வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-121
134
அத்தியாயம் 121
பவி அர்ஜூனை அழைத்துக் கொண்டே செல்ல, அர்ஜூன் வேகமாக இறங்கி வந்தான். பிரகதியை பார்த்ததும் அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
அவளை விடு அர்ஜூன். நான் தான் ஸ்ரீயை பார்க்க அழைத்து வந்தேன் பவி சொல்ல, பவி உனக்கு தெரியாது. சும்மா இரு என்று அஜய்யை பார்த்துக் கொண்டே வெளியே அழைத்து வந்தான்.
இருவரும் அவன் பின் வர, அகில், ஸ்ரீ பக்கம் வராதன்னு சொன்னேன்ல. எதுக்கு வந்த? கையை அர்ஜூன் ஓங்க பவி அவனை தடுத்து..அர்ஜூன் என்ன பண்ற? அவ தப்பான மோடிவ்ல வரலை என்று நீ வா..என்று கையை பிடித்தாள்.
சாரி பவி, இவளால என்னோட ஸ்ரீ மறுபடியும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்றான் அர்ஜூன்.
அர்ஜூன்..என்று அனு அழைக்க ஸ்ரீயும் அவளுடன் நின்றாள். அர்ஜூன் என்ன பண்ற? பொண்ணுங்க கிட்ட கையை ஓங்குற? எல்லாரும் உள்ள வாங்க ஸ்ரீ அழைக்க, பிரகதி தலையை கவிழ்ந்து நிற்க, பவி அவளை அழைத்து உள்ளே வந்தாள். நிவாசும் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ உனக்கு? நல்லா தான இருக்க? பவி கேட்க, நான் நல்லா இருக்கேன். ஒன்றுமில்லை. இவனுக தான் பதறி என்னையும் பதற வைக்கிறானுக என்று நிவாஸ் தலையில் தட்டினாள்.
நீங்க தேவராஜ் சார் மகன் தான? இங்க என்ன பண்றீங்க? அர்ஜூன் கேட்டான். அஜய் பவியை பார்த்தான். அர்ஜூன் பவியை பார்க்க.. அர்ஜூனிடம், அகில் பேசியதை சொல்லி விட்டு அவனுக்கு என்ன தான்டா பிரச்சனை? கேட்டாள்.
இரு. நான் பேசிட்டு வந்துடுறேன் அர்ஜூன் சொல்ல, நான் என்ன விசயம்ன்னு தான் கேட்டேன். உன்னை பேச சொல்லலை என்றாள்.
துருவன் காதலை சொல்றதுக்குள்ள அவளோட பேமிலி அவளை அனுப்பிட்டாங்க. ரதி ஆன்ட்டியால் தான் அவ போயிட்டா. அம்மாவை அகில் கவனித்து இருந்தால் இந்த பிரச்சனை இருக்காதுன்னு துருவன் அகிலிடமும் ஆன்ட்டியிடமும் சண்டை போட்டிருக்கான். அவன் கஷ்டத்தில் நான் மட்டும் எப்படி காதலிக்கிறதுன்னு..இப்படி பேசி இருப்பான் அர்ஜூன் சொன்னான்.
இதான் காரணமா?
அப்படின்னு நினைக்கிறேன். நீ வேண்டுமானால் துருவனிடம் பேசிப் பாரேன்.
வீட்டிற்குள் சென்ற துருவன் அகிலை பார்க்க, அவன் அறையின் வெளியே பவி வைத்து சென்ற செயினை எடுத்து பார்த்துக் கொண்டே அழுதான்.
ஏன்டா, இப்படி பேசுற? துருவன் கேட்க, அகில் அமைதியாக உள்ளே சென்றான்.
சாரிடா, என்னை மாதிரி நீயும் செய்யாத. நான் தான் அவளிடம் சொல்லலை. எனக்காக நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம். எனக்கு துளசி வீட்ல எல்லாரும் சப்போர்ட்டா இருக்காங்க. வெற்றி அய்யா..வந்தார் என்று அவன் கூற, அம்மாவுக்கு தெரிந்தால் திட்ட போறாங்க அகில் கூற, நான் பார்த்துக்கிறேன் என்று நம்பிக்கையுடன் பேசிய துருவன். இன்னும் என்ன பண்ற? போ..அவங்ககிட்ட குடுத்துட்டு சாரி சொல்லிட்டு வா..என்றான். அகில் துருவனை அணைத்து விட்டு ஃபங்சன் இடத்திற்கு போக..செல்லும் வழியில் ஏதோ சத்தம் கேட்டு நின்றான்.
மரத்தின் பின்னிருந்து சத்தம் வர, சக்தி இரத்த காயத்துடன் முணங்கிக் கொண்டிருந்தான்.
அண்ணா..என்னாச்சு? என்று கேட்க, அவன் பேசாமல் அகில் கையை பிடித்து எழுந்தான். ஆனால் ஒரு கையை அசைக்கவே முடியவில்லை.
யாருண்ணா? இப்படி செஞ்சாங்க? அவனை தோளில் பிடித்துக் கொண்டு அகில் கேட்க, என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ என்றான்.
அண்ணா…ஹாஸ்பிட்டல் போகணும் என்று ரோட்டருகே வந்தான். கௌதம் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தான். அகிலை பார்த்து காரை நிறுத்தினான். சக்தியை பார்த்து..கீழே இறங்கினான்.
என்னாச்சு? எப்படி அடிபட்டது? கேட்டான்.
சார், ஹாஸ்பிட்டல் போகணும் அகில் சொல்ல, நான் பார்த்துக்கிறேன். நீ போ என்று காரில் அவனை ஏற்றி ஹாஸ்பிட்டலுக்கு சென்றான்.
சிகிச்சை முடிந்து கையில் கட்டுடன் சக்தியை பார்த்த அர்ஜூன் பாட்டி…அவனிடம் இன்று என் வீட்ல இருந்துக்கோ. நாளை கிளம்பிடு என்றார். அனைவரும் மீண்டும் வீட்டிற்கு வர,
வீட்டில் அர்ஜூனிடம் அஜய் அவனிடம், உனக்கு என்னை தெரியலையா? கேட்டான்.
அதான் சொன்னேனே? உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? அர்ஜூன் கேட்டான்.
உங்க ஊர் சந்தையில குதிரைக்கு சண்டை..என்னை அப்பவே ஜெயிச்சேலடா. மறந்துட்டியா? அஜய் கேட்டான்.
உன்னை பத்தி எல்லாருக்கும் தெரிய வச்சு மாஸ் காட்டிட்ட போ..அஜய் சொல்ல.
என்னத்த காட்ட என்று ஸ்ரீயை பார்த்தான். அஜய் சிரித்துக் கொண்டு.. உனக்கு இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது என்றான்.சார், அது தைரியமில்லை. ஓவர் கான்பிடன்ஸ் என்று நிவாஸ் கூற, நீயும் இருந்தேல..அவன் சொல்ல..
சரி..நீங்க என்ன பண்றீங்க?
சத்யா எனக்கு தம்பி தான்.
தம்பியா? கலர் இடிக்குதே? பவி கேட்க..ஏம்மா..உடன் பிறந்தவன் இல்லை. சித்தப்பா பையன். அங்காளி பங்காளி முறை என்றான்.
ஓ..என்ற பவி முகம் தொங்கியது. பவி..வா அகிலை பார்த்துட்டு வரலாம் அர்ஜூன் சொல்ல, இல்லைடா அவனா வந்தா பார்க்கலாம். இதெல்லாம் ஒரு காரணமாடா? அதுக்காக விட்டுட்டு போக சொல்லுவானா? இடியட். நான் வீட்டுக்கு போறேன். ஜூலி தேடுவா.
இரு நான் டிராப் பண்றேன் என்று நிவாஸ் சொல்ல, அட தம்பி, என்னிடம் பேசலாம் செய்வீங்களா? பவி கேட்க,
உனக்கு உதவ வந்தேன் பாரு. என்னை சொல்லணும்.. என்றான் நிவாஸ்.
நான் கேட்க தான செய்தேன். சண்டைய இழுக்கிறான் பாரு பவி சொல்ல,
நான் சண்டைய இழுத்தேனா? நிவி கேட்க, ஸ்ரீ சிரித்துக் கொண்டு..இருவருக்கும் ஏகாந்த பொருத்தமா தான் இருக்கு என்றாள்.
எல்லாரையும் பார்த்த பிரகதி எழுந்தாள். அர்ஜூன்..நான் கிளம்புறேன். அப்புறம் உன்னிடம்..என்று அனைவரையும் பார்த்து தயங்கினாள்.
சொல்லு..
நான் எப்ப ஊருக்கு போறது? அம்மா தனியா கஷ்டப்படுவாங்க. பணம் வேற வேண்டும். அப்பா மருத்துவ செலவுக்கு பணம் கம்மியா தான் இருக்கு. வெர்க்கை பார்த்தால் தான்..பணம் கட்ட முடியும்.
சாரிம்மா, நாங்க ஊருக்கு போகும் போது தான் நீயும் போகணும்.
ரொம்ப நாள் ஆகுமா? அவள் கேட்க, ஆகும் என்றான்.
அர்ஜூன்..என்று ஸ்ரீ அவனை முறைத்தாள்.
ஸ்ரீ என்னை என்ன பண்ண சொல்ற? என்னிடம் எனக்காக கொஞ்சமா தான் பணம் வச்சிருக்கேன். கம்பெனியை இப்ப தான் டேக் ஓவர் பண்ணியிருக்கேன். என்னால யாருக்கும் பணம் கொடுக்க முடியாது.
இல்ல..அர்ஜூன். நான் பணம் கேட்கலை. நான் வெர்க் செய்துட்டு பணம் வாங்கிடுவேன் பிரகதி சொல்ல..
உனக்கு நடந்தது நினைவில்லையா? நீ யார் சம்பந்தப்பட்ட பைல்லை கொண்டு வந்து கொடுத்த? அவன் உன்னை பார்த்தால் அந்த இடத்திலே கொன்றுவான். உன்னோட அம்மா, அப்பா எங்க ஆட்கள் மேற்பார்வையில் தான் இருக்காங்க.
சேர்த்து வச்சிருப்பேல்ல..அந்த பணத்தை அனுப்பு அர்ஜூன் கூற, அவள் கண்ணீருடன் என்னிடம் ஏதுமில்லை. நான் தான் அன்றே சொன்னேன்ல. அவன் ஏமாத்திட்டான். மாதவருமானத்தில் அப்பாவிற்கே சரியாகிவிடும். அம்மா சம்பளம் ரொம்ப குறைவு தான். ப்ளீஸ் நான் போக மட்டும் ஏற்பாடு செய்து தர முடியுமா?
நீ அங்க போனாலும் தனியா இருக்கும் வரை ஆபத்து என்றான். அவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள். அவள் போன் ஒலிக்க எழுந்து எல்லாரையும் பார்த்துட்டு எழுந்து தனியே சென்று பேசி விட்டு அர்ஜூனிடம் வந்து..சாரி ஸ்ரீ, சாரி அர்ஜூன்..என்று அழுது கொண்டே வெளியே ஓடினாள்.
ஏய்..எங்க போற? என்று அர்ஜூன் சத்தமிட, பவி அவள் பின் ஓட நிவாஸ் அவளை நிறுத்தினான். அர்ஜூனுக்கு மெசேஜ் வந்த, அந்த பொண்ணோட அப்பா இறந்துட்டாங்கன்னு..
செட்..என்று நிவி எல்லாரையும் பார்த்துக்கோ. பவி வெளிய போகாத..என்று அர்ஜூன் வெளியே வர, அஜய்யும் அர்ஜூனுடன் வந்தான்.
சார், நீங்க அவளை பிடிங்க. யாரோ இருக்காங்க என்று அர்ஜூனும் வர, பிரகதி அழுது கொண்டே மெயின் ரோட்டிற்கு வந்தாள். கார் சர்ரென வந்து கொண்டிருக்க அவளை நோக்கி தோட்டா ஒன்று வந்தது. அஜய் அவளை தள்ளி விட்டு அவனும் விழுந்தான். அர்ஜூன்..அங்கிருந்தவர்களை பார்த்து அவர்களை விரட்டினான். அகில் சத்தம் கேட்டு அங்கே வந்து, பிரகதி கீழே விழுந்திருப்பதை பார்த்து ஓடி வந்தான்.
பிரகதி என்னாச்சு? என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தான். அஜய் அவளை தூக்கி விட்டான். இருவரையும் பார்த்த அகில் இங்க என்ன பண்றீங்க? சார், நீங்க..
ம்ம்..நான் தான்..என்று அவனது சட்டை, பேண்டை சரி செய்து கொண்டே அகிலிடம் பேசினான். அர்ஜூன் அங்கே வந்து..பிரகதி..ஒன்றுமில்லையே? சார் உங்களுக்கும் ஒன்றுமில்லையே? என்று அகிலை பார்த்தான்.
அர்ஜூன்..என்று அகில் கண்கலங்க, ஏன்டா பவியிடம் அப்படி பேசின? அவள் ஏதாவது தப்பா முடிவெடுத்திருந்தால்..என்று அர்ஜூன் சொல்ல அகில் பதட்டத்துடன்..எங்கடா அவ? அவளுக்கு ஒன்றுமில்லையே?
அவ பாட்டி வீட்ல தான் இருக்கா? ஸ்ரீ நல்லா இருக்காலா?
அவர் சரியாகிடுவார்ன்னு தான் டாக்டர் சொன்னாங்க. நான் இங்கே வரும் முன் கூட அப்பாவிடம் போனில் பேசிட்டு தான் வந்தேன் என அவள் மீண்டும் அழுதாள்.
அர்ஜூன்..அப்படின்னா?
அவன் குறி வைத்தது பிரகதியை..என்றான் அர்ஜூன்.
இவள் ஆதாரத்தை கொடுக்க தானே செய்தாள்.
ஆமாடா, அது உதவி தானே?
அது என்னன்னு கூட இவளுக்கு தெரியாதே?
அது அவனுக்கு தெரியாதே என்று அங்கிருந்த கல்லில் அமர்ந்தான் அர்ஜூன்.
அர்ஜூன்..எல்லாரையும் பாதுகாப்பது கஷ்டம்.
ஆமாடா, அவன் பிரகதிக்காக அவள் அப்பாவை கொன்று தான்..ஏய்..உன்னோட போனை கொடு என்று அர்ஜூன் பிரகதி போனை வாங்கி அவள் அம்மாவிற்கு போன் செய்தான்.
மருமகனே? நல்லா இருக்கீங்களா? என்றதும்..
வேண்டாம்..இதோட நிறுத்திடு.
எனக்கு வேண்டுமே? உன்னோட மாமன் என்னோட காதலை பறிக்க பார்க்கிறான். அவள் கிடைக்கும் வரை என் கண்ணில் சிக்கிய பொம்பளைகளை விட மாட்டேன்.
அவளுக்கு வேற யாருமில்ல. இப்படி செய்யாதே. வேண்டாம்..
சரி, அப்ப உன் மச்சான் நந்து அம்மாவை வந்து என்னிடம் விட்டு போக சொல்லு.
ஏன் உனக்கு இந்த பைத்தியக்காரத்தனம்? அர்ஜூன் கத்தினான்.
அந்த பொண்ணு இருக்காளா? இன்னும் சாகலையாமே?
ஆன்ட்டி..அவனிடமிருந்து தப்பிச்சிருங்க என்று அர்ஜூன் கத்த, பிரகதி பதட்டமானாள். அவள் அம்மா அழும் சத்தம் கேட்டது.
பிரகதி கை நடுங்க போனை அர்ஜூனிடமிருந்து பிடுங்கி அம்மா, எங்க இருக்க? கேட்டாள்.
வேண்டாம்..என்னை விட்டுரு என்று அவள் அம்மா கதறும் சத்தம் கேட்டது.
அம்மா..எதுக்கு அழுற? மூச்சு வாங்க அழுது கொண்டே கேட்டாள்.
பிரகதி, நீ இங்க வர வேண்டாம்மா. நான் இனி வாழ்ந்து ஒன்றும் ஆகப் போறதில்லை. நான்..என்று சத்தம் அடங்கியது. அவள் காதிலிருந்து போனை எடுக்கவேயில்லை. அம்மா..அம்மா..பேசு..பேசு..என்றாள்.
கண்ணாடி சன்னல் உடையும் சத்தம் கேட்டது. ஆம்பிலன்ஸ் சத்தம் கேட்டது.
அர்ஜூன்..அர்ஜூன்..ஆம்புலன்ஸ் சத்தம் என்று போனை விட்டு மயங்கினாள். அவன் போனை எடுத்து காதில் வைத்தான்.
அர்ஜூன் போன் ஒலிக்க, அதை எடுத்தான். மருமகனே? இன்னும் நடக்கும்..காத்திருங்கள். எனக்கு அவள் வேண்டும். என் மகளும் வேண்டும்..என்றான்.
என்ன? அர்ஜூன் பதற, ஆமா மருமகனே! அவள் தான் ஏற்கனவே ஒருவனுடன் படுத்து விட்டாளே? நான் அவளறைக்கு சென்றேனா? அதே மணம்..அதே காதல்..ம்ம்..நல்லா இருக்கு. அப்படியே அவளோட அம்மா வாசனை. நுகர நுகர..உள்ளே பரபரக்குது..எப்ப அழைச்சிட்டு வருவீங்க? அவன் கேட்க
அகில் தப்பு பண்ணிட்டேன்டா. ஸ்ரீயை அவன் கொல்ல தான் நினைக்கிறான்னு நினைச்சேன். ஆனால்..அவன் என் ஸ்ரீயை..என்று கதறி அழுதான்.
நானே வாரேன்டா என அர்ஜூன் ஓட, அகில் அவனை தடுத்து அவனை அடித்தான். அவசரப்படாத அர்ஜூன்..
சார்..அவளை தூக்குங்க. வீட்டுக்கு போய் பேசிக்கலாம் அகில் சொல்ல, இல்ல நான் இப்பவே அவனை கொல்லணும். இல்ல ஸ்ரீயை ஏதாவது செஞ்சிருவான் அர்ஜூன் சத்தமிட்டான்.
நாம இருக்கும் வரை அவனால் ஸ்ரீ பக்கம் கூட வர முடியாது என்று அவனை சமாதானப்படுத்து அழைத்து செல்ல..சத்யா ஃபங்சன் நடக்கும் இடத்தை பார்க்கவும் அஜய் நின்று..அவ்வளவு தூரம் வேண்டாம். முதல்ல எழட்டும் பேசலாம் என்று அர்ஜூனிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றனர்.
அஜய், யாருடா இந்த பொண்ணு? என்ன பண்ற? அவன் அம்மா பதற, சும்மா இரும்மா..என்று யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க என்றான்.
எல்லாரும் வெளியே வந்து அவளை பார்த்தனர். இந்த பொண்ணுக்கு என்ன அர்ஜூன்? வேலு கேட்க, அபி பிரகதியிடம் வந்து அவள் கன்னத்தை தட்டினான்.
இரு..என்ற அகில்..தண்ணீரை வாங்கி தெளித்தான். பிரகதி எழுந்து அனைவரையும் பார்த்தாள். அர்ஜூனை பார்த்தவள் அவனிடம் வந்து, அர்ஜூன்..அம்மாகிட்ட பேசலாம்ல. என்னோட போனை கொடு என்று கேட்டாள். அவன் அமைதியாக நின்றான்.
போனை கொடு, நான் என் அம்மாவிடம் பேசணும்? அம்மா என்னை அங்க வர வேண்டாம்ன்னு சொன்னாங்க. அவங்களுக்கு ஏதோ பிரச்சனை? சொல்லவாது செய்டா என்று அவனை அழுது கொண்டே அடித்தாள்.
சாரி, அம்மாவை அவன்..பேச முடியாமல் தொண்டை அடைக்க நிறுத்தி..அவங்க தற்கொலை செஞ்சுகிட்டாங்க.
இல்லை. என்னை விட்டு அம்மா இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க அர்ஜூன். வா,..அர்ஜூன் அப்பாவையும் பார்க்கணும். அம்மாவால தனியா மேனேஜ் பண்ண முடியாது.
அர்ஜூன்..என்று காயத்ரி அவன் தோளில் கையை வைக்க, அவளை பார்த்த அர்ஜூன்..அக்கா மாமா எங்க? கேட்டான். மறை அவன் முன் வர, வேலு மற்ற பசங்களும் அவனிடம் வந்தனர்.
இப்ப இங்க இருக்கிற யாரும் வீட்டுக்கு போக வேண்டாம். நாளைக்கு மேரேஜ் நடக்கும். இங்கேயே இருங்க. வேலு அண்ணா, சத்யா அண்ணா இங்க இருக்கட்டும். மத்தவங்களோட நீங்க யாரும் ஊர்ல சுத்தாம வீட்டுக்கு அனுப்புங்க என்று பிரகதியை பார்த்தான். அவளை வெளிய யாரும் விடாதீங்க. அவ பெற்றோரை வச்சு தான் இவளை கொல்ல பார்த்தாங்க.
அர்ஜூன், இப்ப நான் என்ன செய்றது? யாருக்காக இருக்கணும்? சொல்லுடா என்று அவன் மீது சாய்ந்து அழுதாள் பிரகதி.
சாரிம்மா..நான் ஆட்கள் போட்டிருந்தேன். எப்படி அவன் ஆட்கள் வந்தாங்கன்னு தெரியல என்று கண்ணீருடன் அர்ஜூன் அமர்ந்திருந்தான்.
அஜய் அவளிடம் வந்து குடிக்க தண்ணீரை நீட்டினான். அவனை பார்த்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு அர்ஜூனை பார்த்தாள்.
நான் வாரேன்..என்றான் அர்ஜூன்.
எங்க போற? அகில் வழியை மறிக்க, அபியும் அவனிடம் கேட்டான். நான் அவனை தான் பார்க்க போறேன். என்னால முடியலடா. அவன் அடுத்தடுத்து செய்ற எல்லாமே கஷ்டமா இருக்கு. அவனுக்கு நந்து அம்மாவும் ஸ்ரீயும் வேண்டுமாம்.
ஸ்ரீயை கொல்ல தானடா? அபி சொல்ல..அர்ஜூன் சீற்றமுடன் நடந்தான்.
ம்ம்..நல்ல முடிவுடா அஜய் சொல்ல, அர்ஜூன் நின்று அவனை பார்த்தான்.
போ..டா. போ..போன்னு சொல்றேன்ல என்றான்.
சார்,..
இத்தனை நாள் பொறுமையா இருந்த. நீ சொல்வேல்ல.. நாம மனசுல நினைக்கிறது தான் நடக்கும்ன்னு. உன்னோட மனசு குழப்பமா பயத்துல இருக்கு. உன்னால முடிவெடுக்க முடியலை. போ..இப்ப போனா உன்னால திரும்பி வர முடியாது. இதோ..அழுறா பாரு. இதே மாதிரி தான் நீ உயிரா நினைக்கிற ஸ்ரீயும் அழுவா?
போ..நேரமாகுது என்று அஜய் அர்ஜூனை கோபமாக தள்ளினான். அவனுடைய குடும்பம் அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
சித்தப்பா..உனக்கு நினைவிருக்கா..நான் லீவுக்கு உன் வீட்டுக்கு வந்தப்ப சந்தைக்கு போனோம். அங்க குதிரையை பார்த்து வேணும்ன்னு கேட்டேன். ஆனால் அங்க ஒரு சின்ன பையன் வந்து புத்திசாலித்தனமாக மடக்கி நம்மை ஜெயித்தானே அவன் தான் இந்த அர்ஜூன். அந்த குதிரையை என்னுடன் போட்டியிட்டு ஜெயித்து வாங்கினானே..அதே குட்டி பையன் தான் இந்த அர்ஜூன்..
ஆனால் அந்த பையன் இவனுக்குள் இல்லாத மாதிரி இருக்கே. நீங்க என்ன சொல்றீங்க? அஜய் கேட்க, சத்யா அப்பா அர்ஜூனிடம்..பொறுமையா இரு. அன்றே பிரதீப் எல்லாரிடமும் சொல்லிட்டான். எந்த பயலும் நம்ம வீட்டை நெருங்க விட மாட்டோம் என்றார்.
கிரிஷ்..நீ சொன்ன பையன் இவன் தானா? அவன் அம்மா கேட்க, அவன் தலையசைத்தான்.
நான் தனியா வரலைடா என்று நிவி..என்ன பண்ற? இன்பா எட்டி பார்த்தாள்.
இருங்க மேம் வாரேன் என்று அவன் அவர்களிடம் வந்தான். அர்ஜூனை பார்த்தவுடன் போனை எடுக்க மாட்டாயா? ஸ்விச் ஆப் செஞ்சு வச்சிருக்க. அங்க ஏற்கனவே சக்தி அண்ணா அடிபட்டு வந்திருக்காங்க என்றான்.
என்னடா சொல்ற? அர்ஜூன் கேட்க, ஆமா..கௌதம் சார் தான் ட்ரீட் பண்ணார்.
ஹே..க்யூட்டி..என்று அஜய் அழைக்க, அப்பொழுது தான் அவனை பார்த்தாள் இன்பா.
ஹேய்..ப்யூட்டி சார்ம்..என்று அவனிடம் வந்து, இங்க என்ன பண்ற? உனக்கு தான் ஹெவி வொர்க்காம் சந்துரூ பார்க்க கூட முடியலைன்னு சொன்னான் என்று அவனது கையை பிடிக்க, அபி அவளை முறைத்து பார்த்தான்.
மேம்..உங்களுக்கு இவரை தெரியுமா?
ம்ம்..நல்லா தெரியுமே? சந்துரூவோட படித்த க்ளோஸ் ப்ரெண்டுடா.
மேம்..என்று கவின் அழைக்க, என்ன? என்று புருவத்தை உயர்த்தினாள்.
அங்க பாருங்க என்று அபியிடம் கண்ணை காட்டினான்.
அபியை பார்த்த இன்பா, டேய்…முதல்லவே சொல்ல மாட்டீங்களா? என்று கவினை பார்த்து விட்டு அபியை பார்த்து நீ இன்னும் கிளம்பலையா? கேட்டாள்.
அவன் முறைத்து பார்க்க, அவள் திரும்பி அஜய்யை பாவமாக பார்த்தாள். அவன் ஆர்வமுடன் இருவரையும் பார்த்தான்.
அபி..இவனை..என்று இன்பா சொல்ல ஆரம்பிக்க, அர்ஜூன்..என்ன நடக்குது? அவன் மாத்தி மாத்தி பேசுறான். இப்ப பிரகதிய என்ன பண்றது? இந்த ஒரு மாசத்துக்கு நம்முடன் இங்க இருப்பா. அப்புறம் என்ன செய்வா? கேட்டான் அபி.
பிரகதியா? என்று இன்பா அவனை பார்த்து விட்டு பிரகதியை பார்த்து, அர்ஜூன்..என்று அவனை கவனிக்க..ஏய், நீ இங்க என்ன பண்ற? அபி வீட்ல தான இருந்த? என்று அபியை பார்த்தாள் இன்பா.
மேம்..அப்புறம் பேசலாம். நிவி..சக்தி அண்ணா. நல்லா இருக்காங்களா? இல்லை சீரியசா இருக்காங்களா?
கையில தான் கட்டு போட்டிருக்காங்க. அது அவங்க ப்ரெண்ட்ஸூடன் பிரச்சனையாம் என்றான் நிவாஸ்.
எல்லாரும் இங்கேயே இருங்க. கவின் என்னோட வா என்ற அர்ஜூன், வேலு அண்ணா..எல்லாரையும் பார்த்துக்கோங்க என்று வண்டிச் சாவியை வாங்கி விட்டு பிரகதியிடம் வந்து, நாங்க எல்லாரும் இருக்கோம். அழுதுகிட்டே இருக்காத பிரகதி அர்ஜூன் சொல்ல..
என்னது? நாங்க இருக்கோமா? என்ற இன்பா திரும்ப, அபி அவளிடம் வந்து முறைத்து பார்த்தான். அர்ஜூனும் கவினும் ஊரில் உள்ள முக்கியமான சில பகுதிக்கு சென்று ஆட்கள் யாரும் இருக்காங்களான்னு பார்த்தனர்.
இங்க சம்பவம் ஒண்ணு நடக்க போகுது என்று கண்ணன் சொல்ல, காயத்ரி இன்பாவிடம் சைகையில் ஏதோ சொல்ல, அவள் கண்ணை விரித்து சுருக்கி..என்ன? கேட்க, அபி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். காயத்ரி தலையில் அடித்துக் கொண்டாள்.
எல்லாரும் உள்ள வாங்க..சத்யா அப்பா சொல்ல உள்ளே சென்றனர். அஜய், அவன் குடும்பம், அபி அம்மா, அபி, அகில், நிவாஸ், இன்பா மட்டும் இருந்தனர்.
உங்களுக்கு எத்தனை பசங்க ப்ரெண்ட்ஸ் இருக்காங்க மேம்? அபி கேட்டான்.
எனக்கு..என்று யோசித்தாள். அஜய் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். எனக்கு “டுவன்ட்டி த்ரீ” பசங்க ப்ரெண்ட்ஸ் தான்.
இன்பா அவளை பார்த்து முறைத்து விட்டு, அபி அம்மாவிடம் சென்று ஆன்ட்டி, அவன் கோபமா இருக்கான். கெல்ப் பண்ணுங்க என்று மெதுவாக சொல்ல, இத்தனை பசங்களோடவா பேசுவ? கேட்டார்.
ஆன்ட்டி, ப்ரெண்ட்ஸ் தான ஆன்ட்டி..இல்லையே, இது சரியில்லை என்று அவர் உள்ளே செல்ல,
அபி அவளிடம், பொண்ணுங்க ப்ரெண்ட்ஸ் எத்தனை பேர் இருக்காங்க? எங்க ப்ரெண்ட்ஸ் யாரையும் சேர்க்காமல் சொல்லுங்க என்றான்.
இன்பா அமைதியாக இருந்தாள். உங்ககிட்ட தான் கேட்டேன் என்றான். ஒரே ஒரு பொண்ணு தான் என்று கண்கலங்கினாள். அவளுக்கு யாழினி நினைவு வந்து விட்டது.
அவ ரொம்ப ரிசர்வ் டைப். அதனால் என்னோட அவளால் மிங்கிள் ஆக முடிஞ்சது. பசங்க இத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாலும் எனக்கு அவளோட தான் கம்ஃபர்ட்டா இருந்தது. எல்லாமே ஷேர் பண்ணிப்பேன். ஆனால் அவள் சொல்ல மாட்டாள். சொல்லி இருந்திருந்தால்.. இப்ப அவ என்னோட இருந்திருப்பா. என்னால முடிஞ்ச கெல்ப் செய்து அவளை நானும் சந்துரூ மாதிரி பாதுகாத்து இருப்பேன் என்று இன்பா அழுதாள்.
அபிக்கு, ஏன்டா கேட்டோம்? என்றானது. அவளருகே சென்ற அபி அவள் கையை பிடித்துக் கொண்டு, நான் எதுவும் கேட்கலை என்றான்.
இன்று கிரையிங் டேவா? அஜய் கேட்டான்.
அகில்..நீ நான் அனுப்பிய வீடியோவை பார்க்கலையா? கேட்டான் அபி.
என்ன வீடியோ? இன்பா கேட்க, அபி அஜய்யை முறைத்தான்.
அவனை எதுக்கு முறைக்கிற? அவன் சமத்து பையன். எந்த பொண்ணுடனும் பேச கூட மாட்டான் என்றாள் இன்பா.
இதை பார்த்துட்டு பேசுங்க என்று அவன் காட்ட, இன்பா அதிர்ந்து அஜய்யை பார்த்தாள். அகில் கோபமாக அவனிடம் வந்தான்.
ஹே..அடிச்சிடாதப்பா..அந்த பொண்ணு விருப்பமில்லைன்னு சொன்னதும் விட்டுட்டேனே? நீ தான் அழ வச்சுட்ட? நான் சமாதானப்படுத்தினேன் என்றான்.
அழ வச்சியா? என்னடா பண்ண? இன்பா மறுபடியும் நார்மலாக அபி புன்னகையுடன் அவளை பார்த்தான்.
சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க. அதை விட்டு க்யூட்டியை அப்படி முறைக்கிற? அஜய் அபி தோளில் கையை போட, கையை தட்டி விட்டு..அது என்ன க்யூட்டி? கேட்டான்.
நிக் நேம் தான். அவள் செய்கை க்யூட்டா இருக்கும்ல என்றான் அஜய். அபி அவனை முறைக்க, இங்க பாரு…நல்லா புரியுது. இன்பா பக்கத்துல விருப்பமில்லாமல் யாராலும் நிற்க கூட முடியாது. அதுல அவ கரெக்ட்டா இருப்பா என்ற அஜய்..உன் பின்னாடியே சுத்துனானே முட்டகண்ணா..எங்கே இருக்கான்?
இங்க தான் இருக்கேன் என்று கேரி அங்கே வந்தான்.
பாப்பாவை விட்டு எதுக்குடா வந்த? இன்பா திட்டினாள்.
அதான் ஜாஸூ இருக்கால்ல? நீ வந்து நேரமாகுது. இவன் போனை வீட்லயே விட்டுட்டு வந்துட்டான். அதான் பிரச்சனையான்னு பார்க்க வந்தேன் என்று நிவாஸை பார்த்து விட்டு, நீ இங்க என்ன பண்ற?
இது எங்க பேமிலி ஃபங்சன். அப்ப பார்க்கலையாடா? இன்பா கேரியிடம் கேட்டாள்.
எங்க பாப்பாவை சமாளிக்கவே நேரம் சரியா போச்சு..
பாப்பாவா? அஜய் கேட்க, ஆர்வத்தில் இன்பா அஜயிடம் செல்ல அபி நினைவு வந்து, அவனை பார்த்தாள். அவன் சிரிக்க..அப்பாடா சிரிச்சுட்டான் என்று கேரிக்கு குட்டி பாப்பா இருக்கா..என்று பாப்பாவை வர்ணித்து பேச..
நிவி போகலாமா? இன்பா கேட்க, சார்..நீங்க உள்ள போங்க அபி சொல்ல, ஹேய்..நில்லு..என்ற இன்பா கேரி அஜய்யுடன் செல்பி எடுத்தாள்.
எதுக்கு இது? நிவாஸ் கேட்க, இவனெல்லாம் வொர்க் சின்சியர் பர்சன். நாளைக்கே காணாமல் போயிடுவான். அதனால தான் இருக்கு போதே எடுத்துக் கொண்டேன் என்று மனதில் இருந்த யாழினி நினைவுகளை கஷ்டப்பட்டு மறைத்து சிரித்தாள்.
நீங்க சாப்பிட்டீங்களா? அபி கேட்டான்.
போய்..சாப்பிட்டுக்கலாம் என்றாள் இன்பா.
சாப்பிட்டு போங்க என்று அபி சொல்ல, அவன் அம்மா சாப்பாட்டுடன் வெளியே வந்து இன்பாவை அழைத்தார்.
உள்ள வர வேண்டாம். இங்க வச்சு சாப்பிடு என்றார்.
ஆன்ட்டி..எனக்கு பசிக்கலை..என்றாள் இன்பா.
மனசுல இருக்கிற மத்த எல்லாத்தையும் பேசுற. கஷ்டத்தை மட்டும் சொல்ல மாட்டேங்கிற? நானும் கேட்டேன்..சாப்பிடு என்று அவளை அமர்த்தி அவரும் அமர்ந்தார்.
அஜய் புன்னகையுடன், சாப்பிட்டு போய்..தூங்கு. தேவையில்லாம எதையும் யோசிக்காத என்று அக்கறையுடன் கூறினான். நீ சொன்னதுக்காக மாத்தி என்னால கூப்பிட முடியாது. க்யூட்டி தான் என்றான். அவன் வீட்டினர் உள்ளே செல்ல..அஜய் சைலூவும் இங்க தான் இருக்கான் என்றாள் இன்பா.
ஆமா..நீங்க எல்லாரும் இங்க என்ன செய்றீங்க? அஜய் கேட்க, நீ அவனிடமே பேசிக்கோ. எனக்கு டயர்டா இருக்கு என்று பாவமாக இன்பா நடிக்க..
ஓய்..டிராமா பண்ணாத. பச்சையா தெரியுது உன் நடிப்பு.
அப்படியா தெரியுது அபி..என்று அகிலை பார்த்த இன்பா. நீ பவிய சமாதானப்படுத்தாம தூங்க போகக் கூடாது என்றாள்.
அதுக்கு தான் அவளை தேடி இங்க வந்தேன். என்னன்னமோ நடந்துருச்சு.
என்ன நடந்துருச்சு? அபி அன்று பிரகதிய பார்த்து அடிக்கப்போ? இன்று அவளை என்ன செய்யன்னு கேட்டா? அர்ஜூன்..நாங்க இருக்கோன்னு சொல்றான். என்ன நடக்குது?
அகில் நடந்ததை சொல்ல, யாரு தான்டா அவன்? இன்பா கேட்க, தெரியலை என்ற அகில், மேம் நான் உங்களை விட்டுட்டு பவியை பார்க்கணும். அர்ஜூனும் கவினும் அங்கே வந்தனர்.
வா நிவி கிளம்பலாம் அர்ஜூன் சொல்ல, ஏன்டா அவனும் ஸ்ரீயும் தான் உன் கண்ணுக்கே தெரிவாங்களோ? நாங்கெல்லாம் இருக்கிறதே உனக்கு தெரியலை இன்பா சொல்ல,
அர்ஜூன் ஏதும் பேசாமல் அவளை பார்த்து விட்டு உள்ளே சென்று வேலுவிடம் சாவியை கொடுத்து விட்டு வெளியே வந்து அஜய்யிடமும் பார்த்துக்கோங்க சார். இது என்னோட நம்பர் பிரச்சனைன்னா சொல்லுங்க. நாளைக்கு உங்களுக்கு இருக்க இடம் அரேஞ்ச் பண்ணிடலாம் என்றான்.
சரி..என்று எல்லாரும் உள்ளே செல்ல, அபி நிவி இன்பா மேம்முடன் போங்க. நாங்க நடந்தே வாரோம் என்று அகில், கவின், அர்ஜூன் வீட்டிற்கு நடந்து சென்றனர்.