அத்தியாயம் 91
தருண் வெளியே படுத்திருக்க மறை காயத்ரி இருக்கும் அறைக்குள் வந்தான். காயத்ரி நடுவே படுத்திருக்க அனு ஒரு பக்கமும், ராக்கி ஒரு பக்கமும் அவளை அணைத்து படுத்திருந்தனர். கதவு திறக்கும் ஓசை கேட்டு கண்ணை மூடினாள் காயத்ரி.
மறை ராக்கி அருகே வந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவனை முத்தமிட்டு, உன்னை அடிக்க எப்படி அவனுக்கு மனசு வந்துச்சு? என ராக்கியிடம் பேசினான். பின் அனுவை பார்த்து விட்டு காயத்ரியை பார்த்தான்.
சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டு சும்மா முறைச்சுகிட்டு இருக்கீங்க? கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்? சிரிச்சா அழகா இருக்கும் என்றான். பின் அவர்களை பார்த்து விட்டு பெரிய போர்வையை பரண் மேலிருந்து எடுத்து மூவருக்கும் சேர்த்து போர்த்தி விட்டான். அப்பொழுது பிரெளனி கனைத்தது. அவன் திறந்த சன்னல் அனைத்தையும் பூட்டி விட்டு ஒரு சன்னல் வழியே பார்த்தான். அதையும் பூட்டி விட்டு அவன் போனை எடுத்தான். காயத்ரி எழுந்து அமர்ந்தாள். குதிரை கனைத்ததில் விழித்திருப்பாள் என்று அவளை பார்த்து, ஒன்றும் ஆகாது. சொல்லும் வரை வெளிய வராதீங்க..என்று அவன் வெளியேறினான். பசங்களுக்கு ஏதேனும் ஆகி விடுமோ? என பயந்தாள்.
வந்துட்டானுக. நீ எங்க இருக்க? என்று தருண் மீது கை வைக்க அவனும் எழுந்தான்.
நாங்க இங்க தான் இருக்கோம். நான் சொல்றத சீக்கிரம் செய். அவனுக வீட்டை கொளுத்தப் போறாங்க. அவங்க இருக்கும் அறைக்குள் ஓர் அறை இருக்கு அங்கபோயிட்டு..மறு கதவு பக்கம் நில்லுங்க. நான் சொல்லும் போது எல்லாரும் ஒன்று போல் வெளிய வாங்க என்றான் தீனா.
சரிண்ணா..என்று காயத்ரி இருக்கும் கதவை திறக்க.. அவனால் திறக்க முடியவில்லை. ஏங்க, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? கதவை சீக்கிரம் திறங்க மறை கத்த, என்னால திறக்க முடியலை என்று கத்தினாள்.
உங்கள யாரு கதவை பூட்ட சொன்னாங்க?
அக்கா சீக்கிரம் திறக்க பாருங்க. வீட்ட கொளுத்தப் போறாங்க. அவளால் தாழ்ப்பாளை திறக்க முடியலை.
டேய்,..என்ன பிரச்சனை? அறைக்குள்ள போயிட்டீங்கல்ல..தீனா கேட்க, மறை போனை தருணிடம் கொடுத்து, தள்ளி நில்லுங்க..நீங்க பாப்பாவை தூக்கிட்டு தயாரா இருங்க என்று தள்ளி நின்று ஓடி வந்து அவன் கதவை இடித்து தள்ள..மெதுவாக தாழ்ப்பாள் விலக, அனுவை தூக்கிக் கொண்டு அருகே வந்தாள் காயத்ரி. மீண்டும் அவன் கதவை இடித்து தள்ள அருகே நின்றிருந்த காயத்ரியை இடித்து நின்றான். அவள் அனுவை வைத்துக் கொண்டு கீழே விழ, இருவரும் விழும் இடத்திற்கு முன் வந்து அவன் நின்றான். காயத்ரி அவன் மீது விழ, அவன் காலை தரையில் அழுத்தமாக ஊன்றி இருவரையும் பிடித்து நிறுத்தி விட்டு, உள்ள வாடா..என்று தருணை அழைத்தான். அவன் காயத்ரியை இழுத்துக் கொண்டு அந்த அறையை திறக்க அதுவும் வம்பு செய்தது. அதற்குள் பெட்ரோல் பரவி நெருப்பு பற்ற, பசங்க விழித்து அழுதனர். தருண் எப்படியோ திறக்க.. காயத்ரி, அனு, தருண் அறைக்குள் சென்று அண்ணா…ராக்கி…சீக்கிரம் வாங்க என்று கத்தினான்.
நெருப்பு பரவ, ராக்கி அம்மா..அம்மா..என்று அழுதான். அவனை துக்கிய மறை தன்னுடன் அவனை அணைத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான். கட்டிடம் இடிய ஆரம்பித்தது. அவன் உள்ளே வர தருண் கதவை அடைத்தான். அந்த அறையின் கதவருகே இருக்க, கதவை திறந்து சீக்கிரம் வெளியே போங்க..என்றான் தீனா.
அவர்களும் வெளியே அவர்கள் வெளியே வருவதை பார்த்த அனுவின் பெரிய தாத்தா, டேய்..அவங்க தப்பிச்சு போறாங்க. பிடிங்கடா என்று அவர் கத்த,ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். காயத்ரி கையை பிடித்து தருண் இழுத்து செல்ல, அவர்கள் பின் மறை ராக்கியுடன் வந்தான். காயத்ரி அவர்களை திரும்பி பார்த்துக் கொண்டே முன் சென்றாள்.
மறை முன் ஒருவன் வந்து அரிவாளை துக்கி வெட்ட வந்தான். அவனை பிடித்து தள்ளி விட்டு மறை மீண்டும் நகர,..பிள்ளையை வைத்து சண்டை போட முடியாது என தடுத்து முன்னேற பயத்தில் ராக்கிக்கு வலிப்பு வந்தது. அதை பார்த்த காயத்ரி தருண் கையை உதறி விட்டு..அனுவை அவனிடம் கொடுத்து, நீ போ..என்று கத்திக் கொண்டே மறை, ராக்கியிடம் வந்தாள்.
மீண்டும் ஆட்கள் வர, தீனா ஆட்கள் நடந்த அனைத்தையும் ஆதாரத்திற்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அங்கு வந்து கொண்டிருக்க, மறை காயத்ரியிடம் ராக்கியை கொடுத்து விட்டு, ஹாஸ்பிட்டலுக்கு போங்க. இவங்கள நான் பார்த்துக்கிறேன் என்று நின்றான்.
காயத்ரி அவர்கள் வந்த அறையிலிருந்து சாவி கீழே விழுந்து இருப்பதை பார்த்து, அந்த சாவி என்று ஆட்கள் வரும் திசையில் ராக்கியை தூக்கிக் கொண்டு ஓடினாள்.
ஏய்..நில்லு..என்று மறை அவளுடன் வர..ஒருவன் அரிவாளை வைத்து தலையை துண்டிக்க வீசினான். காயத்ரி தலையை அழுத்தி அவளை அமர வைத்து தானும் அமர்ந்தான்.
இரு. சாவி தான வேணும். நான் எடுத்துட்டு வாரேன் என்று அவள் அருகே வருபவர்களை அடித்து விட்டு அவளை நிற்க வைத்து, அவன் எடுத்து வர வினிதா கணவனின் பெரியப்பா, அவனின் அத்தை, சின்னவர், அவர் பசங்க அவளருகே கத்தியுடன் வந்தனர்.
மறை பயத்துடன் அவர்கள் முன் வந்து நிற்பதற்குள் கத்தி காயத்ரியின் வயிற்றருகே வந்து நின்றது. நம் காயத்ரியை குத்த வந்த தன் மகன் மூத்தவனின் கையை பிடித்து நிறுத்தினார் பெரிய அத்தை.
அம்மா..எதுக்கு இங்க வந்தீங்க? போங்க என்றாள் மகள்.
தன் மகனை தள்ளி விட்டு, மருமகள என்னடா பண்றீங்க? பிஞ்சு பிள்ளைய எப்படிடா கொல்ல மனசு வந்தது? கத்தினார். மறை காயத்ரியை இழுத்து சாவியை கொடுத்தான். அவர்களை பார்த்துக் கொண்டே காயத்ரி ராக்கியின் கையில் சாவியை கொடுத்து அவன் கையை மூட மறை ராக்கி கையை பிடித்திருந்தான். வலிப்பு சரியானது.
கிழவி வழிய விடு என்றார் மூத்தவர்.
கிழவியா? உன்னோட அம்மாடா?
அம்மாவா? எங்களுக்கு என்னடி சேர்த்து வச்சிருக்க?
ஏன்டா, பணத்துக்காக, சொத்துக்காக கொல்ற அளவுக்கு போயிட்டீங்களாடா? சினத்துடன் கேட்டார்.
ஆமா..சொத்துக்காக, அவள என்ன? உன்னை கூட கொல்ல தயங்க மாட்டோம் என்று அவரது கழுத்தை நெறித்து கத்தியை அவர் பக்கம் கொண்டு செல்ல..
அண்ணா…வேண்டாம் என்று தங்கை கத்தினாள்.
உனக்கு பணம் வேண்டுமா? இந்த கிழவி வேண்டுமா? என்று அவளை பார்த்தார் அண்ணன். அந்த அம்மாவின் மகளோ வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவன் கத்தியை குத்த வந்தான். வேண்டாம், நானே வாரேன். அத்தையை ஏதும் செய்யாதீங்க என்றாள் காயத்ரி.
அட, உன் ரெண்டு மருமகளுக்கும் உன் மீது என்ன பாசம்? அவ சாகும் முன்னே உனக்கென்று பணத்தை உன் பெயரில் சேர்த்து வச்சிருக்கா. இவ..உனக்காக உயிரை கொடுக்கவும் வாராளே? அவன் பேச..
காயத்ரிம்மா..வேண்டாம்மா.. நீ போயிடு என்று அழுது கொண்டே என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ? ஏற்கனவே என் பேரனால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இனியாவது சந்தோசமா இருக்கட்டும் என்று காயத்ரி மாமியார் அழுதார்.
சரி..முதல்ல நீ போ கிழவி பின்னாடியே மருமகளையும், பேரனையும் அனுப்பி வைக்கிறேன் என்று காயத்ரி மாமியாரை குத்த, அக்கத்தியின் கூர்முனையை இரத்தம் சொட்ட..சொட்ட..பிடித்து தடுத்தான் ராக்கியை கையில் வைத்துக் கொண்டு மறை.
பெத்த அம்மாவை கொல்ல பாக்கிற? நீயெல்லாம் மனுசனடா? என்று கத்தினான் மறை.
அட, இவன் நம்ம லிஸ்ட்லயே இல்லை. தானா வந்து மாட்டுறானுக பாரு.
மாட்டியது நான் இல்லை. நீ தான் டா என்று கத்தியை திருப்பினான் மறை. கத்தியை நழுவ அவர் நழுவ விட அவ்வீட்டின் மூன்றாமவர் துப்பாக்கியை எடுத்து மறையை குறி வைத்தார். காயத்ரி மறை முன் வந்து நின்று, அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அவரை விட்டுருங்க..என்று அழுதார்.
அவரா? என்னம்மா கள்ளக்காதலா?
அவள் கண்ணீருடன் விலகாமல் நின்றாள். அவர் கையை குறி வைத்து சுட்டான் தீனா. துப்பாக்கி கீழே விழுந்தது. பிரதீப், பிரகதி, அபி அவ்விடம் வந்தனர்.
கள்ளக்காதலா? யாரை பத்தி என்ன பேசுற? அவனை பத்தி தெரியுமா? அவனது சிறுவயதில் அவன் அம்மாவை அப்படி பார்த்துக்கிட்டான். ஆனாலும் அவன் அம்மா சென்ற பின் இங்கிருக்கும் பெரியவங்களுக்கு ஒன்று என்றால் அவன் தான் முன் நிற்பான்.
உன்னை போல் பெத்த அம்மாவை கொல்லும் அளவுக்கு ராட்சசன் இல்லை. அவன் எந்த பொண்ணிடமும் தவறாக நடந்து கொள்பவனுமில்லை. உங்க பிள்ளைய மாதிரி காமக் கொடூரன் எங்க ஊர்ல எவனும் இருக்க மாட்டார். மீறி இருந்தால் அவனை கொல்லாமல் நாங்க விட்டதில்லை.
எல்லாம் தெரிஞ்சு இந்த புள்ள வாழ்க்கையை கெடுத்து..இப்படி நிக்க வச்சுட்டீங்களே? பிரதீப் கோபமாக சத்தமிட்டான். காரிலிருந்து இவர்களை பிரகதி பார்த்து பயந்து அமர்ந்திருந்தாள்.
தீனா கண்ணை காட்ட..அவன் ஆட்கள் அவர்கள் அனைவரையும் பிடித்தனர்.
ஒரு நாள்ல ஊரையே கைக்குள்ள பிடிச்சு வச்சுக்கிட்ட? என்ன செஞ்சுடி மயக்குன? காயத்ரியின் அத்தை கேட்க, அவரை கன்னத்தில் அறைந்தார் பெரிய அத்தை. காயத்ரி அழுதாள்.
என்ன பேச்சுடி பேசுற?
இவங்க இல்லைன்னா..நம்ம வீட்டு புள்ளைகளை நீங்களே கொன்றுப்பீங்க? ச்சீ..உள்ள போகப் போறோம்ன்னு பயமா இல்லை. எனக்கு தான்டி நீங்க எல்லாரும் என் வயித்துல பிறந்தது அசிங்கமா இருக்கு என்று அவர் சீறினார்.
ஏய்..கிழவி அதிகமா பேசுற? அவர் கத்தினார்.
இங்க அதிகமா பண்றது நீ தான்டா. என் மூஞ்சிலையே விழிக்காத..இவங்கள இழுத்துட்டு போங்க என்று அழுதார். அழுது கொண்டிருந்த காயத்ரி அவரை அணைத்தார்.
மறையிடமிருந்து ராக்கி ஓடி வந்து..அம்மா..என்று அழைத்தான். ஒரு நிமிஷத்துல உயிரே போச்சு. அவங்க பேசிதை மறைந்திருந்து கேட்டு, அவங்கள பின் தொடர்ந்து வந்தேன்ம்மா. என்னை மன்னிச்சிரும்மா..பேரன் தான் உன்னை கஷ்டப்படுத்தினான் என்றால்..குடும்பமே உங்களை கொல்ல பார்த்திருக்காங்க என்று சுற்றி இருந்தவர்களை பார்த்தார்.
வேலு அங்கே வந்து மறையை அடித்தான். ஏன்டா, உனக்கு சொல்ல தோணலையா?
மறை தீனாவை பார்க்க, நான் தான் சொல்ல வேண்டாமென்று சொன்னேன்.
அவனை விடு..அவன் கையை பாரு என்று பிரதீப் மறையை இழுத்து காரிடம் சென்று முதலுதவி பெட்டை எடுத்து அவனை திட்டிக் கொண்டே கட்டிட்டான். மறை கண்கலங்க பிரதீப்பை பார்த்தான்.
நீ எதுக்குடா கத்திய பிடிச்ச? பாரு எப்படி இரத்தம் வருது?
அண்ணா..சாரி..என்னால உங்க எல்லாரையும் தப்பா பேசிட்டாங்க?
உன்னை பத்தி பேச கூட அந்த ஆளுக்கு அருகதை இல்லை அவர்கள் பேசிக் கொண்டிருக்க, காயத்ரியிடமிருந்து மறையிடம் ராக்கி ஓடி வந்தான்.
ப்ரெண்டு..இரத்தம்..வருது என்று அழுதான். அவனை தூக்கிய பிரதீப் காயத்ரியை பார்த்து விட்டு, நீ உன்னோட ப்ரெண்டை பார்த்துக்கிறியா? கேட்டான்.
அண்ணா..சும்மா இருங்க என்று மறை அவனை தூக்கி, தொட்டு பாரு. எனக்கு வலிக்காது என்றான்.
டேய்..ஹாஸ்பிட்டலுக்கு போகணும். நீ என்ன பண்ண சொல்ற? மறையின் நண்பர்கள் வந்தனர்.
சும்மா இருங்கடா. நீ தொட்டு பாரு ஸ்டார்.
ஸ்டாரா? அவர்களில் ஒருவன் கேட்க, ஆமா ப்ரெண்டுக்கு ஸ்டார் ரொம்ப பிடிக்குமாம். எனக்கு மூன் பிடிக்கும். என்னோட ப்ரெண்டுககு ஸ்டார் பிடிக்கும். அதனால என்னை ஸ்டார்ன்னு சொல்லுவான்.
சொல்லுவானா? ஒருவன் முறைக்க, டேய்..என்று மறை ராக்கியை பார்க்க, அவன் தொட்டான்.
பார்த்தியா ஸ்டார்..எனக்கு வலிக்கவேயில்லை என்று சிரித்தான்.
வேலு ராக்கியை வாங்கி விட்டு, அண்ணா..இவனை மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு பார்சல் பண்ணுங்க.
வேலு..நாளைக்கு என்னோட நண்பனோட நிச்சய அழைப்பு இருக்கு. நீ என்ன இப்படி சொல்ற?
ம்ம்..அதுக்கு தான் சொல்றேன். முன்னாடியே நீ வர வேண்டாமா?
இல்லடா. வேலை நிறைய இருக்கும்ல.
அதை நாங்க பார்த்துக்கிறோம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்கே துப்பாக்கி சத்தம் கேட்டது. அனைவரும் பதறி பார்த்தனர். காயத்ரி பெரிய அத்தையின் மகன் மூத்தவர் போலீசாரிடமிருந்து தப்பி காயத்ரியை கொல்ல வந்தார். அர்ஜூன் அவரை சுட்டு அவர் முன் வந்தான். அபியும் அவனிடம் வந்தார்.
காயத்ரி அதிர்ந்து அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூன்..என்ன பண்ணிட்ட? காயத்ரி கேட்க, அக்கா கவலைப்படாதீங்க. கமிஷ்னரிடம் அவசர நேரத்தில் துப்பாக்கியை எடுப்பேன் என பேசிட்டு தான் வந்தேன்.
அவரை நான் சுடலையென்றால் அவர் உங்களை கொன்றிருப்பார் என்று சாகும் நிலையில் இருக்கும் அவரை பார்த்து,
த்து..த்து…என்று சத்தத்துடன் என்ன பெரியப்பா? உங்கள நான் நம்பிட்டேன்னு நினைச்சீங்களா? கண்ணு தெரியுதா பெரியப்பா கேட்டுக் கொண்டே அபி என்று அழைத்தான். அவன் பைல்லை காட்டி..இது உங்க பேமிலி செஞ்ச மொத்த வரலாற்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு..தயாரா இருக்கு.
நீங்க முன்னாடி போங்க..உங்க தம்பி, தங்கை எல்லாரும் வருவாங்க. நான் கூட கமிஷ்னரிடம் எல்லாரும் போட்ருவேன்னு சொன்னேன்.
என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கமிஷ்னர் என்னோட மாமா, அப்புறம் நான் கொல்லணும்னு நினைச்சவங்க யாரும் நல்லவங்க இல்லை. ஆனால் என்னால ஏதும் செய்ய முடியல என்று பெரிய அத்தையிடம் வந்து,
பாட்டி..உங்களுக்காக தான் மத்தவங்கள விட்டு வச்சேன் என்று அவர் காலில் விழ, நல்லா இருப்பா என்றார்.
அர்ஜூன் மறையை பார்த்து, அண்ணா..உங்கள அக்காவை பார்த்துக்கோங்கன்னு தான சொன்னேன். என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? கேட்டான்.
நீ தான் என்னை தனியே கோர்த்து விட்டுட்டு போயிட்ட. நான் என்னடா பண்றது?
எல்லாரும் அப்புறம் பேசுங்க. முதல்ல எல்லாரும் வீட்டுக்கு போங்க. டேய்..நீ வாடா என்று வேலு அவனை இழுக்க, அவனை விடு. நாளைக்கு விழாவின் ஹீரோ நீ. போய் தயாராகு. மணிய பாரு இரண்டாகிறது. நான் அழைச்சிட்டு போறேன் என்று பிரதீப் அவனை பிடிக்க,
அண்ணா..விடுங்க. நானே போய்கிறேன்.
எல்லாரும் கிளம்புங்க. வாப்பா..நாம போகலாம் என்று காயத்ரி பெரிய அத்தை கூற, இல்ல இருக்கட்டும்.
அர்ஜூன்..என்று காயத்ரி அழைக்க மறை அருகே வந்த அர்ஜூன், அண்ணா செட் ஆகிடும் போல.
டேய்..தனியா மாட்டிவிட்டு இப்ப ஓவரா பேசாத. அந்த பொண்ணு வேற எப்படி முறைச்சது தெரியுமா? கொலைகுத்தம் பண்ணா கூட இப்படி முறைக்க மாட்டாங்கடா.
அர்ஜூன் சிரித்தான்.
அர்ஜூன்..என்று காயத்ரி இருவரையும் முறைத்தாள்.
பார்த்தியா இதே முறைப்பு தான் என்று மறை அவன் காதில் கூற, எதுக்கும்மா சத்தம் போடுற? புள்ளைங்க நமக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்காங்க என்று அமர்த்தினார்.
அவளுக்கு மறை பேசியது நினைவு வந்து, நான் என்ன செய்தேன்? யோசித்துக் கொண்டே, அவர்கள் ஹாஸ்பிட்டல் சென்று மறைக்கு முறையாக மருந்தளித்தனர்.
காயத்ரி ராக்கியுடன் அமர்ந்திருக்க காயத்ரிக்கு பார்த்த நர்ஸ் அவளை பார்த்து அவளிடம் வந்து, என்னாச்சு மேம்? சாருக்கு அடிபட்டதோ? என்று கேட்டார்.
பெரியத்தை அவளை பார்க்க, ஆமா என்று தலையை மட்டும் அசைத்தாள்.
மேம், ரொம்ப அமைதியா இருக்கீங்க? என்று பெரியத்தையை பார்த்தாள்.
நீங்க யாரு?
நான் என்று அவர் கூற, அந்த வீட்டோட பெரிய மனுசி நீங்க தானா? ஆமா அன்று வந்தீங்கல்ல? வீட்டுக்கு வந்த பொண்ணு..எப்படி இருக்காங்க? பசங்க என்ன பண்றாங்கன்னு கூட பார்க்காம என்ன செஞ்சீங்க?
உங்க வேலையை மட்டும் பாருங்க காயத்ரி கூற, தப்பா எடுத்துக்காதீங்க மேம். அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை சார் காப்பாத்துனாங்க தெரியுமா? என்று மறை ராக்கியையும், காயத்ரியையும் காப்பாற்றியது பற்றி சொல்ல சொல்ல காயத்ரிக்கு நினைவுக்கு வந்தது. ராக்கி என நினைத்து காயத்ரி மறைக்கு கொடுத்த முத்தமும் நினைவுக்கு வர, இதை தான் சொன்னாரா? என்று கேட்க,
சார் சொன்னாரா? என்ன சொன்னார்? நர்ஸ் கேட்டாள்.
இல்லை..ஒன்றுமில்லை என்று பதட்டமானாள். நர்ஸ் சென்ற பின் தன் உதட்டை தொட்டு பார்த்தாள். பெரியத்தைக்கு புரியாமல் இருக்குமா? என்ன?
என்னாச்சும்மா?
அத்தை..என்று தொண்டை அடைக்க, அவள் கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுத்தது.
எதுக்கும்மா அழுற? என்று அவர் தயங்கினாலும் உனக்கு அந்த பையனை ..என்று கேட்க ஆரம்பிக்க, மறையும் அர்ஜூனும் வந்தனர்.
பெரியத்தை நீங்க வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அர்ஜூன் அழைக்க, அவர் மறையை பார்த்தான். அவன் பார்வை காயத்ரி மீதும் ராக்கி மீதும் இருப்பதை பார்த்தார்.
பெரியத்தை…என்று அவரை உலுக்க, காயத்ரியை பார்த்து அக்கா..எதுக்கு அழுதீங்க?
எல்லாமே சரியாகும். பெரியத்தையும் கண்ணீருடன் முன் செல்ல, அவர் பின்னே காயத்ரியும் சென்றாள். மறையும் அர்ஜூனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அர்ஜூன் நீ இவங்கள கூட்டிட்டு போ..ரொம்ப நேரமாகிடுச்சு. நான் கிளம்புகிறேன் என்று அவன் செல்ல, நில்லுப்பா..என்று பெரியத்தை அர்ஜூனிடம் முதல்ல தம்பிய வீட்ல விட்டுட்டு போயிலாம் என்றார். அனுவை அப்பொழுதே தருணுடன் அர்ஜூன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பான்.
வாங்கண்ணா என்று மறையையும் ஏற்றினான் அர்ஜூன். காயத்ரியின் பெரியத்தை மறைய பற்றி அவனிடமே கேட்டார். அவனும் தயங்காமல் பேசினான். அவன் வீடு வந்து விட அவன் இறங்கினான். வெளியிருந்து பார்த்தாலே வீடு சிறியது என தெளிவாக தெரிந்தது. பின் அர்ஜூன் அவன் பாட்டி வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றான்.
வீட்டிற்கு சென்ற காயத்ரிக்கு துக்கம் வராமல் ராக்கியை துக்கிக் கொண்டு மறை நின்றது, இருவரும் பள்ளத்தில் உருண்டது. அவள் அவனுக்கு முத்தம் கொடுத்தது என இருவரும் சேர்ந்த நினைவுகளே வந்தது. தூக்காமல் பால்கனிக்கு வந்து நிலவை தேடினாள். ஆனால் இன்றே முழுவதும் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தது. மறை ராக்கியை ஸ்டார் என அழைத்தது நினைவு வர, அவளை மீறி கண்கலங்கினாள்
தூக்கம் வரலையாம்மா? அவள் அத்தை வந்தார்.
வரலை அத்தை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
எதுக்கும்மா?
அத்தை என்னால் சொல்ல முடியலை. ஆனால்..அத்தை..என்று தயங்கினாள்.
முதல்ல..நீ என்னை மன்னிச்சிரும்மா. என்னால தான் எல்லாரையும் இழந்திருக்க? நான் எல்லாரையும் கவனித்து இருந்தால் யாரையும் தவறான வழியில் விட்டுருக்க மாட்டேன்ம்மா என்று அழுதார்.
இல்லத்தை. இதுல உங்க தப்பு இல்லை.
ஏம்மா..உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கூட சொல்லும்மா.
அத்தை..என்ன பேசுறீங்க? அவர் செத்து ஒரு நாள் தான் ஆகுது. என் மேல உங்களுக்கு கோபமா அத்தை? அன்று ரொம்ப அதிகமா பேசிட்டேன்.
இல்லம்மா. நீ இதை முன்னே சொல்லி இருந்தால் நான் உனக்கு வேற வாழ்க்கையாவது அமைத்து கொடுத்திருப்பேன். நீயும் அவனுடன் கஷ்டப்பட்டுருக்க மாட்ட அவர் கூற, காயத்ரியும் அழுதாள்.
அவனுக்கு முறையா எல்லாத்தையும் அவனோட அப்பனே செஞ்சுட்டான். அதனால ஒன்றுமில்லை. என்ன நம்ம குட்டிகண்ணு, அவன் அப்பனுக்காக ஏதாவது ஒன்றாவது செஞ்சிருந்தா நல்லா இருக்கும். அவன் செய்ததற்கு இது தேவை தான்.
நீ என்னுடன் வர்றீயாம்மா? நம்ம ஊருக்கே போகலாம்.
இல்லத்தை. நீங்க இங்க எங்க கூடவே இருங்க அத்தை. எனக்கு அந்த இடமே பிடிக்கலை. இங்க வந்ததுல பாதுகாப்பா உணர்கிறேன் அத்தை.
அந்த பையனை உனக்கு பேசி முடிக்கலாமா?
அத்த என்ன பேசுறீங்க?
இங்க பாரும்மா. அவன் செத்து ஒரு நாள் தான் ஆகுது. அவனை காரணமாக வைத்து எதையும் தடுக்க வேண்டாம்மா. பிடிச்சிருந்தா சொல்லும்மா..
இல்லத்தை. எனக்கு நீங்களும் ராக்கியும் என்னுடன் இருந்தாலே போதும்.
ஏன்மா? அந்த பையன் திருமணத்தை காணாதவன்னு யோசிக்கிறியாம்மா?
இல்லத்தை. வேண்டாமே. வாங்க தூங்கலாம் என்று இருவரும் படுக்க, அவர் தன் மனதினுள் உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்குன்னா முடிச்சு காட்டாம விட மாட்டேன் என நினைத்தார்.
மாலையில் ஜானு வீட்டினுள் நுழைய ஆதேஷ் அவளை பார்த்தான். ஆடையை மாற்றி தாவணியை மாற்றி டீ போட்டு வந்து அவள் குடிக்க, ஆதேஷ் அவளை பார்த்து ஜானு எனக்கு டீ வேண்டும் என்றான்.
அனைவரும் அவனை பார்க்க..ஜானு அவனை முறைத்தார். இந்த டீ விசயம் அவர்களை தவிர நமக்கு தான் தெரியுமே?
முதல்ல நான் கேட்டதுக்கு பதில் வேண்டும்?
ஜானு, மாமாவே பிரச்சனையை முடிச்சிட்டார்.
என்ன முடிச்சார்? அவனுக்கும் தெரிஞ்சு போச்சா? எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? ஜானு கோபமாக கேட்டாள்.
ஆமாம்மா, ஏதோ யோசனையில பேசிட்டேன். மன்னிச்சிரும்மா என்று லலிதா கண்கலங்க அனைவருக்கும் ஒரு மாதிரி ஆனது.
நான் மன்னிப்பு கேட்க சொல்லலை. இனி அப்படி பேசக்கூடாதுன்னு உத்திரவாதம் தான் கேட்டேன் ஆன்ட்டி என்று மெதுவாக ஜானு பேசினாள்.
சரிம்மா, இனி யாரிடமும் ஸ்டேட்டஸ் பற்றி பேச மாட்டேன் என்றார். ஓடி வந்து ஜானு லலிதாவை கட்டிக் கொண்டு, தேங்க்ஸ் ஆன்ட்டி. மன்னிப்பு எதுக்கு கேட்டீங்க? எனக்கு கஷ்டமா போச்சு..என்றாள்.
ஆதேஷ் அவர்களை கட்டிக் கொள்ள, டேய்..என்று லலிதா சத்தமிட, ஜானு எல்லார் முன்னும் காதலை ஆதேஷிடம் கூறினாள். அண்ணாக்கள் மட்டும் அங்கு இல்லை.
ஜானு போ..டீ போட்டு எடுத்துட்டு வா..என்று சோபாவில் அமர்ந்து வெற்றியை போல் செய்து காட்ட, ஏய்..மகனே..என்று அவன் அப்பா சத்தம் கொடுத்துக் கொண்டு அவனிடம் வர, ஜானு டீ எடுத்துட்டு மேலே வா..என்று ஓடினான். அனைவரும் சிரித்தனர்.
இரவு சாப்பாடு முடிந்து அர்ஜூன் பாட்டி வீட்டில் பாட்டி, கமலி, அஞ்சனா, ஸ்ரீ, தாரிகா பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீ மெதுவாக எழுந்து ரெஸ்ட் ரூம் போறேன்னு அர்ஜூன் அறை பக்கம் சென்றாள். கமலி பார்த்து புன்னகையுடன் தாரிகா அம்மாவிடம் காட்ட..இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஸ்ரீ அர்ஜூன் அறைக்கு சென்று பார்த்தாள். நிவாஸ் தூங்கிக் கொண்டிருந்தான்.
எருமைமாடு..எப்பபாரு தூங்கு இல்ல போனை நோண்டிக் கொண்டே இரு என திட்டிக் கொண்டே அவனுக்கு போர்த்தி விட்டு, அர்ஜூன் அறையில் உள்ள அர்ஜூன் வைத்திருந்த புகைப்படத்தை தொட்டு பார்த்து மகிழ்ந்தாள். பின் வெளியே வந்து அனுவை தூக்கிக் கொண்டு தூங்க வைத்து விட்டு படுத்தாள். அவளுக்கு அர்ஜூன் பற்றிய எண்ணகளே வந்து கொண்டிருக்க தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தாள்.
சற்று நேரத்தில் கார் சத்தம் கேட்க, வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தாள். மூச்சிறைக்க சமையலறைக்குள் சென்று தண்ணீரை அருந்தி விட்டு ஏதும் தெரியாதவள் போல் வெளியே வந்தாள்.
அர்ஜூன், காயத்ரி, ராக்கி, பெரியத்தை உள்ளே வந்தனர்.
அர்ஜூன்..இவ்வளவு நேரமா? ஸ்ரீ கேட்க, நீ என்ன செய்ற?தூங்கலையா?
அறையில் தண்ணீர் காலியாகி விட்டது. அதான் தண்ணீர் குடிக்க கீழே வந்தேன்.
அக்கா என்று காயத்ரியிடம் ஸ்ரீ வர, ஸ்ரீ அவங்க ஓய்வெடுக்கட்டும். காலையில பேசிக்கோ..என்ற அர்ஜூன் காயத்ரிக்கும் பெரியத்தைக்கும் இரண்டு அறை காட்ட,
இல்லப்பா. நானும் என் மருமகளோடவே தங்கிக் கொள்கிறேன் என்று கூற, நாம நாளைக்கு பார்க்கலாம் என்று ஸ்ரீயிடம் கூறி விட்டு இருவரும் கிளம்ப, அர்ஜூன் ஸ்ரீயிடம்..நீ மருந்து போட்டுக்கலையா?
போட்டேன் அர்ஜூன். ஆனால் இங்க வச்சு அந்த ஆடை வேண்டாம்ன்னு தோணுச்சு.
மருந்து காய வேண்டாம்மா? இங்க யாரு உன்னை தப்பா நினைக்க போறாங்க?
இல்ல அர்ஜூன். எனக்கு தான்..தயங்கினாள்.
உனக்கென்ன? அர்ஜூன் ஸ்ரீ அருகே வர, நான் அனுவை தனியாக விட்டுட்டு வந்துருக்கேன் என்று நழுவ, அவள் கையை பிடித்து அவனிடம் இழுத்து அவளுடன் நெருக்கமாக நின்று, உனக்கென்ன?
ஒரு அவசரம்ன்னா வெளிய எப்படி வர்றது?
தாரி..பக்கத்து அறை தான உனக்கென்ன வேண்டுமென்று அவளிடம் கேட்டால் செய்யப் போறா?
தூங்குறவல..சும்மா தொந்தரவு செய்ய முடியாதே? அவளே கவின் சீனியரிடம் பேச முடியாத வருத்தத்தில் இருக்கிறாள். யோசித்த அர்ஜூன்..போ..ஆடையை மாற்று. தண்ணீர் எடுத்துட்டு போ. காலையில் எழுந்து குளித்து விட்டு வெளியே வா என்று அவளது இடையில் கையிட்டு இழுத்தான்.
அர்ஜூன்..என்று அவள் அவன் கையை எடுக்க, அவன் அவளை பார்த்து புன்னகையுடன், நீ தயாராக இரு. அவள் விழிக்க..நீ என்னிடம் சொல்ல வேண்டியதை சொல்லணும். அதுக்கு தயாராகு என்று விலகி..நான் வாரேன் என்று கிளம்ப, நில்லு அர்ஜூன்..நேரமாகுது நீ ஓய்வெடுக்கலையா?
காயத்ரிக்காவின் ஒரு பெரிய பிரச்சனை முடிந்தது. அது முழுதாக முடிந்ததால் தான் நான் வீட்டில் இருக்க முடியும்? காலையில் தான் வருவேன். பார்த்துக்கோ என்று அவளது கன்னத்தை தட்டி விட்டு, அனு விழித்தால் தேடுவாள். அறைக்கு போ என்று ஸ்ரீயை அனுப்பி விட்டு அர்ஜூன் போலீஸ் ஸ்டேசனுக்கு கிளம்பினான்.
மறுநாள் காலையில் பாட்டி..வாங்க என்று அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு வெளியேயிருந்து மறையின் நண்பர்கள் கத்திக் கொண்டிருந்தனர்.
இருங்கடா வாரேன். நிம்மதியா பூஜை பண்ண விடுறானுகளா? என்று பாட்டி அர்ச்சனையுடன் வெளியே வந்தார். அரிசி மூட்டை வந்துருச்சு. பார்த்துட்டு சொல்லு. நாங்க எடுத்து போறோம் என்று வேலு நண்பன் ஒருவன் கூற, வீட்டிலிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பாட்டியும் கணக்கிட்டு..எடுத்துட்டு போங்கடா பத்திரம். உங்க குதிரைகளை கவனிச்சு வேலையை முடிச்சிட்டு போங்கடா அவர் பேச ப்ளாக் கனைத்தான்.
இவனுக்கு என்னவாம்? பாட்டி கேட்க, அவன் அர்ஜூனை தேடுறான் என்றான் ஒருவன். வேலு எங்கடா போனான்?
பாட்டி, இன்று அவனுக்கு நிச்சய அழைப்பு இருக்கு. நாங்க பத்து மணி வரை தான் எல்லாத்தையும் பார்க்க முடியும். நம்ம ஊரார் அனைவருக்கும் இரவு சாப்பாடு மண்டபத்தில். கோவிலில் வைத்து நிச்சயம்.
அடேய்..பெரியவரும், அந்த பொண்ணு புள்ள அப்பாவும் ஊர்க்காரவங்க எல்லாருக்கும் சொல்லிட்டாங்க. எங்களுக்கு முன்னமே தெரியும். நீங்க பன்னிரண்டு மணி வரை இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு போங்க.
பாட்டி..எங்க ப்ரெண்டோட விழா. நாங்க தயாராக வேண்டாமா? ஒருவன் கேட்க, விழா இரவு ஏழு மணிக்கு தான். அதனால இப்ப வேலைய முடிச்சிட்டு போங்க. எங்கடா ஒருத்தன் குறையிறான்?
மறைக்கு உடம்பு சரியில்லை. வீட்ல இருக்கான். அவனோட வேலைய யாரு பார்ப்பா? பாட்டி கேட்டுக் கொண்டிருக்க அவனும் வந்தான்.
என்னடா பண்ணுது? பாட்டி அவனிடம் வந்தான்.
ஒன்றுமில்லை பாட்டி. கையில் லேசான அடிதான். இவனுக தான் பெருசா பில்டப் பண்ணுறானுக என்று மறை சொல்ல, அவன் கையை பார்த்து விட்டு, சுத்தம் பண்றத இவனுக பார்த்துப்பாணுக..நீ இங்க இரு. நான் வாரேன் என்று தோட்டத்து பக்கம் சென்றான்.
அவன் எழுந்து பிரௌனிடம் சென்று, உனக்கு அடிபடலையே? என்று ஆராய்ந்தான். தேங்க்ஸ் டா நேற்று அவனுக வர்றத நல்லா சொன்ன? என்று அவன் பேச, பிரௌனி கனைத்தாள்.
குதிரை கனைத்ததில் குழந்தைகள் வெளியே ஓடி வந்தனர். காயத்ரியும் ஸ்ரீயும் வந்தனர். ஏற்கனவே பெரியத்தை, பாட்டி, கமலி, நிவாஸ் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சரி..என்று புல்லுக்கட்டை எடுத்து அதற்கு போட்டுக் கொண்டிருக்க, ஏன்டா உனக்காக தானடா கிழவி கிட்ட பேசுனோம். நீ எதுக்கு வந்த?
இல்லடா. இரவு பிரெளனிய பார்க்க முடியலை. அவனுக்கு ஏதாவது ஆகி இருக்குமோன்னு தான் பார்க்க வந்தேன்.
அடப்பாவி..ப்ரெண்ட்ஸ் நாங்க இருக்கோம். ஆனால் நீ குதிரைய பார்க்க வந்தேன்னு சொல்ற?
பிரெளனி..இங்க பாரேன். அவன் உன்னை பார்த்து பொறாமைப்படுகிறான். நான் அவனை கவனிக்க போகவா? சிரித்துக் கொண்டே மறை கேட்க,
பிரெளனி மறையிடம் பேசியவனை பார்த்து காலை தூக்கி கனைத்தது.
ஒயிட் டார்லிங்..என்னை பார்த்து உன்னோட ப்ரெண்டு எப்படி கனைக்கிறா? பாரும்மா..என்றான் அவன்.
ஒயிட் அவனை பார்த்து விட்டு பிரெளனியை பார்த்து அவனை பார்த்தே கனைத்தது.
எப்படிடா? உன்னோட பிரெனியும், வேலுவோட பிளாக்கும் உங்களை ஒன்று சொல்ல விட மாட்டிங்கிறானுக?
மறை புன்னகையுடன், உங்களுக்கு குதிரையை விட முக்கியமான விசயம் அதிகமா தேவைப்படுதுல..இன்ன ஒயிட் என்று அவன் குதிரையை பார்க்க, ஒயிட் மற்றவனை பார்த்து கனைத்தது. இவர்கள் பேசிக் கொண்டிருக்க.. அங்கிள் என்று அனுவும், ப்ரெண்டு என்று ராக்கியும் அவனிடம் ஓடி வந்தனர்.
சேறா இருக்கு..விழுந்திருவீங்க..ஓடி வராதீங்க வேலு நண்பன் ஒருவன் பிள்ளைகளிடம் சொல்ல, ஸ்ரீயும் காயத்ரியும் பின்னே வேகமாக நடந்து வந்தனர்.