ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..

இன்றைய உங்களுக்கான எபிசோடு 45..

ஸ்ரீயை தான் அவனே சம்மதிக்க வைத்து விட்டானே. அப்புறம் ஏன் வருத்தமாக இருக்கிறான் நிவாஸிடம் அர்ச்சு பற்றி தாரிகா வினவ,

வருத்தப்படுறான் என்று அவனை நினைத்து கவலைப்படாதே! அவன் ரொம்ப ஸ்மார்ட். நீ தான் பார்த்தாயே.. உன் அடி மடியே கை வைக்க பார்க்கிறான் மனதினுள் சிரித்தவாறு. தாரிகா அருகே சென்று உன் அம்மாவை வலைத்து விட்டான். இனி உன் அம்மா,உனக்கு இல்லை அவன் மெதுவாக கூற, உள்ளே வந்த அர்ச்சு அவனது தலையை தட்டி விட்டு,

ஓய்..அவளை பயமுறுத்த பார்க்கிறாயா? அர்ஜூன் கேட்டான். தாரிகா திருதிருவென்று விழித்தாள்.நிவாஸ் அவளை பார்த்து கையை நீட்டி,விழுந்து விழுந்து சிரித்தான்.

அட ச்சே..போடா என்றாள் அவள்.

ஏய்..என்ன உன் ஆளு பிஸியா இருக்கான் போல அர்ஜூன் தாரிகாவை கேலியுடன் நோக்க,அதை கேட்டு மற்றவர்கள்,என்ன சொன்ன? என்று தாரிகாவை பார்த்தனர்.

ஸ்ரீ அவளை பார்த்து ஆதேஷ் என்று கேள்வியுடன் நோக்கினாள். அவனிடம் அன்றே முடியாது என்று கூறி விட்டேன்.சீனியர் நேரம் கேட்டிருந்தார். இன்று தான் காதலை சொன்னார் வெட்கத்துடன் தாரிகா கூறவும்

வாவ்..சூப்பர் வாழ்த்துக்கள் என்று அவளை கட்டிக் கொண்டாள் ஸ்ரீ. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.ஸ்ரீ முகம் பளபளக்க,இரு வருகிறேன் என்று வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள். அம்மா அவர் அறையில் இருந்தார்.ஸ்ரீ சக்கரை எடுத்து வந்து அவளது வாயில் போட்டு மீண்டும் கட்டிக் கொண்டாள்.

டேய்..வாயை திறடா என்று நிவாஸ் வாயிலும் போட்டு விட்டு அர்ஜூன் அருகே வந்தாள்.

ஏய்..இரு என்று நிவாஸ் அவளிடம் இருந்து சக்கரையை வாங்கி அர்ச்சுவிற்கு கொடுத்தான்.ஸ்ரீ அம்மாவிடம் சென்று கொடுக்க, தாரிகா பயந்தே விட்டாள்.

எதற்குமா?அர்ச்சு எடுத்த காரியம் நல்லா படியா நடக்க,என்றதும் அனைவரும் அவளை பார்த்தனர்.

அவள் வெளியே வந்தவுடன்,தாரிகா அவளிடம் நீ எனக்காக கொடுக்கவில்லையா? கோபித்துக் கொண்டாள்.

இரண்டு பேருக்காகவும் என்றாள். நிவாஸும்,தாரிகாவும் அர்ச்சுவை பார்த்தனர். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்காக எவ்வளவு செய்கிறான்? இது வெறும் துரும்பு தானே! நீ உன் காதலில் ஜெயித்து விட்டாய்.அவன் அவனது வாழ்வில் வெற்றியடையட்டும்.

எனக்கு அவன் ஆன்ட்டி விசயத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லா இருக்குமென்று தோணுது அவள் கூற,அர்ச்சு முறைத்தான்.

இந்த முறைப்பு இருக்கட்டும் என்று அர்ஜூன் அருகே வந்து அமர்ந்தாள் ஸ்ரீ. இதற்கு பணம் தந்தவர்களுக்கு நன்றி கூறினாயா? ஸ்ரீ சும்மா இரு என்றான் அவன்.

ஓ.கே. நீ இன்னும் படிக்க ஆரம்பிக்க கூட இல்லை.நீ எப்படி இதை நல்ல படியாக கொண்டு செல்ல முடியும்?

என்னால் முடியும் என்றான்.

அதான் எப்படி?

அம்மாவின் அனைத்து டீலிங்கையும் அவர்கள் அனுப்பிய வீடியோவில் பார்த்திருக்கிறேன்.இன்னும் நிறைய தகவல்களை யூ டியூபில் பார்த்து இருக்கிறேன்.என்னால் முடியும் என்றான் உறுதியாக.

அம்மா தானே இதை நீ கற்றுக் கொள்ள காரணம்.கொஞ்சம் சிந்தித்து பாரேன் என்றாள்.

என்ன தான் செய்ய வேண்டும் என்கிறாய்? கத்தினான்.

அம்மாவிற்கு தேங்க்ஸ் மட்டும் அனுப்பு போதும் என்றாள். தனியா உன்னோட அம்மா இந்த உயரத்திற்கு வர கஷ்டப்பட்டு இருப்பாங்க அர்ஜூன் ஏன் உனக்கு புரிய மாட்டிங்கிது?

உன்னை தனியா விட்டு போனாங்கன்னு தானே உனக்கு கோபம்.நீ நேராகவே கேளேன் என்றாள். அவன் அமைதியாக இருந்தான்.

அவன் அம்மாவிடம் பணத்தை கடனுக்கு தான் வாங்கி இருக்கான் தாரிகா கூறினாள்.

என்னடி சொல்ற கடனுக்கா?அம்மா அவனை பார்த்து, ஏன்டா..இப்படி பண்ற? அவங்க ஒத்துக்கிட்டாங்களா? கேட்டார்.

கொடுத்து விட்டார் என்றான்.

அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ!

இதுல என்ன இருக்கு?அர்ஜூன் கேட்டான்.

என்ன இருக்கா? அவங்க உன்னோட அம்மாடா. உனக்கு தான் அவர்களது அனைத்தும்.நீ இப்படி கேட்டால் அவரது மகனாக எப்படி இருக்க முடியும் என்று கோபப்பட்டாள் ஸ்ரீ..

அவங்கள,ஏன்டா கஷ்டப்படுத்துற?அவனை முறைத்தாள்.

என்ன எல்லாரும் அவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறீங்க?நான் தான் சொன்னேன்ல.என்னோட எதுல துணையா இருந்தாங்க? சின்ன வயசுல பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டாங்க.என்னோட பாட்டி இல்லேன்னா,நான் இப்ப இருந்திருக்கவே மாட்டேன் சீறினான் ஸ்ரீயின் தோள்பட்டையை இறுக்கியவாறு.

வீட்டுல என்னோட பாட்டியும், வெளியே என்னோட ஏஞ்சலும் இல்லைன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும் தெரியுமா? கத்தி விட்டு கண்ணீருடன் வெளியே சென்றான். ஸ்ரீ அவனது ஏஞ்சல் என்ற வார்த்தையில் அப்படியே நின்று விட்டாள்.

அவன் மறு படியும் உள்ளே வந்து ஸ்ரீயை பார்க்க, அவள் அமைதியாக இருந்தாள்.தாரிகா அவள் அருகே வந்து ஸ்ரீயிடம் பேசினாள்.ஸ்ரீ வெளியே சென்று அமர்ந்தாள்.

நில்லு ஸ்ரீ..அவள் அழைக்க, நிவாஸும் தாரிகாவும் அவளுடன் வந்து அமர்ந்து கொண்டனர்.

ரொம்ப கோபப்பட்டு விட்டேனோ! மனதினுள் நினைத்தான் அர்ஜூன். பின் இருக்கட்டும் என்று லேப்பில் தன் வேலையை தொடர்ந்தான்.கொஞ்ச நேரத்தில் மூவரது சத்தமும் பலமாக இருக்கவே, என்ன சத்தம்? என்று அம்மா பார்த்து சிரிப்புடன் உள்ளே வந்தார்.

ஸ்ரீக்கு..தான் புரிந்து விட்டதே! அர்ஜூன் தன்னை தான் சொல்கிறான் என்று. அவன் அம்மாவிடம் நடந்து கொண்ட முறை பிடிக்காதிருந்தாலும்,அவன் தன்னை உரிமையாக நினைப்பதை சந்தோசத்துடன் பார்த்தாள்.அவன் என்னை ஏஞ்சல் என்று தான் அழைப்பானோ! யோசித்தாள்.

தாரிகா அவளை பார்த்து விட்டு, செடிகளுக்கு நீர் ஊற்ற, நிவாஸ் டியூப்பை அவளிடம் பறித்து அவள் மீது தெளிக்க,இருவரும் ஸ்ரீயை பார்த்து சிரிப்போடு அவள் மீது தெளிக்க,ஸ்ரீக்கு ஓர் எண்ணம் உதித்தது.

அர்ஜூன்..அர்ஜூன்..சீக்கிரம் வா என்று கத்தினாள்.அவன் பதறி வெளியே வர, அவனை பார்த்து க்யூட்டாக புருவத்தை உயர்த்தி விட்டு அவன் மீதும் நீரை தெளித்தாள்.நீர் பட்டவுடன் அவனும் அவர்களுக்குள் கலந்து கொள்ள, நால்வருமாக விளையாண்டு கொண்டிருந்தார்கள்.

ஓ…இது தான் முக்கியமான வேலையா?சத்தம் கேட்டது. நால்வரும் விளையாண்டபடியே நின்றனர்.அர்ச்சு ஸ்ரீயை அணைத்தபடி இருந்தான். யாசு கையை கட்டிக் கொண்டு நின்றாள். அவர்கள் இப்படி நிற்பதை பார்த்த அகில் அர்ச்சு அருகே நெருங்கினான். அவனை கன்னத்தில் அறை ஒன்று கொடுத்தான்.ஆனால் அது ஸ்ரீயின் கன்னத்தில் படவே திகைத்து நின்றான். அவன் அடிக்க வருவதை பார்த்த ஸ்ரீ அர்ச்சுவை விலக்கினாள். அதனால் அடி ஸ்ரீ மீது பட்டு விட்டது.ஸ்ரீயை அகில் அறைவதை பார்த்து அர்ச்சு அகிலை அறைந்தான். இருவரும் சண்டை போட ஸ்ரீயும் யாசுவும் தடுத்து பிரித்தனர்.

இங்கே ஒன்றும் தவறாக நடக்கவில்லை சீனியர்.அர்ஜூன் மூடு அப்செட்ல இருந்தான். அதனால் தான் அவனை வர வைத்து அவனை சரி செய்தோம். நாங்கள் அனைவரும் அவ்வளவு தான் கோபமாக அர்ச்சுவை விட்டு உள்ளே நனைந்த படி சென்றாள். நிவாஸ் தாரிகா அகிலை முறைத்து விட்டு, உள்ளே செல்ல,நிவாஸ் பின் வந்து நம்பிக்கை இல்லாத இடத்தில் கண்டிப்பாக காதல் இருக்காது என்று விட்டு உள்ளே சென்றான்.

அபி அகிலிடம்,ஸ்ரீ இருக்கும் இடத்தில் தாரிகாவை இந்நிலையில் கவின் பார்த்தால் என்ன செய்வான் தெரியுமாடா? அகில் மௌனம் சாதித்தான்.

அவன் தாரிகாவின் சந்தோசமான மனநிலையை மட்டும் தான் பார்த்திருப்பான். அவனும் அவர்களுடன் கலந்திருப்பான்.நீ உண்மையாகவே ஸ்ரீயை காதலிக்கிறாயா? இல்லையா? அவள் சிரித்தே நாம் அந்த பூங்கா சென்ற அன்று மட்டும் தான் பார்த்தோம்.பின் இன்று தான் சிரித்திருக்கிறாள். அது உனக்கு புரியவில்லையா?

நான் அவளை உண்மையாகவே காதலிக்கிறேன் என்றான் அகில்.

ம்ம்ம்..கிழிச்ச..என்று ஒரு சத்தம் வந்தது. கைரவ் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான் அகிலை திட்டியபடி.நீ எதுக்கு டா வந்த? உனக்கு தான் இன்னும் சரியாகவில்லையே! அபி கேட்டான்.

நான் அந்த இடியட்டை பார்க்க வந்தேன் என்றான்.

இடியட்டா? யாசு கேட்டாள்.அகிலை பார்த்து கைரவ்,இங்கே ஸ்ரீ பைத்தியம் ஒருவன் இருக்கிறானே! அவனை பார்க்க தான்.அகில் அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

டேய்,ஏன்டா..இப்படி பண்றீங்க? போய் தொலைக்கடா யாசுவும் அபியும் உள்ளே சென்றனர்.

கைரவ் உள்ளே வந்து, டேய்..நல்லவனே..எங்கடா இருக்க?அர்ச்சுவை தேடினான். அர்ச்சு அவனது பொருட்களை எடுத்து தாரிகா அறையில் பத்திரமாக வைத்து விட்டு அவனது வீட்டிற்கு கிளம்பினான்.

நான் ஆடையை மாற்றி விட்டு வருகிறேன்மா என்று கூறினான். ஸ்ரீ குளித்து ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்து, அர்ச்சுவை பார்த்து போன் என்றான். அவன் போனை கையில் காட்ட,அது இல்ல…நான் சொன்னது அவள் கூற, அவன் முறைத்துக் கொண்டு கைரவை அழைத்து வெளியே சென்றான்.

கைரவ் பேசுவதற்குள் நிவாஸிடமும், அம்மாவிடமும் மற்றவர்களிடமும் சொல்லி விட்டு வெளியே வந்தான். ஸ்ரீ கூந்தலை மொத்தமாக ஒரு பக்கமாக தோளில் போட்டவாறு வெளியே ஓடி வந்தாள்.  அர்ஜூன்…அர்ஜூன்… என்று கூப்பிட்டுக் கொண்டே, இந்தா என்று டவலை நீட்டினாள்.

அவளை பார்த்து எனக்கா? கேட்டான். நிவாஸிற்கு அப்பொழுதே எடுத்து தந்தேன். நீ உன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாயா? அதனால் தான் கொடுக்க முடியவில்லை.நீ ஈரத்துடன் செல்கிறாயா? அதான் என்றாள்.அவன் வாங்கி தலையை துவட்ட,

கைரவிடம் ஸ்ரீ, உனக்கு கை எப்படி உள்ளது? அவனது கையை தொட்டு பார்த்தாள். அவன் வேகமாக விலகி, ஸ்ரீ..இது நீ தானா? கைரவ் கேட்டான்.

அவள் இதழ்களில் லேசாக புன்னகை அரும்பியது.அர்ச்சு அவளிடம் டவலை கொடுத்தாள்.அர்ஜூன் என்னால் தானே சீனியர் உன்னை அடிக்க வந்தார். சாரி..என்றாள்.

சாரியா? என்று சிரித்தவன் எனக்கு தான் அடியே விழவில்லையே! என்றான். அவள் திரும்பி அகிலை பார்த்தாள். அனைவரும் இவர்களை கவனித்தவாறு இருந்தனர். நிவாஸ் அருகே வந்து,நானும் உங்களுடன் வருகிறேன் என்றான்.

சரி, வா என்றான் அர்ஜூன்.அர்ஜூன் நான் கூறியது.ஒரே ஒரே மெசேஜ் தானே! ப்ளீஸ் என்றாள் ஸ்ரீ.

அவன் போனை எடுத்து அவளிடம் நீட்டினான்.அதில் ஏற்கனவே மேசேஜ் செய்யப்பட்டு இருந்தது.

அப்படியே பேசினால் கூட நன்றாக இருக்கும் என்றாள். அவன் அவளருகே வர, அவள் பின்னே சென்றாள்.அவளை பிடித்து இழுத்தவன்,இது மட்டும் நடக்காது என்றான் கோபமாக.

அர்ஜூன் என்றாள்.அவன் திரும்பி கூட பாராது சென்றான்.

போடா மங்கி என்றாள்.அவளை திரும்பி பார்த்தவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

அர்ஜூன் கைரவ் காரினுள் எட்டி பார்த்தான்.அங்கே யாருமில்லை.

இதே கையோடாவா காரை ஓட்டி வந்தாய்? அவன் தோளை குலுக்கினான்.

வா,உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று காரின் அருகே வந்தான் அர்ஜூன்.

நாம் உன் வீட்டிற்கு தான் செல்ல போகிறோம் என்றான் கைரவ்.

புரியாமல் அர்ச்சு அவனை பார்த்தான். ஏன்டா அந்த தருணை கூட உன்னுடைய பிஸினஸில் சேர்த்து இருக்கிறாய்? என்னை விட்டு விட்டாய்டா? கேட்டான்.

உனக்கு தான் கையில் அடி பட்டுள்ளதே அது சரியாகட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

இல்லை என்று அவனையும் சேர்க்க கூறி பிடிவாதம் செய்தான் கைரவ்.

இது பேசுவதற்கான இடமில்லை என்று நிவாஸிடம் பைக் சாவியை கொடுத்து, எடுத்து பின்னாலே வா.தனியே வேண்டாம் என்றான் அர்ச்சு.

அர்ஜூன் காரை செலுத்த, நிவாஸ் அர்ச்சுவின் பைக்கை எடுத்து அவனது வீட்டிற்கு சென்றனர்.