அத்தியாயம் 105

கௌதம் தேவ் அப்பாவிற்கு போன் செய்து புலம்பினான். இந்த பொண்ணை சின்ன புள்ளையா பார்த்தது எப்படி வளந்திருச்சு பாரேன் என்று ஒருவர் சொல்ல, இப்பவாது அவ அப்பாவை பார்க்க வந்தாலே? என்று கூறவும் பேசுவதை நிறுத்தினான் கௌதம்.

ஒருவர், அவனிடம் வந்து நீங்க யாரு தம்பி? எப்படியோ அவரு பொண்ணை கூட்டிட்டி வந்துட்டீங்க? கமிஷ்னர் குடும்பத்தை விட்டு பிரிந்து ரொம்ப கஷ்டப்பட்டார்.

கமிஷ்னரா? பொண்ணா? அவன் கேட்க, கமிஷ்னர் பொண்ணு அவரை பார்க்க வந்துட்டா. இதே போல் அவர் மனைவியும் வந்துட்டா அவர் கொஞ்சமாவது நிம்மதியா இருப்பார் என்று முதிய போலீஸ் ஆள் பேசி விட்டு செல்ல எல்லாரும் காருண்யாவை பற்றி தான் பேசினார்கள். ஒருவர் மட்டும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவன் அவரை பார்த்துக் கொண்டிருக்க, தேவ் அப்பா அதிர்ச்சியுடன், கமிஷ்னர் பொண்ணா? அப்ப அர்ஜூன் இவளுக்கு மாமாவா? கமலி மேம் அண்ணாவா கமிஷ்னர். அவருக்கு அவராக பேச…சார், அவளோட மாமாவ உங்களுக்கு தெரியுமா?

ஆமா கௌதம். நம்ம மாப்பிள்ளையோட அக்காவை தான் அவளோட மாமா அர்ஜூன் காதலிக்கிறான். நீ பார்த்திருப்ப ஒரு வாரமா நம்ம ஹாஸ்பிட்டல் தான் இருந்தாங்க. அந்த பொண்ணு அவ அப்பாவை பற்றி சொல்லவேயில்லை பாரேன்.

சார், உங்களை கமிஷ்னர் கூப்பிடுறார்? ஒருவர் வந்து சொல்ல, சார் நான் அப்புறம் கால் பண்றேன் என்று போனை வைத்து விட்டு உள்ளே சென்றான்.

“எக்ஸ்யூஸ் மீ சார்” என்று கதவை மெதுவாக திறக்க, வாப்பா என்றார். காருண்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

வெளிய வெயிட் பண்ணும்மா என்றார். நான் இங்க தான் இருப்பேன் என்றாள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு.

தம்பி, நீங்க உட்காருங்க என்று அவளை புன்னகையுடன் பார்த்தார். அவன் இருவரையும் பார்த்தான்.

எதுக்குப்பா சிரிக்கிறீங்க?

எனக்கு கேட்கலை திரும்ப சொல்லு.

நான் சொல்ல மாட்டேன்.

சொல்ல வேண்டாம். அம்மா எப்படி இருக்கா?

தெரியாது.

பக்கத்துல வீட வச்சுக்கிட்டு ஏன் ஹாஸ்ட்டல்ல இருக்கீங்க?

யாருமில்லாத அநாதை எல்லாம் ஹாஸ்ட்டல்ல தான் இருப்பாங்க.

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கௌதம், ஏய் என்ன பேசுற? கேட்டான்.

சார், நீங்க இதுல தலையிடாதீங்க.

ஓ.கே நான் தலையிடலை. நீ உன்னோட அப்பாவுடன் தான இருக்க. இனி அவர் பார்த்துப்பார். நான் கிளம்புகிறேன் என்று எழுந்தான். அவர் கௌதமை ஆர்வமுடன் பார்த்தார்.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

என்ன பாக்குற? உன்னை மாதிரி பெத்தவங்க அருமை தெரியாதவளுக்காக என்னோட அம்மாவை தனியே விட முடியாது. நான் கிளம்புகிறேன் என்று நேரடியாக அவன் சொல்ல, காருண்யா அழுதாள்.

அழாதம்மா..என்று சுந்தரம் எழுந்தார்.

சார்,  அவளை சமாதானப்படுத்தாதீங்க. அவளா உங்களிடம் பேசட்டும். அவள் பேசலைன்னா இங்கேயே இருக்கட்டும். நாம சாப்பிட போகலாம்.

நான் வெளியே இருக்கிறேன். முதல்ல அவள் சரியாகட்டும். அப்புறம் நாம பேசலாம் என்று வெளியேறினான்.

காருண்யா அழுது கொண்டிருக்க, அவர் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

எனக்கு உங்க அருமை தெரியாதுன்னு சொல்லிட்டாரு. எனக்கு இருவருமே இல்லாம எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? உங்க யாருக்கும் தான் என்னோட கஷ்டம் தெரியலை என்று அழுது கொண்டே எழுந்தாள்.

பொம்மிம்மா..அழைத்தார் சுந்தரம். அவள் கண்ணீருடன் அவள் அப்பாவை பார்த்தாள். அவளருகே வந்து நீ அப்பாவை பார்க்க வந்திருக்கலாமேம்மா?

ஏன்? நீங்க வந்துருக்கலாம்ல? கேட்டாள்.

நான் உன்னை அழைத்து செல்வதாக இருந்தது. ஆனால் உன் அம்மாவின் வார்த்தையில் காயப்பட்டு போனேன். என்னால் உனக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று தான் உன்னை என் மகளாக யாரிடமும் காட்டிக்கலை. ஆனால் நீ ஒருநாளாவது வருவன்னு நினைச்சேன். இத்தனை வருடங்கள் கழித்து வந்திருக்க? அதுவும் அப்பாவை பார்க்க வரலை. உன் மாமாவை பற்றி கேட்க, உன் பிரச்சனைக்காக என்று கண்ணீர் உதிர்த்தார்.

அம்மா, என்ன சொன்னாங்க?

விடும்மா. முடிஞ்சதை பேசி என்ன ஆகப் போகிறது?

சொல்லுங்க என்றாள் பிடிவாதமாக.

நீ என்னுடன் இருந்தால் செத்து போயிடுவியாம். என்னால உன்னை பார்த்துக்க முடியாது. அவளுக்கு என்னால நிம்மதி இல்லையாம். அது போல் என்னால் நீ கஷ்டப்படுவியாம். இன்னுமுமே அதிகமா பேசின்னாம்மா.

எனக்கு உன் அம்மாவுடனும் உன்னுடனும் சந்தோசமா இருக்கணும்ன்னு தான் ஆசை. ஆனால் அவள் என்னிடம்..என்று கண்கலங்கியவர் எனக்கு வேறு பொண்ணுடன் பழக்கம் இருக்காம். அதனால உன்னை அழைத்து சென்றால் அவள் தற்கொலை செய்து கொள்வேன்னு மிரட்டினாம்மா. உன்னை பார்க்கவே கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாம்மா. ஆனால்..நான் உன்னை பார்க்காமல் இருந்ததில்லை என்றார்.

அம்மா எதுக்கு என்னை பார்க்க வரலை? அவளுக்கு வேலையாக இருந்திருக்கும்மா. அதனால் தான்..

இல்லப்பா. ஏதோ இருக்கு. உங்களுக்கு தெரியாதா? கேட்டாள்.

அவர் வருத்தமுடன் தெரியாதும்மா என்றார்.

கண்ணை துடைத்து விட்டு வேகமாக வெளியே வந்தாள். கௌதம் கையிலிருந்த அவளது கார் சாவியை பிடுங்கி ஓடினாள். சுந்தரம் வெளியே ஓடி வந்தார்.

போகாதம்மா..என்றார். கௌதம் வெளியே வந்த போது காருண்யாவை முறைத்துக் கொண்டிருந்தவர் அங்கு இல்லை. அதை பார்த்து அவன் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் கௌதம்.

தம்பி, பாப்பாவை போக விடாதீங்க. பொம்மிம்மா..என்று அவள் பின்னே அவர் ஓடினார். கௌதமும் அவருடன் சென்றார். அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அவள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

என்னாச்சு சார்? அவ அம்மாவை பார்க்க போறா? அவள் போகக்கூடாது. எப்படியாவது அவளை பிடிக்கணும் என்று அவரது ஜீப்பை எடுத்தார், கௌதமும் அவருடன் ஏறினான்.

எதுக்கு சார் பார்க்கக்கூடாது?

கொஞ்ச நேரம் அமைதியா வாங்க தம்பி என்று வேகமாக ஓட்டினார். அவன் பிரமித்து அவரை பார்த்தான்.

வீட்டிற்கு வந்து காரை நிறுத்தி விட்டு சாவியை கூட எடுக்காமல் ஓடினார். கௌதம் சாவியை எடுத்து விட்டு பின்னே சென்றான்.

பொம்மிம்மா..என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றார். காருண்யா ஓர் அறைக்கு வெளியே கண்ணீருடனும் முறைப்புடனும் நின்றிருந்தாள். அவர் காருண்யா அருகே ஓடிச் சென்று பார்த்தார். அவர் கண்ணீருடனும் சொல்ல முடியாத பாரம் இறங்கியதாகவும், தன் மகளுக்கு மனச்சுமை கூடி விட்டதே என்று வருத்தமுடனும் அவளை நகர்த்த அவள் நகர்வதாக இல்லை. கௌதமும் வந்து பார்த்து விட்டு அப்பா, மகளை பார்த்தான். அவள் அம்மா வேறொருவனுடன் இருக்க கண்ட அவளால் தாங்க முடியவில்லை. அவர்கள் கண்ணாடி அறையினுள் இருந்தார்கள். அறைக்கதவு மூடி இருந்ததால் மூவரும் வந்ததே அவர்களுக்கு தெரியவில்லை. சீற்றத்துடன் அக்கண்ணாடிக் கதவை கையால் அழுது கொண்டே அடித்தாள். சுந்தரமும் கௌதமும் அவளை தடுக்க இருவரையும் தள்ளி விட்டு, கதவை கை நோக அடித்தாள். அவள் அம்மா அவளை பார்த்து அவனுடன் வெளியே வந்தார்.

என்ன பண்ணிக்கிட்டு இருந்த? என்று அவள் அம்மாவை அடிக்க வந்தாள். சுந்தரம் ஆபிசில் கௌதம் பார்த்த காருண்யாவை முறைத்து பார்த்தவன் அவள் அம்மா முன் வந்து காருண்யாவை பிடித்து தள்ளி விட கௌதம் அவளை பிடித்தான். சுந்தரம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இங்க பாரு, என் பிள்ளைக்கு விசயம் தெரியக்கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். ஏன்டா, இப்ப தான அங்கிருந்து கிளம்பின? அதுக்குள்ள ச்சீ..என்று காரினார் சுந்தரம்.

நீ எதுக்குடா என் வீட்டுக்கு வந்த? காருண்யா அம்மா சுந்தரத்திடம் கையை ஓங்கினார். கோபமான கௌதம் அவள் அம்மா கையை பிடித்து தடுத்து, உங்கள மாதிரி அம்மா இருக்கிறதுக்கு சாவதே மேல் என்று தள்ளி விட்டான். அவள் அம்மா அருகே இருந்தவனும் கௌதமும் சண்டை போட..எழுந்த அவள் அம்மா காருண்யாவை பார்த்தார்.

யாருடி இவன்? கேட்டார். கௌதம் அவரை பார்த்து அவனை முழுமூச்சாய் தள்ளி விட்டு, சுந்தரம் பேசும் முன் அவள் உங்களை மாதிரி இல்லை என்று கத்தினான். காருண்யா அவள் அம்மாவின் செயல் பேச்சில் உடைந்து கத்தி அழுதாள். அவள் அப்பா அவளை அணைத்து, அவள் அம்மாவிடம் இனி உன் சவகாசவே வேண்டாம். உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமில்லை என்று வெளியேற சென்றவரை நிறுத்தி..அப்பா மாமா வேலை பார்க்குறீங்களா? கேட்டாள் காருண்யா அம்மா.

காருண்யாவை கௌதமிடம் விட்டு, காருண்யா அம்மாவிடம் சென்று அவரை அறைந்து, நான் அன்றே செய்திருக்க வேண்டும். என் பிள்ளைய பத்தி ஏதாவது பேசுன. உன் உண்மை அனைத்தும் வெளிய வரும் என்று மிரட்டினார். பின் கௌதமிடமிருந்து காருண்யாவை தன் மீது சாய்த்திக் கொண்டு..அழாதம்மா. அப்பா இருக்கேன் என்று தேற்றி அவளை காருக்கு அழைத்து வந்து, தம்பி பாப்பாவை என்று அவளை பார்த்தார். பின் அவர் இல்லத்திற்கு இருவரையும் அழைத்து சென்றார். ஆனாலும் அவள் சோர்வாக ஏதும் பேசாமலே ஒரு மணி நேரம் கடந்தது.

அவர் கௌதமை தனியே அழைத்து பேசினார். அவள் என் மருமகனிடம் ஏதோ பேசணும்ன்னு சொன்னா. அவளை கூட்டிட்டு போறியாப்பா. கொஞ்சம் தொலைவு தான். நான் போக முடியாது. நான் என் அம்மாவிடம் பேசியே பல வருடமாகிறது.

எங்கே? என்று கேட்டான். அவர் சொன்னார்.

அங்கா? அம்மாவிடம் சொல்லிட்டு வாரேன் சார் என்றான்.

சரிப்பா என்று அவர் தலையசைக்க, அவன் பேசி விட்டு போகலாம் சார். ஆனால் அங்கிருப்பவர்கள் தவறாக எண்ண மாட்டாங்களா? இரவு நேரம். நீங்க என்னை நம்புவீங்களா? கேட்டான்.

நம்பலைன்னா நான் உன்னை அங்கு அழைத்து சென்றிருக்க மாட்டேன். என் மருமகன் அர்ஜூனிடம் நான் அனுப்பியதாக சொல்லுங்க. அவர்கள் தவறாக எண்ண மாட்டார்கள் என்றார். அவள் அழுது சோர்ந்திருந்தாள். அவரிடம் சென்று சுந்தரம் கேட்டார். அவள் தலையை மட்டும் அசைத்தாள். கிளம்பு என்று அவள் காரிலே கிளம்பினர். அவன் அருகே சீட்டை சாய்த்து படுத்து தூங்கிக் கொண்டே வந்தாள். அர்ஜூனுக்கு சுந்தரம் போன் செய்ய..அவன் எடுக்கவில்லை. அப்பா நான் செய்து கொள்கிறேன் என்று படுத்திருப்பாள். சற்று நேரம் கழித்து செய்து பார்க்கிறேன்ம்மா என்றார் அவர்.

தம்பி, பத்திரம்ப்பா..மலைப்பாதை பார்த்து செல்லுங்கள்.

சார்..இரு நாட்களுக்கு முன் தான் சென்றேன் என்று காருண்யா தோழி சுவாதியை பற்றி கூறினான். சரிப்பா பார்த்து போங்க. போனவுடன் கால் பண்ணுங்க என்று அனுப்பி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

பாட்டி வீட்டில் அனுவை தூங்க வைத்து விட்டு ஸ்ரீ அர்ஜூன் அறைக்கு வந்தாள்.

சாப்பிட வரலையா? ஸ்ரீ கேட்க, அவன் கம்பெனி வேலையில் பிஸியாக இருந்தான். உள்ள வா ஸ்ரீ அழைத்தான். ஆனால் அவன் கண்களும் கைகளும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

வா..சாப்பிட்டு வந்து வேலைய பாரு அர்ஜூன். நேரமாகிறது. மணிய பாரு பதினொன்று ஆகப்போகிறது. கைகள் நிற்க அவளை பார்த்து ஒரே ஒரு மெயில் என்று கேட்டான்.

வந்து பண்ணலாமே?

நேரமாகுதுன்னு சொன்னேல்ல..என்னோட வொர்க் பண்றவங்களும் ஓய்வெடுக்கணும்ல என்று வேலையை பார்த்துக் கொண்டே ஸ்ரீயை கண்களால் ஆராய்ந்தான். அவளுடன் இருந்த புகைப்படம் அனைத்தையும் மறைத்து வைத்திருப்பான். அங்கிருந்த ஒரு செல்பில் அவள் கண் பதிய..கண்ட அர்ஜூன்.

இங்க வா ஸ்ரீ என்று அழைத்தான்.

நான் இங்கேயே இருக்கேன். நீ பாரு என்றாள்.

வான்னு சொல்றேன்ல என்று அவளை திரும்பி பார்த்தான். அவள் அருகே வரவும் அவளை இழுத்து அவனுடன் அமர்த்த, அர்ஜூன் ப்ளீஸ் என்றாள்.

ம்ம்..அப்புறம். ஏதாவது பேசு என்றான். அவள் அமைதியாக இருந்தாள். அவன் வேலையில் கவனமுடனும் அவளையும் அடிக்கடி டீஸ் செய்து கொண்டும் இருந்தான்.

அர்ஜூன் அனு முழிச்சிருவா? சீக்கிரம் வா..என்றாள்.

ம்ம். போகலாம். எல்லாரும் சாப்பிட்டாங்களா?

சாப்பிட்டாங்க.

நீ சாப்பிட்டியா?

எனக்கு பசிக்கலை. அர்ஜூன் நீ சாப்பிட வா..ப்ளீஸ் பாப்பா முழிச்சிட்டா ரொம்ப அழுவா. அர்ஜூன் போன் ஒலிக்க, அதை எடுத்துக் கொடு ஸ்ரீ?

அவள் எழுந்து எடுத்து அவனிடம் கொடுத்தாள். போனை பார்த்தவன்.. இவ்வளவு நேரம் முழிச்சிருக்காலா? யோசித்தவாறு போனை எடுத்தான்.

ஏய்..காரு, என்னடி இந்த நேரத்துல? டி போட்டு ஒரு பொண்ணுடன் அர்ஜூன் பேசும் போது ஸ்ரீக்கு ஒரு மாதிரி இருந்தது.

வெளிய வா..என்று சோர்வாக குரல் கேட்க, ஏதும் பிரச்சனையா? என்று எழுந்தான்.

வெளிய வா அழுத்தமாக காருண்யா அழைக்க, நான் சென்னையில்ல இல்லை.

பாட்டி வீட்டுக்கு வெளிய தான் இருக்கேன் என்று சத்தமாக அர்ஜூன்…வெளிய வா கத்தினாள்.

நோ..காரு கத்தாத. வாரேன். பாட்டிக்கு எதுவும் தெரியாது. அப்பாவை பற்றி பேசிய பின் வந்திருக்கலாமே? எதுக்கு இந்த அவசரம்? என்று வேகமாக கீழிறங்க, ஸ்ரீ அதிர்ந்து அவனை பார்த்து அவன் பின் கீழே வந்தாள். அனைவரும் காருண்யா சத்தத்தில் கீழே வந்தனர்.

கதவை அர்ஜூன் திறக்க, காருண்யா முதல் முறையாக மாமா.. என்று அவனை அழைத்து அணைத்துக் கொண்டாள். மற்றவர்கள் அதிர்ந்து பார்த்தனர். கமலி அவளருகே வேகமாக வந்தாள். அர்ஜூன் கவனம் அவளுடன் வந்த கௌதமை ஏறிட்டது.

நீங்க? உங்கள எங்கையோ? என்று யோசித்து தேவ் சாருடன் மண்டபத்துக்கு வந்தீங்கல்ல?

ம்ம்..நான் அவனோட ப்ரெண்டு தான். அர்ஜூன் இப்பொழுது தான் காருண்யாவை பார்த்தான்.

காரு..என்னாச்சு? எதுக்கு அழுற? கேட்டான். மாமாவை தவிர பேச்சே வரவில்லை. கமலியை பார்த்து அவரை அணைத்து, ஆன்ட்டி என்று அழுதாள்.

எதுக்கு அழுறம்மா? அவர் பதறி கேட்க, யாருடி நீ? சாமத்துல வந்து அழுதுகிட்டு இருக்க? கேட்டார் பாட்டி.

வாங்க சார் என்று கௌதமை உள்ளே அழைத்த அர்ஜூன் அவன் அம்மாவை பார்த்து விட்டு, பாட்டியிடம் சென்று அவரை அமர வைத்தான். அவர் காலடியில் அமர்ந்து பாட்டி, உன்னோட மூத்த பையன் சுந்தரத்தோட பொண்ணு என்றான் அர்ஜூன்.

சுந்தரமா? என்று கண்கலங்க அர்ஜூனை பார்த்து விட்டு, அவன் எங்க இருக்கான்? எப்படி இருக்கான்? கேட்டு விட்டு காருண்யாவை பார்த்தார். எழுந்து அவளிடம் சென்று, உன்னோட அம்மா எங்க? என்று கேட்க, அவள் அழுகை கூடியது.

கௌதம் எழுந்து..அவளை ரெஸ்ட் எடுக்க கூட்டிட்டு போங்க. இன்னும் சாப்பிடலை என்று சொன்னான்.

அவனை பார்த்து பாட்டி அவன் பக்கம் திரும்பினார். தாரி அவள கூட்டிட்டு போ என்று அர்ஜூன் சொல்ல.. அவள் கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்தாள்.

உச்சு கொட்டிய அர்ஜூன்..ஸ்ரீ என்று அழைத்தான்.

ம்ம்..நான் கூட்டிட்டு போறேன் என்று தாரிகாவையும் இழுத்து சென்றாள் ஸ்ரீ. அர்ஜூன் சொன்ன ஸ்ரீயில் அவளை நிமிர்ந்து பார்த்த காருண்யா அர்ஜூனை பார்த்தாள். ஏதும் கூறாமல் செல்ல..கமலி சாப்பாட்டை எடுத்துக் கொண்டு சென்றார்.

அறைக்குள் சென்ற காருண்யா இருவரையும் பார்த்து விட்டு, ஸ்ரீயை அணைத்து அழுதாள். அவள் ஏதும் கூறவில்லை. அமைதியாக தோளில் தட்டினாள். உள்ளே வந்தார் கமலி.

ஆன்ட்டி நான் கொடுக்கிறேன். நீங்க பாட்டியை பாருங்க என்றாள் ஸ்ரீ. கமலி அவளை பெருமையோடு பார்த்து விட்டு வெளியேறினாள். தாரிகா ஸ்ரீயை முறைத்துக் கொண்டிருந்தாள். சாப்பாட்டை ஸ்ரீ பிசைந்து ஊட்டி விட்டாள். தாரிகாவிற்கு ஸ்ரீ காருண்யாவிடன் நடந்து கொள்வது பிடிக்கவில்லை.

அர்ஜூனின் உரிமை பேச்சிலே கண்கலங்கி இருப்பாள் ஸ்ரீ. இப்பொழுது மாமா..என்ற காருவின் அணைப்பு அவளுக்கு கண்ணீர் வந்தது. கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு நின்று பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயை தான் அர்ஜூன் அழைத்தான். அவள் அழைத்து சென்றாள்.கீழே கௌதம் அவள் அம்மாவை பற்றி கூற, அர்ஜூனுக்கு தெரியாமல் இருந்திருக்கும். அவன் அம்மாவை பார்க்க அவர் அமைதியாக இருந்தார்.

அவன் எங்கடி? தனியா இருக்கானா? கமலி தலையசைத்தார்.

நான் பெத்த ரெண்டுமே சரியில்லை. ரெண்டும் அவங்க பிள்ளையை கவனிக்காம விட்டுருக்குக என்று திட்டு விட்டு, நாளைக்கு அவனை வரச் சொல்லுங்க.

பாட்டி..மாமா இப்ப வர வேண்டாம். இப்படியே தெரியாத மாதிரி காட்டிக்கிறீங்களா? இப்ப இருக்கிற பிரச்சனையில அவரையும் வர வச்சு. இப்ப காரு வந்ததே அவங்க கவனிச்சு இருப்பாங்களோன்னு கொஞ்சம் பயமா இருக்கு அர்ஜூன் சொல்ல,

யாரு? என்று கௌதம் கேட்டார்.

அவன் சொல்ல ஆரம்பிக்க, அம்மா..அம்மா.. என்று கதவை திறந்து அனு வந்தாள். அர்ஜூனை கீழே பார்த்து படியருகே அவள் வர, அனு..வராத. நில்லு என்று சத்தமிட்டுக் கொண்டே அர்ஜூன் வேகமாக படியில் ஏறினான்.

அம்மா, அம்மா, அம்மா என்று படியில் அனு கால் வைக்க ஸ்ரீ அவளை தூக்கி அணைத்தாள். உஃப் என்று பெருங்காற்றை வெளிவிட்டான் அர்ஜூன்.

அனுவின் முதல் அம்மாவிலே கவனித்த ஸ்ரீ காருண்யாவிற்கு ஊட்டிய கையோடு ஓடி வந்து விட்டாள். அவளது பதட்டத்தில் தாரிகாவும், காருண்யாவும் வெளியே வந்தனர்.

அனுவை ஸ்ரீ நிமிர்த்தி பார்த்தாள். அம்மா..எங்க போன? அவள் கேட்க, நான் இங்க தான் அனும்மா இருந்தேன் என்று ஸ்ரீ கண்ணீர் வெளியே வந்தது. அவளால் வெகு நேரம் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

எதுக்கும்மா அழுற?

வா..தூங்க போகலாமா? என்று காருண்யாவை பார்த்தாள். அவள் அதிர்ச்சியுடன் ஸ்ரீ..நில்லு, அந்த பாப்பா உன்னையா அம்மான்னு சொல்லுச்சி?

என்னை உங்களுக்கு தெரியுமா?

தெரியும். அர்ஜூன் உன்னை பற்றி தான் பேசிக் கொண்டே இருப்பான் என்று நீ..அர்ஜூன்..என்று இருவரையும் பார்த்தாள்.

ஏன். செய்தி பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லையா? பார்த்தால் விசயம் தெரியும் தாரிகா சினத்துடன் பேசி விட்டு, கையை கழுவிட்டு வா ஸ்ரீ என்று அனுவை தூக்கினாள்.

ஸ்ரீயும் அர்ஜூனை பார்த்து விட்டு சென்றாள். காருண்யா கண்ணீரை துடைத்து விட்டு கீழே வந்தாள். பாட்டி அவளிடம் வந்து, சாப்பிட்டியாம்மா? கேட்டார்.

சாப்பிட்டேன் என்று கௌதமை பார்த்தாள்.

சார்..சாப்பிட்டீங்களா? கேட்டாள்.

வாப்பா..சாப்பிடலாம். அர்ஜூன் நீயும் வா..கமலி அழைத்தார்.

சார் சாப்பிடட்டும் என்ற அர்ஜூன் “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கௌதமிடம் கையை கொடுத்தான். அவனும் கொடுத்தான்.

காருண்யாவிடம் கௌதம், சாரி நான் கோபத்துல பேச்சிட்டேன் என்றான்.

பரவாயில்லை சார் என்ற அவள் அர்ஜூன்..இங்க வா என்று அவனை பிடித்து இழுத்து அவனுடன் அமர்ந்து கொண்டு ஸ்ரீயை பற்றி கேட்டாள்.

கமலியும் தாரிகா அம்மாவும் பரிமாற கௌதம் சாப்பிட்டுக் கொண்டே இருவரையும் பார்த்தான்.

காருண்யா ஆர்வமுடன் ஸ்ரீயை எப்ப பார்த்த? எப்படி பார்த்த? அவ என்ன பேசினா? அந்த பாப்பா உங்க..அவள் வாயை திறக்க, அவள் வாயை கை கொண்டு அடைத்து..லூசு மாதிரி கேட்காத?

நான் அவளை பார்த்தே ஒரு மாசம் தான் ஆகுது?

அப்படின்னா பாப்பா? அச்சோ..அவளுக்கு கல்யாணம் முடிஞ்சதா? கேட்க, அர்ஜூன் கோபமுடன் அவளை முறைத்தான்.

அர்ஜூன்..சொல்லு. எல்லாத்தையும் சொல்லு கேட்டாள்.

கமலி அவளருகே வந்து அமர்ந்து, நீ ஓ.கே தான? கேட்டார்.

ம்ம். ஆ..ஆன்ட்டி நீங்க இருவரும் பேசிட்டீங்களா? வியந்து கேட்டாள். கமலி புன்னகைக்க..அர்ஜூன் சோ க்யூட்டா என்று கன்னத்தை கிள்ளி விட்டு எப்படியோ ஆன்ட்டிய புரிஞ்சுக்கிட்ட என்றான். கௌதமிற்கு புரை ஏறியது. எல்லாரும் அவனை பார்த்தனர்.

சார்..என்னாச்சு? என்று காரு எழுந்தாள். அதற்குள் தாரிகா அம்மா அவன் தலையை தட்டி விட்டு அருந்த நீரை கொடுத்தார்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று சொல்லி விட்டு காருண்யாவை பார்த்தான். காரில் வரும் போது அவளது சோர்ந்த முகத்தை கண்டவனுக்கு கஷ்டமாக இருந்தது. காருண்யா அர்ஜூனை அணைத்த போது கௌதமிற்கு உரிமையான ஒன்று தன்னை விட்டு போனது போல் இருந்தது.

அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காருண்யாவை பிடிக்க ஆரம்பித்தது. அர்ஜூனும் கமலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு காருண்யாவை பார்த்தனர். அவள் அவனுடன் சென்று அமர்ந்தாள். தாரிகா அம்மாவை பார்த்து, நீங்க? என்று கேட்டான்.

அர்ஜூன் அவரிடம் வந்து, என்னோட அம்மா என்று தோளில் கை போட்டான். அவர் கையை தட்டி விட்டு சமையலறைக்குள் சென்றான்.

காருண்யா எழுந்து அர்ஜூனிடம் வந்து, ஹேய்..தலைய காட்டு உனக்கு அடிப்பட்டிருக்கான்னு பார்க்கணும் என்று அவன் தலையை ஆராய்ந்தாள்.

ஓய்..என்ன? என்னை பார்த்தால் பைத்தியம் மாதிரி இருக்கா?

அப்படி தான்னு நினைக்கிறேன் என்று கமலியை பார்த்தாள்.

அவன் சொல்றது உண்மைதான்ம்மா. அவங்க தான் என் கணவரோட முதல் மனைவி என்றார் கமலி.

ஆன்ட்டி? என்று அவள் அர்ஜூனையும் கமலியையும் பார்த்தாள்.

வழிய விடு. அவங்க கோபமா இருக்காங்க போல என்று அர்ஜூன்.. அஞ்சும்மாவுக்கு என்னாச்சு? எதுக்கு இந்த கோபம்? அவரிடம் கேட்டான்.

அவர் வெளியே வந்து கௌதமிற்கு சாப்பிட எடுத்து வைக்க, ஆன்ட்டி…எனக்கு போதும் என்று அவன் எழுந்தான்.

இருப்பா..இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க என்று அவனை அமர வைக்க, அவன் அனைவரையும் பார்த்தான்.

அஞ்சும்மா..சொல்லுங்க என்று அர்ஜூன் பின்னாலேயே சுத்தினான். போதும் ஆன்ட்டி என்று கௌதம் அர்ஜூனை பார்த்து விட்டு கை கழுவ சென்றான். காருண்யா தாரிகா அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாரிகா அங்கே வந்தாள். அம்மா..என்று காருண்யாவை முறைத்துக் கொண்டே வந்தாள்.

என்ன? என்று அவள் அம்மா கேட்க, அம்மா இன்று உங்களுடன் படுத்துக் கொள்ளவா? எனக்கு தனியா படுத்தா தூங்கவே முடியலை என்று சமையற்கட்டிற்குள் நுழைய கௌதம் வெளியே வந்தான். இருவரும் இடித்துக் கொண்டனர். கௌதம் அவளை பார்த்துக் கொண்டிருக்க, காருண்யா இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

சாரி சார் என்று அவள் உள்ளே சென்று தண்ணீரை எடுத்தாள். பின் உணவை தட்டில் போட்டாள். அர்ஜூன் அவளிடம் வந்து நீ இன்னும் சாப்பிடலையா? கேட்டான்.

இது எனக்கு இல்லை. என்னோட ஸ்ரீக்கு என்றாள்.

என்னது? உன்னோட ஸ்ரீயா? என்று அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கினான்.

டேய் அண்ணா..ஒழுங்கா குடுத்திடு. இல்ல அவ சாப்பிடாமலே தூங்கிடுவா என்று தாரிகா கோபமாக பேசினாள்.

நாங்க சேர்ந்து சாப்பிடுவோம் என்று அவன் கூற தட்டை பிடுங்கினாள். இருவரும் தட்டை பிடுங்கி சண்டையிட, தட்டு பறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கௌதம் மீது கொட்டியது. அவன் பாவம் போல் அனைவரையும் பார்த்தான்.

ஏய்..என்னடி பண்றீங்க? என்று கமலி, அஞ்சனாம்மா, பாட்டி அவனிடம் வர காருண்யாவும் கோபமாக சண்டை போடணும்ன்னா வேறெங்காவது போங்க. கொஞ்சம் கூட மேனர்ச்சே இல்லை என்று தாரிகா காலை மிதித்து விட்டு கௌதமிடம் சென்று, வாங்க சார் என்று அவன் கையை பிடித்து சமையற்கட்டிற்குள் அழைத்து சென்று அவனது பாழான சட்டையை வாஷ் செய்து விட்டாள். கௌதம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் பெரியவர்கள் அனைவரும் அவளை கவனிப்பதை பார்த்து,

நீ விடு. நான் பார்த்துக்கிறேன் என்று அவனாக சுத்தம் செய்து கொண்டான். தாரிகா கண்கள் கலங்கியது. அவள் அமைதியாக உள்ளே சென்று வேரோரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்றான்.

ஏய்..அவள எதுக்கு திட்டுன? காருண்யாவை அர்ஜூன் திட்டினான்.

சார் மேல கொட்டிட்டா? அப்புறம் எதுக்கு ஒன்றுமில்லாத விசயத்துக்கு சண்ட போடுறீங்க? கேட்டாள்.

ஒன்றுமில்லாத விசயமா? இங்க பாரு அவ என்னோட தங்கச்சி. சும்மா கூட நாங்க சண்டை போடுவோம். அப்படியானாலும் சார் தான் கோபப்படணும்? உனக்கு எதுக்கு கோபம் வருது?

அப்பா சொன்னதால துணைக்கு வந்தார். அவருக்கு ஒன்றுன்னா நாம தான பார்த்துக்கணும்?

சார், உங்கள் மேல கொட்டுனது நான் தான் சார். சாரி சார் மன்னிச்சிருங்க என்று காருண்யாவை பார்த்து, எதையும் யோசித்து பேசு. அவள் அமைதியா தான் இருந்தா. நான் தான் வம்பு செய்தேன். எனக்குன்னு இப்ப இருக்கிறவங்கள யாரும் ஏதும் சொல்லக்கூடாது. அது என்னோட ஸ்ரீ, அனு, தாரிகா, என்னோட ப்ரெண்ட்ஸ் யாராக இருந்தாலும் சரி.

உன்னை மாதிரி நானும் தனியா இருந்து கஷ்டப்பட்டேன். உனக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன். உன்னால யாரும் கஷ்டப்பட்டாங்க. அப்புறம் நடக்குறதே வேற..என்று சினமுடன் அர்ஜூன் திரும்பி கௌதமை பார்த்தான். எல்லாரும் அவனையே பார்க்க, காருண்யா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே நின்றாள்.

கௌதமை பார்த்த அர்ஜூன், நீங்களும் டாக்டர் தான? கேட்டான்.

ஆமா..என்றான். டாக்டரா? என்று எல்லாரும் அவனை பார்த்தனர்.

சார். என்னோட வாங்க என்று கௌதமை அர்ஜூன் அழைத்து சென்றான். வினிதா அம்மா, அப்பா அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

கேரி, ஜாஸ்மின் இவர்களை அவர்கள் அறையின் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நிவாஸூம் ஜானும் எழவே இல்லை. தூங்கிக் கொண்டிருந்தனர்.

காரு..அவன் கோபத்தில் பேசிட்டான். எதுவும் நினைச்சுக்காத என்றார் கமலி. தாரிகா அம்மாவும் அவளிடம், நீ பேசு. உடனே பேசிடுவான் என்றார்.

அவளருகே வந்த பாட்டி, உனக்கு என் மேல கோபமாடா? அவரை பார்த்து அணைத்துக் கொண்டு அழுதாள். அர்ஜூன் கேட்டது சரி தானே? டாக்டர் பையன் தான் கோபப்பட்டிருக்கணும். உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்? கமலி கேட்டார்.

ஆன்ட்டி..

இங்க பாரு அர்ஜூனிடம் சொன்னதை என்னிடம் சொல்லாத. இந்த அப்பா காரணமெல்லாம் உனக்கில்லை. அது அந்த பையனுக்கும் உன் அப்பாவிற்கும் உள்ளது.

ஆன்ட்டி..நான் அர்ஜூனிடம் பேசிட்டு வாரேனே என்று பேச்சை மாற்றி விட்டு அவர்கள் சென்ற அறைக்கு சென்றாள்.

தாரிகா சாப்பாட்டுடன் கண்ணீருடன் வந்து ஸ்ரீயிடம் நடந்ததை சொன்னாள்.

விடு தாரி. அவ என்ன சொன்னா என்ன? அர்ஜூன் உன்னோட அண்ணன் என்பது யாராலும் மாற்ற முடியாது. இருக்கிற வரை பேச்சிட்டு போகட்டும். ஒரு வேலை அவளுக்கு அவரை பிடிக்குமோ? கேட்டாள் ஸ்ரீ.

அதான் அர்ஜூனை கட்டிப்பிடிச்சாலா? தாரிகா கேட்க, ஸ்ரீ அமைதியானாள்.

ஸ்ரீ..நீ அர்ஜூனிடம் காதலை சீக்கிரம் சொல்வது நல்லதுன்னு தோணுது. அவளுக்கு அர்ஜூன் முறைப்பையன். பார்த்தேல. கமலி மேம்மும் அவளிடம் உரிமையாக தான் பேசுறாங்க. அர்ஜூன் உன் விசயத்துல ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருக்கான் இருந்தாலும் அவள் உரிமை..உன்னை விட கொஞ்சம் அதிகம். பார்த்துக்கோ என்று சாப்பிட்டு தூங்கு என்று வெளியே வந்தாள்.

அதற்கு முன்னமே அர்ஜூன் கௌதமை ஸ்ரீ அனு இருக்கும் பக்கத்துக்கு அறைக்கு அழைத்து சென்றான். அவன் ஆடையை எடுத்து கொடுத்து விட்டு குளிச்சிட்டு மாத்திக்கோங்க. சாரி சார் என்றான்.

அந்த குட்டிப் பொண்ணு? கௌதம் கேட்க, பழக்கமான அக்கா பொண்ணு. என்னோட குட்டி ஏஞ்சலுக்கு நாங்க தான் இருக்கோம். என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் தான் இருப்பாள். முதல்ல ஆடையை மாத்துங்க..ரொம்ப குளுறா இருக்கு. நான் வந்துடுறேன் என்று அவன் வெளியேறினான். அவன் வேலையை அப்படியே போட்டுட்டு வந்திருப்பான். தாரிகாவிற்கு போன் செய்ய அவள் எடுக்கவில்லை. அவன் வேலையை கையிலெடுத்தான்.

கௌதம் குளித்து படுக்க வந்தான். பால்கனியை பார்த்து அங்கே வந்து வெள்ளியை தீட்டிய நிலவு, அதை அலங்கரிக்கும் நட்சத்திரங்களையும் அக்காற்றில் ரசித்துக் கொண்டிருந்தான்.

ஏய்..ஸ்ரீ..வாடி என்று சத்தம் கேட்டது. எங்கே வருகிறது என்று சுற்றி பார்த்தான். தாரிகா ஸ்ரீ அறையின் பால்கனியில் மேலே ஏற முடியாமல் நெளிந்த அந்த கம்பி சுவற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள்.

என்ன பண்றா? என்று கௌதம் பார்க்க, அதற்குள் ஸ்ரீ அங்கே வந்து தாரி, என்ன பண்ற? பதறி அவளை பிடித்து மேலே இழுத்தாள்.

ஏன் தாரி?

ஏனா? போன் செய்தால் எடுக்க மாட்டாயா? இந்நேரம் கதவை தட்டி மறுபடியும் எல்லார் தூக்கமும் கெட்டு விடும்ன்னு போன் செய்தேன். கட் பண்ற?

உன்னை யார் போன் செய்ய சொன்னது?

நான் பேசிட்டு போயிட்டேன். ஆனால் தூங்க முடியலை. நீ என்ன செய்ற? தூங்கிட்டாயான்னு பார்க்க போன் செய்தால் நீ எடுக்கல. பயமா இருந்தது. அதான் இப்படி? என்று தாரிகா அறையை பார்த்தாள்.

ஏய்..இன்னும் சாப்பிடலையா?

ஸ்ரீ கண்கலங்க..இல்ல தாரி. இது நாள் வரை அர்ஜூனை அந்த கொலைகாரனிடம் பேசுவதை நினைத்து பயந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்ப..பவி..என்று அழுதாள்.

அர்ஜூன் அப்படி யாரையும் விட்ற மாட்டான் தாரிகா சொல்ல.

தெரியும் தாரி. என்னோட அம்மாவும் அப்பாவும் கடைசி நிமிஷத்துல கூட என்னிடம் பவியை பற்றி சொல்லலை. பவியை பத்தி அவனுக்கு தெரிஞ்சுட்டா. எனக்கு நடந்த மாதிரி..ரொம்ப பயமா இருக்கு என்று அழுதாள்.

இல்ல ஸ்ரீ. அவ பாதுகாப்பா இருப்பா. அவளுக்கு ஒன்றும் ஆகாது. அர்ஜூனும் சீனியர் எல்லாரும் பார்த்துப்பாங்க. ஸ்ரீ..நீ எனக்கு ஒரு சத்தியம் மட்டும் செய்து கொடு. என்ன நடந்தாலும் அர்ஜூன் சொன்னது போல் யாரிடமும் சொல்லாமல் தனியே சென்று விடாதே. அர்ஜூன் கூறுவது போல் எனக்கும் கொலைகாரனை விட நீ ஏதும் செய்து விடுவாயோன்னு தான் பயமா இருக்கு.

நான் அர்ஜூனிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன். தாரி..நீ சொன்னதை யோசித்தேன். ஓர் முடிவு எடுத்திருக்கேன். இதுவரை நினைத்து முடியாத காரியத்தை செய்யப் போகிறேன். இனி பின் வாங்க மாட்டேன்.

என்ன?

நான் அர்ஜூனிடம் என் காதலை சொல்லப் போகிறேன் என்றாள் ஸ்ரீ.

ஹே..சூப்பர் ஸ்ரீ. இதை மட்டும் நீ செஞ்சிட்ட அர்ஜூன் ரொம்ப சந்தோசப்படுவான். நான் உனக்கு உதவுகிறேன்.

அப்புறம் தாரி. அவன் என்னை வெளிய போகவே விட மாட்டேங்கிறான். நாம காலையிலே வெளிய போயிட்டு வரலாமா? கேட்டாள்.

கண்டிப்பா. ரொம்ப ஹாப்பியா இருக்கு ஸ்ரீ என்று அணைத்தாள் தாரிகா. இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம். அவனுக்கும் ஏதோ மனதினுள் சந்தோசம்.

அர்ஜூன் ஸ்ரீ அறைக்கதவை தட்ட அவள் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்டிப்பா அர்ஜூனாக தான் இருக்கும் இப்ப சொல்றீயா? கேட்டாள்.

இல்ல தாரி ஒரு வாரமாகட்டும். இப்படியேவா காதலை சொல்வது? சும்மாலாம் என்னால சொல்ல முடியாது. அவன் மட்டும் தான் அழகாக பிரப்போஸ் பண்ணுவானா? நான் அவனை விட அவனுக்கு பண்ணுவேன்.  பசங்க காதலை சொல்றதை விட பொண்ணுங்க சொன்னா தான் நல்லா இருக்கும். நாளாகட்டும். ஆனால் செய்யாமல் விட மாட்டேன்.

நீ சீக்கிரம் கிளம்பு தாரி. போய் தூங்கு என்று கதவை பக்கம் பார்க்க சத்தம் கேட்கவில்லை. தாரிகா மெதுவாக கதவை திறந்து எட்டி பார்த்தாள். யாருமில்லை என்றவுடன் ஸ்ரீ நான் கிளம்புகிறேன்னு அவள் சென்று விட்டாள். கௌதம் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவனது அறைக்கதவை தட்டும் ஓசை கேட்டு கதவை திறந்தான்.