வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-69
206
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 69.
நித்தியை அழைத்து சென்ற சைலேஷ் அவளது கையை பற்றி,நாம் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு ஒன்றுமாகாது. நீ எதை பற்றியும் கவலைப்படக்கூடாது.அப்புறம் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருக்காதே! இனி அவன் உன் கண் முன் வர மாட்டான்.சரியா? கேட்டான்.
ஓ.கே என்றாள் சுருக்கமாக.
வீட்டிற்கு வந்தனர் இருவரும். கைரவ் கீழே காத்திருந்தான்.நித்தியை பார்த்து எழுந்து, அவளருகே வந்து நீ ஓ.கே தானே என்று கேட்டான்.
சைலேஷ் அவனை பார்க்க, அண்ணி என்று அவன் தயங்க, ப்ளீஸ் அவன் என்னை பெயர் சொல்லியே அழைக்கட்டும் என்றாள் நித்தி.
அவன் ஓ.கே என்றவுடன், எனக்கு ஒன்றுமில்லைடா என்று வருத்தமாக கூறினாள். தாத்தா நித்தி அருகே வந்தார்.
அவரை பார்த்த நித்தி,தாத்தா என்று கண்கலங்க அவரிடம் ஓடினாள்.என்னால முடியல.நாங்க ரொம்ப பெரிய தவறு செய்து விட்டோம் என்று அழுதாள்.
வேலையாட்களும் அங்கு வந்தனர். சைலேஷும் கைரவும் அவளை புரியாமல் பார்த்தனர்.
என்னம்மா..அழாதே! என்று தாத்தா ஆறுதலளிக்க,
இல்லை தாத்தா. நாங்க அவளை தனியே விட்டுருக்கக் கூடாது. அவள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாள்.அது கூட தெரியாமல் இருந்திருக்கிறோம்.எனக்கு அப்பாவை பார்க்கணும் போல இருக்கு. ஆனா இப்ப பார்த்தால் எல்லாத்தையும் சொல்லிடுவேன். பிரச்சனை பெரியதாகி விடும் என்று மீண்டும் அழுதாள்.
ஸ்ரீ பற்றி கூறுகிறாள் என்று அண்ணன் தம்பி இருவருக்கும் புரிந்தது.ஆனால் தாத்தாவிற்கு ஏதும் புரியவில்லை.அவளது கண்ணீரை துடைத்து விட்டு, யாருமா அது? கேட்டார்.
வேண்டாம் தாத்தா என்று அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவர் கண்ணாலே சைலேஷை அழைத்தார். அவன் நித்தியை அழைத்துக் கொண்டு ஹாலில் அமர, அவனது மடியில் படுத்துக் கொண்டு கண்ணை மூடினாள்.
நித்தி நீ எதை பற்றியும் யோசிக்காதே! நான் இருக்கேன்ல..ஸ்ரீக்கு ஒன்றும் ஆகாது என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். கைரவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் நித்தி எழுந்தாள். சைலேஷ் அவளையே பார்ப்பதை பார்த்து, வேகமாக எழுந்து அமர்ந்தாள்.சுற்றி பார்த்தாள்.யாருமில்லாது இருக்க, தாத்தா..என்று கேட்டாள்.
அவர் தூங்கி விட்டார் என்றான். கைரவ் கீழே தான் இருந்தான்.நித்தி சத்தம் கேட்டு வந்தான் அவர்களிடம்.
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? கேட்டான் கைரவ்.
அவள் என்ன கூறவென்று தெரியாமல் இருவரையும் பார்த்தாள். சைலேஷும் அவளது பதிலை எதிர்பார்க்கவே, அவள் தயங்கியவாறு..ஒன்றுமில்லை. நான் தான் கொஞ்சம் டிஸ்டெர்ப் ஆகிட்டேன்.அதான் அழுதுட்டேன்.சாரி..என்று தலையை கவிழ்ந்தவாறு கூறினாள்.
அவளது தாடையை நிமிர்த்தி, அவளது கண்ணை பார்த்தவாறு நீ எதையோ மறைப்பது போல் உள்ளது சைலேஷ் கேட்டான். அவள் வேகமாக எழுந்தாள் வருத்தமுடன்.
சைலேஷ் அவள் முன் வந்து நீ எதையும் கூற வேண்டாம். உனக்கா எப்பொழுது சொல்ல தோன்றுகிறதோ அப்பொழுது கூறு என்றான்.
அவள் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். விசயம் சீரியஸ் என்பது இருவருக்கும் புரிந்தது. கைரவும் அமைதியாக இருந்தான்.
ஸ்ரீ அறையினுள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உன்னுடைய காதல், முத்தம் இரண்டையும் எனக்கு அனுபவிக்க ஆசையாக உள்ளதுடா. உன்னுடன் என்னால் வாழ்க்கை முழுவதும் வாழ முடிந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். முடியாத விசயத்தை எண்ணி நேரத்தை வீணாக்காமல் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பேன் அவளுக்கு அவளே சொல்லி விட்டு,
அர்ஜூன்..நான் சாவதற்குள் எனக்கு இன்னும் உன்னுடைய முத்தம் வேண்டும். நம்முடைய முதல் முத்தம் நான் எதிர்பார்க்காமல் நடந்து விட்டது.இனி உன் அருகிலே இருப்பேன். உன்னோட சேர முடியவில்லை என்றாலும் உன் முத்தத்தோடு போவது கூட எனக்கு சந்தோசம் தான். நீ அறிந்து நான் எப்பொழுது தானாக வந்து உனக்கு முத்தம் தருகிறேனோ! அன்று கண்டிப்பாக என் காதல் உனக்கு தெரிய வரும். நானும் நிரந்தரமாக சென்று விடுவேன் உன்னை விட்டு கண்கலங்கினாள்.
பின் எழுந்து குளித்து, ஆடை மாற்றி ஸ்ரீ வெளியே வந்தாள்.எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஸ்ரீ போன் ஒலித்தது. எடுத்து ம்ம்..சொல்லு என்றாள்.
ஜிதின் கூறியதை கேட்டு, ஸ்ரீ முகம் மலர்ந்தது.
ரியலி வாவ்..சூப்பர் டா சந்தோசமாக கத்த, அனைவரும் அவளை பார்த்தனர். அவள் அசட்டு சிரிப்புடன் வெளியே வந்தாள்.
சொல்லு ஜிதின். அப்புறம் என்றாள். அவள் சந்தோசத்தை பார்த்து அர்ஜூன் போன் பேசுவதை போல் வெளியே வந்தான். ஜிதின் பெயரை கேட்டவுடன் அவனுக்கு கோபம் வந்தது.
எங்கடா அவன்? என்ன செய்றான்? கேட்டாள் ஸ்ரீ.
ஹே..நிவி..ஜிதின் சொன்னது உண்மையா? பேர் என்னடா? கேட்டாள். நிவாஸிடம் பேசுவதை பார்த்து அர்ஜூன் அமைதியானான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான் நிவாஸ்.
ஸ்ரீ உனக்கு அந்த வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன் என்று ஜிதின் கூற, போனிற்காக இருவரும் சண்டை போட, கடைசியில் ஆடியோ வந்தது. ஸ்ரீ அதை எடுத்து கேட்டாள். அர்ஜூனை அவள் கவனிக்கவில்லை.
ஹாய் நிவாஸ்..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நாம மீட் பண்ணுவோமா? எனக்கு உன்னை பற்றி தெரியும். உன்னை நான் கட்டுப்படுத்த மாட்டேன். உனக்கு உன்னோட அக்காவை பிடிக்கும்ல..அப்படினா நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்கள பார்த்துக்குவோம். நீ மட்டுமல்ல..நானும் அவங்க கூடவே இருப்பேன். உன்னையும் பார்த்துக்குவேன்.”ஐ லவ் யூ டா” முடிந்திருந்தது அந்த ஆடியோ.
அதற்கு அவன், அதெல்லாம் தேவையில்லை. என்னோட அக்காவ..நானே பார்த்துக்குவேன் அனுப்பி இருந்தான்.
நோ..நோ…அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா. நான் உன்னை விட மாட்டேன்.நீ என்ன சொன்னாலும் ஓ.கே. ஆனால் உன்னை விட்டு செல்ல மாட்டேன்.”ஐ லவ் யூ டா”
நான் உன்னை பார்க்க வந்தால் தானே!
பார்க்காமல் கூட காதலிக்கலாம். நீ இப்படி பேசினால் கூட ஓ.கே தான் எனக்கு.
எனக்கு உன்னை பிடிக்கவில்லை
எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டதே! எனக்கு எதையும் மாற்றி பழக்கமெல்லாம் இல்லை. “லவ் யூ டா” க்யூட் பாய்.
இதை கேட்டு முடித்தவுடன் நிவாஸிற்கு போன் செய்தாள் ஸ்ரீ. அவன் போனை எடுக்கவில்லை. மறுபடியும் போன் போட, எடுத்தான் அவன்.
டேய், அடுத்த முறை அந்த பொண்ணை பற்றிய விவரங்களை கேளுடா.
உன் மூஞ்சி..போ..என்றான்.
ஓய்..என்னடா ஓவரா பண்ற? நானே கண்டு பிடிக்கிறேன். பாரு என்றாள். அர்ஜூனை திடீரென அருகே பார்த்து பயந்து போனை நழுவ விட்டாள். அவன் போனை பிடித்து, ஹாய்டா..என்றான். ஸ்ரீ அவனது கையிலிருந்து போனை பிடுக்க, அவன் போனுடன் கையை தூக்கிக் கொண்டு, எங்கே போனை எடு..பார்ப்போம் என்றான்.
அவள் குதித்தும் அவளால் போனை தொட கூட முடியவில்லை. ப்ளீஸ் அர்ஜூன். போனை கொடு என்று அவள் எம்பி குதிக்க, அவளது முடி அவனது ஸ்ர்ட் பட்டனில் மாட்டியது.
ஷ்..ஆ..என்று சத்தமிட்டாள்.அவள் எடுக்க கையை கொண்டு வந்தாள். அவன் அவளது கையை பிடித்து நிறுத்தி விட்டு, அவளை பார்க்க, அவளும் அர்ஜூனை பார்த்தாள். இருவரது கண்களும் உரசி இருக்க,போனில் நிவாஸ் கத்திக் கொண்டிருந்தான்.
காரில் வந்த சைலேஷுற்கும் நித்திக்கும் அவர்கள் முத்தமிடுவது போல் இருக்க, நித்தி ஸ்ரீ அருகே வந்து பார்த்தாள்.
அவர்களை கண்டு சிறு புன்னகையுடன், அர்ஜூன் இப்படியே நின்றால் எப்பொழுது வீட்டுக்கு போவது? மெதுவாக கேட்டாள் நித்தி. சைலேஷும் அருகே வந்து இருவரையும் பார்த்து சிரித்தான்.
சுயம் வந்த இருவரும் வேகமாக விலக, ஷ்..ஆ என்று கத்தினாள் ஸ்ரீ.
நித்தி அருகே வந்து ஸ்ரீயின் முடியை எடுத்து விட்டு, இங்கே இப்பொழுது ஏதோ நடந்தது போல் தெரிந்ததே! கேலி செய்தாள்.
சீனியர்..என்னோட போன் என்று அர்ஜூனை காட்டினாள். நித்தி கையை கட்டிக் கொண்டு போனை தாரீங்களா? சார் அர்ஜூனிடம் கேட்க, அவன் நித்தியிடம் போனை கொடுத்து விட்டு, அழுந்த தலையை கோதிக் கொண்டே ஸ்ரீயை பார்த்தான்.
யாசு வேகமாக வெளியே ஓடி வந்தாள் போனுடன். யாரையும் கண்டு கொள்ளாது ரோட்டருகே சென்று இருபக்கமும் தேடினாள். அர்ஜூன்,ஸ்ரீ, நித்தி, சைலேஷ் அவளை தொடர்ந்தனர்.
வலப்புறம் ஒரு ஜீப்பிலிருந்து மாதவ் இறங்கினான். அவனை பார்த்தவுடன் ஓடிச் சென்று அவனை அணைத்து அழ ஆரம்பித்தாள்.
யாசு எதுக்கு அழற? கேட்டான் அவன்.
அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு அடிக்க ஆரம்பித்தாள். உங்களுக்கு என்னுடன் பேச கூட நேரமில்லையா?அடித்துக் கொண்டே அழுதாள்.
இதற்கா அழுகிறாய்? இனி தினமும் பேசலாம். வேலை இருந்ததுடா செல்லம். அதனால் தான் பேச கூட முடியவில்லை.
போடா..என்னுடன் பேசாதே! நான் செல்கிறேன் என்று அவள் நகர்வதற்குள் அவளை பிடித்து கைக்குள் வைத்து அவளது நெற்றி, கண் என்று முத்தமிட்டு சென்று இதழ்களை அடைந்தான்.அவள் தடுத்து அவனை அணைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டமா இருக்கு என்றாள்.
நான் தான் சொல்லி விட்டேனே! தினமும் பார்க்கலாம். எங்க மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு என்றான்.
கண்டிப்பாக இல்லை.அடுத்து பார்க்கலாம்.எனக்கு மனசே சரியில்லை என்றாள். அவளை தூக்கி ஜீப்பில் அமர வைத்த அந்த போலீஸ்காரன்,இப்ப சொல்லு..என்ன பிரச்சனை?
அவள் பேசாமல் அமைதியாக இருந்தாள். ரகசியமா? கேட்டான்.
ஒரு பொண்ணுக்கு தாங்க முடியாத பிரச்சனை இருக்கு. அவளை பிரச்சனையிலிருந்து விடுவிக்க சண்டையிட்டால் தான் முடியும் என்ற பட்சத்தில் அவளுடைய தோழி என்ன செய்வாள்?
சண்டைகாரனிடம் சண்டை போட்டு தான் ஆகணும். நீ எதுக்கு கேக்குற? உன்னோட ப்ரெண்டுக்கு ஏதும் பிரச்சனையா? என்ன?
இல்லை.சும்மா தான் கேட்டேன்.ப்ரெண்ட்ஸ் அந்த அளவு ஸ்ராங்கா இருப்பாங்களா?அவள் கேட்டாள். அவனும் அவளருகே ஏறி அமர்ந்தான்.
செய்வாங்க.பசங்கள விட பொண்ணுங்க ஸ்ராங்குன்னு தான் நான் சொல்வேன். அதுவும் மனதளவில். நான் நிறைய கேசுகளை பார்த்திருக்கிறேன்.
இங்க என்ன செய்ற? கேட்டான் மாதவ்.
நானும் நித்தியும் தனியா இருந்து போரடிக்குது. அதான் கொஞ்ச நாள் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து இருக்கலாம்னு வந்திருக்கேன்.
இந்த போலீஸ் ஆடை எனக்கு பிடிக்கவே இல்லை. வேற ஆடை போடவே மாட்டீங்களா?
போடலாமே என்று இறங்கி ஜீப்பிலிருந்து வேறொரு சட்டையை எடுத்து மாற்றினான். அவள் அவனை பார்த்து முகம் சுளித்தாள்.
நல்லா இல்லையா? கேட்டான் மாதவ்.
அவள் பார்வை அவன் பேண்ட்டில் படிய,இங்கேயே கழற்றவா?
ச்சீ..என்ன பேசுறீங்க என்று அவனை அடித்தாள்.
அவன் சிரித்துக் கொண்டே பேச, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அர்ஜூன் நித்தியிடம் இவர் தான் மாதவா?
ம்ம்..என்றாள்.
மாதவை நாளை பார்த்துக் கொள்கிறேன்.இன்று பிஸியா இருக்கிறானே! என்று சைலேஷ் அங்கிருந்தவர்களிடம் சொல்லி விட்டு அகன்றான்.
அர்ஜூன் நித்தியிடம், மாதவ் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
ஏன்டா, அவரிடம் கம்பிளைண்ட் எதுவும் கொடுக்கணுமா? நித்தி கேட்டான்.
அச்சச்சோ! நிவியை மறந்து விட்டேனே! என்று போனை காதில் வைத்து ஹலோ, என்றாள் ஸ்ரீ.அவன் பொரிந்து தள்ள ஆரம்பித்தான்.
சாரிடா..சாரி..சாரி..பத்து முறையாவது மன்னிப்பு கேட்டும் அவன் ஸ்ரீயை விடுவதாக இல்லை.அவன் வேலை முடிந்து விட்டது என்பது போல் போனை வைத்து விட்டான். அவளை இருவரும் பார்த்தனர்.
டேய்..வைக்காதே! என்றாள்.
அவன் தான் வைத்து விட்டானே என்று அர்ஜூன் சிரிக்க, ஸ்ரீ அவனை முறைத்தாள்.
இரண்டு பேரும் கொஞ்சம் நில்லுங்கள். நான் பார்த்தது உண்மைதானா? கேட்டாள் நித்தி.
இல்லை சீனியர்..என்று நடந்ததை ஸ்ரீ கூற, சரி தான் என்று அர்ஜூனை பார்த்தாள் நித்தி. அவன் தோளை குலுக்க,மூவரும் உள்ளே சென்றனர்.
வாங்கடா கிளம்புவோம் என்று அர்ஜூன் அழைத்தான்.
சார் இவ்வளவு நேரம் வெளிய என்ன செஞ்சீங்க? கவின் கேட்டான்.
நான் போன் பேசிக் கொண்டிருந்தேன் அர்ஜூன் கூற, நானும் என்று விட்டு தாரிகா அருகே சென்று ஸ்ரீ நிவாஸிடம் பேசிய பொண்ணை பற்றி அனைவரிடமும் சந்தோசமாக கூறினாள்.
அவள் மகிழ்வதை பார்த்து அனைவரும் சந்தோசமானார்கள். யாசு வந்து விட, பசங்க எல்லாரும் அர்ஜூன் வீட்டிற்கு கிளம்பினார்கள். பொண்ணுங்க ஸ்ரீயுடன் தான் இருப்போம் என்று அவளருகே வந்து படுத்துக் கொண்டனர். அனைவரும் தூங்க, ஸ்ரீ நினைவு முழுவதும் “அர்ஜூன்.. அர்ஜூன்.. அர்ஜூன்..” மட்டுமே. எழுந்து ஜன்னலருகே சென்று நிலவை வெறித்தபடி நின்றாள். மற்றவர்கள் அவள் தூங்கவில்லை என்று கவனித்தாலும் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.