ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 70.
அர்ஜூன் வீட்டிற்கு சென்றவுடன் பசங்க அனைவரும் சேர்ந்தே படுத்துக் கொண்டனர். சந்தோசமாக அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள், சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அவர்களும் உறங்க, அர்ஜூன் பால்கனி சென்று கருமேகத்தை துளைத்து வெளியே வந்த நிலவை ரசித்தவாறு நின்றான்.
தூங்கவில்லையா அர்ஜூன்?என்றொரு சத்தம் கேட்டு திரும்பினான். தருண் அவனருகே வந்தான்.
நீ தூங்கவில்லையாடா?
இல்லடா. உன்னிடம் ஏதோ மாற்றம் தெரியுதே அர்ஜூன்?
என்னிடமா? இல்லையே என்று கூறும் போதே அவன் இதழ்களில் சிரிப்பு.
சொல்லுடா? கேட்டான் தருண்.
அதான் இல்லைன்னு சொல்றேன்ல? அர்ஜூனிடம் வெட்கம் தெரிந்தது.
உனக்கும் ஸ்ரீக்கும்? அவன் முடிப்பதற்குள் போடா..என்றான் அர்ஜூன்.
அர்ஜூனுக்கு வெட்கமெல்லாம் வருதா? தருண் கிண்டல் செய்தான்.
இருவரும் கடவுளை சேர்ந்து தொழுதது? அவள் நெற்றியில் குங்குமம் அவன் கையால் பட்டது. வினிதா அக்கா வீட்டில் முத்தம் கொடுத்தது. இப்பொழுது போனுக்கான சண்டை அனைத்தையும் கூறினான்.
தருண், அவளுக்கு அகிலை தான் பிடிக்குமென்பது போல் நடந்து கொள்கிறாள்டா.ஆனால் அன்று கோவிலில் நடந்ததை வைத்து, அவள் எனக்கு மனைவி ஆகி விட்டதை போல் ஓர் உணர்வுடா. அவளை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்குடா.
அர்ஜூன் நீ அதிகமா ஃபீல் பண்ற மாதிரி தெரியுது? கொஞ்சம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லதுடா என்றான் தருண்.
இத்தனை நாள் அப்படி தானடா இருந்தேன்.இதற்கு மேல் என்னால முடியலடா.
நீ முத்தம் கொடுத்த போது அவள் ஏற்றுக் கொண்டாளா?
அவள் என்னை தள்ளி தான்டா விட்டாள். அவளுக்கு என்னை பிடிக்குமாடா? பாவம் போல் கேட்டான் அர்ஜூன்.
தருண் மனதிற்குள், விருப்பமில்லாமல் முத்தத்தை பெற்று மீண்டும் அவளால் உன்னிடம் சாதாரணமாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. அவள் உன் பக்கம் வர ஆரம்பித்தது போல் தெரிகிறது என்று நினைத்த தருணிற்கு, இதயாவிற்கு அவன் கொடுத்த முதலுதவி முன் வந்தது. அவனும் உதட்டில் புன்னகை தவழ அர்ஜூன் அவனை பார்த்து,
நீயும் சரியில்லாதது போல் தெரிகிறதே! அவனை கிச்சுகிச்சு மூட்ட, சும்மா இருடா அர்ஜூன் என்று இருவரும் விளையாண்டு கொண்டிருந்தார்கள். தற்செயலாக அங்கே வந்த அகில், அர்ஜூன் பேசியதை கேட்டு மனமுடைந்து படுக்கைக்கு சென்றான்.
மறுநாள் காலையில் அனைவரும் கல்லூரியில் இருந்தனர். வகுப்பு நடந்தது. வீட்டில் இருந்த ஸ்ரீக்கு ஒரு போன் வந்தது. அவள் பதட்டத்துடன், அம்மா நான் ஒருவரை சந்தித்து வருகிறேன் என்று கூறினாள்.
யாரைம்மா பார்க்க போகிறாய்? கேட்டார் தாரிகாவின் அம்மா.
அம்மா…என்று தயங்கினாள்.
சொல்லு என்றார் அம்மா கடினமுடன்.
அர்ஜூனின் அம்மா என்னை வரச் சொல்லி இருக்கிறார்கள்.
எதற்குமா?
தெரியலம்மா. கொஞ்சம் பதட்டமா இருக்கு என்றாள்.
இரும்மா.நானும் வருகிறேன் என்றார்.
வேண்டாம்மா.நானே சென்று விடுவேன்.
நான் வருவேன் என்று அம்மாவும் அவளுடன் கிளம்பினார்கள்.
அம்மா அர்ஜூனுக்கு தெரியக்கூடாது என்றாள் ஸ்ரீ கண்டிப்புடன்.
சரிம்மா என்றார். இருவரும் அர்ஜூன் கன்ஸ்ரக்சனுள் நுழைந்தனர். பத்தடுக்கு மாடி கட்டடம் உயர்ந்து இருந்தது. அதை பார்த்து மூச்செடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள் ஸ்ரீ.
ரிசப்சனில் சென்று அவள் பெயரை கூற, இங்கே உட்காருங்கள் என்று அமர வைத்தனர்.
மேம்..நீங்க மட்டும் உள்ளே போகலாம் என்றாள் அந்த ரிசப்சன் பொண்ணு.
அம்மா..இங்கேயே இருங்கள் என்று அஞ்சனாவை விடுத்து ஸ்ரீ மட்டும் உள்ளே சென்றான்.
ஏதோ மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. “மே ஐ கம் இன்” என்று கேட்டு கதவை திறந்தாள் ஸ்ரீ.
ஸ்ரீயை பார்த்து அர்ஜூனின் அம்மா எழுந்து அவளருகே வந்தார். கோர்ட் சர்ட்டுடன் மெலிதான அழகான தோற்றம். ஸ்ரீ அவரை பார்த்து புன்னகைத்தாள்.
கமலி அவளருகே வந்து, அவளை மேலும் கீழுமாய் பார்த்து,..
ம்ம்..நன்றாக தான் இருக்கிறாய்? அதான் உன்னை விட்டு என் மகன் வரவே மாட்டிங்கிறான். ஆனால் அவனுக்கு நீ தகுதி இல்லாதவலாயிற்றே! உன்னிடம் என்ன உள்ளது? அவனை இப்படி இழுத்து வைத்திருக்கிறாய்?
ஸ்ரீ கண்கள் கலங்கியது.
உனக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா? உனக்கு பியான்சே..வேற இருக்கான். அப்புறம் ஏன் அலையுற?அகிலும் உன் பின் தான் சுற்றுகிறான் போலவே! உங்க கல்லூரி சேர்மன் பெயருணும் இருக்கான் போல உன் லிஸ்டுல. நான் விசாரித்த மட்டும் இவ்வளவு தான்.இன்னும் எத்தனை பேர் இருக்காணுக?
அவள் அழ ஆரம்பித்தாள்.
அழுகிறாயா? நீ தான் பயங்கரமா பேசுவியே? பேசு..என்றார்.
அழுது கொண்டே ஆன்ட்டி..என்றாள் உடைந்த குரலில்.
இவரை தெரியுமா? மேகாவை பார்த்திருப்பாயே! அவளுடைய அப்பா. அவருக்கு அர்ஜூனை மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய நாங்கள் பேசி விட்டோம். அதனால் நீ இங்கிருந்தால் அர்ஜூனை எங்களால் சமாளிக்க முடியாது.
மேகா அப்பா எழுந்து,உனக்கு கூடவே இருக்க பையன் கூட ஏற்பாடு செய்து தருகிறோம். இந்தா,பிளைட் டிக்கெட் இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும். பணம் கூட தருகிறோம் என்று அவர் ஐம்பது இலட்சமும், கமலி ஒரு கோடியும் தந்து, இனி அவன் முகத்தில் நீ விழிக்கவே கூடாது. இங்கே நீ வரவே கூடாது என்றார்.
அவள் அங்கேயே அமர்ந்து அனைவர் முன்னிலையிலும் அழுதாள். அங்கிருந்த சில பேர் ஸ்ரீயை பாவமாக பார்த்தனர். தன்னை சரி செய்தவள் மெதுவாக எழுந்து, அங்கிருந்த தண்ணீரை அருந்தினாள்.
பின் கமலி அருகே வந்து, நீங்கள் கூறுவது போல் அவனுக்கு நான் தகுதியில்லாதவள் தான். எனக்கு ஒரு மாதம் மட்டும் நேரம் தாருங்கள். முழுவதுமாக அவனை விட்டு சென்று விடுகிறேன்.
அங்கிள்..எனக்கு யாரும் தேவையில்லை. அப்புறம் உங்கள் பணமும் என்று வேகமாக அவரருகே சென்று பணத்தை கொடுத்து விட்டு,
ஆன்ட்டி..எனக்கு பணம் தேவையில்லை என்று அவரிடமும் கொடுத்து விட்டு அர்ஜூன் சந்தோசமாக இருந்தால் போதும்.உங்கள் மகனுக்காக இனி யாரிடமும் பணம் கொடுத்து விலை பேசாதீர்கள்.
என் அர்ஜூன் விலைமதிப்பற்றவன். அவன் மனது தூய்மையானது. நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அவனை விட்டு கண்டிப்பாக செல்ல தான் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது. அவனாலும் முடியாது.
எனக்கு இது மட்டும் போதும்.ஒரு மாதத்திற்கு பின் தான் புக் செய்திருக்கிறீர்கள் இல்லையென்றால் இதை வைத்துக் கொண்டு தூரமான இடத்திற்கு புக் செய்து தாருங்கள். நாளை நான் இங்கேயே வந்து கூட வாங்கிக் கொள்கிறேன்.
ஆன்ட்டி, என் அம்மாவிற்கு நீங்கள் தோழி என்பதாலும் என் அர்ஜூனின் அம்மா என்பதாலும் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.நான் நாளை இதே நேரம் வருகிறேன். வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்புங்கள். உங்களை பார்க்க எனக்கு விருப்பமில்லை என்று வேகமாக திரும்பி, பின் அவளது போனை எடுத்து,
அம்மா..நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். ஆன்ட்டியுடன் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.
சீக்கிரம் வந்திடும்மா என்றார் தாரிகாவின் அம்மா.
ஓ.கேம்மா என்றவள். அங்கிருந்தவர்களை பார்த்து ஏளனமான புன்னகையை உதிர்த்து விட்டு விறுவிறுவென நடந்து வெளியே வந்து மூச்சை இழுத்து விட்டு,
அம்மா ஆன்ட்டி,எப்படி பேசிட்டாங்க பாருங்கம்மா என்று அழுதாள். அர்ஜூன் அம்மா கோபமாக அவள் பின் வந்திருப்பார். அவள் பேசியதை கேட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
அங்கிருந்து எழுந்து யாருமில்லா இடத்திற்கு வந்து அழ ஆரம்பித்தாள். வெகு நேரம் அழுதாள். மதிய வேளையில் ஒரு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட்டு விட்டு முகத்தை சரி பார்த்து விட்டு வெளியே வந்தாள்.
தாரிகாவின் அம்மா ஹோட்டலிலிருந்து வெளியே வரும் ஸ்ரீயை பார்த்தவாறு நின்றிருந்தார். அவரை பார்த்து
அம்மா,நீங்க வீட்டிற்கு போகவில்லையா?
என்ன பேசினீர்கள்? அவளுடன் தானே சாப்பிடுவதாக சொன்னாய்? அம்மா கேட்டார்.
அவங்களுக்கு வேலை வந்து விட்டது. அதனால் தான் இங்கே வந்து சாப்பிட்டேன். அவங்க அர்ஜூனை நன்றாக பார்த்துக் கொள்ள சொன்னாங்க என்றாள்.
பொய் சொன்னா தெளிவா சொல்லணுமே!
அம்மா என்று நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீ.
நான் வீட்டிற்கே போகவில்லை. உன்னை பார்த்து பேசி விட்டு செல்ல நினைத்து நான் அங்கே தான் இருந்தேன்.பார்த்தேன் நீ அழுததை.
அவள் கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டா. அவளிடமும் பேசி விட்டு தான் வந்தேன் என்றார்.
அம்மா,பேசுனீங்களா? ஏன்மா என்றாள்.
ஸ்ரீயை பார்த்து விட்டு திரும்பிய கமலி முன் தாரிகா அம்மா அஞ்சனா நின்றிருப்பார். அவரை பார்த்து தெரியாதது போல் கமலி செல்ல, அவரை நிறுத்தி அனைவர் முன்னிலையிலும்
உன் பையனுக்கு தேவையானதை செய்து கொடுத்தாலே அவன் சந்தோசமா இருப்பான். அவனுக்கு இந்த பணமெல்லாம் பிடிக்காது. இதை நீ தான் வைத்து கொள்ளணும். உன்னை போல் அவனையும் மாற்ற நினைக்காதே! என்றவர் ஏளனமாக அர்ஜூன் அம்மா கமலியை பார்த்து, அவன் உன்னை போல் என்றும் மாற மாட்டான்.முடிந்தால் உன் மகனுடன் நேரம் செலவழித்து, அவனை சந்தோசமாக பார்க்க நினை. அதை விட்டு நீயே அவனது வாழ்க்கையை கெடுத்து விடாதே! உன் மகன் போல் எனக்கு ஒரு மகன் இருந்தால் அவனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன்.
ஓ அப்படியா? நக்கலாக கமலி பேச, அஞ்சனாவிற்கு கோபம் வந்தது.
நீ இல்லாத இடத்தை நான் நிரப்புவேன்.என் மகன் அர்ஜூனிற்கு இந்த பணம் வேண்டாம். அவன் இருக்கும் வீட்டை கூட நீயே வாங்கிக் கொள். அவனை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும். அப்புறம் ஸ்ரீ விசயத்தில் நீ தலையிட வேண்டாம். நான் மட்டும் நீ அவளை மீட் பண்ணதை கூறினால்..அதுவும் நீ எதையோ அவளிடம் பேசி கஷ்டப்படுத்தி இருக்கிறாய் என்று தெரிந்தால் அவன் உன்னை முழுதாக வெறுத்து விடுவான்.
அர்ஜூன் கல்யாணம் பண்ணா அது ஸ்ரீயாக தான் இருக்கும். அவர்கள் இருவரும் விரும்பினால் நானே அவர்களை சேர்த்து வைப்பேன்.உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்.இதுவரை மட்டுமல்ல.. இனியும் நீ தனியாக தான் இருக்க போகிறாய் கோபமாக பேசி விட்டார்.
கமலி அவரை தனியே அழைத்து சென்று, உனக்கு என்ன தான் பிரச்சனை? எவ்வளவு வேண்டும்? கேட்டார்.
எனக்கு என் மகன் அர்ஜூன் மட்டும் போதும். உன் பணத்தை குப்பையில் போடு என்று விட்டு ஸ்ரீயிடம் என்ன பேசினாய்? கேட்டார்.
அவளிடமே கேட்டுக் கொள்.
நீ சொல்றியா? இல்லை.உன் மானத்தை வாங்கி விடுவேன் என்று தாரிகா அம்மா மிரட்டினார்.
கமலி கூற, என்ன பேசி வச்சுருக்க? ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ? அவளோட அம்மா உன்னோட தோழின்னு தெரிஞ்சதால தான் அழைத்து வந்தேன். அவ பெற்றோரை இழந்து கஷ்டப்படுற நேரத்தில் இப்படி பேசியிருக்க. உனக்கு மனசு இருக்கா? இல்லையா? அர்ஜூனுக்கு மட்டும் நீ பேசியது தெரிஞ்சா அவ்வளவுதான். பெத்த அம்மான்னு கூட பார்க்க மாட்டான் தெரியும்ல என்று சினந்தார்.
அவனுக்கு தெரிஞ்சா..ஸ்ரீக்கு இன்னும் பிரஷர் கொடுப்பேன். ஒழுங்கா மரியாதையா இங்கிருந்து போயிடு கமலி கோபப்பட, இதற்கு மேல் இவளிடம் பேசி பயனில்லை என்று கிளம்பி இருப்பார் அஞ்சனா.இதை நினைத்து பார்த்து,உனக்கு என் கிட்ட சொல்லணும்னு கூட தோணலயாம்மா? கேட்டார்.
சொல்லி உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன் என்று பேசி விட்டு,அம்மா என்று கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் ஸ்ரீ.
அவங்க என்னை பத்தி ரொம்ப கேவலமா பேசிட்டாங்க. எத்தனை பேர் அங்க இருந்தாங்க தெரியுமாம்மா. ரொம்ப அசிங்கமா இருக்கும்மா. அதுவும் அந்த பொண்ணோட அப்பா,என் கூட ஒரு பையனை…பேச முடியாமல் திக்கிக் கொண்டே ஏங்கினாள்.
அம்மா அவளை ஆறுதலாக அணைத்து, நீ அர்ஜூனிடம் சொல்லலாம்ல கேட்டார்.
அவனே அவங்க மேல ரொம்ப கோபமா இருக்கான். இது இதை சொன்னால் அவ்வளவுதான். அவங்க என்னோட அர்ஜூனுக்கு நான் தகுதியில்லை என்று சொல்லிடாங்க.அது கூட பரவாயில்லை. என் அர்ஜூனுக்கு விலை ஒரு கோடி ஐம்பது இலட்சம்..அவன் என்ன பொருளா?அவனை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
உன் அர்ஜூனா? என்று அவளை தள்ளி விட்டு கேட்டார்.நான் அப்படி சொல்லல்லம்மா சமாளிக்க பார்த்தாள்.உனக்கும் அவனை பிடிக்குமா?
இல்லைம்மா. பொய் சொல்லாதே! அரட்டினார்.
ஆமாம்மா பொய் தான் சொன்னேன். எனக்கு அவனை மட்டும் தான் பிடிக்கும்.அவனை அதிமாக காதலிக்கிறேன். என் உயிர் உள்ளவரை அவனை மட்டுமே காதலிப்பேன் என்று அழுதாள்.
அழாதே ஸ்ரீ.முதலில் அவனிடம் சொல்லு.
இல்லைம்மா.என்னோட பிரச்சனை முடிந்து நான் நன்றாக இருந்தால் பார்ப்போம்.
அவன் அம்மா கூறியது போல் தானே செய்யப் போகிறாய்? ஓரக்கண்ணால் அவளை பார்த்தார்.
பிரச்சனை முடிந்து உயிரோடிருந்தால் காதலை கூறி விட்டு சென்று விடுவேன்.
அவன் உன்னை விடுவானா?
விடமாட்டான் தான். அவனுக்கு தெரியாமல் சென்று விட்டால்..என்ன செய்வானாம்?
அவன் அம்மா பேச தொடங்க, ப்ளீஸ்ம்மா.என்னால முடியலம்மா மீண்டும் அழுதாள்.
தாரிகா அம்மாவிற்கு அர்ஜூன் போன் செய்தான்.
ஸ்ரீ என்னம்மா செய்றா? கேட்டான்.
ஏன்டா, அவளை பத்தி கேட்கிறாய்?
அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று தோன்றுகிறது? அவன் குரல் காதலாகி ஒலிக்க, அங்கிருந்து ஸ்ரீ நகர்ந்து சென்று அழுதாள்.
அதெல்லாம் ஒன்றுமில்லைடா. வீட்ல தான் இருக்கோம் என்று போனை வைத்து விட்டு ஸ்ரீயை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்.
“சூனியமாய் எட்டுத்திக்கும் நிறைந்திருக்க
காதல் கதிரவனாய்
எனை
மீட்டுடெடுத்தவனே!
நீ வந்த நேரம் தீமை அகன்று
புதிதாய் பிறந்தேனே!
அளவில்லா காதலில் திளைத்து
எனை
தொலைத்தேனே!
உன் மார்ப்போடு சாய்ந்து
துயிலாக வேண்டுமே!
வேரற்ற நிலையில்
கனவாகி சிதைந்ததே என் காதலே!”