அத்தியாயம் 114
சக்தியிடம் வந்த மாலினி, எழுந்திருங்க..என்று அழுதாள். அவளது முடியை பிடித்து இழுத்த பொன்னன்..என்னடி உனக்காக என்னிடமே எதிர்த்து நிக்குறான். அவனை அப்படி மயக்கி வச்சிருக்கியா?
வா..நானும் மயங்குறேன்னான்னு பார்க்கலாம் என்று மாலினியை இழுத்தான். அவள விடுங்கடா..என்று அவள் தோழி அடிக்க..நீயே வர்ற? நல்லது தான் என்று அவளையும் இழுத்தனர்.
மாலினி அவன் கையை கடித்து விட்டு,..சக்தியிடம் ஓடி வந்தாள். எழுந்திருடா..எழுந்துரு..என்று கத்தினாள். அவளுக்கு எடுத்து வந்த நீரை அவன் மீது தெளித்து விட்டு குடிக்க கொடுத்தாள். அதை பொன்னன் தட்டி விட்டு மாலினியை பிடித்து இழுத்தான். அவள் சக்தி கையை பிடித்திருந்தாள். இப்பொழுது அந்த கை இறுக்கமாக அவள் அழுவதை நிறுத்தி அவனை பார்த்தாள். அவன் விழித்து எழுந்தான். அப்பொழுது பொன்னன் மாலினி முடியை பிடிக்க அவள் அழுது கொண்டே சக்தியை பார்த்தாள்.
சக்தி அவள் கையை விட்டான். அவளுக்கு கஷ்டமானது.
இப்பவாது உனக்கு புத்தி வந்துச்சே. இந்த பொண்ணுங்கல்லாம் ஆடை மாதிரி. பிடிக்கலை துக்கி எறிஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும் மற்றொருவன் சொல்ல..எழுந்த சக்தி அவன் கன்னத்தில் அறைந்து விட்டு, பொன்னன் வாயிலே குத்தினான். அவன் திடுமென செய்ததால் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
மாலினி முடியை பிடித்திருந்த கையை பிடித்து இழுத்து திருகினான். பொன்னன் கத்த..டேய்..அவனை விடு. அவன் நம்ம நண்பன். விடுடா..
நம்மளா? என்ன நம்ம? நான் கூட குடித்ததால் தெரியாமல் தான் அனைத்தும் நடந்திருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால்…நீங்கெல்லாம் ப்ரெண்ட்ஸா டா. அந்த மறை என்னை அடிக்கும் போது வேடிக்கை தானடா பார்த்தீங்க? யாராவது முன் வந்தீங்களா? கத்தினான் சக்தி.
மாலினியும் அவள் தோழியும் ஆச்சர்யமுடன் சக்தியை பார்த்தனர்.
டேய்..மாம்ஸ்..அப்படி இல்லைடா. அதுக்கா இப்படி கோபப்பட்ட? இல்லடா. இனி நாம சந்திக்காம இருக்குறது தான் நல்லது. எனக்கு ப்ரெண்ட்ஸே இல்லைன்னு நினைச்சுக்கிறேன்.
பொன்னனிடம் வந்து, எவ்வளவு கேவலமா பேசுன? எனக்கும் அவளுக்கும் ஏதும் நடக்கலை. இருட்டா இருந்ததால அவளுக்கு உன்னை அடையாளம் தெரியலை. அன்று நீ அவளுடன் இருந்தாயா? என்று அவனை அடித்து விட்டு, நான் தான் அவளுடன் இருந்தேன். என் வழியை மாற்றி இருவரையும் உள்ளே வைத்து தாழிட்டது நீ.
ஆனா..மாலு, இப்ப என்னோட பொண்ணாட்டி. அவ மேல யாராவது கையை வச்சீங்க..கொல்லாம விட மாட்டேன். என்னை பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை.
பொண்டாட்டியா? ஆனா..அவ தான் கோபிச்சுட்டு உன்னை விட்டே போயிட்டாளே? இதுக்கு மேல அவ யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம் பொன்னன் கூற, அவர்களுள் ஒருவர் பார்வை மாலினி மேல் காமமாக பட்டது. அவள் எனக்கு கூட என்று தொடங்க..அவன் பற்கள் தெறித்தது.
இன்னும் யாருக்கெல்லாம் பல்லு உடையணும் என்று மாலினியின் தோளில் கை போட்டுக் கொண்டு..வாயில் வந்த இரத்தத்தை துப்பி விட்டு, அவள் முந்தானையில் வாயை துடைத்தான்.
சரி, வாங்கடா..யாரு அவ பக்கத்துல வரணும்? சக்தி கேட்டுக் கொண்டே அவள் தோழியை பார்த்தான். அவளும் மாலினி அருகே அவள் கையை பிடித்துக் கொண்டு நின்றாள்.
ஆமா..இவ பெரிய ரதி. இவளுக்கு மயங்க? ஒருவன் சொல்ல, அப்புறம் என்னடா அவ மேல கை படுது என்று பொன்னனிடம் வந்தான்.
சக்தி தப்பு பண்ற? பொன்னன் சொல்ல,
தப்பா? ஆமாடா தப்பு தான். உங்கள மாதிரி சுயநலமான ப்ரெண்ஸோட சேர்ந்து பழகி நிறைய தப்பு செஞ்சிருக்கேன். அது தப்பு தான். ஆனால் இந்த நிமிஷத்துல இருந்து உங்களுக்கும் “குட்பை”. இதுக்கும் “குட்பை” என்று மதுபாட்டிலை உடைத்தான். மங்கிய ஓளி வெளிச்சம் மாலினி மீது பட..அவள் மயங்கி விழுந்தாள். சக்தி நண்பர்களை திரும்பி கூட பார்க்காமல் மாலினியை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு நடக்க, அவள் தோழியும் பின்னே வந்தாள். அவளை விட்டு வரும் வழியில் மறை வீட்டை பார்த்தான். அவன் காயத்ரியிடம் பேசுவதை கேட்டு தான் சக்தி இங்கே வந்திருப்பான்.
அனைத்தையும் சிந்தித்து விட்டு, ஆமா..நான் குடிக்கலை. இனி குடிக்கவும் மாட்டேன். இனி எனக்கும் அவனுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் என் குடும்பத்துக்காக வாழ நினைக்கிறேன். அதுக்கு பணமும் வேலையும் வேண்டும் என்றான்.
குடிக்க மாட்டாயா? என்ற சரவணன் அவனை சுற்றி பார்த்து விட்டு பிரதீப்பிடம் வந்து, அண்ணா..ஓவர் நைட்ல நல்லவனாகிட்டான். நம்பாதீங்க..புருடா உடுறான். நம்ம ரெசார்ட் மூட வைக்க ஏற்பாடு செய்கிறான்.
இல்லை. நான் நிஜமாக தான் சொல்கிறேன். இந்த கைடு வேலைய நான் பார்த்துக்கிறேன்.
உனக்கு இதை பற்றி என்ன தெரியும்? வேலு கேட்டான்.
நான் தெரிஞ்சுக்கிறேன் என்றான் சக்தி.
இது ஒன்றும் விளையாட்டல்ல..அரசினரிடம் அப்ரூவல் வாங்கணும். உன்னை சோதித்து தான் உன்னை அனுமதிப்பாங்க.
அதுக்கென்ன? அவருக்கு சொல்லி கொடுக்க தான் இப்ப ஆள் இருக்கே என்று ஒரு பொண்ணு வந்தாள்.
ஏய்..நீ இந்த நேரத்துல என்ன பண்ற? கண்ணன் கேட்டான்.
சாப்பாடு போடுறாங்களாம். சாப்பிட வந்தேன் என்று அவனை முறைத்தவள்..பிரதீப்பிடம், ஒரு மாதமாக சரியா வேலை, சம்பளம் இல்லாமல் இருந்ததால் இங்கே வேலை செஞ்சவங்க.. வெளியேறிட்டாங்களாமே? அதான் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்க்க வந்தேன் சார்.
அதுக்கு இந்த நேரத்துல தனியாவா வந்த? கண்ணன் கேட்டான்.
இல்லை. என்னோட ப்ரெண்டும் வந்திருக்கான் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, ஒரு இளைஞன் கையில் சாவியை சுழற்றிக் கொண்டு விசிலுடன் வந்தான். அவனை முறைத்த கண்ணன் அந்த பொண்ணை பார்த்தான்.
சார், இவனுக்கும் சேர்த்து தான் பார்க்க வந்தோம்.
நீ ஓ.கேம்மா? இவனை பார்த்தால் வேலை பார்க்க வந்தவன் போல இல்லையே? வேலு கேட்க,
பிரதர்..நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் என்றான்.
டேய்..முதல்ல கண்ணாடிய கழட்டு என்றான் கண்ணன் வெறுப்புடன்.
மச்சானும் இங்க தான் இருக்கானா? என்று கண்ணன் முதுகில் தட்ட, பேசும் போது அவன் மீது எதுக்கு கை வக்குற? என்று சரவணன் அவனை திட்டினான்.
வேலைக்கு ஆள் எடுக்கணும்? அதுக்குள்ள இங்க எல்லாத்தையும் சரி செய்யணும் என்றான் பிரதீப்.
சரி, எனக்கு கற்று கொடுக்க ஆள் இருக்கா? சக்தி கேட்டான்.
ஆமா, உன்னோட பொண்டாட்டி தான் இருக்காளே? என்றாள் அவள்.
மாலினியா? அவளுக்கு என்ன தெரியும்?
என்ன தெரியுமா? அவள் பள்ளி முடித்து இரண்டு கோல் வச்சிருந்தா. அதுல ஒன்றையாவது பிடிக்கணும்ன்னு நினைச்சா. ஆனால்..அவளால் படிப்பை தொடர முடியவில்லை.
என்ன கோல்?
ஒன்று டாக்டராகணும் இல்லையென்றால் டூரிசம் படிக்கணும். டாக்டருக்கு படிக்க வைக்க வசதி பத்தாது. இதையாவது படிக்கணும்ன்னு ஆசை அவளுக்கு. ஆனால் அவளுடைய அப்பா..பொம்பள பிள்ளைக்கு என்ன படிப்பு வேண்டி இருக்குன்னு படிக்க விடலை. அவரிடம் கெஞ்சி கூட பார்த்தாள். அவர் சம்மதிக்கவேயில்லை. அவளும் விட்டுட்டா..
நம்ம காளி கோவில் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஸ்ரீ கூட சம்பந்தமுள்ளதே! அதே போல நம்ம ஊர் மட்டுமல்லாமல் ஏலகிரி முழுவதிலும் உள்ள எல்லா கோவில்களின் வரலாற்று கதைகள். பள்ளத்தாக்கு பெயர், அடியும்..எத்தனை எஸ்டேட்..அவளுக்கு டிரக்கிங் கூட பிடிக்கும். அவளும் சாவியும் நிறைய முறை வெளிய போயிருக்காங்க. அவள் அப்பா பேச்சை கேட்டு படிப்பை விட்டதால் அவளை வெளியே அனுப்புவார். அவளும் சாவித்ரியும் மாதத்திற்கு இரு முறையாவது சேர்ந்தே சென்று வருவார்கள். அவர்களுக்கு எல்லா இடமும் நன்றாக தெரியும் என்றாள்.
நிஜமாவா சொல்ற? தனியாவா போயிட்டு வருவாங்க? பிரதீப் கேட்டான்.
அண்ணா..எனக்கும் ஊர் சுற்றுவது ரொம்ப பிடிக்கும் சரவணன் சொல்ல..
சரி, அப்படின்னா சக்தியுடன் நீ சேர்ந்துக்கோ என்றான் பிரதீப்.
இவனுடனா? என்னால முடியாது என்றான் சரவணன்.
நான் நாளைக்கே மாலினியிடம் பேசிடுறேன். அப்புறம் முடிவை எடுக்கலாம்.
நான் இப்ப என்ன செய்றது? சக்தி கேட்டான்.
ஒருவாரத்துக்குள்ள ரெசார்ட்ல எல்லாமே தயாராகணும். இப்பவே என்ன வேண்டுமோ? எல்லா லிஸ்ட்டையும் எடுங்க. நாளைக்கு வேலு, அர்ஜூன், மறை, சக்தி, தருண்..போய் தேவையான பொருட்களை பார்த்து வாங்கிட்டு வாங்க என்று ரதியை பார்த்து,
ஆன்ட்டி..நீங்க லிஸ்ட் போட்டு கொடுங்க என்றான்.
முதல்ல ரிசார்ட்டை சுற்றி பார்த்து வேண்டியதை நோட் பண்ணுங்க. நான் தயார் செய்கிறேன்.
அனைவரும் சேர்ந்தே சென்றனர். சமையற்கட்டிற்குள் சென்றவர்கள் அங்கிருந்த இரண்டு ஆட்களிடம் வினவினர். அங்கே ஹெட் செஃப் போயிட்டார். அவர் அசிஸ்டெண்ட்டும் போயிட்டார். அதுக்கு ஆள் இல்லை. சர்வரும் போயிட்டாங்க என்றான்.
ஆட்கள் தயார் செய்யும் வரை இங்கே வேலை செய்பவர்களுக்கு சமையல் செஞ்சு தாங்க. ஒன் வீக்ல ஓப்பன் பண்ணிடலாம் என்றான் பிரதீப். அவர்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.
அண்ணா..நாம இங்கேயும் மாற்றம் செய்யலாமே? என்று அர்ஜூன் சொல்ல..இங்கே என்ன மாற்றம்? பிரதீப் கேட்க,மறை அவனுடைய ஓப்பீனியனை சொன்னான்.
அண்ணா..நம்ம மறைக்கு தான் சமையல் நன்றாக வருமே? அவனை இங்கே அமர்த்தலாமே? வேலு கேட்க, அந்த இருவரும் ஊரார் வேலையை பார்ப்பவனால் எங்க இடத்துக்கு வர முடியாது என்று கூற, மறை முகம் மாறியது.
அப்படியா? ஒரு வேலை உங்களை விட நன்றாக செய்து விட்டால் ஏத்துப்பீங்களா? பிரதீப் கேட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு..கண்டிப்பாக நன்றாக இருந்தால் இங்கே வேலை செய்ய எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்கள்.
நேர்காணலின் போது “ஹெட் செஃப்” க்கு அப்ளை பண்ணுடா மறை பிரதீப் கூற, அண்ணா..நானா?
ஏன்? உன்னால முடியாதா? அவன் கேட்க, சமையற்காரர் இருவரும் சிரித்தனர்.
கண்டிப்பா பண்றேன் அண்ணா..என்று மறை வெளியேறினான். அர்ஜூன் அவன் பின் ஓடினான்.
எல்லாம் முடிந்து வந்தனர். அனுவும் ராக்கியும் வரவேற்பறையில் விளையாண்டு கொண்டிருந்தனர். ஸ்ரீயும் காயத்ரியும் அமர்ந்திருந்தனர்.
மறை கோபமாக வெளியே வந்தவன் பசங்களை பார்த்து நின்றான். அர்ஜூனும் அவன் பின்னே வந்து அவர்களை பார்த்துக் கொண்டே மறையிடம் சென்றான். மற்றவர்களும் அங்கே வந்தனர். ஆதேஷ் திட்டத்தையும் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
அனுவும், ராக்கியும் அர்ஜூன் மறையை பார்த்து அவர்களிடம் ஓடி வந்தனர். இருவரும் அவர்களை தூக்கினர். ஸ்ரீயும் காயத்ரியும் வந்தனர்.
மறை முகத்தை பார்த்த காயத்ரி, என்னாச்சு? கேட்டாள். அவளை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.
அர்ஜூன்..என்று அவள் அழைக்க, வாரேன்க்கா என்று மறை பின்னே சென்றான்.
எல்லாரும் அவர்களை பார்க்க,மாமா..நம்மை பற்றி நாம் தான் முடிவெடுக்கணும். அடுத்தவனல்ல..ஆனால் நாம் இந்த உலகத்திற்கு நம்மை நிரூபிக்கணும்.
நான் கிளம்புகிறேன் என்று காயத்ரியிடம் வந்து ஸ்ரீயை பார்த்து புன்னகைத்து, போகலாம் என அழைத்து செல்ல..
மாமா..காலையிலே வேகமாகவே போகணும். ஏழு மணிக்கே தயாராகிடுங்க என்று கத்தினான்.
வாரேன் என்று சத்தமிட்டு அவன் சென்றான். மறைக்கு கோபமெல்லாம் எப்படி வருது பாரேன் அங்கிருந்த ஒருவர் சொல்ல, ஈகோவ டச் பண்ணா யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும் என்றான் அர்ஜூன்.
சரிப்பா..சரி..உன்னோட மாமாவை நான் ஏதும் சொல்லலை என்று அவர் ஸ்ரீயை பார்த்தார். நீயும் இவங்களோட வேலை பார்க்க போறீயாம்மா? அவர் ஸ்ரீயிடம் கேட்க, அவள் படிக்கணும். இப்பொழுதைக்கு வேலைக்கு வர மாட்டாள் என்றான் அர்ஜூன்.
அர்ஜூன்..சும்மா இரு என்றாள் அவள்.
அவர் புன்னகையுடன், எல்லா முடிவும் நீங்க தானோ தம்பி என்று சிரித்துக் கொண்டே சென்றார். ஸ்ரீ அர்ஜூனை முறைத்தாள்.
போதும். என் நண்பன் எறிந்துவிடாமல். என்னமா முறைக்கிற கைரவ் கேலி செய்தான்.
அவரு பாரு என்ன சொல்லிட்டு போறார். நான் இன்னும் ஒத்துக்கவேயில்லை. ஆனால் எல்லாரும் பேசும் படி செய்து விட்டாய் என்று கோபமாக அமர்ந்தாள் ஸ்ரீ.
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கோபிச்சிட்டு போற? அர்ஜூன் அனுவுடன் அவளிடம் சென்றான்.
இந்தா ஆரம்பிச்சிட்டானுகள..நைட் முடிந்து விடிந்தாலும் இவங்க சண்டை ஓயாது அகில் சொல்ல, பொண்ணுங்களும் வந்திருப்பாங்க.
ஆமா, ஸ்ரீ கோபப்படுற மாதிரி தான அவனும் பேசுறான்? பவி சொல்ல..அம்மா தாயே, என்னை விட்டுடு. நான் இதில் தலையிடலை என்று அமர்ந்தான். அனைவரும் இளப்பாறி விட்டு கிளம்பினர்.
பத்தரை மணியாக வீட்டினுள் நுழைந்தார் சுந்தரம். நந்துவும் மேகாவும் அப்பொழுது தான் சாப்பிட அமர்ந்தனர். நந்து அம்மா அவர்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அவர் நந்துவை பார்த்துக் கொண்டே அறைப்பக்கம் செல்ல,
சார் சாப்பிட்டு போங்க என்றார் அவன் அம்மா.
வருகிறேன் என்று அறையினுள் சென்று தயாராகி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். நந்து சாப்பிடாமல் கையை கழுவி விட்டு எழுந்தான்.
நந்து, என்ன பண்ற? அன்னபூரணிகிட்ட இப்படி நடந்துக்கலாமா? அவன் அம்மா திட்ட, அமர்ந்த சுந்தரம் எனக்கு பசிக்கலை என்று எழுந்து நகர்ந்தார்.
சார், நில்லுங்க. சாப்பிட உட்கார்ந்து எழக்கூடாது என்றார் அவன் அம்மா.
நான் தான் சொல்றேன்ல. பசிக்கலை என்றார். மேகா இருவரையும் பார்த்து, ஆன்ட்டி ரெண்டு பேருக்கும் ஏதும் பிரச்சனையான்னு கேளுங்க? என்றாள். நந்து அவளை முறைத்து..சாப்பிடுற வேலைய மட்டும் பாரு.
நான் சாப்பிட்டுக் கிட்டு தான் இருக்கேன். உனக்கு தான் மேனசே தெரியலை. சாப்பிட வந்தவரை எழ வச்சுட்ட?
இதுல நீ தலையிடாத.
அவளும் எழுந்தாள். என்னடா தலையிடக்கூடாது? அப்ப நான் இப்பவே கிளம்புறேன் என்றாள்.
தேவையில்லாம பேசாத மேகா..என்று அவளிடம் வந்தான்.
அந்த பொண்ணு கேட்கிறதுல என்னடா தப்பு? என்று சுந்தரத்திடம் சாப்பிட வாங்க சார்..என்று மீண்டும் அழைத்தார். அவர் நந்து அம்மாவை பார்த்தார். அவர் வேண்டாம் என்றால் அவர் மனைவி அப்படியே விட்டு விடுவார். ஆனால் நந்து அம்மா மீண்டும் அழைப்பது சந்தோசமாக தான் இருந்தது. அவர் காட்டிக் கொள்ளாமல்..எனக்கு பசிக்கலை. நீங்க எல்லாரும் சாப்பிட்டு படுக்க போங்க என்று நந்துவை பார்த்து விட்டு நகர,
என்னடா பழக்கம்? சாப்பிட்டுல கையை கழுவிற? என்னமும் செய்யுங்க. நான் என் அறைக்கு போறேன் என்று அவர் செல்ல..சுந்தரம் தானாக வந்து அமர்ந்தார். நந்துவிற்கு கோபம் வந்தாலும் அவனும் அம்மாவிற்காக அவரை முறைத்துக் கொண்டு அமர்ந்தான். அவர் சிரிப்புடன் மேகாவிடம் கண்ணை காட்டினார். அவளும் அமர்ந்தாள்.
அவர் எடுத்து வைக்க..நந்துவின் முறைப்பை பார்த்த அவன் அம்மா, சாப்பாட்டை பார்த்து சாப்பிடு என்றார். ஆனால் மனதினுள் இருவருக்கும் என்னாச்சு? இப்படி முறைக்கிறான்? என மனதினுள் நினைத்தார்.
சுந்தரம் சாப்பாட்டில் கையை வைக்க அவர் போன் அலறியது. அதை எடுத்து பார்த்து..எழுந்தார்.
சாப்பிட்டு பேசுங்க சார். இப்ப கட் பண்ணுங்க என்றார்.
இல்லை. இது ரொம்ப முக்கியமான கால் என்று போனை எடுத்து எழுந்தார்.
என்ன? சினத்துடன் இவர் பேச, மூவரும் அவரை பார்த்தனர். அவர் திரும்பி நிற்க இவர்கள் கவனிப்பதை பார்க்கவில்லை.
வீட்டிலிருந்து வெளிய அவளை அழைச்சிட்டு வா..என்று குணசீலன் அழைக்க, முடியாது என்றார்.
வர முடியாதா? நீ அவளோட வரலைன்னா..உங்க ஊர்ல உன்னோட பொண்ணு ஒரே நிமிஷம் தான் பொட்டுன்னு போயிருவா? என்ன செய்றா தெரியுமா? அவள் அறை பால்கனி ஊஞ்சலில் அழுது கொண்டே அமர்ந்திருக்கிறாள் என்றதும் அவர் கண்கள் கலங்கியது. அவர் வேகமாக திரும்பி சன்னல் பக்கம் வந்து திரையை விலக்கி பார்க்க, கார் ஒன்று நின்றது.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் என்னோட பொண்ணை பார்த்தேன். பேசினேன். அவ மேல சின்ன கீறல் கூட விழுந்தாலும் அடுத்த நிமிஷம் நீ இருக்கிற கார் வெடித்துவிடும் என்று கனலாய் கண்ணீர் வடிய பேசினார்.
அப்படியா? பரவாயில்லை. ஆனால் உன்னோட பொண்டாட்டிக்கு உன்னை பிடிக்காதுல்ல. அவளை வேண்டுமானால்..என்று அவன் கேட்க, அவர் கொதித்து போனார்.
சொல்றேன்ல. என்னால எதுவும் முடியும். உனக்கு தெரியாதா? அவளுக்கு பிடிக்கலைன்னா..அவளை விட்டுருவேன்னு நினைச்சியா? அவள் இப்ப சந்தோசமா இருக்கா. எனக்கு அது போதும். சேர்ந்து வாழ எனக்கும் விருப்பமில்லை. ஆனால் அதுக்காக அவளுக்கு ஒன்றுன்னா நான் வருவேன்.
என்ன சொன்ன? என்னோட பொண்ணை போட்ருவியா? முடியுமா உன்னால? அவள் பாதுக்காப்பா தான் இருக்கா.
உன்னோட மருமகன் மேலுள்ள நம்பிக்கையா? அர்ஜூன் சந்தோசமா என்னோட மகளுடனும் அந்த குட்டிப் பொண்ணுடனும் விளையாண்டு கொண்டிருக்கிறான். நீ பார்க்கிறாயா? அனுப்பவா? கேட்டான் அவன்.
எல்லாத்தையும் நிறுத்திக்கோ.
நிறுத்தணுமா? என்று கருப்பு ஆடையில் தன் முகத்தை மறைத்து கீழே இறங்கினான் கொலைகாரன் குணசீலன்.
இங்கிருந்து போகப்போறீயா? இல்லையா? கத்தினார் சுந்தரம். அனைவரும் அவர் பின் வந்து பார்த்தனர். காரின் மேல் ஏறி பிளையிங் கிஸ் கொடுத்தான் நந்து அம்மாவை பார்த்து, அவர் திரும்பி பார்த்து, என்ன செய்றீங்க? போங்க என்று கத்தினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நந்து சுந்தரம் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து நின்றவனை கண்டபடி சுட சுந்தரம் நந்துவிடமிருந்து துப்பாக்கியை வாங்கி விட்டு அவனை ஓங்கி அறைந்தார்.
துப்பாக்கி எடுக்கும் அளவு உனக்கு தைரியமா?
அவன் என்ன செய்கிறான்? பார்த்தீங்கல்ல அவனை கொல்லாமல் விடக்கூடாது கத்திக் கொண்டே அவரிடம் துப்பாக்கியை மீண்டும் எடுக்க வந்தான். சுந்தரத்தை பிடித்து தள்ளிய நந்து அம்மா..நந்துவை அறைந்தார். அப்படியும் விடாது அவனை அடித்துக் கொண்டே,
உனக்கு என்னடா ஆச்சு? இப்படி பண்ண மாட்டேல்ல. மாலையிலிருந்தே நீ சரியில்லை. துப்பாக்கிய கையில எடுக்கிற? இதுக்கா உன்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கேன் என்று அடித்துக் கொண்டே கண்ணீருடன் கத்தினார். சுந்தரமும் மேகாவும் அவன் அம்மாவை தடுத்தனர். வெளியே நின்றவர் இவர்களை ரசித்து பார்த்தான். நந்துவும் அழுது கொண்டே அம்மாவின் அடியை வாங்கிக் கொண்டார்.
முதல்ல நீங்க வாங்க..என்று மூவரிடமும் இந்த இடத்துல இருந்து யாராவது எழுந்தீங்கன்னா? அவ்வளவு தான் என்று சத்தமிட்டார்.
இங்கிருந்து போகப்போகிறாயா? இல்லையா? சுந்தரம் போனில் சத்தமிட, என்னிடம் ஏன்டா கத்துற? இப்ப கூட அந்த வெளிச்சம், அவளோட கோபம் ரொம்ப அழகா இருக்கு.
வாய மூடு. அசிங்கமா பேச வச்சுறாத..
மச்சான். நான் அத்தையிடம் பேசினேன் என்றான் அவன்.
மச்சானா? அத்தையா? என்ன சொல்ற? கர்ஜித்தார்.
உன்னோட அம்மா தான் டா..
அம்மாவா? அவங்ககிட்ட என்ன பேசுன? எதுக்கு என்னோட அம்மாவை அத்தைன்னு சொன்ன? என்னோட டார்லிங் உன்னோட தங்கச்சின்னா..நீ எனக்கு மச்சான் தான மச்சான். உன்னோட அம்மா..எனக்கு அத்தை தான?
டார்லிங்கா? அவளை என்னடா செஞ்ச? கர்ஜனையுடன் கத்தினார். நந்து அம்மாவும், மேகாவும் பயத்துடன் அவரை பார்த்தனர்.
சாரிடா..மச்சான். கமலி டார்லிங் கெஞ்சுனா. ஆனால் என்னால அவளை பார்த்துட்டு விட முடியலைடா. ஆனா அப்ப அவ உன்னோட தங்கச்சின்னு தெரியாது. அர்ஜூனுடன் உன்னை பார்த்த போது தான் தெரிஞ்சது..
ரொம்ப அழகா இருந்தா. நமக்கு இந்த சின்னப் பொண்ணுங்கெல்லாம் செட்டே ஆகலை. நம்மை வயசு புள்ளைங்க வயசானாலும் ரொம்ப அழகா தெரியுறாங்கடா..
அவர் போனை உடைத்து கத்தி அழுதார். மூவரும் பதறி அவரிடம் வந்தனர். போங்க..எல்லாரும் அறைக்கு போங்க என்று கத்தினார்.
நந்து போன் ஒலிக்க, நந்து கையிலிருந்த போனை பார்த்து பிடுங்கிய சுந்தரம்..டேய், அவ உன்னை என்ன செஞ்சா? அவள் ஏற்கனவே காதலிச்சவன் ஏமாத்திட்டான்னு ரொம்ப கஷ்டத்துல இருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கா..வாடா, இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. நீயா? நானான்னு? பார்த்திடலாம் என்றார்.
நீ வெளிய வந்தேன்னா..உன்னோட ஒட்டு மொத்த ஊரும் க்ளோஸ். அதுக்கு பதிலா அவளை அனுப்புடா? என்றான்.
முடியாதுடா. அவங்க யாரையும் விட முடியாதுடா என்று சுந்தரம் கேட்டருகே செல்ல, அவர் கார் வெடித்தது. அவர் தள்ளி நின்றதால் எந்த பாதகமும் இல்லை. போ..உள்ள போ..என்று அவன் சத்தமிட்டான். அவரும் யாரையாவது ஏதாவது செய்து விடுவானோ என்று பயந்து உள்ளே சென்று விட்டார்.
நந்து சத்தம் கேட்டு ஓடி வந்திருப்பான். இருவரும் முட்டிக் கொண்டனர். அவர் நந்துவை பார்த்துக் கொண்டே போனை காதில் வைத்தார்.
என்னடா பயங்கர கோபமா இருக்க? அவர் முறைத்தபடி அமர்ந்திருந்தார்.
உனக்கு உன்னோட ஊரும் உன்னோட குடும்பமும் முக்கியமா? இல்லையா? அவளை என்னிடம் விட்டுவிடு என்றான். மூவருமே கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.
எனக்கு எல்லாருமே முக்கியம் தான். அன்று நாம் எடுத்த வாக்குறுதியிலிருந்து என் மூச்சே போனாலும் பின் வாங்க மாட்டேன். இந்த மாதிரி ஒருகட்டம் வந்து விடுமோ? என்று தான் அவளை பிரிந்து இழந்து நிற்கிறேன். ஆனால் உன்னை என் நண்பன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு என்று கத்தினார்.
நண்பனா? இந்த கொலைகாரனா? நந்து நேரடியாகவே கேட்டான். அவனிடம் வந்து அவன் வாயை மூடிய சுந்தரம். யாரையும் வெளிய விட முடியாது. உன்னால் முடிந்ததை செய்து கொள் என்றார்.
நந்து அம்மா அவராகவே எழுந்து கேட்டருகே வேகமாக செல்ல, நந்துவும் சுந்தரமும் வெளியே ஓடினர். மேகாவும் அவர்கள் பின் சென்றாள். அவன் அம்மா வெளியே சென்று விட்டார்.
அம்மா..என்று நந்துவும், போகாதம்மா..என்று சுந்தரும் வெளியே வர, குதித்து இறங்கிய குணசீலன் நந்து அம்மாவை நோக்கி ஓடி வந்தான்.
நில்லுங்க என்று சுந்தரம் கத்தியை நந்து கழுத்தில் வைத்தார். சென்று கொண்டிருந்தவர் அவர் பையனை பார்த்து, அவனை ஏதும் செஞ்சுறாதீங்க என்று திரும்பி வேகமாக நடக்க, குணசீலன் அதற்குள் அவரை பிடித்தான்.
சுந்தரம் நந்து கழுத்தை விட்டு துப்பாக்கியை எடுத்து பட்டென அவன் கையில் சுட்டான். சுந்தரா? என்னைய நீ சூட் பண்றியா? என்று வாஞ்சையுடன் நந்து அம்மா புடவையை இழுத்தான். அம்மா பதறி அழுது கொண்டே புடவையை பிடித்தார். என்னால உன்னை விட முடியாது என்று மீண்டும் வேகமாக இழுத்தான். புடவை அவன் கையில் இருக்க, நந்து அம்மா அழுது கொண்டே உடலை மறைத்தார்.
அம்மா..என்று நந்து கத்திக் கொண்டே முன் ஓடினான். சுந்தரமும் அவனுடன் வேகமாக செல்ல, குணசீலன் நந்து அம்மாவை தூக்கி தோளில் போட்டான். என்னை விட்டு உன்னால் தப்பிக்க முடியுமா? விடுவேனா? என்று அவன் காரை நோக்கி ஓட அவன் கையில் சுட்டார். அவன் கத்திக் கொண்டே நந்து அம்மாவை கீழே விட்டான்.
போ..சீக்கிரம் உன்னோட அம்மாவை தள்ளி அழைத்து செல் கத்தினார் சுந்தரம். அவன் மீண்டும் பிடிப்பதற்குள் அவன் அம்மாவே எழுந்தார். நந்து அருகே வந்து அம்மாவை அழைத்து ஓடினான். பின் அவன் சட்டையை அவன் அம்மாவிற்கு போட கொடுத்தான். அது பத்தவில்லை.
அவர்களை தாண்டி தான் வீட்டிற்கு செல்லணும் யோசித்தான். மேகா வீட்டிற்குள் சென்றவுடன் முதல் அறைக்குள் சென்றாள். அங்கிருந்த புடவை ஒன்றை நன்றாக சுருட்டி பந்து போலாக்கி நந்துவிடம் தூக்கி எறிந்தாள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை பார்த்து, வாடா..இப்பவாது சரணடைந்து விடு..என்று துப்பாக்கியுடன் அருகே சென்று கொண்டே போங்க.. என கையசைத்தார். நந்து அவனை தாண்டி செல்ல, அவனுடைய கழுகு பார்வை நந்து அம்மா மீதே இருந்தது. அவர் அவனை தாண்டி நடந்து கொண்டே அந்த புடவையில் தன்னை மறைத்துக் கொண்டே உள்ளே சென்று மேகாவை கட்டிக் கொண்டு அழுதார்.
ஆன்ட்டி, ஒன்றுமில்லை. அழாதீங்க என சமாதானப்படுத்தினாள்.
நந்து வெளியே ஓடி வந்து சுந்தரத்தை பார்த்தான். நீ சுட்டு நான் செத்திருந்தால் நீ உள்ள தான் போகணும்? தெரியும்ல? என்று நக்கலாக சொன்னவன்..எனக்கொரு சந்தேகம்? எல்லாரை பற்றி பேசும் போது கோபப்பட்டாலும் துப்பாக்கியை எடுக்கலை. நீ துப்பாக்கியால் சுட்டே பல வருசமாகுதே? அவளை தொட தானடா செய்தேன். புடவையை தான் உருவினேன். அதுக்கே சுட்டுட்ட?
வீட்டுக்குள்ள அவள வச்சு என்ன பண்றன்னு கேட்க? வாயை மூடு. உன்னை மாதிரி காரியம் என்னால பண்ண முடியாது. ஏன்டா, நல்லா தான இருந்த? அப்படியே இருந்திருக்கலாமே? எத்தனை கல்யாணம் முடிச்சவங்களை பிரிச்சுட்ட? பாவம் அந்த பொண்ணுங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. கொலை, போதை விற்பனை இது தேவை தானா?
நீயா வந்துருடா. கமலி என்னடா பண்ணா? என்னோட குடும்பத்துடன் வாழலைன்னாலும் என்னுடைய பழைய வாழ்க்கையும் என் பொண்டாட்டியுடனான வாழ்க்கையும் ஒரே மாதிரி ஒண்ணுமே இல்லாம போச்சு. இப்ப தான் என் வாழ்க்கையில் என்னோட தங்கச்சி, அர்ஜூன், என்னோட பொண்ணு வந்திருக்காங்க. உனக்கு கூட உன்னோட பையன் இருக்கான். உன்னை பற்றி அவனுக்கு தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவான். கொலைகாரன் மகன்னு தான சொல்லுவாங்க.
அர்ஜூன் சொன்னான். நீ இல்லாம அவன் எப்படி கஷ்டப்படுறான் தெரியுமா? அவனுக்கு நீ செத்துட்டன்னு நம்ப வச்சி..ச்சே..எனக்கே அவனை நினைத்தால் கஷ்டமா இருக்கு என்றார்.
ஏய்..முதல்ல உன்னோட குடும்பத்தை பற்றி யோசி. அதுமட்டுமல்ல அவன் எனக்கு மகன் மட்டும் தான். எனக்கு விருப்பமில்லாமல் நடந்தது..
கண்டிப்பா சொல்றேன். நீ உன் பையன் கையால தான் சாகப் போற? அவனுக்கு மட்டும் அவன் அம்மாவை கொன்றது நீ தான்னு தெரிஞ்சா. மகனே செத்தடா..
பேசுங்க நல்லா பேசுங்க..ஆனால் சாவு எனக்கில்லை. அவர்களுக்கு தான். எனக்கு அந்த ஸ்ரீயை பார்த்தாலே அவள் தான் நினைவிற்கு வருகிறாள். அவளுடன் சேர்ந்ததால் உன் மருமகன் அர்ஜூனும் சாகப் போறான். அவன் என்னிடம் நேரம் கேட்டிருக்கான்.
நேரமா? என்ன சொல்ற? சத்தமிட்டார்.
ஸ்ரீயை அவனே அழைத்து வந்து விடுகிறேன்னு சொல்லி இருக்கான். ம்ம்..வரட்டும். இருவரையும் சேர்ந்து முடிக்கிறேன். அந்த குட்டிப்பொண்ணு அவங்களும் இல்லைன்னா..அவளையும் அவர்களுடன் அனுப்பி விட வேண்டியதுதான்.
என்னிடம் இதை அவன் சொல்லவில்லை.
சொன்னால் நீ ஒத்துக்க மாட்ட. அப்புறம் என்னால எல்லாரும் சாக வேண்டி இருக்குமே? அதுக்கு பயப்படுறான் என்று பேசிக் கொண்டே காரினுள் குதித்து தப்பினான் அவன்.
அர்ஜூன், என்ன பேசி வச்சிருக்க? என்று கத்தினார். நந்து அனைத்தையும் கேட்டு உறைந்து நின்றான்.
சுந்தரம் நந்துவை பார்த்து விட்டு உள்ளே சென்றார். ஹாலில் மேகா மட்டும் அமர்ந்திருந்தாள். அவர் நந்து அம்மாவை தேட, ஆன்ட்டி உள்ள படுத்திருக்காங்க என்றாள் முறைப்புடன். அவர் ஏதும் செல்லாமல் உள்ளே செல்ல இருந்தவரை நிறுத்தின நந்துவின் அதிகார குரல். மேகா பட்டென எழுந்து அவனிடம் சும்மா இரு என்றாள். அவளை விலக்கி விட்டு,
என்ன நடக்குது? அன்று அந்த ஊருக்கு போனப்ப, நடந்த சம்பவம் ஊர் பிரச்சனைன்னு நினைச்சேன். அர்ஜூன் ஸ்ரீக்கு பிரச்சனைன்னு சொன்னான். பின் அந்த கொலைகாரனை பிடித்தது வந்தது. அவன் இவன் தானா? எல்லாரையும் கொலை செய்வது இவன் தானா? சொல்லுங்க என கத்தினான். அவன் கத்தியதில் நந்து அம்மா வெளியே ஓடி வந்தார்.
அவரை பார்த்த சுந்தரம் திகைப்புடன், இந்த புடவை.. கண்ணீர் மல்க கேட்டார்.
நான் தான் ஆன்ட்டியிடம் கொடுத்தேன். அந்த அறையிலிருந்து தான் எடுத்தேன்..என்றாள் மேகா.
மேகாவை நோக்கி வேகமாக வந்தவர், எதுக்கு அதை எடுத்த? அது அங்கே இல்லை. நான் இதை தான் தேடிக் கொண்டிருந்தேன். அங்கே இல்லை..என்று கத்தினார் கண்ணீருடன்.
புடவையில் என்ன தான் உள்ளது? நந்துவும் கோபமாக கத்தினான். அவன் அம்மா புடவையை தொட்டுப் பார்த்தார். பட்டு புடவை அது மயில் நீலநிறம் சிவப்பு ஜரிகை. அவர் பயத்தில் புடவை கண்ணிலா தெரியும்? இப்பொழுது கூட பயந்து தான் வெளியே வந்தார்.
அது என் பொண்டாட்டி புடவை. கல்யாண புடவை. நானே அவளுக்கு எடுத்தது என்று கத்தினார். அவன் அம்மா பதட்டமானார். வேகமாக உள்ளே சென்று புடவையை அவிழ்த்து வேறு மாற்றினார்.
அவன் அம்மா கதவை அடைத்ததும் நந்து பதறி கதவை தட்ட..சுந்தரமும் அமைதியானார்.
நந்து..அம்மா ஒன்றும் செய்ய மாட்டாங்க. பயப்படாத என்று மேகா கூறியும் அமைதியாகாமல் அம்மா..அம்மா.. அம்மா..கதவை திறங்க என்று கத்தினான்.
வாய மூடு. அதனால் சொல்றாள உன்னோட அம்மா எதுவும் செஞ்சுக்க மாட்டாங்க, கொஞ்சம் காத்திருந்தால் இன்றும் ஆகாது..என்றார்.
நீங்க வேண்டுமென்றே தான அந்த புடவைய அங்க வச்சீங்க? சுந்தரத்திடம் நந்து கத்தினான்.
டேய், உனக்கு என்ன ஆச்சு? மேகா அவனை தடுக்க..நான் சொன்னது உனக்கு கேட்கலையா? பத்து வருசமா தேடிக்கிட்டு இருந்தேன் அவளறையில். இங்க இருப்பது எனக்கு தெரியாது என்று அவரும் கத்தினார். நந்து அமைதியானான்.