அத்தியாயம் 131

பிரகதி எங்க போற? ஸ்ரீ அவள் பின் செல்ல, இன்பா, தாரிகா, மற்றவர்களும் சென்றனர். அவள் அந்த கிளிகள் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள். இரண்டு கிளிகளும் அணைத்தவாறு இறந்திருக்கும் அதை பார்த்து கண்ணீருடன் அதை எடுக்க கையை கொண்டு போனாள். அவள் கைகள் நடுங்கியது.

ஹே..அர்ஜூன், காலையிலே வர சொல்லி இருக்க? என்று தருண் அங்கே வந்து பொண்ணுங்களை பார்த்து, என்ன செய்றீங்க? என்று அருகே சென்று பார்த்தான்.

கிளியை பார்த்து,..ஹே உயிரோட இருக்கா? என்று பிரகதி, இதயா இடையே வந்து பிரகதியை பார்த்தான். பசங்களும் அங்கே வந்து பார்த்தனர். அர்ஜூனும் அவர்கள் அருகே வந்தான்.

பிரகதி..என்ன பண்ற? இன்றைக்குள்ள எடுத்துருவியா? அர்ஜூன் கிண்டல் செய்ய, அவனை முறைத்தாள். தருண் அதை தொட்டு பார்த்தான். பிரகதி வழிய விடு என்று அவள் தோளில் கை வைத்து..நான் பார்த்துக்கிறேன். நீ போ..என்று அவளை நகர்த்த, அஜய் முகம் கோபத்தில் சிவந்தது.

அபி அதை பார்த்து..பிரகதி, நீ போ..நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.

அவள் ஏதும் கூறாமல் தருண் இதயாவின் பின்னே நின்றாள். தருண்..பார்த்து பிரிக்காமல் அதை எடுத்து உள்ளே வை என்றாள் பிரகதி. அஜய் அருகே வந்து பார்த்தான். தருண் அதை எடுத்து பாக்சில் வைக்க

என்னடா பண்றீங்க? சந்துரூ கேட்க, ஹாம்..வெட்டி வேலை பாக்குறாங்க என்றான் அஜய். பிரகதி அவனை பார்த்து முறைத்து விட்டு, தருண் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டு, எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்தால் போதும். என் விசயத்தில் தலையிட தேவையில்லை என்று அஜய்யை முறைத்து விட்டு நடந்தாள்.

யாருடா அந்த பொண்ணு? நம்மை அஜய்யை சொல்றது போல தெரியுது? சந்துரூ கேட்க, அண்ணா..அவளுக்கு அஜய் சார் பிரப்போர்ஸ் பண்ணி இருக்காங்க..என்றான் அபி.

அப்படியா? என்ற சந்துரூ..அபி என்ன சொன்ன? அவசரமாக கேட்டான்.

சாருக்கு எங்க ப்ரெண்டை பிடிச்சிருக்காம்.. பிடிச்சிருக்காம்.. பிடிச்சிருக்காம்.. கவின் எதிரொலி போல் எழுப்ப, அவன் தலையில் வந்து விழுந்தது ஒரு கல். பிரகதி தூக்கி எறிய, அடப்பாவி..தாரி இவள் என்னை கொல்ல பார்க்கிறாள் என்று கவின் பிரகதியிடம்.. முடிஞ்சா இப்ப போடு என்று அஜய் அருகே வந்தான். அவளுக்கு கிடைத்ததே வாய்ப்பு என்பது போல் கல்லை எடுத்து வீசினாள்.

இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா என்னை தான்டா ஹாஸ்பிட்டல்ல சேர்க்கணும் என்ற அஜய்..கவனமா இரு என்க..

அஜய்..நான்.. சந்துரூ தயங்க..

உனக்கு என்னிடம் சொல்ல விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் நீ என்னோட ப்ரெண்டுடா..எனக்கு எல்லாமே தெரியும்? யாருக்கும் ஏதும் ஆகாது. பயப்படாமல் நிம்மதியா இரு..என்றான்.

பார்த்துக்கோடா..என்று சந்துரூ அழுதான். இன்பா புரியாமல்..என்ன பேசுறீங்கடா? கேட்டாள்.

நான் வக்கிறேன்டா.

சாரிடா..நீ கரியர்ல போகஸா இருந்தியா? தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு தான் சொல்லலைடா.

கரியர் எனக்கு முக்கியம் தான். அதுக்கு உங்களை விட்ருவேனாடா? யாருமே எதுவுமே சொல்லலை என்று அஜய் வருத்தமுடன் சொல்ல..

இனி சொல்லீட்டா போச்சு இன்பா கூறினாள்.

என்ன சொல்வ? என்று அஜய் கேட்டான்.

தெரியல. நாம தனியா பேசுவோம். இந்த கையை வச்சுக்கிட்டு சண்டை போட்டுருக்க? போ..கையை பாரு அக்கறையுடன் இன்பா கூற, அஜய்க்கு நேற்று பிரகதி கூறியது நினைவுக்கு வந்தது.

அகிலை பார்த்து, நான் சொன்ன மாதிரி செய்யுங்க என்று தருணை முறைத்து விட்டு வா..அர்ஜூன். பேசணும் என்று முன் செல்ல, பிரகதி  அந்த பாக்ஸை வைத்துக் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள்.

அர்ஜூன் அவளை பார்த்து, கைல்ல வச்சுக்கிட்டு என்ன செய்ற? கேட்டான்.

அர்ஜூன்..அப்புறம் பேசிக்கலாம். நாம இங்க வந்து அரைமணி நேரமாச்சு. அவன் போனை வைத்து பத்து நிமிசத்துக்கு மேல் ஆகுது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் எனக்கு போன் வரும். அதற்க்குள் ஏற்பாட்டை கவனிக்கணும். சீக்கிரம் வா..என்றான்.

சார்,..

நான்..உன்னோட மாமாகிட்ட பேசணும். நான் என்னோட ஹெட் கிட்ட பேசணும். சீக்கிரம் வா..என்று பிரகதியை முறைத்து பார்த்தான்.

இதயா, இங்க என்ன நடக்குது? தருண் கேட்க, வா..நாங்க சொல்றோம் என்று அகிலும் மற்றவர்களும் சென்றனர்.

கேரி எங்கடா? அர்ஜூனிடம் அஜய் கேட்க, சார் பாப்பா அழுறான்னு வரலை என்று பேசிக் கொண்டே வீட்டினுள் நுழைய, சித்தப்பூ..என்று அஷ்வின் அழைத்தான்.

மணிய பார்த்தியா? அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும். வயசானவங்கள ரொம்ப நேரம் வச்சிருக்க மாட்டாங்க அவன் அம்மா சொல்ல..

அம்மா..வந்திடுவேன். இன்னும் பதினைந்து நிமிடம் மட்டும் கொடுங்கள் என்றான்.

சீக்கிரம் போயிட்டு வா..

அப்பா..நீங்க எல்லாரையும் அழைத்து போறீங்களா? கேட்டான் அஜய்.

போகலாமே? என்று அவர் எழ..அம்மா கிளம்புங்க.. எல்லாரையும் அழைச்சிட்டு போங்க. வீட்ல என்னையும் அர்ஜூனையும் தவிர யாரும் இருக்க வேண்டாம் என்று அஜய் அஷ்வினிடம், நான் வேலையை முடிச்சிட்டு வாரேன் என்று சொல்லி விட்டு அர்ஜூனுடன் அவன் இருக்கும் அறைக்கு சென்று..அர்ஜூன் மாமாவிற்கு போன் செய்து கொடு என்று போனை வாங்கி அஜய் பேசினான். அவருக்கும் அவனை தெரிந்திருக்கும்.

அவன் ஆபிஸில் இருப்பவர்களுக்கு போலீஸ் புரடெக்சனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கேட்டான். ஒருவன் இருவன்னா..நான் செய்வேன். ஆனால் பெரிய ஆளுங்க யாராவது சொன்னா நல்லா இருக்குமே? என்றார்.

சரிங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்தில் கால் வரும். அப்ரூவல் கொடுங்க. நம்பிக்கையாவங்கலா கொடுங்க..ஏற்கனவே இருவரை கொன்னுட்டாங்க என்றான்.

கவலைப்படாம இருப்பா. யாராவது சொன்னா போதும்..நானே…அவர் சொல்ல,

மாமா, நந்துவை விட்டு போனீங்க. செம்மையா டென்சன் ஆகிடுவேன்.

சரி, நான் ஆபிஸிக்கே போறேன். எனக்கு பதில் என் மூத்த பையன் போவான்..

மூத்த பையனா? இப்ப தான் ஒரு பையனை அறிமுகப்படுத்துனீங்க? அஜய் கேட்க, அவன் அவங்க பையன் தான். அதான் எனக்கும் பையன் என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்து அவரை முறைத்து பார்த்தான். குகனும் போலீஸ் ஆடையில் அவர் முன் வந்து நின்று..அம்மா இங்க வாங்க..என்றான்.

மேகா வந்து, வாவ்..பெர்பைக்டா இருக்கு என்றாள்.

ஓய்..என்ன? நந்து கேட்க, நல்லா தான இருக்கு என்றாள்.

மாமா, என்னது பர்ஃபைக்ட்?

அதுவா குகன் டியூட்டில்ல ஜாயின் பண்ணப் போறான். போலீஸ் ஆடையில் வந்திருக்கான்.

அர்ஜூன் புன்னகையுடன், டேய்..நந்து உன்னோட பொசசிவ்வுக்கு அளவில்லாமல் போச்சு.

அர்ஜூன் போதும். நான் உன்னிடம் அப்புறம் பேசிக்கிறேன் என்றான்.

நந்து அம்மா அங்கே வர..அப்பா எழுந்திருங்க என்று இருவரையும் நிற்க வைத்து ஆசி பெற்று அவன் செல்ல, குகா..இரு நானும் வாரேன் என்று எழுந்தார் சுந்தரம்.

நந்து நான் மதியம் வர மாட்டேன். ஈவ்னிங் இல்லை நைட் தான் வருவேன் என்று ருத்ராவை பார்த்தார். அவர் புன்னகைத்தார்.

அப்பா, நீங்க அம்மாகிட்ட நேராவே சொல்லி இருக்கலாமே?

நீ தான் கோபமா இருக்கிறாயே?

சரி, போயிட்டு வாங்க. இவனுடன் நீங்க சுத்தக் கூடாது என்று கட்டளையிட்டான்.

மாமா..ரொம்ப பேசுறான்ல..அர்ஜூன் கேட்க, இல்லை அர்ஜூன்..இந்த மாதிரி உரிமையா கோபப்படுறதை பார்க்க சந்தோசமா இருக்கு என்று நந்துவை அணைத்தார். அவனும் அணைத்துக் கொண்டான்.

போதும்ப்பா..என்னால பார்க்க முடியலை மேகா கேலி செய்ய, உனக்கு பொறாமையா இருக்கா? குகன் மேகா அருகே வந்தான்.

ஹேய்..நீ கிளம்பு என்று நந்து குகன் கையை பிடித்து இழுத்து சென்றான். அப்பா..அவனை முதல்ல கூட்டிட்டு போங்க என்றான் நந்து.

நீங்க முன்னாடி போங்கப்பா..வாரேன் குகன் சொல்ல,..

சும்மா வாப்பா..இல்லை. யாரும் கேட்டால் சரியா இருக்காது.

நீ என் பையன்னு சொல்லிடுவேன். நீ வா..என்று அழைத்து பேசிக் கொண்டே சென்றனர்.

அர்ஜூன், அஜய் கிருஷ்ணாவிடம் போனை கொடு என்று சுந்தரம் சொல்ல, அர்ஜூன் அஜய்யிடம் கொடுத்தான்.

நான் அனுப்புகிறேன். ஏதும் பெரிய பிரச்சனை என்றால் சொல்லுங்க.. என்றார்.

சார்,..ஆட்களை மட்டும் பார்த்துக்க அனுப்புங்க. போதும். எல்லாரும் என்னோட ஆபிஸில் தான் இருப்பாங்க. சாப்பாடு..எல்லாத்துக்கும் கரெக்ட்டா அரேஜ் பண்ணி இருக்கேன். வர்றவங்கலையும் செக் பண்ண சொல்லுங்க. எல்லாருடனும் உள்ளேயே இருந்துக்கட்டும் என்றான். அவரும் ஒத்துக் கொண்டு போனை வைத்தார்.

சார், யாழினி அக்கா பாதுகாப்பா இருப்பாங்கல்ல?

கண்டிப்பா. பாதுகாப்பா தான் இருப்பா.

இருவரும் பேசி விட்டு கீழே வர, அவன் அசிஸ்டென்ட் அழைத்தான்.

சார், நான் கேஸ முடிச்சிட்டு வாரேன் என்று சரண் சொல்ல, “ஆல் தி பெஸ்ட்” இன்றே முடிக்கணும். மறந்துறாத என்று அஜய் சொல்லிக் கொண்டே கீழே பார்த்தான். இன்பாவும், பிரகதியும் மட்டும் கீழே இருந்தனர்.

ஏய்..நீங்க போகலையா?

இல்ல போக முடியலை. வேலை முடிஞ்சிருச்சா..போகாலமா? இன்பா அவசரமாக கேட்டாள்.

ஏன் போகலைன்னு கேட்டேன்? அஜய் கேட்க, எல்லாத்தையும் சொல்ல முடியுமா? இன்பா பிரகதியை கண்ணை காட்டினாள். அவள் தலை ஈரமாக இருக்க, அர்ஜூன் புரிந்து கொண்டான்.

ஏன்? வாயில எதையும் முழுங்கிட்டியா? அஜய் கேட்க, டேய்..பீரியட்ஸ் என்றாள் இன்பா.

ஓ..என்ற அஜய் அவளை பார்த்தான். அவள் அமைதியாக இருந்தாள். குளிச்சதோட அங்க போனா யாராவது ஏதாவது நினைப்பாங்க. அவள் வீட்டிலே இருக்கட்டும் என்று அர்ஜூனை பார்த்தான் அஜய்.

அனு தேடுவா? நான் கிளம்புகிறேன். மேம் வாரீங்களா? அர்ஜூன் கேட்க, பிரகதி பதட்டமாக, நானும் வாரேன் அர்ஜூன் என்றாள்.

சொன்னா கேளு. அங்க வந்தா நீ மறுபடியும் குளிக்கணும். சளி பிடிக்கும். இங்கேயே இரு..சார், உங்களுக்கு கையில அடிபட்டிருக்குல்ல. பிரகதிக்கு உதவினீங்கல்ல. இப்ப ஓய்வெடுங்க. அங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று அர்ஜூனும் இன்பாவும் செல்ல, அஜய் பிரகதியை பார்த்தான்.

சார், நான் என் அறைக்கு போகவா? பிரகதி கேட்டாள். அஜய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அருகே வந்து அமர்ந்தான்.

சார்..என்று அவள் அவனை பார்க்க, நான் கோபத்தில் அடிச்சிட்டேன். இவன் ரொம்ப டேஞ்சரா இருக்கான். தனியா எங்கேயும் போகாத. யாரிடமாவது சொல்லிட்டு போ..என்றான். அஜய் போன் அழைக்க பிரகதியை பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்.

சொல்லு பாரு.

சார், பயமா இருக்கு. சரணுக்கு ஏதும் ஆகாதுல்ல அவள் பயத்துடன் கேட்க,

பாரு..எல்லாரும் வந்தாச்சா?

வந்துட்டாங்க சார்.

அவனுக்கு ஏதும் ஆகாது. நீங்க எல்லா பக்கமும் லாக் பண்ணிக்கோங்க. போலீஸ் பாதுகாப்புக்கு வருவாங்க. பார்த்துக்கோங்க என்று அவன் புருவம் சுருங்க..யார் அழுறா? எதுக்கு? கேட்டான்.

சார், கீர்த்தி தான் வந்ததுல இருந்தே அழுதுகிட்டே இருக்கா. வைசுவும் அவளும் டீப் ப்ரெண்ட்ஸல என்று அவளும் வருத்தப்பட்டாள்.

சரி, எல்லாரும் என்ன பண்றீங்க?

சார், ஆபிஸே மாறி போயிருக்கு.

மாறி போச்சா.

பசங்களும் ரொம்ப அமைதியா இருக்காங்க. ஓயாது பேசுற மலையுமே அமைதியா இருக்கான் என்று அவள் சொல்ல வீடியோ கால் வாங்க.. என்றான். அவளும் வந்தாள்.

ஆமா..ரொம்ப தான் அமைதியா இருக்காங்க.

பாய்ஸ், சார் பேசணுமாம்..என்று பாரு சொல்ல,

என்னடா பயப்படுறீங்களா? நம்ம லைஃப்ல இதெல்லாம் சகஜம் தானே? அஜய் கேட்க, சார் வீட்ல அம்மா, தங்கச்சி எல்லாரும் இருக்காங்க. பயமா இருக்காதா? நம்ம இந்த மாதிரி கேஸை பார்த்ததில்லை.

பார்க்கணும். இதை விட கிரிட்டிக்கல் கேஸ்லாம் இருக்கு என்று மலை..ரொம்ப அமைதியா இருக்க? என்று அஜய் கேட்க, போங்க சார். இப்படி அடைச்சு வச்சுட்டீங்க?

ஏன்டா, பேமிலிய நினைச்சு பயப்படுறியா?

பயமா? யாருமே வேண்டாம் சார். என்னோட தங்கச்சி டிரஸ்ல எவனாது கையை வச்சான் அந்த இடத்திலே அவன் காலி. என் தங்கச்சி கொன்றுவா.

அப்புறம் என்ன? சினத்துடன் கேட்டான்.

இப்படி அடைச்சு போட்டா. எப்படி சரக்கு அடிக்கிறது? அவன் கேட்க, எந்த நேரத்துல என்ன கேக்குற? என்று அனைவரும் அவனை மொத்தி எடுத்தனர்.

சரி, வெட்டியா இருக்காம..நான் சொல்றதை செய்யுங்க. இந்த கொலைகாரனை பற்றி எனக்கு தெரியாத விசயத்தை கலெக்ட் செய்து சொல்லணும். இரண்டு நாள் தாரேன். யார் சொல்றீங்கன்னு பார்க்கலாம்?

சார், உங்களுக்கு தெரியாததை நாங்க எப்படி சொல்றது? ராஜீ கேட்க, வெளிய போகாம எப்படி சார் கண்டுபிடிக்கிறது? ஒருவன் கேட்க,

நீங்க என்னோட வேலை பார்க்குறீங்களா? நீங்களெல்லாம் லாயர்ஸ்..இத்தனை நாள் எத்தனை கேஸ் பார்த்திருப்பீங்க? எல்லாத்தையும் வெளிய போய் தான் முடிச்சீங்களா? நம்ம ஜீனியரை கொன்றுருக்கான். ஒரு வேகம் வேண்டாமா? எனக்கு தெரியாது இல்லாமல் இருக்கக்கூடாதாம்மா..உங்க மேல முதல்ல நம்பிக்கை வையுங்க..

சார்..நீங்க இவ்வளவு அமைதியா பேச மாட்டீங்களே? நாங்க பேசியதுக்கு இப்ப கத்தி இருக்கணுமே? என்று ஒருவன் கேட்க, அனைவரும் அவன் முன் வந்து உற்று பார்த்தனர்.

என்னடா பண்றீங்க?

சார்…கொஞ்சம் ரைட் சைடு திருப்புங்க..என்று போனை திருப்ப சொல்ல, அவன் பிரகதி இருப்பதை மறந்து திருப்பினான்.

ஹே, சார் பக்கத்துல ஒரு பொண்ணு இருக்காங்கடா. பக்கத்துலடா.. ஒருவன் சத்தமிட,..பிரகதியை பார்த்து விட்டு போனை அவன் பக்கம் திருப்பினான்.

சார், யாரு சார் அந்த பொண்ணு? வீட்ல முடிவு பண்ணீட்டாங்களா? பாரு கேட்க, சார்..பொண்ணு சூப்பர்..என்றான் ஒருவன்.

டேய்..வாயை மூடு என்று கீர்த்தி அவனை திட்ட, சார்..சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்துராதீங்க? பொண்ணு ஒன்று சொல்ல, சார். ஜோடி சூப்பர் மற்றொருவன் சொல்ல, அஜய் புன்னகைத்தான்.

ஹே..சார்..சிரிக்கிறாருப்பா.

சார், நாங்க சரியா பார்க்கலை. திரும்ப சிரிச்சு காட்டுங்க ஒரு பொண்ணு சொல்ல, சார் அவங்க பேரு என்ன? ஒரு பொண்ணு கேட்டுக் கொண்டிருக்கும் போதே, பிரகதி எழுந்து அவளறைக்கு சென்றாள்.

சார், மேடம் கோவிச்சுட்டாங்களா? அவர்கள் கேட்க, நான் கொடுத்த வேலையை முடிங்க என்று போனை வைத்தான் அஜய்.

பிரகதி அறையை பூட்டி இருக்க, பிரகதி கதவை திற..என்றான் அஜய்.

சார், நீங்களும் ஓய்வெடுங்க. நான் ரெஸ்ட் எடுக்கணும் என்றாள்.

சரி, நீ ரெஸ்ட் எடு. ஆனால் இப்ப கதவை திற. அவள் சத்தம் கேட்காமலிருக்க..கதவை திறக்கலைன்னா உடைச்சிருவேன் என்று சொல்லியும் அவள் அமைதியாக இருந்தாள். அவன் கதவை உடைக்க எண்ணி ஓடி வந்து கதவில் கையை வைக்க, கதவு திறக்கப்பட்டது.

ஓடி வந்த அஜய் கதவை உடைக்க வந்தான். கதவை திறந்த பிரகதியை பார்த்து கையை நகர்த்தி அவளை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். அவன் அடிபட்ட கை தரையில் இடித்து வலிக்க..ஆ..என்று சத்தமிட்டான். அவளும் வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும் சார், என்னாச்சு? என்று கேட்டாள். அவள் அவன் மீதிருப்பதை உணராது பேச, அவளது ஈரகற்றைகள் அவன் முகத்தில் விழுந்தது. அதை அவன் நுகர்ந்து விட்டு மெதுவாக முடியை விலக்க, அவள் இதழ்கள் அவனை அழைக்க.. அவள் கண்களை பார்த்துக் கொண்டு மெதுவாக அவள் இதழருகே வந்தான். அப்பொழுது தான் அவள் அவன் மீதிருப்பதை உணர்ந்து விலகினாள். அவன் உணர்வுகள் அனைத்தும் கலைந்தது.

விலகிய பிரகதியின் நாசி எதையோ உணர்த்த அவனருகே வந்தாள். ஆனால் அவளுக்கு அந்த வாசம் எதையோ நினைவுபடுத்த அழுது கொண்டே எழுந்து பின்னே நகர்ந்தாள். அன்றைய நினைவில் தன் அருகே இருந்த அஜய் மறைந்து இருக்க பின்னே நகர்ந்து படுக்கையில் விழுந்து பயத்துடன் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு அழுதாள்.

அஜய் பயந்து எழுந்து அவளிடம் வந்து போர்வையை விலக்க, அவள் இறுக்கமாக பற்றி இருந்தாள். அவன் வேகமாக போர்வையை உருவ, பயந்து கட்டிலின் மறுபக்கம் சென்று ஓரமாக அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள். அஜய் அவளருகே வந்து தோளில் கை வைக்க, என் பக்கத்திலே வராதே…என் பக்கத்திலே வராதே..வந்தா கொன்னுருவேன் என்று கதறினாள். அவன் பயந்து விலகினான்.

அவள் அன்றைய நினைவில் அஜய் என்றும் பாராது என்னை ஏதும் செய்யாதே.. செய்யாதே..அவனை அடிக்க, ஒரு கட்டத்தில் அவன் உடைந்து அழுது கொண்டே..பிரகதி நான் தான்..உன்னருகே யாருமில்லை..என்று கத்தினான். அவள் அழுகை நின்று அஜய்யை பார்க்க..அன்று அவள் இரத்த வெள்ளத்தில் இருந்த போது உதவிய அஜய் நினைவு வந்தது. அவள் அழுது கொண்டே அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

அவங்க திரும்ப வந்துட்டாங்கன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் என்று அழ, அவர்கள் இருக்கும் அறை முன் வந்து நின்றனர் அஜய்யின் அப்பாவும், அத்தை குடும்பமும்.

மாமா..என்ற சத்தத்தில் அஜய் விலக, ஏற்கனவே பயத்தில் இருந்த பிரகதி அஜய் அத்தை பொண்ணு கத்தலில் அவன் மார்பிலே சாய்ந்து மயங்கினாள்.

அவன் யாரையும் கண்டுகொள்ளாமல், என்னை பாரும்மா..பாரு..என்று அஜய் அவள் கன்னத்தில் தட்டினான் கண்ணீருடன்.

மாமா..என்று ரோஸ்னி அஜய் அருகே வந்து, யார் இந்த பொண்ணு? தனியா அவளோட என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்று மேலும் கத்தினாள்.

அவன் முறைப்பில் அமைதியான ரோஸ்னி..மாமா, என்ன பண்றாரு தேவா மாமா? என்று அவன் அப்பாவிடம் கோபமாக கேட்டாள்.

இரும்மா..என்று அவளை விலக்கி விட்டு அஜய்யிடம் வந்தார் அவன் அப்பா. ரோஸ்னி அம்மா, அப்பா அவனை முறைத்த படி நின்றனர். அஜய் பிரகதியை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை தெளிக்க, பிரகதி விழித்தாள்.

சார், நீங்க என்ன பண்றீங்க? அவள் கேட்க, உனக்கு என்னாச்சும்மா? என்று தேவராஜ் கேட்டார்.

சார், எனக்கு தெரியலை. நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கவா? கேட்டுக் கொண்டே சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். ரோஸ்னியும் அவள் குடும்பமும் அவளை முறைப்பதை பார்த்து, அஜய்யை பார்த்தாள். அஜய் அப்பாவும் பிரகதியிடம் நன்றாக பேச, ரோஸ்னிக்கு கோபம் வந்தது.

யாருடி நீ? நீ ஏன்டி என் மாமாவுக்கு பக்கத்தில் இருக்க? என்று பிரகதியிடம் கோபமாக வந்தாள். அஜய் இடை புகுந்து அவள் கையை பிடித்து வெளியே இழுத்து செல்ல, மாப்பிள்ள..என் பொண்ணை விடுங்க..என்று அவள் பெற்றோர்கள் பின்னே ஓடினர். பிரகதி அவன் அப்பாவை பார்க்க, என்னோட தங்கையும் அவள் குடும்பமும்மா. நீ ஓய்வெடு..நான் பார்த்துட்டு வாரேன் என்று அவரும் வெளியே சென்றார்.

என்ன தான் அஜய் காதலை பிரகதி ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவனாகவே அந்த பொண்ணு கையை பிடிக்கும் போது அவள் மனதில் வேதனையை உணர்ந்தாள். அந்த பொண்ணு..அஜய்யின் முறைப்பொண்ணு என்று புரிந்தது. அவளுக்கு அவனை பிடித்ததால் தான் நம்மிடம் கோபமாக பேசினால் என்று மட்டும் பிரகதிக்கு தெளிவாக தெரிந்தது. அவள் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அஜய் அங்கே வந்தான். பிரகதி தூங்குவதாக எண்ணி அவளருகே அமர்ந்து அவள் கையை பிடித்தான். அவள் கை ஜில்லென்று இருக்க, அவள் கையை தேய்த்து சூடேற்றினான். உண்மையிலே தூங்கி கொண்டிருந்தாள் பிரகதி. நான் உன்னை என்றும் விட மாட்டேன். நீ என்னை ஏற்றுக்கொள்ளும் வரை விட மாட்டேன். உன்னை இந்த அளவு கஷ்டப்படுத்தியவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் முத்தமிட்டான். அவள் திரும்பி படுத்து அவன் கையை இழுத்துக் கொண்டு படுத்தாள். அவனை உணர்ந்தாலோ.. என்னவோ.. கண்ணை விழித்து அவனை பார்க்க, அவன் அவளை தான் ஆழ்ந்து புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

சட்டென அவனது கையை விடுத்து எழுந்து அமர்ந்து, சார் என்ன பண்றீங்க?

நீ தான் பயந்தேல. அதான் துணைக்கு இருக்கிறேன். இது போல் எப்பொழுதும் இருக்க ஆசை தான்..நீ ஒத்துக் கொண்டால் என்று அவன் பிடித்திருந்த அவள் கையை வருடினான்.

நோ..சார் என்று அவள் கையை எடுத்துக் கொண்டு, என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. நீங்க கிளம்புங்க. என்னால உங்களை மட்டுமல்ல எப்பொழுதும் யாரையும் ஏத்துக்க முடியாது. சாரி சார். உங்களுக்கான வேற துணைய தேடிக்கோங்க. என்னால் உங்களுக்கு நேரம் தான் வீணாகப்போகிறது. ப்ளீஸ் சார் என்னை தனியா விட்டுங்க. எனக்கு சோர்வா இருக்கு. நான் தூங்கணும் என்றாள்.

நான் போகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வச்சுக்கோ. இந்த ஜென்மத்துல நீ தான் என்னோட பொண்டாட்டி. அதை யாராலும் மாத்த முடியாது. என் வாழ்க்கையில் உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும் இடமில்லை. நான் நினைத்த அனைத்தையும் பிடிவாதமாக சாதித்து இருக்கிறேன். உன் விசயத்தில் என் பிடிவாதம் உன் காதல் மட்டுமே. பிடிவாதமாக காத்திருப்பேன் உனக்காக மட்டுமே என் இறுதி மூச்சிருக்கும் வரை என்று சொல்லி விட்டு வெளியேறினான் அஜய். வெளியே அர்ஜூன் நின்று கொண்டிருந்தான். அர்ஜூனை பார்த்துக் கொண்டே அஜய் செல்ல,..அர்ஜூன் அவன் பின்னே சென்றான். வெளியே செல்லும் அஜய்யை பார்த்து விட்டு ரோஸ்னி பிரகதியை பார்க்க வந்தாள். பிரகதி அழுது கொண்டிருந்தாள்.

ரோஸ்னி அவளை பார்த்து, என்னோட மாமாவ எப்படி மயக்கின? சொன்னேன்னா..நானும் ட்ரை பண்ணுவேன் என்றாள்.

கண்ணீரை துடைத்து விட்டு பிரகதி அவளை பார்க்க, அவளருகே வந்த ரோஸ்னி அவளது தாடையை பிடித்து, இந்த அழகால தான் அவரை மயக்கி வச்சிருக்க? இந்த வீட்டை விட்டு நீயா போனேன்னா நல்லது. நான் உன்னை வெளியே தள்ளினால் உனக்கு அவமானம் தான் மிஞ்சும். அவரு எனக்கு மட்டும் தான் சொந்தம். அவருக்காக நான் எதையும் செய்வேன் என்று மிரட்டல் விடுக்க,

அர்ஜூன் அங்கே வந்து..அவள இந்த வீட்டு போக சொல்ல உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவள் என்னோட ப்ரெண்டு. அதுவுமில்லாமல் உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது என்னோட பாட்டி வீடு. நீ இப்பவே மூட்டை முடிச்சை கட்டிட்டு தயாரா இரு. வெளிய போகணும்ல..என்றான்.

ஏய்..அவள் அர்ஜூனிடம் சத்தமிட..உன்னை மாதிரி பொண்ணுங்கள பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு. சாருக்கு அவளை தான் பிடிச்சிருக்கு. நீ இப்ப கிளம்பலை. நீ பேசிய அனைத்தும் உன் மாமாவிற்கு தெரியும் படி செய்து விடுவேன். அவள் கோபமாக அறைக்கு சென்று விட்டாள்.

அஜய் பின் அர்ஜூன் சென்ற போது, அர்ஜூன் நான் தனியா இருக்கணும். தொந்தரவு செய்யாம அவளை பார்த்துட்டு கிளம்பு. உனக்கு அங்க வேலை இருக்கும். போ..என்று அனுப்பினான். அதனால் தான் அர்ஜூனால் ரோஸ்னி பேசியதை கேட்க முடிந்தது.

அர்ஜூன், எதுக்கு அவங்ககிட்ட இப்படி பேசுன? என் மேல அவங்களுக்கு கோபம் தான் அதிகமாகும் பிரகதி சொல்ல, அர்ஜூன் அவளை உறுத்து பார்த்தான்.

அர்ஜூன்..என்று அவள் தயங்க, சரி நீ சொல்லு. உனக்கு அஜய் சாரை பிடிக்கலையா? அவள் அமைதியாக இருந்தாள்.

பிடிச்சிருக்கு. ஆனால் சொல்ல முடியலை? அப்படி தானே!

அதற்கும் அமைதியாக இருந்தாள்.

அமைதியா இருந்தா எப்படி? வாயை திறந்து பேசு.

அர்ஜூன்..இது சரியா வராது.

நீயும் ஸ்ரீயை போல ஸ்டேட்டஸ் பார்க்கிறாயா? அர்ஜூன் கேட்க, அவனை பார்த்து ஸ்ரீ இப்ப ஒன்றுமில்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அவளோட அப்பா..உன்னோட் பாட்டிய விட பெரிய ஆளு தான? ஆனால் நான் அப்படி இல்லை. என்னோட பேக்கிரவுண்டு வேற.

இன்னும் அந்த நாளை நினைக்கிறாயா? ஸ்ரீயும் இன்னும் அதிலிருந்து வெளிய வரலை. அதான் அவளால் என் காதலை ஏற்றுக் கொள்ள முடியலை. நீயும் அதே தவற்றை செய்யாத பிரகதி என்று அவளருகே வந்து அமர்ந்தான்.

பிரகதி அர்ஜூன் தோளில் சாய்ந்து அழுதாள். அர்ஜூன் இன்னுமா கிளம்பவில்லை என்று அவன் காரை பார்த்து பிரகதி அறைக்கு அஜய் வந்தான். பிரகதி அழும் சத்தம் கேட்டு மறைந்து நின்றான்.

எப்படி அர்ஜூன் எல்லாத்தையும் மறக்க முடியும்? அது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? நான் ரெண்டு நாளா அவனுக கூட தான் இருந்தேன்னு எனக்கு தெரியாது. நான் உயிரோட இருந்ததே பெரிய விசயம்ன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. பல்ஸ், ஹார்ட் பீட் எல்லாமே ரொம்ப குறைவா இருந்திருக்கு. நான் கண்டிப்பா செத்துடுவேன்னு தான் டாக்டர் அம்மா, அப்பா கிட்ட சொல்லி இருக்காங்க. அம்மா அப்புறம் தான் அவங்க தவற்றை புரிஞ்சுக்கிட்டாங்க. அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு தான்.

அம்மாவை விட அப்பாவுக்கு தான் என்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் அப்பாவிடம் அதிகமா பேச கூட மாட்டேன். அவர் மட்டும் நல்ல வேலையில் இருந்து அம்மா தேவையை பூர்த்தி செய்திருந்தால் அம்மா இப்படி பணத்துக்கு பின்னே சென்றிருக்க மாட்டாங்க. அப்பா அம்மாவை காதலித்து அந்த காதலுக்காக அவங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சு அவங்க பிரிய நினைத்த நேரத்தில் தான் அவங்க கருவுற்றிருப்பது தெரிய வந்து அப்பாவுடன் சேர்ந்து இருக்க ஆரம்பிச்சாங்க. ஆனால் அம்மா எனக்காக தவறான வழியை தேர்ந்தெடுத்து என்னை நன்றாக வளர்த்தாங்க.  நானும் எவ்வளவோ சொல்லியும் அவங்க கேட்கலை. இப்ப எனக்கு அவங்களும் இல்லை. நானும்..நானும்..என்று அழுது கொண்டே,

அர்ஜூன்..என்னால யாரிடமும் என்னோட பெயினை காட்டிக்க முடியலை. பெத்தவங்ககிட்ட சொன்னா அவங்களும் கஷ்டப்படுவாங்க. வேற யாரிடமாவது சொன்னா..தப்பா பேசுவாங்கன்னு பயம். ஸ்ரீயை பிடித்திருந்தாலும் அவளுடனோ..இங்கிருக்கும் யாரிடமும் என்னால சொல்லவே முடியலை. அர்ஜூன் உன்னிடம் ஏதோ சொல்லணும்ன்னு தோணுது.

ஹாஸ்பிட்டலில் விழித்த போது என்னால கையை கூட அசைக்க முடியல. அவ்வளவு வலி தெரியுமா அர்ஜூன்? வலி தாங்க முடியாம, என்னை கொன்னுடுங்கன்னு கூட அழுதேன். ஆனால் என்னை அங்கிருந்த நர்ஸ் எல்லாருமே நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆனால் அவங்க பேசிய பின் தான் எனக்கு நடந்தது நினைவுக்கே வந்தது. மனசே விட்டு போச்சு அர்ஜூன். யாரையும் பார்க்க பிடிக்காமல் பேச பிடிக்காமல் அதே அறைக்குள்ளே இருந்தேன். ஒரு மாதம் ஹாஸ்பிட்டல்ல நடை பிணமாக தான் இருந்தேன். என்னோட அப்பா என்னை மாற்ற எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அவரை கூட என் பக்கம் வர விடலை. போலீஸ்  அவன் பக்கம் தான் இருந்தாங்க. நாங்க வேற இடத்திற்கு வீடு மாறி சென்றோம். அந்த சூழல் என்னை கொஞ்ச கொஞ்சமாக மாற்றியது.

ஒரு வருடம் கூட ஆகலை. கருவுற்றிருந்தேன். பெற்றோர் இருவரும் கருவை கலைக்க எனக்கு தெரியாமலே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றனர். ஆனால் டாக்டர் என்னிடம் சொல்லியதால் நான் அவர்களை எதிர்த்து முடியாது என்று வீட்டிற்கு வந்தேன். அம்மா அடிக்க கூட செஞ்சாங்க. ஆனால் குட்டிபாப்பாவை அழிக்க மனம் வரலை. அதனால் என்ன ஆனாலும் வளர்க்கணும்ன்னு முடிவெடுத்தேன்.

எல்லாரும் தப்பா பேசுவாங்க. ஸ்கூல் போக முடியாதுன்னு அப்பா சொன்னார். பரவாயில்லை என்று தான் இருந்து வந்தேன். அப்படி ஒரு நாள் ஹாஸ்பிட்டல் சென்று வீட்டிற்கு வரும் வழியில் மறுபடியும் அவனை பார்த்தேன். அவனிடம் குழந்தையை பற்றி சொல்லி பண உதவியாவது செய்வான்னு கேட்டேன். ஆனால் அவன்..என்று அழுதாள். அர்ஜூன் அவளை அணைத்துக் கொண்டு, மறுபடியும் அவனிடம் எதுக்கு பேசுன?

அவனை விலக்கி அப்ப இருந்த நிலை அர்ஜூன்? என்னை என்ன செய்ய சொல்ற? பணமில்லாமல் சரியாக சாப்பிட கூட முடியலை. அம்மாவும், அப்பாவும் வேலைக்கு சென்றனர். என் மருத்துவ செலவுக்கே சரியா போச்சு. ஆரம்பத்தில் இருமாத சிசுவாக தான் இருந்தது. அந்த பள்ளி வயதில் என்னால் எதுவும் செய்ய முடியலை. அவன் மீண்டும் அந்த நேரத்தில் கூட தவறாக நடந்து கொள்ள முயன்றான். அப்பொழுது தான் விபத்து ஏற்பட்டு, அஜய் சார் என்னை காப்பாற்றி இருந்தார். ஆனால் அந்த நர்ஸ் பேசிய பாதியை தான் கேட்டிருக்கார். எனக்கு கற்பழிப்பு நடந்த போது என்னை பார்த்து கொண்ட நர்ஸூம் அவர் தான். சாருக்கு அடுத்து நடந்த ஏதும் தெரியாது அர்ஜூன்.

அவர் பணத்தை கட்டி சென்று விட்டார். ஆனால் அவர் என்னை சேர்த்த போதே கருகலைந்து விட்டது. ஆனால் என்னுடைய துடிப்பும் குறைய ஆரம்பித்தது. பரிசோதனையின் பின் எனக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதாக சொன்னாங்க. அம்மாவும், அப்பாவும் பதறி விட்டனர். என்னை காப்பாற்ற முடியாத நிலை. பணம் கட்டினால் சிகிச்சை செஞ்சிருப்பாங்க. அந்த நேரத்தில் தான் வினிதா மேம் அனுவை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தாங்க. அவங்க நர்ஸ் எல்லாரும் பேசியதை கேட்டு அம்மா, அப்பாவிடம் பேச, அவங்க நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க.

எனக்கு பணம் கொடுத்து என் உயிரை வினிதா மேம் தான் காப்பாற்றினாங்க. சாரும் என்னை பார்க்க வந்து என்னை அவங்க வீட்டிக்கே அழைச்சிட்டு போனாங்க. அவங்க வீட்ல வேலை செய்யும் பாட்டி தான் என்னை பார்த்துக்கிட்டாங்க. நான் சரியானதும் அங்கேயே தங்கி பாட்டிக்கு உதவியாக இருந்தேன். படிப்பு முடியும் வரை அங்கே அனுவுடன் தான் இருந்தேன். அக்கா என்னை மேலும் படிக்க வைக்க கல்லூரி பாரமை கொடுத்தாங்க. ஆனால் என்னால் ஏத்துக்க முடியலை.

அவங்க என் உயிரை காப்பாற்றியதோட பள்ளி படிப்பு செலவையும் பார்த்துகிட்டாங்க. இதுக்கு மேல அவங்கள தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு தான்..சார் கம்பெனியில ஏதாவது வேலை போட்டு தர சொல்லி கேட்டேன். சின்ன சின்ன வேலை தான் பார்ப்பேன். பணமும் கொடுத்தாங்க. அதனால அம்மா, அப்பாவை பார்த்துக்கணும்ன்னு வெளியே வந்தேன். ஆனால் அப்பாவுக்கு உடல் நலமில்லாமல் போக.. அவர்களை வேலை செய்து அவரை நானும் அம்மாவும் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக போனது.

சார் இறந்த அன்று நானும் வந்தேன் அர்ஜூன். வெகு நாட்களுக்கு பின் உன்னை பார்த்தேன். ஆனால் அன்றைய நிலையில் நீ கோபமாக இருந்தாய். அதனால் ஏதும் பேசலை. மேம்முடன் துணைக்கு வர நினைத்து மறுநாள் வந்தேன். ஆனால் அன்று அர்ஜூன்..என்று பிரகதி அவனை பார்த்தாள். அர்ஜூனும் அவளை பார்த்தான்.

அர்ஜூன் அன்று அந்த மேனேஜர் மேம்மை என்று கண்கலங்கினாள். பிரகதி வேண்டாம்..அவனை பற்றி பேசாத அர்ஜூன் கோபமானான்.

சாரி அர்ஜூன் என்று அமைதியான பிரகதி அவனை பார்த்தாள்.

என்ன? என்று அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன்..சார் இறந்த பின் மேமுக்கு துணையா நீ இருந்த. அதே போல் நான் கம்பெனியில் இருந்தேன் என்று தயங்கினாள். அவன் புருவத்தை சுருக்கி அவளை பார்த்தான்.

எனக்கு கம்பெனி வேலை பற்றி அதிகமாக தெரியாது. நான் எடுபுடியா தான் இருந்தேன். ஆனால் சார் இல்லாமல் மேம் அந்த கம்பெனிய லீட் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அதை விட எல்லா விசயமும் அவங்களை சென்றடையவில்லை. கம்பெனி ஊழியர்களுக்கான எந்த சலுகையும் அவங்களுக்கு வரவேயில்லை. நம்ம கம்பெனி ஊழியர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தார். அவர் மனைவி இன்சூரன்ஸ் பைல்லோட வந்தப்ப..அவங்கள அடித்து விரட்டாத குறை தான். அவங்க கையில பச்ச புள்ள இருந்தது. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனால் மேம் அவங்களோட தனி பணத்தை கொடுத்து அவங்களுக்கு உதவினாங்க. இது மாதிரி நம்ம கம்பெனியில பல பிரச்சனை இருக்கு.

கண்ணை அழுந்த துடைத்த பிரகதி, எனக்கு ஒரே ஒரு கெல்ப் பண்றேல. என்னோட ப்ரெண்டா கூட வேண்டாம். ஜஸ்ட் எம்பிளாயியா நினைச்சு ஒன்று மட்டும் செய்யேன். எனக்கு நம்ம கம்பெனியில ஒரு தோழி இருந்தா. அவளை காணோம். அவளை கண்டுபிடிக்க முடியுமான்னு பாரேன் என்றாள்.

என்ன? காணோமா? அர்ஜூன் கேட்டான்.

ஆமா அர்ஜூன். எனக்கு உன்னோட காயத்ரி அக்கா முதல் புருசன் மேல தான் சந்தேகமா இருக்கு. அவள் காணாமல் போன அன்று நானும் அவளும் சேர்ந்து தான் கம்பெனிய விட்டு வெளியே வந்தோம். ஆனால் அவளுக்கு ஒரு போன் வர, அவள் மீண்டும் உள்ளே சென்றாள். நான் அவளுக்காக காத்திருந்தேன். ஆனால் காலை வரை அவள் வெளியே வரலை. அந்த மேனேஜர் உள்ளே இருந்ததால் செல்ல பயந்து நானும் சென்று விட்டேன்.

அந்த பொண்ணை பற்றிய விவரத்தை சொல்லு என்று ரெக்கார்டரை ஆன் செய்தான் அர்ஜூன்.

அவளோட பேரு துர்கா. அவள் நல்லா படிச்ச பொண்ணு. வினிதா மேம் அசிஸ்டென்ட்டும் அவளும் லவ் பண்ணாங்க. அவர் வீட்ல இவளை ஏத்துக்கலைன்னு பிரச்சனையில் இரண்டு நாட்களாக விலகி தான் இருந்தனர். ஆனால் அவள் காணாமல் போனதால் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கார். தேடிக் கொண்டும் இருக்கார். ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று. ஆனால் இன்னும் அவள் கிடைக்கவில்லை. எனக்கு பயமா இருக்கு அர்ஜூன். அவளுக்கு ஒன்றும் இருக்காதுல்ல..கண்ணீருடன் பிரகதி கேட்டாள்.

நீ எதுக்கு மேனேஜர் மேல சந்தேகப்படுற? அசிஸ்டென்ட் மேல சந்தேகம் வரலையா?

அவர் ரொம்ப நல்லவர். இருவருமே உண்மையிலே காதலிச்சாங்க. ஆனால் பொண்ணுங்க விசயத்துல அவன் ரொம்ப ரொம்ப மோசமானவன்.

பிரகதி, உன்னை அவன் என்றவுடன் சுவற்றில் சாய்ந்து கண்ணீருடன் அமர்ந்திருந்த அஜய் கண்கள் மேலும் கலங்க..அர்ஜூன் ஆரம்பத்தில் அவன் தொந்தரவு இருந்தது. ஆனால் மேம் தான் உதவினாங்க. என்ன செஞ்சாங்கன்னு தெரியாது. அவன் என் பக்கம் திரும்பவில்லை. ஆனால் அவன் கவனம் துர்க்கா மீது விழுந்தது. அசிஸ்டென்ட் சார் தான் எப்பொழுதும் அவளுக்கு உதவுவார். ப்ளீஸ் அர்ஜூன். அவளை மட்டும் தேடித் தா அர்ஜூன். அவள் அப்பா கேஸ் பைல் பண்ணாரு. ஆனால் யாரும் ஸ்டெப் எடுக்கலை. உன்னால பார்க்க முடிந்தால் கெல்ப் பண்ணேன்.

இந்த வீடியோவில் அவ இருக்காலான்னு பாரு என்று அர்ஜூன் போனை காட்டினான். அதில் இருந்த வீடியோவை பார்த்து போனை பிடுங்கி தூக்கி எறிந்து அழுதாள்.

இருக்காலா? அர்ஜூன் கேட்க, என்னால இதையெல்லாம் பார்க்க முடியாது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மேல என்னை கஷ்டப்படுத்தாதடா..என்று அழுதாள்.

அர்ஜூன் அவளிடம், நான் பார்க்கிறேன். ஆனால் நான் கேட்டதற்கு சரியான பதில் மட்டும் சொல். நீ பேச்சை மொத்தமா திருப்பீட்ட.

என்னால காதல், கல்யாண வாழ்க்கைக்குள் செல்ல முடியாது அர்ஜூன். நாம் சொல்லும் போது எல்லாமே நல்லா இருக்கும். வாழும் போது சின்ன வார்த்தை பெரிய பிரிவை வழிவகுக்கும். அதுமட்டுமல்ல என்னோட கெல்த் சரியில்லாம இருக்கு. குழந்தைப்பேரு கிடைப்பது கூட கஷ்டம் அர்ஜூன். குழந்தை பெற்றெடுக்கும் வலியை என் உடல் கண்டிப்பாக தாங்காது. அதனால் அர்ஜூன் இதை பற்றி என்னிடம் பேசாத..

இல்ல பிரகதி. அப்படியில்லை. காதல்ல இதெல்லாம் பெரியதாக தெரியாது.

தெரியாதா? என்ன தெரியாது அர்ஜூன்? உன்னை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க அர்ஜூன். நீயே சொல்லு..ஸ்ரீயால குழந்த பெத்துக்க முடியாதுன்னா நீ அவளை மேரேஜ் பண்ணிப்பாயா?

நீ சொன்னது போல் அவளால குழந்தை கண்டிப்பா பெத்துக்க முடியாது. ஒரே ஒரு சதவீதம் தான் வாய்ப்பு இருக்காம் ஏற்கனவே டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

அர்ஜூன்..என்று அதிர்ந்தாள் பிரகதி.

ஆமா, பிரகதி. அவளும் உன்னை போல் தான் ரொம்ப கஷ்டப்பட்டா. அவளால் குழந்தை பெத்துக்க முடியலைன்னா. அது எப்படி என்னோட காதல் காணாமல் போகும்? அவளுக்கு என்ன இருந்தாலும் ஸ்ரீ இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை. ஆனால் இப்ப அனு இருக்கா. ஸ்ரீ என்னை விட்டு போனாலும் அனுவுக்காக வாழ்வேன். காதல் எந்த அளவு ஒருவனை வலிமையானவனாக மாற்றுமோ அதே போல் வீக்காக மாற்றும்.

எனக்கு ஸ்ரீயை பற்றி நன்றாக தெரியும். அவள் ஒருநாள் என்னை அனுவிற்காகவாது ஏத்துப்பாள்.

அர்ஜூன், உனக்கு கஷ்டமா இருக்குமே?

ஸ்ரீ என் பக்கத்துல இருந்தா போதும். அவளை பார்த்துக் கொண்டே என் கடைசி வாழ்நாள் முழுவதும் இருப்பேன். அனு தான் எனக்கான குட்லக். அவளால் ஸ்ரீ கண்டிப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பாள். ஆனால் ..இந்த கொலைகாரன் மாற்றி மாற்றி பேசுறான். இத்தனை நாள் அவளை கொல்ல நினைத்தவன்..இப்ப அவளை அடையணும்ன்னு சொல்றான். இத்தனை நாள் இல்லாத பயம் எனக்கு வருது.

சாரி அர்ஜூன்..

இட்ஸ் ஓ.கே பிரகதி. நீ அஜய் சாரை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே?

இல்ல அர்ஜூன். நான் அவரை பற்றி யோசித்ததால் தான் என்னால் அவரை காதலிக்கவோ, கல்யாணம் பண்ணவோ முடியாதுன்னு சொல்றேன். அவரும் ஒருநாள் நான் சொன்னதை புரிஞ்சுப்பார்.

நோ..பிரகதி, நீ தப்பா யோசிக்கிற? அவர் காதலை அவர் நிரூபிப்பார். நீயே அவரிடம் கேட்ப?

அர்ஜூன்..நீ கிளம்பு. என்னை கோபப்படுத்தாத.

நான் சொன்னது நடக்கும் அர்ஜூன் சொல்ல, நடக்காது. என்னால காதலை அவரிடம் சொல்ல முடியாது என கத்தினாள்.

பிரகதி, நீ இப்ப என்ன சொன்ன? அர்ஜூன் கேட்க, அஜய்யும் கண்ணீர் கலந்த புன்னகையுடன் எழுந்தான்.

நான் எதுவும் சொல்லல? நீ போ..என்று அர்ஜூனை வெளியே தள்ளி கதவை சாத்தி அழுதாள். அர்ஜூன் அஜய்யை பார்த்து புன்னகைத்து, இப்ப புரிஞ்சதா? அவளுக்கும் உங்களை பிடிச்சிருக்கு. ஆனால் ஏத்துக்க முடியலை. இனிதான் நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும் என்று அர்ஜூன் செல்ல, அஜய் அவள் அறையையே பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜூன், நில்லு நானும் வாரேன் என்று அர்ஜூனுடன் அஜய்யும் சென்றான்.