ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 56..

அர்ஜூன் என்று சத்தத்தில் அனைவரும் எதிரே வந்த குட்டிப் பாப்பாவை பார்த்தனர்.அர்ஜூனும் எழுந்து,

ஹே..செகண்ட் ஏஞ்சல், ஸ்கூலுக்கு போகலையா? அம்மா எங்கே? கேட்டுக் கொண்டே பாப்பாவை நோக்கி சென்றான். பாப்பா ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டது. அவன் பாப்பாவை தூக்கினான்.

அம்மா..என்று கை காண்பித்தது குழந்தை. வினிதா கையில் போனை அணைத்து  விட்டு அவன் பக்கம் வந்தார்.

அக்கா..இந்த நேரம் கோவிலுக்கு?கேட்டான் அர்ஜூன். அனைவருக்கும் யாரென்று புரிந்தது.

இன்று அனுவின் பிறந்தநாள்.நீ கல்லூருக்கு செல்லவில்லையா? போகணும் அக்கா.ப்ரெண்ட்ஸொட வந்தேன் என்றான்.

ஹாப்பி பர்த்டே..ஏஞ்சல் குட்டிமா என்றான் அர்ஜூன். மற்றவர்களும் வாழ்த்துக்களை கூறினார்கள்.

அனு எல்லாருக்கும் நன்றி கூறு வினிதா கூற, அழகாக கைகளை கூப்பியவாறு நன்றி கூறியது பாப்பா.

அர்ஜூனை குனியச் செய்து,உன்னோட ஃபர்ஸ்ட் ஏஞ்சல் இருக்காங்களா? கேட்டது.அவன் ஸ்ரீயை பார்த்தான்.

சொல்லு அர்ஜூன் என்றது பாப்பா..

இருக்காடா என்று வினிதாவை பார்த்தான். அவனை பார்த்து புன்னகைத்தார் அவர்.

அவன் வினிதாவிடம் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். அனைவரும் பாப்பாவை அர்ஜூனிடம் வாங்க வந்தனர்.நான் வரமாட்டேன் என்று அவனை கட்டிக் கொண்டது.

அப்பொழுது அந்த காதலர்களுடன் பேச சென்ற அம்மா, அவர்களுடன் ஸ்ரீ அருகே வந்தார்.சாரிம்மா உன்னோட ப்ரெண்ட்ஸை பத்தி தவறாக பேசி விட்டேன் என்றார்.

நீங்க பெரியவங்க,எங்களிடம் சாரியெல்லாம் கேட்க கூடாதும்மா.உங்க பொண்ணு என்று இருவரையும் பார்த்தாள். இருவரும் புன்னகையுடன் அவளருகே வந்தனர்.அந்த பொண்ணு ஸ்ரீயை அணைத்து “தேங்க்ஸ்”.நானா பேசி இருந்தா கூட அம்மா ஓ.கே சொல்லி இருக்க மாட்டாங்க.”தேங்க்ஸ் சிஸ்டர்” மீண்டும் ஒரு முறை நன்றி நவிழ்ந்தாள்.

வாழ்த்துக்கள்.”ஹாப்பியா இருங்க”.இனி மறைய தேவையில்லை தானே! ஸ்ரீ புன்னகைக்க,அவர்களும் புன்னகைத்து விட்டு விடை பெற்றனர்.

அர்ஜூனுடைய கண்கள் அவனுடைய அழகு தேவதையை விட்டு அகலாதிருக்க, அனு அவனது முகத்தை திருப்பி அவனை பார்த்து முறைத்தாள். அவன் அவளை கொஞ்சி சமாதானப்படுத்தினான்.

அச்சோ..அர்ஜூன் டைம் ஆகிடுச்சு நிவாஸ் சொல்ல,நீ சாப்பிட்டாயா? அர்ஜூன் கேட்டான்.

இல்லை.பசிக்கிறது என்றான்.

என்னிடம் வாங்கிக் கொள்.மதியம் கேண்டினில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றாள் தாரிகா.

சரி என்றான் நிவாஸ்.

கவனமாக இருங்கள்.கவின் நீ இவர்களை கல்லூரிக்கு அழைத்துச் செல். ஜிதின் நீ காரை ஓட்டு விடுவாயா? அர்ஜூன் கேட்டான்.

நான் அவனுடன் செல்கிறேன் என்று நிவாஸ் முன் வந்தான்.

சரி பார்த்து செல்லுங்கள் என்றான்.

நீ சீக்கிரம் வந்து விடு.நேரமாகிறது கவின் கூறினான்.

வினிதா அனைவரையும் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தார்.

கண்டிப்பாக வருகிறோம் என்று வினிதாவிடமும்,பாப்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பினர்.ஸ்ரீ அருகே வந்த வினிதா நன்றாக பேசினாயே என்று பாராட்டினாள். அவளை பார்த்து புன்னகையை உதிர்த்தவள் அர்ஜூனிடம் நான் கடவுளை தொழுது வருகிறேன். காத்திரு என்று அவள் செல்ல,

நேரமாகிறது.சீக்கிரம் செல்ல வேண்டும்.இன்னொரு நாள் அழைத்து வருகிறேன் என்றான் அர்ஜூன்.

இவ்வளவு தூரம் வந்து விட்டோம்.ப்ளீஸ் அர்ஜூன் என்றாள்.

நீயும் போ அர்ஜூன் என்று பாப்பாவை வினிதா வாங்கி விட்டு,நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.நீங்கள் கடவுளை வணங்கி விட்டு வாருங்கள் என்றார்.

அர்ஜூனும் ஸ்ரீயும் வழிபாடு நடக்கும் இடத்திற்கு சென்றனர். கடவுளை வணங்கி விட்டு திருநீரு, குங்குமம் வாங்கி விட்டு வெளியே வந்தனர். வினிதா அருகே வரும் போது ஒரு பெண்மணி அர்ஜூனை இடித்து விட, அவனும் ஸ்ரீயும் மோதிக் கொண்டனர். அவர்கள் மோதியதில் அர்ஜூன் கையில் இருந்த குங்குமம் ஸ்ரீயின் பிறை நெற்றியிலும் கண்ணிலும் விழுந்தது

அர்ஜூன் என் கண்..என்று ஸ்ரீ கூற, அவன் அப்பொழுது தான் அவளை பார்த்தான். அவன் அதிர்ந்து அசையாது உறைந்து நின்றான். பின் தன் கையையும் அவளது பிறை நெற்றியையும் மாறி மாறி பார்த்தான்.

என்னடா..செய்ற? கண் வலிக்குதுடா என்றாள் ஸ்ரீ.அவனை பார்த்த வினிதா அவளருகே வந்தார். அவன் தனது கைக்குட்டையை எடுத்து,ஸ்ரீ நெற்றியில் விழுந்ததை துடைக்க வேகமாக வந்தான். அதற்குள் வினிதா அவனை தடுத்து, பொண்ணுங்க குங்குமத்தை அழிக்கக் கூடாது. நீ கிளம்பு அர்ஜூன். நான் பார்த்துக் கொள்கிறேன்.உனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் வகுப்பு ஆரம்பித்து விடும்.நான் ஸ்ரீயை வீட்டில் விட்டு விடுவேன்.

அனு அவனை அழைத்தாள். நாம் மாலை பார்ப்போம் என்று அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு ஸ்ரீயை பார்த்தான்.

என்ன ஆச்சு அர்ஜூன்? என்று கண்ணை கொஞ்சம் கொஞ்சமாக திறக்க,நீ அக்காவுடன் சென்று விடு என்று விறுவிறுவென நடந்தான் அர்ஜூன்.

அவனுக்கு சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அகில் பேசியதே ஒலித்தது.

அக்கா,அவனுக்கு என்ன ஆச்சு?கேட்டாள்.

இருவரும் பேசினார்கள்.பின் அனுவுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு ஸ்ரீயை தாரிகா வீட்டிற்கு முன்பே விட்டு சென்றார் வினிதா.

கல்லூரிக்கு சென்ற அர்ச்சுவை பார்த்து, என்னடா வேகமாகவே வந்தது போல் தெரிகிறது?ஸ்ரீயை வீட்டில் விட்டாயா?இல்லையா? கவின் கேட்டான்.

அர்ஜூன் அசையாது அதே நினைவில் இருக்கவே, டேய் என்னடா ஆயிற்று? நித்தி அவனை உலுக்கினாள்.

இவ்வுலகம் வந்த அர்ஜூன் என்ன? கேட்டான்.

எந்த நினைவில் இருக்கிறாய்? எத்தனை பிரச்சனைகள் தலையை சிலுப்பினாள் யாசு.

தாரிகா அனைவரிடமும் கோவிலில் நடந்ததை கூறி இருப்பாள்.போதை மருந்தெல்லாம்மா அபி கேட்டான் அர்ஜூனிடம்.

சுயம் வந்தவன் ஹே…இங்கே வைத்து எதையும் பேசாதீர்கள் என்ற அர்ஜூன்  நிவாஸை பார்த்து, ஜிதின் வந்து விட்டானா? என்று கேட்டான்.

ம்ம்ம்.அங்கே பார் என்று சைகை செய்தான் நிவாஸ்.ஜிதின் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு,ஏன்டா காலையிலே இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? கேட்டார்கள்.

அர்ஜூன் வேகமாக அவனருகே செல்ல, அதற்கு முன் அவர்களது வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பொண்ணு மகிழினி அங்கே வந்து,அவனது நண்பர்களை விலக்கி விட்டு ஜிதினை இழுத்துக் கொண்டு தனியே சென்றாள்.

அர்ஜூன் நிவாஸை பார்த்தான்.மகிழ்..நீயும் இங்கேயா? முணங்கிய நிவாஸ் அவர்களை பின் தொடர அர்ஜூனும் நண்பர்களும் வந்தனர்.

ஏன்டா,தேவையில்லாத வேலையெல்லாம் செய்கிறாய்? நீ என்ன செய்தாலும் எதுவும் மாறப் போறதில்லை.தயவுசெய்து இப்போதாவது இங்கிருந்து சென்று விடு என்று அவனது வாயை திறக்க வைத்து எதையோ உள்ளே போட்டாள். என்னோட அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து வந்தேன். விழுங்கு, கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று ஜிதின் அருகே அமர்ந்தாள்.

நான் எப்படி இருவரையும் தனியே விட்டு செல்வது?ஸ்ரீயை விட்டு என்னால் செல்ல முடியாது என்றான் ஜிதின்.

காதல் தானே காரணம் என்று அவள் முறைத்தாள்.

அது மட்டுமல்ல என்றான்.

என்னமோ போ.ஆனால் உங்கள் மூவரையும் வைத்து அந்த மூதேவி நன்றாக ப்ளே பண்றாள்.உங்களுக்கு புரியவில்லை..அவளுக்கு நீங்கள்,ஒரே கல்லில் மூன்று காய் என்பது தான்.

உன் காதலை வைத்து,உன்னிடமும் ஸ்ரீயிடமும் விளையாடுகிறாள்.நிவாஸை வைத்து உங்கள் இருவரையும் மிரட்டுகிறாள்.ஆனால் ஸ்ரீயிடம் நிவாஸையும், உன் காதலையும் பயன்படுத்துகிறாள்.

உங்களை விட ஸ்ரீ நிலை தான் அதி பயங்கரம்.அந்த சீரியசான விசயம் தெரியாமல் இந்த அகில் கேங்க் வேற,பாவம் அவள் ஒரு பொண்ணா அவ நிலையில் நான் இருந்தால் உயிரோட இருந்திருக்க மாட்டேன். உனக்கு தெரியாமலே அவளை..என்று வாயை பொத்திய மகிழ் வேகமாக எழுந்தாள்.

என்ன சொன்ன? எனக்கு தெரியாம, அவளை என்ன செஞ்சாங்க? ஜிதின் கேட்டான். அவள் வாயில் கையை வைத்தவாறு பின்னே சென்றாள். அவளுக்கு பின் மற்றவர்கள் வந்தனர். நேராக நிவாஸ் அவள் முன் வந்து,அவளை என்ன செஞ்சாங்க சொல்லு?மகிழை பிடித்து உலுக்கினான்.

நான் சொல்ல மாட்டேன் அவள் அழ,அகில் அவளருகே வந்து சொல்லப்போகிறாயா? இல்லையா? அவளது கழுத்தை பிடித்தான் கோபமாக.

அவளை விடுடா ஜிதின் அருகே வந்தான். அதற்குள் நண்பர்கள் அவனை பிடித்து இழுத்தனர்.

தயவு செய்து சொல் யாசு கேட்டாள்.

ப்ளீஸ் என்னிடம் அதை மட்டும் கேட்காதீர்கள். தேவையில்லாமல் நீங்கள் அனைவரும் அவளது பிடிக்குள் வந்து விட்டீர்கள்.

உங்களிடம் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன்.தயவு செய்து ஸ்ரீ மட்டும் அந்த வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் அவளை பார்ப்பது மிகவும் கடினம்.எனக்கு தெரிந்து அவளுக்கும் நடந்தது இன்னும் தெரியாது.தெரிந்தால் ஜிதின் நீயும் உடைந்து விடுவாய்.உன் காதலும் தூளாகிப் போகும்.

எங்களுடன் சேர்ந்து உன்னால் உதவ முடியுமா? நீயும் அங்கே செல்வாய் தானே! அர்ஜூன் கேட்டான்.

என்னால் முடியாது.ஜிதின், நிவாஸை கூட அந்த பாதகி விட்டுவிடுவாள். ஆனால் ஸ்ரீயை விடவே மாட்டாள்.அவளை உயிரோட விடுவது கஷ்டம் தான்.

ஜிதின் இன்று மாலை நான் வீட்டிற்கு வருவேன்.தயவு செய்து எதையும் சாப்பிட்டு தொலைக்காதே!நான் அம்மாவுக்கு தெரியாமல் சாப்பாட்டை மாற்றி எடுத்து வருகிறேன் உன் அறைக்கு.அதுவரை நீ வெளியே வரக் கூடாது என்றாள்.

ப்ளீஸ் சொல்லு மகிழ்.

நோ..என்னை கொன்றாலும் கூற முடியாது என்றாள்.

இவளிடம் எதையும் வாங்க முடியாது புரிந்து கொண்டான் அர்ஜூன்.

நிவாஸ் அவளை விடாது,எனக்கு ஒன்று மட்டும் கூறு.அவர்களை அழிக்க வழி ஏதும் உள்ளதா? கேட்டான்.ஸ்ரீ அவளிடம் கஷ்டப்பட காரணமே அவளோட அம்மா..என்று அடிக்கடி அவள் கூறி கேட்டிருக்கிறேன்.

அம்மாவா? யோசித்தான் கவின்.என்னவாக இருக்கும்?குறிப்பிட்டு அம்மாவை எதற்கு கூறி இருக்கிறாள் கவின் கேட்டான்.

அர்ஜூன் அகிலை பார்த்து,அம்மாவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாமே என்றான்.

இல்லை.அம்மாவிடம் வேண்டாம்.ஏற்கனவே அம்மா அப்பாவை நினைத்து உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் ஸ்ரீ பற்றியும், அங்கிள் ஆன்ட்டி இறந்தது தெரிந்தால் உடைந்து விடுவார்.ப்ளீஸ்டா..வேற ஏதாவது செய்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றான் அகில்.

சரிடா பார்ப்போம்.வகுப்பிற்கு நேரமாகி விட்டது.வாருங்கள் செல்லலாம் என்று அனைவரும் கிளம்பினார்கள்.

” நிறைவேறா ஆசை எனக்கு

நிறைவேறும் எண்ணமுண்டு

  என் காதலின் சாட்சி

உன் நெற்றி  பொட்டால்

உறுதியானது பலமானது வளர்கிறது

 இறைவனின் கிருபையால்

நாம் இணைந்த ஓர் உணர்வு

 நடக்குமா என்னாசை?

என் கனவு? என் உறவு?

 என்றும் நீ தானடி…!”