வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-125
147
அத்தியாயம் 125
அர்ஜூன் வீட்டில் அனைவரும் தயாராக, இன்பா அவளுடன் பிரகதியை அழைத்து சென்றாள். சற்று நேரத்தில் அனைவரும் தயாராகி கீழே வந்தனர். ஸ்ரீயை பார்த்த அர்ஜூன் அவளை முறைத்தான்.
ஸ்ரீ..என்ன இந்த டிரஸை போட்டிருக்க? நான் கொடுத்தது எங்கே? கமலி கேட்டார்.
அது எனக்கு கம்பர்ட்டப்புள்ளா இல்லை.
அதெல்லாம் இல்லை. போ..புடவை தான் உடுத்தணும். தாரி..போ. ஸ்ரீ மாத்திட்டு வரணும். கெல்ப் பண்ணு.
ஆன்ட்டி நேரமாகிடும்.
அதெல்லாம் ஆகாது. நானும் இருக்கேனே? என்று பார்பி டால் போல காருண்யா புடவையில் வெளியே வந்தாள். கௌதம் கண்ணெடுக்காது அவளை ரசித்து பார்த்தான்.
நானா? நான் சொன்னா கேட்கவா போறா? என்று அர்ஜூன் அவளை முறைத்தான். காயத்ரி திருமணத்தன்று இரவு நடந்தது நினைவு வர, அர்ஜூன் முகம் சுருங்கி போனது. ஸ்ரீ அந்த பயத்தில் தான் உடுத்தவில்லை என அர்ஜூன் நினைக்க, அதை எண்ணி தான் ஸ்ரீயும் உடுத்தி இருக்க மாட்டாள்.
தாரிகாவும் காருண்யாவும் அவளை இழுக்க, அவளுக்கு விருப்பமில்லைன்னா விடுங்க என்று அர்ஜூன் சொல்ல. ஸ்ரீ நீ போ..நான் வரலை என்று பிடிவாதமாக தாரிகா அமர்ந்தாள். எல்லாரும் புடவை தான் உடுத்தி இருந்தனர் ஜாஸ்மின் உட்பட..
சரி, மாத்திட்டு வாரேன் என்று ஸ்ரீ தாரிகாவை முறைத்துக் கொண்டே சென்றாள். எப்படியோ அனுப்பிட்டேன் என தாரிகா சொல்லி விட்டு, எல்லாரும் முன்னே போங்க. ஸ்ரீ தயாரானதும் வாரோம் என்றாள் தாரிகா. அவர்கள் கிளம்ப வினிதா அம்மா, அப்பாவும் வீட்டில் இருக்க..ஸ்ரீ தயாராகி கீழே வந்தாள். அவளுடன் தாரிகாவும் காருண்யாவும் வந்தனர்.
நிவாஸ் முன்னே சென்றிருக்க, அர்ஜூனும் கௌதமும் வரும் தன் தேவதைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகே வந்தவுடன் கௌதம் காருண்யா தோளில் கையை போட்டான். அர்ஜூன் ஏதும் செய்ய முடியாமல் அனுவை துக்கியபடி ஸ்ரீயை ஏக்கமுடன் பார்த்தான். தாரிகா புரியாமல் இருவரையும் பார்த்தாள்.
கிளம்பலாமா? கௌதம் கேட்க, இருங்க. நானும் வாரேன் என்று அர்ஜூன் பாட்டி வந்தார்.
போகலை. போகலாமா? பாட்டி கேட்க, சார் நீங்க டிரைவ் பண்ணுங்க என்று அர்ஜூன் கையிலிருந்து சாவியை பிடுங்கி கௌதமிடம் கொடுத்த தாரிகா, காருண்யாவை முன்னே அமர சொல்லி கண்ணை காட்டினாள். கௌதமும் காருண்யாவும் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தனர். அர்ஜூன் மூடு அப்செட்டில் இருந்தான். பாட்டி அவர்களிடம், சீக்கிரம் எடுங்க போகலாம் என்று பின்னே அமர..கௌதம் அருகே காருண்யா இருக்க, பாட்டி நீங்க காருவுடன் அமருங்கள். நான் பின்னே அமர்ந்து கொள்கிறேன்.
இல்லடி..எனக்கு அந்த இடம் தோதாக இராது. நான் பின்னே அமர்ந்து கொள்கிறேன் என்றார் பாட்டி.
பாட்டி, எனக்கு புடவை மடிப்பு உலைந்தால் பிடிக்காது. நான் பின்னே தான் அமருவேன் என தாரிகா பிடிவாதம் செய்தாள். எங்காவது ஏறுங்கள் என்று அர்ஜூன் கோபமாக கூறினான்.
பாட்டி பின்னே வேகமாக ஏறினார். பாட்டி என்று காலை உதைந்து விட்டு, நான் உள்ளே செல்றேன். வழியை விடு என்று அர்ஜூன் அருகே அமர்ந்தாள் தாரிகா.
கௌதம் காரை எடுக்க, பாட்டி தாரிகாவிடம் மெதுவாக, உன்னோட திட்டத்தை ஆரம்பி, சரியா இருக்கும் என்றார்.
பாட்டி..என்று அவள் பாட்டியை பார்க்க, அவர் கண்ணடித்தார். கௌதம் அவர்களை பார்த்து சிரித்தான்.
தாரிகா காலை மடிப்பு களையாமல் உட்காருகிறேன் என்று அர்ஜூனை இடித்தாள். மூன்று முறை பொறுமையாக இருந்த அர்ஜூன்..கோபமாக தாரி..தள்ளி உட்காரேன்.
அர்ஜூன்..என் புடவை மடிப்பு கலைந்து விடும் என்று தள்ளி உட்காருடா..என்று இடித்தாள். அனு அர்ஜூனிடமிருந்து ஸ்ரீயிடம் சென்றாள். அர்ஜூன் தாரிகாவை பார்த்து முறைத்தான்.
அஜூ இடைஞ்சலா இருக்கு பாட்டி சொல்ல..கொஞ்ச நேரம் சும்மா வர்றீங்களா? என்ற அர்ஜூனை தாரிகா இடிக்க, ஸ்ரீயின் பின்னே கையை போட்டுக் கொண்டு ஸ்ரீயை நெருங்கி அமர்ந்தான் அர்ஜூன். அவள் அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூன் தாரிகாவை காட்ட, ஸ்ரீ தாரிகாவை பார்த்து..தாரி, உனக்கு இன்னும் இடம் போதலைன்னு நினைக்கிறேன். நான் வேண்டுமானால் காருவுடன் அமர்ந்து கொள்கிறேன் ஸ்ரீ கூற, காரியமே கெட்டுடும் போல என்று முணங்கிய தாரிகா, போதும் ஸ்ரீ. இடம் சரியா போச்சு என்று அர்ஜூனை இடித்தாள். அர்ஜூன் அவளை முறைக்க,..அசட்டு சிரிப்பை உதிர்த்தாள் தாரிகா.
இரு அர்ஜூன்..என்று ஸ்ரீ எழ, பிரேக்கை அழுத்தான் கௌதம். ஸ்ரீ அனுவுடன் அர்ஜூன் மடியில் அமர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். கௌதம் சத்தமில்லாமல் சிரித்தான்.
சாரி..அர்ஜூன்..என்று அவள் எழ நினைக்க, கௌதம் மீண்டும் பிரேக்கை அழுத்தினான். ஸ்ரீ நேராக அவன் உதட்டில் இதழ் பதித்து விட்டு பதட்டமானாள். அர்ஜூன் திகைத்தவாறு ஸ்ரீயை பார்த்தான்.
சாரி..சாரி..என்று சன்னல் பக்கம் திரும்பி அமர, அவளுக்கு இடமேயில்லை. அவள் புரியாது நின்று இடத்தை பார்க்க, அர்ஜூன் அனுவை வாங்கிக் கொண்டு அவன் காலை விரித்து அவன் மடியை காட்டி, கையை தூக்கி காட்டினான். வேறு வழியில்லாமல் ஸ்ரீ அமர்ந்தாள். அர்ஜூன் கௌதமை முறைத்தான்.
ஷ்..ஆ..அவன் சத்தமிட, ஏய் என்னடி பண்ற? பாட்டி கேட்க, நானா பண்றேன் என்று பாட்டியை முறைத்து விட்டு தாரிகாவை பார்த்தாள். அவள் புன்னகையுடன் இருவரையும் பார்த்தாள். அர்ஜூன் ஸ்ரீயை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அனு ஒரு பக்கம் ஸ்ரீ ஒரு பக்கம் அவன் மடியில் இருக்க, ஸ்ரீ..எழுந்து அர்ஜூன் நான் நின்று கொள்கிறேன் என்றாள்.
இரு ஸ்ரீ. நான் வேண்டுமானால் இறங்கி கொள்கிறேன் என்றான் அர்ஜூன். கௌதம் காரை நிறுத்தி அர்ஜூனை பார்த்தான்.
இல்ல அர்ஜூன். நீ இறங்க வேண்டாம். நான் உட்கார்ந்து கொள்கிறேன் என் அவன் மடியில் அவனை பார்த்தவாறு அமர்ந்தாள். ஆனால் அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அர்ஜூனுக்கு அவள் அருகாமை தாங்க முடியாமல் அவனும் அவளை தவிர்த்தான். ஆனால் அனு இருவரையும் பார்த்து.. சண்டை போட்டீங்களா? கேட்டாள்.
இல்லடா அனும்மா, நாங்க எதுக்கு சண்டை போட போறோம் என்ற ஸ்ரீ உட்கார்ந்த படி அர்ஜூன் தோளில் கையை போட்டாள். அவளது முடி முன் வந்து அவளை தொந்தரவு செய்ய, அவளது முடியை ஒதுக்கி விட்ட அர்ஜூன் அனுவை தன் மீது சாய்த்து அவனை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணை மூடினான். ஸ்ரீ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இடம் வந்து விட அனைவரும் இறங்கினர். ஸ்ரீ அர்ஜூனுக்கு மறுபக்கம் அமர்ந்து அவளது தலையை சரி செய்து விட்டு, அவளது ஆடையை சரி செய்ய..அர்ஜூன் அருகே இருப்பதை உணர்ந்த ஸ்ரீ மற்றவர்களை பார்த்தாள். கௌதமை தவிர யாருமில்லை. அனுவை தாரிகா தூக்கிக் கொண்டு வெளியே நிற்க, ஸ்ரீ பதட்டமாக இறங்க சென்றாள். அர்ஜூன் அவள் கையை பிடித்து, அவள் கை மீது அவன் கையை வைத்தான்.
அர்ஜூன்..என்று ஸ்ரீ கையை எடுத்து வெளியே செல்ல, அவள் முந்தானை மாட்டிக் கொண்டது.
அர்ஜூன்..என்று திரும்பி பார்த்து, காரின் ஓரத்திலிருந்து எடுத்து விட்டு அவள் செல்ல, அர்ஜூன் இறங்கினான். ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு அர்ஜூனை பார்த்தாள். அவன் கவனம் முழுவதும் அவளாகவே இருந்தாள். பாட்டி, தாரிகா முன் செல்ல காருண்யா கௌதமிற்காக நின்று கொண்டிருந்தாள்.
அர்ஜூன் போகலாமா? ஸ்ரீ கேட்க..காருவை அவன் அழைத்தான். அர்ஜூன் உள்ள போ. அவருடன் வருகிறேன் என்றாள். அர்ஜூன் அனுவை வாங்கிக் கொண்டு, ஸ்ரீ கையை பார்த்தான். அவளாகவே அவன் கையை கோர்த்துக் கொண்டு நடந்தாள்.
ஊரார் அவர்களை பார்த்து ஸ்ரீ உடல்நிலையை விசாரித்தனர். அவர்களை அஜய் கண்ணெடுக்காமல் பார்த்தான்.
சார், எதுக்கு இப்படி பாக்குறீங்க? அபி கேட்க..படிப்பே முடிக்கலை. கம்பெனி நடத்துறான். கொலைகாரனிடமிருந்து எல்லாரையும் பார்த்துக்கிறான் .அதை விட மூவரையும் பார்த்தால் குடும்பமாக தெரிகிறது. அவனை பார்த்தால் கொஞ்சம் பொறாமையா இருக்கு என்றான்.
சித்தப்பூ என்று அஷ்வின் அஜய்யிடம் வந்தான்.
எதுக்கு சார் இந்த பொறாமை? உங்களுக்கு தான் கல்யாண வயசு இருக்கும்ல. யாரையாவது காதலிக்கலாம்ல. எங்க ஊர் பொண்ணுங்க கூட நல்ல பொண்ணுங்க தான் அபி சொல்ல,
உங்க ஊர் பொண்ணுங்களா? எப்படி பிரகதி மாதிரியா? அஜய் கேட்க, அபிக்கு கோபம் வந்தது.
சார், பார்த்து பேசுங்க என்று அபி சிந்தனையுடன், எங்க ஊரு பொண்ணு உங்க முன்னாடியே எத்தனை பேர் இருக்காங்க. உங்களுக்கு பிரகதி நினைவா தான் இருக்கா என்ன?
ஆமா, அவ பெரிய இவ பாரு. அவளை நினைக்க என்று அஜய் சொல்ல, அபி போனில் இன்பா அவனை அழைத்தாள்.
சொல்லுங்க ரெயின்?
கொஞ்சம் வெளிய வர்றீயா? மேரேஜூக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்குல்ல? கேட்டாள்.
எதுவும் வேண்டுமா? கிண்டலாக அபி கேட்க, ஏய் முதல்ல வெளிய வா..என்று அழைத்தாள்.
இருங்க வாரேன் என்று அஜய்யிடம் பேசிட்டு வந்துடுறேன் என்று எழ, அஜய்யும் அஷ்வினுடன் வந்தான்.
இன்பாவை அவன் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே வந்தான். அவள் பின்னிருந்து இதயாவும், பிரகதியும் வந்தனர்.
அபி அவர்களை பார்த்து, என்ன கூட்டமா வந்துருக்கீங்க?
டேய் சொல்லு..இன்பா கேட்க, அவன் கூறினான். நானும் வரவா? அபி கேட்க..நீ எஞ்சாய் பண்ணு. நாங்க போய்க்கிறோம் என்று அவர்கள் செல்ல, அஜய் அங்கேயே நின்று பிரகதியை பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன சார், சைட் அடிக்கிறீங்களா? அவ பெரிய இவளான்னு கேட்டீங்க?
அவ நல்லா சமாளிக்கிறா. அதான் பார்த்தேன்.
சமாளிக்கிறாளா? என்று அபி பிரகதியை பார்த்தான். அவள் முகத்தில் இருந்த சோகம் தெளிவாக தெரிந்தது.
நாங்க இங்கிருந்து போறதுக்குள்ள அவளை சரி செஞ்சிருவோம் என்றான் அபி.
அது அவ்வளவு ஈசி இல்லை என மனதினுள் அஜய் நினைத்து விட்டு, நாம எதுக்கு அவளை பார்த்துக்கிட்டே நிக்கிறோம் என்று எண்ணி.. அஷ்வினை பார்த்தான்.
சித்தப்பூ, நீ சைட் அடிக்கிறதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றான் குட்டிப்பையன் அஷ்வின் அபிக்கு கேட்காதவாறு.
அதெல்லாம் இல்லைடா.
சித்தப்பூ எனக்கு உன்னை தெரியும்? நீ அவங்கள சைட் அடிச்ச?
ஆளுக்கேத்த பேச்சு பேசுடா.
சித்தப்பூ வா..என்னோட ஆளை காட்டுறேன் என்று அனுவை காட்டினான். அவள் பட்டுப்பாவாடையில் இருந்தாள்.
பேசினியாடா? ஆமா..ஆனா அவள் பின்னாடியே ஒரு பையன் சுத்துறான் என ராக்கியை காட்டினான்.
என்னை விடு. நான் அவனிடம் பேசிட்டு வாரேன் என்று இறங்கி ராக்கியிடம் ஓடினான். உன்னோட அம்மா, அப்பா கூடவே இருக்க மாட்டாயா? அஷ்வின் கேட்க,
அப்பா என்றவுடன்..சொல்லாத என்றான் ராக்கி.
உனக்கு அப்பா இல்லையா? என்று கேலியாக அஷ்வின் பேச, அனு அவர்களிடம் வந்தாள்.
அனுவிடம், ஏய்..இங்க பாரேன். அவனுக்கு அப்பா இல்லையாம் என்று அஷ்வின் சொல்ல..ராக்கி அவனை அடிக்க, அஷ்வின் இவனை அடிக்க, அனு அர்ஜூனை தேடி வந்து அவனிடம் ராக்கி அடிக்கிறான் என்றாள்.
அர்ஜூன் புரியாமல் சுற்றி பார்க்க இருவரையும் பார்த்து அவர்களிடம் ஓடி வந்தான். அஜய் அப்பாவும் அவனை பார்த்து ஓடி வந்தான். அண்ணா..எங்கே ஓடுகிறான்? என்று அஜய்யும் அவர்களிடம் வந்தான்.
அர்ஜூன் ராக்கியை தூக்க, அவன் அழுது கொண்டே மாமா..அப்பா இல்லைன்னு சொல்றான்.
அர்ஜூன் அஷ்வினை பார்த்தான்.
அங்கிள். நான் எதுவுமே பண்ணலை அஷ்வின் சொல்ல, ராக்கி கண்ணீரை துடைத்த அனு..அர்ஜூன்..இவன் தான் என் தம்பிய கிண்டல் செய்தான்.
அஜய்யும் அவன் அண்ணனும் வந்து அஷ்வினிடம் பேச, நான் சொல்ல தான் செய்தேன். அவன் தான் முதல்ல அடிச்சான் என்று அஷ்வின் அழுதான். அஜய் கோபத்தில் உன்னை மாதிரியே அடிக்க சொல்லி கொடுத்திருக்க என்றான் அர்ஜூனிடம்.
சார், எதுவும் தெரியாம பேசாதீங்க என்றான்.
என்ன தெரியாமல் பேசுகிறேன்? அஜய் கோபமானான்.
அஜய் அமைதியா இரு..என்று அவன் அண்ணன் சொல்ல, அனு அஜய்யிடம்..நீங்க மோசமான அங்கிள் என்று அழுது கொண்டே அஷ்வினை பார்த்து, நான் உன்னோட பேசவே மாட்டேன் என்று ராக்கியை கையை பிடித்து மறையிடம் அழைத்து வந்தாள். இருவரும் அழுது இருக்க அர்ஜூனும் அஜய்யும் அவள் பின் வந்தனர். மறை அவர்களை பார்த்து, அழுதீங்களா? என்னாச்சு? கீழ விழுந்துட்டீங்களா? ராக்கியை துக்கிக் கொண்டு அனுவை பார்த்து கேட்டான்.
இல்லை. அவனுக்கு அப்பா இல்லைன்னு ஒரு பையன் கிண்டல் பண்ணானா? ராக்கி அவனை அடிச்சிட்டான். அவனும் ராக்கியை அடிச்சிட்டான். நான் அர்ஜூனை என்று சொல்லும் போது ராக்கி சத்தம் கேட்டு காயத்ரி அவர்களிடம் வந்தாள். அஜய் அண்ணியும் அங்கே வந்தாள்.
காயத்ரி ராக்கியை தூக்கி அடி ஏதும் பட்டிருக்கா என்று பார்க்க. அக்கா..என்று அர்ஜூன் அழைத்தான். அவள் பதட்டத்தில் கவனிக்கவில்லை.
அக்கா..என்று அர்ஜூன் சத்தமாக அழைக்க, அவள் அர்ஜூனை பார்த்தாள். அனைவரும் கூடினர்.
ராக்கியை வாங்கிய அர்ஜூன்..உனக்கு அப்பா இல்லைன்னு யாரு சொன்னது? இனி இவர் தான் உன்னோட அப்பா என்று மறையை காட்டி சொன்னான். மறை கண்கலங்க ராக்கியிடம் கையை நீட்ட, ராக்கியோ.. எனக்கு அப்பா வேண்டாம். அப்பா அடிப்பான் என்று அர்ஜூனிடமிருந்து இறங்கி ஓடினான். காயத்ரியும் மறையும் அவன் பின் ஓட, அர்ஜூன் அஜய்யை பார்த்து..
அவனுக்கு அப்பா இல்லாமல் இல்லை. அவனால் அப்பா என்று ஒருவரை ஏத்துக்க முடியலை. ஏன்னா..என்று கண்கலங்கிய அர்ஜூன்..காயத்ரிக்கா அவங்க கணவரால் பட்ட கஷ்டம் என சொல்லியவன். இப்ப மூன்று நான்கு நாட்களுக்கு முன் தான் கல்யாணம் பண்ணாங்க..
யாரை பத்தியும் தெரிஞ்சுக்காம பேசுவது தப்பு சார். அவங்க சின்ன பசங்க சார்.
நான் அடிச்சேன்னா? யாரை அடிச்சேன்? நீங்க பார்த்தீங்க? தேவையில்லாமல் உரியவரை கூட கை ஓங்க மாட்டேன். என்னை வைத்து எங்க பசங்களை எடை போடாதீங்க. என் அனு நடந்ததை சரியா உண்மையா சொன்னா? நான் கேட்ட போது உங்க பையன், நான் எதுவும் செய்யலைன்னு சொன்னான். ஆனால்..என்று அர்ஜூன் நிறுத்தி விட்டு ஸ்ரீயிடம் அனுவை கொடுத்து விட்டு, ராக்கியை தேடி ஓடினான். அனைவரும் அஜய்யை முறைக்க, அவனுக்கு அவமானமாக போச்சு. அபி அவனை பார்த்து விட்டு செல்ல, எல்லாரும் ராக்கியை தேடி ஓடினர்.
ராக்கி..அழுது கொண்டு செடிகளின் பின் அமர்ந்திருக்க, ஸ்டார் எங்க இருக்க? நீ என்னை அப்பான்னு கூப்பிட வேண்டாம். ப்ரெண்டுன்னே கூப்பிட்டுக்கோ..வா..இங்க? கத்தினான் கண்ணீருடன் மறை. காயத்ரி அழுது கொண்டே ராக்கியை தேட,..
மாமா, அங்க பாருங்க என்று அதிர்ச்சியுடன் மறையிடம் கையை காட்டினாள் தாரிகா.
ராக்கியின் அருகே பாம்பு வந்து கொண்டிருந்தது. காயத்ரி அழுது கொண்டே அவனை நோக்கி செல்ல மறை ராக்கியை நெருங்கினான். பாம்பு கொத்த அவ்விடமிருந்து தூக்கி கீழே விழுந்து ராக்கியை அணைத்து அழுதான். சரவணனும் கண்ணனும் குச்சியை வைத்து பாம்பை தள்ளி விட்டுக் கொண்டிருந்தனர். ஆட்கள் கூட பாம்பு அங்கிருந்து சென்றது. காயத்ரியும் மறையிடம் வந்து ராக்கியை தூக்க, அவன் மறையை இறுகி கட்டி இருந்தான். கண்ணை துடைத்த மறை, அவனை தூக்கிக் கொண்டு எழுந்தான். ராக்கி மறையையும் காயத்ரியையும் பார்த்தான். பின் தாரிகா அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள்.
காயத்ரி- மறை திருமணத்தின் போது தாரிகா, அப்பா எப்படி இருப்பாங்க? என்ன செய்வாங்க? என்று கூறியது நினைவில் வர, இந்த நான்கு நாட்கள் மறையுடன் இருந்த அனைத்தையும் யோசித்து..அவனுடைய பழைய அப்பாவை யோசித்து விட்டு மறையை பார்த்தான். அவன் கண்ணீர் வந்து கொண்டிருக்க அதை துடைத்து விட்ட ராக்கி அவனை மீண்டும் அணைத்துக் கொண்டான். மறை ஓரிடத்தில் அமர, காயத்ரியும் பிள்ளையை பார்த்தவாரே அமர்ந்தாள்.
அப்பா..என்று மறையை பார்த்து ராக்கி அழைக்க, முத்த மழையை ராக்கியிடம் பொழிந்தான் மறை. காயத்ரி மகிழ்வுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
மேடையில் இருந்த சத்யா கண்ணீருடன் தன் நண்பன் குடும்பம் முழுமையானதை கண்டு மகிழ்ந்தான். தியா மணக்கோலத்தில் வந்து கொண்டே அவன் பார்க்கும் திசையை பார்த்து புன்முறுவலுடன் அவன் அருகே வந்து அமர்ந்தாள்.
தியா இடையிடையே சத்யாவை பார்க்க அவன் அவளை பார்க்கவேயில்லை. அவள் யோசனையுடன் இருக்க.. அவர்களுக்கான கல்யாண சடங்கை செய்தனர். வேலுவும் மற்ற நண்பர்களும் மேடை ஏறி சத்யா உடன் இருந்தனர். தியாவுடன் அகல்யா, சத்யா தங்கைகள் உடன் இருந்தனர்.
பட்டு வேஷ்டி சட்டையில் திருநீறு இட்டு சத்யா கருப்பு ஆணழகனாய் என்றும் இல்லாமல் புதிதாக தியா கண்ணிற்கு தெரிய, அடிக்கடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். மாலையை சரி செய்வது போல் தியா அருகே வந்த அவன் மூத்த தங்கை, அண்ணி அண்ணாவை சைட் அடிக்கிறீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். அப்புறம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என அவள் கேலி செய்து நகைக்க வெட்கத்துடன் தலை குனிந்து அமர்ந்து ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.
அவன் எந்த சலனமும் இல்லாது இருக்க கண்டாலும் அவள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. சத்யாவிற்கு தியாவை பிடிக்கும் என்றாலும் அவள் அனைவர் முன்னும் அவள் பாட்டியின் சொத்திற்காக தானே திருமணம் செய்வதாக ஒத்துக் கொண்டாள். அதுவும் தன்னை பிடிக்காமல் அவள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். அன்று அவனை தரைகுறைவாக தானே பேசினாள். அவன் மனதை அனைத்தும் பாதித்து தான் இருந்தது. கொஞ்சம் கூட முகம் ஜொலிப்பே இல்லை அவனிடம். ஆனால் தியா சத்யாவை பார்த்து மாறி இருந்தாள். அதை அவள் பாட்டி நன்றாகவே அறிந்தார்.
சத்யா தியாவின் வளைந்த கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டி நெற்றியில் திலகமிட்டான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்து விட்டு அவன் மெட்டி அணிவித்தான். அப்பொழுதும் அவள் பார்வை மாறவில்லை. வேலுவின் நண்பர்கள் அவனுக்கு வாழ்த்தை கூற அப்பொழுது தான் மெலிதான புன்னகையை உதிர்த்தான். வேலு அவனை கவனித்து கொண்டு தானே இருந்தான்.
என்னாச்சுடா? முகத்தில் சந்தோசமே தெரியலை மெதுவாக கேட்டான்.
ஹேய், நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் நீ வேற என சொல்லிக் கொண்டே புன்னகைத்து விட்டு அவளை பார்த்தான். அவள் யாரையோ தேடுவது போல் இருக்க..
யார தேடுற? கேட்டான்.
பாட்டியை பார்க்கணும்ன்னு தோணுது என்றாள். அவன் தங்கையை பார்த்தான். அவள் புரிந்து கொண்டு கீழே இறங்கி ஓடிச் சென்று அழைத்து வந்தாள்.
பாட்டி மேடை ஏற மாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு தன் பேத்தையின் புன்னகையை பார்த்து, சந்தோசத்தில் அங்கேயே நின்று அவளை பார்க்க, அவள் கண்ணாலே அவரை அழைத்தாள்.
அவர் வேண்டாம்ன்னு தலையசைக்க..கண்கலங்க அவரை பார்த்தாள். இருவரையும் எழுந்து நிற்க சொன்னர். இருவரும் எழ, சத்யா தியா கையை பிடித்துக் கொண்டு பாட்டியிடம் வந்து அவளை பார்த்தான். அவள் கண்ணீருடன் அவனை தான் பார்த்தாள்.
பாட்டி காலில் அவன் விழ..அவளும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க. அவர் கண்ணீருடன் ஆசி வழங்கினார். அவள் கண்ணீருடன் பாட்டியை பார்த்தாள். மீண்டும் இருவரும் மேடையேறினர். அனைவரும் இருவருக்கும் வாழ்த்தை கூற, பந்தி ஆரம்பிக்க சாப்பிட சென்றனர்.
அஜய் அர்ஜூனை தேடினான். அர்ஜூன் ஓரிடத்தில் தனியே அமர்ந்திருந்தான். அவனிடம் வந்த அஜய், அர்ஜூனிடம் மன்னிப்பு கேட்டான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை சார். சின்ன பசங்க விசயம் தான. சொல்லப்போனால் இப்படி நடந்ததால் தான் ராக்கி மாமாவை அப்பாவாக ஏத்துகிட்டான். எனக்கு சந்தோசமா தான் இருக்கு.
இல்லை. சந்தோசமா இருக்குற மாதிரி தெரியலையே?
இல்ல சார். நான் அம்மா. ஸ்ரீயை மட்டும் விடலை. பிரகதியையும் விட்டுட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ எதுக்கு அடிக்கடி என்னிடம் பேச வந்தான்னு இப்ப தான் புரியுது. ஆனால் நான் தான் ஸ்ரீயை காயப்படுத்த என்னிடம் பேச வர்றான்னு திட்டிகிட்டு இருந்திருக்கேன். ஸ்ரீ மேல இருக்கிற பாசத்துல தான் அவ ஸ்ரீ வீட்டுக்கு பார்க்க வந்துருக்கா. அப்பொழுதும் நான் அவளிடம் கடுமையாக தான் நடந்து இருந்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு என கண்கலங்கினான்.
முடிஞ்சதை பத்தி பேசி ஏதும் ஆகப்போறதில்லை அர்ஜூன். இனி நடக்கவிருப்பதை பார்ப்போம் என்றான். அவனை தேடி வந்த ஸ்ரீ.. அவர்களிடம் வந்தாள்.
அர்ஜூன், இங்க என்ன பண்ற? என்று அஜய்யை பார்த்து, சாப்பிடலையா சார்? என கேட்டாள்.
பசிக்கலை. பாப்பா எங்க? என் மேல கோபமா இருந்தா?
அவ ராக்கியோட தான் இருக்கா. அஷ்வின் எங்க?
அவன் பேரு தெரியுமா? கேட்டான் அஜய்.
ம்ம்..நல்லா தான் விளையாண்டுகிட்டு இருந்தாங்க. ஆனால் எதுக்கு திடீர்ன்னு சண்டைன்னு தெரியலை? அவன் ஓ.கே தான? ஸ்ரீ கேட்டாள்.
தெரியலை. நான் அவனிடம் இன்னும் பேசலை. அவன் அண்ணா அண்ணிக்கு நான்கு வருடங்களுக்கு பின் பிறந்தானா? அதனால் செல்லம் அதிகமா கொடுத்துட்டோம். புரியாம பேசிட்டான்.
பசங்க இனி புரிஞ்சுப்பாங்க என்றாள் ஸ்ரீ.
ம்ம்..என்று அஜய் எழுந்தான்.
என்னாச்சு சார்? நீங்க பேசணும்னா பேசுங்க. நான் அப்புறம் வாரேன் என்று அர்ஜூனை பார்த்தாள்.
இல்லம்மா. பையனை பார்க்கணும். நாம அப்புறம் பேசிக்கலாம் அர்ஜூன் என்று அவன் கிளம்ப, அர்ஜூன் சாப்பிட வா..ஸ்ரீ அழைத்தாள்.
நீ போ. நான் வருவேன் என்றான்.
நீ வந்தா தான் போவேன் என்றாள். அவன் எழுந்து ஸ்ரீ அருகே வந்து அவளை அமர வைத்து அவள் முதுகு பக்கம் சாய்ந்து அமர்ந்தான்.
அர்ஜூன், பேசணும்ன்னா பேசு..என்றாள்.
இல்ல ஸ்ரீ. கொஞ்ச நேரம் அப்படியே இரு என்று அவளது தோளில் அவன் தலையை சாய்த்து கண்ணை மூடினான். மற்ற அனைவரும் ஜோடி ஜோடியாக சுற்ற..கௌதமும் காருண்யாவும் புகைப்படம் எடுத்து தள்ளினர். அதை காருண்யா சுவாதிக்கு அனுப்ப, அவள் சந்தோசத்தில் எழுந்து குதித்தாள். தேவ் உள்ளே வந்தான். அவனை பார்த்து அமைதியானாள். அவள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்து இருப்பாள்.
என்ன? அவன் கேட்க, அவள் போனை காட்டினாள்.
ஹே..இது உண்மையா? என்று சந்தோசத்தில் அவளை அணைக்க சென்று நிதானமாகி பின் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க..சுவாதி, எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தா என்றான்.
சார்..என்று கண்கலங்க அவனிடம் வந்து தள்ளி நின்றாள். ப்ளீஸ் சுவாதி என மண்டியிட்டான்.
சார், என்ன பண்றீங்க? ப்ளீஸ் சுவாதி. சார் எனக்கென ஏதுமில்லை. நான் உங்களை..என்று தயங்கினாள்.
எனக்கு வேரெதுவும் தேவையில்லை. நீ மட்டும் எனக்கு போதும்.
சார், எனக்கு பயமா இருக்கு.
என்னை நம்ப முடியலையா? வருத்தமாக தேவ் கேட்டான்.
இல்லை. நம்புகிறேன். ஆனால் வேண்டாம் சார் என்றாள்.
உன் உதடுகள் தான் வேண்டாமென்று சொல்கிறது. உன் கண்கள் உன் காதலை தெளிவாக காட்டுகிறது என்றான் தேவ். அவள் திரும்பி நின்றாள். அவளை இழுத்து தேவ் அணைக்க, அவள் கண்ணீருடன் அவனை விலக்கினாள். நோ..சார்..என்று அழுது கொண்டே வெளியே வந்தாள். கௌதம் அம்மாவும் தேவ் அம்மாவும் அவளை பார்த்து அவளிடம் வர, தேவ் கதவை திறந்து கண்கலங்க அவளை பார்த்து விட்டு வேகமாக அவனறைக்கு சென்றான். சீனு அவர்களை பார்த்து நிற்க,
ஆன்ட்டி, பணம் இல்லைன்னா நீங்க என்னோட அக்காவை ஏத்துப்பீங்களா? கேட்டான்.
என்ன பேசுற? எனக்கு என்னோட பிள்ளைக சந்தோசம் தான் முக்கியம் என்றார் தேவ் அம்மா.
அம்மா, அப்பா ஒத்துக்க மாட்டேங்கிறாரா? ஆருத்ரா கேட்டாள். அவள் அம்மா அமைதியாக இருக்க, இன்று அவர் வரட்டும். நான் பேசுகிறேன் என்றாள்.
அவர் சம்மதித்தால் சந்தோசம் தான் என்றார் அவள் அம்மா. சீனு நானும் உங்களுடன் அவரிடம் பேசணும் என்றான். ம்ம்..என்று சுவாதியை பார்க்க ஆருத்ராவும், தேவ்வை பார்க்க சீனுவும் சென்றனர்.
அஷ்வினை அவன் அப்பா திட்ட, அவன் அம்மாவும் பாட்டியும் தடுத்தனர். சத்யா திருமணம் நடந்த நேரத்தில் அஜய் அப்பா வந்ததால் அவனிடம் யாரும் பேசி இருக்க மாட்டார்கள். அவருக்கு ஏக வரவேற்பு நடந்திருக்கும். சத்யா தியா பாட்டிக்கு பின் அவர் காலில் விழுந்தும்..பின் தான் அம்மா, அப்பா, ஊர் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றிருப்பர். அவர் செல்லும் போது அர்ஜூனை பார்த்துக் கொண்டே சென்றதை அஜய் கவனித்தான்.
அஜய் அங்கே வந்து யாரிடமும் பேசாமல் அமர, அஷ்வின் அஜய்யிடம் வந்தான். அஜய் கோபமாக அஷ்வினை பார்த்தான். சித்தப்பூ..அவன் அழைக்க, யாரை பார்த்து பொய் பேசி பழகின? கேட்டான்.
சாரி..சித்தப்பூ என அஷ்வின் அழுதான்.
நீ இரண்டாம் வகுப்பு படிக்கிற. அவன் உன்னை விட சின்ன பையன் இப்படியா சண்டை போடுவ? சித்தப்பூ அவன் தான் முதல்ல என்னை அடிச்சான்.
தெரியுது. நீ பேசியது சரியா? தப்பா? அஜய் கேட்க, அஷ்வின் அழுதான். அவனை தூக்கிய பாட்டி, புள்ளைய ஏன்டா திட்டுறீங்க? சொல்ல, அஜய் கோபமாக நகர்ந்தான்.
அங்கே சாப்பிட்டு வந்தனர் அகிலும் நண்பர்களும். எல்லாரும் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தனர். காயத்ரியும் மறையும் ராக்கி அனுவுடன் வந்தனர். கமலியை பார்த்து அவரிடம் வந்தாள் அனு.
ராக்கி அமைதியாக இருக்க..கவின் அவனை தூக்கிக் கொண்டு, அனு விளையாடலாமா? எழுந்தான். நாங்க ரெடி என்று தாரிகா அனுவை தூக்கிக் கொண்டு எழுந்தாள்.
ஓய்..என்ன? எனக்கு கேட்கலை..என்று அர்ஜூன் தாரிகாவிடம்..அது எப்படி மடிப்பு உலைந்து விடுமாம். இப்ப உலையாதா?
அர்ஜூன்..நான் சும்மா தான்.
அடிங்கோ..என்று அர்ஜூன் தாரிகாவை விரட்ட, தாரிகா ஓடினாள். அனு சிரித்துக் கொண்டு அர்ஜூனிடம்..நாங்க ஓடிருவோமே? என்றாள். கவின் தாரிகாவை பிடித்து நிறுத்த..அங்கிள் விடுங்க. நாங்க மாட்டிப்போம்..என்று அனு இறங்கி ஓட..அர்ஜூன் அனுவை துக்கி கிச்சு கிச்சு மூட்ட அவள் சிரித்தாள். ராக்கி ஆர்வமுடன் கவினிடமிருந்து இறங்கி அர்ஜூனுடன் சேர்ந்து அனுவை சிரிக்க வைத்தான்.
டேய்..போதும். பசங்கள விடு என்று பவி ராக்கியை தூக்கி, நடுவில் அமர வைக்க அனுவும் ஓடி வந்து அவனுடன் அமர்ந்து கொண்டாள். பாடல் பாடி விளையாடலாமா? என்று அவர்கள் ஜாலியாக சந்தோசமா பாட்டு பாடி விளையாட..அங்கிருந்த மற்றவர்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். அஷ்வின் இவர்களை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அஜய் அவனை கவனித்தாலும் பார்க்காதது போல் காட்டிக் கொண்டான்.
அபி அர்ஜூனிடம், ஸ்ரீயை காணோம் கேட்டான். அர்ஜூன் சுற்றி பார்த்து விட்டு எழுந்தான். அர்ஜூன் நானும் வாரேன் என்று அபி வந்தான். அபிக்கு ஷாப் பற்றி கேட்டது நினைவுக்கு வர, அர்ஜூன் நீ போ வாரேன் என்று இன்பாவை அழைக்க அவள் எடுக்கலை. இதயாவும் எடுக்கலை.
என்ன தான் பண்றாங்க? என்று புலம்பிக் கொண்டே அஜய்யை தாண்டி அபி செல்ல, அவன் பின்னே இவனும் வந்தான். பிரகதிக்கு போன் செய்தான். அவள் எடுத்து, ஹலோ..என்றாள்.
என்ன அப்படியாவா? நான் சீரியசா பேசுறேன். நீ சாதாரணமா பேசுற?
ப்ளீஸ் அபி. நான் கடனாளியாக இருக்க விருப்பமில்லை. வினிதாஅக்கா உதவி செஞ்சதால இரண்டு மாதம் சம்பளம் இல்லாமல் தான் வேலையே பார்த்தேன். யாரும் எனக்காக..அதுவும் பணமில்லை என பரிதாபப்படுவது சுத்தமா பிடிக்கலை. நான் யாரிடமாவது சும்மா பணம் வாங்கினால்..அம்மா செய்தது தான் என்னை நினைவுபடுத்துகிறது. ப்ளீஸ் அபி..என்னை விடேன்.
எனக்கு புரியுது பிரகதி. ஆனால் இப்ப நிலைமை சரியில்லை.
நான் எவ்வளவோ வலிய தாங்கிட்டேன் அபி. இது எனக்கு ரொம்ப சாதாரணம். அதை விட உன்னோட மேம் இருக்காங்களே அத்தனை அறிவுரை. யாராவது தொந்தரவு செய்தால் அந்த நேரம் பயன்படுத்த குடுத்துட்டு போயிருக்காங்க. அதனால பிரச்சனை இருக்காது. அதையும் மீறி பிரச்சனை வந்தால் உனக்கு கால் பண்றேன் போதுமா? அவள் கேட்க, அவன் போனை வைத்தான்.
அவனிடம் அஜய் வர, அவனை பார்த்ததும் அபி கோபம் அதிகமானது. அவன் தான் டீஸ் பண்றேன் என்று பிரகதியிடம் இருபதாயிரம் கேட்டு இருப்பானே? அவள் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு வேலையில் சேர்ந்திருக்கிறாள். கோபத்தில் அஜய்யை பார்த்து கையை ஓங்கிய அபி, அர்ஜூனை பார்த்து அவனிடம் சென்று பிரகதியை பற்றி சொல்ல..
இவன் என்னிடம் எதுக்கு கையை ஓங்குகிறான்? என அஜய் புரியாமல் பார்த்தான். ஸ்ரீயிடம் நான் வந்துடுறேன். யாரும் என்னை கேட்டால் கடை வரை சென்றிருக்கிறேன்னு சொல்லு..
பிரச்சனையா அர்ஜூன்.
இல்லை ஸ்ரீ. நான் ஒருவரை பார்க்க தான் போறேன் என்று அபியுடன் பைக்கில் ஏற, அஜய் அபியிடம் என்னாச்சு? கேட்டான். இருவரும் அவனை முறைத்துக் கொண்டே சென்றனர்.
என்னடா ஆளாலுக்கு முறைக்கிறீங்க? விசயத்தை சொன்னால் தான் என்னவாம்? புலம்பிய படி உள்ளே வந்தான். அஷ்வின் அவனிடம் ஓடி வர, என்னிடம் பேசாதே என்று ஓர் அறைக்குள் சென்றான் அஜய்.