அவ என்னை காதலிக்கலடா..என்று அதையே சொல்லி சொல்லி புலம்பினான்.
வேலு..இங்கேயே இறங்கிக்கோ. உன்னை குடிக்க வச்சு கூட்டிட்டு வந்தேன்னு தாத்தாகிட்ட நான் தான் வாங்கணும். நேரா வீட்டுக்கு போ..என்று பைக்கிலிருந்து வேலுவை இறக்கி விட்டு நண்பன் செல்ல..தள்ளாடி வந்த வேலு அவன் வீட்டையும் தாண்டி சென்று கொண்டிருந்தான். நேராக அகல்யா வீட்டின் முன் நின்று கண்ணை சுருக்கி..விரித்து பார்த்துக் கொண்டிருந்தான். பின் போன் செய்து தாத்தா…கதவை திற என்றான்.
தாத்தாவா? என்று அகல்யா, மாமா..குடிச்சிருக்கியா? கேட்டாள்.
அகல்யா அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள். அவள் பெற்றோர் அறைக்குள் இருக்க, ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள். தினக்குடிகாரன் போல் புலம்பிக் கொண்டே நின்றிருந்தான்.
மாமா..என்று கதவை திறந்து அவனருகே வந்து, ச்சீ..உவாக்..என்ன செஞ்சு வச்சிருக்க? என்று திட்டினாள்.
தாத்தா..நான் கொஞ்சம் தான் குடித்தேன் என்று கையை நீட்டியவாறு அவளிடம் வந்தான்.
அவள் புன்னகையுடன், மாமா..சின்னபுள்ள மாதிரி பண்ற? நான் என்ன உன்னை தூக்கவா முடியும்? தடிமாடு மாதிரி இருக்க..என்று அவனை உள்ளே இழுத்து சென்றாள்.
அவன் சத்தம் போட, அவன் வாயை மூடி..ஷ்..சத்தம் போட்ட. நீ மாட்டிப்ப?
தாத்தா உன்னோட குரல் என் பாப்பு குரல் போலே இருக்கே? என்று புருவத்தை சுருக்கி திறக்க முடியாத கண்ணை திறந்து பார்த்தான்.
அவள் அவனை அறைக்குள் இழுத்து சென்று கட்டிலில் போட்டு மூச்சு வாங்கினாள். அவன் எழுந்து அமர்ந்து, பெட்டா? நம்ம வீட்ல பெட் இருக்காதே? என்று தாத்தா…தாத்தா..என்று கத்தினான். சத்தம் கேட்டு அவள் பெற்றோர்கள் வந்தனர்.
மாமா..நீ வாயை திறந்த கொன்னுடுவேன் பார்த்துக்கோ.. என்று கொஞ்சம் சினத்தில் சத்தமாக பேசி விட்டாள். இருவரும் அவள் சத்தத்தை கேட்டு புரிந்து கொண்டனர். வேலு உள்ளே இருக்கிறான் என்று. அவள் அப்பா கதவை தட்ட கையை கொண்டு வந்தார். அவள் அம்மா..அதை தடுத்து..கதவில் காதை வைத்து ஒட்டு கேட்டார்.
என்னம்மா பண்ற?
இருங்க..என்ன செய்றாங்கன்னு பார்ப்போம். அவரும் கேட்க ஆரம்பித்தார்.
மாமா..மாமா..நான் அகல்யா. தாத்தா இல்லை..
என்னோட பாப்புவா?
நீ எப்ப நம்ம வீட்டுக்கு வந்த? வா..என்று அவளை இழுத்தான்.
மாமா..அட்டூலியம் பண்ணாத. நீ தான் எங்க வீட்டுக்கு வந்துருக்க?
பாப்பு..நீ எதுக்கு என்னிடம் பேசல? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? என்று அழுதான்.
மாமா..என்று பேச தடுமாறினாள். அங்கே வந்தார் தாத்தா..
ஏய்..என்ன பண்றீங்க? வேலுவ காணோம்.
மாப்பிள்ள உள்ள தான் இருக்கார் மாமா. குடிச்சிருப்பார் போல அகல்யா அம்மா கூறினார்.
அதுக்கு? வழிய விடுங்க? அவன ரெண்டு சாத்து சாத்தி கூட்டுட்டு போறேன் என்று அவர் முன் வந்தார். மாமா..கொஞ்ச நேரம் இருங்க..என்று மீண்டும் காதை கதவில் வைத்தார் அவள் அம்மா.
என்ன பண்றீங்க?
மாமா நீங்களும் கேளுங்க..
மாமா..நான் பேசல தான். ஆனால் எதையும் நான் மறக்கல..
இல்ல..நீ என்னை மறந்துட்ட? சத்தமிட்டான் உளறலுடன்.
மாமா..நான் நிஜமாகவே மறக்கலை. ஆனால் பேச மட்டும் தான் இல்லை.
உனக்கும் என்னை பிடிக்கலை. அதான் நீ பேசவில்லை. நானும் தாத்தாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? அவரு சாப்பிடாமலே இருந்தார். எனக்கு என்னோட வலிய சொல்லவா? அவரை சமாதானப்படுத்தவான்னு தெரியல.
வேற வழியில்லாமல் என்னோட வலிய மறைக்க பழகிட்டேன். அவரை நல்லா பார்த்துக்க ஆரம்பித்தேன். ஆனால் பள்ளியில் கூட நீயும் மச்சானும் பேசலையா? ரொம்ப கஷ்டமா இருந்தது.
பாப்பு..உனக்கு என்னை பிடிக்காதா? என் மீது காதல் வரவேயில்லை. அத்த மகனுன்னு ஆசை இல்லையா? போதையில் மனதில் உள்ளதை கேட்க ஆரம்பித்தான்.
இல்ல மாமா. எனக்கு உன்னை பிடிக்கும். உனக்கு காய்ச்சல் அன்று கூட நான் மருந்து வாங்கித் தந்தேன். அம்மா திட்டுவாங்கன்னு யாருக்கும் தெரியாமல் தான் செய்தேன்.
அவனுக்கு அவள் பேசியது கொஞ்சமும் ஏறல. அவன் கேட்டதையே கேட்க, அவனிடம் வந்து அவன் இதழ்களில் முத்தமிட்டு, உன்னை எனக்கு பிடிக்கும் மாமா. நீ ஏன் மாமா உன்னோட காதலை சொல்லாமலே விட்டுட்ட. நீ சொல்லி இருந்தா. உன்னை அப்பவே நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன்.
அவனை எப்படி பாப்பு உனக்கு பிடிச்சது? உன்னை காயப்படுத்தி..அவனுடன் வாழ முடிவெடுத்துட்ட. அவனை பார்த்தாலே எனக்கு தப்பா தான் தெரியுது. அவனிடம் ஏதும் சரியில்லை. உனக்கு எப்படி தோணாமல் போனது?
அவனிடம் பணம் உள்ளது. உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு அவங்க பண்ணவேயில்லை. நீங்க தான் தயார் செஞ்சீங்க? காதல்ன்னு சொல்றான் எல்லார் முன்னும் உன்னை பற்றி பேசும் போது ஏதோ..உன்னை காப்பது போல் பேசுறான். ஆனால் அவன் அம்மா பேசுறதுக்கு அவங்ககிட்ட பேசாம உன்னை சமாதானப்படுத்துறான்.
நீ அவனிடம் ஏமாந்துட்ட பாப்பு? அவன் தப்பானவன் போல் தான் தெரிகிறது என்று பேசிக் கொண்டு அவள் அருகாமையில் கதகதப்பை உணர்ந்த வேலு..அவள் தலையை இரு கைகளால் பிடித்து இழுத்து அவள் இதழ்களை கொய்தான்.
அவன் பேச பேச அகல்யாவிற்கும் சந்தேகம் வந்தது. ஆமாம்..காதல் முக்கியமென்று இருப்பவன் பணத்திற்காகவும் தன் அம்மாவிற்காகவும் திருமணத்தை நிறுத்த மாட்டான். அவனுடன் பழகிய அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் வேலு அவளை இழுத்து முத்தமிட ஆரம்பித்தான்.
மாமா..என்று பேச கூட இடைவெளி விடாது..முத்தமிட்டு கொண்டிருக்க, அவனை வேகமாக தள்ளினாள் அகல்யா. அவன் படுக்கையில் தொப்பென்று விழுந்தான். அவள் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தாள்.
அவன் விடாது, பாப்பு..என்னை பிடிக்காமல் எதுக்கு என்னை கட்டிக்கிறேன்னு சொன்ன? அவனை மறக்கவா? அவனை மறந்தால் என்னை காதலிப்பியா? என்று குழறலுடன் அவன் வார்த்தைகளை தொடுத்துக் கொண்டே இருந்தான்.
அவள் கண்ணீருடன், நான் உங்களை பயன்படுத்திக்கவே இல்லை. மாமா..எனக்கு உங்களை ஏற்கனவே பிடிக்கும். உங்கள் காதல் எனக்கு தெரிந்திருந்தால் நான் அவனை திரும்பி கூட பார்த்திருக்கமாட்டேன். நீங்க சொல்றது கூட சரின்னு எனக்கு தோணுது. அவன் அப்படியே படுத்து விட்டான்.
இன்று நான் கீழே பள்ளத்தில் விழுந்திருந்தால் உயிரோட இருந்திருக்கவே மாட்டேன். நீங்க எனக்காக வந்தீங்க? ஆனால் அவன் எல்லார் போலும் நின்றிருந்தான். அப்ப..அவனுக்கு என் மீது காதல் இல்லை. ஆனால் என்னிடமும் எதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு? அவன் என்னை ஏமாற்றணும்? அவளுக்கு அவளே பேசிக் கொண்டிருந்தாள்.
கதவு தட்டப்பட அவள் காதலனை பற்றி யோசித்துக் கொண்டே கதவை திறந்தாள். மூவரும் அவளை பார்த்து விட்டு உள்ளே சென்றனர். கட்டிலின் முனையில் ஒரு காலை மேலே போட்டு ஒரு கால் தொங்க ஏற்கனவே பேசியதை உளறிக் கொண்டிருந்தான்.
அகல்யா அம்மா..அவன் காலை மேலே தூக்கி வைத்தார். எழுந்து அமர்ந்து அவரை பார்த்தான் வேலு. அத்த..நீங்க எங்ககூட வந்துட்டீங்களா? எனக்கு ஊட்டி விடுவீங்களா? நீங்க எதுக்கு என்னை விட்டுட்டு போனீங்க? பாப்பு இல்லாததை விட நீங்க இல்லாம செத்து போயிடலாம் போல இருந்துச்சு.
அம்மா செத்தப்ப கூட எனக்கு அழுகை வரலை. ஆனா நீங்க யாரோ போல பார்க்கும் போது ரொம்ப வலிக்குது. நீங்க தான அத்த என்னை பார்த்துப்பீங்க? அம்மாவுடன் இருந்ததை விட உங்களுடன் தானே இருப்பேன். உங்களுடன் தானே தூங்குவேன். என்னை இப்படி விட்டுட்டு போயிடீங்க? என்னால தூங்கவே முடியல. ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அகல்யா அம்மா அழுதார். அத்த..மாமாவுடன் சண்டை போட்டு நீங்க அம்மாகிட்ட தான மாமாவ கம்பிளைண்ட் பண்ணுவீங்க? போன வாரம் கூட கம்பிளைண்ட் பண்ணீங்கள? அம்மாகிட்ட பேசுறீங்க? என்னிடம் பேச மாட்டிக்கிறீங்க? நானும் அம்மாவுடன் போயிருந்தா பேசுவீங்களா? அவன் கேட்க, எல்லாரும் அழுது கொண்டே அவனை பார்த்தனர்.
அகல்யா அம்மா..அவன் காலை பிடித்து அழுதார். இல்லப்பா..நான் குற்றவுணர்ச்சியில் தான் பேசலை. அம்மா இப்படி உன்னை விட்டு போவான்னு எனக்கு தெரியாதே? பின் உன்னை பார்த்தாலே குற்றவுணர்ச்சி வாட்டி வதைத்தது. நீ நான் தூக்கி வளர்த்த புள்ள..இப்படி பேசிட்டியே? நான் எப்படி தவித்து போனேன்னு எனக்கு தான் தெரியும் என்று கதறினார்.
இனி நான் உன்னை விட்டு போகமாட்டேன் என்று அவன் கையை பிடிக்க, அவன் மயங்கி அவர் மீதே சாய்ந்தான்.
அம்மா..நீங்க? என்று அகல்யா விழிக்க, ஆமாடி..நான் யாரையும் வெறுக்கல. என்னுடைய தேவையற்ற பயம் தான் எங்கள பிரிச்சது. என்னால அண்ணியையும் வெறுக்க முடியாது. என் வீட்டில் கூட எங்க காதலை போராடி தான் வெற்றி பெற்றோம். ஆனால் மாமா..என்னை பார்த்தவுடனே எங்க காதலை ஏத்துகிட்டார். எனக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கலன்னு தான் முதலில் கோபம். ஆனால்..இவர் பிசினஸ் நட்டமான பின் பயம். எங்கே எங்களை கவனிக்காமல் விட்டு வாரோ என்ற பயம் தான். என்னை இப்படி செய்ய வைத்தது.
ஏன்மா? அப்படி நான் பிரித்து பார்த்ததேயில்லை. நீ எப்படிம்மா இப்படி நினைச்ச?
என்னை மன்னிச்சிருங்க மாமா என்று அழுதார். அகல்யாவிற்கு போன் வர நகர்ந்து சென்றாள். போனில் பேசுபவன் அவளை வெளியே வரச் சொல்ல அவள் வெளியே வந்தாள். அவள் பின்னே அனைவரும் சென்றனர். அகல்யா வாசலுக்கு வெளியே வந்தவுடன் வண்டியிலிருந்து வெளியே வந்த ஒருவன் அவளை தரதரவென இழுத்து வண்டியில் போட்டான். பதறி அனைவரும் அவளிடம் வந்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வண்டியை எடுக்க, அவள் அப்பா வண்டி பின்னே ஓடினார். உள்ளிருந்து வெளியே எட்டி பார்த்த ஒருவன்..வண்டியை பின்னே எடுக்க சொல்லி அவர் அருகே வந்தவுடன் பொடி ஒன்றை அவர் மீது தூவி விட்டு வண்டியை எடுத்தான். அகல்யா வண்டியினுள் செல்ல..அவள் வாய், கை, கால்களை துணியால் கட்டிப் போட்டு அவளை அசைய விடாமல் ஒருவன் பிடித்திருந்தான்.
ஸ்ரீ மருந்தை போட்டு ஆடையை மாற்றி விட்டு தாரிகாவை பார்த்தாள். அவள் அனுவுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா..உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீ அர்ஜூன் அறைக்கதவை தட்ட யோசித்தாள். அவன் அவள் பின்னே நின்று, என்ன செய்ற? என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
அர்ஜூன் சாப்பிட்டாயா? தட்டை வாங்க வந்தேன் என்று அவனை பார்த்தாள். அவன் பார்வை அவள் மீதிருக்க..அர்ஜூன் என்று அவனது தலையில் தட்டினாள்.
சொல்லு..சாப்பாட்டியான்னு கேட்டேன்.
ம்ம்..என்று சமையலறையை பார்த்து, நீ இன்னும் சாப்பிடவில்லையா?
சாப்பிடணும் என்று அவனிடம் நீ போ. ஓய்வெடு என்று அறைக்குள் தள்ளினாள்.
நீ யாருக்காக சாப்பிட வெயிட் பண்ணுற?
அர்ஜூன் நீ போ..என்று அவன் கதவை சாத்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள். அர்ஜூன் புன்னகையுடன் படுத்தான்.
ஸ்ரீ டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்க..கவின் கீழிறங்கி வந்தான்.
சீனியர், இந்த நேரத்துல எங்க போறீங்க? ஸ்ரீ கேட்டாள். அவளை ஆழ்ந்து நோக்கிக் கொண்டு. என் மாமாவை பார்க்கப் போறேன். அவர் குடிச்சிட்டு கிடக்காராம் கவின் கூறிக் கொண்டே நடக்க,..
எந்த இடத்துல? அவன் ஓரிடத்தை கூறிச் சென்றான். சாப்பிட்டுக் கொண்டிருந்த கையோடு கவினை ஜன்னல் வழியே ஸ்ரீ பார்த்தாள். அவளுக்கு ஏதோ தவறாக பட்டது. அர்ஜூன் அறைக்கதவை தட்டினாள். கதவு திறந்து இருந்தது. அவள் உள்ளே சென்று அர்ஜூன்..அர்ஜூன்..என்று அழைத்தாள்.
நீ என்னை வெளியே அனுப்பி விட்டு என்னறைக்கு வந்துருக்க? அர்ஜூன் அவளை பார்க்க..அர்ஜூன் என்று அவள் ஏதோ யோசனையோடு அழைக்க..அவள் கையை இழுத்து அவளது விரல்களை சுவைத்தான். அவள் கையை உருவினாள். அவளை இழுத்து அவன் மீது போட..
டேய்..லூசு என்னை விடு. கவின் சீனியருக்கு ஆபத்துன்னு தோணுது? ஸ்ரீ கூற, சடாரென்று எழுந்து அமர்ந்தான்.
கவின் அறையில் தான இருக்கான்.
இல்ல அர்ஜூன் என்று ஸ்ரீ கூற, மாமாவ தான பார்க்க போயிருக்கான்.
உனக்கு தான் தெரியுமே? அக்காவும் அவரும் பிரிஞ்சுட்டாங்களே? அந்த கோபத்தில் கவினை ஏதாவது செய்து விட்டால்..ஸ்ரீ கூற, அர்ஜூன் சிந்தித்தான்.
எங்க போறேன்னு சொன்னானா?
கேட்டேன்..சொன்னான் என்று அவள் கூற, ஸ்ரீ அறைக்குள் போ என்று அர்ஜூன் கிளம்பினான்.
அர்ஜூன்.. என்று அவனை பார்த்து கலக்கத்துடன் கூறினாள். அவளிடம் வந்து அவளை அணைத்து..ஸ்ரீ ஒன்றுமில்லை அவனுக்கு ஒன்றுமாகாது என்று கிளம்ப, ஸ்ரீ ஓடிச் சென்று அவனை பின்னிருந்து அணைத்து..கவனமா இரு அர்ஜூன் .
அர்ஜூன்..அவளை பார்த்து, இதுக்கு என்ன அர்த்தமென்று யோசித்து வை என்று நான் வந்தவுடன் சொல்லணும் என்று அவளை பார்த்து விட்டு சென்றான்.
கவின் அவன் கூறிய இடத்திற்குள் நுழைய அவனை சிலர் தாக்கி பிடித்து கட்டினர்.
நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க. மாமாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.
உன்னோட மாமா சொல்லி தான் செய்றேன்டா.
மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க.
அப்படியா? உன்னோட அக்காவை என் அண்ணன் காதலிக்கவேயில்லை. அவள வித்தா நல்ல விலைக்கு போவா. என்னை விட அழகா இருக்கான்னு அவளை திருமணம் செய்து அவளை எடுத்துக் கொண்டு விற்க திட்டமிட்டோம். அம்மா..சும்மா டம்மிதான். எங்களுக்கு அம்மாவே கிடையாது. அந்த பொம்பள விபச்சார விடுதியில இருக்கிறவ. எல்லாம் எங்களுடைய நடிப்பு தான்.
உன்னோட ஆளும் ரொம்ப அழகா தான் இருக்கா. இப்ப நான் செய்றதுல. அவ உன்னோட மூச்சியில முழிக்ககூட மாட்டா..என்று கவினை நெருங்கி அவனருகே நின்று புகைப்படம் எடுத்தாள். அவன் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான். அவளுக்கு போன் வர..ம்ம்.சரி என்று அணைத்து விட்டு அவனிடம் வந்து நீ காத்திரு.
கவின் ஒரு திருமண மண்டபத்தில் இருந்தான். அவனை கட்டி தூக்கி வந்தனர். அர்ஜூன் வந்த வேகத்தில் முன்னதாகவே வந்தான். கவினை கட்டிச் செல்வதை பார்த்து..அவன் மாமாவிற்கு போன் பேசினான்.
கவின் முன் வந்த அந்த பொண்ணு. இங்க பாரு உன்னோட அக்கா இப்ப என்னோட அண்ணா கையில் என்றவுடன் கவின் பதறினான். என்னோட அக்காவுக்கு ஏதாவது ஆனால் உங்க எல்லாரையும் கொல்லாம விடமாட்டேன்.
அகல்யாவிற்கு வந்த போன் அவளுடைய காதலன் தான். அவன் கவின் புகைப்படத்தை அனுப்பி மிரட்ட அகல்யா வெளியே வந்தாள்.
அர்ஜூன் கவினை கடத்துவதை மட்டும் பார்த்தனர். வேறேதுனும் அவனுக்கு தெரியாது. மறைந்திருந்து அர்ஜூன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கவின் வீட்டில் தாத்தா..கவின் அப்பாவிடம்…சீக்கிரம் வேலுவை எழுப்பு. நான் அவன் நண்பர்கள்..என்று அவனிடமிருந்து போனை எடுத்தார். வேலு நண்பர்கள் அனைவரையும் வரவழைத்தார். கவின் அம்மா, அப்பா வேலு மீது தண்ணீரை பிடித்து பிடித்து ஊற்றினர். அவன் இமை அசைய ..எழுந்திருய்யா.. சீக்கிரமா எழுந்திரு..என்று அழுது கொண்டே அவன் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தார் கவின் அம்மா.
என்ன செய்ற? வழிய விடு என்று அவனது கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் கவின் அப்பா. ரொம்ப அடிக்காதீங்க பதறினார் கவின் அம்மா. அவரை பார்த்து முறைத்து விட்டு தண்ணீரில் தேன் கலந்து எடுத்து வா..என்று அவரை அனுப்பி விட்டு..மீண்டும் தண்ணீரை அவன் மீது ஊற்றுவதும்..அடிப்பதுமாக இருக்க..ஒரு கட்டத்தில் விழித்தான் வேலு.
எழுந்திரு..எழுந்திரு,…என்று அவனை அடித்தார் கவின் அப்பா. அவன் புரியாமல் மாமா..என்றான்.
சீக்கிரம்..போ..போ..என்று கத்தினார். அவன் நண்பர்கள் வந்தனர். கவின் அம்மா அழுது முகம் வீங்கிவாறு..தேனை எடுத்து வந்து தந்தார்.
அத்த..என்னாச்சு? என்று அகல்யா வருவாளா? என்று பார்த்தான்.
முதல்ல..இதை குடி என்று கொடுத்து விட்டு அகல்யாவை யாரோ கடத்திட்டாங்கன்னு சொன்னாங்க.
மாமா..பாப்புவையா?
நீங்க கடத்தியது எந்த வண்டி? வண்டி எண்? யாரையாவது பார்த்தீர்களா? என்று கேட்டனர் அவன் நண்பர்கள். அவனுக்கு இப்பொழுது தான் எல்லாமே புரிந்தது. வேகமாக எழுந்தான் வேலு.
அவர்கள் தேடும் முன் தீனாவிற்கு போன் செய்தான். அவன் எடுக்கவில்லை. உடனே போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்ய..ஒருவர் பேசினார்.
இந்த நேரம் யாரு சார்? தீனா சத்தம் கேட்டது. போனை சாரிடம் கொடுங்க சார் என்று வேலு..அகல்யா அணிந்திருந்த ஆடையை சொல்லி அவனுக்கு தெரிந்த அனைத்து விவரங்களை கூறினான்.
ஸ்டேசனில் ஊரை பாதுகாக்கும் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை பார்த்து அந்த வண்டி சென்ற வழியை கூறுங்கள்..வேலு கூற, தீனா..நீ அதை பார். வேலு நானும் வாரேன் என்று பிரதீப் கூறினான்.
அண்ணா..அங்க நீங்க? சரி விடுங்க. நீங்க இருந்து வழிய மட்டும் சொல்லுங்க..அவன் கூற, போலீஸ் அங்கே சுற்றி வளைக்க திட்டம் போட்டு கொடுத்தான் தீனா. வேலு கவனித்துக் கொண்டிருக்கும் போது அர்ஜூனிடமிருந்து தீனாவிற்கு போன் வந்தது. வேலு கேட்டவுடன் தான் பிரதீப்பும் தீனாவும் போனை ஆன் செய்திருப்பர்.
அந்த பய தான் அகல்யாவை கடத்திருக்கானாம்? என்று தீனா வேலுவிற்கு தகவலை சொல்ல, அப்பவே நினைத்தேன். அவன் ஏதோ சரியில்லைன்னு தோணிச்சு புலம்பினான் வேலு. தீனா யூகமாக கவினை வைத்து அகல்யாவை கடத்திருக்கலாம் என்று சரியாக சிந்தித்து கூறினான். தீனா, அர்ஜூன், வேலு போனின் இணைப்பை ஒன்றுபடுத்தினர். மூவரும் ஸ்பாட்டில் இருந்தே பேசினார்கள். தீனா கூறுவதை வைத்து வேலுவும் அவன் நண்பர்களும் செல்ல..அர்ஜூன் கவினிடம் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தான்.
உன் அக்கா..என் அண்ணாவிடம் சேர்ந்து விட்டாள். இனி அவளை அவள் இழந்து விஜயவாடாவிற்கு செல்லப் போகிறாள். பத்தே நிமிடம் தான் உன் அக்கா மானம் காற்றில் பறக்கப் போகிறது என்று அவள் பல்லை காட்டிக் கொண்டு சொன்னாள்.
உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டி..என்று கவின் கத்தினான்.
கத்துறியா? நீ வேண்டுமானால் உன் அக்காவை பார்க்கிறாயா? என்று வீடியோ கால் போட்டாள். அகல்யாவின் காதலன் எடுத்து..
என்னடா மச்சான, இப்படி கட்டி போட்டுருக்காங்களே? பாவம்டா..என் மச்சான்..
ஸ்ரீ ஹாலில் நடந்து கொண்டிருக்க, தாரிகா அவளிடம் வந்தாள்.
ஸ்ரீ..நீ தூங்கலையா?
தாரி..கவின் சீனியர் என்று கலங்கினாள் ஸ்ரீ.
அவருக்கென்ன?
ஸ்ரீ நடந்ததை கூற..ஏன்டி, உன்னிடம் சொல்லும் போதே போக விடாமல் தடுத்திருக்கலாமே?
தடுக்கவா? அவங்க மாமா விசயம். நான் என்ன சொல்லி தடுப்பது?
பயமா இருக்கு ஸ்ரீ. ஒன்றும் இருக்காதுல்ல தாரிகா பதட்டமானாள்.
அர்ஜூன் போயிருக்கான்ல.
அவனே சோர்வா இருந்தான். அவனுக்கும் ஏதாவது ஆனால்?
அர்ஜூனுக்கு ஒன்றுமாகாது..என்று ஸ்ரீ உறுதியாக சொன்னாள். தாரிகா..கவின் எண்ணிற்கு அழைக்க..போனை எடுத்தது அந்த ராங்கிக்காரி..
ஹே..டியர்..இங்க பாரு. உன்னோட ஆளு தான் என்று கவினிடம் போனை காட்டி விட்டு..வேண்டுமென்றே..ச்சீ, அங்க தொடாதீங்க…அய்யோ…விடுங்க.. என்று சிணுங்கி நடித்தாள். தாரிகா கண்ணில் நீர் தாரை தாரையாக கொட்டியது.
ம்ம்..பேசு. அப்புறம் எங்க தொட்டார்? நீ அவர் அருகே கூட செல்ல முடியாது. அவரு பொண்ணுங்களோட சுத்தி இருக்கார். ஆனால் யாரையும் தவறான பார்வை பார்த்தது கூட இல்லை.
நீ இருக்கியே கேவலமான பிறவி. அது எப்படி உனக்கு அவர் மாமாவா? என்ன வேண்டுமானாலும் செய்வாயோ? துடப்பம் பிஞ்சுரும் பார்த்துக்கோ. முதல்ல அவர அவிழ்த்து விட்டு பேசுடி..என்று அவள் பேசுவதை கேட்டதும் கவின் கண்ணீருடன் மனதினுள் மகிழ்ந்தான்.
நீ அனுப்பிய புகைப்படத்தில் நீ அவருடன் சேர்ந்து இருந்த மாதிரி அனுப்பி எங்கள பிரிக்க நினைக்கிறாயா? நீ அனுப்பியதை நீயே பாருடி மெண்டல். அதுல அவரை கட்டி வைச்சிருக்க கயறு நல்லா தெரியுது என்று கிண்டல் செய்தாள்.
நான் அவர் மீது கோபத்தில் பிரேக் அப் சொன்னேன். ஆனால்..நாலு வருசமா காதலிக்கிறேன். எனக்கு தெரியாதா? அவர பத்தி. அவர் மீண்டும் இதே தப்பு செய்துவிடக் கூடாதுன்னு புரிய வைக்க தான் பிரேக் அப் செய்தேன். என்னால் அவரை தவிர யாரையும் நினைக்க கூட முடியாது. உனக்கு இதெல்லாம் புரியாதுல்ல.
உச்..என்றவள் நான் அவனுடன் சேர்ந்து..அனைத்து வீடியோவையும் வெளியிடப் போகிறேன். அப்ப சொல்லு..உன்னோட காதலை.
போடி..உன்னால முடியுறத பண்ணு. காதல் இருக்கும் இடத்தில் தான் உண்மையான கூடல் நடக்கும். உன்னுடன் என்றால் அவருக்கு..எந்த சுகமும் தோன்றாது. சுகம் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் வேண்டும் அது காதலால் மட்டும் கிடைக்கும் என்று தைரியமாக பேசினாள். ஸ்ரீயே தாரிகாவை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
போனை வைடி. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டில் இருப்பார் என்று போனை வைத்து விட்டு காற்றை வாயிலிருந்து ஊதித் தள்ளினாள் தாரிகா.
அகல்யா காதலன் முன் சுண்டு படுத்திருந்தாள். விழித்திருந்தாள். அவளை கட்டிய நிலையிலே கீழே போட்டு வைத்திருந்தான். சுற்றிலும் அவன் ஆட்கள் இருந்தனர். அவள் வாயை மட்டும் எடுத்து விட்டான் அவன்.
டேய்..என்ன பண்ண நினைக்கிற? நீ என்னை காதலிக்கவேயில்லைல்ல.. கேட்டாள் அகல்யா.
கவின் சட்டையை கழற்றி கையில் ஆயுதங்களுடன் ஆட்கள் இருப்பதை பார்த்து அகல்யா..என்னோட தம்பிய விட்டுரு என்று கதறினாள்.
அக்கா..மாமா எங்க? கவின் கேட்டான்.
அவர் போதையில இருக்கார்டா..
மாமா..குடிக்கமாட்டாங்கன்னு தாத்தா சொன்னார்.
இன்று குடிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்தார். மனசுல இருக்கிற எல்லாத்தையும் பேசுனார். நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்டா. அவர் என்னை காதலித்ததை சொல்லாமல் விட்டுட்டார். எனக்கு தெரியாமல் போச்சுடா என்று கண்ணீருடன் பேசினாள்.
அக்கா..அவனிடமிருந்து தப்பிச்சு போயிரு. அவன் உன்னை பணத்துக்காக விற்கப்போறான் என்று அவன் தங்கை கூறியதை கவின் கூற அவன் பயங்கரமாக சிரித்தான்.
ஏன்டி, காதல்னா எல்லாரும் நம்பிடுறீங்க? உன்னை போல எட்டு பேர திருமணம் செய்து வித்திருக்கேன். நீ ஒன்பதாவது ஆள். எல்லாரும் பணத்தை பார்த்து என்னிடம் வந்தாங்க. உன்னோட காதல் எனக்கு புதுசா இருந்தது. அது போல உன் மீது தீராத ஆசை வந்து விட்டது. அதனால் நான் உன்னை அனுபவித்து விட்டு, எனக்கு நீ வேண்டாமென்று நினைத்தால் அனுப்புகிறேன். இல்லை நானே உன்னை வாங்க முடிவெடுத்துள்ளேன். ஆனால் உன்னை விட கூடாதுன்னு உன்னோட மாமா..குடித்து போதையாகி நினைவிழந்த நிலையில் உன்னை தூக்கினேன். அவன் உன்னை பார்க்கும் போது நீ எனக்கு இரையாகி இருப்பாய் என்று அவளது கால்களை மட்டும் விடுவித்து மீண்டும், வாயை அடைத்தான்.
என்னோட அக்காவ விட்டுருடா..ப்ளீஸ்..வேண்டாம். அவளால் இதை தாங்கிக்க முடியாது. விடுடா…விடுடா..கதறினான். ஆனால் அவன் காதில் வாங்கவேயில்லை. அகல்யாவை நெருங்கி..அவளது இதழ்களை அடைய குனிந்தான். அவன் தலையில் அவளது தலையை வைத்து வைத்து ஓங்கி முட்டினாள் அவள்.
ஆ…என்று கத்தி விட்டு, ஏய்..அவ கைய அவிழ்த்து விடுங்கடா என்று சீறிய அவன் அவளை அசைய விடாது இறுக்கமாக பிடித்தான். அவளது ஸ்கர்ட்டை விலக்கி அவள் மீது படர்ந்தான். அவள் வாயை அடைத்தாலும் கதறினாள். அவனை தொட விடாமல் தள்ளிக் கொண்டே இருந்தாள்.
சின்னதா சீன் போட்டா..என்னை வேண்டாம்னு சொல்வியா? இப்ப பார்க்கலாம்..என்று அவள் வலுவிழந்து சோர்வடைய வைத்தான். பின் அவளை அடைய துடித்தான். அவளும் சோர்ந்து மயங்குவது போல் வந்து அவனை பிடித்து தள்ளி எழுந்து ஓடினாள். அனைவரும் அவளை விரட்ட ஓரிடத்தில் ஓளிந்தாள். அவன் கண்டறிந்து அவளது டாப்பை பிடித்து தூக்கினான். அவளது மார்பிற்கு கீழே தெரிய..கதறி அழுதாள்.
மீண்டும் அவளது ஆடையில் கை வைத்து பின் அவன் அலறினான். அவ்விடம் வந்து போலீஸ் அவனை சுற்றி வளைக்க, கவின் இருக்கும் இடத்தில் அர்ஜூன் அவன் மாமாவுடன் வந்தான். கவின் அர்ஜூனை அணைத்து அழுதான். இரு இடத்திலும் ஒரே நேரத்தில் போலீஸ் வந்ததால் அவர்கள் யாராலும் தப்ப முடியவில்லை. சென்னையில் அவள் தங்கையையும்..இவர்கள் கோட்டையூரில் அகல்யா காதலனையும் பிடித்தனர். அர்ஜூன் மாமா..அனைவரையும் பார்த்து..இந்த கேஸை மாதவ் விசாரிக்கட்டும். அவரை அழையுங்கள் என்று ஆர்டர் கொடுத்தார். மாதவிற்கு விசயம் தெரிந்து சற்று நேரத்திலே அவனும் வந்தான்.
அகல்யா சோர்ந்து ஓர் ஓரமாக அமர்ந்திருந்தாள். வேலுவும் அவன் நண்பர்களும் வந்தனர். அவன் கண்கள் அவ்விடமெங்கும் துலாவியது. பிரதீப்பும் வந்தான்.
வேலு அகல்யாவை பார்த்து ஓடி வந்தான். அவள் அவனை பார்த்து மாமா..என்று தேம்பி தேம்பி அழுதாள்.
ஒன்றுமில்லை என்று அவன் சமாதானம் கூற, அவனை பார்த்த நிம்மதியில் சோர்வுடன் என்னால விழிக்க முடியல மாமா..என்று கண்களை மூடினாள். அவன் அவளை தூக்கிக் கொண்டு அவன் பைக் பக்கம் செல்ல, இந்தா காரை எடுத்துட்டு போ..நான் வாரேன். இவனை ஸ்டேசனில் வைத்து பார்த்துக்கிறேன் என்று பிரதீப் வேலு வண்டியில் சென்றான்.