வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-117
193
அத்தியாயம் 117
கமிஷ்னர் சுந்தரம் ஒரு பையனை அழைத்து வந்திருக்கிறார் என்று பேச்சு அடிபட்டது. நந்து அவர் அறைக்குள் சென்றதும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தான்.
நீ ஏதாவது என்னிடம் பேசணுமா? சுந்தரம் அவனிடம் கேட்டார்.
இல்லையே? என்று அங்கிருந்த அவரது புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான்.
எதுக்கு சிரிக்கிற?
இல்ல..இப்ப விட இளவயதில் அழகாக இருக்கீங்கன்னு பார்த்தேன் என்றான்.
அப்படியா? இப்ப கொஞ்சம் வயதாகி விட்டது சுந்தரம் கூற, நந்து சிரித்தான். சார்…ரொம்ப கொஞ்சம்ல சார் என்று சிரித்துக் கொண்டே அவன் கேட்க அவரும் சிரித்தார். உள்ளே வந்த அசிஸ்டென்ட் அவர் சிரிப்பை கண்டு அப்படியே நின்றார்.
என்ன? அவனிடம் சுந்தரம் கேட்க, சார் உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா? அவன் கேட்டான்.
இத்தனை நாள் பேச ஆள் இல்லாமல் இருந்தேன். இப்ப..என்று நந்துவை பார்த்தார். அவனும் அவரை பார்த்தான்.
சரி, நீ சொல்லு..ப்ரெஸ் ஆட்கள் வந்துட்டாங்களா?
எஸ் சார், மாதவ் வந்தாரா?
வந்துட்டார். வெளிய இருக்கார் சார்.
உள்ள வர சொல்லு என்று எழுந்தார்.
மாதவ் உள்ளே வந்து சல்யூட் செய்து நந்துவை முறைத்தான்.
ஏன் சார்? என்னை மட்டும் முறைச்சுக்கிட்டே இருக்கீங்க? நந்து கேட்டான்.
இல்லை. எங்க சார் பின்னாடியே சுத்துறியே? அதான்..
அவர் ஒன்றும் என்னோட லவ்வர் இல்ல சார். அவர் அறையை பார்க்கணும்ன்னு தோணுச்சு. அதான் வந்தேன்.
சார், நான் சொல்லலை. இவன் யாருன்னு கேட்குறாங்க? என்ன சொல்லப் போறீங்க?
அத நான் பார்த்துக்கிறேன். வா..போகலாம். நந்து நீ இங்கே இருக்கிறாயா? சுந்தரம் கேட்டார்.
இல்லை சார், நான் வெளியே இருந்துக்கிறேன். நீங்க முடிச்சிட்டு வாங்க.
யார் என்ன கேட்டாலும் பதில் பேசக்கூடாதுன்னு மாதவ் சொல்ல, சார் உங்க மேல இவருக்கு எவ்வளவு பாசம்? என்று இழுத்தான் நந்து.
உங்க பிரச்சனையை அப்புறம் வச்சுக்கலாம் என்று சுந்தரம் சொல்லி விட்டு, ப்ரெஸ் ஆட்களுக்கு பேட்டி கொடுத்தார். குழந்தையை கடத்தியவர்களை பக்கத்தில் நிற்க வைத்து பேசியவர்..இவங்கள பிடித்தவர் மாதவ். அவரிடம் பேசுங்க என நழுவ பார்த்தார் சுந்தரம்..
ஆரம்பித்தனர் ப்ரெஸ் பீப்பிள் கேள்விக்கணைகளை..
அவர் பொண்ணு காருண்யா பற்றி அவர்கள் கேட்க, என்னோட பொண்ணிடம் ரொம்ப வருசம் கழித்து தான் பேசி இருக்கேன். காலம் தாழ்ந்து நாங்க சேர்ந்தாலும் என் பொண்ணு என்னிடம் வந்துட்டா என்றார் மகிழ்வுடன்.
உங்க மனைவியை விட்டு பிரிந்து இருந்தீங்கல்லே? காரணம் வெளியே வரவே இல்லை. எல்லாரும் உங்களுக்கும் அவங்களுக்கும் “மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்கின்னு” பேசிக்கிறாங்க? அது தான் காரணமா? இல்லை உங்களுக்கு வேறு யாருடனும் பழக்கம் இருக்கா சார்? ஒருவன் கேட்க,
தேவையில்லாமல் வதந்தியை பரப்பாதீங்க. அப்படி யாரும் சாருக்கு பழக்கமில்லை மாதவ் கூற,
சார், இது என்ன சார்? என்று நந்துவும் அவன் அம்மாவும் அவர் வீட்டிற்குள் பையுடன் வருவதை புகைப்படமாக எடுத்து காட்டி ஒரு பொண்ணு கேட்டாள்.
மேடம், நேற்று தான் அவங்க வந்தாங்க.
முன்பே சாருக்கு அவங்களை தெரியுமா? மற்றொருவன் கேட்க, தெரியும் என்றார் சுந்தரம். அப்ப அந்த பொம்பளையுடன் அஃபேர்ல இருக்கீங்களா? நந்து கொதித்து எழுந்து, அவர்களிடம் வந்து, என்ன சொன்னீங்க? சத்தமிட்டான்.
டேய், உன்னை யாரு வரச் சொன்னது? மாதவ் நந்துவை உள்ளே தள்ள..இது புகைப்படத்தில் இருக்கும் பையன் தான் அந்த பொண்ணு சத்தமிட்டாள்.
சார், என்னோட அம்மாவை தப்பா பேசுறாங்க? என்று அவன் வெளியே வர, அந்த பொண்ணு அவனிடம் கேள்விகள் கேட்டாள். சுந்தரம் அவனிடம், உள்ள போ என்றார்.
நீங்க அமைதியா இருந்தா நான் நடந்ததை சொல்வேன் என்று அந்த கொலைகாரன் பற்றி சொல்லி, எதற்காக சுந்தரம் வீட்டிற்கு வந்தான் என்று கூறினான்.
கொலைகாரனை பிடிச்சதா சொன்னீங்க?
ஆமாம்,பிடித்தோம். அவன் முகமூடியை பயன்படுத்தி அவன் ஆட்களுக்கு அணிவித்து அவன் தப்பித்து இருக்கிறான்.
எப்ப சார், அவனை பிடிப்பீங்க?
சீக்கிரமே பிடிப்போம்.
சார், நீங்க இதுவரை உங்க வீட்டுக்குள்ள யாரையும் விட மாட்டீங்கன்னு கேள்விபட்டிருக்கிறோம்? இவங்கள மட்டும் எப்படி உள்ளே விட்டீங்க? என்று சுந்தரத்திடம் கேட்க, அவர் அவன் அப்பா பற்றி கூறி அவர் அவன் அம்மாவை பார்த்தது என அனைத்தும் கூறினார்.
சார்..எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க? மாதவ் மெதுவாக அவரிடம் கேட்டான்.
எல்லாரும் நந்துவிடம், நீ கொலைகாரனோட மகனா? என்று ஒருவர் கேட்டுக் கொண்டே அருகே வர, சுந்தரம் அவன் முன் வந்து, ஆமாம் இதுவரை கொலைகாரன் மகன் தான். இனி என்னுடைய மகனாவான் என்றார். எல்லாரும் அதிர்ந்து பார்க்க, நந்து கண்கலங்க அவரை பார்த்தான்.
சார், என்ன பேசுறீங்க? மாதவ் கேட்டான்.
நான் சரியா தான் பேசுறேன். நந்து, அவன் அம்மா, காருவிற்கு விருப்பமிருந்தால் நான் இவன் அம்மாவை திருமணம் பண்ணிக்கிறேன் என்றார்.
உங்க மனைவியை தனியே விட போறீங்களா?
வாட்? தனியா நான் அவளை விட்டேனா? அவள் தான் என்னை விட்டு காதலித்தவனுடன் உறவாடிக் கொண்டிருக்கிறாள் பத்து வருடமாக. நான் தான் தனியே இருக்கிறேன். என் பொண்ணை ஹாஸ்ட்டல் சென்று பார்க்க கூட என்னிடம் பணம் வாங்கி தான் செல்வாள். நான் கொடுக்கவில்லையென்றால் அவள் செல்ல மாட்டாள்.
என் மீது தான் தவறு. அவள் ஒருவனை காதலிப்பது தெரியாமல் நான் என் அப்பாவிற்காக திருமணம் செய்து கொண்டேன். அவளுக்கென்ன நல்லா தான் இருக்கா. ஆனால் அவனாது என்னிடம் சொல்லி இருக்கலாம். என் அருகிலே இருந்து முதுகை குத்திட்டான்.
கௌதமை முறைத்து காருண்யாவை அடிக்க வந்தவன் சுந்தரத்திடம் ஓடி வந்து காலில் விழுந்து, அப்படி மட்டும் சொல்லாதீங்க சார். நான் சொன்னால் அவளை கஷ்டப்படுத்துவீங்களோன்னு தான் சொல்லை.
காரணம் இப்ப தேவையில்லை. எல்லாம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டால், என்னை விட உங்கள் இருவரால் என் பொண்ணு தான் கஷ்டப்பட்டாள். இப்ப கூட அவள் பக்கத்தில இருக்க முடியாம பண்ணீட்டீங்க?
அவனை ஆட்கள் கேள்விகளால் துளைக்க, அமைதியா இருங்க நந்து கத்தி விட்டு, எதுக்காக பேட்டி செய்ய வந்தீங்க? எங்க பர்சனல் உங்களுக்கு அப்படி என்ன தேவை? என்று காருண்யா அம்மாவின் காதலனை பார்த்து,..
ஏன் சார், காருவை பத்தி கொஞ்சமாவது யோசித்து இருக்கலாமே? சின்ன வயசிலே அவள் ஹாஸ்ட்டல்ல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அம்மா, அப்பா இருந்து அவள் அநாதையாக நீங்க தான் காரணம். உங்களை மாதிரி ஆட்களால் தான் பொண்ணுங்க காதல்ன்னாலே பயப்படுறாங்க. காதலிச்சா வீட்ல எப்படியாவது சம்மதிக்க வைக்கணும். இப்படி அவங்க கல்யாணம் முடிந்த பின் அவங்க வாழும் போது இடையே வந்து பாருங்க..எல்லாரும் பிரிஞ்சு தனியா கஷ்டப்பட்டு இருக்காங்க என்றான்.
ஏய், நீ பேசாத. கொலைகாரனோட மகன் தானடா? அவன் கத்த, ஆமா நான் கொலைகாரன் மகன் தான். ஆனால் என் அம்மாவை அவன் திருமணமே செஞ்சுக்கலை. கடத்தி வச்சிருந்தான். நான் பிறந்த அன்று தான் அவனை பிடிச்சிருக்காங்க. என்னோட அம்மா ஆசைப்பட்டு அவனுடன் இல்லையே? ஒரு வருசமா அண்டர்கிரைடிலே அடஞ்சு இருந்திருக்காங்க.
என்னோட அம்மா தப்பிக்க நினைக்கும் போதெல்லாம் காலில் சூடு வச்சிருக்கான். எனக்கு இதை பற்றி எதுவுமே தெரியாது.
நேற்று சார் சொல்லி தான் ஒரு சைக்கோவோட பையன்னு தெரிஞ்சது. அவருக்கு காப்பாற்றியது வரை தான் தெரியும். ஆனால் நேற்றிரவு என்னை வைத்திருந்த ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்து பேசினேன். அம்மாவை அவன் துன்புறுத்திய அடையாளங்கள். அம்மாவோட வேதனையை மறக்க முடியாதுன்னு அங்கிருந்த செவிலியர் கூறினார். ஒரு மாதமாக ஹாஸ்பிட்டல்ல தான் வலியுடன் என்னை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு இருந்திருக்காங்க என்று நந்து அழுதான். சுந்தரம் அவனை இழுத்து அணைத்துக் கொண்டார்.
சார், அம்மா எல்லாத்தையும் என்னிடம் மறைச்சிருக்காங்க. என்னோட அம்மா, என்னை கொலைகாரன் மகன்னு யாரும் சொல்லக்கூடாதுன்னு தான் எல்லாத்தையும் மறைச்சாங்க. அதுக்காக அவங்க கஷ்டத்தையும் மறச்சிருக்காங்க. இது எல்லாத்துக்கும் காரணமானவங்க பதில் சொல்லியே ஆகணும். என்னோட அம்மா ஜமீன் குடும்பம் தான். என்னோட அம்மாவை பாதுகாப்பா அவங்க தான் பார்த்துக்கலை. அவங்க எனக்கு பதில் சொல்லியே ஆகணும் என்றான்.
ஜமீன் குடும்பமா? ஒருவர் கேட்க, அனைவரும் நந்துவை பாவமாக பார்த்தனர்.
சார், அவன் கஷ்டத்துல இருக்கான். நீங்க வந்ததுக்கான பதிலை மட்டும் நான் தாரேன் என்று மாதவ் முன் வந்தார்.
ஒரு நிமிஷம் சார் என்று கண்ணை துடைத்து விட்டு, நந்து சுந்தரம் கையை கோர்த்து, காரு என் அம்மாவை அவள் அம்மாவாகவும், என்னை அண்ணனாகவும் ஏத்துக்கிட்டா..நான் இவரை அப்பாவாக ஏத்துப்பேன் என்றான். அவர் கண்ணில் ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தது.
சார், உங்க பொண்ணை வரச் சொல்லுங்க? என்றார் ஒருவர்.
அவள் இப்ப வர முடியாது. அவள் அம்மாவை பற்றி தெரிந்து உடைந்து விட்டாள். அவள் இப்ப என் அம்மா, என் தங்கையுடன் வீட்டில் இருப்பாள்.
பெரிய “பிசினஸ் வுமன் கமலி” தான் என் தங்கை. நான் அர்ஜூனின் சொந்த மாமா. இதுக்கு மேல மாதவ் நீங்க பேசிக்கோங்க என்று நந்துவுடன் உள்ளே சென்றார்.
உள்ளே சென்றதும் நந்து தலைகவிழ்ந்து சோகமாக அமர்ந்தான். சுந்தரம் அவனருகே அமர்ந்து, நான் உன்னோட அம்மாவை ஹாஸ்பிட்டல பார்க்க போயிருந்திருக்கலாம்.
இல்ல சார், நீங்களே ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க?
இன்னும் நான் உனக்கு சார் தானா? கேட்டார் சுந்தரம். அவன் அவரை பார்த்தான். உங்க பொண்ணும், என்னோட அம்மாவும் என்ன சொல்றாங்கன்னு தெரியலை. ஆனால் நீங்க பக்கத்துல இருந்தா அம்மா மட்டுமல்ல நானும் சந்தோசமா இருப்பேன் என்று சுந்தரம் தோளில் சாய்ந்தான் நந்து.
வீட்டில் நந்து அம்மா இதை பார்த்து கண்ணீருடன் மேகாவை பார்த்தார். அவள் கண்கலங்க அவரை அணைத்துக் கொண்டார்.
ஆன்ட்டி, உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டாங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னா என்னிடம் சொல்லுங்க. நான் அங்கிளிடம் பேசுகிறேன் என்றாள்.
இல்லம்மா. அவரையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நந்துவே ஒத்துக்கிட்டான். ஆனால் அவரிடம் நான் பேசணும் என்றார். ஓ.கே ஆன்ட்டி. அங்கிள் வந்தவுடன் பேசுங்க என்றாள் மேகா.
அர்ஜூன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்க, காருண்யா ஆடை பகுதியில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள். அவளுடன் நிவாஸ் இருந்தான்.
பக்கத்திலிருந்தவர்கள் சென்னை சிட்டி கமிஷ்னர் பாரேன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார். அவரோட பொண்டாட்டி அவருக்கு தெரியாமலே யாருடன் இருந்தாங்களாம். அது தெரிந்து மனிதர் இன்னும் விவாகரத்து பண்ணாமல் பணம் கொடுத்து வருகிறார் “ரொம்ப கிரேட்” என்றார் ஓர் பெண்மணி.
அதுக்காக இத்தனை வருசம் தனியா இருந்திருக்கார். அவர் என்ன தப்பு செய்தார்? கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு தெரிந்து அந்த பொண்ணுக்கும் கல்யாண வயது வந்திருக்கும். பொண்ணு வேற..அவரை மீண்டும் தனியா விட்டு கல்யாணம் செய்து போக தான போறா?
அந்த பையனை பார்த்தீங்களா? அவன் அம்மாவுக்காக எப்படி அழுதான்? அவன் ஏன் அவரை பார்த்துக் கொள்ள மாட்டான்? இவர் இத்தனை வருடம் தனியே இருந்தது பெரியதல்ல..இனி வயதான பின்னும் யார் துணையும் இல்லாமல் இருப்பது நரகம். அந்த பொண்ணு ஒத்துக்கொண்டால் நல்லா இருக்கும் என்று பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் இரு பெரியவர்கள்.
இதை கேட்ட காருண்யா போனை எடுத்து அமர்ந்தாள். அவள் அப்பா, நந்து பேசுவதை பார்த்தாள். அவன் காருண்யாவிற்காக ஒத்து பேசி இருப்பான். அதை பார்த்து கண்ணீருடன் எழுந்து அர்ஜூனை தேடி ஓடினாள்.
ஏய், நில்லு..என்று நிவாஸூம் அவளுடன் ஓடி வந்தான். அர்ஜூனுக்கு கமலி போன் செய்து, அர்ஜூன் நீ நினைத்தது நடந்துருச்சு என்று சுந்தரம் பேசியதை மகிழ்வுடன் கூறினார். சரியாக காருண்யாவும் மூச்சிறைக்க அர்ஜூனிடம் வந்து நின்றாள்.
அர்ஜூன்..என்று அழைத்தாள். அப்பா..பேட்டியில என்று அவள் சொல்ல..ஷ்..என்ற அர்ஜூன் அவளை தனியே அழைத்து சென்று ஸ்பீக்கரில் போட்டான்.
ஆமாய்யா. என் பிள்ளை இங்கிருந்து தனியே போய் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான். ஆனால் அந்த பையன்.
பாட்டி, அவன் என்னோட ப்ரெண்டு தான் என்று காருண்யாவை பார்த்தான்.
பாட்டி ஒரு நிமிஷம் என்று போனை வாங்கிய கௌதம் தனியே வந்தான். எல்லாரும் அவன் பின் வந்து பார்த்தனர்.
அர்ஜூன், காருவை போர்ஸ் பண்ணாத. அவளா முடிவெடுக்கட்டும். அவளுக்கு அப்பா மட்டும் போதுமா? இல்லை குடும்பம் வேண்டும்மான்னு? அவளே முடிவெடுக்கட்டும். அர்ஜூன் அவளை பார்த்தான். அவள் உன் முடிவை கேட்டால் சொல்லாதே. அவளுக்கான நேரம் இது. எல்லாரும் விருப்பப்பட்டு அவளுக்கு பிடிக்காமல் போனால் அவள் மட்டுமல்லாமல் உன்னோட மாமா, அந்த பையன், அவன் அம்மா எல்லாரும் கஷ்டப்படணும். அதனால அவளை யோசித்து முடிவெடுக்க சொல்லு என்றான்.
உங்களுக்கு என்ன சார் அவள் மீது அக்கறை? அர்ஜூன் கேட்க, நான்..நான்..கமிஷ்னர் சாருக்காக சொன்னேன் என்று போனை அர்ஜூன் அம்மாவிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றான் கௌதம்.
ஏம்மா, அப்பா பொண்ணு இருவருக்குமே சேர்த்தே கல்யாணம் பண்ணிடலாம் போலவே? என்று குறும்புடன் அர்ஜூன் காருண்யாவை பார்த்தான். கௌதம் பேச்சில் சந்தோசமாக இருந்தாலும் அவன் அறையில் வைத்து பேசியது அவளுக்கு சந்தேகமாக இருந்தது. இவருக்கு நம்மை பிடித்திருக்கோ. பிடிக்காதது போல் நடிக்கிறாரோ? யோசித்தாள்.
என்ன காரு? வேண்டாமா? அர்ஜூன் கேட்க. சுயம் வந்து, என்ன?
ஏய், என் மாமாவுக்கு வழிய சொல்லிட்டு போ..என்று அர்ஜூன் கத்தினான். அவள் சென்று விட்டாள்.
டேய், அவளை கேலி செய்வது இருக்கட்டும். மாலை ஐந்து மணிக்குள் வந்துருங்க. சத்யா வீட்ல வந்து சொல்லிட்டு போயிருக்காங்க. நிச்சய விழா இருக்கு என்றார்.
வந்துடுறோம்மா..என்று போனை வைத்து விட்டு மீண்டும் பர்சேசிங்கை ஆரம்பித்தனர்.
வீட்டிற்கு வந்தனர் நந்துவும், சுந்தரமும். நந்து அம்மா இருவரையும் பார்த்து எழுந்து, உங்களிடம் பேசணும் என்று சுந்தரத்தை பார்த்து கூறினார்.
மிஸ்பிகேவ் பண்ணக்கூடாதுன்னு சொல்ல போறீங்களா? நேரடியாகவே கேட்டார் சுந்தரம்.
நாம தனியா பேசலாமே? என்றார். நந்து அவன் அம்மாவை முறைத்து விட்டு உள்ளே சென்றான். நந்து நான் சொன்னால் நீ கஷ்டப்படுவன்னு சொல்லலை என்றார்.
ஏம்மா, நான் கஷ்டப்படுவேன்னு நீங்க நினைக்கிற மாதிரி தான நானும் கஷ்டப்படுவேன். நீங்க சொல்லாதனால தான் கஷ்டமா இருக்கு என்று கத்தி விட்டு உள்ளே சென்றான். சுந்தரம் நந்து அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
நந்து அம்மா அவர் பக்கம் திரும்பினார். உட்காருங்க பேசலாம் என்றார்.
நந்து அம்மா அமர அவரருகே சுந்தரம் அமர்ந்தார். ம்ம்..சொல்லுங்க..
நீங்க கொஞ்சம் தள்ளி உட்காருறீங்களா? நான் பேசணும் என்றார் நந்து அம்மா.
அதான் நாம அங்க போக போறோமோ? அவர் கேட்டார். அது..என்று நந்து அம்மா சிந்திக்க..சுந்தரம் சிரித்துக் கொண்டு, உங்களுக்கு பேச கூட தெரியலை என்றார்.
இல்லை. எனக்கு பேச நல்லா தெரியும் என்று நந்து அம்மா கூற, நான் பார்க்க தானே போறேன் என்றார்.
என்ன பார்ப்பீங்க?
உங்க குடும்பத்தை சந்திக்க போறோம். நீங்க அவங்களிடம் பேசுவதை பார்க்க தானே போறேன்.
நான் போறேன் என்று நந்து அம்மா எழுந்தார். சுந்தரம் அவர் கையை பிடித்தார்.
சார், விடுங்க. முதல்ல நான் சொன்ன மாதிரி உங்க பொண்ணுகிட்ட பேசுங்க..
நீங்க உட்காருங்க. நானும் பேசணும் என்றார். சுந்தரம் கையை எடுக்க அவர் அமர்ந்தார்.
நீங்க தெளிவா சொல்லுங்க. கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க? உங்க பையனுக்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்க கூடாது. நமக்காக பண்ணிக்கணும் என்றார்.
நமக்காகவா?
ஆமாம். நமக்காக பண்ணிக்கணும். ஆனால் இதில் நம்ம பசங்களுக்கும் விருப்பம் இருக்கும். என்னோட பொண்ணு ஒத்துக்கிட்டா. நீங்க அவளை உங்க பொண்ணா பார்க்கணும். உங்களால முடியுமா?
ஏன், நான் பார்த்துக்க மாட்டேன். கஷ்டப்படுத்துவேன்னு நினைக்கிறீங்களா?
ஆமா, நான் உங்க கையை பிடிக்க நீங்க தடுக்கலையே. ஏத்துக்கிட்டீங்களே?
அது..என்று கையை உருவினார் நந்து அம்மா. சுந்தரம் புன்னகையுடன், எனக்கு நீங்க பக்கத்துல இருந்தா போதும். கையை பிடித்து கொண்டு என்று சுந்தரம் அவரை பார்த்தார்.
சரிங்க சார், உங்க பொண்ணு சொல்லட்டும் பார்க்கலாம்.
நாம கிளம்பலாமா? நந்து அவர்களிடம் வர, மேகா கல்லூரி பையை எடுத்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
ஏம்மா, நீ கண்டிப்பா வரணுமா? சுந்தரம் கேட்டார்.
நான் இல்லாமல் எல்லாரும் போக போறீங்களா? நானும் கண்டிப்பா வருவேன்.
அவனை அருகே அழைத்து அவன் காதருகே வந்த மேகா, இல்ல..இல்ல..பூதத்தை திணித்து வச்சிருக்கேன். பாக்குறியா? கேட்டாள். மூவரும் சிரித்தனர்.
கிளம்பலாமா? என்று அவள் முன் செல்ல, மூவரும் அவள் பின்னே சென்றனர்.
அவர்கள் அரண்மனையை அடைய மதியம் இரண்டானது. நால்வரையும் ஓரிடத்தில் அமர வைத்திருந்தனர். அங்கே வாத்து ஒன்று வந்தது. மேகா அதை பார்த்து ஆர்வமுடன் அதன் பின் ஓடி விளையாடினாள்.
மேகா..இங்க வா என்று நந்து அவள் பின் சென்றான். அவள் விளையாண்டு கொண்டிருக்க, அவள் முன் ஒரு பெரியவர் வந்து நின்றார்.
யாரும்மா நீ? எங்க அரண்மனை வளர்ப்பு பறவையுடன் விளையாண்டு கொண்டிருக்க, வா..என்று மேகா கையை பிடித்துக் கொண்டு, நீங்க இந்த அரண்மனைக்கு சொந்தக்காரரா? கேட்டான் நந்து.
என்னையே கேள்வி கேட்கிற? யாரு நீ? அதிகாரமாக கேட்டார். நந்து அவன் அம்மா பெயரை கூறி, நான் அவங்க பையன் என்றான்.
ஓ..ஓடுகாலி மகனா?
யார் ஓடுகாலி? நீங்களெல்லாம் மனுசனுகளா? என் அம்மாவை கடத்தியது கூட தெரியாமல் இருந்திருக்கீங்க?
கடத்துனாங்களா? என்னப்பா கதை கட்டுற?
நீங்க தான் கதை கட்டுறீங்க?
உன்னோட அம்மா வந்துருக்காளா?
ஆமா என்று கையை காட்டினான். அவர் அங்கே செல்ல..நந்துவும் மேகாவும் அவர் பின் சென்றனர். அவரை பார்த்து எழுந்த நந்து அம்மா அவரை முறைத்து பார்த்தார்.
என்ன இந்த பக்கம் வந்துருக்கீங்க? வாங்க உள்ள போய் பேசலாம் என்றார்.
நால்வரும் உள்ளே சென்றனர். அவர் ஓர் மணியை அழுத்த அனைவரும் மறு நிமிடம் வந்து நின்றனர்.
அப்பா, இவள எதுக்கு உள்ள விட்டுருக்கீங்க? சுந்தரம் வயதை ஒத்தவர் சத்தமிட்டார்.
அடுத்தடுத்து ஒருவராக நந்து அம்மாவை திட்ட, ஒரு பெண்மணி முறைத்து பார்த்தார். அவர் அருகே நின்றவர் புன்னகைத்தார்.
நந்து அம்மா குடும்பமே கத்திக் கொண்டிருக்க, அவரோ தலை கவிழ்ந்து நின்றார்.
அம்மா..என்று நந்து கோபமானான்.
சத்தம் போடாமல் இருக்கீங்களா? என்று சுந்தரம் கத்தினார்.
ஏய், அது நீ தானாடா? என்று நந்து அம்மாவின் மூத்த அண்ணன் சுந்தரத்தை கையை ஓங்கினார். அவர் கையை தட்டி விட்டு, எல்லாருக்கும் என்ன பிரச்சனை? என்ற நந்து அம்மா..
நான் வந்ததால் உங்க சொத்தை வாங்க வந்தேன்னு நினைக்கிறீங்களா?
எனக்கு நீங்களும் வேண்டாம். உங்க சொத்தும் வேண்டாம்.
அப்புறம் எதுக்கு வந்த? அவருடைய அக்கா சத்தமிட்டார். நந்து அம்மா சுந்தரத்தை பார்த்தார்.
இவங்க யாருடனும் ஓடிப் போகலை. இவங்களை ஒருவன் கடத்திட்டு போனான். இவங்க தப்பி உங்களிடம் வந்தாங்க. ஆனால் நீங்க இவரை உள்ளே சேர்க்காமல் விட்டுட்டீங்க. அதனால தான் இவங்க வாழ்க்கையே பாழா போச்சு என்று புகைப்படம் அனைத்தையும் காட்டினார் சுந்தரம்.
நீங்க அவ புருசன் இல்லையா?
இல்லை. இனி தான் சம்மதம் கேட்கணும் என்றார்.
என்ன?
ஆமா, இவங்களுக்கு கல்யாணமே ஆகலை. நீங்க விரட்டிய பின் இவங்க மீண்டும் அந்த சைக்கோவிடமே மாட்டினாங்க. அதன் பின் அவங்க இங்க தான் இருந்தாங்க இந்த நிலையில் என்று புகைப்படத்தை காட்டினார்.
இது என்ன புது கதையா இருக்கு? ஒருவர் கேட்க, முறைத்த பெண்மணி முகத்தில் ஒரு கொடூரம் தெரிந்தது.
நந்து அம்மா அவரை பார்க்க, மற்றவர்களும் அவரை கவனித்தனர்.
இவங்க ஓடி போயிட்டாங்கன்னு, நீங்க எப்படி முடிவு பண்ணீங்க? சுந்தரம் கேட்டார்.
அந்த பெரியவர், நந்து அம்மாவின் அப்பா. எங்க வீட்டுப் பொண்ணு பாத்து தான் சொன்னா?
பார்த்து சொன்னதை வைத்தா சொன்னீங்க?
ஓ..அவ சொன்னதை நம்புவீங்க. நான் எவ்வளவு கெஞ்சினேன். என்னை நம்பலை. நான் உங்க வீட்டு பொண்ணு இல்லையா? அவள் தான் எல்லாத்துக்கும் காரணம்.
யாரும்மா? நந்து கேட்க, முறைத்த பெண்மணியை கை காட்டினார் நந்து அம்மா.
ஏய், என்னை என்ன சொல்லிகிட்டு இருக்க? நீ தான அவனுடன் ஓடிப் போன? மிரட்டுவது போல் கேட்டாள்.
சுந்தரம் அவரருகே வந்து, நான் சென்னை சிட்டி கமிஷ்னர். எனக்கு ஒருவரை பார்த்தாலே விசயம் தெரிஞ்சுடும். எனக்கும் உங்க மேல சந்தேகமா இருக்கு.
அய்யோ..அப்பா, அவ பாருங்க என் மேல பழிய போடுறா?
சுந்தரம்..நந்து அம்மாவிடம் நடந்ததை கேட்டார்.
நான் எல்லாத்தையும் சொன்னால் இந்த ஜமீன் பேரு கெட்டுப் போகும். ஒன்று சொல்றேன் அதை மட்டும் செய்யுங்க.
என்ன? சுந்தரம் கேட்டார்.
அந்த பெண்மணி அருகே வந்த நந்து அம்மா, இவளுக்கு மூத்த பிள்ளை பொண்ணா? பையனா? கேட்டார்.
பையன் தான். எதுக்கு கேக்குற? அவர் அப்பா கேட்க, அந்த பையன் எங்கே?
இங்க தான் இருக்கேன் அவன் வந்தான்.
இந்த பையனுக்கும் இந்த பையனோட அப்பாவுக்கும் “டி என் ஏ” டெஸ்ட் இப்பவே எடுங்க.
எதுக்கு எடுக்கணும்? அந்த பையன் கேட்க, உன்னோட அப்பா இவராக இருக்க முடியாது.
ஏய், என்ன பேசுற? அண்ணன்கள் கத்தினர்.
அந்த பெண்மணியின் கணவன் தன் மகனை கையில் பிடித்து இழுத்து கொண்டு, வாங்க என்று ஹாஸ்பிட்டலுக்கு அழைக்க,
எல்லாரும் என்னையே சந்தேக படுறீங்களா? என்று ஒப்பாரி வைத்தாள்.
உன்னோட நாடகத்தை அப்புறம் வச்சுக்கோ? என்ற நந்து அம்மா..நீங்க யாருமே என்னை நம்பலைன்னாலும் இவள பத்தி தெரிஞ்சுக்கோங்க. அவன் என்னை பார்க்க வரலை. இவளை பார்க்க தான் தினமும் வருவான். எதுக்கு வாரான்னு அப்பொழுது எனக்கு சரியா தெரியலை. ஒரு மாதத்திற்கு பின்னும் அவன் வர, அவனை பின் தொடர்ந்து சென்றேன். இருவரும் ஒன்றாக ஒரே படுக்கையில் இருந்தனர்.
அவன் அம்மாவை கொன்று விடுவேன்னு என்னை மிரட்டினான். மனம் கேட்காமல் அம்மாவை பார்க்க சென்றேன். ஆனால் அங்கு அம்மா இல்லை. அவள் எனக்கு முன்பே திட்டமிட்டு அம்மா அறையில் அவனுடன் சேர்த்து பூட்டி விட்டாள். அப்புறம் எல்லாரையும் வரவைத்து என்னை தவறாக காட்டினாள்.
அம்மா மட்டும் தான் என்னை நம்பினாங்க. மறு நாள் அம்மாவை பார்க்க சென்ற போது அம்மா தலையில் அடிபட்டு இருந்தாங்க. அவன் என்னை விரட்டினான். நான் அவனிடமிருந்து தப்பிக்க வெளியே ஓடினேன். அன்று விழாவை காண அனைவரும் சென்று விட்டீர்கள். இவள் அதை சாதகமாக்கி தவறாக பேசினாள். மறு நாள் காலையில் வந்த போது என்னை விரட்டி அடித்தீர்கள்.
பார்க்கலாம்? என்று அந்த பெண்மணி கணவரும், அந்த பையனும் செல்ல.. அப்பா, ஒரு நிமிசம் நில்லுங்க என்று அந்தபையன் அவன் அம்மாவிடம்
“அம்மா உண்மையை சொல்லுங்க” அவள் மகன் கேட்டான்.
இவ பேச்ச கேட்டு நீயும் என்னை சந்தேகப்படுறியே? என அவள் நாடகமாடினாள்.
சந்தேகமெல்லாம் இல்லைம்மா. எங்களோட வாங்க சும்மா டெஸ்ட் எடுத்துடுவோம் என்றான் அவள் மகன். அவள் கோபமாக நந்து அம்மாவை அறைய வந்தார். இடையே வந்த சுந்தரம் மீது படவும் நந்து அவளை தள்ளி விட்டான். அவள் கீழே விழவும் அண்ணன்கள் எல்லாரும் அவளிடம் ஓடி வந்தனர். இதை பார்த்த நந்து அம்மாவுக்கு மிகவும் கஷ்டமானது.
அம்மா..எனக்கு இப்ப தான் சந்தேகமா இருக்கு. எதுக்கும்மா அவங்கள அடிக்க வந்தீங்க? கேட்டான் அவள் மகன்.
அவள் இவருடன் சேர்ந்து என் மீது பழி சுமத்த பார்க்கிறாள் என்று அவள் அழுதாள்.
பழி சுமத்தணுன்னா..இத்தனை நாள் அவங்க காத்திருக்க தேவையில்லையேம்மா. நீங்க தான் தப்பு செஞ்ச மாதிரி தோணுது என்று மகன் கூற,
இல்லை. அப்பா..சொல்லுங்க. என் பிள்ள என்ன பேசுறான்? பாருங்க என்று மேலும் அழுதார். நந்து அம்மாவை அவர்கள் அப்பா பார்த்தார். இவ்வளவு நேரம் கோபமாக பேசிக் கொண்டிருந்த நந்து அம்மா கண்ணீருடன் தன் அண்ணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
சுந்தரம் அனைவரையும் பார்த்து விட்டு அவளது கணவன் மகன் அருகே வந்து, சார் நீங்க டெஸ்ட் ரிப்போர்ட் வரவும் சொல்லுங்க .நாங்க வாரோம் என்று நந்துவிடமும் அவன் அம்மாவிடமும், இங்க எதுவும் சரியில்லை. நாம இங்க இருக்கிற ஹோட்டல்ல தங்கலாமா? கேட்டார்.
ஏதும் பேசாமல் நந்து அம்மா கண்ணீருடன் நகர, நந்து பின்னே சென்றான். வாம்மா..என்று சுந்தரம் மேகாவை அழைத்துக் கொண்டே மற்றவர்களை முறைத்தார்.
நில்லுங்க என்று ஜமீன்தார் அழைக்க, நால்வரும் நின்றனர்.
இங்கேயே தங்குங்க என்றார்.
நாங்க இங்க இருக்க மாட்டோம். இனி இங்கே வரவும் மாட்டோம். எனக்கு யாரையும் பிடிக்கலை. அதை விட உங்க எல்லாராலும் என்னோட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இப்ப கூட எங்க அம்மாவை உங்க பொண்ணு அடிக்க வந்தப்ப நீங்க வேடிக்கை தான பார்த்தீங்க? உங்க உதவி எங்களுக்கு தேவையே இல்லை.
அம்மா..போகலாம் என்று சார்..நீங்க ரிப்போர்ட் வந்தவுடன் சொல்லுங்க என்று நந்து அவன் எண்ணை கொடுக்க, அதை தடுத்த சுந்தரம்..இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. நான் மட்டும் வந்து உங்களை பார்க்கிறேன்.
நந்து அம்மாவை பார்த்து புன்னகைத்த பெண்மணி அவர் முன் வந்து, என்னை மன்னிச்சிரு. உன் மீது தவறிருக்காது என்று அன்றே எனக்கு தெரியும். நான் என்ன பேசினாலும் இவங்க யாரும் கேட்க மாட்டாங்கன்னு உனக்கே தெரியும். நீ போ..இனியாவது சந்தோசமா இரு. ஆனால் ஒரே ஒரு முறை உன் அம்மாவை மட்டும் பார்த்துட்டு போ. நீ போனதிலிருந்தே உன்னையே நினைச்சு பைத்தியம் மாதிரி புலம்பிக்கிட்டு இருக்காங்க. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ளீஸ் என்று மண்டியிட்டார். அவர் இந்த ஜமீனின் இரண்டாவது மருமகள்.
அண்ணி..என்று அவரிடம் வந்த நந்து அம்மா அவரை அணைத்தார்.
நல்லா நாடகமாடுறீங்கடி? என்று அவள் கத்த, அந்த மருமகள் ஜமீந்தாரின் மூத்த பொண்ணிடம் வந்து அவளை அறைந்தார் இரண்டாவது மருமகள்.
யாருடி நாடகமாடுவது? அன்று அத்தையை என் அறைக்கு இவள் தான் அனுப்பி வைத்தாள். ஏதோ செய்யப் போறான்னு தோணுச்சு. அதே மாதிரி ருத்ரா மேல பழிய போட்டாள். நான் என் கணவரிடம் கூறிய போது பெரிதாக அவர் கண்டுகொள்ளவில்லை. அத்தையும் மாமா..உங்களிடம் சொன்னாங்க. நீங்க நம்பலை. அதனால் நானும் அத்தையும் உண்மையை கொண்டு வர நினைத்தோம். அதற்குள் ருத்துவை நீங்க கண்டபடி பேசி வெளிய அனுப்பீட்டீங்க என்று சொன்ன மருமகள்..மூத்த மருமகளை பார்த்து,
நில்லுங்க அக்கா..இப்பவாது..சொல்லுங்க என சத்தமிட்டார்.
மாமா என்று மூத்த மருமகளும், இவள் என் நகையை திருடி எடுத்து விட்டு அவள் நகையை என் அறையில் வைத்து தான் எனக்கு திருடி என்ற பெயரை இவள் தான் வாங்கித் தந்தாள். என் அறையில் சென்று பாருங்கள். என்னுடைய நகை ஏதுமில்லை. உங்க மூத்த பொண்ணோட கை வரிசை எல்லாமே. அவள் அறைக்கு சென்று பாருங்க. நீங்களும் அத்தையும் கொடுத்த வைர அட்டிகை அவளிடம் தான் இருக்கும் என்றார்.
அப்பா, நம்பாதீங்க. எல்லாரும் சேர்ந்து என் மீது வீண்பழி சுமத்துறாங்க என்று மூத்த மகள் மண்றாடினாள்.
அம்மா, நிறுத்து..நினைச்சேன். இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்க? அவள் மகன் கேட்டான்.
கணவரும் கோபமாக உனக்காக தான என்னுடைய பெற்றோர் சொந்தங்களை விட்டு உன்னுடன் இங்கு வந்து இருந்தேன். இப்படி என்னை அசிங்கப்படுத்தீட்ட. அப்ப..குகன் நம் மகன் இல்லையா? சத்தமிட்டார்.
அவன் நம்ம பையன் தான் என்றாள் அவள்.
நடிக்காதடி. எவனோடவோ இருந்துட்டு இப்ப பிள்ளையும் கஷ்டப்படுற மாதிரி பண்ணீட்டியே? குகன் மட்டும் தானா? இல்லை ராவணுமா? அவர் கேட்க, அப்பா..என்று அவன் சத்தமிட்டான்.
என்னடா சத்தம் போடுற? நீ டாக்டர் தான? நீயே செக் பண்ணு என்றார்.
அம்மாவை நீங்களே இப்படி பேசுறீங்க? சத்தமிட்டான்.
குகன் முன் வந்து, எல்லாரும் அமைதியா இருங்க. அம்மா தான் தப்பு செஞ்சிருக்காங்க. இனி இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன். எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்னடா பேசுற? ராவண் கோபப்பட, உனக்கு புரியல ரா
வா..எனக்கு அம்மாவை பற்றி நன்றாக தெரியும். அவங்களால தான் இவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. நான் போறேன்..எந்த டெஸ்டும் வேண்டாம்.
நானே சொல்றேன். என் அம்மா, அப்பாவுக்கு புறந்த பிள்ளை நான் இல்லை என்று கத்தி விட்டு அவன் அழுது கொண்டே செல்ல, அவன் அப்பாவும் இனி என்னை தேடி வந்த காலை உடைச்சிருவேன்னு திட்டி விட்டு அவனுக்கு முன் அவர் சென்றார்.