ஹாய்…ப்ரெண்ட்ஸ்…
இனிய இரவு வணக்கம் மக்களே..
உங்களுக்கான இன்றைய எபிசோடு 28…. தரமான சம்பவத்தோடு….
அம்மா…கொஞ்ச நாட்கள் அவள் இங்கேயே தங்கட்டும் அர்ச்சு கூற, எங்களுடைய ஆன்ட்டி…நிவாஸ் அவனது புருவத்தை உயர்த்தினான்.
தாடையை பற்றியவாறு சிந்தித்தவன் ஜிதின் நம்பரை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்.
பேசி விட்டு உள்ளே வந்த அர்ச்சு, எல்லாரும் கல்லூரிக்கு கிளம்புங்கள்.நானும் சீக்கிரம் வந்து விடுகிறேன் என்றான். அவனை அதிர்ந்து பார்த்தனர்.
ம்ம்…உங்களது கல்லூரிக்கு தான் என்றான்.ஸ்ரீயும் அங்கே தான் இருந்தாள்.
எப்படிடா?
நான் முடிவெடுத்து விட்டேன் என்று குறும்பாக கண்ணடித்தான் கவினை பார்த்து.
டேய்…..நிஜமாக தான் கூறுகிறாயா?
ஆமாடா…..எனக்கு முக்கியமான வேலை ஒன்று உள்ளது என்று கிளம்ப சைலேஷ் அங்கே வந்தான்.அனைவரும் அவனை பார்த்து, அம்மாவிடம் அறிமுகப்படுத்த, இன்பாவின் நண்பன் என்றும் பேசினான் அவன். பின் ஸ்ரீயை பார்த்து
உனக்கு என்ன ஆயிற்று? இங்கே இருக்கிறாய்?
அவள் என்னை பார்க்க வந்தாள். அவள் உடல் சோர்வால் மயங்கி விட்டாள். அதனால் இங்கே இருக்கிறாள் தாரிகா கூறினாள்.
தேங்க்ஸ்மா…நேற்று ரொம்ப பிரச்சனையாகி விட்டது. நீ உன் ஆன்ட்டியிடம் பேசினாயா? அவன் கேட்க, ஸ்ரீ தலையசைத்தாள்.
பிரச்சனை முடிந்ததா சார்?
முடிந்ததுமா. ஆனால் இன்னொன்று இருக்கிறதே என்று தாரிகாவை பார்த்தான்.
அவர்கள் இனி மற்றவர்களை காயப்படுத்தினால் உங்கள் கல்லூரியில் இடமில்லை திட்டவட்டமாக ஒப்பந்தம் போட்டீர்கள் என்றால் நான் மன்னித்து விடுவேன். அதை வைத்து பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள் சார் என்றாள் தாரிகா.
அவன் இன்முகத்தோடு சரி என்றான்.
தயங்கிக் கொண்டே, கல்லூரிக்கு ஏதும் பெரிய பிரச்சனையா? கேட்டான் கவின்.
நேற்று இங்கிருந்து கிளம்பியது பிரச்சனையால் தான்.
இங்கே வந்தீர்களா?அம்மா கேட்க, தலையசைத்தான் சைலேஷ்
ஏய் தாரிம்மா.சொல்லவே இல்லை.
அம்மா…நேற்று நடந்த டென்சனில் மறந்து விட்டேன் என்று கவினை பார்த்தாள்.
சரி….சரி…
நான் வந்த ஒரே நாளில் பிரச்சனையாகி விட்டது. கல்லூரிக்கு இது நல்லதல்ல என்று என்னை வெளியேற சொல்லி தாத்தாவிடம் பிரச்சனை செய்தார்கள் போர்டு மெம்பர்ஸ். இப்பொழுது சரியாகி விட்டது என்றான். பின் உன் உடல் சரியாகி விட்டதா? இன்று கல்லூரி வருவாய் தானே! தாரிகாவை பார்த்து கேட்டான்.
ம்ம்ம்…என்றவள் குறுஞ்சிரிப்போடு சார் நான் கண்டிப்பாக வந்து விடுவேன்.
பெருமூச்செடுத்தவன்….அர்ச்சுவை பார்த்து இங்கே தான் இருக்கிறாயா? அம்மா என்னிடம் பேசினார்கள் என்று மகிழ்ச்சியோடு சைலேஷ் கூற,
அம்மாவா…? நான் அங்கிளிடம் தானே கேட்டேன்?
அம்மா தான் பேசினார்கள். “வெல்கம் மை புரோ” என்றான் அர்ச்சு தோளில் தட்டியவாறு.
ம்ம்ம்…என்றவன் போனை எடுத்து,அங்கிள் என்றான் அழுத்தத்துடன்.
அம்மாவிற்கு தெரிந்து விட்டதுயா….சாரி என்றார்.
சரி என்று போனை அணைத்தவன். சார் இதோ வருகிறேன் என்று வெளியே சென்று ஜிதினுக்காக காத்திருந்தான் அர்ச்சு. கொஞ்ச நேரத்தில் வந்த ஜிதினிடம் பையை வாங்கினான். அம்மா தான் அவளுடைய ஆடையை எடுத்து கொடுத்தார்கள். நான் அவளை பார்க்கலாமா? ஜிதின் கேட்க, இவன் என்ன என்னிடம் கேட்கிறான்? என்று மனதினுள் நினைத்தவாறு அர்ச்சு வழி விட உள்ளே வந்தான்.அர்ச்சு உள்ளே நுழைந்து ஸ்ரீயிடம் சென்று இதில் உன்னுடைய ஆடைகள் உள்ளது. ஒரு மாதம் நீ இங்கே இரு என்றான்.
அவள் பேசுவதற்குள், நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன் என்றான் ஜிதின்.
நீ இங்கே என்ன செய்கிறாய்? சிடுசிடுத்தான் நிவாஸ். சைலேஷ் கவனிப்பதை பார்த்த ஸ்ரீ, நிவாஸ் கையை அழுத்தினாள்.
நான் ஸ்ரீயை பார்க்க வந்தேன். கிளம்புகிறேன் அவன் கிளம்ப,
இருங்க தம்பி என்று ஒரு டம்லர் பாலை எடுத்து வந்தார் தாரிகாவின் அம்மா.
அவர் ஜிதின் அருகே வர, அவனது உடலை நடுக்கம் தொற்றியது. அவன் வாங்கி தயங்கிக் கொண்டே,குடித்தவன் ஓரிடத்தில் வைத்து விட்டு ஓடினான். அவனை அனைவரும் ஒருவாறு பார்த்தனர்.கவினும் அர்ச்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அனைவரும் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.கல்லூரியில் அகில், நித்தி, அபினவ், யாசு பேசிக் கொண்டிருக்க, இன்பா உள்ளே நுழைய, அவளிடம் பேச அபி முன் வந்த சமயம் கவின் அவர்கள் இடையே கவனமில்லாது வண்டியில் சென்றான்.
கவின்…கவின்…நித்தியின் அரவத்தை கூட கவனியாது அவன் செல்ல, அபி இன்பாவை தவிர்த்து கவின் பின் ஓடினான். ஒருவழியாக அவனை நிறுத்தியவன் திட்டிக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் நிவாஸ் அர்ச்சு ஸ்ரீ மீது வைத்துள்ள காதலை பற்றி சிந்தித்தவாறு கல்லூரிக்குள் வந்தவன் ஒரு பெண் மீது மோத அவள் பொருட்கள் கீழே விழுந்தது. அவள் அவனை அடித்து விட்டு திட்ட, நிவாஸோ வேறொரு உலகத்தில் வலம் வர, தாரிகாவும் வந்தாள் அமைதியாகவே….
என்ன நடக்கிறது? இவர்கள் அனைவருக்கும் என்ன ஆயிற்று? நித்தி வித்தியாசமான பார்வையை உதிர்த்தாள்.
ஹே, அங்க பாருங்கடி…ஐஸ்கிரீம் மாதிரி இருக்கான்டி அந்த பையன். வாவ்…..வாயை பிளந்து கொண்டு மற்ற பெண்கள் பார்க்க, அகிலும் நண்பர்களும் கவனித்தனர்.
அர்ச்சு எப்பொழுதும் போல் இல்லாமல் பணக்கார தோற்றத்து உடையுடன் கூலிங்கிளாஸ் அணிந்து அனைத்து பெண்களையும் கவர்ந்து கொண்டிருந்தான்.அகிலும் மற்றவர்களும் அவனருகே வர, அர்ச்சுவை சுற்றி பெண்கள் நிற்க, அவன் கொடுத்த ஒரே குரலில் அனைவரும் நகர்ந்தனர்.
யாரும் என் அருகே நெருங்க நினைக்காதீர்கள்! அருவருப்பு குரலில் பேச அனைவரும் ஸ்தம்பித்து விலகினர்.
நீ எதற்கு டா… இங்கே வந்தாய்?அகில் கேட்டான்.
நீங்கள் அனைவரும் இங்கிருக்க, நான் எங்கே செல்வேன் என்று கூலாக பேசிக் கொண்டே, அகில் வண்டியை நோக்கி சென்றான் அர்ச்சு.
அர்ச்சுவை பார்த்த ஆதேஷ்,….அண்ணா…நீங்களும் இங்கே வந்து விட்டீர்களா? அவனை அணைக்க, அர்ச்சுவும் அவனை அணைத்து விட்டு தோளை குலுக்கினான்.
டேய்….அர்ச்சு…..கலங்கிய குரலுடன் ஒருவன் அவன் முன் வர, தருண்….என்று அர்ச்சு அவனை அணைத்துக் கொண்டான்.
எத்தனை வருடங்களாயிற்று?…ஆர்வமாக இருவரும் பேச, அண்ணா சீனியரை உங்களுக்கு என்று ஆதேஷ் கேட்டான்.
நாங்கள் ஒரே பள்ளியில் தான் படித்தோம் என்றவுடன் தருண் முகம் சுருங்கியது. அதை கவனித்த அர்ச்சு, என்னுடைய தோழன் டா…என்றான் தருணை அணைத்தவாறு.
நித்தி, யாசு ஓடி வந்து, ஹாய்… என்னடா சொல்லவே இல்லை.எல்லாமே புதுசா தெரியுதே? கண்ணை சிமிட்டியவாறு யாசு கேட்டாள்.
புதுசா யோசிச்சேன். நல்லா தானே இருக்கு… குறும்பாக அர்ச்சு கூறினான்.
அட…..செம்மையா இருக்குடா….உனக்கென்ன? என்று அவனை நெட்டி முறித்தாள் நித்தி.
அகிலுக்கு கோபம் பொங்க, அங்கே வந்தனர் கவினும் அகிலும். அகில் அர்ச்சுவை கோபம் கலந்த பாசத்தோடு பார்க்க,
ஏன்டா, அப்படி பார்க்கிறாய்?
எங்கள் அர்ச்சு முழுதாக மாறிய சந்தோசம் தான் என்றவுடன் தொண்டையை செறுமினான் அகில்.
நித்தி பேச்சை மாற்ற என்று, நீ எந்த பிரிவு? போட்டோகிராபி தானே? அந்த கல்லூரியில் அது தானே எடுத்தாய்?
ஆம்…ஆனால் இப்பொழுது மாற்றி இருக்கிறேன். என்னுடைய பேஸனாக போட்டோகிராபியும் மெயினா பிஸினஸ் பற்றியும் படிக்க போகிறேன் என்றவுடன் தருணிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.
என்னுடைய வகுப்பா? தருண் ஆசையுடன் கேட்க, இல்லைடா…. முதல் வருடம் என்று அர்ச்சு ஆதேஷை பார்த்தான்.
அண்ணா…..என்னுடனா?..அவன் கேட்க, தலையசைத்தான் அர்ச்சு.
இன்பா தான் அந்த வகுப்பு ஆசிரியையாக வரப் போகிறாள் என்று அறியாதிருந்தனர் அவளையும் சேர்த்து.
நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால், ஆசிரிய, ஆசிரியைகளின் அறை நோக்கி சென்று கொண்டிருந்த இன்பாவை தடுத்தாள் அந்த ராட்சசி நந்தினி. நம் சைலேஷின் பழைய காதலி.
என்னடி….உன் நண்பனை விட்டு பிரிந்திருக்கவே முடியாது போல, நீ அவனை முடிந்து வைத்திருக்கிறாயா? இல்லை அவன் உன்னை……அவள் கேட்ட மறு நொடியே கன்னத்தை பிடித்திருந்தாள் அந்த நந்தினி.
ஆம்….இன்பா அவளை அறைந்திருந்தாள்.
எங்களை பற்றி என்ன பேசுற? அவன் என்னுடைய தோழன்.
மேடம்….நடந்ததை மறந்து விட்டாயா? அனைவருக்கும் தெரிந்தால் உன்னை பற்றி என்ன நினைப்பார்கள்? மரியாதையாக வழியை விடு…இல்லையென்றால் அவ்வளவு தான் என்று உதட்டை மடித்து ஆள் காட்டி விரலை காட்டி நந்தினியை மிரட்டினாள் இன்பா.
அனைவரும் அதிர்ந்து அவளை பார்க்க, அபிக்கு ஆச்சர்யம் தான். நேற்று எப்படி இருந்தவள். இப்பொழுது? கையை வாயில் வைத்தான்.
இப்படி கூறி மிரட்டினால் நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா? நந்தினி கேட்டாள்.
அச்சோ….நான் மறந்து விட்டேனே! உன்னை போல் வெட்கம், மானம் சூடு சுரணை இல்லாத ஜென்மத்திடம் போய் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை…. ச்சே….வழிய விடு….கர்ஜித்தாள்.
நல்லவள் போல் நின்று கொண்டிருந்த நந்தினியோ….. இன்பாவை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு,….சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களிடம் திரும்பி,
இவளுடைய அப்பா இறந்ததே அவளால் தான். இவள் தான் அவளுடைய அப்பாவை கொன்று விட்டாள். அதுவும் பணத்திற்காக….அவள் கூற,
அப்பா…….என்றவுடன் இன்பா கண்ணில் நீர் வழிந்தோட, அமைதியாக இருந்தாள். நடப்பதை அறிந்து சைலேஷ் அங்கு வந்தான்.
ச்சீ…..நீ என்னை பற்றி பேசுகிறாயா? நந்தினி இன்பாவை அடிக்க வர, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபியும், சைலேசும்,கல்லூரி முதல்வரும் இன்பா அருகே வந்தனர். நந்தினியை ஒரு கை தடுத்தது. அனைவரது கண்களும் அகல, இதயா தான் நந்தினி கையை பிடித்து தள்ளி விட்டு இன்பாவை அணைத்து சமாதானப்படுத்தினாள். பின் இவள் என்னுடைய அக்கா. அவள் மீது கை வைத்தால் உடைத்து விடுவேன் நந்தினி முன் வந்து,…
ச்சீயா….? என்ன? எங்கள் அப்பா இறந்தது இன்பாவால் இல்லை. ஒரு பொம்பளை பொறுக்கியால். அவன் மட்டும் என் கையில் சிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்.
ஹே….காய்ஸ்…உங்களுக்கு மேடம் பற்றி தெரியுமா? பணமிருந்தால் எவனுடனும் செல்வாள் இந்த பொம்பளை.காதல் என்ற பெயரில் பணத்திற்காக ஒருவனை ஏமாற்றியவள்.
இன்பா அவளை தடுத்தாள். விடுக்கா…என்று இதயா மீண்டும் தொடர்ந்தாள்.
அவருக்கு உண்மை தெரிந்தவுடன் அவரை விட்டு பணக்காரி போல் நடித்து வேறோருவனை திருமணம் செய்து அவர்கள் வீட்டில் இவள் உண்மை குணம் தெரிந்து வாய்ப்பு கொடுத்தும் விவகாரத்து செய்து வெளியே வந்தவள். இவள் என் அக்காவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
இப்படி பட்டவளை இந்த கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதித்து உள்ளது. இது சரியா? அனைவரிடமும் கத்தினாள் இதயா.
வெளியே போ….வெளியே போ…..அனைவரும் நந்தினியை பார்த்து கத்த,அவள் அவமானத்தில் குறுகியவள், தலை நிமிராது உங்களை சும்மா விட மாட்டேன் என்று பல்லை கடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள். அனைவரும் கலைந்தனர்.
இன்பா இடுப்பில் கையை வைத்துக் கொண்டு இதயாவை பார்த்து, என்னடி இப்படி பேசுகிறாய்? ஏன்டி இப்படி செய்கிறாய்? இருக்கும் பிரச்சனை போதாதா?
அக்கா இது உனக்காக மட்டுமல்ல என்று இதயா சைலேஷை பார்த்து விட்டு நித்தியை பார்த்தாள். அகில் நண்பர்களும் முன் வர,
அந்த நந்தினிக்கு,முன்பே நித்தியை பற்றி அனைத்தும் தெரிந்திருக்கிறது. அவள் நித்திய வக்கிர எண்ணத்துடம் பார்ப்பதை நானே பல முறை கவனித்து இருக்கிறேன். நான் செய்தது சரிதானே அண்ணா?…..அவள் சைலேஷை பார்க்க, ஒரு நிமிடம் யோசித்தவன் அவளை பார்த்து புன்னகையை உதிர்த்தான்.
அனைவரும் வகுப்பிற்கு செல்ல, இன்பா மற்றும் நித்தியை பார்த்து தனியே எங்கும் செல்லாதீர்கள் சைலேஷ் கூறி விட்டு முதல்வர் அறைக்கு சென்று நந்தினி வேலையிலிருந்து நிறுத்துவதாக கட்டளை இட்டு சென்றான் சைலேஷ்.
” காதலின் வலிமையை
யாரால்
உணர முடியும்
காதலிப்பவர்களால் தானே…..
உண்மையானவர்கள்
தன் காதலையும்
விட்டு கொடுப்பர்
தன் காதலிக்காக மட்டுமே!”