அத்தியாயம் 74

அர்ஜூன்..நீ ஏற்கனவே வந்துருக்கிறாயா? இன்பா கேட்க,

ம்ம்..வந்துருக்கேன் மேம். அனுவை அக்காவை தேடியதால் அவளை அழைத்து வந்துருக்கேன்.

அபி…இங்க தயாரிக்கும் பொருள் அனைத்தும் சரியா இருக்கா? இல்லையென்றால் அதை சரி செய்யும் பொறுப்பு உன்னுடையது. தற்பொழுது நீ மேமிற்கு அசிஸ்டெண்டாகவும்  இருக்கணும். அப்புறம் பார்த்துக்கலாம். அதற்கான ஹெட்டை வர சொல்லி இருக்கேன். தயாரிக்கும் வேதிப்பொருள், தாதுக்களில் சின்ன பாயின்ட் கூட மிஸ் ஆகக்கூடாது. கல்லூரி முடிந்து வந்து நீ அதை சரிபார்க்கணும். இன்றிலிருந்து ஆரம்பம். ஓ.கே தான? அர்ஜூன் கேட்டான்.

ஓ.கே பாஸ் என்றான் அபி.

டேய்..ஓட்டாதடா..என்று சிரித்த அர்ஜூன், மேம்..உங்களுக்கு வேண்டிய விவரத்தை வந்து கொடுப்பார்கள். அனைவரும் யார் என்று நன்றாக பார்த்துக் கொண்டீர்களா?

அவங்க நம்மள ஏத்துக்க நிறைய கேள்விகள் கேட்பாங்க. தயாரா இருங்க.

சார், ஸ்டாஃப்ஸ் வந்துட்டாங்க என்றவுடன் மூவரும் வெளியே வந்தனர்.

மூவரும் நடந்து வர, எதிரே சினத்துடன் வந்தான் காயத்ரியின் கணவன். வந்தவன் அர்ஜூன் மார்பில் கைவைத்து நிறுத்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

கையை எடுடா? அர்ஜூன் சொல்ல, அபி அவனது கையை எடுக்க, அபியை பிடித்து அவன் தள்ளினான். அவன் காலை இறுக்கியவாறு அப்படியே நின்றான் முறைத்துக் கொண்டு. பின் அர்ஜூனை அடிக்க கையை ஓங்கினான். இன்பா தள்ளி நின்றாள். அவனை தான் பார்த்து இருப்பாளே?

அர்ஜூன் அவனை தள்ளி விட்டு நகர, எழுந்து அடிக்க வந்தவன் கீழே விழுந்தான். அவன் சட்டையை பிடித்து இழுத்து அவனை சுற்றி விட்டு தூக்கி கீழே போட்டு,..படிக்கிற பசங்கன்னா என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்ன்னு நினைப்பா? என்று அர்ஜூன் நாக்கை மடித்து மிரட்டி அவனை தூக்கி விட்டு,

காய்ஸ், உங்க மேனேஜர் வேலையை விட்டு செல்லப் போகிறார். எல்லாரும் பை சொல்லுங்க. என் மேல கை வச்சதுக்காக மட்டும் தான் அடிச்சேன்.

வேலை போனது எதுக்குன்னா? இந்த பொறுக்கி ஒரு பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தான். இதுல பல பொண்ணுங்களோட பழக்கம் வேற.

செக்யூரிட்டி..என்று அர்ஜூன் கத்த, அவர் வந்தவுடன் இவன் என்றுமே நம்ம கம்பெனிக்குள்ள நுழையக் கூடாது என்று அவனை தள்ளி விட்டு..அவனுக்கான ரெசிக்னேசனை தயார் செய்யுங்க. நான் பேசிட்டு வந்துடுறேன் என்று அனைவர் முன்னும் வந்தான். அபி இன்பாவை பார்த்தான். அவளிடம் பயத்தை பார்த்து, அவளது கையை பிடித்தான். அவனை பார்த்து, விடு..என்று அர்ஜூன் பின் சென்றாள். அபியும் சென்றான். அனைவரும் அர்ஜூனை பார்த்து வியந்தனர்.

ஒரு நிமிடம் அனைவரையும் ஆழ்ந்து பார்த்த அர்ஜூன்..ஒரு பொண்ணை பார்த்து அதிர்ந்து அபியை பார்த்தான். அவன் அவளை பார்த்து சினமாக..அபி..என்று கையை அழுத்தினான் அர்ஜூன்.

பின் பேச ஆரம்பித்தான். நாளை முதல் நீங்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க். ஒரு மாதம் வரை உங்களது வேலை சிறப்பாக அமைந்தால் அதற்கேற்ற பணிஉயர்வு கிடைக்கும். நம்ம கம்பெனி இலாபத்தை வைத்து..அதாவது உங்கள் உழைப்பிற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். செய்யும் வேலையை தெளிவாகவும், சிறப்பாகவும் செய்யணும்.

நாங்க படிக்கும் பசங்க..ஆனா இவங்க அப்படி இல்லை..முடிச்சிட்டு எங்க காலேஷ் பிரபசரா இருந்தாங்க. இவங்க அப்பாவை ஏமாற்றி ஒரு பொறம் போக்கு அவங்க கம்பெனிய வாங்கிட்டான். ஆனாலும் தளராது நம்ம கம்பெனி “சி.இ.ஓ” வா வந்துருக்காங்க. அர்ஜூன் போதும் என்று இன்பா உற்சாகமாக பேசினாள். அனைவரும் கைதட்டல் கொடுத்தனர். நம்ம இன்பாவுக்கு பேசவா சொல்லித் தரணும்?

அர்ஜூன் அபியின் அறிவுத்திறமையை பேசி அவன் செய்யப் போவதை கூறினான்.

அவர்களில் ஒருவன் முன் வந்து, உங்க அம்மா கமலி தான? அவங்க கம்பெனிய எடுக்காம இங்க வந்திருக்கீங்க?

சார்..நீங்க தொலைக்காட்சி பார்க்கலையா? அதுல எல்லாமே சார் பேசினாரே என்று மற்றொருவன் பேசினான்.

நீங்க உங்க போன்ல கூட பார்க்கலாம். பார்த்துட்டு அவனிடம் நாளைக்கு கேள்வி கேளுங்க? அபி கூறி விட்டு..நாற்காலியில் அமர்ந்தான். இன்பா அவனை பார்த்து முறைத்தாள்.

என்னாச்சு மேம்? நீங்க ஓய்வெடுக்கணுமா? அபி கேட்க, வேலைய வச்சுக்கிட்டு,.உட்கார்ந்திருக்க என்று மேலும் முறைத்தாள். அர்ஜூன் அவர்களை பார்த்து சிரித்து விட்டு,..வேலைய கவனிங்க.

சார்..உங்களோட ஸ்மைல் அழகா இருக்கு ஒரு பொண்ணு கூற, ஹே..அவரு உன்னோட சின்னபையன். காதலுக்கு வயது முக்கியமல்ல அந்த பொண்ணு கூற, இன்பா அபியை பார்த்தாள். அர்ஜூன் இருவரையும் பார்த்தான்.

ஹேய்..சாருக்கு ஏற்கனவே ஆள் இருக்குப்பா. உன்னை விட அந்த பொண்ணு ரொம்ப அழகாக இருக்கும்.

நம்ம “சி.இ.ஓ” மேம்மை விடவா? என்று ஒருவன் கேட்க, இருவருமே சமமான அழகு தான். ஆனால் சார் உங்க ஆளு சின்னப்பொண்ணு மாதிரி இருக்காங்க.

அங்கே வந்த வயதானவர் தம்பி, நீங்க இப்படி நல்லா பேசினா கம்பெனி எப்படிப்பா முன்னேறும்?

சார், நீங்க சொல்ற மாதிரி உங்க மேம் இருப்பாங்க என்று அர்ஜூன் இன்பாவை பார்த்தான். சார் நான் மட்டும் அப்படி இருக்க மாட்டேன். என்னோட அம்மா அப்படி இருந்து தான் அவங்கள விட்டு தனியா வாழ்ந்தேன் பள்ளி படிக்கும்போதே. அதனால எல்லாமே கத்துக்கிட்டேன். இப்ப இந்த இடத்துல இருக்க காரணம் என்னோட தனிமை தான். அனுவுக்காக எதுவும் செய்வேன். அவள் இந்த கம்பெனிக்கு வரதுக்குள்ள பலமடங்காக பெருக்கி இருப்பேன். அதற்காக தான் இதை கையில் எடுத்தேன். எனக்கு அனு ஏதுமில்லாமல் இருக்கக்கூடாது.  அதுமட்டுமல்லாது வினிதா அக்கா சொன்னதுக்காகவும், அவங்க கணவர் உழைப்பு வீணாகக்கூடாதுன்னு தான் எடுத்திருக்கேன். இது அனைத்தும் அனுவிற்கானது மட்டுமே. அவளையும் நான் பாதுகாப்பேன் என்றான்.

அந்த பொண்ணு நிமிர்ந்து கூட பாராது அர்ஜூன் பேசுவதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அர்ஜூன் பேசினாலும் அவன் அந்த பொண்ணை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் வேலையை கவனிக்க சென்றனர். வினிதாவின் செக்ரட்டரி வந்து..சார் நீங்க சொன்ன மீட்டிங்கிற்கு ஆட்கள் வந்துட்டாங்க என்றான். மூவரும் கிளம்பினார்கள்.

அங்கே இருப்பவர்கள் நடுத்தர வயதுடையவர்களும், கல்யாணவதை எட்டுபவர்களும் இருந்தனர். இவர்களை பார்த்து சிலர் எழுந்தும் சிலர் திமிறாகவும் இருந்தனர்.

என்ன தம்பிகளா? சின்ன பசங்களெல்லாம் காலேஜ் போறதை விட்டு இங்க வந்து என்ன பண்றீங்க? என்று ஒருவர் கேட்டார். அபி முகம் மாறியது. ஆனால் அர்ஜூனோ..சார் சரியா சொன்னீங்க காலேஜ் போறவங்களால தான் எதையும் செய்ய முடியும். அதுவும் என்னை பற்றி தெரிந்திருக்குமே “ரா” குரூம்ஸ் முதலாளியே என்றான் கேலியாக..

என்ன தம்பி, பேச்சு ஒருமாதிரி இருக்கே?

அர்ஜூன் போனை எடுத்து, டேய்..கே..நீ என்ன பண்ணுற? ரா குரூப்ஸை ஹோல்டுல போடுடா. நம்முடைய அட்வைஸ் அவருக்கு தேவையிருக்காது. அவருடைய கம்பெனி பிரச்சனையே அவரே சரி பண்ணிக்கட்டும். அவருக்கும் படிக்கும் பசங்கன்னா எளக்காரமா இருக்காம்.

அந்த பக்கம் இருந்தவன், ஏ.ஜே சார் இப்படி பேசுறவங்களை நம் கம்பெனி மெயிலுக்குள்ள வரவே விடக்கூடாது. நான் வேண்டுமானால் வார்னிங் கொடுக்கவா? அவன் கேட்டான்.

நான் பார்த்துட்டு சொல்றேனே கே?

ஓ.கே சார் என்று போனை வைத்தான்.

என்ன சார் சொன்னீங்க? எனக்கு சரியா கேட்கலை என்றான் அர்ஜூன்.

என்னப்பா..நீங்க யாரு? உங்க அம்மாவுக்கே அறிவுரை கொடுத்த மன்னனாயிற்றே என்று புகழ்ந்து அமர்ந்தார்.

மிரட்டாமல் மிரட்டுகிறானே? என்று அர்ஜூனை பற்றி கிசுகிசுக்க, மற்றவர்கள் அமைதியானார்கள். ராஜவேல் மட்டும் அர்ஜூனை பார்த்து சிரித்தவாறு அவர் மகனை பார்த்து கண்ணசைத்தார். அவனும் அவர் போலவே சிரிக்க, அர்ஜூன் அவர்களை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அபி, இன்பாவை அறிமுகப்படுத்தினான்.

அங்கிருந்தவர் இன்பாவை பார்த்து, நீ மாணிக்கம் பொண்ணு தான? கேட்டார்.

எஸ் சார். நான் இங்கே எனக்கான பொறுப்புகளை சரியாக செய்வேன் என்றாள்.

நாங்க எப்படி நம்புறது? உன்னோட அப்பா நல்லவர் தான். அதான் ஏமாந்துட்டார். நீயும் யாரிடமாவது ஏமாந்தால் எங்க பணமும்  போயிடுமே?

சார், என் அப்பா விட்ட இடத்தை நான் பிடிப்பேன். என்னை யாரும் ஏமாற்றமுடியாது.

அப்படியா? என்று ஒருவன் அவளிடம் வந்து கையை இன்பா தோளில் வைக்க, அவள் அவனது கையை திருப்பி அழுத்தம் கொடுக்க அவன் கத்தினான்.

அபியும் அர்ஜூனும் கோபம் இருந்தாலும் அவனை பார்த்து சிரித்து விட்டு,

சார் நீங்க யாராவது எங்க மேம்கிட்ட பேசி ஜெயிக்கமுடியுமா? முடியும்ன்னு நினைச்சா முயற்சி செஞ்சு பாருங்களேன் அபி கூறினான். இன்பா அவனை முறைத்தாள்.

எதுக்கு மேம் வந்ததுல இருந்து முறைச்சுகிட்டே இருக்கீங்க? அபி அவர்கள் முன்னே கேட்டான்.

ஏன் அபி வெறுப்பேத்துற? அர்ஜூன் கேட்டான்.

தம்பி, அந்த பையன் வெறுப்பேத்தலை. அவன்..என்று பேசாமல்.. மற்றவர்களை பார்த்து பேசி தான் பார்க்கலாமே?

சார், இங்க என்ன அவங்கள பத்தி தெரிஞ்சுக்கவா வந்தோம் சிடுசிடுவென ஒருவன் பேச,

பாயிண்ட்டை பிடிச்சுட்டீங்க சார்? நீங்க வந்த வேலைய விட்டுட்டு.. பொண்ணு மேல கை வைக்கிறது நல்லாவா இருக்கு? என்று அபி அவனை முறைத்துக் கொண்டே கேட்டான்.

நீங்க நாங்க செய்யப்போற வேலைய பத்தி தெரிஞ்சுக்கலாமே?

அனைவரும் கவனித்தனர். அர்ஜூன் கம்பெனியை முன்னேற்றும் திட்டத்தை கூற கை தட்டினார்கள். அபியை பற்றி அறிந்து கொண்ட மருந்து தயாரிக்கும் அறிவியலாளர் அங்கே வந்து, அபியின் திறமையை பார்க்க வேண்டுமென்று அவர் லேபிற்கு அனைவரையும் அழைத்து சென்றார். அனைவரும் மாஸ்க் அணிந்து உள்ளே சென்றனர்.

சைனிங்கான ஒரு பிங்க் நிற பொடியை பார்த்த இன்பா அதை தொட வந்தாள்.

மேம்..அதை தொடாதீங்க என்று கத்திய அபி அவளை தடுத்து காகிதம் ஒன்றை நுனி அளவிற்கு கிழித்து அதில் போட்டான். அது தீ பற்றி எறிந்தது. அனைவரும் அதிர்ந்தனர்.

அபி அந்த அறிவியலாளரிடம், சார்…இதை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வையுங்கள். இல்லை தூசி பட்டால் கூட எறியும். பிளாஸ்டிக்கில் வைத்தால் அது பிளாஸ்டிக்கை அரித்து வேறொரு பொருளில் விழுந்து பிளாஸ்ட்டாக கூட வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் அதை பற்றியும் விளக்கி விட்டு..அழகான பொருளில் ஆபத்து நிறைய இருக்கும் என்றான். அனைவரும் வியந்து அபியை பார்த்தனர். அபிக்கு அந்த இடம் பிடித்து விட்டது. அவன் ஆர்வமுடன் சில பொருட்களை தொட்டும் சில பொருட்களை எடுத்து முகர்ந்தும் பார்த்தான். அதை பார்த்த அறிவியலாளர்,

இங்கே வா..என்று அழைத்து அபியை ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கு சில திரவங்களும் கலர்கலராக தூகள்களும் இருந்தன. அவன் தொட்டு, முகர்ந்து, உற்றுநோக்கி அவன் ஏதோ செய்து திடப்பொருள் ஒன்றை செய்து விட்டு, சொல்யூசன் சரி தானா? என்று மீண்டும் ஒரு முறை சரி பார்த்தான். பின் சார் பாருங்க. தயாராகி விட்டது என்று எழுந்து வந்தான்.

அபி, நீ என்ன பண்ண?

அது மாத்திரை ஆன்ட்டிபயாட்டிக்..இது காய்ச்சலுக்கானதல்ல. தொற்று நோய் பரவாமலிருக்க..என்று அவர் வைத்திருந்த அனைத்து பொருட்களின் பெயரை கூறி..சார்..இந்த திரவத்தை எங்க வாங்குனீங்க? இது ரொம்ப அரிதானது.

இது..என்று புன்னகையுடன்..இது டேஞ்சர் கூட. உனக்கு தெரிந்தே ஆகணுமா? கேட்டார்.

நோ..சார். நான் கல்லூரியில் இதை கேட்டு விசாரித்தேன். பதிலுக்கு திட்டு தான் கிடைத்தது. அதிலிருந்தே புரிந்து கொண்டேன் என்றான்.

சார்..உங்களது லேபை நான் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாமா? அபி கேட்க,

எதுக்கு வா..ஏற்கனவே நேரமாகுது. என்ன பண்ணப் போற? இன்பா அவனிடம் வந்து முணுமுணுத்தாள்.

அவளை பார்த்து விட்டு அங்கிருந்த கலர் பொடியை கையில் எடுத்து எண்ணையை அதில் விட்டு பார்த்தான். அபி..நேரமாகுது.

மேம் கொஞ்சம் அமைதியா இருங்க..என்று அவன் செய்வதை கவனித்தாள். மேம்..இங்க வாங்க என்று அபி இன்பாவை கையை பிடித்து அழைத்து செல்ல..இன்வெஸ்டர் ஒருவரிடம் இந்த பையன் திறமையான பையனா தான் இருக்கான். ஆனால் படிக்கும் மாணவன் ஆசிரியரிடம் நெருக்கமாக இருப்பது போல் தெரியுதே? அவர் பேச, சார் ஏதோ செய்யப் போறான் பாருங்க..என்று மற்றவர் கூற, இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த ராஜவேல் இன்பாவை தான் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவன் இம்முறை செய்ததை பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளம்பொண்ணு..ஓடி வந்து, வாவ் சூப்பரா பண்ணிட்ட..இத பண்ண நான் படுற பாடு இருக்கே..என்று அவள் அபி தோளில் கையை போட, இன்பா முகம் கோபத்தில் சிவந்தது.

அழகான குவளையில் வானவில்லின் ஏழு நிறங்கள் அடுத்தடுத்து தண்ணீரின் மேற்பரப்பில் படிந்து கண்ணுக்கு விருந்தாகியது. அபி அந்த பொண்ணோட பேச்சை கவனிக்ககூட இல்லை.

மேம் எப்படி இருக்கு? கேட்டான்.

நல்லா தான் இருக்கு என்றாள் சலிப்பாக.

மேம்..என்று அழைத்தான். அர்ஜூன் சைகையில் அபி மீது அந்த பொண்ணு கையை போட்டிருப்பதை காட்டினான்.

உச்..என்று அவள் கையை எடுத்து விட்டான். ஏய்..சொல்லு.. இது தயார் செய்ய நேரமாகுமே? எப்படி உடனே செய்தாய்? சொல்லிட்டுப் போ.

அபி ஒரு திரவத்தை கூறி, அதை பயன்படுத்தினால் கலர் கலக்க  என்றான்.

“தேங்க்யூ சார்” என இன்பா அருகே அபி வர, ராஜவேல் இன்பாவை மறித்து,

ஏம்மா..உனக்கு என்னை நினைவிருக்கா? கேட்டார்.

நீங்க..தெரியலையே சார் என்றார்.

அவர் போனை எடுத்து பல புகைப்படங்களை ஓட விட்டு, ஒரு படத்தை காட்டி..இப்ப தெரியுதான்னு பாரு என்றார்.

ராஜவேல், இன்பா அப்பா, இன்பா அதிலிருந்தனர்.

அங்கிள்..நான்..ரெஸ்டாரண்ட்..

டான்ஸ் என்றார்.

அங்கிள்..நீங்களா? எனக்கு மறந்தே போச்சு.

நீ அப்படியே மாறிட்டம்மா.

அங்கிள் நான் நல்லா தான் இருக்கேன். நீங்க தான் அடையாளமே தெரியாம மாறீட்டீங்க?

நானா? என்று அவர் அவரை பார்த்து விட்டு, தொப்பை கூடி விட்டதும்மா என்று சிரித்தார். அபி கோபமாக நின்றான். அவர் தன் மகனை அறிமுகப்படுத்த இன்பா அவனிடம் கை குலுக்கி அறிமுகமாகிக் கொண்டாள்.

அர்ஜூன் அவர்களை பார்த்து விட்டு அபியை அவர்களிடம் அழைத்து வந்து, இப்ப என்ன சொல்றீங்க சார்? என்று கேட்டான்.

அவர்கள் பிரபசரை பார்த்தனர். அவர் கையை உயர்த்தி மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள அர்ஜூன்..அவர்களை பார்த்தான். சரி..வாங்க செல்வோம் என்று எல்லாரும் வெளியே வந்தனர்.

இன்பா யோசனையோடு வெளியே வந்தாள். ஓ.கே நீங்க உங்க வேலைய ஆரம்பிக்கலாம் என்று அனைவரும் சென்றனர்.

அபி…கோபமாக இன்பா அறையில் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். அவள் ராஜவேலை பற்றிய யோசனையில் மூழ்கியிருந்தான். அர்ஜூன் மேசையில் இருந்த பெல்லை அழுத்த இருவரும் அர்ஜூனை பார்த்தனர். அவன் முகம் வெறுமையுடன் இருந்தது.

ஒருவர் உள்ளே வந்தார். சார்..என்று அர்ஜூனை பார்த்தார். நான் சொன்னேன்ல அந்த பொண்ணை பற்றிய இப்பொழுதுள்ள விவரங்கள் வேண்டும் என்றான்.

அர்ஜூன்..யாரு?

சொல்றேன் மேம்..என்று அபியை பார்த்தான். விரைவிலே அந்த பொண்ணை பற்றிய விவரத்தை அர்ஜூனிடம் கொடுத்தனர். அதை பார்த்தவன்..அந்த பொண்ணை வரச் சொல்லுங்க.

அர்ஜூன்..அவளா? என்று அபி முகம் மாறியது.

கதவை தட்டும் ஓசை கேட்டு,..”எக்ஸ்கியூஸ் மி சார்”

“எஸ் கம் இன்” அர்ஜூன் கூற, உள்ளே வந்தாள் பிரகதி.

அவளை பார்த்த அபி.. கோபத்தின் உச்சிக்கே போனான். அவளை அடிக்க கையை ஓங்கிய அபியை பார்த்து இன்பா மிரண்டு விட்டாள். அர்ஜூன் அபி கையை பிடித்து தடுத்தான்.

மேடம்..எப்படி இருக்கீங்க? என்னம்மா..உன்னோட ஆள் டேக்கா குடுத்துட்டு போயிட்டானா? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன், யார் இந்த பொண்ணு இன்பா? கேட்டாள்.

இவகிட்ட என்ன பேசிட்டு இருக்க அர்ஜூன்? போடி வெளிய..என்று அபி அவளை பிடித்து தள்ளினான்.

சாரி..அர்ஜூன். அன்று இருந்த மனநிலையில் அப்படி செஞ்சுட்டேன்.

உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா..என்னோட ஸ்ரீ வீட்டுக்கே வந்து அவள என் கண்ணு முன்னாடியே மிரட்டுவ? அது எப்படி நாங்க ஸ்கூல்ல தப்பு செஞ்சுகிட்டு இருந்தோமா? சரி..என்னையும் ஸ்ரீயையும் விடு. அகில் உன்னை என்ன செஞ்சான்? உன்னை எவ்வளவு நம்பினான்? அவனுக்கு உன்னை பற்றிய அனைத்தும் இன்னும் தெரியாது. அவன் ஏமாற்றப்பட்டது தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவான்? அதை விட உன் பேச்சை கேட்டு அவன் ஸ்ரீயை காயப்படுத்திய எல்லாமே நியாபகம் வரும்.

நான் உன்னிடம் ஒண்ணு மட்டும் கேட்கிறேன்? இனி என்னோட ஸ்ரீ, அகில் முன் வரவே கூடாது. வந்த உன்னை கொல்லாம விட மாட்டேன் என்றான். இவர்கள் பேசுவதை வைத்து இன்பாவிற்கு ஏதோ புரிவதும் புரியாததுமாய் இருந்தது.

சாரி..அர்ஜூன், இனி இப்படி யாரையும் ஏமாற்றமாட்டேன். நான் காதலிப்பவனுக்காக செய்தேன். அவன் வேறொரு பொண்ணை வலுக்கட்டாயப்படுத்தி அறைக்கு இழுத்து சென்றான். இதை பார்த்த ஸ்ரீ போலீஸில் கம்பிளைன் செய்து அவனை உள்ளே போட்டாள். அந்த கோபத்தில் தான் அவள் அகிலை காதலிப்பது தெரிந்து அவனை என் வழிக்கு கொண்டு வந்து அவர்களை பிரித்தேன்.

ஆனால் அர்ஜூன், அவன் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி என் குடும்பத்தையே ஏமாற்றி எங்களது அனைத்து சொத்துக்களையும் அவன் பெயரில் மாற்றி ஓடி விட்டான். அதனால் என் அப்பா உடல்நலமில்லாமல் படுத்து விட்டார். நானும் அம்மாவும் தான் சம்பாதித்து பார்த்துக் கொள்கிறோம். படிக்க கூட பணமில்லை என்று அழுதாள்.

அபி கோபமாக நல்லா அனுபவி. இது போதாது. உனக்கு இன்னும் வேண்டும் என்று ஆதங்கத்தத்துடன் கத்தினான்.

ஏம்மா..அந்த பையன் வேறொரு பொண்ணை கட்டாயப்படுத்தியது தெரிந்துமா நீ அவனை காதலித்தாய்? இன்பா கேட்டாள். பிரகதி தலைகவிழ்ந்து நின்றாள்.

அபி மீண்டும் சினத்துடன் அவளிடம் வர, அபி..நில்லு..நீ எங்க பக்கம் இருந்திருக்கலாமே? அர்ஜூன் கேட்க, அபி அமைதியாக நின்றான்.

நீயும் நம்பலைல்ல.

அப்படி இல்ல அர்ஜூன். அகில் கோபமா இருந்தானா? ஏதாவது பேசி அவனை கோபப்படுத்த வேண்டாமென்று தான் அமைதியாக இருந்தோம்.

ஓ..அகிலுக்காக பார்த்தீர்கள்? அப்ப ஸ்ரீ யாரு அபி? அவ அன்று எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா? அழுதா..ரொம்ப அழுதா?

ஸ்ரீ அழுது பார்க்கலைல்ல. அதான் மொத்தமா எல்லாரும் சேர்ந்து அவ அழுறத பார்க்கிறோம் என்று கத்தினான் அர்ஜூன்.

பிரகதி அர்ஜூனிடம், ஸ்ரீ..எப்படி இருக்கா? நான் இப்ப அவ மேல எந்த விரோதத்துலையும் இல்ல அர்ஜூன். நான் அவளை பார்க்கலாமா?

வேண்டாம். நீ உன் வேலைய மட்டும் பாரு. அவள பார்த்துக்க நாங்க எல்லாரும் இருக்கோம். நீ போ..என்றான் அர்ஜூன்.

அர்ஜூன்..அகிலிடம் ஒரே ஒரு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

இங்க பாரு பிரகதி, எனக்கு நிறைய வேலை இருக்கு. பிரச்சனை இருக்கு. அகிலை விட்டுரு. அவனுக்கு ஆள் இருக்கு..

ஸ்ரீயா? அவள் ஆர்வமாக கேட்டாள்.

சீற்றத்துடன் அவளை பார்த்தவன். ஒழுங்கா போயிடு. இனி நீ அகில், ஸ்ரீ விசயத்துல வரக் கூடாதுன்னு தான் உன்னை பேச அழைத்து வரச் சொன்னேன். போ..என்று கத்தினான். அவள் கதவை திறக்க மேகா உள்ளே வந்து,

டேய்..அர்ஜூன், அவன எங்கடா? நான் எவ்வளவு சொன்னேன். கல்லூரிக்கு வா..தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொன்னேன். நந்து வரவேயில்லை டா அர்ஜூன்.

வரலையா? சாரி..மேகா. உன்னிடம் சொல்ல மறந்துட்டேன். அவன் எங்க ஊருக்கு போயிருக்கான். என்னை பார்க்க வந்தான். உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. அவனாகவே கிளம்பி விட்டான்.

அடப்பாவி..நானே அவன் பக்கத்தில் இருக்கணும்ன்னு தான் அதே காலேஜ்ல குப்பைய கொட்டிகிட்டு இருக்கேன். அவன் மட்டும் நாளை காலேஜ் வர..நீ தான் என்னிடம் மாட்டுன?

அவன் வரலைன்னா..நான் என்ன செய்றது மேகா? நான் மறுபடியும் கூறுகிறேன். உன் அப்பாவிடம் பேசியதை அவனிடம் கூறி விடு. இல்லை அவனுக்கு தானாக தெரிய வந்தது. மறுபடியும் முருங்கமரம் ஏறிடுவான்.

போ..அர்ஜூன். நான் என் அப்பாவிடம் விட்ட சவாலில் ஜெயித்தே தீருவேன் என்றாள்.

எப்படி? நந்துவை தேடி அலைந்து கொண்டு ஜெயிக்கப் போகிறாயா? இங்க என்ன செய்யுற? உனக்கு எவ்வளவு தெரிஞ்சுக்கணும். போ..ஆரம்பி.

சீனியர் எங்க? மீட் பண்ணியா?

ம்ம்..வெளிய தான் இருக்கான்.

எதுக்கும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணு. இல்ல பிரச்சனையாகிடும்.

அர்ஜூன்..நமக்கு தான் பிரச்சனையாகும்? கிளம்பணும் இன்பா கூறினான். அர்ஜூனிற்கு மேசேஜ் வந்தது. கவின் அனுப்பினான். நித்தி அப்பா உடன் வருவதாக..

என்ன? யோசித்தான் அர்ஜூன். அபியும் அதை பார்த்து..அங்கிள் ஆன்ட்டிய பார்க்க வருவாங்க அர்ஜூன்.

வெட்டிங் டேவா? அர்ஜூன் கேட்டான். அபி தலையசைத்து,..உனக்கு எப்படி தெரியும்? கேட்டான்.

அஞ்சும்மாவும், ஸ்ரீயும் ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்கல்ல. அதுல தாரிகா அப்பா பெயர் இருக்கும் இடத்தில் என் அப்பா பெயரை பார்த்தேன். அவரை பற்றி அன்று விசாரித்தேன். அதே நோட்டில் தான் கேசவன் அங்கிள் பெயரும் ஆன்ட்டி பெயரும் இருப்பதை பார்த்து அன்று இரவு இங்கே வந்து ஆன்ட்டியை பார்த்தேன்.

நித்திக்கு தெரியாதுல்ல? அர்ஜூன் கேட்க, கவலையுடன் தெரியாதுடா அர்ஜூன். ஏன்டா நமக்கு மட்டும் இத்தனை பிரச்சனை?

தெரியலைடா என்று இருவரும் பேச, என்ன கதடா பேசுறீங்க? மேகா கேட்டாள்.

பின் உணர்ந்த அர்ஜூன் கவினை அழைத்து நந்துவை கேட்டான். அவனும் கிளம்பி விட்டான் என்று சொன்ன சத்தம் தான்..அர்ஜூனிடமிருந்து போனை பிடுங்கி..அவன் சாப்பிட்டானா? எப்ப வந்தான்? எவ்வளவு நேரமாகும்? மேகா கவினிடம் விசாரிக்க, நித்தி..உனக்கு தான் போன் என்று அவளிடம் கவின் போனை திணித்தான். மேகா அவளையும் விடவில்லை.

மேகா..என்று உரக்க கத்திய அர்ஜூன். போதும் கிளம்பு..என்றான். அர்ஜூன் அவனை பார்த்துட்டு போகவா?

என்ன விளையாடுறியா? நீ அவனை இப்ப பார்க்கணும். பக்கத்துல இருக்கணும்ன்னு நினைச்ச அவன் உன்னை விட்டு முழுவதுமாக போக வேண்டியது தான். உன் அப்பாவை பற்றி உனக்கு தெரியும்ல. சீரியசா இரு. அவன் உன் முன் வந்தாலும் உன் வேலை முடிந்தால் தான் காதல் கிடைக்கும். இதில் விளையாண்ட வாழ்க்கை முழுவதும் அழ வேண்டியது தான். பார்த்துக்கோ என்று திட்டி அனுப்பினான் அர்ஜூன். அவள் அழுது கொண்டே வெளியேறினாள்.

ஏன்டா, சொல்ற மெதுவா சொல்லு. அழுதுகிட்டே போறா பாரு.

அவகிட்ட இப்படி பேசுனா தான் கவனமா இருப்பா..அர்ஜூன் கூற, சாரிடா அர்ஜூன் என்று அபி அவனை அணைக்க, அதான் அவளுக்கு நினைவில்லையே விடுடா..வாங்க போகலாம் என்று அடுத்த கம்பெனிக்கு கிளம்பினார்கள்.

தருண் சென்று கொண்டிருந்த கார் ஊர் எல்லைக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாக நின்று விட்டது. அவனுக்கு பதட்டம் அதிகமாக யோசித்தான். தீனாவிற்கு போன் செய்தான். அவன் எடுக்கவில்லை. தீனா போனை வீட்டில் வைத்து விட்டு பஞ்சாயத்திற்கு வந்திருப்பான். அர்ஜூனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று யோசித்த தருண் பிரதீப்பிற்கு போன் செய்தான். அப்பொழுது தான் அங்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அர்ஜூன் ஏற்கனவே பிரதீப்பிடம் தருண் வருவதை சொல்லி இருப்பான். பிரதீப் போனை வேலு நண்பன் ஒருவனிடம் கொடுக்க, அவன் பேசி விட்டு பிரதீப் காதில் கூறினான்.

என்னோட காரை எடுத்துட்டு போ..என்று சாவியை கொடுத்தான். அவன் அங்கே சென்று பார்த்தால் தருண் தனியாக சண்டை போட்டுக் கொண்டிருந்தான். காரினுள் அனைவரும் பதறிய வண்ணம் இருந்தனர். கார் கதவை லாக் செய்து வைத்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

ஏய்…யாருடா நீங்க? என்று வேலு நண்பனும் தருணுடன் சேர்ந்து கொண்டான். தருணிற்கு அடிப்பட்டிருந்தது. அதை பார்த்த வேலு நண்பன்..நீ உட்காருடா..என்று அனைவரையும் விலாசி எடுத்தான்.

அவர்களுள் ஒருவனை மட்டும் பிடித்து யாருடா..உங்கள அனுப்பியது? கேட்டான். அவன் தப்பிக்க முயற்சிக்க..அவனை கயிற்றால் கட்டி கார் டிக்கியில் போட்டு பூட்டினான்.

தருண் வந்த காரில் அவன் ஏறி, அவன் வந்த காரில் அனைவரையும் ஏற்றி விட்டு, இதயாவை பார்த்து கார் ஒட்டுவாயா? கேட்டான்.

ம்ம்..என்றாள். தருண் அவளுக்கு வழி சொல்லு என்று அவனை காரின் முன் ஏற்றினான். இதயா காரை எடுத்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. தருண் அவளது கையை பற்றி அழாதே என்று கண்ணசைத்தான்.

வெற்றி-மீனாட்சி திருமணம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். வேலுவின் நண்பன் பிரதீப்பிற்கு போன் செய்து நடந்ததை கூறினான்.

திருமண தம்பதியினர் வீட்டிற்கு கிளம்ப தீனா பிரதீப்பை பார்த்தான். நீ போ..நான் வாரேன். பார்த்துக்கோ..என்று தன் புல்லட்டை உதைத்தான். துகிரா அவனிடம் வந்தாள். துகி..நீ போ..நான் வந்துடுறேன்.

எங்க போறீங்க? நானும் வரவா? கேட்டாள்.

நீ வீட்டுக்கு போ. அப்பத்தா உன்னை தேடப் போகுது? போ..என்றான். அவனை பார்த்துக் கொண்டே அவள் சென்றாள்.

பிரதீப்பை பார்த்து இதயா காரை நிறுத்தினாள். அவனும் வேகமாக இறங்கி வந்து தருணை பார்த்தான்.

உனக்கு ஒன்றுமில்லையே என்று கேட்டுக் கொண்டே மற்றவர்களை பார்த்து, வேற யாருக்கும் ஏதுமில்லையே? கேட்டான்.

இல்லப்பா, தம்பிக்கு தான் ரொம்ப அடிபட்டிருக்கு. கொஞ்சம் சீக்கிரம் போனால் நல்லா இருக்கும் இன்பா அம்மா கூறினார்.

வேலு நண்பனை அழைத்து,..நீ காரை ஓட்டு. ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல் என்று அவனையும் தருண் வந்த காரில் ஏற்றி விட்டு, பிரதீப் அவன் புல்லட்டை விட்டு..காரை எடுத்து சென்றான். செல்லும் போதே வேலுவையும் ஹாஸ்பிட்டலில் இருக்கும் அவன் நண்பர்களையும் தொழிற்சாலைக்கு வரவைத்தான்.

பிரதீப் சோர்ந்திருந்த அவனை அவனது தொழிற்சாலையில் கட்டிப் போட்டான். வேலு பின் நண்பவர்களும் வர அவனை மிரட்டி தருணை மறிக்க சொன்னவனை கண்டறிந்தனர். அவன் காயத்ரியின் கணவன். அவனை பற்றி விசாரித்து விட்டு பிரதீப் ஸ்டேசன் சென்று அவனை ஒப்படைத்து விட்டு வேலுவை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். தருணுக்கு காயத்திற்கு மருந்து போட்டு அவன் துருவனை பார்த்து விட்டு அமர்ந்திருந்தான்.

வா..போகலாம் என்று பிரதீப் தருணை அழைத்தான்.

அண்ணா..துருவன்? தருண் கேட்டான்.

பிரதீப் ரதியை பார்த்து விட்டு, நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க. அத்தை அதுவரை அவனுடன் இருப்பாங்க என்று அபி அம்மாவிற்கு போன் செய்து வர சொல்லி அமர்ந்தான். பின் காயத்ரியை பற்றி தருணிடம் கேட்டு அறிந்து கொண்டான்.

வேலு நண்பன் ஒருவன் அங்கிருக்க..இவங்க எல்லாரையும் பத்திரமா விசாலாட்சி பாட்டி வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நான் அவங்களிடம் சொல்லிடுறேன் என்றான்.

இதயா தருணை பார்த்துக் கொண்டே நின்றாள்.

நீ போம்மா. அவன் வருவான் பிரதீப் கூற, அவளும் சென்றாள். அந்த காயத்ரியின் குட்டிப்பையன் அழ..கொஞ்சம் சீக்கிரம் போங்களேன். பையனுக்கு பசிக்குது என்றார் காயத்ரி.

அவன் வேகமாக சென்றான். பிரதீப் இங்கே போனில் அர்ஜூன் பாட்டியிடம் பேசினான். அவன் பேசி முடிக்க, இதயா, அவள் அம்மா, காயத்ரி, குட்டிப்பையன் வந்தனர்.

பாட்டிக்கு குட்டிபையன் அழும் சத்தம் கேட்டு நேரத்தை பார்த்து,..மங்கா இட்லிக்கு அடுப்புல வை என்று சத்தமிட்டுக் கொண்டே வெளியே வந்து அனைவரையும் அழைத்து உள்ளே சென்றார்.