ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் மதிய வணக்கம்.

உங்களுக்கான இன்றைய எபிசோடு 54..

தாரிகாவும் ஸ்ரீயும் அறையினுள் இருக்க,அம்மா அர்ச்சு அருகே வந்தார்.

எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது.நன்றாக சிந்தித்து செயல்படு என்றார் அம்மா.

பயப்படாதீங்கம்மா! நான் இருக்கேன் என்றான் அர்ஜூன்.

உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று தான் பயமாக உள்ளது.

அம்மா அவரை பிடித்து, அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று விட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

உறங்கி எழுந்த ஸ்ரீ, கண்ணாடியில் அவள் கன்னத்தை வருடியவாறு சிரித்துக் கொண்டு நின்றாள். உள்ளே வந்த தாரிகா அவளை பார்த்து,

என்ன ஸ்ரீ,அர்ச்சு அண்ணா நினைவாக உள்ளதா? லவ் பண்றியா? கேட்டாள்.

திடுக்கிட்ட ஸ்ரீ,திடீரென முன் வந்து பயமுறுத்தாதே! எனக்கு லவ் இல்லை.ஆனால் என்னை பசங்க யாரும் இதுவரை அடித்தது போல் இல்லை. அவன் மட்டும் தான் அடித்திருக்கிறான் என்று நினைக்கிறேன். ஏதோ புதிதாக இருந்தது என்றாள்.

இதை நான் நம்பணுமா? தாரிகா கேட்டாள்.

நம்புனா நம்பு இல்லாட்டி போ. நான் யாரையும் காதலிக்கும் நிலையில் இல்லை என்றாள் ஸ்ரீ.

ம்ம் என்று தாரிகா வெளியே வர, அம்மா மோகனை அடைத்து வைத்திருந்த வீட்டில் முன் இருந்த மர இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவர்களிடம் சென்று, அம்மா உள்ளே வாங்க என்று சொன்ன தாரிகா அம்மாவை பார்த்து அதிர்ந்தாள்.

எதற்குமா அழுகிறீர்கள்? கேட்டாள்.

தன் முந்தானையால் கண்ணை துடைத்தவர். நம் யாழு மாதிரி அர்ஜூனும் நம்மை விட்டு போயிடுவானோ! என்று பயமாக உள்ளது.அவனையும் ஸ்ரீயையும் நினைத்து பயமாக உள்ளதும்மா.அவன் என்னவெல்லாம் செய்கிறான் பாரேன்.அந்த பொம்பளைக்கு என்ன தான் வேண்டுமென்று தெரியவில்லை.எத்தனை பேரை தான் கொல்வாள்.ஒரு பெண் தன் குழந்தையை கொல்ல முடியுமா? புலம்பினார்.

அம்மா, அவனுக்கு பலமாக ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.அவன் நினைச்சதை நல்ல படியா முடிக்கணும்.

ஏம்மா,நீ உன்னோட புருசனை ஏன்மா இன்னும் விவாகரத்து செய்யாமல் இருக்க?கேட்டாள் தாரிகா.

அவர் என்ன பொருளாடி?வாங்க..விக்க..அவர் மனுசன்டி.

அவர் உங்களை போல் நினைத்திருந்தால் நம்மை இப்படி கஷ்டப்படுத்துவாரா? அவருக்கு குடும்பம் முக்கியமில்லையாம்மா? என்று சிறு பிள்ளை போல் வினவினாள். நேற்று அந்த குமாரன் செய்ததில் சீனியர் என் காதலை மறுத்து விடுவாரோ? ஏதாவது கூறி விடுவாரோ? என்று பயமாக இருந்ததும்மா.ஆனால் அவர் என்னிடம் அந்த பொறுக்கி பக்கத்தில் கூட செல்லாதே என்று கோபம் கொண்டார்.எனக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

அம்மா முகத்தில் புன்னகை அரும்ப,என்னுடைய பெற்றோர்கள் தான் தவறான இணையை எனக்கு தேர்ந்தெடுத்து விட்டார்கள்.நீ தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும் என்று கவின் மாப்பிள்ளையை பார்த்தாலே தெரிகிறது என்றார்.

 போங்கம்மா..என்று வெட்கத்துடன் அவள் கூறிக் கொண்டிருக்க அர்ஜூன் அங்கே வந்தான்.

அம்மாவும் பிள்ளையும்,என்னை விட்டு என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? கேட்ட படியே அம்மா அருகே வந்து அமர்ந்தான் அர்ஜூன்.

ஒன்றுமில்லை.அவள் அப்பாவை பற்றி தான்.அவன் அந்த வீட்டை திரும்பி நோக்கினான். தாரிகாவிற்கு அவன் கடத்தியது தெரியும்.ஆனால் அவர் பக்கத்தில் தான் இருக்கிறார் என்று தெரியவில்லை.

அவர் முழுதாக மோசமானவர் இல்லை.அவருக்கு பணம் தான் எல்லாமே. அதற்காக காதலித்த பெண்ணையே விட்டுட்டு வந்துட்டார்.நான் எல்லாம் எம்மாத்திரம்.

அம்மா, அவருடைய காதலியை பற்றி கூறி இருக்கிறாரா? அர்ஜூன் கேட்டான்.

சொல்வார்.விவரமெல்லாம் தெரியாது.இருவரும் அதிகப்படியான காதல் தான் போலும் என்றார் வருத்தமுடன்.

உனக்கு கோபம் வரவில்லையாம்மா? தாரிகா வினவினாள்.

நான் என்ன செய்வது? அவர் சொல்வதை கேட்க தான் முடிந்தது.எனக்கும் ஆசைதான் அவர் மீது.அவருக்கு தான் கடைசி வரை புரியவே இல்லை.

சரி விடு.வாங்க போகலாம் என்று எழுந்தார்.

ஒருவேளை அவர் தவறை புரிந்து வரும் போது அவருடைய காதலியை அவர் சந்திக்க நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நான் என்ன செய்வேன்? அவர்கள் சேர்ந்து இருக்கட்டும் என்று விட்டு விடுவேன்.

அம்மா..உங்களுக்கும் அவரை பிடிக்கும் தானே!

ஒருதலை காதல் எங்கும் எதையும் விட்டுக் கொடுப்பது தான் இன்றைய நியதி. என்ன அர்ஜூன் சரியா? அம்மா கேட்கவும் அவன் முகம் வாடியது.

எனக்கு புரியுதுடா.என்னோடதும் உன்னுடையதும் ஒன்றல்ல.நீ முயற்சி செய்டா.

என்னத்த முயற்சி? நான் வந்ததே அவள் பாதுகாப்பிற்காக மட்டும் தான்..வருத்தமாக கூறினான்.

ம்ம்..சரி தான். காதல் என்றால் அது தானே! ஊர் சுற்றுவது,காமம் மட்டுமல்ல காதல்.அதை விட பெரியது நம்முடையவர்களின் பாதுகாப்பு. அதை தானே நீ ஸ்ரீக்கு கொடுக்கிறாய்?இதை விட பெரிய காதல் ஏதுமுண்டா? என்ன?

உன் காதல் சரியானது.உயிரோட்டமுடையது.அவள் அதை புரிந்து கொண்டால் அவளே உன்னை தேடி வருவாள்.என்னை பொறுத்தவரை  காதல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.அம்மா அப்பாவிற்கு அடுத்து திருமணம் செய்ய போறவரிடம் கிடைப்பது தான் பாதுகாப்பு என்றார்.

அம்மா சூப்பரா சொன்னீங்க! தாரிகா கை தட்டினாள்.

அவளாவது என்னிடம் வரதாவது? என்று அலுத்துக் கொண்டான். அப்பொழுது அங்கே வந்த பெண்மணி,

என்னடி.நம்ம பொண்ணுக்கு யாரோ ஒரு பையன் முத்தம் கொடுக்கிறான்.நீ வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாய்? கேட்டார்.

யாரோ இல்லைடி.எங்க வீட்டு மாப்பிள்ளைடி.

அடியேய் என்னடி சொல்ற? விசாரிச்சியா? அவர் கேட்க,

நேத்து ஒரு பொறுக்கி வந்து எங்களை கஷ்டப்படுத்தும் போது, யாருடி வந்தீங்க?அந்த பையன் தானே வந்தார்.அவர் டாக்டருக்கு படிக்க போகிறார் போடி..போ..என்னோட பொண்ணை அவர் பத்திரமா பாத்துக்கிடுவாரு.நீங்க கவலைப்பட வேண்டாமடியோ என்றார் தாரிகா அம்மா.

நல்லதுக்கு சொன்னா என்னமா கோபப்படுறவ?படிக்க தானே போறாரு.

டாக்டர் ஆகலையே என்றார்.

அவர் என்னவா வேணுமானாலும் ஆகட்டும்.அவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை.என் தாருக்கு பிடித்திருக்கிறது.அது போதும் என்றார் அவர்.

அந்த பெண்மணி அங்கிருந்து சென்று விட்டார். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மோகன் கண்ணில் நீர் சொட்டியது..

ஏம்மா, இதுகளுக்கு வேற வேலையே இருக்காது போலம்மா தாரிகா கூற, அம்மா அவளது தலையை வருடியவாறு இரவு சாப்பிட அவரை அழைத்து வாம்மா என்றார்.

அர்ஜூன் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் ஸ்ரீயே அடித்ததை நினைத்துக் கொண்டிருந்தான்.மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.

ஸ்ரீ சோபாவில் சாய்ந்தவாறு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.”மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே” என்ற காதல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பாட்டை முணங்கியவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.அவளருகே வந்த தாரிகா,

என்ன ஸ்ரீ லவ் சாங்கா? பின்னிருந்து அவள் கேட்க,நான் தான் அப்பொழுதே கூறினேனே! எனக்கு லவ் பண்ண நேரமெல்லாம் இல்லை தாரி திரும்பி பாராது பேசினாள். எனக்கு அப்பொழுதிலிருந்தே நிவியை பார்க்க வேண்டும் போல் உள்ளது என்றாள்.பின்னாடி என்ன தான் செய்கிறாய்?ஸ்ரீ திரும்பி பார்க்க, அர்ஜூன் போனை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். தாரிகாவை காணவில்லை.

அடக் கொடுமையே..!இவளை..என்று சுற்றி சுற்றி தேடினாள். அர்ஜூன் போனை பார்த்தவாறு கையை காட்ட, அறைக்கு சென்று,என்னை பைத்தியம் மாதிரி பேச வைக்கிறாயே என்று தாரிகாவிடம் கேட்க, அவள் ஸ்ரீயை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

சிரித்தது போதும்.தயாரா? என்று அர்ஜூன் தாரிகாவிடம் கேட்டான்..

தாரி,நீங்கள் முன்னே செல்லுங்கள்.வருகிறேன் என்றாள் ஸ்ரீ.

தனியே வேண்டாம்.நாங்கள் காத்திருக்கிறோம் என்றான் அர்ஜூன்.

ஸ்ரீக்கு கோபம் வந்தது.நீ என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?.நீ எதற்காக கூறுகிறாய்? என்று புரிகிறது.ஆனால் என்னால் முடியவில்லை. அந்த வீட்டில் உள்ள போது தான் மூச்சு விட முடியாதது போல் இருந்தது.

இப்பொழுது தான் என்னால் சுதந்திரமாக இருக்க முடிகிறது.நீ என்னை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறாய் என்று கத்தினாள்.

அங்கே நிசப்தம் நிலவ, அர்ஜூன் நான் வந்துட்டேன்.எதற்காக என்னை அழைத்தாய்? கேட்டான் நிவாஸ்.

ஸ்ரீ தான் உன்னை பார்க்க நினைத்தாள்.அதற்குள்ளா? இப்பொழுது தானே பேசினேன் என்று அவளை பார்த்தான்.

அர்ஜூன்..அவள் பேச தொடங்க,அடித்ததற்கு சாரி.வா தாரு.நாம் கிளம்பலாம் கோவிலுக்கு என்றான் அர்ஜூன்.

ஸ்ரீ அவன் முன் வந்து,நான் பேசியது தவறு. நானும் சாரி.

அவன் ஏதும் கூறாமல் வெளியேற, ஸ்ரீ…நீ என்ன செஞ்ச? நிவாஸ் கேட்டான்.

எனக்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் போல் இருந்தது நடந்து  என்று சத்தமாக சொன்னாள்.அர்ஜூன் ஒரு நிமிடம் நின்றவன் தொடர்ந்து நடந்தான்.தாரிகா ஸ்ரீயை முறைத்து விட்டு அர்ச்சுவுடன் செல்ல,

ஸ்ரீ இருவரையும் பார்த்தவாறு உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றாள் பாவமுடன்.

தாரிகா ஸ்ரீயை திரும்பி பார்த்து, சிரிப்பை அடக்கிக் கொண்டு,நீ மட்டும் எப்படி மூஞ்சியை அவ்வப்போது மாற்றுகிறாய்?

அர்ஜூன் அவளை திரும்பி பார்த்து சிறு புன்னகையுடன் வா.நாளை அதிகாலையில் வெளியே செல்லலாம் என்றான். ஸ்ரீயும் நிவாசும் அங்கே வந்தனர்.

அச்சோ..நால்வராக எப்படி பைக்கில் செல்வது? சிந்திக்க கவின் அங்கே வந்தான்.

ஹாய் என்று கவின் இறங்க, அவனை நிறுத்தி, பை மா அவனது பைக்கில் தாரிகா ஏறினாள்.

ஏய், நான் பேசி விட்டு வருகிறேன்.

அதெல்லாம் வேண்டாம்.இரவு பேசிக் கொள்ளலாம் என்றாள்.

அம்மாவிடம் வந்த அர்ஜூன்,நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொன்னான்.

குடும்பத்தை எப்படிப்பா ஓட்டுவது? கேட்டார் அம்மா.

என்னிடம் நிறைய விலைமதிப்புள்ள புகைப்படங்கள் உள்ளது.மாலை வரும் முன் அதை விற்று கொண்டு வருகிறேன் என்றான் அர்ஜூன்.

வேண்டாம் பா.

அன்று நீங்கள் கூறியது வெறும் வார்த்தை தானா? அம்மா கேட்டான்.

சரிப்பா, ஏதாவது செய் என்றார். அனைவரும் கிளம்பினார்கள்.

” கானகத்து கோட்டையிலே

விழியெங்கும் இருளே

  தொலை தூர வெளிச்ச

 மொன்று மின்ன

 அண்மையில் செல்ல முடியாது

      ஓநாய் கூட்டம்

       வழி மறித்து

 பிடித்துக் கொண்டது

 மூச்சடங்கி நின்றோமே

 எங்கு செல்வோமோ?

  எப்படி செல்வோமோ?”