அத்தியாயம் 48
மாதவை வீட்டில் விட்டு வந்து கொண்டிருந்த சைலேஷ் காரை வேகமாக ஒரு கார் தாண்டி செல்ல, உள்ளே ஒரு பொண்ணு இருப்பதை பார்த்தான். அந்த காருக்கு பின்னே இரண்டு வேன்கள் விரட்டி சென்றது. சைலேஷ் அந்த வேன் பின்னே சென்றான்.
அது ஓரிடத்தில் நிற்க, முன்னே சென்ற கார் கவிழ்ந்து இருந்தது. அந்த காரை சுற்றி நின்றார்கள் சிலர்.
சைலேஷ் காரை விட்டு இறங்கி அவர்களிடம் செல்ல, அந்த பொண்ணு நெற்றியிலும் கையிலும் அடியுடன் வெளியே வந்தாள்.
யாருடா நீங்க? ஒரு பொண்ணை சுத்தி நிக்கிறீங்க?
யாரும்மா நீ? கேட்ட மறுநொடியே சைலேஷ் சார்..உதவி செய்யுங்க என்று அழுதாள்.
என்னை உனக்கு தெரியுமா?
சார், நான் உங்க கல்லூரியில் தான் படிக்கிறேன்.
உனக்கு என்ன..தைரியம் வந்து விட்டதோ? பேசுகிறாய்? ஒருவன் அந்த பெண்ணருகே வர, அவள் சைலேஷ் பின் மறைந்து நின்றாள்.
பேசுனா என்னடா? யாருடா நீங்க?
அந்த பொண்ணோட அப்பனுக்கு நாங்க யாருன்னு காட்ட வேண்டாமா?
யாருடா அது? யாரோட பொண்ணும்மா நீ? சைலேஷ் கேட்டுக் கொண்டிருக்க சைலேஷை அடிக்க ஒருவன் வந்தான். அவனை தடுத்து கையை பிடித்து இழுத்து அவன் தலையிலே முட்டினான் சைலேஷ். அவன் கீழே விழ, மற்றவர்களும் அவனை அடிக்க வர, அனைவரையும் அடித்து போட்டு விட்டு,
வாம்மா..என்று அழைத்தான்.
உதவிக்கு தேங்க்ஸ் சார். நீ கிளம்புங்க. நான் பார்த்து போயிடுவேன்.
காருக்கருகே சென்றவன் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து அவளை பற்றி கேட்டான்.
சார்..வேண்டாம். யாராவது பார்த்தா உங்களை ஏதாவது செய்து விடுவார்கள். நீங்க போங்க பயத்துடன் அவள் சுற்றி பார்த்துக் கொண்டே பேசினாள்.
யாரும்மா நீ? இவனுக யாரு? சைலேஷ் கேட்டான்.
என்னோட பேரு அனிகா. என்னோட அப்பா அமைச்சர் செல்லதுரை. அவரோட எதிராளிகள் தான் இவங்க. என்னை கொல்ல வந்தாங்க.
ஏதாவது விழாவிற்கு சென்றாயா? கேட்டான்.
ஆமாம் சார்.
தனியாவா போன?
இல்ல சார். அம்மா கூட தான் சென்றேன். ஆனால் அம்மா..என்று அழுதாள்.
என்னாச்சும்மா?
சார்..என்னோட அம்மாவை அண்ணா..கொன்னுட்டான். அவனிடமிருந்து தான் தப்பி வந்தேன்.
என்ன சொல்ற? அண்ணா அம்மாவை கொன்னுட்டானா? உன்னை கொல்ல பார்த்தானா?
அப்பாவின் இரண்டாம் தாரத்து பையன் சார். நானும் அம்மாவும் சேர்ந்தே தான் இருப்போம்.
உன்னோட அப்பா எங்கம்மா?
அவரு வேலையா வெளியூர் போயிருக்காரு. அப்பாவிற்கு பாசம் இல்லைன்னாலும் எங்களுக்கு பாதுகாப்பிற்கு என்று ஆட்கள் இருப்பாங்க.
அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டார் சித்தி. அது தெரியாமல் நாங்க அந்த திருமணத்துக்கு கிளம்பினோம். அங்க போக டிரைவர் மட்டும் இருந்தார். ஆனால் அண்ணன் அங்கே தான் எங்களை கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அவன் நினைத்தது போல் அம்மாவை கொன்று விட்டான். எனக்கு இருந்தது அம்மா மட்டும் தான். அம்மா தான் நகை வாங்க என்று என்னை அனுப்பினார். ஆனால் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்ற தான் முன்னே அனுப்பி இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. வாங்கி விட்டு சென்ற போது ஒருவர் வழியிலே நிறுத்தி நடந்ததை சொன்னார். நான் எப்படி அம்மாவை பார்க்காமல் வருவேன். நான் உள்ளே சென்றேன். என்னை அவர்கள் கொல்ல நினைத்த போது அம்மா குத்துயுருமா கொலையுருமா என் முன் வந்து என்னை பிடித்து தள்ளி விட்டு போக சொல்லி கத்தினார்கள்.
அந்த நிமிடம் அவங்க கத்தலோடு அவரது உயிர் அடங்கி போயிற்று. விரட்டியவர்களை ஏமாற்றி வந்து விட்டேன். ஆனால் அப்பாவின் எதிராளிகள் பார்த்து விட்டனர். அவர்கள் எனை விரட்ட ஓர் காரில் ஏறி ஓட்டி வந்து விபத்தாகி என்று அழுதாள்.
உங்க அப்பா எப்பம்மா வருவார்?
தெரியாது சார். அவர் வந்து என்ன ஆகப் போகிறது? கடைசியில் என்னோட அம்மாவே இல்லை. அவங்க இருந்த போதே கஷ்டப்படுத்தியவங்க. நான் செத்தாலும் அவர் பெருசா ஏதும் கவலைப்பட மாட்டார்.
சார்..இங்க ஹாஸ்டல்ல மட்டும் இறக்கி விட்டுடுறீங்களா சார்? ப்ளீஸ்..
வேற யாருமே இல்லையா?
சார்..எங்களை யாரிடமும் பேசவே விட மாட்டார். ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட என்னிடம் வழி கேட்டவரை கொன்னுட்டாங்க சார்.
எனக்கு அவருடனான வாழ்க்கையே வேண்டாம். நான் தனியே கூட இருந்து கொள்கிறேன்.
அடிபட்டதற்கு மருந்து போடணும் ஹாஸ்பிட்டல் போகலாமா?
நோ..சார். நான் அணிந்திருக்கும் பொருட்களை வைத்து தான் ஹாஸ்டலுக்கே பணம் கட்டணும். எனக்கு அப்பாவும் இல்லை. வீடும் இல்லைன்னு நினைச்சுக்கிறேன்.
என்னை அங்கே இறக்கி மட்டும் விடுங்கள்.
என்னம்மா இப்படி பேசுற? வா..எங்க வீட்டுக்கு அழைத்து செல்கிறேன்.
சார்..
எங்க வீட்ல பசங்க மட்டும் தான் இருப்பாங்கன்னு நினைக்கிறியா? பொண்ணுங்க, குட்டி பாப்பா, என்னோட ப்ரெண்ட்ஸ், பெரியவங்களும் இருக்காங்க என்று அழைக்க,
சார்..என்னால உங்க குடும்பத்துக்கும் பிரச்சனை வரும்.
உன்னிடம் ஒன்று கேட்கிறேன்? தெளிவாக யோசித்து பதில் சொல்லு.
உண்மையாகவே உனக்கு சொத்து, அப்பா, அண்ணா, சித்தி யாருமே வேண்டாமா? உறுதியா சொல்லு. அதுக்கான ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். உன் அப்பாவிற்கு உடனே அனுப்பி, அவருக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதி வாங்கிடலாம். பிரச்சனை இல்லாமல் இருப்பேல்ல. ஆனால் உனக்கென சொந்தம் யாரும் இருக்க மாட்டாங்க. ஆனால் கார்டியனா நான் படிக்க வைக்கிறேன்.
சார்..என்று அவன் காலிலே விழுந்து விட்டாள்.
சார்..பண்ண முடியுமா?
பண்ணிடலாம் சார். குடும்பம் என்றால் சேர்ந்து இருக்கணும். அவங்க கொலைகாரங்க. அவங்க யாருமே எனக்கு வேண்டாம்.
உன் அப்பாம்மா?
வேண்டாம் சார். அவரால என்னோட அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? போதும் சார்..எனக்கு கண்டிப்பா உதவுவீங்களா?
உதவலாம். ஆனால் உன் அப்பா நாம் கூறுவதற்கு ஒத்துக் கொள்ளும் வரை நீ எங்க வீட்ல தான் இருக்கிற மாதிரி இருக்கும். என்னோட ப்ரெண்டு வக்கீலா இருக்கான். நாங்க பார்த்துக்கிறோம். நீ நல்லா படிச்சா போதும்.
நான் வெளியே கூட தங்கிக்கிறேன்.
உன்னிடம் சொல்ல என்னம்மா? செய்தி பார்த்திருப்பாயே? ஒரே பிரச்சனை. அது முடிகிற வரை எங்க வீட்லயே இரு. அப்புறம் ஹாஸ்டலுக்கு போ..
நாங்க யார் கூட பேசினாலும் பிரச்சனையாகுது. எங்களால உனக்கு ஏதும் ஆகக் கூடாதுல. அதான் என்றான் சைலேஷ்.
ஓ.கே சார் என்று அமைதியாக அவன் காரில் ஏற, அவளை நிறுத்தி அவன் காரில் வைத்திருந்த பொருட்களை வைத்து, காயத்திற்கு மருந்து போட்டான். பின் கைரவ் இருக்கும் அதே மருத்துவமனைக்கு சென்றனர் இருவரும்.
பகலவன் தன் கதிர்களை சுருக்க, ஆதேஷ் அவனறைக்குள் சென்றான். ஜானு தூங்கிக் கொண்டிருக்க அவளருகே அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அர்தீஸ்.
ஏய்..நீ இங்க எப்படி வந்த? ஆதேஷ் சத்தமிட, ஜானு எழுந்தாள். மாமா..எதுக்கு கத்துறீங்க? என்று கண்ணை கசக்கியவாறு பார்த்தாள்.
ஆதேஷ் ஜானு அருகே வருவதற்குள் ஜானுவை அர்தீஸ் தூக்கி அவள் கழுத்தில் கத்தியை வைத்தான். அவள் திகைத்து அர்தீஸை பார்த்து விட்டு, ஆதேஷை பார்த்தாள்.
அவள் கழுத்தில் தானடா கத்திய வைச்சிருக்கேன்? உனக்கு இப்படி வியர்க்கிறது? ஜானுவை காதலிக்கிறியா? என்ன?
அவள விட்டுரு..ஆதேஷ் பதற, பொறுமையா இரு. அது எப்படி? நான் என் அண்ணனை கொன்றேனா? ஏன் ஜானு நானா என் அண்ணனை கொன்றேன் அர்தீஸ் கேட்க,
நீ தான்..நீ தான் கொன்ன ஜானு கூற, கழுத்தில் கத்தியை அழுத்தினான்.
அவள ஏதும் செய்திடாதடா ஆதேஷ் கத்தினான்.
ஓ..லவ்வா?..உனக்கு இவனை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் ஜானு. அவள் கண்ணில் நீர் வடிந்தது.
இவளுக்காக தான நீ என் அண்ணனை கொன்னுட்டு என் மேல பழிய போட்ட. மாமா நீங்க இங்கிருந்து போங்க ஜானு கூற,
அவளை பார்த்து ஜானு.. நானா? நான் கொல்லவில்லை. நான் அவனை தடுக்க அடிக்க தான் செய்தேன். சொல்லு ஜானு என்றான்.
நீ அடித்த போது அவன் விழுந்தவன் தான் எழவேயில்லை. செத்துட்டான். ஆனால் நான் கொலை செய்ததை போல காட்டிட்ட.
ஜானு அமைதியாக இருந்தாள்.
ஜானு..பேசு என்று அவளருகே வர இருந்தவனை அர்தீஸ் நிறுத்தி, நீ இன்னும் ஓர் அடி எடுத்து வச்ச. இவள கொன்னுடுவேன்.
நான் வரல. அவள எதுவும் செஞ்சுடாத. அவளிடம் பேசிக்கிறேன் என்று ஜானுவிடம் கேட்டான்.
மாமா..என்று அவள் தயங்க..ஜானு நான் தான் அவனை கொன்னுட்டேனா? என்று நடுக்கத்துடன் கேட்டான்.
மாமா..நீங்க அவனை அடிக்கலைன்னா அவன் என்னை..என்னை..என்று தயங்கினாள்.
ஆதேஷிற்கு ஜானு கூறுவது காதில் ஏறவே இல்லை. நான் ஒருவனை கொன்றிருக்கிறேனா? பயத்துடன் நின்றான்.
மாமா..மாமா..என்று ஜானு அழைக்க, ஆதேஷிற்கு கண்கள் மங்கலானது. கண்களை மூடிக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்தான்.
ரொம்ப நல்லதா போச்சு. இனி அவன் நம்மை தொந்தரவு செய்ய மாட்டான் என்று அர்தீஸ் ஜானு கழுத்திலிருந்த கத்தியை எடுத்து விட்டு அவளை விட்டு விட்டான்.
ஜானு ஆதேஷிடம் வந்து, மாமா..பாருங்க..பாருங்க..அவனது கன்னத்தை பிடித்து அழுது கொண்டே பேசினாள்.
அவனுக்கு அந்த நெடியவன் அருகே இருப்பது போல் அன்று நடந்ததை எண்ணி அமர்ந்திருந்தான். அவனுடனான சண்டையே ஆதேஷிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அர்தீஸ் ஜானுவை பிடித்து இழுக்க, அவள் ஆதேஷை இறுக்கமாக அணைத்திருந்தாள். அவன் கத்தியை எடுத்து அவனது கழுத்தில் வைக்க, ஜானு ஆதேஷிடமிருந்து விலகினாள்.
அவளை இழுத்து கட்டிலில் போட்டான். அவள் எழுந்து குளியலறை பக்கம் ஓடினாள். அவள் உள்ளே செல்வதற்குள் அவளை இழுத்து தோளில் தூக்கி போட்டுக் கொண்டு அவளை கட்டிலில் போட்டு தாமதிக்காமல் அவளருகே சென்று அவன் சட்டையை கழற்றினான்.
மாமா..மாமா..மாமா..மாமா..மாமா..என்று ஜானு கத்திக் கொண்டே இருக்க, அவளது கைகளை இறுக பிடித்து அவள் இதழ்களில் முத்தமிட வந்தான். அவள் அவனை கடித்து வைத்தாள். அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அழுது கொண்டே..மாமா..ஆது மாமா..மாமா..உன்னோட ராட்ச்சசி கூப்பிடுறேன் எழுந்திரு மாமா..பாரு மாமா.. அன்று நீ என்னை காப்பாத்திட்ட, மாமா..இந்த பொறுக்கி என்னை தொடுறான் மாமா..மாமா..என்று அழுதாள். அவள் சத்தம் கேட்டு ஆதேஷ் அப்பா, அம்மா வந்து கதவை பலமாக தட்டினார்கள்.
ஆதேஷிற்கு ஜானு கத்தும் சத்தம் கேட்க, கண்களை விழித்தான். அன்று அந்த நெடியவன் என்ன செய்யப் பார்த்தேனோ அதே போல் அர்தீஸ் அவள் மீது இருக்க பார்த்த ஆதேஷிற்கு சினம் ஏறியது.
மாமா..மாமா..மாமா..என்று அவள் கத்திக் கொண்டே இருக்க, அவள் தலையசைத்து எதிர்ப்பை அர்தீஸிற்கு காட்ட, அவன் கோபமானான்.
ஜானுவின் இரு கைகளையும் அர்தீஸ் அவன் ஒரே கையால் பிடித்து, மறுகையால் அவளது மேனியில் தவழவிட்டான்.
என்னை விடு..விடு என்று கத்தினாள். அவளது ஆடையை கிழித்து விட்டு அவளது உள்ளாடையில் கை வைக்க வந்த சமயம் துப்பாக்கி சத்தம் கேட்டு கதவை உடைத்து உள்ளே வந்தனர் ஆதேஷ் பெற்றோர்கள்.
ஆதேஷ் தீனா கொடுத்த துப்பாக்கியை வைத்து அர்தீஸை அவன் காலில் சுட்டான். மாமா..மாமா..என்று சோர்வுடன் அவள் குரல் கேட்க, அப்பொழுதும் அவளை விடாமல் தொட, அவனது கையை பிடித்து இழுத்து ஆதேஷ் கீழே தள்ளினான்.
யார் மேல கைய வைக்கிற? என்று கத்திய ஆதேஷ் அர்தீஸ் தலையை பிடித்து சுவற்றில் இடித்தான். ஜானு பதறி போர்வையை இழுத்து அவளை முழுவதுமாக போர்த்திக் கொண்டாள்.
பொறம்போக்கு, பொறுக்கி..என்று அவனை திட்டிக் கொண்டே மீண்டும் சுவற்றில் இடிக்க, இரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.
அன்று என் ஜானுவை காப்பாத்த அடிச்சு அவன் எனக்கே தெரியாம தான் செத்துட்டான். ஆனா இன்று உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று ஆதேஷ் அர்தீஸை பழியாடு போல் இழுக்க, அவன் அப்பா அவனை தடுத்தார்.
விடுங்க டாட். நான் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று எகிறினான். ஜானு அழுது கொண்டிருக்க, லலிதா ஜானுவிடம் வந்தார்.
அத்தை..என்று லலிதாவை அணைத்து ஏங்கி ஏங்கி அழுதாள்.
ஆது…ஜானுவை பாரு என்று ஆதேஷ் அப்பா கத்த, அர்தீஸை விடுத்து ஜானுவை பார்த்தான். போர்வையுடன் லலிதாவை அணைத்து உடலை குறுகி படுத்திருந்தாள்.
மறுபக்க கட்டிலில் அமர்ந்து ஜானு..என்று மெதுவாக அவளருகே வந்தான்.
அவனை பார்த்து, எத்தனை தடவை கூப்பிட்டேன். எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா? என்று அழுது கொண்டே மீண்டும் லலிதாவை கட்டிக் கொண்டாள் ஜானு.
ஆதேஷ் அப்பா அர்தீஸை கட்டி வைத்து விட்டு தீனாவிற்கு போன் செய்து கூறினார். அவன் அங்கேயா இருக்கிறான்? ஜானு நல்லா இருக்காளா? அங்கிள் என்று தீனா கேட்டான்.
அவள் பயத்தில் தான் இருக்கிறாள். பார்த்துக்கோங்க அங்கிள்.
அங்க இருக்குற போலீஸிடம் பேசுகிறேன் என்று மாதவிடம் கூற, ஏற்கனவே அவன் பிரச்சனை முடியவில்லை என்பதால் அவன் வேறொரு போலீஸை ஆதேஷ் வீட்டிற்கு அனுப்பினான் அவன்.
சாரி ஜானும்மா என்று ஆதேஷ் அருகே வர, நீ வெளிய போ. அவள் ஆடை மாற்றணும் லலிதா கூற, ஆதேஷ் எழுந்தான். வசந்தி அர்தீஸை பார்த்து,
திமிறாடா..எங்க சின்னம்மாவையே கஷ்டப்படுத்துறியா? என்று அவர் அவனை மிதிக்க, வலி தாங்க முடியாமல் அவன் மேலும் கத்தினான்.
ஆது நாம இங்கேயே இருப்போம். லலி நீ மருமகள கூட்டிட்டு உங்க அறைக்கு போங்க..என்று கூற, அவளால் போர்வையுடன் எழுந்து நடக்க முடியவில்லை. போர்வையை விலக்கினால் அவள் உடல் தெரியுமளவு இருந்தது.
அக்கா..டாடுடன் இருங்க. நான் வாரேன் என்று ஜானுவிற்கு போர்வையை நன்றாக போர்த்தி விட்டு அவளை தூக்கி அவள் அறைக்கு அவன் செல்ல, ஜானு அழுகை நின்று ஆதேஷை பார்த்துக் கொண்டே வந்தாள். லலிதாவும் அவர்களுடன் வந்தார்.
அறையில் அவளை இறக்கி விட்டு, ஜானு நான் கொலை பண்ணீட்டேன்னு அவன் சொன்னதுல கொஞ்சம் டென்சன்ல சுத்தி எல்லாத்தையும் மறந்துட்டேன். சாரிம்மா.
மாமா..நீங்க அவனை கொலை பண்ணல. என்னை காப்பாத்த தான் செஞ்சீங்க?
இல்ல ஜானு. எப்படினாலும் அவன் என்னால தான செத்துட்டான்.
என்னடா சொல்ற? லலிதா கேட்க, ஆதேஷ் அவன் அம்மாவிடம் கூறினான்.
அதெல்லாம் ஒன்றுமில்லைடா. அவன் சாகலைன்னா. நீயும் ஜானுவும் இருந்திருக்கவே முடியாது.
ஜானு ஆதேஷை அணைத்துக் கொண்டாள். ஜானு..அவனை எப்படி மாட்டி விட்டீங்க? ஆதேஷ் கேட்டான்.
அவள் நகர்ந்து மாமா..தீனா அண்ணா திட்டம். செயல்பாடு அனைத்தும் துருவன் தான்.
அவனுக்கும் தெரிஞ்சிருக்கு. மறைச்சிருக்கான்.
மாமா..ப்ளீஸ். அதை விடுங்களேன்.
இல்ல ஜானு.
மாமா அப்ப நான் செத்து போயிருந்தால் உங்களுக்கு ஓ.கே வா?
ஜானு..என்ன பேசுற? என்று கண்ணீருடன் ஆதேஷ் அவளை கட்டிக் கொண்டான்.
ஆது..நீ அங்க போ. ஜானு ஆடை மாற்றி விட்டு வருவா. அவன் அர்தீஸ் இருக்கும் அறைக்கு செல்ல, போலீஸ் வந்தனர். ஐந்தாறு ஆட்களுடன் ஒருவன் வந்தான்.
கம்பிளைண்ட் எழுதி கொடுங்க என்று வாங்கி விட்டு, அர்தீஸை இழுத்து சென்றனர். ஆனால் அவனோ மறுபடியும் போலீசிற்கு தண்ணி காட்டி விட்டு ஓடினான். சில ஆட்கள் அவனுக்கு உதவி அர்தீஸை தூக்கி சென்றனர். தீனாவிற்கு விசயம் தெரிய வர, அவன போட்டு தான் தள்ளணும் என்று கத்தினான்.
சைலேஷும் அனிகாவும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர். அனிகா ஆரஞ்சு கலந்த மை ஊதா நிற பட்டு பாவாடை தாவணி அணிந்திருந்தாள். அவளது நெற்றி சுற்றிலும் கட்டிட்டு கையிலும் கட்டு போட்டிருந்தது.
சைலேஷ் போனை எடுத்து நகர்ந்து சென்றிருந்தான். கைரவ், பவி, நித்தி பேசிக் கொண்டே வந்தனர். அனிகா கட்டிட்டு கதவை திறக்க, கைரவும் அதே கதவில் கை வைத்தான். அவன் வேகமாக இழுக்க அனிகா கைரவ் நெற்றியில் இடிக்க, அவளுக்கு தான் வலித்தது. ஷ்ஆ..என்று நெற்றியில் கை வைத்தாள்.
அவள் அவனை பார்க்காமல், சாரி சார் என்று செல்ல, அவன் அவளை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தான். அவள் மீது சிறு ஈர்ப்பு வேற இருக்க, அவளை பார்த்துக் கொண்டே நின்றான். அவளை யாரோ பார்ப்பது போல் இருப்பதை உணர்ந்த அனிகா பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கைரவை பார்த்து கண்கலங்க ஓர் அடி முன் வைக்க கால் சென்றது. ஆனால் மனதோ..நமக்கு உதவும் சாரின் தம்பி தான் என்று அடுத்து வந்த பவியை பார்த்ததும் அவள் கட்டுபடுத்த முடியாமல் ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டு கூக்குரலோடு அழுதாள்.
அனி..என்ன ஆச்சு? உன்னோட தலை, கையில் இப்படி அடி பட்டிருக்கு? என்று பதறினாள்.
பவி..அவங்க அம்மாவை..அம்மாவை..என்று திணறி திணறி அம்மாவை கொன்னுட்டாங்க என்று அழுதாள்.
என்னடி சொல்ற? கொன்னுட்டாங்களா? யாரு? எதுக்கு? கேள்விகளை அடுக்க, அனிகா பதில் கூற முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.
நித்தி அவளை ஒரு முறை கைரவுடன் பேச செல்லும் போது பார்த்திருப்பாள். இப்பொழுது அவனை பார்த்தான். அவன் அதிர்ந்து விழிக்க,
எல்லாரும் நம்மை தான் பாக்குறாங்க? வாங்க என்று பவி, அனிகா கையை பிடித்து இழுத்து தனியே அழைத்து சென்றாள். கைரவ் அசையாது அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்க என்னடா பண்ற? சைலேஷ் அவனருகே வந்தான்.
அண்ணா..நீ வீட்டுக்கு போகலையா?
போகணும். போற வழியில் ஓர் விபத்து. அதனால் தான் இங்கே வந்து அந்த பொண்ணை சேர்த்தேன். இங்க தான் விட்டுட்டு போனேன். காணுமே? என்று சுற்றி பார்த்தான்.
அண்ணா..நான் செவிலியரை அழைக்க வந்தேன் என்று அவரை அழைத்து அகில் அறைக்கு சென்றான்.
இந்த பொண்ணு எங்க போனா? என்று சைலேஷ் தேட, நித்தி இருவரையும் அழைத்து வெளியே வந்தாள். அவளை பார்த்து சைலேஷ் அவர்களிடம் வந்தான்.
அவன் பின் அனிகாவை பார்த்து, நித்தி உனக்கு இந்த பொண்ணை தெரியுமா?
பவிக்கு தெரியும் என்றாள்.
நீ சொன்ன பொண்ணா என்று பவியை பார்த்தான். அனிகா அவனிடம் வந்தாள்.
உங்களுக்கு இவளை தெரியுமா? நித்தி கேட்டாள். அவன் நடந்ததை கூற, இந்த பொண்ணை நீங்க தான் படிக்க வைக்கப் போறீங்களா? உங்க வீட்ல தான் இருக்க போகிறாளா? என்று சினத்துடன் நித்தி கேட்டாள்.
ஆம் என்று தலையசைத்து அவளருகே வந்தான். அவள் கோபித்துக் கொண்டு செல்ல, இந்த பொண்ண பார்த்துக்கோம்மா..என்று நித்தி பின்னே ஓடினான் சைலேஷ்.
அவர் இவ பின்னாடி ஓடுறாரு என்று அனிகா கேட்க, அனி அவங்க காதலிக்கிறாங்க என்றாள் பவி.
நான் சார் வீட்டுக்கு செல்வது அவளுக்கு பிடிக்கவில்லையா? ஆமா..க்யூட்டா ஒரு பொண்ணு அவ காதலிக்கிறவர் வீட்டுல தங்க போறான்னா. அவளுக்கு கஷ்டமா இருக்கும்ல. அதனால் தான் கோபமா போறா?
ஏன் பவி, நீயுமா என்னை தவறா நினைக்கிறாய்?
அனி நித்திக்கு உன்னை பற்றி ஏதும் தெரியாது. அவள் பயப்படுகிறாள். சார் அவள பார்த்துப்பாங்க.
இங்க கூட நான் இடைஞ்சலா தான் இருக்கேன் பவி.
எல்லாமே இழந்தது கூட வலிக்கல. அம்மா..தான். இப்படி என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டாங்களே?
நான் முதலிலே சாரிடம் சொன்னேன். என்னை ஹாஸ்டலில் விட சொன்னேன். அவர் தான் ஏதோ பிரச்சனையெல்லாம் இருக்கு என்று அதனால்..
போதும் அனி. நீ பேச வேண்டாம் என்று பவி கூற, கண்ணீருடன் அவளது தோளில் சாய்ந்து கொண்டாள். கைரவ் செவிலியரை அகில் அறையில் விட்டு நிவாசை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, மாடியிலிருந்து இவர்களை பார்த்து அங்கேயே நின்றான்.