வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-111
151
அத்தியாயம் 111
தாரி, நிவி நீங்க பேசிட்டு மேலே வாங்க என்று கவினிடம் கண்ணை காட்டினான் அர்ஜூன். கவின் தாரிகா கையை அழுத்தி பிடிக்க,…கோபமாக இருந்தாலும் அவள் நிலையுணர்ந்து, என் அக்காவின் இறப்பு கொலைன்னு உனக்கும் தெரியும் தானே? அவள் கேட்க..
என்ன கொலையா? அவன் அதிர்ந்தான்.
ஆமா. நிவி அந்த கொலைகாரன் தான். கொன்னுருக்கான் என்றாள் ஸ்ரீ.
சாரி தாரி. நான் தெரியாமல் கேட்டுட்டேன். உனக்கு கஷ்டமா இருக்கும்ல..என்றான். அவளுக்கு கோபம் சென்று அவன் மீது பரிதாபம் வந்தது. அர்ஜூன் நிவாஸையே பார்த்துக் கொண்டிருக்க, காருண்யா அவனிடம் வந்து,
அவனை சைட் அடிக்கிறியா? என்று கேட்டாள்.
அர்ஜூன் அவளை முறைத்து விட்டு, மேடம் தூங்கி எழுந்துட்டீங்களா? என்னை என்ன சொல்ற? நீ என்ன செஞ்ச?
நானா? நான் ஒன்றுமே செய்யலை.
கௌதம் சார், அப்பாவி மாதிரி எப்படி நடிக்கிறா பாருங்க? என்றான் அர்ஜூன்.
கௌதமை பார்த்து விட்டு அர்ஜூனிடம் காருண்யா கோபமாக, நான் உன்னிடம் பேசுனா. நீ என்னிடம் தான் பேசணும்.
பேசலாமே? என்ற அர்ஜூன், கௌதம் சார் நீ அவரிடம் கேட்டதை எல்லாமே சொல்லிட்டார்
என்ன சொன்னீங்க? என்று கௌதமிடம் கோபமாக வந்தாள். அவனே அவன் அம்மாவை நினைத்து கவலையில் இருக்கான்.
உன்னோட சண்டை போட எனக்கு நேரமில்லை என்று அறைக்குள் சென்றான். நான் கேட்டால் பதில் கூட சொல்லமுடியாதா? கத்தினான்.
சினத்துடன் அவளிடம் வந்த கௌதம், இங்க பாரு. நானே டென்சன்ல இருக்கேன். என்னை வெறியாக்காத. அப்புறம் மறுபடியும் என்னிடம் அடி தான் வாங்குவ? என்று சீறினான். அவள் பயந்து பின் சென்று அர்ஜூனை இடித்து விட்டு, அவனை பாவமுடன் பார்த்தாள்.
அவளை பார்த்த அர்ஜூன் கௌதமிடம், எதுக்கு சார் இவ்வளவு டென்சன்?
அவன் என்ன பேச்சு பேசுறான்? கொஞ்சமாவது சீரியசா இரு அர்ஜூன் கௌதம் சத்தமிட்டான். காருண்யா அவனையே பார்த்தான்.
நல்லா சொல்லுங்க சார் என்ற அபி, அவன் எல்லாரையும் கண்காணிக்கிறான்னு சொன்ன? எதுக்கு ஊரோட மேப்? கேட்டான்.
எல்லாரும் உங்க போனை கொடுங்க என்று கீழே பாட்டியிடம், பாட்டி..உங்க போனும் வேணும்? என்றான். போன் எதுக்குடா? அகில் கேட்டான்.
சார், பார்சல்..என்று சத்தம் வந்தது.
கவின் வாங்கிட்டு மேல வா என்றான். எல்லாரும் மேலே வந்தனர். அந்த பார்சலை பிரித்து டிராக்கிங் டிவைசை ஒரு போனில் வைத்தான்.
டிராக்கிங் டிவைசா? கௌதம் கேட்க, ஆமா சார். எல்லாரோடதிலும் செட் பண்ணிடுறேன். ஏதும் பிரச்சனைன்னா..யாரும் மெயின் ரோடு வழியே வரக்கூடாது. சந்து வழியாக தான் வரணும். புரியுதா? அர்ஜூன் கேட்டான்.
மெயின் ரோடு வழியாக எதுக்கு வேண்டாம்ன்னு சொல்ற? கவின் கேட்க..மெயின் ரோட்ல தப்பிக்க முடியாது அபி சொல்ல..
அர்ஜூன்..அவர்களிடம் இன்று அந்த ரெசார்ட்டை பார்க்க செல்லும் போது..அதை பார்ப்பது போல் எல்லாரும் பிரிஞ்சு வாங்க..இந்த வழியாக. இன்று மட்டும் தான் இந்த வழியை உபயோகிக்கணும் இல்லை அவன் ஆட்களுக்கு சந்தேகம் வந்துரும். அதனால் இப்பொழுதே நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நாம் பேசியதை காட்டிக் கொள்ளக்கூடாது என்றான்.
காருண்யா கையை தூக்கினாள்.
என்ன? அகில் கேட்டாள்.
இதெல்லாம் எதுக்கு? காருண்யா கேட்க, உனக்கும் கௌதம் சாருக்கும் சொல்றேன். வெயிட் பண்ணு. இந்த இடம் அனைத்தையும் பார்த்துட்டு வாங்க. நான், ஆது, அபி, இன்பா மேம், சைலேஷ், கைரவ், பிரதீப் அண்ணா நாங்க முதல்ல போறோம். மத்தவங்க யாருடனாவது சேர்ந்து வாங்க என்றான்.
அபி அர்ஜூன் அருகே வந்து, பிரகதிய ஊருக்கு அனுப்பலையா அர்ஜூன்?
அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து விட்டு, அவள் அந்த கம்பெனி விசயத்துல இருக்கா. அதனால அவள் ஊருக்கு போனா பாதுகாப்பு இல்லை என்றான்.
ஆனால் அர்ஜூன், அவளோட அம்மாவை பார்த்துக்க போகணுமாம்..
ஆளை அனுப்பி பார்த்துக்கலாம். அவள் உன் வீட்டிலே இருக்கட்டும் என்று அகிலை பார்த்து, துருவனை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களாமே?
ஆமாடா. அவனுக்கு பெயின் குறைச்சிருக்குன்னு சொன்னான். ஆனால் அர்ஜூன் துளசிய நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுறான்.
அண்ணனாடா நீ? இப்படி சொல்ற? அவனை உன்னால சமாதானப்படுத்த கூட முடியலையா?
அர்ஜூன்..அவன் என் மேல கோபமா வேற இருக்கான். அம்மா பவியிடம் நல்லா பேசுறாங்களாம். அவனை பத்தி யோசிக்கலையாம். துளசி போனதுக்கு அவங்க தான் காரணமாம். அவன் என்னை பார்த்தால் விலகியே போறான். அம்மாவிடம் கூட சரியா பேசுறதில்லை. செம்ம கோபத்துல இருக்கான். நாளைக்கே ஸ்கூலுக்கு போகப் போறேன்னு நிக்கிறான். இரண்டு நாள் கழிச்சு போன்னு சொன்னா?
என் மேல யாரும் அக்கறை பட வேண்டாம்ன்னு கத்துறான் அகில் வருத்தப்பட்டான். சரிடா, எல்லாமே சீக்கிரம் சரியாகிடும். வருத்தப்படாத என்ற அர்ஜூன்..எல்லாரும் கீழ வெயிட் பண்ணுங்க என்று சொல்ல,
ஆமா சார். நீங்க உங்க அம்மாவோட சேர்த்து, சுவாதி, சீனுவையும் தேவ் சார் வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்க.
சுவாதிக்கு இப்ப தான் சர்ஜரி செஞ்சிருக்கு.
சார், டாக்டரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பயப்படலாமா?
அது இல்லை அர்ஜூன். அவள் செல்வாலான்னு தெரியலை. சந்தேகம் தான்.
அவகிட்ட நான் பேசுறேன் சார்.
அர்ஜூன் எல்லாமே ஓ.கே. உன்னோட ப்ரெண்டோட அம்மாவை பற்றியும் அவன் பேசினான் கௌதம் சொல்ல, மேகா போன் செய்தாள் அர்ஜூனுக்கு.
போனை பார்த்த அர்ஜூன் புன்னகையுடன் சொல்லும்மா..என்ன பண்றீங்க? தினமும் ரொமான்ஸ் தான் போல..
நந்து அவன் வீட்டுக்கு போயிட்டான். வரவே மாட்டேங்கிறான். கம்பெனிக்கே வரலை. அவன் அம்மாவை யாரோ கடத்திட்டாங்க. ரொம்ப பயத்துல இருக்கான்.
அவன் வருவான். நான் பார்த்துக்கிறேன் என்று அர்ஜூன் அவள் போனை துண்டித்து, கௌதமை பார்த்து பேசிட்டு வந்துடுறேன்னு எழுந்தான். காருண்யா அவன் பின்னே செல்ல,
ஹே..எங்க போறீங்க? தாரிகா கேட்டாள்.
நான் அவன் பேசுவதை கேட்கணும்.
ஒட்டுக்கேக்க போறீயா?
ஆமா, அதுக்கென்ன..அவன் இப்ப நந்துவிடம் தான் பேசுவான். அவன் பிளானை பார்த்தால் தான் என் அப்பாவிடம் என்ன பேசலாம்ன்னு தெரியும்?
அவனுக்கும் உன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? கவின் கேட்டான்.
இருப்பா. இனி தான் சம்பந்தப்படுத்த போறான். அனைவரும் புரியாமல் விழித்தனர். ஸ்ரீ, கௌதமிற்கு நன்றாக புரிந்தது.
தலையில அடிபட்டிருச்சோ? அகில் கேட்க, மூளை இருக்கிறவங்களுக்கு தானே தலையில அடிபடும். இவளுக்கு எங்கே அடிபடப்போகுது? தாரிகா சொல்லிக் கொண்டே..காருண்யா பின் செல்ல அனைவரும் அர்ஜூனை மறைந்திருந்து பார்த்தனர்.
என்ன பண்றீங்க? கமலி கேட்க, காருண்யா திரும்பி.. கமலியை பார்த்து ஆன்ட்டி உங்க அண்ணாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய தயார் செய்கிறான் உங்க பையன்.
என்ன? அவனா? கல்யாணமா? என்று சிரிக்க,..ஷ்..என்று அபி கமலியிடம் சொல்ல, அவரும் அவன் பேசுவதை கேட்க, ஸ்ரீ கௌதமை தவிர பாட்டி கூட மறைந்து நின்றார்.
அர்ஜூன் அவன் மாமாவிற்கு போன் செய்து, கமிஷ்னரிடம் கொலைகாரன் பேசியதை சொன்னான்.
சரி, நான் என்ன பண்ணனும்?
மாமா,..என்று தயங்கினான் அர்ஜூன்.
என்னிடம் பேச என்னோட மருமகன் தயங்குறானா? அவர் சிரிக்க,..மாமா, நந்து காலேஜூக்கும் போகாமல் கம்பெனியை கவனிக்கவும் போகாமல் அவன் அம்மாவுடன் வீட்டிலே இருக்கானாம்.
ம்ம்..கொட்டினார் அவர்.
அதனால கொஞ்ச நாள் மட்டும் அவனையும் அவன் அம்மாவையும் உங்க வீட்ல வைச்சு பார்த்துக்குறீங்களா? அவன் கேட்க, அவர் குடித்துக் கொண்டிருந்த டீ கொட்டி கிளாஸ் உடைந்தது.
மாமா..என்னாச்சு? அர்ஜூன் கேட்க, அந்த பையன் மட்டும்ன்னா பரவாயில்லை. நான் தனியா தான் இருக்கேன்னு உனக்கு தெரியும்? அவன் அம்மாவை எப்படி?
சரி மாமா, முடியாதுன்னா இருக்கட்டும். அவங்களுக்கு ஏதாவது ஆனால் நமக்கென்ன? என்று அவன் பாவமாக சொல்ல..அகில் மற்றவர்களிடம், அவன் மூச்சிய பாருங்களேன். பச்ச புள்ள மாதிரி வச்சிருக்கான் சொல்ல..
சும்மா..மாமாவ குறை சொல்லாதீங்க. மாமாவுக்கு என்ன மூளை? என்னோட அப்பாவை சம்மதிக்க வச்சிருவான் காருண்யா சொல்ல..அதுல கொஞ்சம் வாங்கிக்கோ. உனக்கும் தேவைப்படும் தாரிகா கேலி செய்தாள்.
தள்ளாதடா அபி..என்று கவின் சொல்ல,அமைதியா கவனிக்க, இல்லை அர்ஜூன் எல்லாத்தையும் பார்த்துருவான்.
அவன் என்னோட பேரனாச்சே? மூளையிருக்காதா? பாட்டி சொல்ல..தாரிகா அவரை பார்த்து, பாட்டி நீ இன்னும் மாமாவை பார்க்கலை. அவருக்கு உன் பேரன் இன்னொரு பொண்ணை கோர்த்து விட பார்க்கிறான். நீ என்னனா..அவனை பெருமையா பேசுற?
வாழ்க்கை தனியே எண்பது வயசுக்கு மேல போவது கஷ்டம் தான். என் பிள்ளைய தனியாவே கஷ்டப்பட சொல்றியாடி?
அம்மா, நீ அப்படி தான இருந்த? இருக்க? கமலி கேட்டார்.
ஆமாம்மா. எனக்கு நீங்க பக்கத்துல இருந்தீங்க. என்னோட புருசனும் என்னை நல்லா பார்த்துக்கிட்டவர். அதனால் அவர் நினைவிலே இங்கேயே இருக்கேன்.
அஜூ..சொல்றதை பார்த்தா..அவன் பொண்டாட்டியுடன் கொஞ்ச நாள் கூட வாழ்ந்த மாதிரி தெரியல. அவன் வேற புள்ளைய கட்டிக்கிறதுல எந்த தப்பும் இல்லை என்றார். காருண்யா முகம் வாடியது. அவள் பாட்டியை பார்த்து, நானும் அவரை தனியா விட்டு கஷ்டப்படுத்தீட்டேன்ல கண்ணீருடன் கேட்டாள்.
அர்ஜூன்…இவன் என்னை சமைக்க கூட தனியே விட மாட்டேங்கிறான் என்று நந்து அம்மா புலம்பினார்.
சிரித்த அர்ஜூன், டேய்..அவனுக பணத்துக்காக வந்தவனுக. அர்ஜூன் எனக்கு அவன் கால் பண்ணான்.
யாருடா? அர்ஜூன் முகம் சீரியசானது.
அந்த கொலைகாரன் போன் செய்து, அம்மாவை..என்று அழுதான்.
நந்து யாரு கால் பண்ணா? நீ என்னிடம் சொல்லவேயில்லை என்று அவன் அம்மாவும் கேட்டார்.
அம்மா..ப்ளீஸ்..என்றான் நந்து.
நந்து பயப்படாத. நான் ஒன்று சொல்றேன் அம்மாவிடம் பேசிட்டு சொல்றியா?
அவன் ரொம்ப நெருங்குற மாதிரி இருக்கு. இந்த பிரச்சனை முடியும் வரை நீங்க என்னோட மாமா வீட்ல இருக்கீங்களா?
என்ன? என்று எழுந்த நந்து அவன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.
டேய், கதவை எதுக்கு பூட்டுற? அவன் அம்மா சத்தமிட்டார்.
ஒரு நிமிஷம்மா..உன்னோட மாமா வீட்லயா? கமிஷ்னர் வீட்லயா? ஏற்கனவே உன்னோட அத்தையும் மாமாவும் பிரிஞ்சு இருக்காங்க. இதுல நாங்க எப்படி அங்க? வேண்டாம் அர்ஜூன். நானே அம்மாவை பார்த்துக்கிறேன்.
நந்து..நான் ஏதோ சின்ன பிரச்சனை தான்னு நினைச்சேன். ஆனால் அவன் உனக்கு போன் செய்திருக்கிறான். ஆருத்ராவோட அண்ணா தேவ் சார் ப்ரெண்டு கௌதம் சார் அம்மாவையே கடத்திட்டானுக. மாமா தான் உதவினார்.
அவன் தான் உன் அம்மாவை பேசியதை போல் தான் அவரிடமும் பேசினான். நானும் கேட்டேன் நந்து. உன்னால சமாளிக்க முடியாது. காருண்யா கௌதமை பார்த்தாள். அவன் அப்பொழுதிருந்த அறை முன் அமர்ந்திருந்தான். ஸ்ரீயும் அருகில் இருந்தாள். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அர்ஜூன்..உன்னோட அத்தை தப்பா நினைச்சுட்டா?
அவங்க சீக்கிரமே விவாகரத்து பண்ணிடுவாங்க. அதை பத்தி நீ கவலைப்படாத.
விவாகரத்தா?
ஆமாடா. உன் பிரச்சனைக்கு வருவோமா?
அர்ஜூன்..என்னோட அம்மாவை பத்தி எல்லாரும் தப்பா பேசுவாங்க. அவரு தனியா வேற இருக்காரு. நான் காலேஜ் போயிட்டு கம்பெனிய பார்க்க போகணும். மேகா இன்றே நிறைய முறை கால் பண்ணிட்டா. பிரச்சனை முடியும் வரை எப்படி அம்மா அவர் வீட்டில் தனியே? யோசித்தான்.
அவர் வீட்டிலேவா இருக்க போறார். முக்கால் வாசி நேரம் அவர் ஆபிஸ்ல தான் இருப்பார்.
அர்ஜூன்…நைட் வர முடியாதே? இது வேண்டாம். வேரெதாவது சொல்லு?
நீ மேகாவுடன் நைட் இருக்கிறாயே? அது தப்பில்லையா? யாரும் பேச மாட்டாங்களா? வேற நம்பிக்கையானவங்க எனக்கு தெரியாது. சொல்லு..
மேகாவும் நானும்…ஸ்டடி தானே.
அது யாருக்கு தெரியும்?
அர்ஜூன்..என்று சத்தமிட்டான் நந்து.
சரி நந்து நீயே பக்கத்துல இருந்து அம்மாவை பார்த்துக்கோ. உதவி செய்ய என்னால் அங்கு வர முடியாது. இங்கேயே ஆயிரெத்தெட்டு பிரச்சனை. மேகா வேண்டுமானாலும் நான் சொன்ன சீனியருடன் வேலைய பார்க்கட்டும்.
அர்ஜூன்..என்று நந்து மெதுவாக அழைக்க, அர்ஜூன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அர்ஜூன்..உன்னோட மாமா வீட்ல எப்பொழுதுமே இருக்க மாட்டாரே? பாதுகாப்பு எப்படி இருக்கும்?
டேய், அவர் சென்னை சிட்டி கமிஷ்னர். அவர் வீட்டுக்குள்ள நுழைய எவனுக்கு தைரியம் இருக்கு. அவரை பற்றி சர்ச் பண்ணிப்பாரு. உனக்கே தெரியும். யாரையும் நம்பவே மாட்டார். உங்கள் நிலையை கூறி தான் அவரையே ஒத்துக்க வச்சிருக்கேன். நீ ஓ.கே சொன்னவுடன் அவரே பாதுகாப்புக்கு எல்லாத்தையும் செய்திடுவார் என்றான். காருண்யா சிரித்தாள்.
சரி அர்ஜூன், நான் அம்மாவிடம் பேசிட்டு சொல்றேன்.
நந்து, அப்படியே இதையும் கேட்டு சொல். அவருக்கும் சேர்த்து உன் அம்மா தான் சமைக்கணும் என்று இழுத்தான்.
சமைக்கணுமா?
டேய், வேலைக்கு கூட அவர் ஆள் வச்சதேயில்லை. வெளிய தான் சாப்பிடுவார். அதனால நீங்க அங்க இருக்கும் வரையாவது அவர் நல்லா சாப்பிடட்டுமே? அர்ஜூன் சொல்ல, ம்ம்..என்று நந்து போனை வைத்தான்.
எஸ்..என்று வெற்றிக்குறியை போட்டு அர்ஜூன் திரும்ப, அவன் அம்மா, அஞ்சனா, பாட்டி, மற்றவர்களும் அவன் முன் வந்தனர்.
சார், என்ன பண்றீங்க? கமலி கேட்க, தலையை சொரிந்த அர்ஜூன்..அம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு என்று வெளியே ஓடி வந்து கௌதம், ஸ்ரீயை பார்த்து பெருமூச்சு விட்டான்.
என்னாச்சு அர்ஜூன்? ஸ்ரீ கேட்க, ஸ்ரீ..செம்மையா பேசிட்டேன் என்று அவளை அணைத்தான்.
விடுடா,.என்று அவனை ஸ்ரீ தள்ளி விட, அவனை விடாத ஸ்ரீ..பிடி கமலி சொன்னார். அவன் வீட்டை சுற்றி ஓட, பசங்க எல்லாரும் சேர்ந்து அவனை அழுத்தி பிடித்தனர்.
ஏன்டா, என்னோட அண்ணனை ஏமாத்தி செட் பண்ணியா விடுற? என்று அவன் அம்மா அவனிடம் வந்தனர்.
அம்மா, மாமா நல்லதுக்கு தான் செய்தேன் என்று அர்ஜூன் சொல்ல, அந்த பையனுக்கு உன் வயசு தானா? அவனோட அம்மா எப்படி? பாட்டி கேட்க…பார்த்தீங்களா? பாட்டி கூட ஒத்துக்கிட்டாங்க என்றான் அர்ஜூன்.
பாட்டி..எனக்கு அவனோட அம்மா பத்தி தெரியாது. அவனை பத்தி தெரியும்? ஊமக்குசும்பன் தெரியுமா? பார்க்க தான் அமைதியா இருப்பான். பயங்கர நல்லவன் என்றாள் காருண்யா.
இரு தாரி என்ற அர்ஜூன் காருண்யாவிடம் வந்து, சாரிடம் என்ன பேசுன? கேட்டான்.
அவர் என்ன சொன்னார்?
நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டியா?
இல்லை..என்று தலை கவிழ்ந்து மீண்டும் எல்லாரையும் பார்த்தாள். கமலியும் அஞ்சனாவும் அவளை முறைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜூன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரு ரொம்ப ஓவரா பேசினாரு. அதான் சொன்னேன்.
யாரு? அவரு பேசினாரா? தாரிகா கேட்டாள்.
தேஜூவை பத்தி அவரிடம் எதுக்கு பேசுன? அர்ஜூன் கேட்டான்.
அவர் காதலிச்ச பொண்ணால யாரு மேலேயும் அவருக்கு நம்பிக்கை இல்லைன்னு என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்தார்.
உன்னை அந்த லிஸ்ட்ல சேர்த்தால் உனக்கென?
கஷ்டமா இருந்துச்சு.
என்ன கஷ்டம்? கொஞ்சம் நேரடியா சொல்றீயா? அர்ஜூன் கேட்டான்.
அர்ஜூன், எனக்கு சுவாதி தவிர ப்ரெண்ட்ஸ் யாருமில்லை. சின்ன வயசில அம்மா, அப்பா வச்சு எல்லாரும் டீஸ் பண்ணுவாங்களா? அதனால ஸ்கூல்ல யாருடனும் பேச மாட்டேன். ஆனா காலேஜ்ல ப்ரெண்டு இருக்கா. மருத்துவத் தொழிலை நான் செலக்ட் பண்ணதே என்னை சுற்றி யாராவது இருக்க வேண்டும்ன்னு தான். எல்லாரையும் பார்த்துக்கிட்டு ஹாஸ்பிட்டல்லையே இருந்த டாக்டர் பற்றி கேள்விபட்டிருக்கேன்.
கௌதம் சார் கூட சண்டை போடுறது பிடிச்சிருந்தது. ஆனால் அர்ஜூன், அவரை எப்ப காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை என்று அவளுடைய அப்பாவுக்காக அவன் அம்மாவிடனும் தவறான அந்த நபருடனும் சண்டை போட்டது; அவள் மீது அவன் அக்கறையுடன் பேசியது; சுவாதியிடம் நடந்து கொண்டது; காதலிச்ச பொண்ணு தப்பானவன்னு தெரிஞ்சி அவளோட சண்டை போடாமல் விலகி நின்றது; தேவ்விற்காக காருண்யாவுடன் சண்டை போட்டது; இப்பொழுது காரில் வரும் போது கூட தூங்க முடியாமல் இருந்த அவளிடம் அவள் கஷ்டப்படக்கூடாதுன்னு அவன் கல்லூரி படிக்கும் போது நடந்ததை பேசிக் கொண்டே வந்தது; யாருன்னே தெரியாத மாலினிக்காக சாப்பிடாமல் கூட உதவியது; அதை விட அவன் அம்மா மீதுள்ள பாசம் எல்லாமே பிடிச்சிருக்கு என்று அர்ஜூன் தோள் சாய்ந்து அழுதாள்.
கௌதம் அறை உள்ளே சென்றவன் திடீரென காதில் போனுடன் அவள் பேசியதை கேட்டு விட்டு ஏதும் தெரியாதது போல அவர்களை கடந்து அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டே சென்றான். எல்லாரும் அவன் செல்வதை பார்த்து விட்டு காருண்யாவை பார்த்தனர். அவள் அவனை பார்த்து விட்டு அவள் அறைக்கு ஓடினாள். கௌதம் அம்மாவிற்கும் அவள் பேசியது கேட்டிருக்கும்.
காரு..நில்லு என்று ஸ்ரீ, தாரிகா, கமலி, அஞ்சனாவும் அவள் பின்னே சென்றனர். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க..அஜூ..அந்த பையனுக்கு புள்ள பேசியது கேட்டிருக்கும்ல பாட்டி கேட்டார்.
சீனியர், இது கூட தெரியாதா? அவர் வரும் முன்னே அறைக்கதவை திறக்கும் ஓசை கேட்டது. அவள் பேசியதை கேட்டு தான் வந்திருக்கிறார். ஆனால் தெரியாதது போல் செல்கிறார் அவன் கூற, சரி..நான் அவரை பார்த்துட்டு வாரேன். ஆது நீயும் போனை எடுத்து வை என்று அர்ஜூன் வெளியே சென்றான்.
காருண்யாவை சமாதானப்படுத்தி எல்லாரும் அழைத்து வந்தனர். அவள் அமைதியாக அமர்ந்தாள். அவ்விடம் அமைதி நிலவ,..அர்ஜூன் கௌதமை பார்த்தான். அவன் போனை அணைத்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்திருந்தான்.
என்ன சார், வெளிய வந்துட்டீங்க?
உள்ள ஏதோ மூச்சு முட்டுவது போல் இருக்கு. அதான் வெளியே இருக்கேன் என்றான் கௌதம்.
நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சார். நான் காருவை பற்றி பேசலை. எல்லா விசயத்திலும் தான் சொல்றேன்.
அம்மாவை நினைத்து கவலை, பயம் எல்லாமே உங்களுக்கு இருக்கு. ஆனால் நீங்க தேவ் சாரிடம் அம்மாவை விட்ருக்கீங்க. ஆனால் முழுசா நம்ப முடியலைல்ல.. கௌதம் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
அப்படி இல்லை அர்ஜூன். அவங்களுக்கு ஏதாவது ஆகிடும்மோன்னு பயம் தான்.
பயம் எதனால் வருது சார்? நம்பிக்கை இல்லா இடத்தில் தான் பயமிருக்கும். நீங்க முழுசா நம்புங்க. தேவ் சார் உங்க ப்ரெண்டு. உங்க அம்மாவை அவருக்கு நல்லா தெரியும்.
கொஞ்சம் அவர் இடத்தில் இருந்து யோசிங்க. அவர் குடும்பத்தை விட முதல்ல உங்க அம்மாவை தான் பத்திரமா பார்த்துப்பார். நீங்க கவலைப்படாமல் இருக்கலாம் என்று ஆறுதலாக அர்ஜூன் பேச கௌதம் அவனை அணைத்தான்.
எனக்கு காருவையும் மாமாவையும் இரண்டு வருசமா தான் தெரியும். அவர் வீட்டிற்குள் நான், அம்மா, காரு, நீங்க தவிர யாரும் சென்றதில்லை. அத்தையுடன் கூட பேசி இருக்கேன். ஆனால் இருவருக்கும் இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கும்ன்னு தெரியாது?..அதை என்னத்த சொல்றது? என் அம்மா, ஸ்ரீயோட பிரச்சனை கூட தெரியாமல் அம்மா மீது கோபமாகவும், பைத்தியம் மாதிரி அவளை நினைத்துக் கொண்டு இருந்திருக்கேன். அதற்கு பதில் அம்மாவுடன் சேர்ந்து அவங்களுக்கு புரிய வைத்து ஸ்ரீயை தேடி இருந்தால் இருவரும் நல்லா இருந்திருப்பாங்க. ஸ்ரீ இன்னும் சரியாகலை சார். அவ நடிக்கிறா. எனக்கு அம்மாவை கூட பக்கமிருந்து தேற்ற முடியும். அவள் விசயத்துல என்ன செய்றதுன்னே தெரியலை என்று கண்கலங்கினான்.
அத்தை பத்தி முதலவே மாமா சொல்லி இருந்தா, காருவாது அவள் அப்பாவுடன் சேர்ந்து இருந்திருப்பாள். எல்லாம் பிரச்சனைக்கும் என் கோபமும் காரணம் தான்.
நானோ மாமாவோ தனியா இருக்கிறது பெரிய விசயமே இல்லை. எப்படி காரு தனியா யாருடன் சேராமல் இருந்தாலோ தெரியலை? நினைச்சாலே கஷ்டமா இருக்கு. மாமாவை அவள் டிவி, நியூஸ் பேப்பரிலும் தான் பார்த்திருந்திருக்கிறாள். அத்தையாவது கொஞ்ச நேரமாவது அவளுடன் செலவழித்து இருக்கலாம். ஆனால் யாருமில்லாமல் எப்படி விடுதியிலே தனியா அவளால் இருக்க முடிந்தது? எனக்கு ஏதோ தப்பா தெரியுதே என்ற அர்ஜூன், சார்..சுவாதியும் காருவும் ஒரே அறை தானா? அர்ஜூன் கேட்டான்.
அப்படி தான் சொன்னமாதிரி தெரியுது? என்ற கௌதம்..தனியா..என்று சிந்தித்த கௌதம் அவளுக்கு ஏதாவது பழக்கம் இருக்கலாமோ?
என்ன? அர்ஜூன் அதிர்ச்சியுடன் கேட்க.,ச்சே..அந்த மாதிரி இல்லை. தனிமையை போக்க ஏதாவது செய்து கொண்டே இருக்கலாம். அதிகமாக பேசுவது..சேட்டை பண்ணுவது..பேச்சுக்கு எதிராக நடப்பது அவன் கூற,
சார்..சார்..அவளை அறிந்து நான் பேச ஆரம்பித்த போது இந்த அளவு பேச மாட்டாலே. அமைதியா இருப்பா. அவள் இந்த ஒரு வருசமா தான் இப்படி சண்டை போடுற மாதிரி பேசுறா? அர்ஜூன் சொல்ல..
தனிமையை அமைதியாக வெகு நாட்கள் கழிக்க முடியாது அர்ஜூன். ஒரு வேலை உறவென உன்னை பார்த்ததால் அவள் கஷ்டம் உனக்கு தெரிய வேண்டாம்ன்னு நினைச்சிருக்கலாம்.
இருக்கலாம். ஆனால் என்று யோசித்த அர்ஜூன், சுவாதி நம்பர் இருந்தா தாங்க என்றான். அவனிடம் வாங்கி அர்ஜூன் சுவாதிக்கு போன் செய்தான்.
ஸ்ரீ நல்லா தான் இருக்கா. நீ காருவை பற்றி சொல்லு? கேட்டான் அர்ஜூன்.
காருவா? எதுக்கு? அவளுக்கு ஏதும் பிரச்சனையா?
அய்யோ..அதெல்லாம் ஒன்றுமில்லை. அவளை பார்த்த நாளிலிருந்து அவளை பற்றி சொல்லு..அர்ஜூன் கேட்க, போனை வாங்கிய கௌதம்..சுவாதி, அவளுக்கு ஏதையாவது திரும்ப திரும்ப செய்யும் பழக்கம் இருக்கா? நல்லா யோசித்து சொல்லு?
எதுக்கு இருவரும் அவளை பற்றி கேட்குறீங்க?
சுவாதி..சொல்லும்மா.
அவள் நிறைய படம் வரைவா. சூப்பரா பண்ணுவா. பார்த்ததை உடனே வரைவா?
எந்த மாதிரி படங்கள் வரைவா? கௌதம் கேட்டான்.
இயற்கையை தவிர வரைவாள். யோசித்த சுவாதி, அண்ணா..ஒரு முறை அவள் வரைந்த படம் இருவர் உடலுறவில் இருப்பதை போல் வரைந்திருந்தாள். அதை பார்த்து எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்த்தாங்க. நான் கூட திட்டினேன். ஆனால் அவள் பதில் பேசவேயில்லை.
பாதி படங்கள் மனுசங்களை தான் வரைவா? ஆனால் முக அமைப்பை மட்டும் தான் வரைவாள். கண், காது, மூக்கு ஏதுமிருக்காது. பாதி ஏதோ இருட்டு பகுதியில் இருப்பது போல் இருக்கும். அவளுக்கு காதலிக்கணும்ன்னு ஆசை. நான் கிண்டலாக நிறைய பசங்களை கை காட்டினேன். ஆனால் அவளுக்கு நான் காட்டிய யாரையும் பிடிக்கலை. இதுல..சித்திரனை கண்டாலே பிடிக்காது. அவன் என்னை ரொம்ப டீஸ் பண்ணு வான்னா. அதனால அவன் பக்கமே என்னை செல்ல விட மாட்டாள். அவளுக்கு பிடிச்சிருந்தா அவங்களுக்காக எதையும் செய்வாள் அண்ணா.
அண்ணா..அவளுக்கு ஒன்றுமில்லையே? சுவாதி கேட்க, கௌதம் கண்கள் கலங்கியது. அர்ஜூன் அவனை பார்த்து விட்டு, சுவாதி உன்னால அந்த படங்களை அனுப்ப முடியுமா?
அர்ஜூன், நான் தேவ் சார் வீட்ல இருக்கேன். அதனால் முடியாது.
சரி, உடம்பை பார்த்துக்கோ என்று அர்ஜூன் சொல்ல, கௌதம் போனை வாங்கி தேவ்வை கூப்பிடு சுவாதி.
அண்ணா..என்று அவள் தயங்கினாள். முக்கியமான விசயம்? கூப்பிடு என்றான்.
தேவ் சுவாதியை பார்த்துக் கொண்டே நின்றான். சார் கௌதம் அண்ணா பேசணுமாம் என்றாள்.
தேவ் வாங்கி பேச, சுவாதி ரூம் மேட் நம்பர் வாங்கி காருவின் கப்போர்ட்டில் அவள் வரைந்து வைத்திருக்கும் படம் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் வாங்கி இப்பவே போனில் அனுப்பு..
என்னடா, ஏதும் பிரச்சனையா?
இல்லாம இருந்தா நல்லா இருக்கும். சீக்கிரம் அனுப்புடா என்று கௌதம் போனை வைத்தான்.
அர்ஜூன், தப்பா தான் இருக்கு என்றான் கௌதம். அவள் அம்மாவை பற்றி அவளுக்கு முன்னமே தெரிஞ்சிருக்குன்னு தோணுது. யாருமில்லா தனிமை; அவள் அம்மாவின் செயல்; அப்பாவின் பிரிவு அவளை பாதிச்சு இருக்குன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
அன்று அவள் அம்மாவை பார்த்து, அவள் அழுதது..உண்மை இருக்காது. அவள் அப்பா முன் தெரியாதது போல் காட்டி இருக்காள்.
அவ நடிக்கிறான்னு சொல்ல வர்றீங்களா? அர்ஜூன் கோபமாக கேட்டான்.
இல்லை அர்ஜூன். ஒரு வேலை சின்ன வயதிலே அவள் அம்மாவை அவனுடன் சேர்ந்து பார்த்திருப்பாளோ? அதனால் தான் சுவாதி சொன்ன படத்தை வரைந்திருக்கிறாளோ? அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சுவாதி கௌதமிற்கு போன் செய்து, அண்ணா..ஒரு விசயம்..அவள் வரையும் பக்கத்தில் அன்றைய தேதியையும் அவள் கையெழுத்தையும் போடுவாள்.
சரிம்மா..பார்த்துக்கிறேன் என்றான் கௌதம். அர்ஜூனிடமும் கூறினான். அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.
இவ்வளவு நேரமா பேசுவ அர்ஜூன்? அகில் கேட்க, அவன் என்னமும் செய்யட்டும். அர்ஜூன் போன் பத்திரம்..என்று அபி..நாங்க மேம்மை பார்க்க போறோம் என்றான். காருண்யா, ஸ்ரீ, தாரிகா அனுவுடன் பேசிக் கொண்டே வந்தனர். ஆனால் காருண்யாவிடம் ஓர் அமைதியை இருவரும் கவனித்தனர்.
போயிட்டு வாங்க. போன் தயாரா இருக்கும் அர்ஜூன் சொல்ல, அர்ஜூன்..வா.விளையாட போகலாம் அனு அர்ஜூனிடம் ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
அனுகுட்டி எல்லாருடனும் விளையாடுங்க. நான் என் வேலையை முடிச்சிட்டு வாரேன்.
போ..எப்ப பாரு வேலையவே பாக்குற? அப்பாவும் இப்படி தான் சொல்லுவாங்க. விளையாடவே வர மாட்டாங்க என்று அனு சொல்ல, அவளை அதிர்ந்து அனைவரும் பார்த்தனர். அர்ஜூனுக்கு கஷ்டமாக இருந்தது.
என்னோட குட்டி ஏஞ்சல் கூட இன்று இரவு அர்ஜூன் விளையாட வருவேனே? நீ வருவியா? அர்ஜூன் அனுவிடம் கேட்க, பிராமிஸ் பண்ணு என்று அனு அர்ஜூனிடம் பிராமிஸ் வாங்கி விட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவனும் கொடுத்தான்.
பாப்பா..அங்கிளுக்கு என்று அனுவிடம் அகில் வந்தான். க்யூட் அங்கிளுக்கு என்று அனு அகிலுக்கும் கொடுத்தாள். அவளையே அர்ஜூன் பார்க்க, ஸ்ரீ அர்ஜூனையே பார்த்தாள். அவளை அபி பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாரும் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின் வாங்க சார்..என்று அர்ஜூன் கௌதமை அழைக்க, எங்க கூட்டிட்டு போற அர்ஜூன்? யாரும் பார்க்காதவாறு மறைந்து அவனை காருண்யா அறைக்கு அழைத்து சென்றான் அர்ஜூன்.
எதுக்கு அவள் அறைக்கு கூட்டிட்டு வந்த?
சார்..அவள் தூங்கவேயில்லை. அவள் கண்கள் தெளிவாக காட்டியது. இரவும் தூங்கி இருக்கமாட்டால்ல? இப்பவும் அவள் தூங்கலை. தனியா என்ன தான் செஞ்சிருக்கான்னு பார்க்கலாம் என்று அர்ஜூன் அறையை சுற்றி ஏதாவது இருக்கா என பார்த்தான். கௌதம் அவளது காலேஜ் பையை பார்த்தான்.
அர்ஜூன்..என்று அழைத்தான். பையில் குட்டி நோட் ஒன்று இருந்தது. சுவாதி கூறியது போல் முக அமைப்புடன் ஓர் ஆணின் உருவம் தெரிந்தது..கருப்பு நிறத்திலே இருந்தது. எல்லா பக்கத்திலும் அதே படம் தான். அந்த நோட்டு முழுவதும் இருக்க தேதிகள் அனைத்தும் இவ்வருடத்தையே காட்டியது. அதை திருப்பிக் கொண்டே கௌதம் அர்ஜூனிடம், யாரையோ பார்த்திருக்கா அர்ஜூன்..அவன் கூறிக் கொண்டே எட்டாவது பக்கத்தை பார்த்து நோட்டை கீழே போட்டான் கௌதம். அர்ஜூன் அதை எடுத்து பார்த்து விட்டு கௌதமை பார்த்தான்.
அவள் வரைந்திருந்தது கௌதமை. ஆனால் பென்சில் சேடில் இருந்தது. மறு பக்கத்தை புரட்டினான் அர்ஜூன். அதிலும் அவ்வாறே இருந்தது. பத்தாவது பக்கம் கௌதமை ஹாஸ்பிட்டலில் வைத்து பார்த்த போது அவன் அணிந்திருந்த ஆடை. இருவரும் அதிர்ந்து அதை பார்த்தனர்.
சார், இதை பார்த்தால் அவள் முன்பே உங்களை பார்த்தது போல் தெரியுதே? உங்களுக்கு அவளை தெரியுமா? உண்மையை சொல்லுங்க.
நிஜமாகவே எனக்கு அவளை சுவாதியால் தான் தெரியும் என்றான் கௌதம் திகைப்புடன். அர்ஜூனுக்கு நந்து போன் செய்து, அர்ஜூன் அம்மா ரொம்ப யோசிக்கிறாங்க. வேண்டாம்ன்னு சொல்றாங்க என்றான் நந்து.
அம்மாகிட்ட கொடு என்ற அர்ஜூன். நந்து அம்மா பேசும் முன்பே.. அம்மா..ஒன்னு நந்துவுக்காகவும், உங்களுக்காகவும் கமிஷ்னர் சார் வீட்ல நீங்க பாதுகாப்பா இருக்கணும் இல்லை. நான் எல்லாருக்கும் தெரியும்படி நந்துவிடம் ஏதோ காரணத்தை சொல்லி அடித்து சண்டையிட்டு மொத்தமாக நானும் உங்க பையனும் பிரியணும்.
எனக்கு என்னோட நட்பை விட, நண்பனோட உயிரும், அவன் அம்மா மானமும் தான் முக்கியம். இப்பவே என்ன செய்யலாம்ன்னு சொல்லிருங்க?
என்னப்பா இப்படி இக்கட்டுக்குள் தள்ளுற? என் பையனுக்கு உன்னை விட்டால் வேற ப்ரெண்டே இல்லை. அவன் இனியும் யாருடனும் பெரியதாக பழக மாட்டான்.
எனக்கும் வேற வழியே தெரியலம்மா..கஷ்டமா இருக்கு. நான் அங்கிருந்தாலாவது கொஞ்சமாக அவனுக்கும் உங்களுக்கும் ஒன்றுமில்லைன்னு நிம்மதியா இருக்க முடியும். ஆனால் அந்த பொறுக்கி என்னிடமே உங்களை..சொல்றான்ம்மா. நீங்க தான் முடிவெடுக்கணும். என்னோட மாமா வீட்ல ரொம்ப இருக்க மாட்டார். சாப்பாடு மட்டும் செஞ்சு தாங்க. அவருக்கு அவர் வேலையே சரியா போகும் என்றான்.
சரிப்பா. நாங்க கிளம்புகிறோம். ஆனால் தவறாக தெரிந்தால் உடனே கிளம்பி விடுவேன் என்றார்.
சரிம்மா..கிளம்பும் போது எங்களிடம் சொல்லணும் என்றான் அர்ஜூன். எனக்கு அந்த கொலைகாரனை பிடிக்கும் வரை நிம்மதியாக இருக்கவே முடியாது என்றான்.
நான் மாமாவிடம் சொல்றேன். நீங்க இப்பவே கிளம்புங்க. உங்க வீட்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து தான் என்றான். சரிப்பா..என்று நந்துவிடம் போனை நீட்டினார். அவன் போனை வாங்கி “தேங்க்ஸ் அர்ஜூன்” என்றான்.
எதுக்குடா தேங்க்ஸ்? என்னால தான உங்களுக்கு பிரச்சனையே? பெட்டில் படுத்தான். ஏதோ அர்ஜூன் முதுகில் குத்தியது. செட்டில் ஆகிட்டு கால் பண்ணுடா..
என்ன? நந்து அதிர்ந்தான். டேய்..வீட்டுக்கு போயிட்டு உங்க பொருட்களை அரேஜ் பண்ணிட்டு கால் பண்ணுன்னு சொன்னேன்.