வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-46
132
அத்தியாயம் 46
சாப்பிடலையாம்மா? பிரதீப் துகிராவிடம் கேட்டான்
நீங்க சாப்பிடலை.
என்னால சாப்பிட முடியலை.
அவள் அவனது தட்டை கையில் எடுத்து உணவை பிசைந்து பிரதீப்பிற்கு ஊட்ட அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான்.
வேலைக்காரம்மா..இவர்களை மறைந்திருந்து பார்த்து புன்னகையுடன் அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுக்க, துகிரா அவளறைக்கு செல்ல, அவன் அவளை விடாது அவன் அறைக்கு கையை பிடித்து இழுத்து சென்றான்.
தப்பா நினைக்கப் போறாங்க என்று துகிரா பிரதீப் கையை எடுக்க, ப்ளீஸ் கொஞ்ச நேரம் பக்கத்துல இரேன்.
சரி..வாங்க என்று இருவரும் கையை பிடித்து அவனறைக்கு சென்றனர். கதவை தாழிட்ட உடனே துகிராவை இழுத்து அணைத்து அழுதான்.
அவள் அவனை நிமிர்த்தி முகமெங்கும் முத்தம் கொடுக்க, அவன் அவளை கட்டிலில் உட்கார வைத்து மடியில் படுத்துக் கொண்டு, நான் தூங்கிக் கொள்ளவா?
இது என்ன கேள்வி? என்று துகிரா கேட்க, அவளை இடையோடு அணைத்து தூங்கினான். அவன் நன்றாக உறங்கியவுடன் வெளியே வந்து போனை பார்த்தாள்.
பிரதீப், ஜானுவை நினைத்து கவலையாக இருக்க, ஆதேஷ் அப்பாவிற்கு போன் செய்து, அவரிடம் அப்பா என்று உரிமையோடு பேச ஆரம்பித்து பின் நடந்ததை கூறி புலம்பி தீர்த்தாள்.
மாப்பிள்ள அதெல்லாம் துவண்டு போக மாட்டார்ம்மா. நீ கவலைப்படாம இரு அவளை தேற்றினார்.
பிரதீப் கூறியது ஆதேஷிற்கு ஒரு மாதிரி ஆனது போல.. அமைதியாக அமர்ந்தான்.
மாமா..ஊரார் யாரும் ஏதும் என்னை பற்றி தவறாக பேசி விடுவார்களோ? என்று தான் அண்ணன் அவ்வாறு கூறி இருப்பான். நீங்க வருத்தப்படாதீங்க மாமா..நான் அண்ணாவிடம் பேசி விடுவேன்.
ஜானு..நீ இங்க இருந்து போயிடுவியா? வருத்தமாக அவன் கேட்க, அவளாகவே அவன் மடியில் அமர்ந்து, மாமா நான் போய் தான் ஆகணும்.
எப்ப போகப் போற?
தெரியல மாமா.
சரி..நீ கீழ போ. நான் வருகிறேன்.
மாமா..என்று தயங்கிய ஜானு, நான் நம்ம காதலை வீட்ல சொல்லிட்டேன்.
சொல்லிட்டாயா?
என்ன சொன்னாங்க?
மாமா..என் மேல கோபம் வரலையா?
எதுக்கு?
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான சொல்லணும்.
நாம இனி ஒண்ணு தான. அதனால் ஒன்றுமில்லை. என்ன சொன்னாங்க?
என்ன சொல்லுவாங்க? அவங்களுக்கு தான் என்னை பிடிக்குமே?
ம்ம்..அதுவும் சரி தான்.
ஜானு நீ உங்க அண்ணன்களுக்கே அறிவுரை வழங்குற? பெரிய ஆளு தான் நீ?
போங்க மாமா..என்று வெட்கத்துடன் அவள் நெளிய, சரி எனக்கு கொடுத்திட்டு போ.
என்னது மாமா?
என்னதா? உம்மா?
மாமா..சும்மா இருங்க. உங்க போனை தாங்க என்று வாங்கினாள்.
மாமா..என்ன இது? இத்தனை பேர் போன் செய்திருக்கிறார்கள்?
இந்த எண் சித்தி இதாயிற்றே? நான் போன் செய்யவா?
துருவன் போனை எடுத்து, அண்ணா..எத்தனை முறை போன் செய்வது? நான் எப்பொழுது போன் செய்தேன்? நீங்க எப்ப எடுக்குறீங்க? கத்தினான்.
டேய் துரு..ஜானுடா..
குட்டி பேயே? நீயாவது எடுக்கலாம்ல.
ஏய்..மாமா போன் உன்னிடம்? என்ன நடக்குது?
எல்லாமே நடக்க தானடா செய்யுது?
சரி அத விடு. இந்த துளசிக்கு என்ன ஆச்சு? ஆன்ட்டி கிட்ட அவளோட அப்பா கொலைகாரன்னு ஏதோ சொல்லிட்டு போனை வைச்சுட்டா என்றவுடன் ஜானு பேச்சு நின்று கண்ணீர் வர ஆரம்பித்தது.
ஆதேஷ் போனை வாங்கி, அவள எதுக்கு அழ வைக்கிற?
நான் கேட்க தானே செய்தேன். ஆனால் நீங்க அழ வைக்கிறேன்னு சொல்றீங்க.
ஆன்ட்டி என்ன பண்றாங்க?
எங்க துளசி பேசியதிலிருந்து ஒரே அழுகை. அவங்க உள்ள இருக்குற அறையில தான் படுத்திருக்காங்க.
நீ எங்க இருக்க?
நான் புவியுடன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன்.
தீனா மாமா ஆளுடனா? டேய்..பார்த்து இருந்துக்கோ. மாமா சார் ஏற்கனவே கோபத்துல இருக்காரு. அவரை கோபப்படுத்துமாறு ஏதும் செய்து விடாதே?
அதை பார்த்துக்கலாம். அங்க என்ன நடக்குது? என்னோட அண்ணாவை சூட் பண்ணி இருக்காங்க.
என்ன சூட் பண்ணிட்டாங்களா?
டேய்..அசதியில தூங்கிட்டேனா? அதனால நடந்த ஏதும் தெரியல. நீ போனை வை. நான் தெரிஞ்சுட்டு சொல்றேன். அர்ஜூனும் ஆதேஷிற்கு போன் செய்திருப்பான். அதை பார்த்து ஆதேஷ் அவனிடம் பேசி அறிந்து கொண்டான்.
ஜானு அவனது படுக்கையில் வருத்தமாக படுத்திருந்தவள் தூங்கி விட்டாள். அவளது நெற்றியில் முத்தமிட்டு ஆதேஷ் அறையை விட்டு வெளியே சென்றான்.
ஹாஸ்பிட்டலில் காவேரிக்கு துளசி பேசியதை நினைத்து கஷ்டப்பட்டாலும் துருவன் புவனாவிடம் பாசமாக நடந்து கொள்வதை பார்த்து, தன் மகன் இந்த பொண்ணை சரியா பார்த்துக் கொள்ள மாட்டானோ? என்ற எண்ணம் எழத் தொடங்கியது. துருவன் செயல் அப்படி இருந்திருக்கும்.
அவள் வாமிட் செய்தது தெரிந்தவுடன் அவளுக்கு வாங்கி வந்து கொடுத்தான் ஸ்டே ப்ரீ. காவேரி அதை பார்த்து அதிர்ந்தார். அதை புவனா கவனித்தும் ஏதும் காவேரியிடம் சொல்லவில்லை. ஆனால் துருவன் அதை பார்த்து, புவிக்கு அருவருப்பான ஏதாவது பார்த்தால் வாமிட் வரும் இல்லையென்றால் அந்த மூன்று நாட்களில் வாமிட் செய்வாள். அவளுக்கு ஒத்துக்காது. ஆனால் ஜானு அப்படி இல்லை. அவள் எல்லாத்தையும் ஏத்துப்பாள். அதிகமா சாப்பிட மாட்டாள். ஜானு போல் தான் புவியும் என்று மறைமுகமாக கூறினான் துருவன்.
அர்ஜூனிடம் பேசி விட்டு போனை வைத்து புவியை பார்த்தான். அவன் வந்ததிலிருந்தே அவள் முகம் சரியில்லாததை கண்டு கொண்டான்.
புவி..ரொம்ப வலி இருக்கா என்று கேட்டான். அவள் நிமிர்ந்து அமர, அவளுக்கு இந்த மாதவிடாய் தொந்தரவு வேற. அவன் அவளுக்கு உதவ அருகே வந்த துருவன் கண்ணில் பட்டது அந்த கவர். அவன் பார்ப்பதை பார்த்து அவள் மறைக்க முயன்றாள்.
என்ன புவி அது? அவன் எடுப்பதற்குள் அவள் எடுத்து கையை நகர்த்தினாள். அவன் அவளை பிடித்து சொல்லு..என்று கேட்டான். அவள் கண்கள் ஈரமாக அதை அவள் கையிலிருந்து பிடுங்க அவளை நெருங்கினான். அவர்களுக்கு நெருக்கம் அப்பொழுது தெரியவில்லை.
அவளுக்கு தீனாவின் இவ்வாறான புகைப்படத்தை பார்த்தால் துருவன் அவனுடன் சண்டை போடுவான். தீனாவை பற்றி அனைவரும் தவறாக நினைப்பார்களே என்ற பயம்.
துருவனுக்கு அவள் எதுக்கோ கஷ்டப்படுகிறாள்? அதை கண்டறிய வேண்டும். அதே சிந்தனையில் இருவரும் செயல்பட இருவரும் நெருங்கி இருப்பதை மறந்தனர்.
அதே நேரம் கதவை திறந்து உள்ளே வந்தனர் தீனாவும் துளசியும். இவர்களது நெருக்கம் முத்தமிடுவது போல் காட்சியை ஏற்படுத்த கொதித்து போனான் தீனா. துளசி கண்கலங்க இருவரையும் பார்த்தாள்.
புவி..என்று தீனா சத்தமிட, அப்பொழுது தான் இருவரும் நெருக்கத்தை உணர்ந்தனர். இருவரும் விலக, தீனா சினத்துடன் துருவனிடம் வந்தான். துளசி இடையே வந்து, ப்ளீஸ்..அமைதியா இருடா என்று கண்ணீருடன் கெஞ்ச துருவனுக்கு ஒரு மாதிரி ஆனது. தீனா இருவரையும் முறைத்தான். புவனா கவரை மறைத்து வைத்து கெஞ்சுவது போல் பாவனை செய்தாள்.
சார்..நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.அவளால் நிமிர்ந்து அமர முடியல. உதவ தான் அருகே சென்றேன். அப்புறம் அவள நம்புங்க. அவளுக்கு என் மீது எந்த ஈர்ப்பும் வந்ததில்லை. எனக்கு தான் இருந்தது. ஆனால் எனக்கும் இப்ப இல்ல என்று துளசியை பார்த்து விட்டு, நான் வந்த வேலை முடிந்தது. ஆன்ட்டி உள்ள படுத்திருக்காங்க பார்த்துக்கோங்க.
அப்புறம் புவிக்கு மென்சஸ் நேரம் பார்த்துக்கோங்க. அவளால் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாது. அடிக்கடி வாமிட் பண்ணுவா. பார்த்துக்கோங்க என்று வெளியே சென்றான்.
அவன் சொன்னதை கேட்டு தீனா புவியை பார்க்க, அவள் தலையசைத்தாள். தீனா வெளியே ஓடிச் சென்று துருவனை பிடிக்க,
உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல. உங்க ரெண்டு பேரு முகமும் சரியில்லை. ஆனால் புவனா சரியில்லை. அவள் நம்மிடம் எதையோ மறைக்கிறாள். நேரடியா கேட்காதீங்க. அவளை கவனித்து கண்டுபிடிங்க. நான் வாரேன்.
சாரிடா என்று தீனா கூற, எனக்கு தெரிஞ்சு அதுக்கு காரணம் கூட நீங்களா தான் இருப்பீங்கன்னு தோணுது. அவள கஷ்டப்படுத்துனீங்க..புவி காதலிக்கிறவர்ன்னு பாக்க மாட்டேன். போலீஸ்ன்னு பார்க்க மாட்டேன். துளசி அண்ணன்னு பார்க்க மாட்டேன். நேரடியா நமக்குள்ள சண்டை தான் நடக்கும் என்று தீனாவை முறைத்து விட்டு சென்றான்.
ஏன்டா, அவ அண்ணன் தான் முறைக்கிறான்னா? இவனுமா? எல்லாம் என்னோட நேரம் என்று அறைக்குள் சென்றான் தீனா.
அறைக்கு சென்ற தீனாவிற்கு அவனது ஸ்டேசனிலிருந்து போன் வந்தது. என்ன? எல்லாரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க? என்று கத்தி விட்டு நான் வாரேன் என்றான்.
காவேரி எழுந்து வெளியே வந்து, என்னாச்சுப்பா?
அம்மா..அர்தீஸ் தப்பிச்சாடானாம். யாரும் வெளிய வராதீங்க என்று புவியை பார்த்து விட்டு துளசியிடம் கவனமா இருங்க. நான் ஆள் அனுப்புகிறேன் என்று வேகமாக வெளியேறி பிரதீப்பை அழைக்க, அவன் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. துகிராவிற்கு அழைத்து விசயத்தை சொல்ல, அவள் பிரதீப்பை பார்த்தான். அவன் தூங்க அவள் ஏதும் கூறாமல் விட்டு விட்டாள்.
தீனா செல்லும் வழியில் துருவன் சென்று கொண்டிருக்க, அவனிடம் விசயத்தை சொல்லி புவி துளசிய பார்த்துக்கோ. கவனமா இரு. சீக்கிரம் போ என்று தீனா அர்தீஸை பற்றி கூற துருவன் வேகமாக ஓடினான்.
அவன் மருத்துவமனைக்கு செல்ல, தீனா ஆதேஷிற்கு போன் செய்து கூற, மாமா அவன் எப்படி வெளியே வந்தான்? மாப்பிள்ள நீங்களும் ஜானுவும் கவனமா இருங்க என்றான். அவள் அறையில் தான இருக்கிறாள். அதனால் ஆதேஷ் மாமா சார்..நாங்க பத்திரமா இருப்போம்.
மாப்பிள்ள அவன் புவியை தேடி வருவான் இல்ல ஜானுவை தான் தேடி வருவான். பார்த்து இருங்க.
சரிங்க மாமா சார். நான் பார்த்துக்கிறேன் என்று போனை துண்டித்து அவன் அப்பாவிடம் கூறினான்.
அர்தீஸ் தப்பித்தது எல்லாருக்கும் தெரிய வர,ஆதேஷிற்கு தான் போன் வந்து கொண்டே இருந்தது. அவன் ஓய்ந்து அபியிடம் எல்லாரும் எனக்கே போன் செய்றீங்க?
போன முறை நாங்க கனெக்ட்ல இருந்தோம். ஆனா இம்முறை எப்பொழுது பிரச்சனை வருமென்று தெரியலை? அதனால கவனமா இரு.
ஆதேஷிடம் அர்தீஸ் தான் அவன் அண்ணனை கொன்றதாக எல்லாரும் சொல்லி இருக்காங்க. ஆனால் ஆதேஷ் அடித்ததில் தான் அந்த நெடியவன் இறந்திருப்பான். அது ஆதேஷிற்கு தெரியாது.
ஹாஸ்பிட்டலில் துருவனை பார்த்து துளசி, நீ எதுக்குடா வந்த? கேட்டான்.
ஆன்ட்டி தண்ணி கொடுங்க என்று வாங்கி குடித்து விட்டு அமர்ந்தான். போன் தாங்க என்று அவன் அம்மாவிடம் வர தாமதமாகும். நீங்க சாப்பிட்டு ஓய்வெடுங்க என்று வைத்தான்.
துருவா..நீ இன்னும் சாப்பிடலையா? புவனா கேட்க, அவளை பார்த்து முறைத்தான். இவன் எதுக்கு அவளை பார்த்து முறைக்கிறான்? என்று துளசி சிந்தித்தாள்.
நான் சாப்பிட வாங்கி வரவா தம்பி காவேரி கேட்க, எனக்கு பசிக்கல ஆன்ட்டி என்று சன்னலருகே சென்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். காவேரியும் துளசியும் இருவரையும் பார்த்தனர்.
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்களா? துளசி கேட்க, அவளை பார்த்த துருவன், ஆன்ட்டி நான் புவியிடம் தனியா பேசலாமா? கேட்டான்.
என்ன பேசணும்? துளசி கேட்க, அவன் பதிலளிக்காமல் காவேரியை பார்த்தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பேசுகிறேன் என்றான்.
வாடி..என்று துளசியை உள்ளே அழைத்து சென்றார். துருவன் புவியிடம் வந்து, எதை மறைக்கிறாய் புவி..சொல்லு? கேட்டான்.
நான் எதையும் மறைக்கலைடா.
சொல்லப் போகிறாயா? இல்லையா? சத்தமிட்டான்.
புவி அழுதாள். இவர்கள் பேசுவதை துளசி கதவில் காதை வைத்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
என்னடி பண்ற? காவேரி திட்ட,
அம்மா..அமைதியா இரு. சரியா கேட்கவே மாட்டிங்குது.
துருவன் அவள் அந்த கவர் வைத்திருந்த இடத்திற்கு வந்து அதில் கை வைத்தான். புவி அவனை பிடித்து தள்ள
அதுல அப்படி என்ன தான் இருக்கு? சொல்லு புவி என்று கத்தினான். இது தெளிவாக துளசிக்கு கேட்க, எதை பற்றி கேட்கிறான்? என்று அவளும் சிந்திக்க
காவேரிக்கு ஓர் அழைப்பு வந்தது. புவனாவிடமா? என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்து வெளியே வந்தார்.
அம்மா..போன்ல யாரு? துளசி கேட்க,
புவி உன்னிடம் பேசணும்ன்னு சொல்றாங்க என்று காவேரி போனை கொடுக்க துருவன் வாங்க செல்ல, துருவா போன் எனக்கு என்றாள் புவி.
என்னம்மா..புகைப்படத்தை பார்த்தாயா? இப்ப என்ன சொல்ற?
என்ன சொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்க?
ஏய்..என்ன? உனக்கு நல்லது செய்ய நினைத்தால் நீ என்ன என்னையே எதிர்த்து பேசுற?
நீங்க குரலை மாத்தி பேசுனா எனக்கு தெரியாதா? என்ன? நீங்க யாருன்னு எனக்கு தெரியும்.
தெரியுதுல. அவனை விட்டு போயிடு.
என்னால முடியாது. நீங்க வேற ஏதாவது முயற்சி செய்யுங்களேன்.
அப்படியா? தயாரா இரு. நீ அவனால ரொம்ப கஷ்டப்படப் போற.
பரவாயில்லை. என்னை எண்ணி கவலைப்பட நிறைய பேர் இருக்காங்க. நீங்க கவலைப்பட வேண்டாம்.
துளசி அருகே சென்று துருவன் அவளிடம் எதையோ கூறினான். அவள் அவனை பார்த்து கண்டிப்பாக செய்யணுமா? கேட்டாள். அவள் அம்மா இருவரையும் பார்த்தனர். துளசி உள்ளே சென்றாள்.
துருவன் புவனா கையிலிருந்த போனை வாங்கி, யாரு பேசுறீங்க? அவளை மிரட்டிறீங்களா?
பொடிபசங்களுக்கெல்லாம் துடுப்பு வளர்ந்திருச்சு. அதை வெட்டுனா சரியா இருக்கும்.
யாரு புவி? என்ன பேசுறான்? தீனா சாரை பற்றி தான் சொல்கிறானா? என்று கேட்டுக் கொண்டே புவனாவை நெருங்கினான். காவேரி புவனா பேசியதை சிந்தித்துக் கொண்டிருந்தார்.
புவி..புவி..என்று அழைத்துக் கொண்டே அவள் கட்டிலில் அவளருகே அமர்ந்து இரு கைகளையும் இறுக்கமாக பிடித்தான். துளசி அவளது துப்பட்டாவை எடுத்து ஓடி வந்து கட்டினாள்.
துருவா..துளசி..என்ன பண்றீங்க? புவனா அலற, வாயை மூடு. வாய திறந்த அவ்வளவு தான் என்று சத்தமிட்டான்.
புள்ளய என்ன பண்றீங்க? பதறினார் காவேரி.
ஆன்ட்டி அவள நாங்க ஒன்றும் பண்ணல. அவ என்ன செய்றான்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா? துருவன் கேட்டான். அவர் புவனாவை பார்த்தார்.
புவனாவை நகர்த்தினான் துருவன்.
வேண்டாம்டா. அதை எடுக்காதே என்று பதறினாள்.
அவன் எடுக்க அவள் காலை துக்கி அவனை எட்டி உதைத்தாள்.
ஏய்..என்ன பண்ற? என்று துளசி துருவனிடம் வந்தாள்.
அவன் கையிலிருந்த கவர் பிரிந்து கீழே விழுந்தது. காவேரி அதனருகே வந்தார்.
ஆன்ட்டி எடுக்காதீங்க என்று வலியுடன் காலை ஊன்றி எழ, தாங்க முடியாமல் அழுது கொண்டே அமர்ந்தாள்.
துளசி பதறி புவனாவிடம் சென்றாள். துருவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். மீண்டும் புவி கண்ணீருடன் எழுந்தாள்.
ஆன்ட்டி வேண்டாம் என்று ஒரு காலை இழுத்து அவரருகே வந்து கீழே விழ, அவர் கையில் எடுத்ததை கீழே போட்டு அவளை பிடித்து,
அது அவ்வளவு முக்கியமாம்மா. ஏன்மா? என்று பதறினார்.
ஆனால் துருவன் விடாது எடுத்து பார்த்து விட்டு புவனாவை பார்த்து, அவளை தூக்கி விட்டு கட்டிலில் அமர்த்தினான். பின் அவளிடம்,
இது தேவையா? இதுக்கு தான் முன்னமே உன்னிடம் சொன்னேன். நீ தான் கேட்கவில்லை என்று அவளது கையை பிடித்தான். புவனா கதறி அழ ஆரம்பித்தாள்.
ஏன்டா, எனக்கு மட்டும் இப்படி நடக்குது? கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியல.
துளசி அவனருகே வந்து, அவன் கையிலிருப்பதை பார்க்க வந்தாள். அவன் மறுகையில் மாற்றி அவள் பார்க்காதவாறு வைத்துக் கொண்டான்.
அது என்ன தம்பி..கொடுங்க பார்ப்போம் காவேரி கேட்க, ஆன்ட்டி அது என்னோட பெற்றோருடன் உள்ள புகைப்படங்கள். அதை நானே வைத்துக் கொள்கிறேன் புவி கூறி விட்டு துருவனை பார்த்தாள்.
இது என்னிடமே இருக்கட்டும். நான் சம்பந்தபட்டவரிடம் பேசணும்.
துருவா..அதை கொடு. ப்ளீஸ் கொடுத்திருடா என்று கெஞ்சினாள்.
துருவன் பொய் தான் சொல்கிறான் என்று துளசிக்கு நன்றாக தெரிந்தது. கவர் விழுந்து பிரிந்த போது ஒரு புகைப்படம் மட்டும் யார் கையிலும் மாட்டாமல் கட்டிலுக்கு அடியே கிடந்தது.
அதை நானே வைத்திருக்கிறேன் என்று கூறி முடித்தான். ஆனால் அவனுக்கு தீனா மீது கொலைவெறியே இருந்தது. அவன் அம்மாவிற்கு தெரியாமலிருக்க அமைதியாக இருந்தான். புவனாவிற்கு தான் பதட்டமாக இருந்தது.
யாசு விழித்து பார்த்தாள். அருகே மாதவ் அவள் கையை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.
பப்ளிம்மா..உன்னை நான் பாத்துக் கொள்ளாமலே இருந்து விட்டேன் என்று அழுதான். அவள் அவனது கையை பிடித்து அழுத்தினாள். அப்பொழுது உள்ளே வந்தனர் போலீஸ்காரர்கள்.
யாசு அறைக்குள் அவர்கள் செல்ல, அர்ஜூனும் நண்பர்களும் உள்ளே சென்றனர். அர்ஜூன் ஒருவனிடம் கண்ணை காட்ட, அவன் உள்ளே சென்று அவர்களை மக்களுக்கு நேரடி காட்சியாக்கினான்.
மாதவிடம் சென்று, சார் உங்களை அரெஸ்ட் பண்றோம். இதோ அரெஸ்ட் வாரன்ட்..என்று காட்ட, அர்ஜூன் அனுப்பியவன் அனைவருக்கும் பரீச்சயமயான யூ டியூபர்.
போலீஸ் அவனை தடுக்க, அவனாக சுவற்றில் இடித்து இரத்தம் வர வைத்து போலீஸ் அடித்ததாக காட்டிக் கொண்டு, மாதவ் சார் மட்டும் அவர்களை கொல்லவில்லை என்றால் பெண்களும் இறந்திருப்பார்கள் என்று யாசுவை காட்டினான்.
அவள் மாதவ் கையை பிடித்துக் கொண்டு விடாமல் இருக்க, அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. போகாதீங்க என்று மெல்லிய குரலில் கூறிக் கொண்டு அவனது கையை மேலும் இறுக்கமாக பிடித்தாள்.
மாதவ் அவளது நெற்றியில் முத்தமிட்டு, நான் வாரேன் என்று அவள் கையை எடுக்க, அவள் மெதுவாக எழ முயற்சிக்க அபி அவளிடம் வந்து, யாசு எழாத..படுத்து ஓய்வெடு. சார் வந்துடுவாங்க.
அவள் அழுது கொண்டே அவரை தனியே விட்றாதீங்கடா..
அர்ஜூன் அருகே வந்து, அவர் கண்டிப்பா வந்துடுவார் என்று கூற, நித்தியும் உள்ளே வந்தாள்.
நித்தி..என்று அவள் கையை நீட்ட, அவள் யாசுவிடம் வந்தாள். வந்தவர்கள் மாதவை அழைத்து சென்றனர்.
சந்துரூ அந்த யூ டியூபரிடம் பேசினான். மாதவும் யாசுவை கூட பார்க்காது நேராக அறைக்கு தானே சென்றிருப்பான். அர்ஜூன் சுட நினைத்து துப்பாக்கியை நீட்டிய சமயம் மாதவ் வந்து அர்ஜூனுக்கு வேலை வைக்காமல் ரௌடிகளை கொன்றிருப்பான். அதை காண்பித்து சந்துரூ விளக்கினான்.
யூ டியூபரோ? நீங்க சொல்லுங்க மக்களே? ரௌடிகள் கொன்றிருந்தால் நிறைய பேர் இறந்திருப்பாங்க. ஆனால் சுட்டவர் போலீஸ். ஒரு போலீசா ரௌடிகளை பிடிக்க தான் வந்தார். அவன் சிறு குழந்தை என்று பாராமல் கத்தி வைத்திருக்கான்.அவன் கொல்வதற்குள் இவர் ரௌடிகளை கொன்று இருக்கார்.அவருக்கு விருது வழங்குவதை விட்டு அரெஸ்ட் பண்றாங்க? இது நியாயமா? கேட்டு முடித்திருந்தான்.