ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய ரக்சாபந்தன் வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 48..

அர்ஜூனிற்கு போன் வந்தது. அஞ்சனாம்மா தான்.

உடை மாற்ற இவ்வளவு நேரமாடா? கேட்டார்.

அம்மா வந்து விடுகிறோம் என்றான்.மணியை பாரு.ஏழை தாண்டி விட்டது என்றார்.

அம்மா அபி பக்கத்தில் இருக்கிறானா? அர்ஜூன் கேட்டான்.

ம்ம்..என்றார்.அவனிடம் போனை கொடுங்களேன்.

அவர் கொடுத்தவுடன் அபியிடம் பேசி விட்டு தருணிற்கு போன் செய்தான். பின் இன்பாவிற்கு போன் செய்து,

மேம்,நீங்க எங்கே இருக்கிறீர்கள்?

நான் நடனாலயாவில் உள்ளேன் என்றாள்.

அங்கேயா? கேட்டான்.

ஆம், சிறுமிகளுக்கு பரதம் கற்று கொடுப்பேன்.கொஞ்ச நேரத்தில் வகுப்பு முடிந்து விடும்.

ஓ.கே மேம்.அங்கேயே இருங்கள்.அபி தருணுடன் வருவான். அவனுக்கு விசயத்தை கூறுங்கள் என்றான்.

ரொம்ப நேரமாக்கிடாமல் சீக்கிரம் வரச் சொல்லுடா என்றாள்.

சரிங்க மேம். கிளம்பி விட்டார்கள். வந்து விடுவர் என்றான் அர்ஜூன்.

ஓ.கே என்று இருவரும் போனை துண்டித்தனர்.பின் தருணும் அபியும் சந்தித்துக் கொண்டனர். தருணிற்கு இவர்கள் யாரையும் பிடிக்காது.அர்ஜூனை காயப்படுத்தியவர்கள் தானே! அர்ஜூன் மீது அலாதீ பிரியம் தருணிற்கு.

அர்ஜூன் கூறியதால் தான் வந்தேன்.அபி ஏதும் கூறவில்லை. இருவரும் கிளம்பி நடனாலயாவிற்கு வந்தனர்.

அபி இன்பாவிடம் தருணை இரண்டாவது வருடம் இன்பா பிரிவில் உள்ளதாக கூறி அறிமுகப்படுத்தினான். இங்கேயே இருங்கள். வருகிறேன் என்று அவள் நகர தருண் அபியை முறைத்த வண்ணமிருந்தான்.

மேம், இருங்க…நானும் வருகிறேன் என்றான்.அவள் தருணை பார்க்க, அவனை அபியை முறைப்பதை விடுவதாக இல்லை.இருவரையும் பார்த்தவள் வா…என்று அபியை அழைத்துச் சென்றாள்.அபியும் உடன் செல்ல,சிறுமிகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சிறுமிகளை ஒப்படைத்துக் கொண்டிருந்தாள்.

ஒரு சிறுமி மட்டும் யாருமில்லாமல் இருக்க, உன் அண்ணா வர நேரமாகுமா? இன்பா கேட்டாள்.

அண்ணா! வேலை முடிந்து தான் வருவான். எங்களுக்கு தான் வேறு யாருமில்லையே! நான் வேண்டுமானால் கிளம்புகிறேன் மேம் என்றாள் அந்த குட்டி சிறுமி. இன்பா கண்கள் அவளது அண்ணணையே எதிர்பார்த்திருக்க, அபி அந்த பொண்ணை தூக்கிக் கொண்டு,

நீ தனியே செல்லக்கூடாதுடா பாப்பா. அண்ணாவிற்கு வேலை அதிகமாக இருக்கும். முடித்து விட்டு உன்னை தேடி இங்கே தான் வருவார். அதுவரை காத்திருக்கலாம் என்றான்.இன்பா அவனை பார்த்தாள். அந்த குட்டி பெண்ணின் அண்ணன் சிறுவன் தான். அவன் வந்தவுடன்..அண்ணா என்று கட்டிக் கொண்டாள்.இதை பார்த்த அபி, இருவரும் இங்கேயே இருங்கள் என்று அவனது பைக் நோக்கி சென்றான். அவன் கையில் மிகச் சிறிய இரு பொம்மைகள் இருந்தது.பொண்ணு பையன் பொம்மை. அதில் பொண்ணு பொம்மையை சிறுவனுக்கும்,பையன் பொம்மையை குட்டிப் பெண்ணிடம் கொடுத்து, இது உன்னோட அண்ணா, இது உன்னோட பாப்பா என்று கூறினான்.இனி நீங்கள் ஒருவரை ஒருவர் மிஸ் பண்ண மாட்டீங்க என்றான்.

அந்த பையன் உங்களுக்கு அண்ணா? என்று கேட்டான். நான் தான் வளர்ந்து விட்டேனே! எனக்கு தேவைப்படாது.எனக்கு என்னுடைய மாமா கொடுத்தார். நீங்கள் வளர்ந்த பின் உங்களை போல் இருப்பவர்களுக்கு கொடுங்கள் என்றான். இருவரும் நன்றி கூறி விட்டு,அவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றனர். இன்பா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேம்..மேம்..என்று அழைத்தான். அவள் ஏதோ யோசனையில் இருக்க, அவளை தட்டி மேம்.. அழைத்தான்.

ஹம்..என்று அவனை பார்த்தாள். வாருங்கள் செல்லலாம் என்றான்.

உன் மாமா கொடுத்ததை நீ அவர்களுக்கு கொடுத்து விட்டாயே!

எனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை. தனியே இருப்பதால் வருத்தப்படுவேன். அதனால் மாமா எனக்கு சிறு வயதில் வாங்கி கொடுத்தது. மாலை கல்லூரியில் பார்த்தீர்களே பிரதீப் மாமா..என்றான்.

ஜானு நன்றாக நினைவில் உள்ளாள் என்று இன்பா சிரித்தாள்.

இவர்களை பார்த்தால் மாமாவும் ஜானுவும் தான் நினைவில் வந்தார்கள். எங்கள் குடும்பம் பெரியது.மூத்த மாமாவின் பிள்ளைகள் தான் இவர்கள். இரண்டாவது மாமாவும், இரண்டு சித்திகள் இருக்கிறார்கள். அம்மா தான் கடைசி.ஒரு விபத்தில் மூத்த மாமா,அத்தை இறந்து விட்டார்கள்.ஆனால் அதற்கு காரணம் இரண்டாவது மாமா என்று எவரோ கூறி பிரதீப் மாமாவிற்கு தெரிந்து கோபத்தில் தனியே ஜானுவை அழைத்து வந்து விட்டார்.அவர் ஏதும் செய்யவில்லை என்று மற்றவர்கள் நம்புகின்றனர்.என்னுடைய அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான்.அப்பா..மூத்த மாமாவின் நண்பர். அதனால் நாங்களும் தனியாக இருக்கிறோம்.பிரதீப் மாமாவை அப்பா அழைத்தார். அவருக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது.நான் தனியே என் தங்கையை கவனித்துக் கொள்கிறேன் என்று விட்டார். அப்பொழுது பள்ளி தான் படித்துக் கொண்டிருந்தார். அவருடைய அப்பா வீட்டை தவிர வேற எதையும் மாமா ஏற்கவில்லை.

அவர் பள்ளி முடிந்து கிடைக்கும் வேலை செய்து ஜானுவை பார்த்துக் கொள்வார்.இதே போல் தான் ஒரு முறை அண்ணா இன்னும் காணோம் என்று தேடி எங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடி விட்டாள் ஜானு. அவளை தேடி கிடைக்கவில்லை.சித்தப்பா,மாமா எல்லாருமே தேடினாங்க.கடைசியில் இரண்டாவது மாமா தான் கண்டுபிடிச்சாங்க.

பிரதீப் மாமா, அவரோட சித்தப்பா கிட்ட பேசலேனாலும் மற்றவர்களுடன் நன்றாகவே பேசுவார்.ஆனால் வீட்டிற்கு மட்டும் செல்ல மாட்டார். நாளடைவில் அவரும் எங்கள் கிராமத்தின் முக்கியமான நபரானார். அனைவருக்கும் உதவி செய்வார். ஸ்ரீக்கும் செய்திருக்கிறார். ஸ்ரீயின் தைரியம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஜானுவிற்கு சமமாகவே பார்ப்பார் சொல்லிக் கொண்டே தருணிருக்கும் இடத்திற்கு வந்தனர்.

அங்கே வந்த இன்பா தருணிடம் பேச ஆரம்பித்தாள் அர்ஜூன் திட்டம் பற்றி..அவன் கோபமாக அர்ஜூனிற்கு போன் செய்தான். இன்பா அவனிடம் எதற்கடா இப்படி கோபப்படுகிறான் என்று அபியிடம் கேட்டாள்.

பாருங்கள்..உங்களுக்கே தெரியும் என்றான்.

அர்ஜூன் போனை எடுத்துவிட்டான் என்று தெரிந்தவுடன், சரமாரியாக திட்டி தீர்த்தான் தருண் அர்ச்சுவை.அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். கைரவ் அவனிடம், டேய்..உனக்கு என்னடா பிரச்சனை? கேட்டான் அலுப்பாக..

அர்ச்சு அவனை பார்த்து சிரித்தான். அர்ஜூன்…தருண் அழைக்க,என்னடா முடிச்சுட்டியா? கேட்டான்.

எங்கே இருக்க? கைரவ் வாய்ஸ் கேட்குது?

காரில் ஒன்றாக சென்று கொண்டிருக்கிறோம் என்றான் கைரவ்.

என்ன வேண்டுமானாலும் செய்.ஸ்ரீக்காக என்னிடம் உதவி கேட்காதே! என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்றான் தருண்.

என்னோட அக்கா,உங்களை என்ன செய்தாள்?நிவாஸ் உறுமினான்.

ஓ….நீயும் இங்கே தான் இருக்கிறாயா? நல்லா கேட்டுக்கோ.உன்னோட அக்காவால என்னோட அர்ஜூன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கான் தெரியுமா? தருண் சினத்துடன் கத்தினான். இன்பா திரும்பி அபியை பார்த்தாள். அவன் கண்ணாலே, அங்கே கவனிங்கள் என்றான்.

என்னடா பேச்சையே காணோம்.என் மச்சான் சொன்னானா? அவள் செய்ததை மேலும் கத்தினான்.

நானும் சீனியர்னு பார்த்தா. என்னடா ஸ்ரீயை இழுக்குற? நிவாஸ் கத்த,

டேய்..டேய்..டேய்..நிறுத்துங்கடா போதும். தருண் நீ கண்டிப்பா வர்ற அர்ஜூன் சொல்ல,

முடியாதுடா.இவனுகள பார்த்தாலே பழசு தான் என் நினைவுக்கு வரும். இவனுகள பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்..அவனுகளோட என்னையும் சேர சொல்ற..கத்தினான்.

எனக்காக செய்ய மாட்டாயாடா? நாளை கல்லூரியில் பேசுவோம் என்று போனை வைத்தான்.

செம்ம கோபத்தோடு,தருண் அபியை பார்த்தான்.

சிறு வயதிலிருந்தே அகிலுடன் பேசி பழகி அவனுக்கு பிடித்ததை செய்தோம்.அன்று புரியாமல் நடந்து விட்டது. நான் ஒத்துக் கொள்கிறேன் எங்களால் அர்ஜூன் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டான்.இனி அப்படி நடக்காது டா அமைதியாக அபி கூறினான். அதை கேட்பதாக இல்லை தருண்.

அது எப்படி?அறியாத வயசு.இப்ப என்ன அனைத்தும் அறிந்து விட்டீர்களோ! கத்திக் கொண்டே அபி அருகே வந்தான்.

ஆமாடா.இப்பொழுது தான் புரிகிறது,அகில் காதலிக்கிறான் என்று தான் தோன்றியது. ஆனால் அந்த பிரகதியால் தான் அனைத்தும் போச்சு என்றான்.

பிரகதியா? கலகலவென சிரித்தவன்..அபியை ஓங்கி அடித்தான்.

அந்த கேடுகெட்டவல தான் உன்னோட அகில் காதலித்தான் ஸ்ரீயை அல்ல. அர்ச்சு மட்டும் காயப்படவில்லை. ஸ்ரீயும் காயப்பட்டாள். ஏன்னா? அகில் ஸ்ரீயை காதலிக்கவே இல்லை.ஸ்ரீ தான் அகிலை காதலித்தாள்.அதுவும் எப்படி காதலித்தாள் தெரியுமா?ஆனாலும் அவளுக்கு கிடைத்ததும் வலி தான்.அர்ஜூனை ஸ்ரீ மறுத்ததன் காரணமும் அகில் மீதுள்ள காதலால் தான்.

அர்ச்சுவிற்கு தெரியுமா?

அவனுக்கு மட்டுமல்ல நித்தி யாசுவிற்கும் தெரியும்.அகிலிடம்.. தானே காதலை கூறுவேன் என்று ஆசையாக அவள் இருந்த போது தான் பிரகதி வந்தாள்.அதனால் காயமும் பட்டாள். உங்கள் முன் தானே ஸ்ரீயை அகில் காயப்படுத்தினான்.அப்பொழுது யாருடா அவளுக்கு துணையா வந்து நின்றீர்கள். அடுத்தவர் போல் வேடிக்கை பார்த்தீர்கள்? இது தான் நட்பிற்கு அழகா. அவள் உங்களுக்கு என்றால் முன் வந்தாள். அவளுக்கு வந்தீர்களா? இல்லையே! என்னோட மச்சான் தான்டா இருந்தான். அப்பொழுது கூட மறைந்திருந்து தான் கவனித்துக் கொள்வான்.ஸ்ரீ அழுது பார்த்திருக்கிறாயா? இப்பொழுது தானே பார்த்திருக்கிறாய்?

அப்பொழுதும் அழுவாள் அகிலுக்காக மட்டுமே.நாங்கள் பார்த்திருக்கிறோம். அவள் மிகவும் உடைந்திருந்தால் மட்டுமே அர்ஜூன் அவள் முன் செல்வான். அந்நேரத்தை கூட அவன் பயன்படுத்தி இருக்கலாம்.ஆனால் எதுவும் பேசாமல் அவளருகே தோள் கொடுப்பான். அவ்வளவே தான்.

எனக்கு ஸ்ரீ மீது கோபவெறின்னு கூட சொல்லலாம். தகுதியில்லாதவனுக்காக அழுகிறாளே! அவள் உங்கள் முன் தான் தைரியமாக உள்ளது போல்  நடித்திருக்கிறாள்.ஆனால் அவள் கோழை டா.காதலை சொல்ல பயந்த கோழை.

அர்ஜூன் மட்டும் தான் அவளது கஷ்ட நேரத்தில் இருந்தான்.. இருக்கிறான்.. இருப்பான். ஆனால் நீயும் கவினும் அவனிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள். நீங்கள் செய்தது சரியா? சொல்லுடா..சொல்லு..தருண் அழுது கொண்டே தன் ஆதங்கத்தை தீர்த்தான்.எனக்கும் எல்லாரையும் போல் ஸ்ரீயை பிடிக்கும்.ஆனால் அர்ஜூன் காதலை ஏற்றுக் கொள்வது, இல்லாதது அவளது தனிப்பட்ட விருப்பம்.அவளால் அவன் செய்கைகளை, உணர்வுகளை மதிக்க கூட இல்லையேடா என்றான்.

அபி ஆடிப் போய் அமர்ந்து அவனும் அழ ஆரம்பித்தான். இன்பாவிற்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.

இன்னொன்றுடா ஸ்ரீ காதலுக்கு எப்படி அகில் தகுதி இல்லையோ,அதே போல் அகில் காதலித்த பிரகதிக்கு அகில் காதலுக்கு தகுதியில்லை.

அவள் அகிலை காதலிக்கவே இல்லை.அவள் நம் பள்ளிக்கு வந்ததே ஸ்ரீயையும் அகிலையும் பிரிக்க.நினைத்ததை நன்றாகவே முடித்து விட்டு கிளம்பினாள். ஸ்ரீயுடன் அவளுக்கு ஏற்கனவே பிரச்சனை இருந்திருக்கிறது. அதனால் தான் ஸ்ரீயை பழி வாங்க நம் ஊருக்கு வந்தாள்.அகில் ஸ்ரீ நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டாள்.

அதிலும் அன்று இரவு நடந்த சூழ்ச்சி இருக்கே.எல்லாமே பிரகதி ஏற்பாடு.ஸ்ரீ சொன்ன அனைத்தும் பொய்.இதுவும் அகிலுக்காக தான். அவளை பற்றி தெரிந்தால் உடைந்து விடுவானே என்று தான் மாற்றி கதவை யாரோ தெரியாமல் பூட்டினார்கள் என்றாள். ஸ்ரீக்கு மயக்க மருந்தை கொடுத்து அறையில் அடைத்தது மட்டுமல்லாமல், அர்ச்சுவிடம்.. ஸ்ரீக்கு ஆபத்து என்று அவனை வர வைத்து,இருவரை பற்றி ஊரார் முன் பேச வைத்தாள்.அது கூட பரவாயில்லை. உன் நண்பன் அகில் பேசினானே! என்ன அருமையான பேச்சு காரி உமிழ்ந்தான் தருண்.

என்னடா சொல்ற?அவனது சட்டையை பிடித்தான் அபி.என் சட்டையை ஏன்டா பிடிக்கிற?போ..அகில் கிட்ட போ.அவனது சட்டையை பிடித்து கேளு.ஸ்ரீயையும் அர்ச்சுவையும் அவதூறாக பேசினானே அவனை பிடி என்று ஏற்றி விட்டான் தருண். என்னுடைய அர்ச்சு தேவையில்லாமல் அடி வாங்கினான் ஸ்ரீக்காக..

என்ன காதலோ! மண்ணாங்கட்டியோ! என்றான் தருண்.அபி கோபமாக நகர,நிலையுணர்ந்து இன்பா அவனை தடுத்தாள்.அவன் அவளை முறைத்து பார்த்து விட்டு செல்ல, அவன் முன் வந்து என் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு போ என்றாள் பொங்கிய சினத்துடன்.

அவன் நின்று, புருவத்தை ஏற்றியவாறு என்னவென்று கேட்டான்.

அன்று முழுதாக நடந்தது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு உன்னிடம் கேட்க வேண்டும் .

அன்று ஸ்ரீயை நம்பினாயா? இல்லையா? அமைதியாக நின்றான்.

நீ தான் அவளுடைய தோழனாயிற்றே. அவளுக்கு துணை நின்றாயா? இல்லையா? தலை கவிழ்ந்து நின்றான் அபி.

அர்ஜூனை காயப்படுத்தியதை ஏற்றுக் கொள்கிறாய் தானே? மன்னிப்பு கேட்டாயா?அவன் கண்கள் கசிந்தது.

அகில் ஸ்ரீயை காதலித்தால் இன்னோர் பெண்ணுடன் நெருக்கமாக பழகுவானா? நீ அதை ஏற்றுக் கொண்டாயா?எதை வைத்து அகில் ஸ்ரீயை காதலிக்கிறான் என்று நீங்களாக முடிவெடுத்தீர்கள்?

அவர்கள் இருவரது நெருக்கம் என்றான்.

எப்படிபட்ட நெருக்கம்? இருவருமா? கேட்டாள்.

சிந்தித்தவன் ஸ்ரீ தான் அவனது கழுத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பாள் என்றான்.

அவன் மறுப்பானா?

இல்லை.

அகிலிடம் கேட்க தோன்றவில்லையா?

சுற்றியுள்ளவர்கள் அவர்களை பற்றி பேசியது தான் இருவரும் காதலிக்கிறார்கள் தோன்றியது.

சரி, பழச விடு. ஸ்ரீ அகிலை பார்த்தால் இப்ப என்ன தோணுது?

எதுவுமே தோன்றவில்லை.ஆனால் அகில் அவளை காதலிப்பது போல் தெரிகிறது?என்றான்.

ஓ.கே இரண்டு பேருமே உன்னோட ப்ரெண்ட்ஸ் தானே! இனி கவனித்து என்னிடம் கூறு. நீ எந்த அளவு கவனிக்கிறாய்? என்று பார்ப்போம் என்றாள் இன்பா.

   “அறியாமல் செய்தேனே

    என் தோழியே!

    நட்பிற்கே எதிரானேனே

   என் தோழியே!

  சிக்கலின் போது மறைந்தேனே

  என் தோழியே!

  நம்பாமல் இருந்தேனே

  என் தோழியே!

  நீ என்னோடு இருந்தவரை

  புரியால் தவறிழைத்தேனே

  என் தோழியே!

  என்னை மன்னிப்பாயா

   தோழியே

   என் தோழியே!”