என்னடா மச்சான், என் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்? குரல் கேட்க,
டேய், யாருடா நீ? அர்ஜூன் கர்ஜித்தான்.
என்ன? உன்னோட ப்ரெண்டுக்கு எதுவும் ஆகலன்னு சந்தோசமாக இருக்கீங்களா?
யாருன்னு கேட்டேன்.
அதற்குள் என் குரலை மறந்து விட்டாயா? சரி வெளியே வா..பார்க்கலாம் என்றவுடன் அர்ஜூன் வேகமாக வெளியே சென்றான்.மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்தனர்.
தாரிகாவின் முறைப்பையன் குமாரன் அவனது வண்டியில் ஸ்டைலாக உட்கார்ந்திருந்தான்.
நீ வீட்டிற்கே வந்து விட்டாயா? தாரிகாவின் அம்மா கோபமாக அவனருகே வந்து, போடா..போ..என்று கத்திக் கொண்டிருந்தார். அவரை பிடித்து தள்ளி விட்டான். அர்ஜூன் அவரை பிடித்து விட்டு அவனருகே செல்ல, தாரிகா அவனை நகர்த்தி விட்டு,
ஏன்டா உங்களுக்கு என்ன தான் பிரச்சனை இந்த வீடு தானே! நாங்கள் எழுதி தருகிறோம் அவள் அழுதாள்.அவர்கள் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டார்கள் வெளியே வந்தனர்.
அட, என் செல்லமே! எனக்கு வீடு மட்டும் பத்தாதே! நீயும் வேண்டுமே! எனக்கு பொண்டாட்டியாக தான் உனக்கு விருப்பமில்லையே! அவன் பேசுவதை கேட்டவாறு, இருவர் எதிர் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒருவருக்கு ஐம்பது வயதிருக்கும் மற்றவனை கண்ணை கட்டி உள்ளே அழைத்து சென்றார் அவர். இவர்களை பார்த்ததால் அந்த இரு மனிதர்களை யாரும் கவனிக்கவில்லை.
நீ ஒரு நாள் மட்டும் போதும் என்றான் அவன்.
என்னடா சொன்ன? என்று அவனை கன்னத்தில் அறைந்தாள் தாரிகா. சைலேஷ் கார் அங்கே நின்றது.உள்ளிருந்து கவினும் சைலேஷும் இறங்கினார்.
அவள் அறைந்ததில் கோபமானவன் தாரிகாவை பிடித்து இழுத்து, அவளது இதழ்களில் முத்தமிட்டான். அவள் அழுதவாறு அவளது இதழ்களை கைகள் நடுங்க தொட்டாள்.
என்ன? நீ ஒத்துக் கொள்ளவில்லை எனில் நீ காதலிக்கிறாயே? அவன் இப்பொழுது தப்பித்து விட்டான். ஆனால் இனி அவன் செத்துடுவான் என்று தாரிகாவை மிரட்டினான். பின் மீண்டும் அவளது இதழ்களையே அவன் பார்க்க, அவள் வேகமாக அவனை விட்டு விலகினாள் அழுது கொண்டே. அவன் அவளை இழுத்து மீண்டும் இதழ் பதித்தவன் மறந்து விடாதே! என்றான்.
இதை பார்த்து அர்ஜூன்,கவின் இருவரும் அவனருகே வந்தனர். அர்ஜூன் கையை ஓங்குவதற்குள் கவின் அவனது மூக்கை உடைத்து விட்டான். இரத்தம் பொலபொலவென கொட்ட, கவினை பார்த்து தாரிகா கண்களில் கண்ணீருடன் கைகளால் இதழ்களை அழுந்த துடைத்தவாறு அழுது கொண்டே வீட்டை நோக்கி ஓடினாள்.கவின் அவனை தவிர்த்து தாரிகாவிடம்,
ஹே..நில்லு..நில்லு ஓடாதே கத்தினான். கூப்பிடுறேன்ல.. உனக்கு கேட்கலையா? கவின் சினத்துடன் கத்த, அவள் அங்கேயே நின்றாள்.
அவளருகே வந்தவன், என்ன செய்ய போகிறாய்?கேட்டான்.
எனக்கு அருவருப்பாக உள்ளது.அதனால் அவ்விடத்தை காயப்படுத்தப் போகிறேன் அழுது கொண்டே அவள் நகர,
அவளது கையை இறுக்கமாக பற்றியவன்.அவளை இழுத்துக் கொண்டு அனைவர் முன்னிலையிலும் நின்றான்.
சாரி ஆன்ட்டி என்று தாரிகா அம்மாவிடம் கூறியவன்,அவளது இதழ்களில் தன் முத்த மழையை பொழிந்தான். அவளும் அமைதியானாள்.அவளும் அதற்கு இணங்க, அவர்கள் கண்கள் காதலாகி கரைந்தது. இதை பார்த்த அவன்.. ஆட்களை அழைக்க, பக்கத்து வீட்டார் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து,பின் வாங்கினான் குமாரன்.
தாரிகாவை விடுவித்தவன். இப்பொழுது அவன் முத்தம் நினைவில் இருக்குமா? கேட்டான். அவள் இல்லை என்று தரையை பார்த்தவாறு தலையசைத்தாள். பின் அவன் அவளிடம் மெண்டல் மாதிரி எதையும் யோசிக்காதே!என்றான் கோபமாக. அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அனைவரும் நடந்ததில் அதிர்வுடன் இருக்க,
தாரிகா அம்மா முன் வந்த கவின், நாங்கள் காதலிக்கிறோம்.உங்களுக்கு எல்லாமுமாய் இனி நான் இருப்பேன். எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால்..அது உங்கள் மகளுடன் தான் என்றான் தெளிவாக.
நித்தி இடையே வந்து,என்னடா பண்ணீட்ட? சத்தமிட்டாள். என்னை என்ன பண்ண சொல்ற? அவள் என்ன சொன்னான்னு பார்க்க தானே செய்தாய்? அவளை அந்நிலையில் உன்னால் சமாதானப்படுத்த முடியுமா? இங்கே இருக்கும் யாராவது சரி செய்ய முடியும்னு நினைக்கிறியா? அவனும் கத்தினான்.
அதற்காக இப்படி தான் செய்வாயா? அவள் திட்டினாள். எத்தனை பேர் இருக்கிறார்கள். யோசிக்கவே மாட்டாயா? இதில் யோசிக்க என்ன உள்ளது?
என்றாவது ஒரு நாள் நான் தான் அவளை மணமுடிக்க போகிறேன்.முத்தம் தானே கொடுத்தேன்.தவறான எண்ணத்துடன் நான் எதையும் செய்யவில்லை. நீயும் பொண்ணு தானே? எந்த பொறுக்கியாவது உன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டால் உனக்கு எப்படி இருக்கும்?அவன் கேட்க, நித்தி தயங்கினாள்.
அவனை கொன்றிருப்பேன் என்ற பதில் வந்தது சைலேஷிடம்.நீ செய்தது தவறில்லை என்றான் கவினிடம்.
பின் என்ன?அந்த பொறுக்கியை இவ்வளவு நேரம் சும்மா விடலாமா?சைலேஷ் கேட்டான்.
அனைவரும் குமாரன் பக்கம் திரும்ப, தாரிகா சட்டென கவின் கையை பிடித்து வேண்டாம் என்று தலையசைத்தாள்.கவின் தாரிகா அம்மாவை பார்த்தான்.
அவனை விடுங்கள் என்றவர் கவினையே ஆழ்ந்து பார்த்தார்.நீ இப்படி செய்தது சரியில்லை.என்ன செய்ய போகிறாளோ? என்று நான் பயந்து தான் விட்டேன்.
இனி ஆன்ட்டியெல்லாம் வேண்டாம் அத்தை என்றே அழைக்கலாம் அவர் கூறவும், இருவரும் அவர்கள் அருகே வந்தனர்.தாரிகா, அம்மாவை கட்டிக் கொள்ள, மற்றவர்கள் வாழ்த்துக்களைக் கூறினார்கள் இருவருக்கும்.
தாரிகாவின் அம்மா, தாரிகா கவின் இருவரது கையையும் பிடித்துக் கொண்டு குமாரன் அருகே வந்து இருவர் கையையும் சேர்த்து வைத்து விட்டு,
போடா..உன் மாமானிடமும்,அம்மாவிடமும் கூறு தைரியமாக கூறினார்.
சொல்றதா? இனி தான் உங்களுக்கு இருக்குஎன்றான் கவினை முறைத்தவாறு.
அர்ஜூன்,அகில்,அபி முன் வந்து, இனி இவர்கள் இடையே நீ வந்தா செத்தடா மவனே என்றனர்.
பார்க்கலாம் யார் என்று? அவன் கூறி விட்டு அங்கிருந்து சென்றான். மற்றவர்கள் உள்ளே செல்ல சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள் என்று கூறினார் அம்மா.
தாரிகாவும் கவினும் காதலோடு பார்த்துக் கொள்ள, இடையே ஸ்ரீ வந்து தாரிகாவை கட்டிக் கொண்டு,அம்மா சரின்னு சொல்லுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை என்று கூறினாள்.
ஆமா ஸ்ரீ, நானும் பயத்தில் தான் இருந்தேன் என்றாள் தாரிகா.
இனி என்ன கனவில்லாது நேரிலும் டூயட் தானா? ஸ்ரீ கிண்டடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
அர்ஜூன் அனைவரிடமும்,யாரும் இனி தனியாக இருக்க வேண்டாம். பொண்ணுங்க எல்லாரும் பிரச்சனை முடியும் வரை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என்றவன் அம்மா ஓ.கே தானே கேட்டான்.அவரும் சரி என்றார்.
பசங்க எல்லாரும் என் வீட்டில் தங்கலாம்.தேவையான பொருட்களை நாளை சாயங்காலம் எடுத்து வந்து விடுங்கள்.சீக்கிரமே அனைத்தையும் முடிக்கணும் என்றான்.
தாரிகாவின் அம்மா கவினை தனியே அழைத்தார். உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையா? அவன் தான் உன்னுடைய விபத்திற்கு காரணம்.அவன் முன் வேற நாம கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டோம்.இனி என்ன செய்ய போகிறானோ! பயமாக இருக்கிறதே! என்றார்.
அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை,நான் பார்த்துக் கொள்கிறேன்.அவனால் என்னை ஏதும் செய்ய முடியாது.இன்று என் கவனம் முழுவதும் படிப்பை பற்றியே இருந்தது.அதனால் தான் கவனியாமல் இவ்வாறு நடந்து விட்டது.இனி கவனமாக இருப்பேன் என்றான்.
நித்தி அப்பாவுடன் அவனுக்கு உள்ள இணைப்பு பற்றி கூறினான்.
வாழ்த்துக்கள் மருமகனே! என்றார்.
என்ன சொன்னீங்க?
ஏன் உங்களுக்கு கேட்கவில்லையா மருமகனே! என்றவுடன் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
கொஞ்சம் கவனமாகவே இருங்கள் என்றார்.
சரிங்க அத்தை.வாருங்கள் செல்லலாம் என்று இருவரும் உள்ளே வந்தனர்.
பேசியாச்சாம்மா? கேலியுடன் அர்ஜூன் கேட்டான்.
ம்ம்ம்..என்று விட்டு பொண்ணுங்களா,வாங்க சமைக்கலாம்?அம்மா அழைத்தார்.
சமையலா? நாங்களா? நித்தி கேட்க,வாங்க..அழைத்தார்.
நித்திக்கும் யாசுவுக்கும் சாப்பிட மட்டும் தான் தெரியும் கேலி செய்தனர். இருவரும் அவனை பார்த்து முறைத்தனர்.
சைலேஷ் உள்ளே சென்று,ஆன்ட்டி..நான் கிளம்புகிறேன்.நான் ஒருவரை சந்திக்க வேண்டும் என்றான்.
சாப்பிட்டு போங்க தம்பி என்றார்.
அடுத்த முறை வரும் போது சாப்பிடுகிறேன் என்றான்.
அவரும் சரி என்றார்.
நித்தி..என்று தயக்கத்துடன் அழைத்தான்.அவளை பார்த்து போம்மா..பேசிட்டு வா என்றார்.
சரிங்க ஆன்ட்டி என்று இருவரும் கையை கோர்த்து கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தனர்.
அர்ஜூன் அருகே சைலேஷ் வந்து கைரவை வீட்டில் மட்டும் சேர்த்து விடுகிறாயா? உன்னுடன் யாரையாவது அழைத்து செல்.கவனமாக இருங்கள் என்றான்.
ஓ.கே சார்.அவன் சாப்பிடவும் அழைத்து வீட்டில் விடுகிறேன்.
தாத்தாவிடம் நான் கூறிக் கொள்கிறேன்.அவரை தொந்தரவு செய்யாதே! இப்பொழுதைக்கு அவரிடம் எதையும் கூறாதே! என்று கைரவிடம் கூறினான்.
சரிங்க அண்ணா என்றான் அவன்.
நித்தியை அழைத்து வெளியே வந்து அவளை கட்டிக் கொண்டு நான் வருகிறேன்.எத்தனை நாட்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. வீடியோ காலில் தினமும் பேசுவோம்.ஏதும் பிரச்சனை என்றால் முன்னே நிற்காதே! அர்ஜூன்,அகில்..மற்றவர்கள் இருக்கிறார்கள். கவனமாக இரு அவன் பேச பேச..நித்தி கண்களில் நீர் கசிந்தது.அவளது கண்ணீரை துடைத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.அவள் மீண்டும் அவனை கட்டிக் கொண்டாள்.
நாம் எப்படி பார்க்காமல் இருப்பது? கலங்கினாள்.கொஞ்ச நாட்கள் தான். அர்ஜூன் சொன்னது போல் சீக்கிரம் பிரச்சனை முடிந்து விடும் என்று நித்தியை சமாதானப்படுத்தினான். அவள் கண்ணீரை துடைத்து விட்டு, நீங்களும் கவனமாக இருங்கள் என்றாள்.
நேரமாயிற்றும்மா, நான் கிளம்புகிறேன் என்று அவன் கூறினான். மீண்டும் அவனை அணைத்து விட்டு அவளே அவனை திரும்பி கூட பாராமல் உள்ளே சென்றாள் நித்தி. சைலேஷ் அவள் செல்வதையே பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
அனைவரும் இருவரையும் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே வரும் நித்தியை ஸ்ரீ அணைத்து சமாதானப்படுத்தினாள்.
சீனியர் அழாதீர்கள்! சீக்கிரம் சரியாகி விடும்.
எனக்கு இப்பொழுது தான் ரொம்ப பயமாக உள்ளது.எனக்கு மனசே சரியில்லை என்று குளியலறைக்குள் சென்று முகத்தை சரி செய்து வெளியே வந்தாள் நார்மலாக.நேராக சமையலறைக்கு சென்று அம்மாவிடம் கேட்டு அவளும் சமைக்க ஆரம்பித்தாள்.