க வந்தாள்.

நித்தியை தடுத்து அபி, இந்த மாதிரி ஜென்மங்களோட பேசி நேரத்தை வீணாக்காதே..வா செல்லலாம் என்று அவளை இழுத்து செல்ல,யாசு அவர்களிடம் ஆள் காட்டி விரலை உயர்த்தி பத்திரம் காட்டி சென்றாள். அகிலும் அவர்களை கனலாய் முறைத்து விட்டு சென்றான்.

வகுப்பிற்கு செல்லலாம் என்று அபி கூற, நீங்க போங்க..நேரம் கழித்து வருகிறேன் என்று அகிலிடம் மதியம் பவியை பார்க்கணும் கூறிக் கொண்டே கார்டனிற்கு சென்றாள்.

நடந்ததை வீடியோவாக கல்லூரி குழுவில் பகிரப்பட்டது. அனைவருக்கும் விசயம் சென்றடைய, சைலேஷின் தாத்தா அவனுக்கு போன் செய்ய, சைலேஷ் ஹாஸ்பிட்டலில் தருணை பார்க்க சென்று நிவாஸை அந்நிலையில் பார்த்து திகைத்த படியே போனை எடுத்தான். அவர் அவனிடம் கூற, நான் வர கொஞ்ச நேரமாகும். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கைரவிடம் சொல்லுங்கள் என்றான்.

என்னடா பொறுப்பிலாமல் பேசுகிறாய்? தாத்தா சினத்துடன் கேட்டார்.

தாத்தா..அவளோட ப்ரெண்டை ஹாஸ்பிட்டலில் பார்க்க வந்தேன். இன்னொருவனும் பலத்த அடியுடன் இருக்கிறான். அவளுக்கு பதிலாக தான் இங்கே இருக்கிறேன்.

பெயரனின் கவலை தோய்ந்த பேச்சு அவரை உருக்க, சரி பார்த்துட்டு உதவி தேவைப்பட்டால் செய்து விட்டு வா. பாப்பாவை கைரவை பார்க்க சொல்கிறேன் என்று போனை துண்டித்தார்.

அவர் கைரவிடம் கூற, அவன் ஐந்தே நிமிடத்தில் தாத்தாவிடம் வந்தான். கல்லூரிக்குள் வர முடியாது. அவளை இங்கே வர வையுங்கள்.

அவரும் நித்தியை வர வைத்தார். அவளுக்கு தண்டனையோ என்று மற்றவர்கள் பேச, அகிலும் நண்பர்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

நித்தியிடம் தாத்தா பேச, அண்ணா ஹாஸ்பிட்டல் சென்றிருக்கிறானா? கேட்டான் கைரவ். நித்தி விசயத்தை கூறினாள்.

நித்தி அர்ஜூன் ஓ.கே வா? கேட்டான்.

இல்லை. ஸ்ரீயை நேற்று வெகு நேரம் தேடியும் காணவில்லை.தாரிகாவிற்கு வந்த மெசேஜை கூறினாள்.

அவள் கூறினால் என்று விட்டு விட்டீர்களா? கைரவ் கோபப்பட்டான்.அவள் அமைதியாக இருக்க, அர்ஜூனை அழைத்து பேசினான். அர்ஜூன் அனைத்தையும் கூறவில்லை.ஸ்ரீ அவன் வீட்டில் இருப்பதையும், ஜிதின் போதை மருந்தால் தவறாக நடக்க முயற்சி செய்தான் என்றும் நிவாஸ் அவனுடன் சண்டை போட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதையும் கூறினான்.

அர்ஜூன்,ஏன்டா எங்களிடம் கூறவில்லை கத்தினாள் நித்தி.

தயவு செய்து கொஞ்சம் அமைதியா இரு. என்னால முடியல ப்ளீஸ் கெஞ்சினான் அர்ஜூன்.

நித்தி, நீங்க யாரும் அவளை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம். அனைவரும் நேராக ஹாஸ்பிட்டல் வந்திருங்க. அவளுடன் தாரிகா இருக்கா. நான் வீட்டிற்கு மருத்துவரை அழைத்து செல்லப் போகிறேன்.அவள் மிகவும் உடைந்திருக்கிறாள். உங்கள் அனைவரையும் பார்த்தால் மீண்டும் பயப்படுவாள். நாளை பார்த்துக் கொள்ளலாம்

நானே அவள் முன் சென்றால் ஏதும் பாதிக்கப்படுவாளோ என்று பயமாக உள்ளது.

நித்தி கண்ணீருடன், நீ ஓ.கே வாடா?

இல்லை என்று அழ ஆரம்பித்தான். அவளை அவன் ஏதும் செய்யவில்லை தானே?

அழுகையை கட்டுப்படுத்த முயன்று தோற்ற அர்ஜூன் கத்தி அழுதான். ஏதும் செய்யவில்லை என்றான்.

அப்புறம் எதற்குடா அழுற?

அவளை எந்நிலையில் பார்த்தேன் தெரியுமா? நாம் தாமதமாக வந்து விட்டோம் நித்தி என்று அழுதான்.

அர்ஜூன் நீ ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காயா?நான் வரவா?

நோ..நித்தி நான் செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது.

வேலையா? கைரவ் கேட்டான்.

ப்ளீஸ் தனியே இருக்கணும். தொந்தரவு செய்யாதீங்க என்று போனை வைத்தான்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?நித்தி அழ ஆரம்பித்தாள்.ஜிதின் இப்படி செய்வான்னு நினைக்கவேயில்லை. தாத்தா எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? அழுதாள்.

அவனை என்ன செய்கிறேன் பார்? என்று கைரவ் சீற்றத்துடன் எழுந்தான்.

எங்கே செல்லப் போகிறாய்? தாத்தா அதட்டினார். நித்தி அவனை பார்த்து, ஜிதின் பக்கம் செல்வதனால் உனக்கு தான் பிரச்சனையாகும்.நீ செல்ல வேண்டியது ஹாஸ்பிட்டல் தருண், நிவாஸ் அங்கிருக்கிறார்கள். தருண் விழித்த செய்தி மட்டும் தான் தெரியும். அவனையும் நிவாஸையும் பார்க்கணும். அதற்கு முன் பவியை பார்க்க போகணும் என்றாள்.

கைரவ்..அவளிடம் பவியை பற்றி கேட்டு அறிந்து கொண்டான்.நித்தி நீ இரு.நான் பார்த்து விட்டு கூறுகிறேன்.

உன்னுடைய அண்ணாவும் அங்கு தான் சென்றிருக்கிறான் தாத்தா கூற, அவர் அங்கே என்ன செய்கிறார்?

நீ நேற்றே கூறினாய் என்று சொன்னான். அவன் சென்றது கூட தெரியாது.இப்பொழுது போன் செய்தேன். அங்கிருப்பதாக கூறினான்.

அந்த சிடுமூஞ்சிக்கு ஸ்ரீ பற்றி தெரியாது தானே? கைரவ் கேட்டான்.

யாரை கேட்கிறாய்?

அகில் தான்.

அவனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். ஜிதினை கொல்ல கூட தயங்க மாட்டான். ஸ்ரீ விசயத்தில் பயங்கர கோபம் வரும் என்றாள்.

தெரியும். அதான் கேட்டேன்.

என்ன தெரியும்? நித்தி கேட்டாள்.

ம்ம்..தெரியும். நித்தி நீயும் அவனை போல் ஸ்ரீ, அர்ஜூனை பற்றி தவறாக நினைத்தாயா?

என்ன சொல்ற?

உங்கள் பள்ளியில் நடந்தது?

உனக்கு எப்படி தெரியும்? கண்கலங்கினாள்.

நான் அர்ஜூன் வீட்டிற்கு சென்றது என்று நடந்ததை கூறினான்.

இல்லடா.பிராமிஸ்டா.எனக்கு இரண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். நான் எப்படி தவறாக நினைப்பேன்? அர்ஜூன் ஸ்ரீ மீது வைத்துள்ள காதல் கூட ரொம்ப பிடிக்கும். அவனால் தான் அவள் பாதுகாப்பாக இருப்பாள் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால் அர்ஜூனை பற்றி பேச்செடுத்தாலே அகிலிற்கு கோபம் வரும். அந்த பிரகதி மட்டும் எங்களிடையே வரவில்லை என்றால் அர்ஜூன் அகிலை நானும் யாசுவும் நண்பர்களாக்கி இருப்போம். அவளால் எல்லாம் போச்சு. அன்று நடந்ததன் பின் அகில் ஸ்ரீ இடையே பிளவு வந்தது.அகில் காயம் அவளை விட்டு போகவே இல்லை.அவனிடம் அதிகமாக பேசவேயில்லை. இது நிரந்தரமாக ஐந்து ஆண்டுகளாய் அவளை பிரிய நேரிட்டது.

அந்த பிரகதி மீது அன்றே எனக்கு சந்தேகம் இருந்தது. இன்று தான் தீர்ந்தது. அவளால் ஸ்ரீ அதிகம் காயப்பட்டு விட்டாள் அழுதாள்.தாத்தாவும் கைரவும் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

நான் தருண் நிவாஸை பார்த்து வருகிறேன். தருணை உனக்கு எப்படி தெரியும்?

அவன் என் வகுப்பு தான். நீ சொன்ன பவியும் என் வகுப்பு தான் என்றான் கைரவ்.

ம்ம்..தருண் சொன்னான்.

நான் பார்த்து வருகிறேன். நீ அந்த பொண்ணை பார்த்துக் கொள். விடுப்பு எடுத்து வந்து விடாதே! அண்ணாவிற்கு கோபம் வந்து விடும். நான் அங்கு நடப்பதை கூறுகிறேன் கிளம்பினான்.

பார்த்து வண்டியை ஓட்டு என்றார் தாத்தா. நானும் வகுப்பிற்கு செல்கிறேன் தாத்தா என்று எழுந்தாள். தாத்தா அருகே வந்து அவளது கையை பிடித்து, அம்மா எதற்கும் அழாதேம்மா.. தைரியமா இரு என்று ஆற்றினார்.

துகிராவினால் அனைவரின் மனநிலையும் மாறக் கண்ட பிரதீப் அர்ஜூனை பார்த்தான். அர்ஜூன் அழுது கொண்டிருக்க, ஸ்ரீக்கு என்னடா? கேட்க, சைலேஷும் சந்துரூவும் வந்தனர்.

அர்ஜூன் என்னடா? சைலேஷ் கேட்க, சார் என்று மூவரையும் பார்த்து விட்டு, பிரதீப்பை அணைத்து அழுதான்.

அர்ஜூன்..என்று பதறி, அவனை விலக்கி, ஸ்ரீக்கு ஏதுமா? பிரதீப் கேட்டான். அர்ஜூன் அனைத்தையும் கூறி விட்டான் தாங்க முடியாமல்.

என்னடா சொல்ற? சந்துரூ அர்ஜூன் சட்டையை பிடிக்க, அவன் வெடித்து அழ, சைலேஷ் அவனை இழுத்து அவனது காரில் ஏற்றினான்.மற்றவர்களும் அதே காரில் ஏறினார்கள்.

அண்ணா, என்னால சுத்தமா முடியல..ஒரு முறையல்ல.. இரண்டு முறை நடந்துள்ளது அவளுக்கு தெரியாமலே.இன்று தான் அவளும் பார்த்திருக்கிறாள். அவள் மயக்கத்தில் இருக்கிறாள். நிவியை அடித்தார்கள்.அவன் இன்னும் எழவேயில்லை. இருவரும் எழுந்த பின் எப்படி இருவரையும் சமாளிப்பது? அழுதான்.

நானும் உங்களிடம் ஒன்று சொல்லணும் இன்பா, ஆதேஷ் சொன்னது போல் யாழு இறக்கவில்லை. கோமாவில் இருக்கிறாள். நான் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சந்துரூ கூறினான்.

என்ன சொல்றீங்க? உயிரோட இருக்காங்களா? அர்ஜூன் திகைத்தான்.

அதற்கு காரணமும் கயலாக தான் இருக்கும் என்று சந்துரூ கூற, இல்லை எனக்கு சந்தேகமாக உள்ளது.

ஸ்ரீயிடம் அவர்கள் நடந்து கொண்டதால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிவி கயலது கழுத்தை நெறித்தான். அப்போது அவள் கண்ணில் பயம் மட்டும் தான் தெரிந்தது.அவ எல்லாத்தையும் செய்யல. அவங்க பின்னாடி யாரோ பெரிய ஆள் இருக்காங்கன்னு தோணுது என்றான் அர்ஜூன்.

அவளுக்கு பின்புலம் ஆள் உள்ளதா? யாராக இருக்கும்? வக்கீல் மூளை தீவிரமாக,

அவங்க எனக்கு அக்கா என்றான் அர்ஜூன். அதிர்ந்தான் சந்துரூ.

அவன் மோகனை பற்றி கூற, தாரிகா உன்னோட தங்கையா? யாழு உனக்கு அக்காவா? சந்தோசத்துடன் கேட்டான் சந்துரூ.

நானும் இந்த சந்தோசத்தில் தான் இருந்தேன். ஆனால் இப்பொழுது என்னால் சிரிக்க என்ன? அமைதியாக கூட இருக்க முடியாது என்று ஸ்ரீயை நினைத்து அவனை அவனையே வருத்திக் கொண்டிருந்தான்.

      “எத்தனை இடர்கள்

       எத்தனை வலிகள்

       எத்தனை காயங்கள்

       எத்தனை பரிதவிப்புகள்

       எத்தனை காதல்கள்

       எத்தனை ஏமாற்றங்கள்

       வலியால் துவலும் மனதை

       ஆற்ற வருவாயோ நீ?”