அத்தியாயம் 95

மறையும் காயத்ரியும் வயல்வெளிகளுக்கு இடையே அமைந்த மோட்டார் அறைக்குள் ராக்கியை தேடி உள்ளே சென்றனர். உடனே அறைக்கதவு அடைக்கப்பட்டது. அவ்வறை இருட்டாக இருந்தது. திடீரென அறைக்கதவு அடைபடவும் பயத்தாள் காயத்ரி. இருட்டை பார்த்து மீண்டும் பயந்து மறையை கட்டிக் கொண்டாள். அவன் அதிர்ந்து நின்றான்.

ப்ளீஸ்..நான் போகணும். என்னோட பையனை விட்டுரு. உன்னை பற்றி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று அழுதாள் காயத்ரி. அவளை நிமிர்த்தி அவன் போனை எடுப்பதற்குள் ஓர் மூலையில் அமர்ந்து, என்னை ஏதும் செய்யாத..நான் ராக்கியிடம் போகணும் என்று அழுதாள்.

அவளுக்கு அவள் கணவனுடன் நடந்தது நினைவு வர, அவன் அதற்கு..பையனிடம் சென்று என்ன செய்யப் போகிறாய்? எத்தனை பேருடன் இருந்தாலும் உன்னுடனான சுகமே தனி தான் வா..வா..என்று அவன் அவளை கட்டாயப்படுத்தி இருப்பான். அதில் காயத்ரி அலறினாள். என்னை ஏதும் செய்யாதே என்று அவள் அலற…வெளியே ஊரார் இதை கேட்டு கதவை திறந்தனர்.

மறை அதிர்ந்து அவளை பார்த்து தள்ளி நின்றான். மறை அவளை கூர்ந்து கவனிக்க..அவள் நடிக்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அன்று அவளை ஒருவன் நெருங்கிய போது இருந்த அதே பதற்றம். அப்படியானால் என்னை அவன் என்று நினைத்து விட்டாலோ என்று நினைத்தான்.

அவளை நெருங்கிய பெண்களை பார்த்து, அத்தை அவரை பாருங்க. அவர் என்னை கஷ்டப்படுத்துகிறார். என்னோட ராக்கி எங்கே? என்று கேட்டாள். அனைவரும் புரியாமல் இருக்க, அந்த பொண்ணு அவ புள்ளைய தேடுது என்றார் ஒருவர்.

காயத்ரியை எழ வைத்து அவள் நடக்க, நேற்று பார்த்த அவனை பார்த்து அவள் கால்கள் நின்றது. அவன் நேராக மறையிடம் சென்று அவனை அடிக்க, யார் என்ன சொல்லுவாங்க? காயத்ரி அலறிய சத்தம். உள்ளே மறை தானே இருந்தான். அவனை தவறாக ஊரார் பேச காயத்ரி விழித்துக் கொண்டாள். நிறைய ஆட்கள் இருக்க பயம் விலகி தெளிவானாள். அவன் அடித்ததில் மறைக்கு இரத்தம் வடிய காயத்ரியை பார்த்து யோசனையுடன் நின்றான். அத்தை..என்று ஊரார் முன் பேசியதை நினைத்துக் கொண்டே அடிவாங்கினான். விசயம் ஊரில் அனைவருக்கும் பரவ, வெற்றி, பிரதீப், வேலு, அவன் நண்பர்கள், அர்ஜூன், அகில், கவின், தாரிகா, பவி, ஸ்ரீ அங்கு வர, பெரியத்தை கையில் ராக்கியுடனும், கமலி, அஞ்சனாம்மா..எல்லாரும் அங்கு கூடினர்.

அவன் அடிக்க, வேலுவும் அவன் நண்பர்களும் மறையிடம் வந்தனர்.

அவனை எதுக்கு அடிக்கிற? அவன் தவறாக நடந்து கொள்ள மாட்டான் வேலு சொல்ல, ஊரார் பக்கம் திரும்பிய அவன்..சொல்லுங்க உங்களுக்கு அந்த பொண்ணு அழுற சத்தம் கேட்டது தானே?

வெற்றியை பார்த்து ஆமாய்யா..அந்த பொண்ணு கத்துச்சு. முதல்ல இவன் சொல்லி தான் வந்தோம். திடீர்னு அலறும் சத்தம் கேட்டது.

காயத்ரி மறையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அமைதியாக ஏதும் பேசாமல் நின்றான்.

டேய்..சொல்லுடா வேலு மறையிடம் சத்தமிட்டான். காயத்ரியை பார்த்து, நான் தான் தப்பு செய்து விட்டேன் என்றான்.

காயத்ரி அவனிடம் மெதுவாக தளர்வுடன் வந்தாள். என்ன சொன்னீங்க? கேட்டாள்.

நான் தான் தப்பு செய்தேன் என்று மறை அழுத்தமாக கூறினான்.

ம்ம்..பார்த்தீங்களா? அவனே ஒத்துக்கிட்டான். விடாதீங்க. அவனுக்கான தண்டணையை கொடுங்க அவன் சொல்ல.. நான் அவரிடம் பேசணும் என்றாள் காயத்ரி.

பெரியத்தை உள்ளே வந்து, ராக்கி.என் கண்ணுல..யாரு உன்னை துக்கிட்டு போனது? சொல்லுய்யா? என்று ராக்கியிடம் கேட்டான். அவன் அந்த பொறுக்கையை கை காட்டினான்.

அய்யா..நான் பேசலாமா? கேட்டார் பெரியத்தை. பிள்ளைய காணோம்ன்னு தான் நாங்க தேடினோம். பையனை தேடுறேன்னு பொண்ணு ரொம்ப தூரமா போயிட்டா. அதனால நானும் அந்த பக்கம் வந்த போது மறையை காட்டி இவருடன் தேட போகவதாக நான் நினைத்தேன் அவர் சொல்ல.

ஆமா..இவருடன் சேர்ந்து புள்ளையை தேடப்போறதா சொன்னா? அவரும் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாரு. ஆனால் அவங்களுக்கு வந்த செய்தியே பொய்தான். ராக்கி பையனை கமலி தான் ரோட்டோரமா மயங்கி கிடந்ததை பார்த்தாங்க. ஹாஸ்பிட்டல் சேர்த்து விசயம் தெரிஞ்சு இங்க வந்தோம். ஆனால் அந்த புள்ள தப்பு செஞ்ச மாதிரி தெரியலை..

பையனுக்கு ஒன்றுமில்லையே என்று காயத்ரி பதற, அவளிடம் வந்து பெரியத்தை பிள்ளையை கொடுத்தார். மறை ராக்கியை கண்களால் அளவெடுத்தான்.

ராக்கி மறையை பார்த்து, ஏன் ப்ரெண்டு இங்க நிக்குற? நான் உன்னை தேடினேன். அவன் தான் என்னை தூக்கிட்டு போனான் என்று மறையிடம் அவன் சொல்ல, அவன் காயத்ரியை பார்த்து பேசாமல் நின்றான்.

நீ பேச மாட்டியா ப்ரெண்டு? அவனை மாதிரி உனக்கும் என்னை பிடிக்காதா? நீயும் என்னை அடிப்பியா? என்று கேட்க மறை உள்ளம் உருக கண்ணீருடன் ராக்கியை அணைத்து, நான் சொன்னேன்ல உன்னை யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் சொல்ல சொன்னேனே?

ஆமா ப்ரெண்டு. ஆனா நான் எப்படி சொல்றது? எனக்கு உன் வீடு தெரியாதே?

மறை அவனிடம் பேசிக் கொண்டிருக்க, அய்யா..குற்றவாளி இப்படி யாரிடமும் பேசக்கூடாது என்றான் அவன்.

நீ எதுக்கு அந்த பையனை தூக்கிட்டு போன? வெற்றி கேட்டார்.

நானா? நான் எதுக்கு அய்யா..இந்த பையனை தூக்கிட்டு போகணும்.

நேற்று நீ நினைத்தது நடக்காததால் வேலு சொல்ல..பிரதீப் மறையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அய்யா..எனக்கு இவர் மீது தான் சந்தேகமாக உள்ளது அர்ஜூன் கூற, எப்படி சொல்றப்பா? ஒருவர் கேட்டார்.

நேற்று அவனால் அக்காவை அடைய முடியவில்லை. காரணம் மறை அண்ணா. ராக்கியை கடத்தியதும் இவர் தான். அக்காவும் அண்ணாவும் இருந்த அறையை காட்டியதும் இவர் தான். அப்படினா..இவர் தான் இருவரையும் ஏமாற்றி வர வைத்து அறையில் வைத்து பூட்டி பழி போடுகிறார் அர்ஜூன் கூற,

எனக்கு ஏதுவும் தெரியாது? எனக்கு அந்த புள்ளைய புடிச்சது தான். ஆனால் நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் அறையில் அந்த புள்ளை கத்தியது எதுக்காக? அவன் மடக்க, அர்ஜூனாலும் ஏதும் சொல்லவில்லை.

ராக்கியை பெரியத்தையிடம் கொடுத்த மறை, நான் தான் தப்பு செய்தேன்னு ஒத்துக்கிட்டேன்ல. எனக்கான தண்டனையை கொடுங்க என்று வெற்றி முன் வந்து அவரை பார்த்தான்.

அவனை பார்த்து பிரதீப் பயங்கரமாக சிரித்தான். டேய்..முட்டாள், தப்பு செய்றவனால ஒருவரிடம் நேருக்கு நேர் நின்று பேச முடியாது. அதுவும் நீ அப்பாவை பார்த்து என்று மேலும் அவன் சிரித்தான்.

ஆமா, இதுவும் சரியா தான இருக்கு வெற்றி நண்பர் கூறினார். மறை பிரதீப்பை பார்த்து முறைத்தான். காயத்ரி பேசும் முன், அண்ணா.. என்னை காப்பாற்ற நினைக்கிறார் மறை வெற்றியிடம் கூற, அவர் பிரதீப்பை பார்த்தார். அவன் கேசுவலாக நின்றான்.

எல்லாரும் நிறுத்துங்க. நானே சொல்றேன். எனக்கு என்று காயத்ரி தொடங்க, மறை அவளருகே வந்து அவள் வாயை பொத்தினான்.

ஏதோ உள்ளது என்று அனைவருக்கும் புரிய, ராசா..வேண்டாய்யா. தண்டனை பெருசா இருக்கும். இங்க எல்லாருக்கும் தெரியும் என்று மறையிடம் பர்வதப்பாட்டி கூற,

தண்டனை பெருசா இருக்குமா? என்று மறையை பார்த்தாள் காயத்ரி.

பாட்டி, நீ வீட்டுக்கு போ என்றான் அவன்.

ராக்காயி பாருடி. இப்ப கூட என் பேச்சை கேட்கவே மாட்டிங்கிறான் அவர் கூறி புலம்பினார்.

மறையை பார்த்து அவனிடம் வந்து, ஏன் நடக்காததை நடந்ததுன்னு சொல்றீங்க? என்ன தண்டனை? கேட்டாள். அவன் மௌனம் காத்தான்.

நடக்கலையா? அது எப்படி இருட்டு அறையில நடக்காம போகும்? நீ தான் அலறினாயே? அவன் கேட்க,..

பொறுக்கி ராஸ்கல். எல்லாத்துக்கும் காரணம் நீ தான். நீ கதவை லாக் செய்ததை நான் பார்த்தேன் காயத்ரி கூறினாள்.

பார்த்தியா? ஒரு பெண் கேட்க, பார்த்தேன் என்றவள் இருட்டு என்றால் எனக்கு பயம் வந்ததே என் கணவனால் தான். அதனால் தான் அலறினேன். அவர் என்னை ஓர் அறையில் வைத்து பூட்டி கஷ்டப்படுத்துவார். அவர் வந்து விட்டாரோ என்ற பயத்தில் தான் அலறினேன். ஆனால் இவர் என் பக்கம் கூட வரலை. இவருக்கு எதுக்கு தண்டனை? கேட்டாள்.

மறைக்கும் இப்பொழுது தான் புரிந்தது?

நீ எதுக்குடா அந்த பொண்ணை பேச விடாம தடுத்த? பிரதீப் கேட்டான்.

அண்ணா..நேற்று நடந்ததை நினைத்து பயந்துட்டாங்கன்னு தோணுச்சு. ஆனால் அவங்க பேசியதை கேட்டவர்கள் குழம்பி நின்றனர். இவங்க இதை சொல்லி அவங்கள பைத்தியம்ன்னு சொல்லிடுவாங்களோன்னு நினைச்சு தான். நான் நடந்ததை கூறலை என்று காயத்ரியை பார்த்தான். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

ஏம்மா..அவனை எப்ப பாரு முறைச்சு முறைச்சு பார்க்காதன்னு அவன் நண்பன் கூற, அங்கிருந்தவர் பேச தொடங்கினர்.

இருட்டுன்னா பயமாம். ஆனால் ஒரே அறையில இருந்திருக்காங்க. எதுவுமே நடக்கலையாம்..பல குரல்கள் பேச, வெற்றி தன் நண்பர்களை பார்த்தார்.

இப்ப என்னம்மா சொல்ற? காயத்ரியை பார்த்து வெற்றி நண்பர் கேட்டார்.

நானும் கிராமத்து பொண்ணு தான். எனக்கும் கிராமத்து கட்டுப்பாடுகள் தெரியும். ஆனால்..நான் என்ன செய்வது?

நீ அந்த பையனையே கட்டிக்கிறியா? கேட்டார் வெற்றி. காயத்ரி தயங்கினாள். மறையிடம் கேட்ட போது, அது அவங்க விருப்பம் அய்யா என்றான்.

ஆஹா..சரியான வாய்ப்பு என்று பெரியத்தை அவர்களிடம் என்னோட மருமக இப்ப தான் என் பிள்ளைய இழந்துட்டு நிக்கிறா? என்று பர்வதத்தை பார்த்தார்.

ஆமாம். உன் பிள்ளையாம் பிள்ளை. அந்த புள்ளையால் இந்த பொண்ணு பயந்து பயந்து வாழ்ந்துச்சு. நம்ம ஊர்ல மட்டும் உன் புள்ள இருந்தா அடிச்சு பத்திருப்போம் என்றார்.

பெரியத்தை மனதில் சுருக்கென வலித்தாலும் தன் மருமகள் வாழ்க்கைக்காக பேசினார். அதுக்காக அவன் போய்..ரெண்டு நாள்ல கல்யாணமா?

இப்ப அதுனால என்ன? இளவு வீட்ல நல்ல விஷேசத்தை நடத்தலாம்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. நம்ம வெற்றிய பாரு சரியில்லாத பொண்டாட்டியை இத்தனை வருசமா சமாளிச்சு..இப்ப ஆசைப்பட்டவளே பொண்டாட்டி செத்த மறு நாளே கட்டிக்கிட்டாரு என்றது கிழவி.

பிரதீப் அவரை பார்த்து முறைக்க, வெற்றிக்கும் ஒருமாதிரி இருந்தது.

ஏய்..கிழவி, நம்ம வெற்றிக்கு பஞ்சாயத்து வச்சி தான பேசி முடிச்சோம்.

ம்ம்..அது போல என் பேரனுக்கும் முடிக்கலாம்ல தவறில்லைல? கிழவி கேட்க,

இந்த பொண்ணு ஒத்துக்கணுமே? ஒருவர் சொல்ல, அஞ்சனா காயத்ரியுடம் வந்து, ஊர்ப்பேச்சை நீ கண்டுக்காமல் இருக்கலாம். ஆனால் உன்னோட புள்ளய யோசித்து பாரு.

அவனுக்கு இங்க நடக்குறது முழுசா தெரியலைன்னாலும் உங்கள பற்றி தவறா பேசுவது நல்லா புரியும். அதனால் பார்த்து முடிவெடும்மா..

ராக்கியை தூக்கிய காயத்ரி யோசனையுடன் நின்றாள். அம்மா..என்னாச்சு? எதுக்கு எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க? நாம தப்பு செஞ்சுட்டோமா?

இல்லடா ராக்கிம்மா .நாம தப்பே செய்யலை. உன்னோட அம்மா தப்பு செய்வேனா? என்று மறையை பார்த்து விட்டு, நாம இனி உன்னோட ப்ரெண்டு வீட்ல இருக்கலாமா? என்று கேட்டாள்.

சரிம்மா என்று மறையிடம் தாவி..நாங்க உன்னோட வீட்டுக்கு வரவா ப்ரெண்டுன்னு கேட்டான்?

வரலாமே? உன்னோட அம்மா தான் ரொம்ப யோசிக்கிறாங்க? ஆனால் என் வீட்ல ஏ.சி, டிவி இல்லை. குட்டி வீடு தான் நீங்க இருப்பீங்கள? கேட்டான்.

பெரியத்தை தன் பர்ஸை திறந்து, நிறைய கிரிடிட் கார்டை மறையிடம் கொடுத்தார்.

என்னை மன்னிச்சிருங்கம்மா. எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் இருக்கும் சின்ன வீட்ல தான் அவங்க இருக்கணும். இல்லைன்னா..இந்த கல்யாணத்தை என்னால் ஏத்துக்க முடியாதும்மா என்றான்.

அதனால என்னப்பா?

இல்லம்மா. வாழ்க்கையில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றமும் வரும், தாழ்வும் வரும். எல்லாத்தையும் இருவரும் சேர்ந்து தான் கடந்து செல்லணும். இதற்கு தயாராக அவங்க இருந்தாங்கன்னா என் கையை பிடிக்கலாம் என்று கையை நீட்டினான்.

காயத்ரியும் அவனிடம் வந்து கையை கோர்த்துக் கொண்டாள். நண்பர்கள், அர்ஜூன், அகில் அனைவரும் வாழ்த்தை கூற, பர்வதம் தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த தாலியை மறை கையில் கொடுத்து கட்ட சொன்னார்.

என் பேத்திக்கு கட்டுவான்னு எடுத்து வச்சேன். இப்ப உனக்கு தான் அமைஞ்சிருக்கு. என் பேரனிடம் பணம் அதிகமில்லாமல் இருக்கலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சிய குணம் இருக்கு என்றார் அவர்.

மறை தாலியை கட்ட காயத்ரி அதை ஏற்றுக் கொண்டாள். மறை முகத்தில் அளவில்லா புன்னகை. வேலு அவனிடம் வந்து, முந்திட்டியே மச்சி..என்றான். அவன் புன்னகைத்தான்.

இங்க பாருங்க சின்னதுக கல்யாணம் நல்லநாளா பார்த்து ஊராருக்கு  சாப்பாடு போடணும் நடுத்தர வயதுடைய பெண்மணி கூற, சோத்து மூட்ட இதுலையே இரு..என்றார் அவர் கணவர்.

இன்பா காப்பாற்றிய பெண் அங்கே ஓடி வந்து, மறையை பழி வாங்க நினைத்தவனை கை காட்டி..என் குழந்தைக்கு அப்பா என்று கூற பெரிய பஞ்சாயத்திட்டு அவனை அந்த பொண்ணுக்கே முடித்து வைத்தனர்.

இன்று திருமணம் நடக்கக்கூடாது. நல்ல நேரம் இருந்ததால் செஞ்சிருகோம். புள்ளைகள பத்தி வதந்தி அதிகமாகும். அதனால் நடத்தினோம். ஆனால் நாளை நல்ல நாள். காலையில் பத்தரை மணிக்கு மாலை மாற்றி சம்பிரதாய முறைப்படி வச்சிக்கலாம் வெற்றி போனில் தேதி அனைத்தையும் பார்த்துக் கூறினார்.

பின் சம்பந்தப்பட்டவர்களிடம் சரி தானே? என்று கேட்டார். மறையும் பெரியம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சரி என்றனர். ஆனால் அவனோ..எங்களுக்கு இதில் விருப்பமில்லை. வாடி..என்று அவன் முறைத்துக் கொண்டு அவளை இழுத்தான்.

டேய்..நான் உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு முடிவெடுத்தேன்.

வாழ்க்கையாம் வாழ்க்கை என்று அவன் முணுமுணுத்தான். அங்கு வந்த தீனா அவனை பார்த்து, அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டிட்ட.. இதுக்கு மேல எந்த பொண்ணு மேலாவது உன்னோட கண்ணு பட்டு உன்னை கொல்லாம விட மாட்டேன் என்று மிரட்டினான். அவன் தீனாவை முறைத்து பார்த்தான்.

உன்னை கஷ்டப்படுத்துனான்னா சொல்லும்மா என்று மறையை பார்த்தான். கங்கிராட்ஸ் டா..என்று அவனது தோளில் தட்டி விட்டு..அண்ணா என்று பிரதீப்பிடம் வந்து கிசுசிசுத்தான். இருவரும் அர்ஜூனை பார்த்தனர்.

என்னண்ணா? அர்ஜூன் கேட்க, யுவர் ஆனர்..இந்த தம்பிய மட்டும் நாங்க கூட்டிட்டு போறோம் என்று வெற்றியை பார்த்து கேலியுடன் கூறி விட்டு தீனா அர்ஜூனை இழுத்து செல்ல பிரதீப் அவர்களுடன் சென்றான்.

சக்தி நீ போ..என்று அவனை அனுப்ப, அவன் அந்த பொண்ணை இழுத்து சென்றான். அந்த பொண்ணோட பெற்றோர்கள் கவலையுடனும் பயத்துடன் மகளை பார்த்தனர்.

சரிப்பா..நீங்க இருவரும் இன்று அவரவர் வீட்ல இருங்க. நாளை காலை அனைத்து சடங்குகளும் முடிந்து பொண்ணு குட்டிப்பையனோட நம்ம மற வீட்டுக்கு வரட்டும் என்றார் ஒருவர்.

கல்யாணத்துக்கு முந்தைய நாள் எங்க வழக்கப்படி..நலங்கு, மெகந்தி விழா நடக்கும். இன்று அதை நடத்திய பின் மாப்பிள்ளை பொண்ணை மணக்கோலத்தில் தான் பார்க்கணும் என்றார் பெரியத்தை.

அதெல்லாம் வேண்டாமே? மறை சொல்ல..கூட்டத்தில் ஒருவர் சம்பிரதாயப்படி அனைத்தும் நடந்தால் தான் மணவாழ்க்கை நன்றாக அமையும் என்றார்.

சும்மா இரு பேரான்டி. எல்லாமே நடக்கடும்ன்னு சொன்ன பர்வதம்மா, என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க. நான் தயார் செய்றேன் என்றார். ஊரார் முன் அனைத்தையும் அவர் சொல்லி விட்டு..என் மருமகளை கல்யாண கோலத்தில் கூட நான் பார்த்ததில்லை. மாலையுடன் தான் பார்த்தேன். ஆனால் அவளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடச்சிருக்கு என கண்கலங்கினார்.

வெற்றி அவரிடம்..என்னால் வர முடியாது. பெரியவங்க வேற யாரையாவது வச்சு பார்த்துக்கோங்க என்றார்.

மறை தயக்கத்துடன், நீங்க இல்லாம எப்படி நடத்துறது?

அதனால என்னப்பா? நடத்துங்க அதான் இவங்க எல்லாரும் இருக்காங்கல்ல. நம்ம பையன் பார்த்துக்கோங்க என்று வெற்றி கிளம்பினார். காயத்ரி சோர்வுடன் நின்று கொண்டிருந்தாள்.

எல்லாருமே வாரோம். நேரத்தை மட்டும் சொல்லுங்க. எனக்கு மற மேல நம்பிக்கை இருக்கு. அவன் அந்த பொண்ணை ஏதும் செய்திருக்கமாட்டான். ஆனால் அனைவர் பேச்சுக்காக மட்டுமல்லாமல் இருவருக்கும் சம்மதம் என்பதாலும் அந்த பொண்ணே அவன் மீது தவறில்லை என்பதாலும் ஒத்துக் கொண்டோம். இல்லை நடந்ததே வேறாகி இருக்கும் என்று ஒருவர் கூறி அனைவரையும் கலைத்து விட்டார்.

காயத்ரி களைப்புடன் என்னால் இதுக்கு மேல நிற்க முடியல என்று அமர சென்றாள்.

எங்க உட்கார போற..நிறைய வேலை இருக்கு என்று பெரியத்தை அவளிடம் வந்தார்.

அத்த ப்ளீஸ். கொஞ்ச நேரம் தூங்கலாமா? என்று கேட்டாள்.

தூங்கணுமா? மாலையில் உங்களுக்கான விழா என்றார்.

மாலை நானே தயாராகிடுவேன்..

சும்மாலாம் தயாராக முடியாதும்மா. உனக்கு ஆடை வாங்கணும். நகை மற்ற சாமான்கள் வாங்கணும். ஃபேஸ் வாஷ், மேக் அப் பண்ணணும்.

அத்தை..பையனை வச்சுகிட்டு இதெல்லாம் எதுக்கு?

பையன் இருந்தா என்ன? கல்யாணமென்றால் இதெல்லாம் இருக்கும்மா.

அவள் மறையை பார்க்க அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தம்பி, நீங்க வீட்டுக்கு போங்க. நாங்க வாரோம் பேசணும் என்றார் அவர்.

அவன் பைக் அருகே அவன் செல்ல..இருடா என்று வேலு அவன் பைக்கை எடுத்து இருவரும் கிளம்பினார்கள். காயத்ரி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாம்மா..என்று ஆட்டோக்காரர் ஒருவர் காயத்ரியை ஏற்ற, அவளுடன் பெரியத்தை ராக்கியுடன் வீட்டிற்கு சென்று அவளை விட்டு அர்ஜூனை வரச் செய்தார்.

அர்ஜூனிடம் நான் கூறும் பொருட்களை மாப்பிள்ளையை அழைச்சிட்டு போய் வாங்கிட்டு வா..என்று நிறைய பொருட்களை எழுதி பணத்திற்கு அவரது கிரிடிட் கார்ட்டை பயன்படுத்த சொல்லி கொடுத்தார். வா..நானும் அவரை பார்க்கணும் என்றார்.

அர்ஜூன் விசாலாட்சியிடம் பாட்டி, வினிதா அக்கா இறந்திருக்காங்க. நாம கலந்துக்கலாமா? கேட்டான்.

அவள் மட்டும் தான உனக்கு அக்கா..நான் சும்மா பேருக்கு தான என்று காயத்ரி அறையிலிருந்து சத்தம் கொடுத்தாள்.

அதுக்கில்லைக்கா..அக்கா இறந்தது தீட்டுல்ல..

அப்படின்னா..காயத்ரி புருசனும் செத்து தான் போனான். மாப்பிள்ளை கட்டுன தாலிய தூக்கி போட்றலாமா? பெரியத்தை சினத்துடன் கேட்டார்.

இல்லம்மா. அக்கா சந்தோசமா இருக்கணும்ன்னு தான் கேட்டேன் என்றான்.

சரி..விடுங்க. அஜூ..ஸ்ரீயை எங்க காணோம்?

அவ உங்க கூட வரலையா?

பொண்ணுங்க யாருமே வரலையே?

அஜூ என்னோட பொண்ணுங்க இருவருமே இருக்காங்க. நிவியா? கிவியா? அவன் இருக்கான் கேளு என்றான்.

அம்மா..இருங்க. நான் பார்த்துட்டு வாரேன் என்று நிவி..என்று அழைத்துக் கொண்டே படியேற, அவன் கையில் போனை வைத்து பாட்டு கேட்டுக் கொண்டே குஷியுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

அர்ஜூனை பார்த்து, ஹாய்டா மாமா..நிவாஸ் அழைக்க, மாமாவா? அர்ஜூன் வியந்து பார்த்தான்.

ஆமா. ஸ்ரீயை நீ கட்டிக்கிட்டா நீ மாமா தான? நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என்னோட ஆரு கிஸ் பண்ணாளே? என்றான்.

கிஸ்ஸா?

எல்லாத்துக்கும் எதுக்கு வாய புளக்குற மாமா?

டேய்..அரை மெண்டல் ஸ்ரீய காணோம்ன்னு பதறி வந்தா..நீ ஜாலியா இருக்கேன்னு சொல்ற?

தொலைஞ்சு போக அவ என்ன அஞ்சு வயசு பிள்ளையா? எங்க அந்த முட்டக்கன்னியோட தான் சுத்துவா?

யாரடா சொல்ற? மாமா..உன்னோட தங்கச்சிய தான் சொல்றேன்.

டேய்…நீ ஒரு மார்க்கமா தான் இருக்க. பார்த்து அவகிட்ட நேரா எதையும் சொல்லி வாங்கி கட்டிக்காத? எனக்கு நிறைய வேலை இருக்கு. காயத்ரிக்காவை பார்த்தாயாடா?

இல்லையே?

பையனை தேடியது கூட உனக்கு தெரியாதா? குட்டிப்பையனை காணோமா? அவன் அதிர, நீயெல்லாம் மனுசனடா அங்க அக்கா கழுத்துல தாலியே ஏறிடுச்சு..

தாலியா?

டேய்..இன்று மாலை சங்கீத் விழா இருக்கு. நிறைய வேலை இருக்கு. இவளுக வேற எங்க போய் தொலைச்சாலுகன்னு தெரியல என்று என்னமும் செஞ்சு தொலை என்று நிவியை விட்டு, அர்ஜூன் கீழ வர,

அஜூ..என் பேத்தி எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா? விசாலாட்சி கேட்க, ஆமாம் உன்னோட பேத்திய நான் தான் இடுப்புல தூக்கிக்கிட்டு இருக்கேன் என்று முணுமுணுத்துக் கொண்டே கீழே வந்தான்.

அர்ஜூன்..என்று அனு அவன் முன் வர, ஏஞ்சல் எங்க போனா?

தெரியல..அர்ஜூன் காணும் என்றாள்.

இரு. நான் பார்த்துட்டு வாரேன் என்று அவன் கிளம்ப, அரை மணி நேரத்தில் நீ இங்க இருக்கணும் என்றார் பெரியத்தை. காயத்ரி தூங்கிக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் கிளம்பினான். பிரதீப், தீனா அர்ஜூனை அழைத்து சென்ற போது ஸ்ரீயும், தாரிகாவும் மெதுவாக வந்து மறைந்து நிற்க அவர்கள் பின் ஜானுவும் துகிராவும் வந்து நின்றனர்.

பவி ஸ்ரீயின் அக்கா என்ற உண்மை அவர்களுக்கும் தெரிய வந்தது. அர்ஜூன், பிரதீப், தீனா சென்ற பின் ஜானு துகிரா அண்ணாவிடம் கடைக்கு போயிட்டு வாரோம் என்று கூறி விட்டு ஸ்ரீயிடம் வந்தனர். கடந்த காலத்தில் அகில் தள்ளி ஸ்ரீ கீழே விழுந்த பாலத்தில் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஸ்ரீ பார்த்துக்கலாம் டென்சன் ஆகாதே..தாரிகா அவளிடம் பேச மற்ற பொண்ணுங்க ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தனர். தூரத்திலிருந்து பிரகதி ஸ்ரீயை கவனித்துக் கொண்டிருந்தாள்.

பாரு தாரி, இந்த அர்ஜூன் எதையும் சொல்லவே மாட்டேங்கிறான்.

உனக்கு மாதிரி உன் அக்காவுக்கும் ஏதாவது ஆகி விட்டால்..அதனால் தான் வெளிய தெரியக்கூடாதுன்னு..

அக்கா..உங்களுக்கு என்ன ஆச்சு? ஜானு கேட்க, ஜானு அமைதியா இரு. ஏற்கனவே டென்சன்ல இருக்காங்கல்ல துகிரா கூற, ஸ்ரீ இருவரையும் பார்த்தாள். இந்த விசயம் யாருக்கும் தெரியக்கூடாது. புரியுதுல..என்றாள்.

நாங்க யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றான் ஜானு. ஆமா..என்றாள் துகிரா. அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து சினத்துடன், இங்க என்ன செய்றீங்க?

ஸ்ரீ கோபமாக அவனை பிடித்து தனியே இழுத்து சென்று, பவி யாரு? கேட்டாள்.

அவ யாரு? அகில் லவ் பண்ற பொண்ணு..

அதுக்கு முன்னாடி அவ யாரு?

ஸ்ரீ..அவ..என்று அர்ஜூன் தயங்க, அவனை அடித்தாள். ஏன்டா, என்னிடம் சொல்லவே தோணலையா? அவள் என்னோட அக்கான்னு என்னிடம் சொல்ல தோலையா?

இது நேரமில்லை ஸ்ரீ..எது நேரமில்லை? அம்மா, அப்பா கூட மறச்சுட்டாங்க. எல்லாரும் என்னை ஏமாத்திக்கிட்டே இருக்கீங்க? அவளுக்கு தெரியுமா? கேட்டாள்.

தெரியும் என்றான். அவளுக்கு சொல்ல தோணலைல. அப்படி இல்லை ஸ்ரீ..அவள் உனக்கு வேண்டுமா? வேண்டாமா? அர்ஜூன் சினந்தான்.

என்ன கேக்குறடா?

உனக்கு அக்கா ஒருத்தி இருக்கான்னு தெரிஞ்சா எங்கிருந்து அவளை கொல்ல எவன் வருவான்னு தெரியாது. அவள் என்ன சொன்னான்னு தெரியுமா? என்று அர்ஜூன் பவி வீட்டில் நடந்ததை கூறினான்.

இரத்தம் சொந்தம்ன்னா அவளுக்கு நீயும், உனக்கு அவளும் தான் இருக்கீங்க? அவளுக்கு நான் பிராமிஸ் பண்ணி இருக்கேன். எந்த பிரச்சனையும் நடக்காமல் இருவரையும் சேர்த்து வைப்பேன்னு. அவள் கேட்டது இனியாவது உன்னுடன் நேரம் செலவழிக்கம்ணுன்னு ஆசைப்படுறதா சொன்னா?

புரிஞ்சுக்கோ..எல்லார் உயிரையும் நீ தான் காப்பாற்றப் போற. உனக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு என்றான்.

அவள் அழுது கொண்டே, அந்த கொலைகாரன் யாருன்னு சொல்லு?

முடியாது ஸ்ரீ. அவனை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டாம். உனக்கு பவியை பற்றி தெரியும்ன்னு காட்டிக்காதே என்றான். அவள் கோபமாக முன் செல்ல..ஸ்ரீ புரிஞ்சுக்கோ என்று அர்ஜூன் அவள் பின்னே ஓடி வந்தான்.

நீ சொல்லவும் வேண்டாம். பேசவும் வேண்டாம் ஸ்ரீ கத்தினாள்.

உனக்கு என்ன அவனை பத்தி தெரியணுமா? சீற்றத்துடன் அர்ஜூன் பல்லை கடித்துக் கொண்டு, அவன் உன்னோட தம்பியோட அப்பன் தான் என்று கத்தினான்.

அர்ஜூன்..என்று கண்கலங்க ஸ்ரீ அவனிடம் வர, மற்ற மூவரும் அதிர்ந்து நின்றனர்.

டேய்..என்ன சொன்ன? என்று கவின் அங்கு வந்தான். ஸ்ரீ அழுது கொண்டே அர்ஜூனை அணைக்க, ஆமாடா நிவாஸ் அப்பா தான் அந்த கொலைகாரன். அவன் சொன்ன கதை பத்தி என்னோட அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு.

அவன் ஸ்ரீ அம்மாவை காதலித்து பின் அகில் அம்மாவை அடைய நினைத்து முடியாமல் பிஸினஸில் அகில், ஸ்ரீ அப்பாவுடன் தோற்று..அந்த விரக்தியில் தான் அனைத்தையும் செய்கிறான். ஆனால் அவன் என்னோட அம்மாவை…என்று கதறி அழுதான்.

அண்ணா..என்ன சொல்ற? தாரிகாவும் ஸ்ரீயும் அவனிடம் வந்தனர். அர்ஜூன்..ஆன்ட்டிய? ஸ்ரீ கேட்க..அவன் மீண்டும் கதறினான்.

என்னோட அம்மாவை நான் தான் தனியா விட்டுருக்கேன் ஸ்ரீ. எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க என்று அழுதான். மூவரும் அவனை அணைத்து அழ, அர்ஜூன் அழுவதும் மற்றவர்களின் சமாதானமும் மட்டும் பிரகதிக்கு தெரிந்தது.

ஜானு, துகிரா அதிர்ந்து அவனை பார்க்க, ஸ்ரீ..நான் உன்னை மட்டும் தவற விடலை. என்னோட அம்மாவையும் விட்டுட்டேன் ஸ்ரீ என்று அழுதான்.

அர்ஜூன் போன் அடிக்க..அதை பார்த்து அனைவரையும் விலக்கி எழுந்து பாலத்தின் கீழ் பக்கம் இறங்கி தண்ணீரில் முகத்தை விட்டு வெளியே எடுக்க ஸ்ரீயும் மற்றவர்களும் பதறி அவனிடம் வர..கையசைத்து அவர்களை நிறுத்திய அர்ஜூன் ஸ்ரீயிடம் வந்து அவளது துப்பட்டாவை இழுத்து முகத்தை நன்றாக துடைத்து விட்டு, பைக்கில் இருந்து நீரை எடுத்து குடித்து விட்டு கவினிடம் பைக்ல வந்தியா?

அர்ஜூன்..நீ ஓ.கே வா? கேட்டான். நேரமாகுது காயத்ரிகா அத்தை நமக்காக காத்திருக்காங்க. இன்னும் ஏதும் பேசணுமா? சத்தமிட்டான்.

கவின் பைக்கை எடுக்க, தாரிகாவும் ஜானுவும் அவனுடன் ஏறிக் கொள்ள அர்ஜூன், ஸ்ரீ, துகிரா சென்றனர்.

அர்ஜூன் இவ்வளவு கஷ்டப்படுகிறான்? ஸ்ரீயும் அர்ஜூனும் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறதே? இதனால் தான் முதலில் இருந்ததை விட உறுதியாக இருக்கானா? என்று பிரகதி சிந்தித்தாள்.

அர்ஜூன் ஸ்ரீ தாரிகாவுடன் உள்ளே வந்தான். ஏன்டி எங்க போனீங்க? நேரமாகுது விசாலாட்சி கேட்க, இருவரும் ஏதும் பேசாமல் அவரை பார்த்து விட்டு படியில் ஏறினர். கமலி அவர்கள் முன் வந்து, உங்களுக்கு பத்து நிமிஷம் தான் டைம் தயாராகி வாங்க. ஷாப்பிங் போகலாம் என்றாள். தாரிகா தலை கவிழ்ந்தபடி தலையை ஆட்டினாள்.

ஆன்ட்டி, நான் வரலை. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க.

ரெண்டு பேருக்கும் என்னாச்சு? கமலி கேட்டுக் கொண்டே தலையை சாய்த்து தாரிகாவை பார்த்து, என்னை பார்த்தாலே ஏதாவது சொல்லுவ? இப்ப என்ன பேச்சையே காணோம்..

சாரி..என்று அவள் சொல்ல, ஸ்ரீயை பிடித்து நிறுத்தினார் கமலி. அனு தேடினா..நீ வரலைன்னா அழுவா? வரேல்ல..அர்ஜூன் இருவரையும் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

வாரேன் ஆன்ட்டி. நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா கோபப்படுவீங்கன்னு தான் வேண்டுமென்றே சொன்னேன். அதுக்கான காரணம் இப்ப தான் தெரிஞ்சது. சாரி ஆன்ட்டி என்றாள்.

கண்கலங்கினாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஓ..அதனால் தான் அவள் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு போறாளா? என்று ஸ்ரீயிடம்.. ஆம்பளைங்க அழகா இருக்காங்கன்னு சொன்னா. அவங்க கிட்ட நம்மளோட தேவை இருக்குன்னு அர்த்தம் என்று மிகவும் நேரம் கழித்து தான் புரிந்து கொண்டேன். அதனால் பொண்ணுங்க சொன்னா கூட ஏத்துக்கமாட்டேன். கோபப்படுவேன் அதை தான் ராஜவேல் உன்னிடம் சொன்னார்.

எல்லாரும் அவங்களுக்கு தேவை என்று அழகு என்ற சொல்லை பயன்படுத்தினாங்க. ஆனால் நீ வித்தியாசமா எனக்கு உன் மேல் கோபம் வர செய்ய பயன்படுத்தினாய். நீ அன்று அவரிடம் பேசிய அனைத்தையும் கேட்டேன். வினிதா சொன்னது சரி தான்..

ஆன்ட்டி..அக்கா என்னை பற்றி உங்களிடம் சொன்னாங்களா?

ஆமா. சொன்னா. என்னவென்று நான் சொல்லமாட்டேன் என்றார்.

ஆன்ட்டி..நம்ம ஒப்பந்தத்தை..என்று தயங்கினாள்.

ஒப்பந்தம் ஒன்றும் வாழ்க்கை இல்லை. நீ தயங்க தேவையில்லை. அதை இங்கு வரும் முன்னே கிழித்து விட்டேன். என்னை மன்னிச்சிரு. உன்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம எல்லார் முன்னும் அதிகமா பேசிட்டேன் என்றார்.

ஆன்ட்டி..என்று அவரை அணைத்து அழுதாள். சாரி ஆன்ட்டி நானும் உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.

என்னது?

அர்ஜூனுக்கு நீ என்றால் உயிர். நான் உன்னை ஏத்துக்கிறேன்.

ஆனால் ஆன்ட்டி நான் அவன் போல் சுத்தமாக இல்லை.

சுத்தம் மனசுக்கு தான்ம்மா. உடம்புக்கு இல்லை. உடம்பு ஜஸ்ட் நம்மை குளிரிலிருந்து காக்கும் போர்வை தான். மனது தான் நம்மை ஆளும். உன்னிடம் அது சுத்தமாக இருக்குதே போதும்மா..என்றார். அவள் அழுது கொண்டே “தேங்க்ஸ் ஆன்ட்டி”

அவள சும்மா விடக்கூடாது. அவள் உன் அப்பாவுக்கு உன்னை பதில் பழிவாங்குகிறேன் என்று தான் சில்லறைத் தனமான வேலை பார்த்திருக்கா.

அவள் சிதம்பரத்தை காதலித்தாள். அது தெரிந்தும் உன் அப்பா அகில் அம்மா, அப்பாவை சேர்த்து வைத்தார். அவள் சுயநலவாதி ஸ்ரீ. அவளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியும். காதலை கொடுக்க முடியலை.

அகில் அப்பாவை தான சொல்றீங்க?

ம்ம்..அவர் தான். சரி..நேரமாகுது. போ கிளம்பு என்று அவளை அனுப்பி விட்டு அவர் சென்றார். அர்ஜூன் கதவை மூடினான். தாரிகா வேகமாக அறைக்கு ஓடினாள்.

அர்ஜூனும் தாரிகாவும் அவர்கள் பேசுவதை கேட்டனர். ஒப்பந்தமா? நான் சொன்னதை மீறி அம்மா அவளை சந்தித்து பேசுனாங்களா? என்று கமலி செக்கரட்டரியிடம் அர்ஜூன் விசாரிக்க..அவர் அனைத்தையும் கூறி விட்டு, அந்த பொண்ணு அழுததை பார்த்து மேடம் ரெண்டு நாளா தூங்கவேயில்லை என்றார்.

அர்ஜூன் சற்று அமைதியாக யோசித்தான். அம்மா.. எனக்காகவா அவளிடம் இப்படி பேசுனீங்க? நான் தான் உங்கள தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நீங்க பேசியதுல அவ கஷ்டப்பட்டுருப்பா என்று நினைத்துக் கொண்டே அமர்ந்தான். அர்ஜூன் வா நேரமாகிறது பெரியத்தை சத்தமிட்டார்.

ஹா..வாரேன் என்று பின் தான் தயாராகி வெளியே வந்தான். அனுவுடன் ஸ்ரீ இருக்க, யார் இருக்காங்கன்னு பார்க்காம அவளை அணைத்து சாரி ஸ்ரீ என்றான்.

அர்ஜூன் என்ன பண்ற? எல்லாரும் பார்க்குறாங்க? ஸ்ரீ கூற, நகர்ந்து பார்த்தான். வெற்றியும் மீனாட்சியும் புடவை, பூ, மஞ்சள், குங்குமம் வைத்து காயத்ரியிடம் கொடுத்துக் கொண்டிருந்தனர். சைலேஷ், பிரதீப், தீனா, பொண்ணுங்க குடும்பத்தை தவிர அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

பவி அவனிடம் வந்து, எந்த நேரத்தில் என்ன பண்ற? என்று திட்டினாள். ஸ்ரீ அவளை பார்க்க..அர்ஜூன் அவர்களை பார்த்து வரவேற்றான்.

எதிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாது. அதனால் நேராக கடைக்கு வாங்கி வீட்டிற்கு கூட செல்லாமல் இங்கே வந்து விட்டோம் மீனாட்சி கூறினார்.

காயத்ரி அவர்கள் காலில் விழ,..நல்லா இரும்மா என்று ஆசிர்வதித்து கிளம்பினார்கள்.