அத்தியாயம் 6

எழுந்து நடந்து கொண்டே நித்தி மனதினுள்ளே,எனக்கு அவரை பிடிக்கும் தான். ஆனால் நான் இப்பொழுது நல்ல விதமாக பேசினால் வசதி அறிந்து பணத்திற்காக பேசுகிறேன் என்று நினைத்து விடுவாரோ!அவளது கண்ணிலிருந்து நீர் சொட்ட, தூரத்தில் ஸ்ரீயை நிவாஸ் திட்டிக் கொண்டிருந்தான்.நான் முதலில் அவருடன் சண்டை போட்டு விட்டேனே! இப்பொழுது எப்படி பேசுவது? இவர்கள் இருவரும் மீண்டும் காதலிக்கிறார்களோ! அவரால் முதல் காதலை மறக்க முடியவில்லை போல்….மனம் பலவாறு சிந்திக்க, அழுதாள். ஏற்கனவே காய்ச்சல் அதிகமாக இருந்தது. அவள் பலவீனமாக இருந்தாள்.யாருமில்லா தனி கல் இருக்கையில் உட்கார்ந்தாள்.அங்கேயே சாய்ந்து விட்டாள்.

சைலேஷ் மறுபடியும் அதே இடத்திற்கு வந்து அவளை தேடினான். போனை பார்த்து எடுத்தான். மேற்புறம் லேசாக உடைந்தும், கீறலாகவும் இருந்தது.போன் ஆனிலே இருந்தது.அதில் அவளும்,அவளது அப்பாவும் இருந்தனர். உள்ளே போட்டோஸ் எடுத்து பார்த்தவன் அதிர்ச்சியுடன் அங்கேயே உட்கார்ந்தான். சைலேஷ் கல்லூரி படிக்கும் போது எடுத்த போட்டோவில் பாதி..நித்தி போனில் இருந்தது.நான் அவளை பார்ப்பதற்கு முன்னே அவளுக்கு என்னை தெரியுமா?யோசித்தவாறு இருக்க, கவின் அங்கே வந்தான்.

சைலேஷை பார்த்தவன் இங்கே ஒரு பொண்ணு இருந்தாள் பார்த்தீர்களா? கேட்க, அவனோ இவ்வுலகிலே இல்லை. ஸ்ரீயும், நிவாசும் கோபமாக  தனித்தனியே இருக்க அதை பார்த்த கவின் அவர்களிடம் கேட்க,

உன்னால் தான் சீனியரை காணோம் என்று மீண்டும் இருவரும் சண்டையிட, கவின் கோபமாக நிறுத்துங்கள் என்று கத்தினான்.பின் யாசுவிடம் கேட்க,அவள் தெரியாது என்று அவளும் வேகமாக அங்கே வந்தாள். அவன் கத்தியதில் சைலேஷ் நினைவிற்கு வந்து, கவினிடம் வர,….

யாசு சைலேஷை அதிர்ச்சியோடு பார்த்து விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அவளிடம் ஏதும் பேசினீர்களா? முறைத்துக் கொண்டு கேட்க, நித்தி போனை கொடுத்து விட்டு,நடந்ததை  கூறினான்.

நீங்கள் எதற்கு அவள் கண்முன் வந்தீர்கள்? பதட்டப்பட,

இவர் வந்தால் என்ன? புரியாமல் விழித்தான் கவின்.

இதை பார் என்று யாசு கவினிடம் நித்தி போனை கொடுக்க, அவன் பார்த்து விட்டு கண்கலங்கினான். அவனும் சிறு வயதிலிருந்து நித்தியை காதலிக்கிறான்.

அவள் மனம் சரியில்லாத போது எங்கே செல்வாள்? சைலேஷ் கேட்க,

கவின் சைலேஷை முறைத்தவாறு,ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.நித்தி மயங்கியதை பார்த்தவுடன் சைலேஷ் அவனது செகரட்டரிக்கு போன் செய்து காரை எடுத்து வர சொன்னான். பின் அவளை பார்க்க, கவின் அவளை பார்த்து விட்டு, தண்ணீர் கேட்க, ஸ்ரீ எடுத்து கொடுத்தாள். யாசு அவளை முறைத்துக் கொண்டிருக்க, நிவாஸ் ஸ்ரீ அருகே வந்து நின்றான்.தண்ணீர் தெளித்தும் எழவில்லை. காய்ச்சல் அதிகமாக உள்ளது.மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றான் கவின்.

காரிலிருந்து கைரவ் வர,தாத்தாவை பார்க்க வந்தேன். என்ன ஆயிற்று? கேட்க, கவின் இருவரையும் முறைத்தான். ஆனால் கைரவ் கண்டு கொள்ளவில்லை.சைலேஷ் காரை ஓட்ட, நித்தியை தூக்கி கவினும் யாசுவும் உள்ளே ஏற, ஸ்ரீ, நிவாஸ் இருவரும் வருகிறோம் கூற, சைலேஷ் அவர்களை தடுத்தான். நீங்கள் அவளை கல்லூரி முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று காரை எடுத்தவன். கைரவை பார்த்து தாத்தாவிடம் கூறி விட்டாயா?

கூறி விட்டேன் என்றான்.நித்திக்காக சைலேஷ் கார் ஓட்டுவதை கல்லூரியில் போட்டோஸ், வீடியோ எடுத்து கல்லூரி முகநூலில் பேசிக் கொண்டிருந்தனர். தாத்தாவும் சைலேஷ் வேகமாக செல்வதை பார்த்து அந்த பெண்ணாக இருக்குமோ சிந்தித்தார்.

கார் மருத்துவமனையை அடைந்ததும் அவளை மருத்துவரிடம் காண்பிக்க, அவர் சோதனையை முடித்து விட்டு…அவருக்கு மனஅழுத்தம் அதிகமாகி உள்ளது.

அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவள் நன்றாக ஓய்வெடுக்கட்டும். கொஞ்ச நேரத்தில் விழித்து விடுவார். சாப்பிட கொடுங்கள். மனஅழுத்தமுள்ள ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குளுக்கோஸ் பாட்டிலை ஏற்றி விட்டு, அவள் சாப்பிட்ட பின் செவிலியரிடம் கூறுங்கள். அவர் மருந்தை செலுத்துவார். நன்றாக ஓய்வெடுக்கட்டும். காய்ச்சல் குறைந்திருக்கிறதா? என்று நான்கு மணிக்கு மேல் பார்ப்போம் ….என்றார்.

கவின் மருத்துவரை சந்திக்க சென்றான். சைலேஷ் நித்தியருகே வந்து அமர்ந்து, அவள் கையை பிடித்துக் கொண்டு, நீ தான் அந்த பொண்ணா? எனக்கு தெரியாமல் என்னை காதலித்தாயா? ஒரு வார்த்தை சொல்ல கூட இல்லையே! பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீயும் நிவாசும் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தனர். சைலேஷ் அவர்களை பார்த்து ஏதும் கூறாமலிருக்கவே…..இருவரும் நித்தியை பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

அகில், அபினவ், அர்ச்சு வேகமாக அவர்களை நோக்கி வர, அகில் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே சென்றான்.அர்ச்சு ஸ்ரீயை பார்த்து அப்படியே நின்றான். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கைரவ் கோபமாக அர்ச்சு அருகே வந்து தொண்டையை செறுமினான். அவனை பார்த்து விட்டு, அர்ச்சு நித்தி அறையை நோக்கி சென்றான்.அனைத்தையும் நிவாஸ் பார்த்துக் கொண்டிருக்க, மூவரையும் பார்த்து சைலேஷ் வெளியே வந்தான். அவர்கள் நித்தியை பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

கவின் வந்தவுடன் நண்பர்கள் அவனிடம் கேட்க, நடந்த எல்லாவற்றையும் கூறினான்.சைலேஷிற்கு நன்றி கூறி விட்டு திரும்ப,கைரவ் அங்கே இருப்பதை பார்த்து,அகிலும் அவனும் முறைத்துக் கொண்டிருந்தனர்.

சைலேஷ் தன் அண்ணன் என்று கூற, அனைவரும் அவனிடம் வித்தியாசமான பார்வையை செலுத்தினர்.

நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்?அகில் கேட்க, அவர்கள் ஏதும் கூறாமல் அகிலை பார்த்தனர்.

கைரவ் மனதிலும், அண்ணா நித்திக்காக வந்தது அவ்வளவு ஆச்சர்யமாக தான் இருந்தது. அவள் முதலிலே அண்ணாவை காதலித்திருக்கிறாளா? இப்பொழுது இவர் காதலிக்கிறாரோ! என்ன தான் நடக்கிறது? என்று நினைத்துக் கொண்டே, நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறினான் கைரவ்.

அவள் விழித்தவுடன் செல்வோம் என்று சைலேஷ் கூற, தாத்தாவை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் மேலும் தன் அண்ணனிடம் ஏதும் கேட்பார்களோ என்று அழைத்து சென்றான். நீங்கள் அவளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சைலேஷ் கூறி விட்டு சென்றான்.

யாசு கோபமாக ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த நிவாஸ் அவளை தனியாக யாருமில்லாத பக்கத்து அறைக்கு சென்று, நாம் இங்கிருந்து கிளம்புவோம்.

என்ன கூறுகிறாய்? சீனியர் இன்னும் கண் விழிக்கவில்லை. இந்நிலையில் கிளம்பினால் நன்றாக இராது.

நீ கூறுவது சரி தான். நித்தி சீனியர் விழித்தவுடன் கிளம்புவோம் என்றான் நிவாஸ். ஸ்ரீ ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள். பின் இருவரும் வெளியே வந்தனர். ஸ்ரீ ஓரிடத்தில் உட்கார,அர்ச்சு அவளருகே வந்து அவளது பின் பக்கதலையை தொட்டுப் பார்த்தான்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நிவாஸ் கேட்க, ஸ்ரீ அர்ச்சுவை பார்த்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

அவன் ஏதும் கூறாமல் அவளருகே உட்கார, அகில் வேகமாக அர்ச்சுவை வெளியே இழுத்து சென்றான். கவின் நித்தியுடன் இருக்க, அகில் பின்னாலே அபினவும், யாசுவும் சென்றனர்.

அர்ச்சுவை விடுத்து அகில் அவனிடம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவளுக்கு உதவ வந்தாயா? வேறெதற்கும் வந்தாயா? கத்தினான்.

அவளது அடிபட்ட இடத்தை தான் தொட்டு பார்த்தேன்.

நான் உன்னிடம் கூறி தான் உதவி கேட்டேன்.நீ எல்லை மீறி சென்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.அவள் மனதில் நுழைய பார்க்கிறாயா?

நான் அப்படி நினைக்கவே இல்லை. அவள் சரியாகி விட்டாளா? என்று தான் பார்த்தேன் அர்ச்சு பொறுமையாகவே பேசினான்.

நீ இங்கிருந்து செல் என்று அகில் கத்தினான்.

அகில், இது மருத்துவமனை.ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? அவனும் நம் நண்பன் தானே என்று அபினவ் கேட்க,

எனக்கு இவனெல்லாம் நண்பனில்லை கத்த, அர்ச்சு மனம் கனமாயிற்று. அவன் கண்கலங்க அங்கிருந்து கிளம்பினான்.

நில்லு அர்ச்சு…..நில்லு……யாசு அவனை அகிலிடம் அழைத்து வந்து, இவன் எங்களுடைய நண்பன் தான் கூறி விட்டு அபினவை பார்க்க,

அவனும் ஆமாம் அவனும் எங்களுடைய நண்பன் என்று கூறவே அகில் கோபமாக உள்ளே சென்றான்.அர்ச்சுவை இருவரும் உள்ளே அழைக்க,

அவன் ஏற்கனவே என் மீது கோபமாக இருக்கிறான். நான் உள்ளே வந்தால் பிரச்சனை அதிகமாகும் என்று அங்கேயே அமர்ந்தான். நித்தி விழித்தவுடன் கூறுங்கள். அவளை பார்க்க வேண்டும் அர்ச்சு அவர்களிடம் கூற, இருவரும் உள்ளே சென்றனர். அவர்கள் பேசியதை நிவாஸ் அனைத்தையும் கேட்டு விட்டான். அவனுக்கு இவர்கள் மீது சந்தேகம் துளிர் விட்டது.

யாசு ஸ்ரீயை முறைத்துக் கொண்டே இருக்க, ஓரளவு நடப்பதை புரிந்து கொண்ட நிவாசும், ஸ்ரீயை வெளியே அழைத்து சென்றான். அங்கே அர்ச்சு இல்லாமல் இருக்க, அமைதியாக ஸ்ரீயிடம் ஏதும் பேசாமல் இருந்தான்.

உனக்கு என் மேல் உள்ள கோபம் போகவில்லையா? சண்டைக்கு வருகிறாய்? யாரும் என் அருகே வராமல் பார்த்துக் கொள்கிறாய்? தயவுசெய்து பேசுடா. எனக்கென்று நீ மட்டும் தான் இருக்கிறாய்? நீயும் ஏன்டா இவ்வாறு நடந்து கொள்கிறாய்? ஸ்ரீ நிவாசிடம் கெஞ்சினாள்.

நீ செய்கிற காரியத்திற்கு, நான் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. நானே அவனிடமிருந்து உன்னை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீ அவன் பக்கம் இருக்கிறாய். அவன் என்ன செய்தாலும் தடுக்க மாட்டிற?

புரிந்து கொள்டா நிவி..

கோபத்தில் அவன், எனக்கு என்ன புரிய வேண்டும்? உனக்கு தான் புரியவில்லை. அவனுக்கு நீ அதிகமாகவே இடம் கொடுத்து விட்டாய்? கத்தினான். மரத்தின் பின் அமர்ந்திருந்த அர்ச்சுக்கு இவர்கள் பேசுவது நன்றாகவே கேட்கிறது.இது தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது எதற்காக கத்துகிறாய்? ஜிதின் எனக்கானவன் இல்லை. நான் என்ன அவனை காதலிக்கவா செய்கிறேன்? எனக்கு அவன் மீது எப்பொழுதும் காதல் வராது.அவன் எனக்கு செய்தது அப்படி இருந்தும் அவனை திருமணம் செய்ய ஒத்து கொள்ளதான் போகிறேன். அதற்கும் காரணம் உள்ளது. உனக்கு தான் அவர்களை பற்றி தெரியும் தானே! கண்கலங்க கூறி விட்டு கோபமாக அவள் உட்கார……

நிவாஸ் அவளருகே வந்து,எனக்கு புரிகிறது. ஆனால் திருமணம்….கூற,….

என் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று ஸ்ரீ அழ, நீ என்னிடம் ஏதும் மறைக்கிறாயா? நிவாஸ் கேட்க, அவனை திரும்பி பார்த்து விட்டு, முதலில் சீனியருக்கு பழம் வாங்கி தருவோம் என்று கூற, அங்கே அகில் வந்தான்.

இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நாங்கள் சீனியருக்கு பழம் வாங்க போகிறோம் என்றவுடன் வாருங்கள் செல்லலாம் அகில் கூற, யாசு அங்கே வந்து நித்திக்கு சாப்பாடு வாங்க வேண்டும் அகிலை பார்க்க, அவன் ஸ்ரீ கையை பிடிக்க, யாசு அவளை முறைத்தாள்.

சீனியர் நாங்களே வாங்கி கொள்வோம்.மதியம் சாப்பிடவில்லை. சாப்பிட்டு விட்டு நாங்களே வாங்கி வருகிறோம் என்று நிவாஸ் அகில் கையை எடுத்து விட்டு அவன் ஸ்ரீ கையை பிடிக்க, அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.

அர்ச்சு அங்கே வந்து, வா….. யாசு வெளியே வாங்க வேண்டாம். என் வீட்டிற்கு வா சமைக்கலாம் நிற்காது யாசுவை இழுத்து சென்றான். நிவாஸ் அர்ச்சுவை பார்த்தபடி நிற்க,அகில் பைக்கை எடுத்து வந்து வாருங்கள் கிளம்பலாம். முதலில் சாப்பிடுவோம். பின் பழம் வாங்கி வருவோம் என்று இருவரையும் வண்டியில் ஏற்றி அழைத்து சென்றான்.

“நீக்கிய பின்னும் என்னருகே வருபவனை

தாளாது ஏற்கும் வழியே தவிர

வேறேதும் இல்லையடா

நமை காக்க!

என்னுணர்வு இல்லாது போனாலும்

அவனை ஏற்பேனடா

நமை காக்க!

மனம் வெறுத்து போனாலும்

பூவாகிய நான் சருகாவேன்

நமை காக்க!

என்னுயிர் சொந்தமான

உனை காக்க

ஏதும் செய்வேனடா தமையனே!”