ஹாய்…ப்ரெண்ட்ஸ்…

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்…

இதோ உங்களுக்கான எபிசோடு 31

அர்ச்சுவின் எடையை தாங்க முடியாத ஸ்ரீ கீழே விழ,அர்ச்சு அவள் மீது விழுந்தான்.நித்தி ஸ்ரீ அருகே வந்து

ஸ்ரீ….ஸ்ரீ…..எழுப்ப, அப்பொழுது தான் அவள் கண்ணை மூடி இருப்பதை அவளே உணர்ந்தாள். கண்ணை திறந்த ஸ்ரீக்கு அனைத்தும் மங்கலாக தெரிய,அர்ச்சு…அர்ச்சு என்றவாறு கண்ணை கசக்கினாள்.

மீண்டும் சரியாக தெரியாமல் இருக்க,அர்ச்சுவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்.நீ எழுந்திரு…..நித்தி பேச… அவள் பேசுவதும் சரியாக புரிபடாமல் போனது ஸ்ரீக்கு.நித்தியை அணைத்துக் கொண்டாள். இப்பொழுது நித்தி நினைவுகள் வர……இவர்களது நெருக்கம் அக்கா…தங்கை போல் உணர்ந்தாள் ஸ்ரீ…..

உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?….நித்தி கேட்டுக் கொண்டே ஸ்ரீயை நகர்த்த அவள் தண்ணீர் கேட்டாள். அவளது உடல் முழுவதும் வியர்வை……தண்ணீரை அருந்தி விட்டு, எனக்கு சோர்வாக உள்ளது. நான் கொஞ்ச நேரம் தூங்கவா?

சுயர்…..தூங்கு….என்றாள் நித்தி.

சீனியர் என்னால் எழ முடியவில்லை என்றவுடன் வா..என்று நித்தி ஸ்ரீயை தாங்கிக் கொண்டு நடக்க சைலேஷ் அங்கே வந்தான். இரு….அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீயை தூக்கி படுக்க வைத்தான்.பின் இவளுக்கு என்ன ஆயிற்று?என்று கேட்டான்.

தெரியவில்லை. மருத்துவரை வரவழைத்து என்னவென்று பாருங்களேன். அவள் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டாள்.எனக்கு பயமாக உள்ளது. ஸ்ரீ கண்மூடி தூங்கலாயினாள்.

அவள் தூங்குவதால் இருவரும் வெளியே வந்தனர். அர்ச்சுவிற்கு தலையில் கட்டு போட்டு பெட்டில் அமைதியாக சாய்ந்திருந்தான்.அருகில் கைரவ் ஆப்பிளை கொறித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த நித்தி கைரவ் அருகே வந்து அவனை அறைந்து விட்டு அர்ச்சுவை ஒரு பார்வை பார்க்க அவன் எழுந்து அமர்ந்தான்.

ஏன்டா இப்படியெல்லாம் பண்றீங்க?

நீ என்னடா? நேராகும் என்று தெரிந்தால் அவரிடம் கூறி விட்டு செல்ல வேண்டியது தானே! அவர் எவ்வளவு பயந்து விட்டார் அவள் பேச, கேட்டுக் கொண்டே ஆப்பிளை கைரவ் கடித்துக் கொண்டிருந்தான்.

உனக்கு எதையும் சொல்லி செய்யும் பழக்கமே இல்லையா?அர்ச்சுவை கடிந்தாள்.சைலேஷ் கைரவை முறைத்தவாறு  உள்ளே வந்தான். ஆப்பிளை கீழே வைத்து வேகமாக கைரவ் எழுந்தான். நித்தி கோபத்தை பார்த்தவன்

நித்தி…..அவன் அழைத்தவுடன் திரும்பியவள் அவள் மீண்டும் புலம்ப, அவன் அவளை அணைத்துக் கொள்ள, நித்தி அழுது கொண்டே, அந்த ஆள் தடுத்ததால் தான் இவர்கள் நம்மிடம் வந்து விட்டார்கள் இல்லையென்றால் என்ன ஆகி இருக்கும்…

அர்ச்சுவும் கைரவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, மீண்டும் அவர்களை பார்த்தால் சைலேஷ் அவளிடம்…

விடும்மா…..இனி தனியே விடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தினான்.

இருவரும் நகர்ந்து நிற்க, நித்தி நீ சொல்லவே இல்லை அர்ச்சு கண்சிமிட்ட,…அவள் வெட்கத்துடன் சைலேஷ் மார்பில் புதைந்து கொண்டாள்.

பின் அண்ணா….கைரவ் ஆரம்பிக்க, நித்தி சொன்னது சரி தான். இனி என்ன செய்வதாக இருந்தாலும் சொல்லிட்டாவது செய்யுங்கள் என்றான்.

அண்ணா…நித்தி பற்றி தாத்தாவிடம் கூறினாயா?

தாத்தாவிடம் முதலில் கூறியதே நித்தி தான் என்று அவளை பார்த்தான் புன்னகையுடன்.

அவர் ஓ.கே சொல்லிட்டாரா?

ம்ம்…ஆனால்…நித்தியை சைலேஷ் பார்த்தான். உன்னுடைய அப்பா..

அப்பா….என்றவள் நேரம் வரட்டும் மெதுவாக பேசுகிறேன். ஆனால்…. திருமணம் இப்பொழுதெல்லாம் இல்லை.

படிப்பு முடியட்டும் என்றான் சைலேஷ்.

இல்லங்க..அது வந்து…… என்று அவனருகே வந்து அவனது உள்ளங்கையை வருடிக் கொண்டே ஏதோ யோசிக்க,

நாங்கள் ப்ரெண்ட்ஸ் அனைவரும் ஒரே நாளில் தான் திருமணம் செய்து கொள்வதாக சிறு வயதிலே உறுதி எடுத்துக் கொண்டோம்.  இப்பொழுதைக்கு நடக்காது கேலியாக அர்ச்சு நகைத்தான்.

என்னமா சொல்றான்? அதிர்ந்தான் சைலேஷ். ஆம் என்றாள்.

சார்…எப்படியும் குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் அர்ச்சு கூற, நித்தி பயத்துடன் நிமிர்ந்து சைலேஷை பார்த்தாள். அவன் ஏதும் கூறாமலிருக்க, அவள் மனம் பதைக்க, என்னை விட்டு விலகி விடுவாரோ! கண்களில் நீர் கோர்த்தது.

அவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் சைலேஷ். இருள் சூழ்ந்து பயத்துடன் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள் நித்தி. இதை பார்த்து கைரவ் அதிர்ச்சியுடன் முன் செல்ல இருந்தவனை அர்ச்சு தடுத்தான்.

நித்தி கையில் ஒரு செயினை எடுத்து அவன் முன் இருந்த டேபிளில் வைத்தாள். இது உங்களுக்கு.நம் திருமணத்தன்று உங்களுக்கு நான் போட்டு விடுவேன்.அவன் அவளை நிமிர்ந்து பார்க்க,

சார்…..அழைத்த அர்ச்சு அவளது பேண்ட் பாக்கட்டிலிருந்து அவனும் ஒரு செயினை எடுத்தான்.நித்தி வைத்திருந்ததை போல் இருந்தது. இதே போல் அகில், கவின்,அபி,யாசு…. அப்புறம்….தயங்கிக் கொண்டு ஸ்ரீயிடமும் உள்ளது என்றான்.

இந்த முடிவு எப்பொழுது எடுத்தது? யார்?

எங்களது ஒன்பதாம் வகுப்பில் எடுத்தது. ஸ்ரீ தான் அனைவருக்கும் வாங்கி தந்தாள். அவளிடம் தான் இருக்கிறதா? என்று தெரியவில்லை நித்தி சொல்ல,

ஒன்பதாம் வகுப்பிலா…என்று கைரவ் பயங்கரமாக சிரித்தான்.

சைலேஷ் கைரவை முறைத்து விட்டு, என்னம்மா விளையாடாதீங்க,….. என்றான்.

நாங்கள் இப்பொழுதும் அதே முடிவில் தான் இருக்கிறோம் என்று அர்ஜூன் உறுதியாக கூறினான்.

நிஜமாகவே அனைவரும் இப்பொழுதும் ஒரே முடிவில் தான் இருப்பார்களா? சைலேஷ்…கேட்டான்.

கண்டிப்பாக என்றான் அர்ச்சு….

அர்ச்சு…நீ….என்று திரும்பினாள் நித்தி. அவன் மௌனம் அவளுக்கு பயத்தை உண்டு பண்ணியது.

சொல்லுடா….என்றாள்.

இதை பற்றி எதுவும் பேசாதே! என்றான்.

உனக்கும் தானே கொடுத்தாள். கொடுத்தால் தான். அதற்காக வேற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா?

எனக்கு புரிகிறது டா…ஆனால் உன்னுடைய எதிர்காலம்.

ப்ளீஸ் விடுகிறாயா? என்றான்.

சைலேஷ் அவளது கையை பிடிக்க, அதற்கு தான் நேரம் இருக்கிறதே… நடப்பது தான் நடக்கும் என்றான்.

நீங்கள் எனக்காக காத்திருப்பீங்களா?

நான்…..தெரியவில்லை…என்று அவளை உற்று பார்த்தான். சரேலென கண்ணீர் வர, அது வந்தும்மா….மீண்டும் இழுத்தான். இதற்கு மேல் அவர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவளாகவே முடிவெடுத்து வேகமாக எழுந்தாள்.

அவ்வளவு நாள் என்னால உன்னை விட்டு தனியாக இருக்க முடியுமா? தெரியவில்லை என்று எழுந்து அவளது கண்ணீரை துடைத்தவன், நான் காத்திருப்பேன்.ஆனால் படிப்பு முடிந்தவுடன் என்னருகே நீ இருக்க வேண்டுமே!

அவள் சந்தோசத்தில் அவனை கட்டிக் கொண்டு நான் பயந்து விட்டேன் தெரியுமா?….நான் இங்கேயே வேலை தேடிக் கொள்வேன். இருவரையும் பார்த்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் இப்பொழுது தான் அர்ச்சுவிற்கு பயம் பிடிக்க தொடங்கியது. ஸ்ரீயையும் அகிலையும் சேர்த்து வைக்க என்னால் முடியுமா? அவளுக்காக செய்தாலும் பின் அவளில்லாமல் இருக்க முடியுமா?பல கேள்விகள் அவனுக்குள் உதித்தது.

ஸ்ரீ அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஜிதின். சத்தம் கேட்டு விழித்தவள் அவனை பார்த்து, எதற்கு வந்தாய்? என்னருகே வராதே போ…..கத்தினாள். சரியாக இன்பா உள்ளே வந்தாள். ஸ்ரீயை பார்த்து,

வேண்டாம்….ஸ்ரீ….கத்தாதே! அவளை அணைத்து கட்டுப்படுத்த, ஏற்கனவே உன் உடல் நிலை சரியில்லை. இப்பொழுது தான் தாரிகாவையும் அம்மாவையும் பார்த்து விட்டு வந்தேன்.

டேய்…நீ என்ன செய்கிறாய்? ஜிதினை கேட்டாள் இன்பா.

அவனை வெளியே போக சொல்லுங்கள் ஸ்ரீ மீண்டும் கத்த, அவன் சாரி ஸ்ரீ…..என்னால் உன்னை பார்த்துக் கொள்ள முடியவில்லை அவளருகே வந்தான். அவனது சட்டையை பிடித்தவள்…..என்னை விடுங்களேன். என்னால் முடியவில்லை அழுதாள்.என்னை இப்படி கஷ்டப்படுத்துவதற்கு பதில் கொன்று விடலாமே! ஆதங்கத்துடன் கத்தினாள்.

அவன் துடித்து போனான். எனக்கு உண்மையிலே உன்னை ரொம்ப பிடிக்கும்.

ஓ…அப்படியா?…இந்தா என்று அவனிடம் கத்தியை தூக்கி எறிந்தவள். என்னை உன் கையாலே கொல்ல வேண்டும். அது உனக்கு எப்பொழுதும் வலிக்க வேண்டும் கத்தினாள். அவன் தாங்காது பாத்ரூம் உள்ளே சென்று கையை சுவற்றில் குத்திக் கொண்டிருந்தான். ஸ்ரீ அங்கேயே உட்கார்ந்து அழுதாள்.அகிலும் நண்பர்களும் உள்ளே வந்தனர். ஸ்ரீயை பார்த்து விட்டு இன்பா கதவை தட்டுவதை கவனித்த அகில் அவளருகே வந்து, யார் உள்ளே?

யாசு ஓடி சென்று ஸ்ரீயை அணைத்து கொண்டு, ஏன் அழுகிறாய்? அமைதியாக இரு என்று ஆஸ்வாசப்படுத்தினாள்.

ஸ்ரீயின் பியான்ஸே….என்றாள். அவன் பட்டென கதவை திறந்தவன் கை முழுவதும் இரத்தம். இதை பார்த்த அனைவரும்…நில்லுடா…என்க…நிவாஸ் அவனை பார்த்து பைத்தியமாடா நீ? கத்தினான்.

ஆமாம்டா…..பைத்தியம் தான் என்று அவன் விலக, அவனை நிறுத்தி மருத்துவரிடம் அழைத்து சென்றான் நிவாஸ்.

இன்பா ஸ்ரீ அருகே வந்து அவளை அறைந்தாள். என்ன சொன்ன? கொல்லணுமா?….அவன் தப்பே செய்திருக்கட்டும். அதற்காக அவனை கொல்ல சொல்ற? அவனது கையை பார்த்தாயா? நீ பேசியது எவ்வளவு வலித்திருந்தால் அவன் அப்படி செய்திருப்பான்.

நீ செத்து போயிட்டா எல்லாமே சரியாகி விடுமா? உனக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள் என்று பார். அவர்கள் வருத்தப்படுவார்கள் என்று நீ நினைக்கவே இல்லையா? பிடிச்சவங்கள இழந்து தவிக்கும் கஷ்டம் உனக்கு தெரியுமா?

தெரியும்….நல்லா தெரியும்….நான் அதிகமாகவே இழந்து விட்டேன் ஸ்ரீ அழுதாள். மீண்டும் இன்பா அவளை கட்டிக் கொண்டு பின் விடுவித்து வேகமாக வெளியே வந்தாள்.மற்றவர்கள் ஸ்ரீயை சூழ, என்னை தனியே விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டாள். அனைவரும் வெளியே வந்தனர்.அகில் அவள் அருகே வர, அவள் திரும்பிக் கொண்டாள். பின் அர்ச்சுவை பார்த்து நடந்ததை அறிந்து கொண்டு அவனை திட்டினார்கள். அவன் கண்டுகொள்ளவே இல்லை.

நித்தி சைலேஷ் பேசியதை சொன்னாள். மற்றவர்கள் மகிழ்ந்தனர்.ஸ்ரீயை பார்த்தீர்களா?நித்தி கேட்க, அவர்கள் நடந்ததை கூறினார்கள்.நித்தியும், அர்ச்சுவும் செல்ல முற்பட, வேண்டாம் தடுத்தான் அகில்.கொஞ்ச நேரம் கழித்து சென்று பார்க்கலாம்.

               “இழந்தேன்! இழந்தேன்!

                   உமை இழந்தேன்

                  தெய்வமானீர்கள்

                   எனை விட்டு……….

              நீவில்லாது தொலைத்தேன்…..

                 தொலைந்தேன்….

              நான் நானாக இல்லையே

             இனி ஏது உலகெனக்கு……..?”