ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 71.

தாரிகா சாப்பிட்டு நிவாஸுடன் வகுப்பிற்கு வரும் வழியில், கவினுடன் முன் சுற்றிக் கொண்டிருந்த பொண்ணு அவனை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து நின்றாள்.

கவின் பணக்காரனெல்லாம் இல்லை. அவனை அன்று ஒரு ரெஸ்டாரண்டில் பார்த்தேன். சர்வராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ச்சே..இந்த மாதிரி லோ கிளாஸா இருப்பான்னு நினைக்கவே இல்லைடி. அவன் பின் சுற்றி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்திருக்கிறேன். யூஸ்லெஸ் ஃபெல்லோ அவள் திட்ட, கோபமான தாரிகா அவன் முன் வந்து கையை கட்டிக் கொண்டு நின்றாள்.

மேடம் நீங்களா? கிண்லாக அவர்கள் கேட்க, தெரியுதாடி.. அவனை உருகி உருகி காதலித்தளே அவள் தான் என்று தாரிகாவையும் கிண்டல் செய்தனர். சுற்றி அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

தாரிகா அவள் கையில் வைத்திருந்த கேக்கை அவள் முகத்திலே சட்டென அப்பி விட்டு,

யாரடி யூஸ்லெஸ்னு சொன்ன? அவர் பின்னே ஜொல்லு விட்டு திரிந்தாயே, அப்பொழுது தெரியவில்லையா உனக்கு?

நீ வாழ்றது உன்னோட அப்பா பணத்துல. அவரு சொந்தமா சம்பாதித்து அவருடைய குடும்பத்திற்காக இப்பொழுதே சம்பாதிக்கிறார்.

லோ கிளாஸ் நீ தான் டி. எந்த பணக்காரன் கிடப்பான்னு அலையுற..நீ பேசுறியா?கத்தினாள்.

தாரி போதும் வா..போகலாம் நிவாஸ் அவளை தடுக்க, இவளாம் அவரை பற்றி எப்படி பேசலாம்? மீண்டும்  கோபப்பட, அங்கே வந்த துகிரா..அச்சோ கேக்கை இப்படி வேஸ்ட் பண்ணீட்டியே! என்று அதே பொண்ணு மேல் அவள் கையிலிருந்த மேங்கோ ஜூஸை ஊற்றினாள். அனைவரும் வீடியோ எடுக்க,

அட வீடியோ வா? இதோ பாருங்கள் என்று துகிரா அவள் கையிலிருந்த மற்ற சாப்பாடு பொருட்களையும் கொட்ட, தாரிகாவும் அவளை போல் செய்து கொண்டிருந்தாள். நிவாஸ் வேண்டாம் என்று தடுக்க, ஆதேஷ் ஓடி வந்து அவர்களை தடுத்து,என்ன செய்கிறீர்கள்? திட்டினான்.

கவினிடம் நடப்பதை ஆதேஷ் கூறி தான் வந்திருப்பான். அனைவரும் அங்கு வந்தனர்.

இங்க பாரு. இனி சீனியரை பத்தி ஏதாவது தேவையில்லாம பேசுன. இதுக்கு மேலையும் செய்வேன் கையை உயர்த்தி அந்த பொண்ணை மிரட்டினாள் தாரிகா.

கவின் அதிர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவனை பார்த்து நேராக சென்று அவனது கையை கோர்த்துக் கொண்டு, வாங்க சீனியர் போகலாம் என்று அவனை இழுத்து சென்றார். மற்றவர்கள் அவளை பார்த்து திகைக்க,அர்ஜூன் மட்டும் தாரிகாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

ஆதேஷ் துகிராவிடம், அவ சீனியரை லவ் பண்றா?இப்படி பண்ணா? நீ எதுக்கு இப்படிபட்ட வேலைய பாக்குற? கேட்டான்.

எனக்கு இந்த மாதிரி நான்சென்ஸ் பொண்ணுங்கள பார்த்தாலே கோபமா வருது. அதனால் அவளுக்கு உதவினேன்.

அந்த பொண்ணுங்க நிமிர்ந்து துகிராவை முறைக்க,

பாரேன்டா. அப்படியே பேய் மாதிரி இருக்காளுக என்று சிரித்தாள்.

அவங்க உனக்கு சீனியர் என்றாள் நித்தி.

சீனியரா? அப்படியா? என்றவர்.

சீனியர் மேடம்.இனி இப்படி அடுத்தவர் விசயத்தில் தலையிடாதீங்க..போய் தயாராகி..வேற பசங்கல தேடுங்க.ஓசியா செலவு செய்ய பசங்க வேணும்ல என்றாள் துடுக்காக.

அய்யோ! சும்மா இரு ஆதேஷ் கூற, அதிலிருந்த ஒரு பொண்ணு அவளை அடிக்க வந்தாள். அபி அவளை தடுத்து, புழுவை பார்ப்பது போல் பார்த்து விட்டு எல்லாரும் உங்க வேலைய பார்த்தா நல்லா இருக்கும் என்றான்.

அனைவரும் செல்ல, அங்கு வந்திருந்த ஆசிரியைகளில் ஒருவராக இன்பாவும் பார்த்துக் கொண்டிருந்தாள்.அபி துகிராவை அழைத்து செல்ல, நண்பர்களும் பின்னே சென்றனர்.

நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அந்த பொண்ணுங்கள பத்தி தெரியும் தானே! பயமா இல்லையா உனக்கு?

நான் எதுக்கு பயப்படணும். நான் தவறு செய்யவில்லை அவள் கூற, ஆதேஷ் கோபமாக எல்லா விசயத்துலையும் விளையாடாதே! என்றான்.

உனக்கு தான் அவளை பிடிக்குமே! நான் அவளுக்கு உதவி செய்தது தவறா? கேட்டாள் துகிரா பாவமாக.

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக,இதயா அங்கு வந்து உதவலாம்.ஆனால் நீ அவர்களை மேலும் கோபப்படுத்தி விட்டாய்? கவனமாக இரு என்று விட்டு அர்ஜூன் அருகே நின்ற தருணை பார்த்தாள். பின் அபியை பார்த்தாள்.

வா..என்று அபி அழைக்க, இதயாவும் அவனுடன் செல்ல, நீங்க எங்க போறீங்க?ஆதேஷ் கேட்டான்.இதயா அவனருகே வந்து ரகசியம்..என்று அவனுக்கு மட்டும் கேட்பது போல் சொல்லி விட்டு,பை..என்று ஆதேஷிடம் கையசைத்தாள். அவனும் கையசைத்து விட்டு,நான் எதுக்கு இவங்களுக்கு கையசைக்கிறேன் என்று சத்தமாக கேட்டான்.

ஹேய், உனக்கு அவங்கள பிடிச்சிருச்சோ என்றாள் துகிரா. தருண் ஆதேஷை முறைத்தான்.

எனக்கு இவங்கலெல்லாம் பிடிக்காது என்றான். இன்பா தொலைவிலிருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். இதயா அபியுடன் செல்வதையே பார்த்தான் தருண். அர்ஜூன் அதை கவனித்து, அவங்க நல்லா இருக்காங்கல? கேட்டான்.

தருண் அவனை முறைத்து விட்டு முன் செல்ல, நில்லுடா.. கோபப்படாதே! என்று சிரித்துக் கொண்டே அர்ஜூன் அவன் பின்னே சென்றான்.

ஆதேஷ் துகிரா மீது கோபித்துக் கொண்டு செல்ல, அவள் அவன் பின்னே சென்றாள். கடைசியில் அவர்கள் நின்ற இடத்திற்கு கொஞ்சம் தள்ளி தான் கவினும் தாரிகாவும் இருந்தனர்.

கவின் தாரிகாவை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனை இடித்து விட்டு, சீனியர் ஏன் அப்படி பாக்குறீங்க? கேட்டாள்.

உனக்கு என்னாச்சு? இவ்வளவு கோபமா? கேட்டான்.

ஆமாம். வராதா? உங்களை பத்தி இஷ்டத்துக்கு பேசுறா?கோபம் வந்துடுச்சு என்று அவள் முடித்தவுடன், கவின் அவளது இதழ்களில் முத்தமிட்டான். இதை தூரத்தில் இருந்து பார்த்த துகிரா, ஆதேஷ் பார்க்கக் கூடாது என்று மறைத்து நின்றாள். அவன் தான் அவளை விட உயர்ந்து நிற்கிறானே! அவனுக்கு தெரியாமல் இருக்குமா? அவன் கண்கலங்கிக் கொண்டே அவர்களையே பார்த்தான்.

சீனியர் சும்மா இருங்க என்று கவினை விலக்கினாள்.இது காலேஜ் என்றாள்.

வீட்டில் வைத்துக் கொள்வோமா? கேட்டான்.

போடா,பேட் பாய் என்று வெட்கத்துடன் தாரிகா எழுந்து நகர,

போடாவா? என்னையா சொன்ன?

ஆமாடா என்றாள். அவளை பிடித்து இழுத்து அவளை அணைத்துக் கொண்டு, இனி நீ டா சொன்னால், உன்னை அணைத்து விடுவேன் என்றான்.

சீனியர் போதும் என்று வருத்தமடைந்தாள்.

என்னம்மா?அவளது தோளில் கையை போட்டு அமர்ந்தான்.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீனியர் குமாரனை நினைத்தாள். அன்று அவன் கூறியது எனக்கு சரியாகபடவில்லை.உங்களுக்கு அவனால் பிரச்சனை வந்து விடுமோ? அழுதாள்.

இப்ப தான் தைரியமான பொண்ணு மாதிரி இருந்த. பயப்படாத எனக்கு எதுவும் ஆகாது என்றான். அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஆதேஷ் வருத்தமடைய,வாடா..இங்க ஒரே பேடு வைபா இருக்கு என்று கூறி விட்டு துகிரா அவனை மேலும் பேசியே சிரிக்க வைத்து வகுப்பிற்குள் அவனை விட்டு அவள் வகுப்பிற்கு சென்றாள்.

அபி இதயாவிடம், தருணின் முகவரியும், அவனது வீட்டு நம்பரையும் கொடுத்து விட்டு, ஆடையுடன் நிறுத்திக் கொள் இதயா என்றான்.

அவள் புரியாதது போல் அபியை பார்த்தான்.

நான் நேரடியாகவே கூறுகிறேன் என்று, உனக்கு அவனை பிடித்திருக்கிறது தானே! கேட்டான் அபி.

அவள் மௌனமாக இருக்க, உனக்கு அவன் சரிபட்டு வர மாட்டான். அவனை விட்டு விடு என்றான் அபி.

ஏன்? இதயா கேட்டாள்.

அவனது குடும்பம் பணத்திற்கு கஷ்டப்படுறவங்க. அவன் உதவித்தொகையில் தான் நம் கல்லூரிக்கே வந்திருக்கிறான். அதே போல் தான் அவளது தங்கையையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவளும் அதில் தான் படித்து வருவாள். அவனது அம்மா உடல்நலமின்மையால் படுத்த படுக்கையாகி விட்டார். புவியும் அப்பாவும் தான் மாறி மாறி பார்த்துக் கொள்வார்கள். இவன் வீட்டிற்கு சென்றால் இவன் தான் பார்த்துக் கொள்வான். அவர்கள் வீடும் ஓர் அறை கொண்டது தான்.வீட்டில் இருப்பதை வைத்து தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா மருத்துவச் செலவு அதிகமானால் நித்தி அப்பா தான் உதவுவார்.ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்.உனக்கு அவ்வாறு வாழ்வது கஷ்டம். வீணாக ஆசையை வளர்த்துக் கொள்ளாதே! என்றான்.

உங்களுக்கும் அவனும் ஆகாமல் தானே இருந்தது.அன்று கூட அக்கா நடனப்பள்ளியில் கூட சண்டை போட்டீர்கள் போல..என்றாள்.

உனக்கு எப்படி தெரியும்?

நான் தான் அக்காவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

அவன் ரொம்ப நல்ல பையன் தான். ஆனால் அவனோட குடும்பத்தில் ஒரு நாள் கூட உன்னால் இருக்க முடியாது என்றான்.

புரிந்து கொள் என்று எழுந்து சென்றான் அபி. அவளுக்கு கஷ்டமாக இருந்தது. தருணை சந்தித்த நாள் முதல் அவனை நினைத்து பார்த்தாள். அவனது நிலை புரிந்தது. அவனை விட அவளுக்கு மனமே வரவில்லை.

இன்பா வகுப்பில் இருக்க, அர்ஜூன் கைக்கடிகாரம் சத்தமிட்டது. அனைவரும் அவனை பார்க்க, லேப்போடு இணைத்திருப்பான் கடிகாரத்தை. அந்த மோகனால் ஏதோ பிரச்சனை என்று அர்ஜூனிற்கு புரிந்தது.

அண்ணா! என்ன ஆச்சு கேட்டான் ஆதேஷ்.

அர்ஜூன் அருகே வந்து இன்பா, அதை அணைக்க முடியாதா? கேட்டாள்.

மேம்..நான் இப்பொழுது கிளம்பணுமே! என்றான் அர்ஜூன்.

வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. காலேஜே ஓவர் ஆகிடும். அப்புறம் போகலாம் என்றாள்.

முதல்ல சத்தத்தை நிறுத்து என்றாள்.அவன் நிறுத்தி விட, இன்பா வகுப்பை தொடர்ந்தாள். அர்ஜூன் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆது, ப்ரெண்ட்ஸ் கிட்ட  நான் முன்பே கிளம்பி விட்டேன்னு சொல்லிடு என்று மணி அடிக்கவும் பேக்கை போட்டுக் கொண்டு வண்டியருகே ஓடி வண்டியை எடுத்து பறந்தான்.

இன்பாவும் ஆதேஷும் அவனை பார்த்துக் கொண்டிருக்க, தருண் வந்தான்.

அர்ஜூன் என்று வகுப்பறைக்குள் எட்டி பார்த்தான் தருண்.அண்ணா வீட்டிற்கே சென்றிருப்பார். அவ்வளவு வேகம்.

ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன் இன்பா கூறினாள்.

பிரச்சனையா? என்றும் அர்ஜூனிற்கு போன் செய்ய, அவன் எடுக்கவில்லை.

என்னவென்று தெரியவில்லையே! போனை எடுக்க மாட்டிக்கிறான். இதயா அங்கு வந்தாள்.

அவள் தருணை பார்க்க, அவன் கவனம் போன் மீதே இருந்தது.இன்பா ஆதேஷிடம் அவன் ஏதாவது கூறினானா? கேட்டான்.

அவனோட கைக்கடிகாரம் ஒலி எழுப்பியது. பின் தான் டென்சன் ஆனான் இன்பா கூற, இடியட் சொல்லிட்டாவது போயிருக்கலாம்ல தருண் அர்ஜூனை திட்டி விட்டு, கையை உதறினான். பின் தான் இதயாவை பார்த்தான்.

உன்னிடம் தாரிகா நம்பர் இருந்தா, போன் போடு என்றான் ஆதேஷிடம்.

அவளுக்கு எதற்கு? முகம் சுளித்தவாறு கேட்டான்.

போடுடா..சத்தம் போட்டான் தருண்.

அவளுக்கு ஏதும் பிரச்சனையா? ஆதேஷ் பதட்டமாக,

தெரியலயேடா. முதல்ல போன் போட்டு காலேஜ்ல இருந்தான்னா, வெளியே போக வேண்டாம்னு சொல்லு. சீக்கிரம் என்று விட்டு, தருண் கவினிற்கு போன் செய்தான்.

தாரிகா போன் நாட் ரீச்சபுல் என்று கூற, கவின் போனை எடுக்கவில்லை.

செட்..என்று தருண் டென்சன் ஆக, ஏதும் பிரச்சனையா? இன்பா கேட்டாள்.

ஆமா மேம். கவின் தாரிகாவிற்கு என்றவுடன் குமாரனா? ஆதேஷ் சரியாக கேட்டான்.

அவளது அப்பாவால் என்று தோன்றுகிறது? தருண் கூறினான்.

அவரால் என்றால் அந்த பரதேசியும் இருப்பானே! அண்ணாவால் தனியே சமாளிக்க முடியுமா? ஆதேஷும் டென்சனாக,

தாரிகா, கவின் வெளியே போகவில்லை என்றாள் பிரச்சனை வராது தானே! ஆதேஷ் கேட்டான்.

கண்டிப்பா இல்லை. அவளோட அம்மாவும் ஸ்ரீயும் மாட்டி இருப்பார்களோ! தருண் கேட்க,

அன்று இரவு வந்தானே அந்த சைக்கோவா டா? இன்பா கேட்க,

எஸ் மேம் என்றான் ஆதேஷ்.

இரண்டு பேரும் இங்கேயே இருங்கள். நாங்கள் அவர்கள் இங்கே தான் இருக்கிறார்களா? என்று பார்த்து விட்டு வருகிறோம் என்று தருண் கிளம்ப,

உன்னுடைய தோள் பட்டை பெயின் என்றாள் இதயா.

நாங்கள் தேட தான் செல்கிறோம் என்று அவன் அவளை பார்த்து, மனதில் சிறு மகிழ்வுடன் கிளம்பினான்.போகும் போதே அபிக்கு போன் செய்ய, அவன் கல்லூரி நூலகத்தில் தான் இருந்தான். அதனால் அவன் போனை எடுக்கவில்லை.