ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
இனிய இரவு வணக்கம்.
இன்றைய எபிசோடு 62..
இதோ ..
அர்ஜூன் ஸ்ரீ அழுதவுடன் தான் நினைவிற்கு வந்திருப்பான். அக்கா..என்று அர்ஜூன் அழைக்க, அவனை பார்த்தவர் கண்களை மூடி திறந்து அமைதியாக இருக்க சொல்லி,அவனை வெளியே தள்ளி அறை கதவை பூட்ட, மற்ற பெண்களும் வேகமாக அறைக்குள் நுழைந்தனர்.
அக்கா ஸ்ரீ அருகே வந்து ஆடையை கழற்று என்றார்.
மாட்டேன் அக்கா என்று ஸ்ரீ கதவருகே வந்தாள். அக்கா அவளை பிடித்து இழுத்து வழுக்கட்டாயமாக ஆடையை விலக்கினார்.
அக்கா வேண்டாம் என்று அழுதாள்.அவள் உடலை பார்த்த பெண்கள் அதிர்ந்து நின்றனர்.
ஸ்ரீ..என்ன இது? அக்கா அவளை பிடித்து உலுக்க, அவள் வாயை மூடி அழுது கொண்டே,ஆன்ட்டியால் தான் அனைத்தும்.
அக்கா..என்று வினிதாவை அணைத்த ஸ்ரீ,அவங்களுக்கு நான் என்ன தான் செய்தேனோ! அவர்கள் அவ்வப்போது சூடு வைப்பார்கள்.பின் ஜிதின் என்று சொல்ல முடியாமல் அழுத ஸ்ரீ மெதுவாக அவளை அவளே சரி செய்து கொண்டு,ஜிதின் என்னருகே வரக் கூடாது என்பதற்காக என்னை நானே காயப்படுத்திக் கொள்வேன்.எனக்கு இரத்தம் வந்தவுடன் அவன் பதறுவான். ஆனால் அதற்கு முன் என்னை அவன் காயப்படுத்துவான். இப்பொழுது தான் தெரிகிறது.அவனுக்கு போதை மருந்தை கொடுத்து என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வைப்பார்கள் என்று கோவிலில் வைத்து அவன் கூறிய பின் தான் புரிந்தது.நான் அவனை தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
நிவாஸிற்கு கூட தெரியாது.நீங்கள் கூறுவது போல் ஆடை அணிந்தால் என் உடலில் உள்ள காயங்கள் வெளியே தெரியும் சொல்லி விட்டு மீண்டும் அழுது கொண்டே, அக்கா என்று மேலும் ஆடையை தூக்கி மார்பகத்திற்கும் வயிற்றிற்கும் இடையே இருந்த சூட்டை காண்பித்து, இந்த சூட்டினால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? வலி உயிர் போனது. நிவாஸிற்கு தெரியக் கூடாது என்று வலியை தாங்கிக் கொண்டு நார்மலாக இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப வலிக்கும்கா வினிதாவை கட்டிக் கொண்டு அழுதாள் ஸ்ரீ.
இதை பார்த்த பெண்கள் மூவரும் உடைந்து அழுதனர்.
ஷ்..ஷ்..அழாதீர்கள் என்று ஸ்ரீ மூவரையும் பார்த்தாள். அவர்கள் ஒடி வந்து அவளை கட்டிக் கொண்டு,உன்னால் எப்படி இந்த வலியை தாங்கிக் கொள்ள முடிந்தது? தாரிகா அழுதாள்.
இப்போது வலிக்கவில்லை தாரி என்றாள்.
இப்பொழுது இல்லை.ஆனால் அன்று வலித்திருக்கும் தானே! என்று யாசு அவளை அணைத்தாள். அக்கா நால்வரையும் அணைக்க ஸ்ரீ அவர்களை விலக்கி விட்டு,ப்ளீஸ் பசங்களுக்கு இது பற்றி தெரியவே கூடாது என்று கூற, முடியாது..நான் கூற தான் போகிறேன் என்று நித்தி எழுந்தாள்.
இல்லை கூறினால் அர்ஜூனின் திட்டம் பாழாகி விடும். கண்டிப்பாக கோபத்தில் ஏதாவது செய்து அனைத்தையும் கெடுத்து விடுவர் ஸ்ரீ கூற,
அவள் கூறுவது சரி தான்.நாம் கோபத்தை காட்டக் கூடாது.கோபம் ஒருவனது வாழ்வை நாசமாக்கி விடும்.நிதானம் வேண்டும் என்றாள்
யாசு. நித்தி அமைதியானாள்.ஆனால் தாரிகாவால் இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஸ்ரீ நீ இனி அங்கே செல்லவே கூடாது. நாம் இனி சேர்ந்தே இருப்போம்.
தாரி என்னோட அங்கிளுக்காக தான் எல்லாமே தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரை காப்பாற்ற வேண்டும். அர்ஜூன் திட்டப்படி அவர்களிடம் ஏதும் இருக்கக்கூடாது. பணம் சொத்துக்காக எத்தனை பேரை கொல்கிறார்கள் தெரியுமா? பணம் இருந்தால் தானே இதெல்லாம் செய்வார்கள். அவர்களை அழிக்காமல் என்னால் அந்த வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்றாள் உறுதியாக.
அவள் பேசுவதை பார்த்து வினிதா பிரமித்துப் போனார். அர்ஜூன் கூறியது போல் இவள் தைரியசாலி தான்.இத்தனை துன்பங்கள் பட்டும் அவர்களை மற்றவருக்காக அழிக்க நினைக்கிறாளே! மாவீராட்சி தான் இவள்..மனதினுள் பாராட்டினார்.
போ ஸ்ரீ..என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாள் தாரிகா.
போராடினால் மட்டும் தான் முழுமையான விடுதலை கிடைக்கும். இல்லையென்றால் அனைவரும் சாக வேண்டியது தான்.என்னால் யாரும் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது தீர்க்கமாக அவள் பேச,
அதே ஸ்ரீ முணங்கினாள் நித்தி. நீ அப்படியே தான் இருக்கிறாய் ஸ்ரீ மனதினுள் நினைத்த யாசு மீண்டும் அணைத்து போராடுவோம்.என் தோழியை காயப்படுத்தியவர்கள் இனி சிரிக்க கூட முடியாது என்று யாசு கூறினாள்.
சபாஷ் சீனியர், இந்த தைரியம் போதுமே எனக்கு..ஸ்ரீ கூற, தாரிகா மூவரையும் பார்த்து, என்னவாது செய்யுங்கள் என்று கூறினாள்.
அவளது இந்த புது விதமான பேச்சு மற்றவர்களுக்கு உத்வேகத்தையும் வினிதாவிற்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது.
இதுவரை அங்கிருந்த அனுவை யாரும் கவனிக்கவில்லை. ஏஞ்சல்..என்ற சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினர்.
கண்ணை துடைத்த பெண்கள் அனுவை பார்த்து,பாப்பா என்று அவளை தூக்க அவள் ஸ்ரீயிடம் கையை நீட்டினாள்.
ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு தயாராகலாமா? கேட்டாள்.
அனு ஸ்ரீயை ஆடையை தூக்க, வினிதா அதட்டினாள் அனுவை.
அம்மா..என்று அழுதாள் அனு. வா..என்று வினிதா அவளை வாங்க,அக்கா அவள் இருக்கட்டும். ஒன்றுமில்லை.. சிறுபிள்ளை தானே!
அம்மா, ஏஞ்சலுக்கு புண்ணு..என்று அழுது கொண்டு ஸ்ரீ கையில் இருந்த தழும்பை பார்த்து ஊதி விட்டாள் குட்டி பாப்பா.
ஸ்ரீ பாப்பாவை அணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீரோடு எனக்கு வலிக்கவில்லை பாப்பா என்றாள்.
நீ வேற டிரஸ் தான் போடணும் அனு சொல்ல, ஆமாம் என்று மற்றவர்களும் கூறினார்கள்.
நான் எப்படி போடுவது? பாப்பா மாதிரி பேசாதீங்க சீனியர் என்றாள் ஸ்ரீ.
ஏன் முடியாது?உன் தேகம் அனுவளவு கூட தெரியாமல் போடக் கூடிய நியூ மாடல் உடைகள் என்னிடம் உள்ளது என்று வினிதா அக்கா ஸ்ரீ கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.
உடைகளை காண்பித்து, உனக்கு பிடித்ததை எடு.
கோர்ட்டுடன் கூடிய சுடியை எடுத்தாள் ஸ்ரீ.அதை பார்த்து மற்றவர்கள் முறைத்தனர்.
அனு..ஒரு உடையை பிடித்து இழுத்தாள்.
வாவ்..இது சூப்பராக இருக்கும் என்று மற்றவர்கள்..அனு பாப்பா செலக்சன் சூப்பர் என்றனர்.
அக்கா இது வேண்டாமே ப்ளீஸ் என்றாள்.அனு கையை கட்டிக் கொண்டு ஸ்ரீயை முறைத்துக் கொண்டு நின்றாள்.
அக்கா அவளை காண்பிக்க,என் தங்க பாப்பால, செல்ல பாப்பால..எனக்கு இது வேண்டாம் என்று குழந்தையை சமாதானப்படுத்த,அனு கோபித்துக் கொண்டாள்.
ஓ.கே என்று விட்டு, இது கையகன்று உள்ளதே! என்றாள்.அங்கிருந்த உடைகளை பார்த்த யாசு,அக்காவிடம் ஒரு உடையை எடுத்து இதை நான் வைத்துக் கொள்ளவா? கேட்டாள்.
சரி என்றவுடன் அதை பிரித்து, ஸ்ரீக்கான ஆடையை எடுத்து கையில்லாத பகுதியில் தைக்க ஆரம்பித்தாள்.
இப்பொழுது எப்படி? என்று யாசு ஆடையை காண்பிக்க, அழகாக செய்திருக்கிறாய் என்று அக்கா யாசுவை பாராட்டினார்.
பாப்பாவின் ஆடையை அக்கா எடுத்து கொடுக்க,அனைவரும் அதிசயித்து போயினர்.
ஸ்ரீ,அனு ஆடை ஓரளவு ஒரே மாதிரி இருந்தது.
அக்கா..என்று ஸ்ரீ வினிதாவை பார்த்தாள். அக்கா இது ஒரே மாதிரி உள்ளது.
இது தான் சரி என்றனர்.அவளுக்கு சங்கடமாக இருந்தது.
ஒன்றுமில்லை ஸ்ரீ அழகாக தான் இருக்கும் என்றாள் தாரிகா.
இல்லை தாரி. இன்று அனு பிறந்தநாள். அக்காவும் பாப்பாவும் ஒரே போல் அணிந்தால் நன்றாக இருக்கும்.
இல்லை ஸ்ரீ. உங்களுக்கு தான் ஸ்ரீ சரியாக இருக்கும் என்று அழுதார் அக்கா.
அக்கா நீங்க..?ஸ்ரீ கேட்க..
நான் தான் இருக்க மாட்டேனே! நீ அனுவை பார்த்துக் கொள்ள மாட்டாயா? கேட்டார் அக்கா.
அக்கா..நான் தயங்கினாள்.
பாப்பா பிறந்தநாளை எஞ்சாய் பண்றத விட்டுட்டு அழுது கொண்டு இருக்கிறீர்கள்? நித்தி அக்காவை அணைக்க, அவரும் கண்ணை துடைத்துக் கொண்டு..
சீக்கிரம் கிளம்பு ஸ்ரீ நேரமாகிறது என்று அக்கா அனுவை தயார் செய்ய, தோழிகள் உதவியுடன் ஸ்ரீயும் தயாரானாள்.
பேன்சி ஹாஃப் ஃசேரி ஆகாயஊதா நிறம் கலந்த வெள்ளை நிறத்தில் இருவருக்கும்..
ஹே..சேரி மாதிரி வேண்டாம்.இதையே லெஹங்கா மாடலில் போடலாம் என்று யாசு கூற, பாப்பா ஸ்ரீ இருவரையும் அழகாக தயாராக்கினார்கள். ஹேர் ஸ்டைல் கூட இருவரும் ஒரே போல் தலையை விரித்து,முன்புறம் அழகான ஸ்டைல் விடுத்து தலையில் பூ அலங்காரம் செய்தனர்.
அக்கா மற்ற பெண்களிடம் நீங்களும் உங்களுக்கு பிடித்ததை போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
இருக்கட்டும் அக்கா என்று நித்தி கூறினாள்.
எல்லாரும் மாத்தணும் என்றாள் ஸ்ரீ. அவரவருக்கு பிடித்த லெஹங்கா,லாங் கவுன், பார்ட்டி வியர் டிரசஸ் போட்டு தயாரானார்கள். அக்கா பட்டு சேலை உடுத்தி வந்தார்.
வெளியே பசங்க ஏதோ பிரச்சனை என்று பயந்து இருக்க, இவர்கள் கொடுத்த அதிரடியில் அதிர்ந்து தான் போனார்கள்.
அகில், அர்ஜூன் கண்கள் ஸ்ரீயை விட்டு அகலாமலிருக்க, கவின் தாரிகாவை பார்த்து கண்ணடித்தான்.என்னடா நடக்குது?என்று மற்றவர்கள் திகைத்து விழிக்க,
நிவாஸ் ஸ்ரீ அருகே வந்து, ஸ்ரீ..நீயா இது?
அப்படி பாக்காதடா ஒரு மாதிரி இருக்கு என்றாள்.
ஏய்..லூசு..எத்தனை முறை உன்னை நான் போட சொன்னேன்.நீ போடவே இல்லை.
யார் அவளை சம்மதிக்க வைத்தது? மற்றவர்களை பார்க்க, அவர்கள் அனுவை காண்பித்தனர்.
நிவாஸ் ஸ்ரீயை கன்னத்தில் கிள்ள வந்தான். ஸ்ரீ பாப்பாவை தூக்கி வைத்திருப்பாள்.என்னோட ஏஞ்சலை தொடாதே என்று அவனது கையை தட்டி விட்டாள் அனு.
ஓய், அவ என்னோட அக்கா..பாப்பாவுடன் சண்டை போட்டான். நான் கேக் எடுத்து வருகிறேன் அக்கா உள்ளே சென்றார்.
அனு ஸ்ரீயை பார்க்க, டேய்..போடா, நான் அனு பக்கம் தான் என்றாள் ஸ்ரீ.
நிவாஸ் அவன் மார்பிலே குத்திக் கொண்டே உதட்டை மடித்து பல்லால் கடித்துக் கொண்டு, “இரத்ததின் இரத்தமே என் இனிய உடன் பிறப்பே”பாடலை பாடிக் கொண்டு என்னை விட்டு போகாதே என்றான்.
டேய்..வாயை மூடுடா என்று தாரிகா அவனது வாயை மூட, கவின் அவளை முறைத்தவாறு நின்றான். அவன் கோபப்படுவதை பார்த்து தாரிகா அவனிடம் செல்ல, அவன் பார்வை இப்பொழுது நிவாஸ் மீது விழுந்தது.
அய்யோ! நான் ஒன்றுமே பண்ணலப்பா.அவள் தான் என்று..ஸ்ரீ பாரு என்றான்.
ஸ்ரீ அவனை பார்த்து புருவத்தை உயர்த்த,
ஏய், நீ என்ன பாப்பாவுடன் சேர்ந்து கொண்டு என்னை கழட்டி விடுற? நெற்றியை சுருக்கி பாவம் போல் அவன் பார்த்தான்.
ஸ்ரீ அனுவிடம்,பாப்பா அவனை பார் பாவமாக உள்ளது தானே என்றாள்.
பாப்பா நிவாஸை மேலும் கீழுமாய் பார்த்து, ஓ.கே ஏஞ்சல் அவனை விடு. நீ என் ஏஞ்சலோடு பேசு. ஆனால் தள்ளி இரு..என்று பாப்பா கையை உயர்த்தி மிரட்ட,உத்தரவு இளவரசி என்று குனிந்தான் அனுவிடம்.
பின் தான் அனு அர்ச்சுவை பார்த்தாள்.அர்ஜூன்..என்று கையை தூக்க, ஸ்ரீ அருகே வந்து பாப்பாவை வாங்கினான் அவளை பார்த்துக் கொண்டே. அவளும் அவனது கண்களை பார்த்தவள் அகிலை பார்த்தாள். அவன் பார்வை வீச்சை தாங்க முடியாத ஸ்ரீ,வேகமாக அபி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.நித்தி ,யாசு அவளருகே வந்து அமர்ந்தனர்.
அர்ஜூன் அனுவிடம் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள் புன்னகையுடன் ஸ்ரீ.நிவாஸ் அதை பார்த்து, அவன் அர்ஜூனை மறைத்து உட்கார்ந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
நித்தி அதை பார்த்து, என்னடா பண்ற நிவாஸ்? என்று கேட்க,சீனியர் பார்த்தால் தெரியவில்லை.
அக்கா கேக்குடன் வந்தார்.
அனுவை வாங்கிக் கொண்டு, கேக் கட் செய்ய, மற்றவர்கள் பிறந்தநாள் பாடலை பாடினார்கள்.கேக்கை அக்காவிற்கு ஊட்டி விட்டு அர்ஜூனுக்கு ஊட்டிய அனு ஸ்ரீயை அழைத்தாள். அவள் திறுதிறுவென விழிக்க, அனுவை அக்கா கீழே இறக்கி விட, ஓடி வந்து ஸ்ரீக்கு ஊட்டி விட்டாள். புன்னகையுடன் ஸ்ரீயும் அவளை தூக்கிக் கொண்டு அவளுக்கு கேக் எடுக்க அர்ஜூன் அருகே வந்தான்.எடுத்த கேக்கை பாப்பாவிற்கு அவள் ஊட்டி விட,அர்ஜூனும் எடுத்து வந்து பாப்பாவிற்கு ஊட்டி விட்டு,அவன் பிரசன்ட்டை கொடுத்தான்.
பின் தான் ஸ்ரீ நினைவு வந்து, அர்ஜூன் கையில் அனுவை கொடுத்து விட்டு அறைக்குள் சென்றாள்.அகில் அவள் பின்னே சென்றான்.
“என்னுள் மருகிய உணர்வுகள்
உன்னால் விழித்தெழுகின்றதே!
உன் வசீகரம் என்னை
கவர்ந்திழுக்கிறதே!
உன் காதலை அனுபவிக்க
என் இதயம் ஏங்குகிறதே!
எனக்கான வாய்ப்பை
அளிப்பாயோ
என் தாயுமானவளே?”