ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

இனிய இரவு வணக்கம்..

இன்றைய உங்களுக்கான எபிசோடு 61..

கிஷோர்..அபி வகுப்பில் தனியே இருப்பதை அறிந்து கொண்டு, அபிக்கு தெரியாமல் லைவ் ஆன் செய்து அவன் முன் நின்று அவனை கோபப்படுத்த பார்த்தான்.

நம் பிரச்சனை தான் அன்றே முடிந்ததே! அப்புறம் எதற்கு என்னை தொந்தரவு செய்கிறாய்? நல்லவன் போல் கிஷோர் பேச,புரியாது விழித்தான் அபி.

அபி எழுந்து அவனை முறைத்து விட்டு,உனக்கு என்ன தான் பிரச்சனை?

எனக்கு என்ன? நீ தான் என்ன வேலையெல்லாம் செய்கிறாய்?

நான் என்ன செய்தேன்?என்று அவனது புத்தகங்களை எடுத்து பைக்குள் வைத்தான்.

அர்ஜூன் அங்கே வந்து,கிஷோர் பின்னிருந்து சைகையில் அவன் உன்னை லைவில் போட்டிருக்கிறான்.கவனமாக இரு வாயசைத்து பேசினான்.

அபி வேறு பக்கம் பார்ப்பதை கவனித்த அவன் திரும்பி பார்த்தான். அர்ஜூன் ஒளிந்து கொண்டான்.

புரிந்து கொண்ட அபி புன்னகையுடன், என்னங்க சார்..நான் என்ன செய்தேன்?

என்ன செய்தாயா? அந்த இன்பா மேம் கூட ஊர் சுற்றுகிறாயே!

சார்,எனக்கு அவங்க குடும்பத்தை நன்றாகவே தெரியும். அவங்களுக்கு உதவியாக வீட்டில் டிராப் செய்றேன்.அவங்க அம்மாவிற்கும் தெரியுமே! அதில் என்ன தவறுள்ளது.

இன்பாவின் தங்கை கூட பேருந்தில் தான் செல்வாள்.இவர்கள் என்ன உனக்கு ஸ்பெசலா?

சார்.அன்று இதயா கூறினாலே அவங்க அப்பா இறந்ததற்கு காரணம் ஒரு பொறுக்கின்னு.அவன் அவங்களை தொந்தரவு செய்தான்.அதற்கு உதவ தான் அவங்க ப்ரெண்ட்ஸ் வேலையா இருந்ததால் நான் அழைத்து சென்றேன்.இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சார், உங்களை பற்றி தான் தவறாக பேசுகிறார்கள்.நீங்கள் பொண்ணுங்கள தவறான கண்ணோடத்தில் பார்க்கிறீர்கள் என்று எனக்கு  தெரிய வந்தது.

நானா? உனக்கு என்ன தைரியம்?கையை ஓங்கினார்.

அபி தடுத்து, சார் பசங்க பேசியதை தான் சொன்னேன். அப்புறம் இது என்னோட வகுப்பறை. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்கும் எங்களது படிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?

உனக்கு யார் சொன்னது? நான் அவ்வாறு இல்லை என்றான் தயங்கியவாறு கிஷோர்.

நீங்கள் தான் என்று அடித்து பேசினார்கள் சார்.

நான் இல்லை.

நீங்கள் தான் என்று பேசினார்கள்.

இவர்களது உரையாடலை கல்லூரியே பார்த்துக் கொண்டிருந்தது. இதை கேட்டுக் கொண்டே தருண்,இதயா,இன்பா,ஆதேஷ்,துகிரா அங்கே வந்தனர்.

உண்மை தான் அபி. இவர் சாரில்லை பொறுக்கி தான் என்றது இதயாவின் குரல்.அதை கேட்டு கிஷோர் அவள் புறம் திரும்ப, இதயாவை மறைத்து நின்றான் தருண்.

என்னடி பண்ற? இன்பா திட்ட,அக்கா இவனை சும்மா விட்டால் நம்மை விடுவான் என்று நினைக்கிறாயா? கேட்டாள் இதயா.

வேண்டாம்டி. ஏதும் கூறாதே. பசங்க அப்புறம் உன்னிடம் வேறு மாதிரி தான் பேசுவார்கள்.இன்பா எச்சரித்தாள்.

தெரியும்கா.இதே போல் இவன் எத்தனை பேரை காயப்படுத்தப் போகிறானோ என்று தருண் பின்னிருந்து முன் வர,

அவன் திரும்பி, நீ பேசு என்று மீண்டும் முன் வந்து அவனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை ஒன்றை எடுத்து அவளது முகத்தை மறைத்தவாறு கட்டி விட்டு நகர்ந்து வழி விட்டான்.இன்பா பதட்டமாக இருப்பதை பார்த்த இதயா,அவளை பார்த்து விட்டு அபி அருகே வந்து நின்றாள்.

அவளிடம் கிஷோர் நடந்து கொண்டதையும், இன்பா என்று கூறாமல் ஒரு ஆசிரியையை தவறாக பார்ப்பதை பார்த்தேன். அந்த வீடியோ கூட என்னிடம் உள்ளது என்றாள்.

இல்லை.இவள் தான் என்னிடம் தவறாக நடந்து கொண்டாள் என்று இதயாவின் பெயரை சொல்ல கிஷோர் வந்தான். வேகமாக உள்ளே வந்த சைலேஷ் அவனது வாயை உடைத்து விட்டு அவனது போனை எடுத்து கீழே தூக்கி எறிந்து விட, அது ஓரிடத்தில் விழுந்து வீடியோ அங்கிருந்தவர்களை காண்பித்தது.

ஏன்டா பொறுக்கி நாயே? அவ சொல்லி தான் இங்கு வந்து சேர்ந்தாயா? என்று அவனது வாயை உடைத்தான் சைலேஷ்.

என்னடா திட்டம் போட்டீங்க?கேட்டான்.

யார் சொல்லி வந்தான்? என்று இன்பா உள்ளே வர, கல்லூரி முதல்வரும் வந்தார்.

நந்தினி தான். அவளுடைய தம்பி தான் இவன்.அவள் தான் இன்பா உன்னை பழி வாங்க இவனை அனுப்பி இருக்கிறாள்.நான் நினைத்ததை விட மோசமாக இருக்கிறாள்.ச்சே..என்றான்.

கிஷோர் பயங்கரமாக சிரித்து விட்டு, இதயா அருகே வந்து,அவளுக்கு தருண் போட்ட கைக்குட்டையில் கை வைக்க வந்தான்.அபி அவன் முன் வந்து கையை தட்டி விட்டு, இதயாவை பார்த்தான். அவள் அமைதியாக நின்றாள்.

தருண் அவளை வரச் சொல்லி கையசைத்தான்.அவள் வேகமாக அவன் அருகே சென்றாள்.அவளை வெளியே இருக்க வைத்து உள்ளே வந்தான் தருண்.

என்ன மாமா நீங்க? அக்காவை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் வேற பொண்ணு போல..நித்தியை பார்த்துக் கொண்டே கேட்டான்.

அந்த பொறுக்கியின் பார்வையை கவனிக்காத சைலேஷ், யாரடா மாமான்னு சொல்ற? உன்னோட அக்காவை பற்றி தெரியாமல் ச்சே..நினைத்தாலே அருவருப்பா இருக்கு.என்ன வேலை பார்க்கிறாள்.நல்ல வேலை,முன்பே அவளை பற்றி தெரிந்து விட்டது.

மாமா..அந்த பொண்ணு இங்க தான் படிக்கிறாளோ! மீண்டும் அவன் மாமா போட,

அவளை பத்தி பேசாதே! என்று சத்தம் போட்டான்.

ஏன் மாமா? அவளை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ? மீண்டும் நித்தியை மேலிருந்து கீழாக பார்த்த பார்வையில் அவளுக்கு கண்கலங்கியது.அவன் பார்வை மீண்டும் நித்தியின் உடலில் வக்கிரமாக வலம் வந்தது.அகில், கவின், அர்ஜூன் அவளை மறைத்து நின்றனர்.

அபியின் பார்வையை கவனித்த சைலேஷ் பார்வையை மறுபுறம் திருப்ப,பசங்க நிற்பதை பார்த்து விட்டு கிஷோரை பார்த்தான்.

அவன் பார்வை அவ்விடத்தை விட்டு அகலாமல்,அவன் முத்தமிடுவதை போல் வாயை குவித்தான். தாங்க முடியாத நித்தி அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.இதை பார்த்த சைலேஷ் அபியை பார்த்தான். அவன் கிஷோரை முறைத்தபடி இருக்க, அப்பொழுது தான் விளங்கியது சைலேஷிற்கு.

அவன் சும்மா இல்லாமல்..அந்த பொண்ண விட உங்க ஆளு சூப்பரா இருக்காளே! அக்காவை போல் அவளையும் நீங்கள் கழட்டி விட்டால் சொல்லுங்க..நான் வச்சுக்கிறேன் என்றான்.

என்னடா சொன்ன நாயே? என்று இதழ் குவித்த அவன் வாயை மேலும் உடைத்தான். வாயிலிருந்து இரத்தம் கொட்ட நின்றவனை சைலேஷ்  புரட்டி எடுத்தான். கொஞ்சம் விட்டிருந்தால் செத்துருப்பான் கிஷோர்.அங்கிருந்தவர்கள் சைலேஷை தடுத்து விட்டனர்.

கல்லூரி முதல்வர் அவனிடம் “கெட் லாஸ்ட்” என்று கத்தினார். அவனை செக்யூரிட்டி கல்லூரியை விட்டு வெளியே தள்ளினர். கீழே விழுந்து புரண்ட அவன்..விட மாட்டேன்டா..கத்திக் கொண்டே சென்றான்.

சைலேஷ் முதல்வரிடம்,நான் உங்களுடன் பேச வேண்டும்.என்னுடைய அறைக்கு செல்லுங்கள்.நான் வந்து விடுவேன் என்று அபியை பார்க்க, அவன் அங்கு இல்லை.வேகமான வெளியே வந்த சைலேஷ் நித்தியை தேடினான். அபிக்கு போன் செய்ய,எடுத்தான் அவன்.

நித்தி இருக்கும் இடத்தை அவன் கூற சைலேஷ் அங்கு வந்தான்.யாசு நித்தி அருகே இருக்க,அவளை நித்தி அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள். யாசு சைலேஷை பார்த்து நகர்ந்து கொள்ள, நித்தி அவனை பார்த்து முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

நித்தி..என்று மண்டியிட்டு அவளது கரங்களை விலக்கி விட்டு,சாரிம்மா அவன் மீதுள்ள கோபத்தில் உன்னை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன் என்று அவளது கரங்களால் அவனது கன்னத்தை அடித்துக் கொண்டு அழுதான்.

அவள் அவனை தடுத்து,அழுது கொண்டே இறுக அணைத்துக் கொண்டாள். எனக்கு தெரியும்.நீங்கள் என்னை விட்டு செல்ல மாட்டீர்கள் தானே! அழுதவள்..போக மாட்டிங்கல? கேட்டாள்.

நீ அன்றைக்கு தாத்தாவிடம் பேசிய போதே! நான் உறுதி எடுத்து விட்டேன். நீ தான் என் பொண்டாட்டி என்று..அவன் கூறினான்.அவள் அழுகை நிற்கவே இல்லை.சைலேஷ் அனைவரையும் பார்க்க,அவர்கள் தள்ளி சென்றனர்.

இங்கே பாரு நித்தி..நித்திம்மா..பாரு என்று அவளது முகத்தை கையில் ஏந்திக் கொண்டு, அவளது முகத்தை துடைத்து விட்டு,அவளது நெற்றில் முத்தமிட்டான். பின் கண்ணிலும் மூக்கிலும் கடைசியாக..இதழ்களில் வந்தவன் தயங்கி அவளை பார்த்தான்.

அவள் அழுகை நின்று அமைதியாக அவனது கண்களை பார்த்து விட்டு,அவளாகவே அவன் இதழ்களில் முத்தமிட்டாள்.

அவன் அவளை அணைத்துக் கொண்டு,ஒன்றுமில்லை.நான் இருக்கிறேன். அவன் இனி உன் நிழலை கூட தொட முடியாது என்றான்.

நீ அழக்கூடாது.நம்மை பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் பயப்படாதே! அதற்கு ஏதாவது செய்கிறேன் என்றான்.

“லவ் யூ ஹப்பி” என்றாள். அவன் புன்னகையுடன் “லவ் யூ டி பொண்டாட்டி” என்றான். பின் இருவரும் கை கோர்த்து வெளியே வந்தனர். நண்பர்கள் அவர்களை பார்த்து மகிழ்ந்தனர்.

அந்த கிஷோரை செக்யூரிட்டி அழைத்துச் செல்லும் போது அவன் இதயாவை பார்த்து கண்ணடிக்க, இதை பார்த்து இன்பா அவனை அறைந்து விட்டு வாய்க்கு வந்தபடி திட்டினாள்.

அக்கா வேண்டாம் என்று இதயாவும் தருணும் இன்பாவை தடுத்தனர். அவன் அவளை முறைத்துக் கொண்டே ஏதோ முணங்கிய படி சென்றான்.

நான் என் வேலையை முடித்து விட்டு வருகிறேன்.நீங்கள் அனைவரும் முதலில் செல்லுங்கள் அர்ஜூன் கூற, லொக்கேஷன் அனுப்புடா என்று அகில் கேட்டான்.

தாரிகா ஸ்ரீயை அழைத்து செல்லுங்கள்.யாரும் தனியே செல்லாதீர்கள் என்று அவன் கிளம்பினான்.

அனைவரும் தயாராகி அங்கே சென்றனர். வினிதா பார்ட்டியை வீட்டில் தான் வைத்திருந்தார். வேறு யாருமே இல்லை. இவர்கள் மட்டும் தான் சென்றிருந்தனர்.

அனு..அர்ஜூனை தான் தேடினாள். அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றனர். ஸ்ரீயிடம் தான் இருந்தாள் பாப்பா.

அனு குட்டிம்மா..வாங்க தயாராகலாம் என்று அனுவை வினிதா அழைக்க, ஸ்ரீயை விட்டு விலகவே இல்லை அனு.

அக்கா..நான் பாப்பாவை தயாராக்குகிறேன் என்றவுடன் நாங்களும் என்று யாசு, நித்தி, தாரிகாவும் அந்த அறைக்கு வந்தனர்.

அவளுக்கு ஏற்ற உடையை பார்த்துக் கொண்டிருக்கும் போது,யாசு ஸ்ரீயிடம்..உன்னிடம் வேற உடை இல்லையா? கேட்டாள்.

ஆமாம்..உன்னை பார்த்த நாள் முதல் இதே போல் முழுக்கையுடன் சுடியை இழுத்து போர்த்திக் கொண்டு இருக்கிறாய்..ஒரு நாள் கூட வேற ஆடையில் உன்னை பார்க்கவே இல்லை என்றாள் நித்தி.

அட ஆமாம்.நானும் இதை கவனிக்கவில்லை.ஏன் ஒரே மாதிரி ஆடையையே அணிந்து கொண்டிருக்கிறாய்?தாரிகா கேட்டாள்.

என்ன சொல்றீங்க? அக்கா கேட்டார்.

அக்கா..எனக்கு இது தான் பிடித்திருக்கிறது என்றாள் ஸ்ரீ சாதாரணமாக.

நோ என்று ஆள்காட்டி விரலை அழகாக அசைத்த அனு இன்னிக்கி.. என்னோட பர்த்டே..எல்லாரும் போல் நன்றாக உடை போடு ஏஞ்சல்.

வினிதா சிறு புன்னகையுடன்,இங்கே வா..அவரது வாட்ரோப்பிற்கு அழைத்து சென்றார். பெண்கள் அசந்து நின்றனர்.அழகழகான ஆடைகள் அங்கே இருக்க,இதில் எது உனக்கு வேண்டுமோ? எடுத்துக் கொள் என்றார்.

எனக்கு இதெல்லாம் வேண்டாம் அக்கா..ப்ளீஸ் என்றாள் ஸ்ரீ.

இல்லை.நீ போட்டு தான் ஆக வேண்டும் நித்தி கூற,கண்டிப்பா..என்றாள் யாசு.

ப்ளீஸ் சீனியர். எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று ஸ்ரீ நகர, தாரிகா அவளை பிடி..என்று அவர்கள் விளையாட, அக்கா மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ஜூன் நண்பர்களிடம் பேசி விட்டு, அறை கதவை திறந்தான். ஸ்ரீ வெளியே ஓடி வந்து அவன் மீது மோதினாள். அர்ச்சு அவளையே பார்க்க, அவன் பின் வந்து அவனை பிடித்துக் கொண்டு,ப்ளீஸ் வேண்டாம். சீனியர்.. தாரி நோ..என்று அவள் அவனை பிடித்துக் கொண்டிருந்தாள்.

அர்ச்சு ஸ்ரீயை பிடிடா..என்று நித்தி குரல் கொடுக்க,அவனுக்கு எங்கே அதெல்லாம் கேட்க போகிறது? அவனுக்கு ஏதோ ஸ்ரீ அவனுடையவளாகி விட்டது போல் தான் தோன்றியது..

அடச்சே..இவனிடம் கேட்டதற்கு..என்று நித்தி அவனை விலக்க,அவளை பிடியுங்கள்..என்று யாசு கூற,பசங்க எழுந்தனர்.அங்கிருந்த மேசையில் ஸ்ரீ கால் பட்டு இடறி கீழே விழுந்தாள்.

ப்ளீஸ் சீனியர்..வேண்டாம் என்று அப்படியே உட்கார்ந்தவாறு அழுதாள்.

இதற்காக ஏன் அழுகிறாய்? என்று நித்தி ஸ்ரீ அருகே வந்தாள்.

வேண்டாம் சீனியர் என்று அவள் தேம்பி தேம்பி அழ..ஸ்ரீ என்று அதிர்ந்தனர்.

எதற்கு அழுகிறாள்?என்று பசங்க கேட்க, வினிதா அக்கா அவள் ஒரே போல் தான் ஆடை அணிவாள் என்பது,ஆடையை மாற்ற பயப்படுவதை பார்த்த அக்கா வேகமாக அவளருகே வந்தார்.

அக்கா..வேண்டாம்கா..ப்ளீஸ் என்று ஸ்ரீ அழ, அவளை தூக்கி விட்ட வினிதா ஸ்ரீயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.அவள் அழுகை நின்று,தேம்பிக் கொண்டே அக்காவை பார்த்தாள்.வினிதா ஸ்ரீயை அறைக்குள் தரதரவென இழுத்துச் சென்றார்.