வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-118
155
அத்தியாயம் 118
சுந்தரம் குகனை நிறுத்தி, உன்னோட அம்மா தப்பு செஞ்சிருந்தா விட்டுட்டு போயிருவியா? கேட்டார்.
நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்று நகர, அவன் தாத்தா அவனிடம் வந்து, குகா…உள்ளே போ அதட்டினார்.
தாத்தா..நான் இந்த வீட்டுப்பிள்ளை இல்லை. நான் போவது தான் சரி. என்னை விட்ருங்க.
அவனை போக விடுங்க. இத்தனை பேருடன் சேர்ந்து வாழ்ந்து விட்டு தனியாக ஒரு மாதம் கூட அவனால் இருக்க முடியாது சுந்தரம் சொல்ல,
சார்..நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க அவன் சத்தமிட, நந்து சுந்தரத்திடம் அவன் எப்படி போனால் உங்களுக்கென்ன? வாங்க நாம போகலாம். சில பேருக்கு நாம் சொல்வது உரைக்காது. பட்டு அனுபவிக்கட்டும் என்றான்.
என்னால அப்படி விட முடியலை. நான் இதே போல் தான் ஓர் கோபத்தில் பன்னிரண்டு வயதில் வெளியே வந்தேன். இப்ப வரையும் தனியா தான் இருக்கேன். அது போல் நான் யாரையும் விட மாட்டேன் என்றார்.
இப்ப என்ன சொல்ல வர்றீங்க? இவனை கூட்டிட்டு போகணும்ன்னு சொல்றீங்களா? நந்து சினத்துடன் கேட்டான்.
நான் அப்படி சொல்லலை. இவன் இங்க இருக்கணும்ன்னு சொல்றேன். கோபத்தில் எடுக்கும் முடிவு தவறானது. அவன் அம்மா இந்த வீட்டுப் பொண்ணு. இவனும் இங்கே இருக்க உரிமை இருக்கு.
எனக்கு இப்படிபட்ட அம்மாவே வேண்டாம்ன்னு சொல்றேன் என்றான் குகன். நந்து அம்மா அவனிடம் வந்து, என்ன சொன்ன? என்று அவனை அடித்தார்.
உன்னோட அம்மா நிறைய தப்பு செஞ்சிருக்கா. என்னால எப்பொழுதுமே அவளை மன்னிக்க முடியாது. ஆனால் அவள் நினைத்திருந்தால் நீ பிறந்திருக்கவே முடியாது. புரியுதா உனக்கு? சத்தமிட்டார். அவன் அம்மாவே கண்ணீருடன் நந்து அம்மாவை பார்த்தார்.
பிரச்சனையை முடிக்க பாருங்க என்று சுந்தரத்தை பார்த்தார் நந்து அம்மா. அவர் புருவத்தை உயர்த்தி..நல்லா பேசுறீங்களே என்றார்.
சார், நம்ம இருக்க வேண்டாம். கிளம்பலாமா?
ஓ.கே என்றார்.
நந்து, நீ நினைச்ச மாதிரி என் மேல தப்பில்லன்னு எல்லாரும் புரிஞ்சுக்கிட்டாங்க. நாம போகலாமா? ருத்ரா கேட்டார்.
போகலாம்மா..என்று குகனை பார்த்து விட்டு மூவரும் வெளியேற, குகன் அவன் அறைக்கு சென்றான். ருத்ராவின் அண்ணன்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு, அம்மாவை பார்த்து செல்ல சொன்னார்கள்.
ரொம்ப நாளாகியிருக்கும். பார்த்துட்டு போகலாமே? சுந்தரம் சொல்ல, நந்து அவரை முறைத்தான். மேகா அவன் கையை அழுத்தினாள். நந்து அவளை முறைத்து பார்க்க..ருத்ரா அவர் அம்மாவை பார்க்க சென்றார். படுக்கையில் ருத்ரா பெயரை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தார்.
மேகாவை அழைத்த சுந்தரம் நந்துவையும் அவன் அம்மாவையும் மட்டும் உள்ளே விட்டு வெளியே வந்தார். அங்கிள்..என்னாச்சு? நம்மளும் நம்மை அறிமுகப்படுத்தி இருக்கலாம்..என்றாள்.
அவங்க தனியா பேசினா தான் உன்னோட ஆன்ட்டி நிம்மதியா இருப்பாங்க. அதுக்கு தான் உள்ள விட்டது. உறவு கொண்டாடுவதற்கு அல்ல..என்றார் கோபமாக.
நாங்க இப்படி நடக்கும்ன்னு நினைக்கவேயில்லப்பா..என்று ருத்ரா அப்பாவும் கனத்த மனதுடனும் கண்ணீருடனும் நின்றார்.
சார், உங்க நம்பர் இருந்தா கொடுங்க என்று ருத்ரா அண்ணன்களில் ஒருவன் கேட்க, சுந்தரம் அனைவரையும் முறைத்து பார்த்து விட்டு, நான் பேசியது கேட்கலையா? இப்ப கூட அம்மாவும் பிள்ளையும் பிரச்சனையில தான் இருக்காங்க. நீங்க எதிலையும் தலையிட வேண்டாம். நானே பார்த்துக்கிறேன். இப்பவே நாங்க கிளம்பணும் என்று மேகாவிடம் போம்மா..பேசிட்டாங்களான்னு பார்த்துட்டு வா..என்றார்.
அவளை இடித்துக் கொண்டு பதட்டமுடன் நந்து சுந்தரத்திடம் ஓடி வந்தான். சார்..அம்மாவுக்கு துணையா இருங்க. சாரி சார் என்று அவர் சொறுகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அரண்மனையை பார்த்தான். நீளவாக்கில் இருந்த படியில் வேகமாக ஏறினான்.
நந்துவின் பதட்டத்தை பார்த்த சுந்தரம் மேகாவிடம், அவ இருக்கும் அறைக்குள் போ..கதவு சன்னல் எல்லாவற்றையும் தாழிட்டுக்கோ..போனை கனெக்ட்லயே வச்சிரு..என்று எல்லாருமே அவங்கவங்க அறைக்கு போங்க..கதவை பூட்டிக்கோங்க என சத்தமிட்டார்.
பாதுகாப்பெல்லாம் இல்லை. குகன் தான் எங்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பான் என்றார்.
நந்து வேகமாக ஏற, கையில் பையுடன் வந்த குகன் நந்து கையில் துப்பாக்கியை பார்த்து, ஏய்..துப்பாக்கிய எடுத்துட்டு எங்க போற? பையை போட்டு விட்டு அவன் பின் ஓடினான்.
நந்து அந்த அரண்மனையின் உச்சிகே வந்து நின்றான். கையில் போனை வைத்துக் கொண்டு, எங்கடா இருக்க? நீ செத்தேன்னா..யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. என்னோட குடும்பமும், என் அர்ஜூனோட குடும்பமும் நிம்மதியா இருப்பாங்க என்று கத்தினான்.
மகனே..நான் என் டார்லிங் குடும்பத்தை பார்த்துட்டு என் நண்பனை கொல்ல தான் வந்தேன். நீ எப்படி மகனே அவனை அப்பாவா ஏத்துக்கப் போறேன்னு சொன்ன?
என்ன பண்ற? யாரிடம் பேசுற? அவன் உன்னை மகன்னு சொல்றான். நீ யாரை அப்பாவா ஏத்துப்பப்போற? சொல்லுடா குகன் கேட்க, சுந்தரம் அங்கே வந்து நந்துவிடமிருந்து லாவகமாக துப்பாக்கியை அவர் கைக்கு மாற்றினார்.
இங்க என்ன நடக்குது? யாராவது சொல்லுங்க? குகன் கத்தினான்.
நீ என்னை தான் அப்பான்னு சொல்லணும். சொல்லு கொலைகார குணசீலன் சொல்ல, ச்சீ அப்பாவா? அந்த தகுதி உனக்கு கொஞ்சமும் இல்லை. பொண்ணுங்கள மதிக்க தெரியாதவனுக்கு அப்பான்னு கூப்பிட பிள்ளை வேண்டுமா? நந்து கத்த,
நந்து போனை கொடு என்று சுந்தரம் கேட்டார்.
நான் தர மாட்டேன். ஏய்..என் முன்னாடி வா..கண்ணாமூச்சி ஆட்டம் வேண்டாம். நான் உன்னை பார்த்தே ஆக வேண்டும் என்றான் பிடிவாதமாக நந்து.
சொன்னா கேளு நந்து. அவனிடம் இப்படி பேசாதே! என்னிடம் போனை கொடு சுந்தரம் நந்துவை நெருங்க குகன் புரியாமல் இருந்தாலும் நம்மை சுற்றி ஆபத்து உள்ளது என புரிந்து கொண்டான்.
நீ போனை யாரிடமும் கொடுக்க வேண்டாம். ஆனால் ஸ்பீக்கரில் போடு என்றான் குகன். நந்துவும் ஆன் செய்தான்.
யாருப்பா அது? புதிதா குரல் கேட்குதே! என் இன்னொரு மகனா? கேட்டான்.
யோவ், முதல்ல நீ யாருன்னு சொல்லு. அப்புறம் நான் யாருன்னு தெரிஞ்சுக்கலாம் குகன் சொல்ல, தம்பி..நான் யாருன்னு நீங்க உங்களை பார்க்க வந்தானே அவனிடம் கேட்டுக்கோங்க. அவன் அங்கே தான் இருக்கானா? என்று சுந்தரத்தை கேட்டான்.
ஆமாடா. பொறம்போக்கு நான் இங்க தான் இருக்கேன் என்றதும் அவர்கள் முன் வந்து குதித்தான் குணசீலன். இப்பொழுது தான் நந்து அவனை பார்க்கிறான்.
நீயா? என்ற நந்து, இவனா? கேட்க, ஆம் என்று தலையசைத்தார் சுந்தரம். வந்த குணசீலன் நேராக சுந்தரம் கழுத்தை நெறித்து எனக்குரியதையே பறிக்க நினைக்கிறாயா? அவளை எத்தனை வருடமாக பார்த்து வருகிறேன். ஈசியா அவ பையனை உன் பக்கம் இழுத்துக்கிட்ட. ஆனால் அவளை விட மாட்டேன். நண்பன்னு பார்த்தா ரொம்ப என்னை சாதாரணமா நினைச்சிட்ட. நீ இப்ப போ. பின்னாடியே உன் குடும்பம் மொத்தமும் வரும். எப்ப பாரு அர்ஜூன் தான உனக்கு? வருவான் உனக்கடுத்து அவன் தான் என்றவுடன் நந்து கோபம் அதிகமானது. வேகமாக வந்த நந்து அவனை எத்த, இருவருமே கீழே விழுந்தனர்.
சுந்தரத்தை தூக்கி விட்ட நந்து, யாரு மேல கையை வைப்பேன்னு சொன்ன? என்று சத்தமிட்டான்.
குணசீலன் சிரித்துக் கொண்டே எழுந்தான். அட, நண்பன் மேல் இவ்வளவு பாசமா? என்று நந்து அருகே வந்து உன் அம்மாவுக்கு நீ முக்கியம் என்பதால் தான் பேசிக் கொண்டு இருக்கிறேன். இல்லை என்றோ..என்று அவன் சொல்ல..
தெரியுமே? எனக்கு உன்னை நன்றாக நினைவிருக்கிறதே! நான் பள்ளியில் படிக்கும் போது எங்களை பின் தொடர்ந்து தான வருவ? எனக்கு சாக்லெட் வாங்கி கொடுத்திருக்க. ஆனால் இதெல்லாம் என் அம்மாவுக்கு தெரியாதே? அவங்களுக்கு அது அவசியமும் இல்லை. ஆனால் உன்னை என் அம்மாவுக்கு பிடிக்க வாய்ப்பேயில்லை. நீ கொலைசெய்வது, பெண்களை கஷ்டப்படுத்துவது என இருந்தால் எந்த பொண்ணுக்குடா பிடிக்கும். இதுல என்னோட வேற சின்ன கத்தி பட்டா கூட பயப்படுவாங்க என்று நந்து சொல்ல,
என்னை உன் அம்மாவுக்கு பிடிக்கணும். நீ தான் ஏதாவது செய்யணும்?
நீ ரொம்ப லேட் பண்ணிட்ட? என் அம்மாவுக்கு என் அப்பாவாக நான் சொன்னவரை தான் பிடிக்கும் என்றான். கோபமாக அவன் சுந்தரனை அடிக்க இருவருக்கும் இடையே மோதல் அதிகமானது. நந்துவும் குகனும் அவர்களை தடுக்க, யாரும் எதிர்பாராத நேரம் கத்தியை எடுத்தான்.
நந்துவிடம், எனக்கு நீ வேண்டாம். உன் அம்மா போதும் என்று நந்துவை குத்த வந்தான். சுந்தரம் அவனை தடுக்க அவர் கையில் கத்தி படவும் விசயம் அறிந்து மேலே வந்த ருத்ரா சுந்தரத்தை பார்த்து பதறி அவரிடம் ஓடி வந்தார்.
அம்மா, வராதீங்க நந்து சொல்ல குணசீலன் ருத்ராவை பார்த்து கத்தியை கீழே போட்டு அவரிடம் வந்தார். அதற்குள் சுந்தரத்திடம் வந்த ருத்ரா..இதுக்கு தான் வீட்லேயே இருக்கலாம்ன்னு சொன்னேன் என்று கண்ணீருடன் அவர் முந்தானையை வைத்து அவர் கையில் வழிந்த இரத்தத்தை துடைத்து விட்டு, நீ தானா எல்லாரையும் கொல்ல நினைப்பவன்? என்று குணசீலனை முறைத்து பார்த்து,
நீயெல்லாம் மனுசனாடா? உனக்கு என்னை பிடிச்சிருக்கா? எனக்கு கொலைகாரனெல்லாம் பிடிக்காது. உன்னை பார்த்த நினைவு கூட இல்லை. இனி எங்க யாரையும் தொந்தரவு செய்யாத. இங்கிருந்து போ..என கத்தி விட்டு இனியாவது நாங்க நிம்மதியா இருக்கணும்ன்னு நினைக்கிறோம். எங்களை விட்டுரு என்றார்.
விடணுமா? அதுவும் உன்னை விடணுமா? எத்தனை வருசமா காத்திருக்கேன். என்னால் உன்னை விட முடியாது. நீ விட்டுரு..இவங்க எல்லாரையும் விட்டுரு. நான் யாரையும் ஏதும் செய்யாமல் விட்டு விடுவேன். நீ மட்டும் என்னுடன் வந்து விடு என்றான்.
உன்னுடன் என் அம்மா வரணுமா? ஏய்..என்ன பேசுற? நந்து சீற்றத்துடன் கேட்டான்.
நீ சொல்லு. நீ என்னோட வந்துட்டேன்னா .நான் யாரையும் ஏதும் செய்ய மாட்டேன். ருத்ரா சுந்தரத்தை பார்க்க..வேண்டாம்..என்று அவர் தலையசைத்தார்.
அம்மா, என்ன பேசுறீங்க? நந்து கோபமாக கேட்க, சுந்தரம் பாவமாக ருத்ராவை பார்த்தார்.
என்னால என்னோட அம்மாவை உன்னிடம் ஒரு நிமிடம் கூட விட முடியாது நந்து கூற, நீ தப்பு பண்ற குணா..சுந்தரம் சொல்ல, இதுவரை நான் செய்தது தான் தவறு. இப்ப என்னோட டார்லிங் போதும் என்றான்.
ருத்ரா..வேண்டாம்மா..என்று சுந்தரம் கூற, ருத்ரா கண்கலங்க சுந்தரத்தை பார்த்து அவரிடம் வந்து அவரை அணைத்து விடுவித்தார்.
ஹேய்..என்ன பண்ற? அவனிடம் போகக்கூடாதுன்னு குணசீலன் ருத்ராவை அவன் பக்கம் இழுக்க, அவர் அவன் கன்னத்திலே அறைந்தார்.
நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்று அவர் சுந்தரத்திடம் வந்தார். போலீசுடன் அங்கே வந்தார் ருத்ராவின் அப்பாவும் அவர் குடும்பமும். இதை பார்த்து கோபமான குணசீலன் ருத்ரா..உன்னை விடவே மாட்டேன் என்று ஏற்கனவே அடிபட்ட காலுடன் கீழே குதித்தார். போலீஸ் அவனை விரட்ட அவன் தப்பி விட்டான்.
ஒருவர் சுந்தரத்தை பார்த்து, சார் நீங்க இங்க வந்திருக்கீங்களா? ஜமீன் குடும்பத்தை தெரியுமா? கேட்க, நந்து அவரிடம் நீங்க பேசுவதை அப்புறம் பேசிக் கொள்ளுங்கள். முதல்ல..டாக்டரை வரவைத்து அவருக்கு சிகிச்சையை கவனியுங்கள். ராவண் அவருக்கு மருந்திட..குகன் சுந்தரத்திடம் நானும் உங்களுடன் வருகிறேன் என்றான்.
நீ உன்னோட குடும்பத்தை பார்த்துக் கொள்.
இல்லை இதற்கு மேல் இங்கிருந்தால் என் மனம் உறுத்திக் கொண்டே இருக்கும் என்று ராவணை பார்த்தான். அவன் குகனை முறைத்தான். அவர்கள் முன் வந்த அவர்களது அம்மா,..ருத்ரா சொல்வது உண்மை தான். நான் தான் அவனுடன் தவறாக நடந்து கொண்டேன். நம் ஜமீன் கட்டுப்பாடுகள் தான் காரணம்.
அப்பா..பசங்க மட்டும் வெளிய போகலாம். அவங்க மட்டும் படிக்கலாம். வேலை பார்க்கலாம். ஆனால் பொண்ணுங்க இந்த அரண்மைனைக்குள்ள இருக்கணும். வருடத்திற்கு ஒரு முறை கோவில் திருவிழாவிற்கு தான் அழைத்து செல்வீர்கள். அவன் நம் அரண்மனைக்குள் திருட தான் வந்தான். அவனாவது நன்றாக பேசினான். அதனால் தான் அவனை இரவில் வரவைத்து நட்பாக தான் பழகினோம். அவன் என்னை காதலிப்பதாக கூறினான். அவன் என்னை வெளியே அழைத்து செல்வான் என்று அவனுடன் நெருக்கமானேன். அப்பொழுது தான் ருத்ரா பார்த்தாள். அவளால் சொன்னால் எனக்கு தண்டனை தருவீங்கன்னு பயந்து அவனை வைத்தே அவள் பக்கம் எல்லாவற்றையும் மாற்றினேன். அவள் வெளியே செல்வாள். இப்படி கஷ்டப்படுவாள்ன்னு தெரியாது. அவனை போலீஸ் சுட்டு கொன்னுட்டாங்கன்னு தெரிந்தவுடன் அனைத்தும் முடிந்ததுன்னு நினைத்தேன். ஆனால் அப்பொழுது திருமணமாகி குகனும் ராவணும் கையில் இருந்தனர். ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட்டால் தான் குகன் அவனுக்கு பிறந்தவன்னு தெரிந்தது. நான் பணம் கொடுத்து ரிப்போர்ட்டை மாற்றினேன்.
குகன் என் கணவரின் மகன் அல்ல. அவன் ருத்ராவுடன் இருக்கட்டும் அவளுக்கு விருப்பமிருந்தால்.
அவன் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை வைத்தார் அவளுடைய அப்பா. என்ன வேலை செஞ்சு வச்சுருக்க? கத்தினார்.
இடையே வந்த ருத்ரா..உங்க மேலையும் தப்பு இருக்கு. உங்களை போல் தானே நாங்களும் வாழ நினைப்போம். எத்தனை நாட்கள் அரண்மனைக்குள்ளே இருக்க முடியும்? உள்ளே அடைத்து வைத்திருந்ததால் இவ்வளவு பிரச்சனையும்..
கோபத்தில் சென்று மீண்டும் உள்ளே வந்த ராவணின் அப்பா..இதை கேட்டு..ராவா, நீ இங்க இருக்க வேண்டாம். நம் மரியாதையை நாம தான் காப்பாத்திக்கணும் என்றார்.
அவர் மனைவி ஓடி வந்து கணவன் காலில் விழுந்து என்னை மன்னிச்சிருங்க பாவா..நம்ம கல்யாணத்துக்கு பின் அவனை நான் பார்க்கவில்லை. அவன் வந்து போது கூட மிரட்டி அனுப்பி விட்டேன். என்னையும் கூட்டிட்டு போங்க. நானும் உங்களுடன் வருகிறேன் என்று கெஞ்சினார்.
அவரை தள்ளி விட்ட கணவன் குகா, உனக்கு விருப்பமிருந்தால் நீயும் என்னுடன் வா. ஆனால் இவளை அழைத்து செல்ல முடியாது என்றார்.
இல்லப்பா. நான் தனியா இருக்கணுன்னு தான் நினைச்சேன். ஆனால் என்னமோ இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு என்று ருத்ராவை காட்டினான்.
உன் விருப்பம் என்ற அவனது அப்பா..ராவா வா..என்று அவனை இழுத்தார். ஆனால் அவர்களின் தாத்தாவோ யாரும் இங்கிருந்து போகக் கூடாது என்றார்.
சுந்தரம் எழுந்து, உங்க பிரச்சனைய பார்த்துக்கோங்க. அப்புறம் நீங்க தான் அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கீங்க பார்த்து இருங்க. அவன் என்ன செய்யவும் தயங்க மாட்டான். நாங்க கிளம்புகிறோம் என்று குகனிடம் திரும்பி, நீ வரணும்ன்னா வரலாம். ஆனால் அவங்க விருப்பமில்லாமல் உன்னை வீட்டிற்குள் விட முடியாது. நீ ருத்ராவிடம் கேட்டுக்கோ..என்றார்.
இல்லை. இவன் வரக்கூடாது என்று முகத்தை சுளித்துக் கொண்டு நந்து குகனிடம், நீ உன் தாத்தாவுடன் இரு. எங்களுடன் நீ வர வேண்டாம் என்றான்.
குகன் படியில் போட்டிருந்த தன் பையை எடுத்து அதில் ஒரு கவரை எடுத்து சுந்தரத்திடம் கொடுத்தான். அதில் இன்ஸ்பெக்டர் என போஸ்டிங் இருந்தது.
நீ போலீஸ் பயிற்சி எடுத்தாயா? சுந்தரம் கேட்டார்.
இவங்க யாருக்கும் அனுப்ப பிடிக்கலை. ஆனால் எனக்கு இது தான் பிடித்தது. யாருக்கும் தெரியாமல் பேங்க் எக்சாம் எழுதப் போரேன்னு பொய் சொல்லி தான் வந்து கலந்து கொண்டேன். அப்புறம் பொய் சொல்லி எப்படியோ தங்கி அனைத்தையும் முடித்தேன். போன மாதமே எனக்கு இந்த கவர் வந்தது. அம்மாவுக்கு தெரியும். அவங்க தான் வாங்கி கொடுத்தாங்க. தாத்தாவிடம் பேசுறேன்னு சொன்னாங்க என்று அவன் அம்மாவையும் தாத்தாவையும் பார்த்தான்.
அவர் கோபமாக, யாருமே நம்ம சட்ட திட்டங்களை மதிக்கலை. என்னமும் செய்யுங்க என்று தன் மகள் ருத்ராவை பார்த்து, உன்னிடம் பேசணும்மா..உங்க வா என்றார்.
அம்மா, அதெல்லாம் தேவையில்லை என்றான் நந்து.
நான் பேசிட்டு வந்துடுவேன் நந்து என்று அவர் அப்பாவிடம் பேச சென்றார். இருவரும் அவர் அம்மா அறைக்கு சென்றனர். அவர் ருத்ராவிடம் மன்னிப்பு கேட்டார். நந்து குகனை முறைக்க, குகனின் அப்பா சுந்தரத்திடம் வந்து, என் பிள்ளைய நல்லா பார்த்துக்கோங்க என்று மனைவியை பார்த்து, உனக்கு கடைசியாக வாய்ப்பு தருகிறேன். தவறாக ஏதாவது செய்தாயெனில் உன்னை வீட்டை விட்டு அனுப்பி விடுவேன். எல்லாரிடமும் சொல்லிட்டு இருவரும் தயாரா வாங்க ராவா என்று சொல்லி விட்டு அமர்ந்தார். குகா..நீயும் வாடா ராவா அழைத்தான்.
நான் போறேன். வர்றது சந்தேகம் தான். நாம போன்ல பேசிக்கலாம் என்று அவன் அப்பாவிடம் மண்டியிட்டு, என்னை மன்னிச்சிருங்கப்பா. நான் எடுத்த முடிவு நம் அனைவர் நலனுக்காக தான். ப்ளீஸ்ப்பா.. கோபிச்சுக்காதீங்க என்றான்.
சரிப்பா, உனக்கு பிடிச்சதை செய். ஆனால் தினமும் பேசணும். நான் அங்கே வந்தால் உன்னை பார்க்க வருவேன். எதிலும் கவனமாக இருக்கணும் என அறிவுரை கூற, குகன் அவரை அணைத்துக் கொண்டான்.
ருத்ராவின் அம்மாவும் அவர்களுடன் வெளியே வந்தார். அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் பார்த்து அம்மா என்றும் பாட்டி என்றும் அணைத்து பாசத்தை காட்ட, ஜமீன்தார் அனைவரிடமும் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம். ஆனால் ஜமீன் மானம் போகும்படி ஏதும் செய்து விடாதீர்கள் என்று சொல்ல, எல்லாரும் மகிழ்ந்தனர்.
இரண்டாவது மகனின் பொண்ணு அவரிடம் வந்து, தாத்தா..இதை முன்பே சொல்லி இருந்தால் நான் படித்திருப்பேன். இப்ப நான் என்ன செய்ய? கேட்க, மற்ற பேத்திகளும் அவளுடன் வந்து நின்றனர்.
உங்களுக்கு இங்கிருந்தே படிக்க ஏற்பாடு செய்கிறேன்ம்மா..என்றார், “தேங்க்ஸ் தாத்தா” என்று அவரை மகிழ்வுடன் பேத்திகள் அணைத்துக் கொண்டனர்.
ஏன்டா, நீ தான தனியா இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்வ? இப்ப உனக்கு அண்ணன் இருக்கான். வேண்டாங்கிற?
ஆன்ட்டி,..அண்ணனா, அவரை உங்க பையனா ஏத்துக்கிட்டீங்களா? மேகா கேட்க, இல்லை என்று நந்து இடையே வந்தான்.
ஆமா, என்னோட மூத்த பிள்ளையா ஏத்துக்கிட்டேன் என்று நந்துவிடம், அம்மா உன்னை கவனிக்காமல் விட்டுவேன்னு நினைக்கிறாயா? கேட்டார்.
இல்லை என்று நந்து சிந்தனையுடன் அவன் பார்க்க, ருத்ரா காலில் விழுந்தாள் குகன் அம்மா.
என்னடி பண்ற? எழுந்திரு. அவன் உன் மகன் இல்லை. அவன் என் மகன். நான் பார்த்துக்கிறேன் என்று சுந்தரத்தை பார்த்து சரி தான சார்? கேட்டார்.
அவர் புன்னகையுடன்..சரி என்றார்.
நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க? ருத்ரா அப்பா கேட்க, நான் என்னோட பொண்ணிடம் பேசணும். இந்த கொலைகாரன் கதைய முடிக்கணும். பின் தான்..என்று ருத்ராவை பார்த்தார்.
காரு, அதெல்லாம் ஒத்துப்பா..என்றான் நந்து.
எனக்கு இன்னொரு பேத்தி இருக்காலா? என்று ருத்ரா அம்மா அவரிடம் வந்து, எல்லாரையும் நல்லா பார்த்துக்கோங்க என்றார். சுந்தரம் அவர்கள் காலில் விழ, ருத்ராவும் இணைந்து கொண்டார். புன்னகையுடன் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்தனர். சுந்தரம் ருத்ராவை பார்த்து புன்னகைத்தார்.
கல்யாணத்துக்கு சொல்லுங்க மாப்பிள்ள மறந்துடாதீங்க ருத்ராவின் மூத்த அண்ணன் சொல்ல, ருத்ரா கண்ணீருடன் அவர் அண்ணன்களை அணைத்து வருகிறோம் என்று ஐவரும் சென்னை கிளம்ப, ருத்ராவின் மூத்த அக்கா அவர் கணவருடன் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
காருண்யா யோசனையுடனே இருந்தாள். இன்பா அவளிடம் வந்து அமர்ந்தாள்.
என்னம்மா? உன்னோட அப்பாவுக்கு என்ன பதில் சொல்லன்னு யோசிச்சு வச்சிருக்கியா? கேட்டாள்.
எனக்கு ஓ.கே தான். ஆனால் அம்மான்னு எப்படி அவங்கள கூப்பிடுறது?
ஏன்? கூப்பிட்டால் என்ன? நீ உன் அம்மாவுடனே வளர்ந்திருந்தால் யோசிக்கலாம். அவங்களும் உன்னுடன் இருந்ததில்லையே? கூப்பிடலாம் இன்பா கூற,
சரி தான். ஆனால் என்னோட அம்மா என்னை பார்க்க அப்பாவிடம் பணம் வாங்குவாங்கன்னு நினைக்கக்கூட இல்லை என்று அழுதாள்.
முடிஞ்சத பத்தி பேசினால் வடு மறையாதும்மா. அதுக்கு மருந்தா நீ அவங்கள அம்மான்னு தான் கூப்பிட்டு பாரேன். அவங்களுக்கு இதுவரை கல்யாணம் கூட ஆகலையாம். எனக்கே அவங்கள நினைச்சா எப்படி இருக்கு தெரியுமா? என்று வருத்தமுடன், இத்தனை வருசமா ஆம்பளைங்க துணை இல்லாம அவங்க பையனை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாங்க? எத்தனை பேர் தொந்தரவை தாங்கினாங்களோ? கொஞ்சம் யோசிச்சு பாரு.
ம்ம்..என்றாள் காருண்யா.
நந்து காரை ஒட்டிக் கொண்டே அவ்வப்போது குகனை பார்த்துக் கொண்டே வந்தான். அவன் யோசனையில் மூழ்கி இருக்க, சார்..நீங்க அர்ஜூனிடம் பேசுனீங்களா?
அவன் காலை எடுக்க மாட்டேங்கிறான்.
அவன் ரெசார்ட் வேலையாக வெளிய பொருட்கள் வாங்க தான் செல்வதாக சொன்னான். வேலையாக இருப்பான்னு நினைக்கிறேன். இப்ப கால் பண்ணி பாருங்க..என்றான்.
அவர் அர்ஜூனுக்கு போன் செய்ய, அவன் அனைத்திற்கும் பில் செய்து விட்டு அமர்ந்தான்.
ஹாய் மாமா, நல்ல முடிவு எடுத்திருக்கீங்க?
அவர் முகம் கடுத்தவாறு என்னடா மாமா, பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேச மாட்டியா? அந்த கொலைகாரனிடம் எதுக்கு அந்த பொண்ணை விடப் போறேன்னு சொல்லி இருக்க? என்று திட்ட,..
ஸ்ரீயை பார்த்ததிலிருந்து அர்ஜூனுக்கு மூளை வேலையே செய்ய மாட்டேங்குது? நல்லா கேளுங்க நந்து சொல்ல,
டேய் மச்சான், என்னடா இப்படி சொல்லீட்ட?
அப்புறம் அந்த ஆளிடம் ஸ்ரீயை ஒப்படைக்கிறேன்னு சொல்லி வச்சிருக்க நந்து கோபமாக பேசினான்.
மாமா..எதுக்கு இப்ப இருவருக்கும் இவ்வளவு டென்சன்?
டென்சனா? அர்ஜூன் அவன்..
சொல்லுங்க மாமா. நான் பிளான் இல்லாம பண்ணுவேன்னு நினைக்கிறீங்களா?
எந்த பிளானா இருந்தாலும் என்னிடம் சொல்லிட்டு செய்ய வேண்டியது தான?
சொல்லி மாமா..உங்களையும் பிரச்சனையில இழுக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.
ஏற்கனவே நிறைய வந்துருச்சு என்று நந்து எல்லாத்தையும் சொன்னான்.
மாமா..அவன் உங்க வீட்டுக்கு வந்தானா? ஆன்ட்டி பேமிலி வரை போயிருக்கானா? அவனை சீக்கிரம் முடிக்கணும்.
உன்னோட பிளான நாங்க வீட்டுக்கு போன பிறகு சொல்லு. பாப்பாவிடம் பேசுனியா? அவள் கோபமா இருக்காலா? என்று காருண்யாவை பற்றி கேட்டார்.
அவன் கௌதம் சொன்னதை சொல்லி விட்டு அவள் எங்களுடன் தான் வந்துருக்கா. மாமா..நீங்க உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை தேட அவசியமே இல்லை. அவளே பார்த்துட்டா. என்ன அவரு தான் கண்டுக்கவே மாட்டேங்கிறார் என்றான்.
அர்ஜூன்..என்ன சொல்ற? யாருன்னு விசாரிச்சியா? இல்லை உனக்கு தெரியுமா? நந்து பதட்டமாக கேட்டான்.
ஏன்டா, மாமாவே டென்சன் ஆன மாதிரி தெரியலை. நீ ஏன்டா பதருற? அர்ஜூன் சிரித்தான். நந்து சுந்தரத்தை பார்த்து விட்டு அமைதியானான்.
யாருடா? சுந்தரம் கேட்க, நீங்க தான் ஊருக்கு அவளுடன் அனுப்புனீங்களே டாக்டர் சார் தான். மாமா அவ லவ்வ கூட சொல்லலை. நேரடியா கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னு கேட்டுட்டா? சிரித்துக் கொண்டே அர்ஜூன் சொன்னான்.
கல்யாணமா? என்ற சுந்தரம், அவர் என்ன சொன்னார்?
என்ன சொன்னாரா? அவளை பார்த்தாலே விலகிப் போறார். ஆனால் மாமா அவருக்கும் காருவை பிடிச்ச மாதிரி தான் தெரியுது. மாமா..உங்களால தான் யோசிக்கிறார்ன்னு நினைக்கிறேன் என்றான்.
நான் என்னடா செய்தேன்?
மாமா, நீங்க “தி கிரேட் கமிஷ்னர்”. உங்களுக்கு இன்னும் நல்ல பேர் இருக்கு. நீங்க பெரிய இடம். அவரு டாக்டர். என்ன தான் ஹ பொசிசன்ல இருந்தாலும் அவர் “மிடில்கிளாஸ்” தான?
அது ஏன்டா, அப்படி சொல்ற? மிடில்கிளாசுன்னு..
அப்புறம் எப்படி சொல்றது? அவர் அப்படி தான நினைக்கிறார்.
சரி, பார்த்துக்கோ..
இப்படி சொன்னால் நான் எப்படி பார்த்துக்க முடியும் கமிஷ்னர் சார். உங்க அபிப்பிராயம் என்ன?
டேய், அவரை பற்றி சரியா தெரியாதே? அந்த ஹாஸ்பிட்டல் டீன் இந்த பையனை நம்பினார். அந்த நம்பிக்கை..அப்புறம் என்று அவருக்கும் கஷ்டமான நிலையில் உதவியதை எண்ணி..நல்லா பையனாவும் தெரிந்தது. அதான் நம்பிக்கையுடன் அனுப்பினேன் என்றார்.
கேட்டுக் கொண்டிருந்த குகன்,..அதெல்லாம் இல்லை என்றான். அனைவரும் அவனை பார்க்க, யாரது புதுகுரல்? அர்ஜூன் கேட்டான்.
அர்ஜூன்..நான் வைக்கிறேன் என்று சுந்தரத்திடமிருந்து நந்து போனை பிடுங்க, குகன் அவனை பார்த்து நான் உன் மச்சானை பிடுங்கி விட மாட்டேன் என்றான்.
யாரு மாமா? அர்ஜூன் மீண்டும் கேட்க, நந்து அவனை முறைத்தான்.
சும்மா முறைச்சுக்கிட்டே இருக்காத. நான் வேண்டுமானாலும் வெளியே தங்கிக்கிறேன் என்றான் குகன்.
நந்து, சும்மா இரு. நான் உன்னிடம் என்னோட மூத்த பிள்ளைன்னு சொன்னேன். எங்களுடன் தான் நீயும் இருக்கணும். அவர் பொண்ணு சொல்லட்டும். மற்ற முடிவை அப்புறம் பார்த்துக்கலாம் என்றார்.
ஏன்டா, உங்க சண்டைய வீட்ல போய் வச்சுக்கோங்க. என்னை தூங்க விடுறீங்களா? மேகா சத்தமிட்டாள்.
அர்ஜூன் கலகலவென சிரித்து விட்டு, உன் அம்மாவை பங்கு போட ஒருவன் வந்துட்டானா நந்து. சூப்பர்டா. பிரச்சனை முடியட்டும். தினமும் உங்க சண்டையை பார்க்கவாது மாமா வீட்டுக்கு வருவேன்.
டேய், வாயை மூடு. அவர் கால் பண்ணிடுவார். நானே இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். இவங்க தூக்கத்தை கெடுக்குறாங்கன்னா. நீ என்னோட மைண்ட கெடுத்துட்ட இடியட் என்றாள்.
ஓய், என்ன கமிஷ்னர் சார். பக்கத்துல இருக்குற தைரியமா?
எங்கள விடு. நீ என்ன பண்ற? அங்கிள் உங்களுக்கு தெரியுமா? ஸ்ரீயுடன் ஒரே அறையில் இருக்கான் அர்ஜூன். இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?
டேய், என்னடா சொல்றா?
அய்யோ, மாமா..நான் நல்ல பையன். குட்டச்சி..என்ன போட்டு குடுக்கிறியா? அனுவுக்காக தான் மாமா.
டேய் மாமா, இன்னும் எவ்வளவு நேரமாகும்? இந்த பையன் பேசியே சாவடிக்கிறான் என்று காருண்யா சத்தமிட்டுக் கொண்டே கையில் ஐஸ்கிரீமுடன் ஓடி வந்தாள். நிவாஸ் அவள் இடையே வர, ஐஸ்கிரீம் நேராக அர்ஜூன் முகத்தில் விழுந்தது. அவனை பார்த்த காருண்யா பயங்கரமாக சிரிக்க நிவாஸூம் சேர்ந்து சிரித்தான்.
ஓய், ஐஸ்கீரிமை என் மேல கொட்டிட்டு என்ன சிரிப்பு இருவருக்கும்? அர்ஜூன் சத்தமிட, அர்ஜூன் நான் இல்லை இவன் தான் என் காலை தட்டி விட்டான் காருண்யா சொல்ல, அவள் தான் உன் மேல கொட்டின்னா அர்ஜூன் நிவாஸ் சொல்ல,
நய்யி நய்யின்னு பேசிட்டு என் மாமா மேல ஐஸ்கிரீமை கொட்டி விடுறியா? காருண்யா சண்டையை தொடங்க அர்ஜூன் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காத இருந்தா நீ சிரிச்சிருக்க மாட்ட நிவாஸ் சத்தமிட
ஏன், நீயும் தான சிரிச்ச? அவளும் சத்தமிட, டேய் நிறுத்துங்கடா என்று அர்ஜூன் முகத்தில் கொட்டிய ஐஸ்கீரிமை வழித்து அவர்கள் முகத்தில் தடவ,
போச்சு..போச்சு..என்னோட ஸ்கின்ன டேமேஜ் பண்ணிட்ட அர்ஜூன். இப்ப தான் மேக் அப் ட்ரை பண்ணேன் என்று காருண்யா சொல்ல..அங்கே வந்த தருண், அபி, இன்பா, ஆதேஷ், வேலு அவன் நண்பன் எல்லாரும் சிரித்தனர்.
அர்ஜூன், ஐஸ்கிரீம்லயா ஃபேஸ் வாஸ் பண்ணுவ. பார்த்துடா எறும்பு கடிக்க போகுது இன்பா கேலி செய்ய, நிவி..உன்னை என்று அர்ஜூன் அவனை விரட்ட, இருவரும் சிரித்துக் கொண்டே ஓடினர். அர்ஜூன் போனை கீழே விட்டு ஓடினான்.
சுந்தரம் நிவாஸ் பெயர் சிரிப்பை கேட்டு, இவன் சிரிப்பு மொத்தமும் காணாமல் போகப் போகிறது என்றார்.
எதுக்கு அங்கிள் இப்படி சொல்றீங்க?
ஸ்ரீ தம்பி தான அவன்.
ஆமாம்மா. இந்த கொலைகாரன் மகன் தான் அந்த பையன். அர்ஜூன் கொலைகாரன் பற்றி வெளியே தெரியக்கூடாதுன்னு மறைப்பதே இந்த பையனுக்காக தான். வெளியே தெரிந்தால் அவன் கஷ்டப்படுவான். சொல்லப்போனால் இந்த பையன் தன் அப்பா இறந்து விட்டான்னு வருத்தத்தில் இருக்கான். நினைச்சாலே கஷ்டமா இருக்கு என்றார் சுந்தரம்.
அர்ஜூன்..அர்ஜூன்..என்று ஓடிக் கொண்டிருந்த நிவாஸ் சட்டென நின்றான். அர்ஜூன் அவனிடம் வர காருண்யா கையில் அர்ஜூன் போனை வைத்துக் கொண்டு இருவரையும் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் நிவாஸை பார்க்க,
மாமா, நிவிய ஏதும் செஞ்சுறாதீங்க என்று அவன் அமர, அர்ஜூன் அப்படியே நின்றான்.
வேகமாக காருண்யா அவனிடம் வந்து, டேய் அர்ஜூன்..அவன் உன்னை ஏமாற்றுகிறான். ஏமாறாத அர்ஜூன்..அவனை விடாத என்றான்.
அர்ஜூன் கண்கலங்க, மாமா என்று ஸ்ரீயிடம் கூட அழைக்க மாட்டாளான்னு எதிர்ப்பார்த்தேன். ஆனால் நிவியிடம் எதிர்பார்க்கலை என்று அவன் கண் கசிய நிவாஸ் அவன் பேசுவதை கேட்டு, அவனிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டான். அர்ஜூன் அழுதான். அனைவரும் அவனிடம் வந்தனர்.
அர்ஜூன், அங்க ஏதும் பிரச்சனையா? கௌதம் கேட்க, இல்ல சார். எல்லாம் ஓ.கே. நான் கொஞ்சம் எமோஸ்னலாகிட்டேன்.
அர்ஜூன் நீ நினைச்சது உண்மை தான் கௌதம் சொன்னான்.
என்னது சார்? அர்ஜூன் புரியாமல் கேட்டான்.
ஸ்ரீ அப்பா..கௌதம் சொல்ல, எல்லாரையும் பார்த்து..தருணிடம் சாவியை கொடுத்து காரை எடு கிளம்பணும். அண்ணா..வண்டியை எடுத்திட்டு வாங்க. அதுக்குள்ள நான் பேசிட்டு வந்திடுறேன் என்று நிவாஸ் காருண்யாவை பார்த்து, முகத்தை கழுவிட்டு போங்க. நான் வந்துடுறேன் என்று அர்ஜூன் நகர்ந்தான். அவனை பார்த்து அவர்கள் செல்ல..அர்ஜூனும் தள்ளி சென்றான்.
சார், நிஜமாகவா? அங்கிள் உயிரோட இருக்காங்களா? அர்ஜூன் கேட்க, சுந்தரம் அதிர்ந்தார்.
இல்ல அர்ஜூன். ஒரு வேலை நீ முன்பே கவனித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்ல, சார் அப்ப அங்கிள் இல்லையா?
நீ தேவ்விடம் கொடுத்தது ஸ்ரீ அப்பா நம்பர் தான?
ஆமா சார். ஸ்ரீ அர்ஜூனை அணைத்துக் கொண்டு அர்ஜூன், அப்பா..அப்பா.. என்று மயங்கினாலே..அதே புட்டேஜை அனுப்பினான் அர்ஜூனுக்கு. நான் அனுப்பியதை பார் என்று சொல்லிய கௌதம். ஸ்ரீ அப்பா நம்பரை ட்ரேஸ் செய்தததில் அந்த ஹாஸ்பிட்டலை தான் காட்டி இருக்கும். அதை கூறிய கௌதம்..தேவ் ஹாஸ்பிட்டலுக்கு ஆப்ரேசனுக்கு போவது போல் சென்று பார்த்ததில் அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துட்டார்ன்னு தெரிய வந்தது. அவருக்கு கிலோ கணக்கில் ட்ரெக்ஸ் கொடுத்தே கொன்னுருக்காங்க. அவர் இருந்தும் ஒரு நாள் உங்கள் அனைவரையும் பார்த்து இருக்கிறார். அவர் உங்களிடம் வரும் முன் அவரை ஆட்கள் சிலர் தூக்கி சென்றிருக்கிறார்கள் வீடியோவை பார் தெரியும் என்றான் கௌதம்.
அந்த வீடியோவில் அர்ஜூன் உடைந்து வெளியே வருவது ஸ்ரீ அவன் பின் வந்து அவனை அணைத்து சொல்லியது கூட கேட்டது. அதில் தெளிவாக ஸ்ரீ பேசியது கேட்டது. அர்ஜூன்..அப்பா..அப்பா..இருக்கார். அவரை காப்பாற்றணும்ன்னு சொல்லி இருக்கா. ஆனால் விழித்து அவளுக்கு அர்ஜூனை அணைத்தது மட்டுமே நினைவிலிருந்திருக்கும். மற்ற அனைத்தையும் மறந்திருப்பாள்.
அர்ஜூன் அதை பார்த்து விட்டு கௌதமிடம் சார், அங்கிளைஎன்ன பண்ணாங்க? எப்படி, எப்ப இறந்தாங்கன்னு தெரிஞ்சா சொல்லுங்க?
நான் தேவ்விடம் கேட்கிறேன் என்றான் கௌதம்.
அர்ஜூன் குரல் தாழ்வாக ஒலிக்க, அர்ஜூன் நல்லா தான இருக்க? கௌதம் கேட்டான்.
நல்லா இருக்கவா? அது எப்படி சார் நல்லா இருக்க முடியும்? அவன் என்னை சுற்றி இருக்கும் அனைவரையும் கஷ்டப்படுத்தி இருக்கான். நான் ஏதோ அவனிடம் நேரம் கேட்டு, நேரமாக்குவது போல் தெரியுது. சீக்கிரம் முடிக்கணும் சார். அப்ப தான் நிம்மதியா தூங்க முடியும்?
அர்ஜூன், நான் கேட்பதற்கு உண்மையை மட்டும் சொல்லு என்ற கௌதம் அந்த கொலைகாரன் மகன் தான நிவாஸ் கேட்க, அர்ஜூன் அமைதியானான்.
சொல்லு அர்ஜூன்..கௌதம் சத்தமிட்டான். அர்ஜூன் அமைதி காக்க, ஓ..கண்டிப்பா அவன் தான? நீ சொல்ல வேண்டாம் அர்ஜூன். அவனை பிடிக்க நான் இவனை பயன்படுத்திக் கொள்கிறேன் என்றான் கௌதம்.
சார், என்ன செய்யப் போறீங்க? நிவிக்கு எதுவுமே தெரியாது. ப்ளீஸ் அவனை டார்கெட் பண்ணாதீங்க அர்ஜூன் சொல்ல, இல்ல அர்ஜூன். எனக்குன்னு இருப்பது என்னோட அம்மா தான். அவன் பேசியது கேட்டுகிட்டே இருக்கு. என்னால நிம்மதியா சாப்பிட, தூங்க முடியலை கௌதம் கதறினான்.
உங்க கஷ்டம் புரியுது சார். ப்ளீஸ் சார். உங்க அம்மாவுக்கு ஏதும் ஆகாது சார். ப்ளீஸ் அவனை ஏதும் செய்யாதீங்க.
சாரி அர்ஜூன் கௌதம் சொல்ல, ஓ.கே சார், நீங்க பண்ணுங்க. முடிஞ்சா அவனை தொட ட்ரை பண்ணுங்க பார்க்கலாம். அவனும் என்னோட அனு, ஸ்ரீயும் எனக்கு உசுரு. என்னை தாண்டி செய்யுங்க பார்க்கலாம்.
அர்ஜூன்..கௌதம் சத்தமிட, ஏன்டா இருவரும் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? சுந்தரம் சத்தமிட்டார். நந்து காரை நிறுத்தினான்.
சார் என்று கௌதம் பதற, மாமா..நீங்க இன்னும் போனை வைக்கலையா?
அர்ஜூன், நீ நினைக்கிற மாதிரி அவன் இல்லை என்ற சுந்தரம் கௌதமிடம், ஏம்பா உனக்கு என்ன உன் அம்மா பாதுகாப்பா இருக்கணும் அவ்வளவு தான? நம்ம மாதவை வைத்து புரடக்சன் கொடுத்திடலாம். ஆனால் அந்த சின்ன பையனை எதிலையும் சிக்க வச்சிறாத. அவன் அப்பாவுக்கு துளி கூட மகன் மேல பாசமே இல்லை. அவனை வைத்து பிரச்சனை செய்ய நினைச்சா..அவன் அந்த பையனை உன்னையும் சேர்த்தே முடிச்சிடுவான் என்று கௌதமிடம் அவன் தன் நண்பன் என்றும் நடந்ததை கூறி விட்டு, இப்ப அவன் ஃபோகஸ் எங்க மேல தான்.
எந்த முடிவும் எடுக்கும் முன் யோசித்து செய். அப்புறம் நாம தனியா பேசணும். நான் வீட்டுக்கு போய் கால் பண்றேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.
அர்ஜூன்..நீ ஏதாவது செய்றேன்னு ஏடாகூடமா மாட்டிக்காத. எல்லாரையும் இஞ்ச் பை இஞ்ச பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கான். ஊர்ல பசங்கள அலார்ட் பண்ணு. அப்புறம் அர்ஜூன்..அங்க வெற்றியோட பேசினியா?
அவரை உங்களுக்கு நினைவிருக்கா?
டேய், அவன் என்னோட சின்ன வயசு ப்ரெண்டு. அவனிடமும் பேசணும். நம்பர் அனுப்பு. அர்ஜூன் எனக்கு தெரியாம ஏதும் செய்யாத. இப்ப நீங்க மட்டும் பிரச்சனையில இல்லை. ஊரே பிரச்சனையில தான் இருக்கு. பார்த்து இருங்க.
இருவருமே கவனமா இருங்க என்ற சுந்தரம்..கௌதமிடம் தம்பி நாம அப்புறம் பேசாலாம் போனை வையுங்க என்று அர்ஜூன் நான் மறுபடியும் சொல்றேன்.
சரி மாமா. நான் சொல்றேன் என்று அர்ஜூனும் போனை வைத்தான். ருத்ரா மேகா வாயிலிருந்து கையை எடுத்தார். நீ கத்தி இருந்த இவனுக பேசியதை கேட்டிருக்க முடியாது என்றார்.
சார், ஸ்ரீ அப்பா உயிரோட இருக்க வாய்ப்பிருக்கா? நந்து கேட்க.. ம்ம்..விசாரிக்கலாம். அவரால் கூட அவனை உள்ளே அனுப்பலாம். நந்து காரை வீட்டை நோக்கி பயணித்தான். குகன் ஏதும் பேசவில்லை என்றாலும் உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக் கொண்டு வந்தான்.