அத்தியாயம் 89

அர்ஜூன் விழித்து ஸ்ரீயை ரசித்து பார்த்தான். ஸ்ரீயா? நான்..என்று சுற்றி பார்த்தவன். ஹாஸ்பிட்டல் அறையா? நினைவு வந்து..எனக்கு தான் ஓய்வெடுக்க ஊசி போட்டாங்க. நான் தான் மயங்கினேன். ஸ்ரீ எப்படி? என்னருகே? அவள் அருகே படுத்திருக்காளா? அவள் செய்ய மாட்டாளே? சிந்தனையுடன் அவளை பார்த்தான்.

அவள் அவளாக படுக்கவில்லை. பிரதீப் தான் படுக்க வைத்தான் என்ற சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்து பார்த்தான். அம்மா..நீங்க என்ன பண்றீங்க? என்று கேட்டான். கமலி அமர்ந்திருந்தார்.

டாக்டர் தான் துணைக்கு இருக்க சொன்னார்.

அனு..எங்க?

அனு அஞ்சனாவிடம் வெளிய தான் இருக்கா.

அவளுக்கு இப்ப காய்ச்சல் சரியா போச்சா?

பரவாயில்லை.

ஸ்ரீ என்று அவளிடம் சென்று, இவளுக்கு என்ன ஆச்சு? என்று கேட்டுக் கொண்டே தொட்டு பார்த்தான். காய்ச்சல் அதிகமாக இருந்தது.

என்னம்மா பண்றீங்க? அவளுக்கு இவ்வளவு காய்ச்சலா இருக்கு. நீங்க சாதாரணமா இருக்கீங்க? ஆமாம் அவளுக்கு என்ன செய்தால் உங்களுக்கென்ன? வெளிய போங்க என சத்தமிட்டான்.

ஏற்கனவே நான் சொல்லிட்டேன். டாக்டர் வந்துருவாங்க என்று கமலி சொல்லிக் கொண்டிருக்க, நர்ஸ் ஒருவர் வந்து ஸ்ரீக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளை எடுத்தார்.

டாக்டர் எங்க? நீங்க எதுக்கு வர்றீங்க? அர்ஜூன் நர்ஸிடம் சினத்துடன் கேட்டான்.

சார், ஒரு முக்கியமான ஆப்பரேசன்ல இருக்காங்க. இப்ப வந்துருவாங்க சார். கத்தாதீங்க என்று பணிவுடன் சொன்னார்.

அமைதியான அர்ஜூன். சீக்கிரம் வரச் சொல்லுங்க என்று அவன் அம்மாவை பார்த்தான். கமலி தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்படி திடீர்ன்னு காய்ச்சல் வரும்? நீங்க என்ன செஞ்சீங்க? என்று அவன் அம்மாவிடம் வந்தான். அவன் கோபமாக அவரை பார்க்க, என்னிடம் எல்லாத்தையும் ஸ்ரீ சொல்லிட்டா. எனக்கு பிரச்சனையில்லை அவள் உன்னை ஏற்றுக் கொண்டால் நீ படித்து ஓர் நிலைக்கு வந்தவுடன் அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.

என்ன பேசுறீங்க? உண்மையா தான் பேசுறீங்களா? நீங்க மாத்தி பேசுனா சரியா இருக்காது என்று கரார் குரலில் அர்ஜூன் கேட்க,

மெலிதான புன்னகையுடன் அவள் பட்ட கஷ்டத்துக்கு உன் காதல் அவளை சரி செய்யும்ன்னு தோணுச்சு. அதான் ஏத்துக்கிட்டேன். ரௌடிதனமா சுத்திய ஸ்ரீயை தான் பிடிக்கலை. ஆனால் இப்ப ரொம்ப மாறி இருக்கா. எனக்கும் அவளை பிடிச்சிருக்கு என்று கமலி கூற,

இம்பாசிபுல் என்னால உங்கள நம்ப முடியாது.

இப்ப என்ன செய்யணும்னு சொல்ற?

அர்ஜூன் சிந்தித்து விட்டு, ஸ்ரீயை முழுவதும் சரியாகும் வரை நீங்க தான் பார்த்துக்கணும். யாரும் உங்க இருவரையும் தொந்தரவு செய்யாமல் நான் பார்த்துக்கிறேன்.

நான் பார்த்துக்கிறேன் என்றார்.

அவளுக்கு ஏதும் ஆகக்கூடாது. உங்களுக்கு புரிஞ்சதா?

நீ சொல்ல தேவையில்லை.

அவள் என்ன சொன்னாள்? எல்லாத்தையும் சொன்னாலா?

சொன்னால்..எல்லாவற்றையும் நீயும் கவினும் அந்த பயனிடமிருந்து உதவியதையும் சொன்னால் உதவிக்கு யாருமில்லாமல் அவள் கஷ்டப்பட்ட அனைத்தையும் சொன்னாள்.

அம்மா..இது தெரிந்தும் அவளை ஏத்துக்கிறீங்களா?

ம்ம்..தெரிஞ்சு தான் ஏத்துக்கிறேன். உனக்கும் அவளுக்கு இரண்டு மாதம் தான் வித்தியாசம். நீ குழந்தையாக இருந்த போது இங்கு தான் இருந்தாய்? படிக்க தான் அழைத்து சென்றேன். அங்கு தான் உன் அப்பா நம்மை விட்டு சென்றார். அவர் பணத்திற்காக என்னை விட்டு சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரை பழி வாங்க நல்ல நிலைக்கு வரணும் என்று உன்னை பாட்டியிடம் விட்டு தனியே இருந்தேன். எனக்கும் என் மகனுடன் நீ கூறியது போல் வாழ தான் ஆசை. ஆனால் எனக்கு அவரை பழி வாங்கும் எண்ணம் அதிகரித்ததே அவர் ஏற்கனவே திருமணம் செய்து இரு குழந்தைகளின் தகப்பனானது தான்.

ம்ம்..அஞ்சனா தான் அவரது முதல் தாரம். நான் இரண்டாவது தான். அவர் என்னை ஏமாற்றி சென்ற போது கூட தெரியாது. பிசினசுக்காக ரொம்ப அலைந்து திரிந்து ஊருக்கே கிளம்பி விடலாம் என்று எண்ணம் இருந்த போது தான் அவர் தங்கையிடம் பேசுவதை மறைந்திருந்து கேட்டேன். அஞ்சனா தொந்தரவு செய்வதாகவும் அவளுக்காக என்னை விட்டு வந்ததாகவும் பேசினார். அந்த தொந்தரவை நான் தான் தவறாக புரிந்து கொண்டேன்.

ஆனால் அவர் அஞ்சனாவை திருமணம் செய்த ஒரு வருடத்திலே நாங்கள் நம்ம ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அவர் அவளையும் விட்டு, என்னையும் விட்டு கஷ்டப்படுத்தி இருக்கார். அன்று எனக்குள் ஏற்பட்ட கோபவெறி தான் இன்று என்னை இந்த அளவு உயர்த்தியுள்ளது.

என்னை மன்னிச்சிரு அர்ஜூன். உனக்கு அம்மாவாக இருக்கும் தகுதியை கூட இழந்து விட்டேன் என்று அவன் காலை பிடித்துக் கொண்டு அழ, அர்ஜூன் அவன் அம்மாவை கட்டிக் கொண்டு..நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. நானும் யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் எல்லார் முன்னாடியும் உங்கள கஷ்டப்படுத்தி இருக்கேன் என்ற அர்ஜூன் அவர் எங்கம்மா?

அவரு..வெளியூர் போயிருக்காரு. பிசினஸ் ஆரம்பிக்க போறாராம்? யாரோ தெரிஞ்சவங்க கெல்ப் பண்றதா சொன்னாரு?

தெரிஞ்சவங்களா? யாரு?

தெரியல அர்ஜூன்.

எங்க போயிருக்காரு?

சைனா.

சைனாவா? யோசித்த அர்ஜூன் ஆதேஷ் அப்பாவிற்கு போன் செய்தான்.

ஆமாம்ப்பா. சைனா பிசினஸ் கவனிக்க ஆள் இல்லைன்னு புலம்பினேன். நான் செய்கிறேன் என்று கிளம்பி விட்டார்.

அங்க பாதுகாப்பா இருக்கும்ல அங்கிள்?

கண்டிப்பா..என்னோட ஆட்களிடம் சொல்லி அவரை பார்த்துக்க சொல்றேன்.

அப்புறம்..நம்ம ஊர்ல வச்சு அப்பாவுக்கு சப்போர்ட்டா பேசுனீங்க?

அவர் எங்களை விட்டு சென்றதன் காரணம் அவர் தங்கை தான். அவரை பயன்படுத்திக் கொள்ள தான் இவ்வளவு செய்திருக்கிறாள்.

அவளோட புருசன் அவளை கொல்ல வரும் போது தடுத்த உன் அப்பா அவரை வேகமாக தள்ளி விட்டதில் அவள் புருசன் அடிபட்டு இறந்து விட்டான். அதை வைத்து தான் இவரை அடிதடிக்குள் இழுத்து கடைசியில் தன் பொண்ணையும் கஷ்டப்படுத்தி இருக்கார். அவள் பணம்..பணம்..என அரித்ததில் அவர் எங்களிடமிருந்து வாங்கிக் கொடுத்து எங்களை விட்டு சென்றிருக்கிறாள். அவருக்கு சண்டை போட கூட வராது அர்ஜூன் என்றார் கமலி.

நல்ல குடும்பக்கதை என்றவன் ஸ்ரீ விசயம் தெரிந்தால் நீ ஏற்றுக் கொள்ளாமல் தானே இருக்கணும்? ஆனால் நீங்கள் எப்படி ஏத்துக்கிட்டீங்க?

கமலி ஏதும் கூறாமல் அழுதார்.

எதுக்கு அழுறீங்க? அர்ஜூன் கேட்க, அவர் மீண்டும் கதறி அழ..

அம்மா..என்று அர்ஜூன் உயிரை உருக்கும் குரலில் அழைக்க, தாங்கமாட்டாது அவள் நிலையில் தான் நானும் இருந்தேன். ஆனால் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன் என்றார்.

அர்ஜூனுக்கு உயிரே போனது போல் உணர்ந்தான். அம்மா…என்ன சொல்றீங்க? ஸ்ரீயை ஜிதின் ..போலா? உங்களுக்கும் நடந்தது.

ஆமா..அர்ஜூன் என்று முகத்தை மூடி கதறி அழுதார்.

அம்மா..என்று கத்திய அர்ஜூன் அவன் அம்மாவை அணைத்து, சாரிம்மா..சாரிம்மா..என்று கூறிக் கொண்டே கதறினான்.

அர்ஜூன்..இங்க பாரு? பாருடா..பாருன்னு சொல்றேன்ல..என்று கத்தினார் கமலி. ஸ்ரீ விழித்தாள். கோபச்சிவப்புடன் அம்மாவை விட்டு விலகிய அர்ஜூன் முகத்தை அழுந்த துடைத்து…யார்ம்மா? கேட்டான்.

ஸ்ரீக்கு அவர்கள் பேசுவது மட்டும் கேட்டது. அவளால் எழ முடியவில்லை. அர்ஜூன்..அகில் அந்த கொலைகாரன் பேசியதை சொன்னான்.

அர்ஜூன்..அந்த கதை நம் அகில், ஸ்ரீ அம்மா வாழ்வில் நடந்தது?

நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன சொல்றீங்க?

சொல்றத கேளு..எனக்கு என்னமோ அந்த கொலைகாரன், என்னை பலவந்தப்படுத்தியவனாக இருப்பானோ என்று சந்தேகமாக உள்ளது.

கொலைகாரனா? என்ன சொல்றீங்க விளக்கமாக சொல்லுங்க?

அர்ஜூன் அந்த கொலைகாரனின் முதல் காதலி. பேரழகின்னு சொன்னானே? அது ஸ்ரீயின் அம்மா சங்கரியும், இரண்டாவதாக குறிப்பிடுவது அகில் அம்மா ரதியும், அவன் பிசினஸுக்கு இடைஞ்சல் செய்தது மகேஷ் அண்ணா என்றும் அவன் கொன்றே தீருவேன் என்ற துரும்பு..என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே ஸ்ரீயாக இருக்குமோன்னு சந்தேகமாக உள்ளது என்றார்.

அப்படின்னா..அவன் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சு போச்சா? ம்ம்..தெரியும் என்றார் கமலி. இங்க இப்ப தான் அகிலுடன் பேசினேன். அவனாக தான் அவன் பேசியதை கூறி கேட்டான்.

அம்மா..உங்களை அவன் தானா?

ஆமாம் அர்ஜூன்..என்று அவர் மீண்டும் அழுது கொண்டு, என்னோட செக்கரட்டரி தான் எனக்கு அதிலிருந்து வெளியே வர உதவினார்.

அம்மா…என்று அதிர்ந்தான்.

இல்லப்பா. அவர் என் மீது வைத்திருந்த அக்கறையில் எனக்கு தான் அவரை பிடிக்கும். நான் தான் அவரிடம் கூற கூட இல்லை. எனக்கு பயமா இருக்கு அர்ஜூன். அவன்.. என்று கமலி சொல்லும் முன் நோ..அம்மா சொல்லாதீங்க என்றான்.

சாரிம்மா..நான் எதுவும் தெரியாமல் உங்களை திட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்.

அர்ஜூன்..அர்ஜூன்..அர்ஜூன்..ஸ்ரீ முணங்க அவளிடம் வந்தான்.

அர்ஜூன் எனக்கு பயமா இருக்கு. என்னை விட்டு போகாதடா. அவங்க எப்படி கொல்லுவாங்க தெரியுமா? பயமா இருக்கு அர்ஜூன். உனக்கு ஏதும் ஆகக்கூடாது. அவங்கள அப்படியே விட்டுரு அர்ஜூன். உனக்கு அனுவும், அனுவுக்கு நீயும் வேணும்டா. நாம ரெண்டு பேரும் இல்லாம போறதுக்கு நான் போறேன்டா. நீ அனுவ நல்லா பார்த்துக்கோடா. பயமா இருக்குடா..பயமா இருக்குடா..என்று அவள் கண்ணில் கண்ணீர் வடிய,

அவளை நிமிர்த்தி அணைத்து, இல்ல ஸ்ரீ. நாங்க மட்டும் எப்படி குடும்பத்தை முழுதாக்க முடியும்? நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது ஸ்ரீ. நம்ம யாருக்கும் எதுவும் ஆகாது ஸ்ரீ. பயப்படாத ஸ்ரீ. நான் இருக்கிறேன். நாம ரொம்ப வருசம் சேர்ந்து வாழணும்.

ஏஞ்சல் கண்ணை திறவேன். அம்மா உன்னை ஏத்துக்கிட்டாங்க. நீ தான் உன் காதலை சொல்ல மாட்டேங்குற?

அவள் காதலிப்பது உன்னை தான் என்று உனக்கு தெரியுமா அர்ஜூன்?

தெரியும்மா.

அவனிடம் மீண்டும் சொன்னதையே சொல்லி விட்டு ஸ்ரீ மயங்க கமலி அவளை பார்த்து, எழுந்திருடி..எழுந்திருடி..ன்னு கத்தினார். அர்ஜூன் டாக்டர் அறையை நோக்கி ஓடினான்.

டாக்டரை அர்ஜூன் ஸ்ரீ இருக்கும் அறைக்கு அழைத்து வர,. டாக்டர் அவளை பார்த்து விட்டு, சோர்வா இருந்ததால தான் மறுபடியும் மயங்கி இருக்காங்க. நர்ஸை அழைத்து, டிரிப் ஏற்ற சொல்லி விட்டு அவர் கிளம்பினார்.

அங்கே தாரிகா, அவள் அம்மா, ரதி இருந்தனர். அவர்களை பார்த்து தான் நேரத்தை பார்த்தான் அர்ஜூன். மாலை ஐந்தை காட்டியது. இவ்வளவு நேரமா தூங்கி இருக்கோமா?

ரதியிடம் சென்று, ஆன்ட்டி நித்தி? என்று கேட்டான்.

அந்த தம்பி பக்கத்துல இருக்கார்ப்பா.

அங்கிள்? என்று கேட்டார்.

அவர் ஹாஸ்பிட்டல் வந்துட்டார். நித்தியை அந்த பையன் பார்த்துக்கிறேன்னு சொன்னதால அவர் கிளம்பி வந்துட்டார்.

அம்மா..ஸ்ரீயை பார்த்துக்கோங்க என்று தாரிகா, கமலி இருவர் கையையும் பிடித்துக் கொண்டு அவன் நகர, அர்ஜூன்..என்று அனு அழைத்தாள்.

அனு..என்று அவளை தூக்கி காய்ச்சல் இருக்கிறதா? என்று பார்த்தான். இல்லை என்றதும் அவளையும் தூக்கிக் கொண்டு கேசவனை பார்க்க சென்றான்.

கேசவன் அவர் அறையில் சோகமாக அமர்ந்திருக்க, அர்ஜூன் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான்.

அங்கிள் இங்க என்ன பண்றீங்க? வாங்க வீட்டுக்கு போகலாம் அழைத்தான்.

இல்லை அர்ஜூன். நான் இங்கேயே இருக்கேனே?

அங்கிள். சார் உடன் இருந்தாலும் இப்பொழுது நீங்கள் கண்டிப்பாக அவளுடன் தான் இருக்கணும்.

என் பிள்ள..அம்மா சாவுக்கு தான் தான் காரணமென்று அவளையே வருத்திக் கொண்டிருக்கிறாள். என் மொட்டை போட்ட தலையை பார்த்தால் அவளுக்கு மேலும் தான் கஷ்டமா இருக்கும்.

அங்கிள்..நித்தி எல்லாத்தையும் ஏற்று தான் ஆகணும். ஆனால் நீங்களும் அவளிடம் இல்லை என்றால் நீங்களும் அவள் அம்மா சாவுக்கு அவ தான் காரணமென உறுதியாக நினைக்க ஆரம்பித்து விடுவாள்.

அங்கிள் நீங்க கிளம்புங்க..என்றான் அர்ஜூன். கேசவன் அழுதார்.

தாத்தா எதுக்கு அழுறீங்க? அனு அவரிடம் தாவி கண்ணீரை துடைத்து விட்டாள். அர்ஜூனுக்கு தீனாவிடமிருந்து போன் வந்தது.

வெற்றி வீட்டில் தீனா உள்ளே நுழைந்து சோகமாக புவனாவை பார்த்தான். துகிரா உதவியுடன் அவள் நடந்து கொண்டிருந்தாள்

என்னாச்சுடா? ஏதும் பிரச்சனையா? வெற்றி கேட்க, பிரதீப்பும் அவனை பார்த்தான்.

ஆமாப்பா. ஒரு பிரச்சனை இருங்க வாரேன் என்று சோபாவில் அமர்ந்து அர்ஜூனுக்கு போன் செய்தான்

அர்ஜூன் போனை எடுக்க, அர்ஜூன் நீ தப்பு பண்ணிட்டடா? அந்த பொண்ணோட குடும்ப ஆட்களிடம் எதுக்கு கம்பெனி பொறுப்பை கொடுத்த? நாம அனுவை கொல்ல வந்த பொம்பள சொன்னதை வைச்சு பார்த்தா. அவங்க வீட்ல பெரிய அம்மாவை தவிர, எல்லாரும் சொத்திற்காக தான் காத்திருக்காங்க.

காயத்ரிக்கா வீட்டாலுங்களா?

ஆமா அர்ஜூன்.

எனக்கும் சந்தேகமா தான் இருந்தது. இதை அந்த பெரியம்மா முன்னாடி வெளிய கொண்டு வரணும் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் அதை விட பெரிய பிரச்சனை அந்த பொண்ணு காயத்ரி, குட்டிப்பையன், நம்ம அனு பாதுகாப்பா இருக்கணும். இந்த பொம்பளையோட இது நிற்காது. கண்டிப்பா மற்றவர்களும் தாக்க வருவாங்க. அதுக்கு முதல்ல ஹாஸ்பிட்டல்ல இருந்து மூவரும் வீட்டுக்கு வரணும். அவங்கள அங்கிருந்து இன்று இரவுக்குள் மாற்ற பார். யாருக்கும் தெரியாமல் எங்க வீட்டுக்கு அழைத்து வா. பின் நான் என்ன செய்யலாம்னு சொல்றேன்.

அண்ணா..உங்க வீட்டுக்கா? அனுவுமா? அனு நாங்க இல்லாமல் இருப்பாளா?

அர்ஜூன் வேற வழியில்லை. யாருக்குமே தெரியக்கூடாது. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அவங்கள கூட்டிட்டு வா.

அண்ணா..அக்காவுக்கு இன்னும் சரியாகலைன்னு நினைக்கிறேன்.

அவங்க உயிரோட இருக்கணும்ன்னா அழைச்சிட்டு வா. எங்க வீட்டுக்குள்ள யாரும் உள்ள வராம நான் ஏற்பாடு பண்றேன் தீனா கூற, ஓ.கே அண்ணா..அவங்கள மாட்ட வைக்கவும் ஏதாவது செய்தே ஆகணும்.

எத்தனை நாள் உங்க வீட்ல இருப்பாங்க. அக்காவும் அந்த வீட்டுக்குள்ளே இருந்து தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. மேலும் அவங்கள அடச்சு வச்சு கஷ்டப்படுத்த கூடாது அர்ஜூன் சொல்ல.

கண்டிப்பா அர்ஜூன். செய்யலாம். முதல்ல அவங்க பாதுகாப்பா இங்க வரட்டும். பின் அவங்க எல்லாரையும் பிடிக்கலாம். உனக்கு எப்படி இருக்குடா?

நான் நல்லா இருக்கேன் அண்ணா. ஆனால் ஸ்ரீ தான்.

அவ சரியாகிடுவா. அந்த பொண்ணு, குட்டிப்பையன், அனு கூட கண்டிப்பா யாராது இருந்து கொண்டே இருக்கணும்.

ஓ.கே அண்ணா என்று அர்ஜூன் போனை வைத்து விட்டு அமர்ந்தான்.

அர்ஜூன்..என்று அவனிடம் அனு தாவ, அங்கிள் நீங்க ஒரே ஒரு கெல்ப் மட்டும் பண்ணனும். நீங்க இருக்கும் நிலையில் நான் கேட்கக்கூடாது தான். ஆனால் வேறு யாரிடமும் சொன்னால் விசயம் வெளியாகிடும்.

காயத்ரி அக்காவை மட்டும் பாருங்களேன். அக்காவை இரவு டிஸ்சார்ஜ் பண்ண முடியுமான்னு சொல்லுங்க. ப்ளீஸ் அங்கிள். அவங்க உயிருக்கு ஆபத்து என்றான்.

சரிப்பா..வா..பார்க்கலாம் என்று எழுந்தார். நமக்கு உரியவங்களுக்கு கூட தெரியக்கூடாது. நான் அவங்களை பாதுகாப்பாக அனுப்பிய பின் அனைவரிடமும் சொல்லிக்கலாம் என்றான்.

யாரிடமும் ஏதும் சொல்லாதீங்க? என்று கேசவனிடம் கூறி அழைத்து சென்றான்.

வெற்றி வீட்டில் பிரதீப் தீனாவிடம்..என்ன சொல்ற? அவங்க யாருமே சரியில்லையா? அப்படின்னா..அவங்க குடும்பம் இந்த பொண்ணை கொல்ல முயற்சி செய்வாங்களா?

காயத்ரியை கொலை செய்வதிலிருந்து தான் மறை காப்பாற்றினானா? கொலை செய்ய வந்தவர்கள் அவள் குடும்பத்தினரா? பிரதீப் கேட்க,

நம்ம வீட்டுக்கு ஏன்டா வரச் சொன்ன? வெற்றி கேட்டார்.

அப்பா..நான் செய்வதற்கு காரணம் இருக்குன்னு நம்புறீங்களா? இல்லையா?

நம்புறேன். ஆனால் நம்ம யாருக்காவது ஏதாவது ஆனால்?

யாருக்கும் ஏதும் ஆகாது.

அண்ணா..நாளை வரை பார்த்துக்கோ. அவங்கள ஏதாவது செய்து பிடிக்க பார்க்கிறோம் தீனா பிரதீப்பிடம் சொல்ல, என்னால வீட்ல இருக்க முடியாது. எனக்கு வேலை இருக்கு.

அப்படி என்னடா வேலை?

அதெல்லாம் சொல்ல முடியாது. வேலை இருக்கு அவ்வளவு தான்.

வேலுவை பக்கத்துல இருந்து பார்த்துக்க சொல்லுடா..தீனா கேட்க, டேய் அவனுக்கு நாளைக்கு நிச்சய அழைப்பு இருக்கு.

என்ன தான்டா பண்றது? தீனா கேட்டுக் கொண்டிருக்க, தருண் வந்தான்.

அனைவரும் அவனை பார்க்க, புவனா தீனாவை பார்த்தாள்.

நான் புவியை அழைச்சிட்டு போறேன் என்றான்.

தீனா அமைதியாக இருக்க, அதை விட முக்கியமான வேலை இருக்கு. மறை எப்படி இருக்கான்னு பாரு. வேலு ப்ரெண்ட்ஸ்ல அவனை தான் யாரும் பிடிச்சு வைக்க மாட்டாங்க. மத்தவனுக வீட்ல நைட் டைம்ல அதிகமா வெளிய விட மாட்டாங்க. பதில் சொல்லிட்டு அவனுகள வர வைக்க முடியாது. அதனால தருண், மறை ரெண்டு பேரும் அவங்க பக்கத்துல இருக்கட்டும்.

என்ன பேசுறீங்க? புரியலையே? தருண் கேட்க, பிரதீப் விசயத்தை கூறினான். யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னான்.

அர்ஜூனிடமிருந்து தீனாவுக்கு போன் வர, பிரதீப்பிடம் காட்டினான். பேசு என்று அவன் கூற, தீனா அர்ஜூனிடம் பேசினான்.

அக்காவுக்கு எல்லாமே ஓ.கேவாம். சில மருந்துகளை மட்டும் அவங்க எடுத்துக்கணுமாம். அதனால் நமக்கு பிரச்சனை இருக்காது. நான் அக்கா, அனு, ராக்கியை உங்க வீட்டுக்கு வரும் படி செய்கிறேன் என்றான்.

தருணும் மறையும் தான் அவங்க துணைக்கு இருக்க போறாங்க.

அண்ணா..எல்லாமே ஓ.கே உங்கள வீட்ல இல்லாம வேறெங்காவது வச்சு கையும் களவுமாய் பிடிக்கலாமே?

அர்ஜூன்..அது ரிஸ்க். நான் எங்க வீட்டை செலக்ட் பண்ணதே. எல்லாரும் இருப்பதால்..

அண்ணா…அதுவும் பிரச்சனையாக முடிய வாய்ப்புள்ளது.

நீ சொல்றதும் சரிதான். ஆனால் தருண், மறை இருவராலும் சமாளிக்க முடியுமான்னு தெரியல. நிறைய பேர் வந்தாங்கன்னா? கஷ்டம் அர்ஜூன். கண்டிப்பா யாருக்காவது ஏதாவது ஆகும்.

மறை அண்ணா பழகிய பிரெளனி அவங்களுக்கு துணையா இருப்பா. ஒரு சிறிய சத்தம் வந்தாலும் அலர்ட் பண்ணிடுவா.

நீ சொல்றதும் சரி தான். நானும் அவங்களுக்கு துணையா ஓர் ஏற்பாடும் செய்கிறேன். நீ சொன்னது போல்..எங்க வீட்ல வேண்டாம். பண்ணை வீட்ல வச்சுக்கலாம். நாம அவங்கள பிடிச்சே ஆகணும்.

தருண் இப்ப உங்க வீட்ல தான இருக்கான்.

ஆமா..

அவன் அங்கேயே இருக்கட்டும். நான் மறை அண்ணாவை பார்த்துட்டு வாரேன்.

தீனா போனை வாங்கிய தருண்..ஸ்பீக்கரில் போட்டு..அர்ஜூன் ஒரு வேலை யாரும் வரலைன்னா என்ன செய்யலாம்?

ஆமா..இப்ப தான் ரெண்டு பேர் மாட்டி இருக்காங்க. உடனே வர மாட்டாங்க..பிரதீப் கூற,

இதுக்கு ஏன்டா இப்படி யோசிக்கிறீங்க? வர வைக்கலாமே? அவங்க வேண்டியது சொத்து. அனுவுக்கு தான் சேரும்ன்னா..அந்த பொண்ணையும் குட்டிப்பையனையும் அவங்க எதுக்கு கொல்லணும்? வெற்றி கேட்டார்.

ஒரு வேலை வினிதாக்கா..காயத்ரிக்கா பேரிலும் மாத்தி கொடுத்திருப்பாங்களோ? துகிரா கேட்க, அக்கா என்னிடம் கொடுத்த எதிலும் காயத்ரிக்கா பற்றியே இல்லையே? அர்ஜூன் சொல்ல..

யாருக்கும் தெரியாமல் தனியா கூட செய்திருக்கலாம் பிரதீப் கூறி விட்டு அந்த பொண்ணு எழுந்தால் விசாரி அர்ஜூன். நாங்க மீண்டும் பார்க்க வந்தால் சந்தேகம் எழும்.

எழுந்தவுடன் அதை கேட்டு சொல்லு அர்ஜூன். அப்புறம் அந்த கம்பெனில உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா கண்காணிக்க சொல்லு என்றான்.

ம்ம்..சொல்கிறேன் அண்ணா என்று போனை துண்டித்தான்.

அர்ஜூன் முதல் வேலையாக அந்த கம்பெனி ஊழியர் லிஸ்ட்டை பார்த்தான். அதில் அர்ஜூன் அழைத்த பெரியப்பாவின் செக்கரட்டரி இருக்க..அவரை அழைத்து அவர்களில் இருவரை பிடித்து விட்டோம். நான் பேசுவதும் அவர்கள் யாருக்கும் தெரிய கூடாது. சொன்னால் என்ன ஆகும் தெரியும்ல சார்? நான் தான் இப்பொழுதைய முதலாளி. உங்களது குடும்ப நிலையை நினைச்சு பார்த்துக்கோங்க. நீங்களும் உடன் இருக்கீங்க? என்று ஒரு வார்த்தை சொன்னாலும் உங்கள் குடும்பம் அநாதையாகி விடும் என்று மிரட்டினான்.

என்ன செய்யணும் சார்?

எனக்கு ஏமாற்றி எடுத்த பணம் முதல் அவங்க சொந்த விசயம் முதற்கொண்டு வேண்டும். இல்லை என்று அவன் மிரட்ட..

சார்..ஒரு மணி நேரத்தில் தாரேன் சார் என்று போனை துண்டித்து அவன் யோசித்து அவர்களை சந்தித்து..சார் உங்க மருமகளுக்கு உடம்பு நல்லா ஆகிடுச்சாம். அவங்க இன்று இரவு டிஸ்சார்ஜ் பண்றாங்களாம். அதற்குள் அவங்களை கடத்தினால் தான் அவங்க சொத்தாவது கிடைக்கும் என்றான்.

பெரியப்பா..தான் இதை கேட்டு, இரவா டிஸ்சார்ஜ் பண்ணுறாங்க? அந்த சின்னப்பையன் அர்ஜூன் சரியான முட்டாள். நான் தான் காரணமென்று தெரியாமல் என்னை பார்த்துக்க சொல்லி கம்பெனியை என் பொறுப்பில் விட்டு சென்றுள்ளான். அவனை..அப்புறம் பார்த்துக்கலாம் என்று நாம் சம்பந்தப்பட்ட எல்லா பைல்லையும் எடுத்து பேங்க் லாக்கரில் நாளை போடணும். நீ அனைத்தையும் ஒரே இடத்தில் எடுத்து வை..என்று வெளியே கிளம்ப மற்றவர்களும் கிளம்பினர்.

அவன் அனைத்தையும் எடுத்து பிரகதியிடம் கொடுத்தான். அவள் அந்நேரமே அர்ஜூன் கூறிய இடத்திற்கு சென்று அவன் பெயரை கூறி கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டு அர்ஜூனுக்கு போன் செய்தாள்.

யோசித்த அர்ஜூன்..அபியிடம் அவன் காரை கொடுத்து பிரதீப்பையும் அழைத்துக் கொண்டு பிரகதியை பார்க்க கிளம்ப சொன்னான். அவர்களும் கிளம்பினார்கள்.

ஹாஸ்பிட்டலில் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே டாக்டர் என்ன சொன்னாங்க? அவளுக்கு மனஅழுத்தம் அதிகமாயிருக்காம். பிபீ அதிகமா இருக்காம். அதனால் குளுக்கோஸ் ஏற்றி இருக்காங்க. இரவு எட்டு மணிக்கு கிளம்பலாம் என்று டாக்டர் சொன்னாங்க என்றார் அஞ்சனாம்மா.

சரிம்மா..பார்த்துக்கோங்க என்று ரதியை பார்த்தான். அர்ஜூன் உன்னிடம் பேசணும் என்றார் அவர்.

ஆன்ட்டி, நாளைக்கு காலையில பேசலாமே? கொஞ்சம் வேலை இருக்கு என்று அனைவரும் வீட்டுக்கு போங்க. ஸ்ரீயுடன் அம்மாவும், அஞ்சனாம்மாவும், தாரிகாவும் இருப்பாங்க.

வேலுவை பார்த்த அர்ஜூன், அண்ணா மறை அண்ணா எங்க?

அவன் காலையிலே வீட்டுக்கு போயிட்டான்.

அண்ணா கொஞ்ச நேரம் இங்க எல்லாரையும் பார்த்துக்கோங்க என்று அனுவை தாரிகாவிடம் கொடுத்து, பார்த்து இருங்க என்று ஸ்ரீயை பார்க்க சென்றான். அவளுக்கு குளுக்கோஸ் ஏற..தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தான்.

யாராவது அவள் பக்கத்தில் இருங்கள் என்று அவன் வெளியேறினான்.

தீனாவிடம் அர்ஜூன் பேசி விட்டு போனை துண்டிக்க..சைலேஷ், மாதவ், சந்துரூ வந்தனர்.

நீங்க இங்க என்னடா வந்திருக்கீங்க? பிரதீப் கேட்க, தம்பி உள்ள வந்து பேசுங்க என்றார் வெற்றி.

மூவரும் உள்ளே வந்து அமர..மீனாட்சி டீ எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்.

நித்திய பார்த்துக்க யாராவது அங்க இருந்தா நல்லா இருக்கும். நாங்க சென்னை போகணும் என்றான் சைலேஷ்.

எதுக்கு காலேஷ் விசயமா? தீனா கேட்க, இல்லை என்று அனிகா பற்றிய அனைத்தையும் கூறி விட்டு, இங்கே வரும் முன் அவள் அப்பாவை பார்த்து பேசிட்டு தான் வந்தேன். அவர் ஏற்கனவே ஃபாரின் போகும் அனைத்தையும் தயார் செய்து தான் வைத்திருக்கிறார்.

அதற்கானது..அப்புறம் சொத்தில் 99 சதவீதம் அவங்களுக்கு கொடுத்துட்டு ஒரு சதவீதத்தை மட்டும் எடுத்து வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த ஆபத்தும் வராமலிருக்க..நாங்க சீக்கிரம் போகணும் என்றான்.

கிளம்புங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அர்ஜூன் காருடன் அபி வீட்டிற்கு வந்து பிரதீப்பை அழைக்க,

அப்ப அவரை நீங்க பாதுகாப்பா நேரடியாகவே பாரினிக்கு அனுப்பிட்டு வரலாமே? வெற்றி கூற, அவர் பொண்ணை பார்க்கணுமே சார் சைலேஷ் கூறினான்.

அபி, பிரதீப், சைலேஷ் மூவரும் போய் அழைச்சிட்டு வாங்க. இன்று அவர் பொண்ணுடன் இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு அனுப்பாலாமே? வெற்றி கேட்டார்.

ம்ம்..இருவரும் சரியாக பேசியது கூட இல்லை. வந்தாலும் நல்லது தான் சந்துரூ கூற, சைலேஷ் யோசித்தான்.

நம்ம ஊரு? நம்மை மீறி யாரும் உள்ள நுழைய முடியாது.

அவரை அழைச்சிட்டு வாரோம் என்று அபி, பிரதீப், சைலேஷ் மூவரும் கிளம்பினர். முதலில் பிரகதியை தான் பார்த்தனர். அவளிடம் பைல்ஸ் அனைத்தையும் வாங்கி பிரதீப் பார்த்து, ஹாட்டல் இருக்கு போலடா. அது தான் காயத்ரி பேர்ல இருக்கு. மாப்பிள்ள நம்ம பையனுக்கு சரியான லக்கு என்றான் பிரதீப் அபியிடம். அவனோ பிரகதியை முறைத்துக் கொண்டே வந்தான்.

என்னை எதுக்கு முறைக்கிற? நான் என் உயிரையே பணயம் வச்சு வந்துருக்கேன். நீ முறைக்கிற? பிரகதி கேட்க, அபி திரும்பி கொண்டான்.

ஏன்மா..உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கே? பிரதீப் கேட்க, அமைதியாக திரும்பிய அபி..பிராடு, துரோகி, சீட்டர் என்று பேசிக் கொண்டே போக..நிறுத்துங்க என்று சைலேஷ் கத்த காரை நிறுத்தினான் பிரதீப்.

சைலேஷ் வேகமாக இறங்கி ஓடினான். அங்கே அனிகாவின் அம்மாவை குத்திப் போட்டு அவருடைய அனைத்தையும் சிலர் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஏய்…என்று சைலேஷ் கத்தியதை கேட்டு அவர்கள் எடுத்ததை பயத்தில் போட்டு விட்டு ஓடினர். சைலேஷும் மற்றவர்களும் அவரிடம் வந்தனர்.

தம்பி..என்று கண்ணீருடன் என்னோட பொண்ணு..என்று அவர் அழ.. அனைவரும் அவரை தூக்கி காரில் போட்டு பக்கத்தில் ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.

அவர் சீரியசான நிலையிலிருந்து தப்பி உயிர் பிழைத்தார். கைரவிடம் கூறி அனிகாவை அழைத்து வரச் சொன்னான். பவியுடன் அமர்ந்திருந்த அனிகா கையை பிடித்து இழுத்து பைக்கில் ஏற்றினான் கைரவ்.

என்னாச்சு? என்று அனைவரும் பதறினர். நாங்க வந்து சொல்றோம் என்று வேகமாக பைக்கை ஓட்டினான். அவர்கள் வந்து சேர மணி இரவு பத்தானது.

சைலேஷ், அனிகா, கைரவ் அனிகா அப்பாவுடன் இருக்க, அபி, பிரகதி, பிரதீப் ஊருக்கு கிளம்பினர்.