வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-53
202
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
உங்களுக்கான எபிசோடு 53.
இதோ..வாசித்து மகிழுங்கள்.
கதிரவன் தன் சுடரொளியால் மக்களை எழுப்ப, அர்ஜூன் எழுந்தான்.
அவனுக்கு நேற்றைய நாள் தாரிகா கூறியது.அகில் அவனை அழைத்தது. அனைத்தும் அவனுக்கு நினைவிற்கு வர,தலையை பிடித்து அமர்ந்திருந்தான்.
ஹேய்,கதவை திறங்கடி யாராவது? நேரமாகிறது அம்மா தாரிகா அறை தட்டிக் கொண்டிருந்தான். அர்ஜூன் முகம் கழுவி வெளியே வந்தான்.தாரிகா அறையிலிருந்து ஸ்ரீ வெளியே வந்தாள்.குளித்து ஆடை மாற்றி எங்கோ செல்வது போல் தயாராகி வந்தாள்.
ஐந்தே நிமிடம் தான்.நீ வந்தாலும் வராவிட்டாலும் கிளம்பி விடுவேன் என்று விட்டு கோவிலுக்கு மா..என்றாள்.அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.
என்னம்மா திடீரென்று? அம்மா கேட்டார்.
தோன்றியதும்மா..என்றாள்.
அம்மா டீ எடுத்து அர்ஜூனிற்கும் ஸ்ரீக்கும் கொடுக்க, குடித்து விட்டு,அவளிடம் கூறி விடுங்கள் அம்மா நான் கிளம்புகிறேன் என்றாள்.
யாருடன் செல்கிறாய்? அர்ஜூன் கேட்டான்.
யாருடன் செல்வது? நானாக தான் செல்வேன்.
தனியே செல்லக் கூடாது என்று நேற்று தானே கூறினேன்.
நானே பார்த்துக் கொள்வேன்.
உனக்கு புரியவில்லையா? நீ கொஞ்ச நேரம் காத்திரு.நான் கிளம்பி வருகிறேன் என்றான்.
உன்னுடைய உதவி எனக்கு ஒன்றும் தேவையில்லை கோபப்பட்டாள் ஸ்ரீ.
உனக்கு என்ன பிரச்சனை? என்று கத்தினான்.
அம்மா அங்கே வந்தார்.எதுக்குடா சண்டை போடுறீங்க?
அம்மா வருகிறேன் என்று வேகமாக வெளியேறினாள் ஸ்ரீ.
நில்லுன்னு சொல்றேன்ல.அவன் ஸ்ரீ பின்னே செல்ல, அதற்குள் அவள் ஓடி விட்டாள் இருந்தும் ஸ்ரீயை பின் தொடர்ந்தான் அர்ஜூன்.
அவன் வருவதை கவனித்த ஸ்ரீ மறைந்து நின்று அவனை பார்த்தாள். சோ..க்யூட் டா..கண்ணாமூச்சி விளையாடி வெகு நாட்களாகிறது என்று அவனை கவனித்தான்.
அர்ச்சு கோபமுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான். அவன் தள்ளி சென்றவுடன் வெளியே வந்தாள் ஸ்ரீ.நடக்க ஆரம்பித்தாள் அர்ச்சுவின் செய்கையை நினைத்து சிரித்துக் கொண்டே.அவள் முன் ஐவர் வந்தனர்.
ஹே பேபி,இங்கே வா..என்று அழைத்தான் ஒருவன்.
ஸ்ரீ அங்கேயே நின்றாள். இரவு பகுதி வேலை முடித்து வந்தவர்கள் போல தெரிந்தனர்.
மற்றொருவன் ஸ்ரீ அருகே வந்து, அவளது கையை பிடித்தான்.
ச்சீ..என்று உதறியவளை பார்த்து,
ச்சீயா? என்று அவளருகே வர, அவள் ஓட ஆரம்பித்தாள்.
ஏய், நில்லு..நில்லு..எங்களுக்கு மிகவும் சோர்வாக உள்ளது.கம்பெனி கொடு.அனைவரும் அவளை விரட்டினர்.
அவளை தேடிக் கொண்டிருந்த அர்ச்சு மீது மோதி நின்றாள் மூச்சிறைக்க பின் தான் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அர்ஜூன் என்றாள்.
அர்ஜூன் அவளையும் பின் வந்தவர்களையும் பார்த்தான். அவர்களை அவன் முறைத்தான்.
தம்பி வழிய விடு.அந்த பாப்பா கூட நாங்க ஃபன் பண்ணப் போறோம் என்றனர்.
அண்ணா, நீங்க..ஃபன் பண்ண வேற யாரையாவது பார்த்துக்கோங்க.இவள் என்னுடையவள் என்று ஸ்ரீ தோளில் கையை போட்டான்.அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளை முறைத்தான்.
என்ன தம்பி சொல்றீங்க? நீங்களும் வாங்க என்றான்.
அர்ஜூன் கேளாதவன் போல் ஸ்ரீயை இழுத்து செல்ல, அவர்கள் அவன் முன் வந்து நின்றனர்.
உங்களால் போக முடியாது தம்பி என்றான் ஒருவன்.
முடியும் என்றான் அர்ஜூன்.
நான் தான் சொல்றேன்ல தம்பி ஒருவன் அர்ச்சு அருகே வர, ஸ்ரீயை கையில் பிடித்ததை விடாமல் அவனை ஓங்கி உதைத்தான் அர்ச்சு. அவன் தள்ளி சென்று கீழே விழுந்தான். மற்றவர்கள் சோர்வாக இருப்பதால்,
வாங்கடா, நாம..போயிடலாம் என்று ஓடி விட, அர்ஜூன் ஸ்ரீயின் கையை அழுத்தமாக பற்றி தரதரவென வீட்டிற்கு இழுத்துச் சென்றான்.
அர்ஜூன், விடுடா..கை வலிக்குது.ப்ளீஸ் விடுடா என்று ஸ்ரீ கெஞ்சியும் விட வில்லை அர்ச்சு. வீட்டிற்கு அவன் வந்ததும், தாரிகாவும் அம்மாவும் வந்தனர்.
என்னை விடு..அர்ஜூன் கத்தினாள்.
உங்க சண்ட இன்னுமா முடியல?கேட்டார் அம்மா..
அம்மா அவளை தனியே செல்ல வேண்டாம் என்று கூறினேன்ல என்று நடந்ததை கூறி அவளை திட்டினான்.
மணி ஏழு கூட ஆகவில்லை.அதற்குள் என்ன கோவிலுக்கு? அதுவும் தனியே.யார் எங்கு செல்வதானாலும் என்னை கூப்பிடுங்கள் என்றான்.
உன்னிடம் சொல்லி எல்லாவற்றையும் செய்ய,நான் என்ன உன்னோட பொண்டாட்டியா? கேட்டு விட்டாள் ஸ்ரீ.
யோசிக்காது அவளை அறைந்தவன்.எதையும் யோசிச்சு பேசு,செய்.கொஞ்சம் விட்டால் பேசிக் கொண்டே போற? மேலும் சீறினான் அர்ஜூன்.
ஸ்ரீ கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருக்க, அவளது போன் ஒலித்தது. அவள் போனை எடுக்க, பட்டென அர்ஜூன் அதை பிடுங்கினான்.
அதை குடுடா..குடு..அவனுடன் மல்லுக்கு நின்றாள் ஸ்ரீ.
நீ ஏதோ வேலை செய்கிறாய் என்று ஏற்கனவே நினைத்து தான் பின் தொடர்ந்தேன் என்று தாரிகாவிடம் கண் காட்ட. அவள் ஸ்ரீயை பிடித்துக் கொண்டாள்.
போனை ஸ்பீக்கரில் போட்டான் அர்ஜூன்.
ஸ்ரீ நீ எங்கே இருக்கிறாய்? ஜிதின் போனில் பேசினான். ஸ்ரீ ஓடி வந்து போனை அணைத்தாள். அனைவரும் அவளை முறைக்க,
யாருமா? அந்த பையன்? அம்மா கேட்டார்.
மேடமோட பியான்சே என்றான் அர்ஜூன் ஏளனமாக.
ஸ்ரீ எதற்கு அவனை சந்திக்க நினைத்தாய்?தாரிகா கேட்டாள்.அவள் அமைதியாக நின்றாள்.
அர்ஜூன் அவளருகே வந்து,உனக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லை தானே!
நம்பிக்கை இருக்கிறது. நான் அதற்கு அவனை சந்திக்க நினைக்கவில்லை. அர்ச்சுவை பார்த்து, நிவியால் தனியே எதையும் கண்காணிக்க முடியாது. ஜிதின் உதவினால்,வேகமாக அறிந்து கொள்ளலாம் என்றாள்.
உனக்கென்ன பைத்தியமா?ஸ்ரீ. அவனை உதவிக்கு கூப்பிடுவதாக கூறுகிறாய்? திட்டினான் அர்ச்சு.
அவனை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.அவனுக்கு ஆதிக்கு பின் என்னை தான் பிடிக்கும்.எனக்காக அவன் உதவி செய்வான் என்றாள் உறுதியாக.
ஆதி..அவனை பற்றி ஸ்ரீ தொடங்க..எனக்கு தெரியும்.நிவி கூறினான் அர்ச்சு சொன்னான்.அவள் கண்கலங்க நின்றாள்.
எனக்காக எதையும் அவன் செய்வான் என்ற வார்த்தை அர்ச்சு மனதை வாட்டியது.வெளியே காட்டிக் கொள்ளாமல்,அவன் மீது அவ்வளவு நம்பிக்கை என்றால் ஏன் ஹாஸ்பிடலில் அவனிடம் கோபப்பட்டாய்? கேட்டான் அர்ஜூன்.
அது அவன் காதலால்..காதலால்..என்று மீண்டும் சோர்வானாள்.ப்ளீஸ் நான் என் அறைக்கு செல்கிறேனே அம்மா என்றாள் அயர்வுடன்.
போம்மா.தனியே வெளியே செல்லாதே! என்றார்.
நான் வீட்டிற்கு சென்று ரெடியாகி வருகிறேன்.மூவரும் சேர்ந்தே கோவிலுக்கு செல்வோம் என்றான்.
நான் அவனிடம் பேச வேண்டும் என்றாள்.
எனக்கு சீனியர் மீது நம்பிக்கை இல்லை என்றாள் தாரிகா. நான் நிரூபிக்கிறேன் என்று ஜிதினுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் ஸ்ரீ..
அவன் எடுத்ததும் கொஞ்சம் வேலையாக உள்ளேன். நான் ஒன்பது மணிக்கு வருகிறேனே! என்றாள்.
ஓ.கே ஸ்ரீ.நான் வீட்டிற்கு செல்கிறேன்..நீ கிளம்பியவுடன் கூறு.உன்னிடம் முக்கியமான விசயத்தை பற்றி பேச வேண்டும் என்றான்.
எனக்கு உதவ நீ உன் அம்மாவை எதிர்த்து நிற்பாயா? கேட்டாள் ஸ்ரீ.
என்ன ஸ்ரீ சந்தேகமாக?கண்டிப்பாக இருப்பேன்.என் ஆதியை கொன்றவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டேன்.என்னுயிர் உள்ளவரை என்னால் முடிந்தளவு உனக்கு உதவுவேன். அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான்.
நான் சொல்வதை கேளு ஸ்ரீ. நிவியை சாப்பாடு நம் வீட்டில் சாப்பிட வேண்டாம் என்று கூறு.என்னால் அவனிடம் பேச முடியாது.அவர்களுக்கு சந்தேகம் வந்து விடும்.மறக்காமல் சொல்லி விடு.
எதுவும் பிரச்சனையா? கேட்க,
ஆம்.ஆனால் இனி ஏதாவது காரணம் கூறி சாப்பாட்டை தவிர்ப்பானோ இல்லை அவன் சாப்பிடுவது போல் நடித்தோ ஆக வேண்டும்.சொல்லி விடு.மீதியை கோவிலில் வைத்து பேசிக் கொள்ளலாம் என்று போனை துண்டித்தான்.
இப்பொழுது என்ன கூறுகிறீர்கள்? ஸ்ரீ கேட்டாள்.
ஆதியை அவனது அம்மாவே கொன்றாளா? ஸ்ரீயிடம் அர்ஜூன் வினவினான்.
என்னடா சொல்ற? பெத்த பிள்ளையை எவளாது கொல்வாளா? தாரிகா அம்மா கேட்டார்.
ஸ்ரீ கண்கள் நீரை சுரக்க,அவனுக்கு அவர்களது ஏதோ விசயம் தெரிந்ததை அறிந்து கொண்டனர்.என்னவென்று தெரியவில்லை.அவன் சின்ன பையன் அம்மா.அவனுக்கு நான் என்றால் பிடிக்கும்.அவனை கூட அவர்கள் விடவில்லை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா அழுதாள் ஸ்ரீ. அம்மா அவளை அணைத்துக் கொண்டு,அழாதேம்மா! முடிந்ததை மாற்ற முடியாது. வா..அறைக்கு சென்று ஓய்வெடு என்று அவளை அழைத்துச் சென்றார்.
தாரிகாவும் அவர்கள் பின்னே சென்றாள். அர்ச்சு சிந்தித்தபடி அங்கேயே நின்றான்.