வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-17
273
ஹாய்..ப்ரெண்ட்ஸ்
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான எபிசோடு 17
நண்பர்கள் விடுதிக்கு சென்ற பின் அர்ச்சு தலையில் கை வைத்து யோசித்தான். பின் வெளியே அர்ச்சு செல்ல கைரவும் வெளியே சென்று அர்ச்சுவை பார்த்தான்.அவன் உடைந்து அழுது கொண்டிருந்தான்.மெதுவாக அவனருகே சென்று கைரவ் உட்கார்ந்தான்.
நிவாஸ் உள்ளே சென்று ஸ்ரீயை பார்த்து, ஏதாவது கூறினார்களா? கேட்டான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. பார்த்து விட்டு தான் சென்றார்கள் என்று கூறி விட்டு மனதினுள் கயல் பேசியதை சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு சந்தோசமாக இருக்க ஒரு வாய்ப்பு. நீ யாரிடமும் நடந்த எதையும் கூறக் கூடாது. உனக்கு நான் கொடுக்கும் பிரச்சனையை யாரிடமும் கூறக் கூடாது. நீ காதலிக்க முடியாது. ஒரு வேலை நீ காதலித்தால் உன்னுடைய ரகசியத்தை அவர்களுக்கு தெரிய வைப்பேன்.அப்புறம் அவர்கள் உன்னை…என்ன பேசுவார்கள் என்று யோசித்து செயல்படு. அவர்களுடன் பழக மட்டும் தான் வாய்ப்பு. புரிகிறதா?…
அவள் உடனே சந்தோசமாக சரி என்றாள்.இதை நினைத்து விட்டு, நான் அவர்களுடன் நட்பாகவே இருப்போமா? நிவாசிடம் கேட்டாள்.
நானும் அதை தான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நிவாஸ் கூறி விட்டு இருவரும் சிரித்தனர். நீ ஓய்வெடு கொஞ்ச நேரத்தில் சாப்பிடலாம். உன்னை பார்க்க நான் அவர்களை விடவில்லை. அவர்கள் சென்று விட்டனர் என்றான்.
அனைவரும் சென்று விட்டார்களா? பாவம் போல் வினவினாள் ஸ்ரீ
இல்லை,அர்ச்சுவும் கைரவும் இருக்கிறார்கள்.
நீ ஓய்வெடு….நிவாஸ் வெளியே சென்றான்.
நிவாஸ் கைரவிடம், நீங்கள் கிளம்புங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.அழுது கொண்டிருந்த அர்ச்சு நிமிர்ந்து இருவரையும் பார்த்தான்.
ஸ்ரீ வீட்டிற்கு கிளம்பிய பின் நான் செல்கிறேன் என்றான்.
இனி எங்களது விசயத்தில் தலையிடாதீர்கள். அவர்களுக்கு கொலை செய்வது தினசரி வேலை போல் என்று நிவாஸ் கூற, கைரவ் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
அர்ச்சு கைரவிடம், நீ தாராளமாக ஸ்ரீக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் உன்னை கூப்பிடுகிறேன். அப்பொழுது வா.இப்பொழுது கிளம்பு என்றான்.
கைரவ் அர்ச்சுவிடம்,உன்னுடைய போனை கொடு என்று வாங்கி அந்த வீடியோவை பார்த்தான். இப்பொழுது அது இல்லை.
இது தெரிந்தது தான். இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் அர்ச்சு கூற, கைரவ் அவனது நம்பரை அர்ச்சு போனில் கைரவ் பெயரை போட்டு உற்றதோழன் என்று பதிவு செய்தான்.எனக்கு உன்னுடைய தைரியம் பிடித்து விட்டது. அர்ச்சு அவனை நிறுத்தி அணைத்துக் கொண்டான். தற்பொழுது அர்ச்சுவிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. கைரவை அணைத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். அர்ச்சுவை பார்த்து சிரித்துக் கொண்டே கிளம்பினான் கைரவ்.
நிவாஸ் அர்ச்சு அருகே வந்து, உங்களுக்கு எங்களுடைய ஆன்ட்டியை தெரியுமா?
அவர்களை ஒரு முறை உங்கள் வீட்டருகே பார்த்திருக்கிறேன்.அவ்வளவு தான். ஸ்ரீயின் ஆன்ட்டி என்பதும், அவள் அந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்பதும் தெரியாது. எனக்கு உன்னுடைய உதவி தேவை.
நானும் அதை பற்றி பேச தான் வந்தேன். உங்களால் எப்படி அவர்களை எதிர்த்து நிற்க முடிந்தது? ஆன்ட்டியை பார்த்து பெரியவர்கள் கூட பயப்படுவார்கள்.உங்களுக்கு பயமே இல்லையா?
எனக்கு ஸ்ரீயை தவிர வேறேதுவும் பெரியதில்லை.
அவளை நீங்கள் ஆழமாக காதலிப்பது தெரிகிறது.ஆனால் எவ்வித பயனும் இல்லை. அவள் உங்கள் யாரையும் காதலிக்க மாட்டாள். உங்களுக்கு வேறொரு துணையை தேடிக் கொள்ளலாமே! நிவாஸ் கூற அர்ச்சு அவனை பார்த்து சிரித்தான்.
அதை விடு. பிரச்சனையை பற்றி பேசுவோமா?
எனக்கு அந்த ஜிதினை பற்றி கூறு? அர்ச்சு கேட்டான்.
எங்களது குடும்பத்தில் முதலில் என்னுடைய அப்பா, பின் ஸ்ரீயின் அப்பா, அப்புறம் தான் ஆன்ட்டி. அவர்களுக்குள் கம்பெனி பிரச்சனை ஓடிக் கொண்டிருந்தது. என்னுடைய அம்மா அப்பாவையும் கொன்றதும் இந்த ஆன்ட்டி தான் கண்கலங்கினான். நான் இந்த கைரவ் போல் தான் நடந்து கொள்வேன். வீட்டின் ஒரே பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம்.அவர்கள் இறந்த பின் என்னை வேலைக்காரர்கள் கூட மதிக்கவில்லை. தனிமையில் நான் வாடிய சமயம் தான் ஆன்ட்டி என்னை பார்க்க வந்தார்கள். சொத்து முழுவதும் வேண்டும் என்றார்கள். அப்பொழுது நான் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்று தெரிந்தும்,அவர்களை பழி வாங்க வேண்டும் என்று தான் வந்தேன். என்னுடைய பாதுகாவலார மாற கேட்டேன். அதற்கு பதில் என்னுடைய இருபத்து ஒன்றாம் வயதில் என்னுடைய சொத்தை அவர்களது பெயரில் மாற்றி தருகிறேன் என்று கூறி இருக்கிறேன். இன்னும் இரண்டு வருடத்தில் அவர்களை ஏதாவது செய்து அழிக்க வேண்டும். அதற்கு தான் காத்திருக்கிறேன்.
இங்கே வந்த போது ஜிதினும் அவனுடைய தம்பி ஆதியும் இருந்தனர். அவனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய அம்மா, அவர்கள் சாப்பிட்டார்களா? என்று கூட கவனிக்க மாட்டார்கள்.அவனுடைய அப்பா இறந்த பின் ஆதியை முழுவதுமாக ஜிதின் தான் பார்த்துக் கொண்டான். ஜிதினுக்கு அவன் இன்னோர் உயிர். ஆதி நான்காம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வான்.அவன் தான் குளிக்க வைத்து, அவனை தயாராக்கி சாப்பாடு கூட அவன் தான் ஊட்டி விடுவான். ஜிதின் அவனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டான்.ஆதியும் ஜிதின் இல்லாமல் இருக்கவே மாட்டான். நானும் அவர்களுடன் நன்றாகவே பழகினேன்.அந்த நேரத்தில் தான் ஸ்ரீயை அழைத்து வந்தனர். ஒரு வருடம் கோமாவில் இருந்தாள். பின் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து எங்களுடன் அவளும் இணைந்து கொண்டாள்.நாட்கள் நன்றாகவே நகர்ந்தது. ஸ்ரீ அம்மாவும், அப்பாவும் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். அம்மா ஆதியை நன்றாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் மனதளவில் இணைந்தோம். ஆதியும் ஸ்ரீயும் நெருக்கமானார்கள். அவள் ஆதியை பார்த்துக் கொள்வது ஜிதினுக்கு பிடித்து, நாளடைவில் அவள் மீது காதல் வந்து விட்டது.
ஆதியே அவனுக்கு திட்டம் ஒன்று போட்டு கொடுத்து, காதலை வெளிப்படுத்த உதவினான். ஆதி, ஸ்ரீயும் ஜிதினையும் சேர்த்து வைப்பதில் மும்பரமாகி விட்டான்.அதற்கான வேலை முடிந்து ஸ்ரீ அறையை விட்டு வெளியே செல்ல முற்பட்டான். எதிலோ தீப்பற்றி அறை முழுவதும் பரவ, அவனால் வெளியே வர முடியவில்லை. அந்த நெருப்பிலே எறிந்து கொண்டிருந்தான். அப்பொழுது தான் நானும் ஸ்ரீயும் வந்தோம். ஜிதினை வேலைக்காரர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். ஜிதின் கதறி கதறி அழுதான்.ஸ்ரீயும் உள்ளே செல்ல முற்பட, அதற்குள் அவன் இறந்து விட்டான். ஸ்ரீயும் அதனால் பாதிக்கப்பட்டு விட்டாள். இரவில் ஆதி என்னை விளையாட அழைக்கிறான் என்று தூங்கவே மாட்டாள். இன்னும் கூட பயந்து இரவில் எழுவாள்.ஆனால் முன் போல் எதையும் என்னிடம் பகிர்ந்து கொள்வதில்லை. எனக்கும் அடிக்கடி அவனை பார்ப்பது போலே இருக்கும் … என்றான் வருத்தத்துடன்.
ஜிதின் ஒரு வாரம் ஆதி அறையினுள்ளே அவனது வீடியோவையே பைத்தியம் போல் பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்ரீ அம்மா, அப்பா தான் ஜிதினையும் பார்த்துக் கொண்டனர். சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருந்ததால் ஒரு நாள் அறையில் மயங்கி இருந்தான். அவன் தன்னால் தான் ஆதி இறந்து விட்டான் என்ற குற்றவுணர்வு அவனுள்ளே இருந்தது. இப்பவும் உள்ளது.அப்பொழுது நல்ல படியாக தான் நடந்து கொள்வான். ஆனால் அதிலிருந்து அவன் ஸ்ரீயை காயப்படுத்துவது போல் தெரிகிறது. அவளும் அவன் என்ன செய்தாலும் ஏதும் என்னிடம் கூற மாட்டாள். எனக்கு கஷ்டமாக உள்ளது. ஸ்ரீ நிலைமை தான் சரியில்லை. அவளை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நிவாஸ் கண்ணீரை துடைத்தான். கைரவும் வண்டியின் பின்னே ஒளிந்து நிவாஸ் கூறுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.
காயப்படுத்துவானா? என்ன செய்வான்? அர்ச்சு கேட்டான்.
அது…..தயங்கினான் நிவாஸ்.அர்ச்சுவின் பார்வை மாற,அவன் அவளை….. என்று மேலும் தயங்கினான்.அவளை அணைப்பது, முத்தமிடுவது என்று தொந்தரவு செய்வான். அத்தை அதை பார்த்தும் பாராதது போல் காட்டிக் கொள்வார்கள்.அதனால் தான் நான் அவள் அருகிலே எப்பொழுதும் இருப்பேன் என்றான்.
அர்ச்சு தனது முஷ்டியை இறுக்கமாக மூடி கண்கள் இடுங்க நிவாஸை பார்த்தான்.அவளை காப்பது மிகவும் கடினமாக தான் உள்ளது.
அவள் எதிர்க்க மாட்டாளா?
இல்லை. ஆனால் அவளுக்கு பிடிக்காது என்று தெளிவாக தெரியும்.ஏதோ காரணம் உள்ளது என்று நினைக்கிறேன்.
ம்ம்…அர்ச்சு சிந்தித்தான்.
நான் சாப்பிட வாங்கி வருகிறேன் நிவாஸ் கூற, நீ அவளை பார்த்துக் கொள். நான் வாங்கி வருகிறேன் என்று அர்ச்சு ஓர் அடி எடுத்து வைக்க, ஜிதின் கையில் டிபன் கேரியருடன் வந்தான்.நேராக ஸ்ரீ அறைக்கு சென்றான். இவர்களும் அவன் பின்னே சென்றனர். முதலில் ஜிதின் உள்ளே செல்ல,பின்னே இருவரும் சென்றனர். மூவரையும் பார்த்து ஸ்ரீ, நீங்கள் வெளியே இருங்கள். நான் சாப்பிட போகிறேன் என்று ஸ்ரீ கூற,அவர்கள் சென்றனர்.
ஜிதின் நீ இரு….இவர்கள் செல்லட்டும் என்றாள். நிவாஸ் முறைத்துக் கொண்டும், அர்ச்சு வருத்தமாகவும் வெளியே வந்தனர். கைரவ் வீட்டிற்கு சென்றான்.ஜிதின் சென்ற பின் ஸ்ரீக்கு மருந்து செலுத்தப்பட்டது. கொஞ்ச நேரத்தில் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு இருவரும் வெளியே வந்தனர். அவர்களை ஆட்டோவில் ஏற்றி விட்டு, அவன் பைக்கை எடுக்க நிவாஸ் அவனிடம் வந்து, வருத்தமாக உள்ளதா உங்களுக்கு? நிவாஸ் கேட்டான்.
அர்ச்சு சிறு புன்னகையுடன் பழகி விட்டது என்றான்.
பழகிவிட்டதா? நிவாஸ் கேட்க,
என்னடா செய்கிறாய்? எனக்கு சோர்வாக உள்ளது. சீக்கிரம் வா என்று ஆட்டோவிலிருந்து இறங்கினாள் ஸ்ரீ. அர்ச்சு அவளருகே வந்து, நீ உள்ளே இரு என்று முன் வர, அவள் ஏதும் பேசாமல் அவனை பார்க்க, அவன் விலகி, நிவாசை அழைக்க, அவள் அர்ச்சுவை பார்த்துக் கொண்டே ஏற, நிவாசும் வந்து ஏறினான். அர்ச்சு அவர்கள் பின்னே செல்ல,
நிவாஸ் அர்ச்சுவிற்கு போன் செய்து, நாங்கள் சென்று விடுவோம். நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.
நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் செல்கிறேன் என்று அர்ச்சு போனை வைக்க, ஸ்ரீயும் நிவாசும் அர்ச்சுவை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கு வந்தவுடன் அர்ச்சுவிற்கு ஸ்ரீ நன்றி கூறி விட்டு நொண்டிக் கொண்டே செல்ல, நேற்று ஆடை அனுப்பியதற்கு நன்றி நிவாஸ் கூறி விட்டு, எப்படி உங்களுக்கு தெரியும்? கேட்டான்.
அதுவா? நீ அவனை பற்றி கூறியதை வைத்து பார்த்தால் அவன் வெளியே தனியே விட மாட்டான். சாப்பிட மட்டுமல்லாமல்….ஏதாவது காரணத்திற்காக தான் வர வேண்டும். அது ஷாப்பிங்க் என்று தான் கூறி வந்திருப்பீர்கள் என்று யூகித்தேன்.
நன்றாகவே அவளை புரிந்து வைத்திருக்கிறீர்கள். கிரேட்…என்றான்.
எல்லா பொண்ணுங்களும் அதை வைத்து தானே வெளியே வர முடியும் என்று க்யூட்டாக சிரித்தான்.
ஸ்ரீயை அழைத்து உள்ளே சென்றான் நிவாஸ்.நேற்று சன்னல் வழியே அர்ச்சு தலைக்கவசத்தை கழற்றி விட்டு மீண்டும் அணிவதை பார்த்திருப்பான் நிவாஸ், ஸ்ரீ வந்து பார்ப்பதற்குள் அர்ச்சு சென்றிருப்பான்.
மறுநாள் கல்லூரியில் அனைவரும் ஸ்ரீ அம்மா, அப்பா நினைவையே ஓட்டிக் கொண்டிருக்க, ஸ்ரீ சந்தோசமாக அவர்களிடம்,
ஹலோ….”குட் மார்னிங் ப்ரெண்ட்ஸ்” என்றாள்.
என்ன இவள் திடீரென நன்றாக பேசுகிறாள்? அனைவரும் யோசிக்க, நிவாசும் சிந்தித்தான்.
சீனியர்,இன்று மாலையில் நாம் அனைவரும் வெளியே செல்வோமா? ஸ்ரீ கேட்க, கவின் அவளை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.
நீ உண்மையாக தான் கூறுகிறாயா? நித்தி கேட்டாள்.
ஆமாம் சீனியர் என்றாள்.
நிவாஸ் அவளருகே வந்து, நீ என்ன கூறுகிறாய்? வெளியே செல்ல போகிறாயா?
ஆம், போகிறோம்.
நானுமா?
ஜிதின் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்து விட்டு, இவர்களுடன் என்ன பேசுகிறீர்கள்? கேட்டுக் கொண்டே அருகே வந்தான்.
ஸ்ரீ அவனிடம், நாங்கள் வெளியே செல்ல போகிறோம் என்று கூறினாள். ஜிதின் அவளை முறைக்க, நாங்கள் போவோம். நான் ஆன்ட்டியிடம் கூறி விட்டேன்.
அம்மா என்னவே வெளியே விட மாட்டார்கள். நீ என்ன செய்தாய்? ஜிதின் கேட்க, நிவாசும் அப்பொழுது தான் அவர்களை பற்றி யோசித்தான்.
இருவரும் அவளை பிடித்துக் கொண்டு, நீ அவர்களை எப்படி ஒத்துக் கொள்ள வைத்தாய்?
அதற்கு ஸ்ரீ, நான் உன்னை வெகு விரைவிலே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, அதற்கு முன் நண்பர்களுடன் என் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆன்ட்டி ஒத்துக் கொண்டார்கள் என்று கூற, அகிலுக்கு வருத்தமானது.
நிவாஸ் அவளை திட்ட ஆரம்பிக்க, அதற்குள் ஜிதின் உனக்கு என்ன பைத்தியமா? நீ செல்ல கூடாது. அம்மா அவ்வாறு தான் கூறுவார்கள். பின் விளைவு பேச, ஸ்ரீ வேகமாக அவனது வாயை பொத்தி விட்டு,நண்பர்களை பார்த்து சிரித்து விட்டு, அவனை தள்ளி இழுத்துச் சென்றாள்.அவர்கள் இருவரையும் பார்த்த படி இருந்தனர் மற்றவர்கள்.
அவர்கள் அனைவர் முன் என்ன அனைத்தையும் கூறி விடுவாய் போல….ஸ்ரீ கூற, அவர்களுக்கு தான் அனைத்தும் தெரிந்து விட்டது என்று நிவாஸ்,ஜிதினிற்கு தான் தெரியுமே! ஸ்ரீக்கு மட்டும் தானே தெரியாது.
ஜிதின் அதை பற்றி பேச வர, நிவாஸ் அவனை தடுத்து, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உனக்கு என்ன திடீர் அக்கறை அவள் மீது? நிவாஸ் கேட்டு விட்டு, நாங்கள் கொஞ்ச நாட்களாவது மகிழ்ச்சியாக இருக்க நினைக்கிறோம். நாங்கள் அவர்களுடன் செல்வோம் நிவாஸ் கூற, ஜிதின் திரும்பி அகிலை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.