வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-43
155
அத்தியாயம் 43
அண்ணா..அவ என்னோட போனை தர மாட்டிங்கிறா? கைரவ் கூற, அவன் தேவையில்லாம பேசுறான். அதனால் தான் நான் தரவில்லை நித்தி கூறினாள்.
அண்ணா..இவள நம்பாத. இவ இன்னும் நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாள்?
நான் உங்ககிட்ட எதையாவது மறைப்பேனா?
அண்ணா..நீயே பாரு. என்னோட போன் அவளிடம் தான் இருக்கு.
தம்பி, என்ன சொன்னீங்க? என்று சைலேஷ் கேட்க,
அண்ணா..அண்ணி போனை வைச்சுகிட்டு கொடுக்க மாட்டிக்கிறாங்க.
அவன் போனை எதுக்கு நீ வைச்சிருக்க?
அது வந்து, அவன் உங்கள இங்க வர வைச்சிருவான்னு தான்.
நான் வந்தா உனக்கு என்ன பிரச்சனை?
இல்ல..இப்ப நிலைமை சரியில்லையா. அதான் நீங்க வீட்ல பாதுகாப்பா இருப்பீங்கன்னு நினைச்சேன்.
சைலேஷ் மனதில் புன்னகையுடன், இது என்ன? என்று அவளது தலையை காட்டி கேட்க, கைரவ் மெதுவாக பின் நகர்ந்து பவி பின்னே ஒளிந்தான்.
நில்லு..நீ எங்க போற? அந்த பொண்ணே குட்டையா இருக்கு. அவ பின்னாடி நீ ஒளிகிறாயா?
பவியை பார்த்து சைலேஷ், நீ அழுதியாம்மா? என்னாச்சு? என்று கேட்க, அகிலை சுட்டுட்டாங்க சார். எனக்கு உதவ வந்து தான் அவனுக்கு இப்படி ஆனது? என்று அவள் அழுதாள்.
அனைவரும் அமைதியாக அவளை பார்க்க நித்தி அவளிடம் வந்து, அழாத பவி..அவன் சரியாகிடுவான் என்று சமாதானப்படுத்தினாள். ஆனால் அவளுக்கு மனதினுள் ஏதோ பயம்.
ஆமா..சூரப்புலி சொல்லிட்டாங்க. அவனுக்கு ஒன்றுமாகாது என்று சைலேஷ் கூற, நித்தி அவனை பார்த்தாள்.
என்ன பாக்குற? என்ன தான் நீ கையூவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் உன்னோட கண்ணு அகிலுக்கு சிகிச்சை நடக்கும் அறை மீது தான் உள்ளது. அவள் கண்கள் கலங்க சைலேஷை அணைத்து அழுதாள்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. யாசுவுக்கும் அகிலுக்கும் ஒன்றுமாகாது தான?
ஒன்றுமாகாது. நீ வெளிய சொல்லி அழுறத விட்டுட்டு ஏன் உனக்குள்ள மறைச்சு கஷ்டப்பட்டுகிட்டு இருக்க. உனக்கு தலை வலிக்குதா?
இல்லை. எனக்கு கஷ்டமா இருக்கு.
அதெல்லாம் அவங்களுக்கு ஒன்றுமாகாது என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க, பவி அழுது கொண்டே தனியே வந்து அமர்ந்தாள். அவள் தான் வேறு யாரிடமும் அதிகமாக பேசியதில்லையே? அவள் அழுது கொண்டிருக்க, ஸ்ரீ அவளாகவே பவியிடம் வந்து அவள் கையை பிடிக்க,
ஸ்ரீ..அகிலுக்கு ஒன்றுமாகாதுல? என்று அழுதாள். அர்ஜூன் இருவரையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
நித்தியை நகர்த்தி நிற்க வைத்த சைலேஷ் தன் நண்பனை பார்த்தான்.
அண்ணா..இதெல்லாம் உனக்கு முன்பே தெரிந்து தான் வந்தாயா? கைரவ் கேட்டான். சைலேஷ் அர்ஜூனை பார்த்தான்.
என்ன அர்ஜூன்? அனைவரும் அவர்களை பார்க்க ஸ்ரீ எழுந்தாள்.
அண்ணா..ஏதோ தப்பா இல்ல..இருக்குண்ணா. ஏதோ தப்பா இருக்கு. ஆனா என்னன்னு புரியல?
அவனை தானே போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களே?
ஆமாண்ணா. ஆனா ஏதோ மிஸ் பண்ணது போல இருக்கு.
அபி அவனிடம் வந்து அனைவரையும் பிடிச்சாச்சு அர்ஜூன்.
இல்ல..இருக்காங்க. எங்க ஆன்ட்டி என்றாள் ஸ்ரீ.
ஸ்ரீயை அர்ஜூன் அருகே அழைத்தான். அவங்களுக்கு மல்டிபுல் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் உள்ளது. நல்ல எளிமையான குணத்துடனும், அதற்கு மாறாக கொடூரமான கொலை செய்யும் புத்தியுமாக இருவர் அவங்களுக்குள்ள இருக்காங்க.
அந்த கெட்ட குணம் வெளிய வந்தா தான் பிரச்சனை. ஆனால் எனக்கு தோன்றுவது அவன் தான். அவன் மட்டும் தான்.
மருத்துவர் வெளியே வந்து, யாசுவிற்கு சீக்கிரம் சரியாகிவிடும். அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க என்றார்.
மாதவ் அர்ஜூனை அணைக்க, சைலேஷ் அவனிடம் வந்து அவனை முறைத்தான்.
சைலூ..யாசுவிற்கு சரியாகிடும் என்று மாதவ் புன்னகையுடன் கூற, சைலேஷ் அவனை ஓங்கி அறைந்தான்.
என்ன செஞ்சுட்டு வந்திருக்க? உன்னோட வேலையே போகப் போகுது. அது போனால் கூட பரவாயில்லை. ஆனால் நீ செய்த காரியத்தால் உன்னை உள்ளே வைத்து விட்டால், உன்னோட குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என்று திட்டினான்.
அவனுக்கும் அப்பொழுது தான் அதை பற்றிய நினைவே வந்தது. நான் அப்படி செய்தது எனக்கே தெரியலடா..
காதல் உன் கண்ணை மறைத்து விட்டது.அதுக்காக ஏழெட்டு பேரை என்றவன் நிறுத்தி, அவனை வெளியே இழுத்து சென்றான். இன்பா அதிர்ந்து அவன் கூறியதை யோசிக்க..அவன் அவள் கண்முன் தானே சுட்டிருப்பான்.
அபி இன்பாவிடம், மேம் உங்களுக்கு எப்படி இருக்கு ?
கையை அசைக்க முடியல அபி என்றாள். பின் சைலேஷ் மாதவ் உள்ளே வந்தனர்.
அர்ஜூன் ஊர்ல இருந்து கேரியுடைய தோழன் வந்துருக்கான். அவனுடன் கேரி மனைவியின் தங்கையும் வந்துருக்காங்க. அந்த பொண்ணு கேரி பின்னாலேயே சுத்திக் கிட்டு இருக்கா.
சைலு..நானு வாரேன் என்று இன்பா ஆர்வமாக எழ, அபி அவளை முறைத்துக் கொண்டு,
அங்க போய் நீங்க என்ன செய்யப் போறீங்க? முதல்ல அம்மாவையும் இதயாவையும் போய் பாருங்க. அவங்க தான் உங்கள் நினைச்சி கஷ்டப்பட்டுகிட்டு இருப்பாங்க அபி கூற,
இன்பாவுக்கு ஏற்றவன் தான் நீ என்று மனதினுள் சைலேஷ் நினைத்துக் கொண்டிருந்தான்.
அபி..தருண் இன்னுமா வரலை? இன்பா கேட்க, அர்ஜூன் வேகமாக எழுந்தான்.
அவன் அக்கா வீட்டுக்கு அப்பொழுதே வந்துட்டான். பவி உன்னுடைய அம்மா, அப்பாவும் பாதுகாப்பா இருக்காங்க அபி கூற, கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் பவி.
தேவ் அகிலுக்கு சிகிச்சை முடித்து விட்டு, யாசுவை பார்த்த மருத்துவரிடம் பேசி விட்டு அர்ஜூனிடம் வந்தான்.
உன்னோட ப்ரெண்ட்ஸுக்கு ஒன்றும் இல்லை. அந்த பையனுக்கு தோட்டா ஆழமாக இறங்கவில்லை. நாளை மட்டும் இருந்தால் போதும். அந்த பொண்ணும் நல்லா இருக்கா. ஆனால் அவள் பயத்துடன் இருக்கிறாள். அவளுக்கும் கத்தி ஆழமாக படவில்லை. அவளுடைய தோல் மிகவும் இலகுவானது. அதனால் தான் கத்தி பட்டவுடன் இரத்தம் வந்துருக்கு. நீங்க எல்லாரும் துணைக்கு இருப்பதா அவள் நினைத்துக் கொண்டால்..சீக்கிரமே சரியாகிவிடும்.
இவர்கள் இரு நாட்களுக்கு மேல் இருக்க தேவையில்லை என்று தேவ் கூற, அர்ஜூன் அவனை முறைத்தான்.
இப்பொழுது தான் நிம்மதியா இருக்கு என்று நித்தி அமர்ந்தாள். பவியும் கண்ணை துடைத்துக் கொண்டு அவனை பார்க்கலாமா டாக்டர்? கேட்க,
உனக்கும் ஆளிருக்காம்மா..என்று தேவ் விரக்தியுடன் கேட்க, நித்தி அவனிடம் வந்து, ஆமா..அதுக்கென்ன என்று பவியை மறைத்து நின்றாள். ஸ்ரீயும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாரும்மா..தொந்தரவு செய்யாம பாருங்க என்று அவன் செல்ல, நிவாஸ் ஸ்ரீ அருகே வந்து அமர்ந்தான். அர்ஜூன் வெளியிலிருந்து அகிலை பார்க்க, உள்ளே அகில் கையை பிடித்தவாறு பவியும், யாசு கையை பிடித்தவாறு மாதவும் இருந்தனர்.
ஏன்டி, நீ வருத்தப்படாத அவன் வரட்டும். நான் பார்த்துக்கிறேன். நீ இங்கேயே இரு. மருது பொண்டாட்டி பக்கத்து அறையில தான் இருக்கா. நான் அவள பார்த்துட்டு வாரேன் என்று புவியிடம் அப்பத்தா கூற, தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அவர் வெளியேறவும் ஒரு பொண்ணு உள்ள வந்து புவனாவிடம் ஒரு கவரை கொடுத்து, இதை பார்த்து முடிவெடு என்று கூறி விட்டு வெளியே சென்றாள்.
புவனா அந்த கவரை பிரித்து பார்த்தால், அது முழுவதும் தீனா வேறு பெண்களுடன் இருப்பது போன்ற தவறான படங்கள். அதை பார்த்து திகைத்து பயந்து அழுதாள்.
இல்ல..இது அவர் இருக்காது என்று தேம்பி தேம்பி அழுதாள். அதை உற்று பார்த்தாள். அது அவன் தான் தெளிவாக இருந்தது. ஆனால் அவளுக்கு தீனா தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற பயம் ஆரம்பித்தது. அதை மீண்டும் உறையிலிட்டு அவளது கட்டிலுக்கு அடியில் மறைத்து விட்டு அழுது கொண்டே படுத்து தூங்கிப் போனாள்.
இதை அறியாத தீனாவோ ஹாஸ்பிட்டல் வந்து புவனா தூங்குவதை பார்த்து, வீட்டிற்கு சென்று குளித்து ஆடை மாற்றி விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தான்.
புவனா விழித்திருக்க, காவேரி அவளுக்கு மதிய உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். புவிக்கு உணவு உள்ளே செல்ல மாட்டேன் என்றது. அவளுக்கு அந்த புகைப்படமே நினைவிற்கு வர,
எனக்கு வேண்டாம்மா. பசிக்கலை அவள் கூற,
நல்லா சாப்பிட்டா தான. நீ படிக்க முடியும் அவர் கூறிக் கொண்டிருக்க, அவள் வாயை மூடிக் கொண்டாள்.
பாப்பா..என்னாச்சுடா? என்று காவேரி எழ, அவள் எழ முயற்சி செய்ய, தீனா அவளை தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
அவள் வாந்தி எடுக்க, அவளை இறக்கி விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். அவள் அவன் கையை எடுத்து விட,
புவி என்ன பண்ற? முதல்ல முடி. அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றான் தீனா.
முடித்து விட்டு வெளியே வந்த தீனா புவனாவை கட்டிலில் போட்டு விட்டு, அம்மா..நான் மருத்துவரை பார்த்து வருகிறேன் என்று செல்ல,
நில்லுடா..போன்ல என்னடா பேசுன?
அம்மா..நான் தான் சொன்னேன்ல. கொஞ்ச நேரம் இருங்க. வாமிட் பண்ணி இருக்கா. நான் கேசவன் சாரை பார்த்துட்டு வந்துடுறேன். புவி ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
நீ பேசு. நான் அவரை பார்த்து என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன் என்று அவர் வெளியே சென்றார்,
தீனா..புவியின் அருகே நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து அவளை பார்த்தான். அவள் போர்வையை இழுத்து மூடிக் கொண்டு படுத்தாள். அவன் எழுந்து அறை தாழ்ப்பாளை போட்டு விட்டு கட்டிலில் அவள் பார்க்கும் படி அமர்ந்தான். அவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.
புவி..எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
அவள் அமைதியாக இருந்தாள். அவனும் அவளது போர்வையினுள் நுழைந்து இறுகி அவளை அணைக்க, அவள் அவனை தள்ளி விட்டாள்.
மீண்டும் அவளை அணைத்த தீனா, அவளிடம் பேச ஆரம்பித்தான்.
ஏன் புவி, உன் அண்ணாவுக்கு என்னை பிடிக்கலை. அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு என் உயிரை பணயம் வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன் தெரியுமா? தீனா கூற, புவி அவளாகவே அவன் பக்கம் திரும்பி, போர்வையை விலக்கி அவனை ஆராய்ந்தாள்.
உனக்கு எப்படி என்னை பிடித்தது? என்று தீனா கேட்க, கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
அவளது நெற்றி, கண்கள், மூக்கு, உதடு, கன்னம் என்று அவளை வருடியவன். உன் அண்ணாவை வெறுப்பேற்ற தான் பிரேக் அப் செய்யலாமான்னு கேட்டேன்? கேட்க மட்டும் தான் செய்தேன். ஆனால் உறுதியாக நான் பேசவில்லை. உனக்கு புரியலையா புவி? அவனை நம் வழிக்கு கொண்டு வர தான் அவன் செல்லும் வழிக்கு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் நீ என்னை முழுதாக நம்பவில்லை தான? அவன் கேட்க, அவனது வாயை தன் கைகளால் அடைத்தவள்..
நான் நம்புகிறேன். நிச்சயமாக நம்புகிறேன். நான் கஷ்டப்படும்படி நீங்க ஏதும் செய்ய மாட்டீங்க? நான் முழுசா நம்புகிறேன். அவன் அவளை அணைக்க, எனக்கு கால் வலிக்கிறதே..
ஷ்..ஓ..சாரிம்மா. நான் பயத்தில் மறந்துட்டேன் என்று தீனா விலக, புவனா அவனது சட்டையை பிடித்து இழுத்து அவன் இதழ்களில் முத்தமிட்டாள். அவனும் முத்தமிட..
அச்சோ..வேண்டாம் வேண்டாம். நான் இப்பொழுது தான் வாமிட் பண்ணேன். வாடை வரும் என்றாள். அவன் வேண்டுமென்றே இதழணைப்பை கொடுக்க,
சொல்றேன்ல வேண்டாம் என்று அவனை தள்ளினாள். அவன் சட்டை விலக, அவனுக்கு அடிபட்ட நினைவு வந்து, அவனது சட்டை பட்டனை கழற்ற,
புவிம்மா ஏதோ செய்றீங்க? தீனா புவியை பார்க்க, ம்ம்..ஆசைய பாரு. இந்த நிலையில தேவைதான் என்று அவனுக்கு கட்டிட்ட இடத்தில் முத்தம் கொடுத்தாள்.
ம்ம்..ஆசை தான். ஆனால் என்னோட புவிக்குட்டி இன்னும் நிறைய படிக்கணுமே?
படிக்கணும் என்று அவள் சுருதி குறைந்தது.
அவளை தோளோடு அணைத்து, உனக்கு தான் படிக்க ரொம்ப பிடிக்குமாமே?
ம்ம்..பிடிக்கும். ஆனால் நான் படிக்க பணம் வேண்டுமே? கவலையுடன் கூறினாள்.
மெடிக்கல் கல்லூரியில் சேர பணம் அதிகம் வேண்டுமா?
ம்ம்.
எவ்வளவு ஆகும்?
நீட் எழுதிய பின் நம் மதிப்பெண் பொறுத்தது.
அந்த எக்சாம் ரொம்ப கஷ்டமாமே?
அவர்கள் பேசிக் கொண்டிருக்க காவேரி சன்னல் வழியே அவர்கள் நன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர் சென்றார்.
அவன் கேளாமல் உள்ள செல்ல, துகிரா அவன் முன் வந்தாள்.
அவளை பார்த்து விட்டு உள்ளே செல்ல இருந்தவனை திட்டினார் அப்பத்தா.
அவரை பார்த்த பிரதீப் ஜானுவை விட்டுட்டு வந்துருக்கேன். குளிச்சிட்டு வரணுமா? கத்தினான்.
ஏய்யா..நீங்க வீட்டுக்கு போய் விட்டுட்டு வந்தீகளா?
சினமுடன் அங்கிருந்து தண்ணீரை எடுத்து அவன் மேல ஊற்றி விட்டு போதுமா உனக்கு? என்று அவனறைக்கு சென்று அனைத்தையும் அடித்து உடைத்தான்.
அப்பத்தா, துகிரா, துளசி பதறி அவனறைக்கு வர, அவர்கள் முன் ஜானுவும் பிரதீப்பும் இருக்கும் புகைப்படம் விழுந்து சிதறியது.
அப்பத்தா..சீற்றத்துடன் அவனிடம் வந்து, போட்டோ உடையக் கூடாது. அபசகுணம் ஏதோ தவறாக நடக்கப் போவுது என்று கத்தினார்.
அவன் அதை எடுக்க வர, அவன் கையை பிடித்து தடுத்தாள் துகிரா. அவளை நிமிர்ந்து பார்த்த பிரதீப், அவளை கட்டிக் கொண்டு, ஜானு..எப்படி பேசுறா பாரு துகி. ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதான். துளசி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏய்..உனக்கு படிக்க ஏதுமில்லையா? அப்பத்தா கேட்க, அவள் அவர்களை பார்த்துக் கொண்டே சென்றாள். அப்பத்தா கண்ணாடி சில்லை சுத்தம் செய்து விட்டு, உடைந்த போட்டாவை எடுத்தார்.
அது இங்கேயே இருக்கட்டும் என்று துகிரா கூற, அவர் வெளியே சென்றார்.
பிரதீப் அவளை விடுவிக்க, அவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டு ஜானுவுக்கு நேரம் கொடுங்க.
வேரெதுவும் பிரச்சனையா? அவள் கேட்க, அவளை பார்த்து விட்டு மீண்டும் அணைத்தான்.
முதல்ல குளிச்சிட்டு வாங்க என்று அவனை அனுப்பி விட்டு வெளியே வந்து ஆதேஷை அழைத்தாள். அவனும் போன் எடுக்காமல் இருக்க, லலிதாவிற்கு போன் செய்தாள்.
அவர் எடுத்து பேச, துகி நீ நல்லா இருக்காயா? ஏதும் பிரச்சனையில்லையே? அவர் பேசிக் கொண்டிருக்க ஜானு அவரருகே வந்து அமர்ந்தாள்.
மருமகளே..என்னாச்சு? எல்லாமே ஓ.கேவா? என்று ஜானுவிடம் வந்தார் ஆதேஷ் அப்பா.
அங்கிள்..எனக்கு..என்று லலிதாவை பார்த்தாள்.
இல்ல அங்கிள். ஓ.கே தான்.
என்ன ஓ.கே மட்டும் தானா?
ஏதாவது சொன்னானா? அவர் கேட்க, துகிராவிற்கு இவர்கள் பேசுவது கேட்டது.
அங்கிள், ஆன்ட்டி உங்ககிட்ட பேசணும் என்று அவரது போனை பார்த்தாள் ஜானு.
ஆன்ட்டி போனை வைக்காதீங்க என்று கூறினாள். ம்ம்..என்று ஜானுவிடம் சொல்லுவது போல் துகிராவிடம் சொன்னார். போனை அணைப்பது போல் பாவனை செய்து அவர் கையில் வைத்துக் கொண்டார்.
அங்கிள்.. இங்கேயே இருக்காயா? என் பையனை கட்டிக்கிறியான்னு? கேட்டீங்கள..
ஆமாம்மா..என்று அவர் ஆர்வமுடன் கேட்க, துகிரா முகம் மாறியது. குளித்து வந்த பிரதீப் அவளை பார்த்து அவளது போனை பிடுங்கி அவன் கேட்க, துகிரா அதை ஸ்பீக்கரில் போட்டாள்.
எனக்கு தெரியும் மருமகளே? என்ன அந்த பொண்ண மறப்பானே என்று தான் பயந்தேன்.
சும்மா இருங்க. இப்ப அவள பத்தி எதுக்கு பேசுறீங்க? என்று லலிதா அவரை திட்டி விட்டு, ரொம்ப சந்தோசம் ஜானு என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.
வசந்தி அங்கே வந்து, சின்னம்மா..இந்தாங்க ஸ்வீட் என்று ஊட்டி விட்டார். அவள் வாங்கினாள். ஆனால் முகத்தில் சந்தோசம் இல்லை.
என்னாச்சும்மா? இவ்வளவு வருத்தமா பேசுறீங்க? வசந்தி கேட்க,
நான் எதையும் அண்ணாவிடம் முதல்ல சொல்லுவேன்.ஆனால் இதை எப்படி சொல்றதுன்னு தெரியல? என்று ஜானு அழுதே விட்டாள்.
இதுக்கெல்லாமா அழுறது? லலிதா அவளை அணைக்க, ஆன்ட்டி என்று பேச முடியாமல் அழுதாள். பிரதீப்பும் கண்ணீர் வடிக்க, துகிராவிற்கு அவள் காதலிக்கிறாளா? ஆதுவையா? என்று மனதினுள் வருத்தப்பட்டாள்.
அவன் அண்ணன் என்று கூறினாலும் அவன் துகிக்கு உண்மையான அண்ணல்லவே. ஜானு அவர்கள் வீட்டிலே இருந்தால் நம்மை விட்டு விடுவார்களோ என்று பயம் வந்தது அவளுக்கு. அதை காட்டிக் கொள்ளாமல் பிரதீப் கண்ணீருடன் இருப்பதை பார்த்து அவனது கையை பிடித்தாள்.
மருமகளே நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க அண்ணாவுக்கு முதலிலே தெரிந்திருக்கும். நீங்க நினைப்பது போல தான் அவரும் எப்படி கேட்க? என்று நினைத்திருப்பார் என்று ஆதேஷ் அப்பா கூற,
அங்கிள், அண்ணாவுக்கு தெரியுமா? அண்ணா எதுவுமே சொல்லலையே?
அவருக்கு தெரிந்ததால் தான் நீங்க இங்க வாரேன் சொன்னதுக்கு எந்த மறுப்பும் சொல்லலை அவர் கூற, துகிரா பிரதீப்பை முறைத்து பார்த்தாள்.
கண்ணை துடைத்தவன் அவள் கையை அழுத்தமாக பிடித்தான். அவள் எண்ணம் பிரதீப்பிற்கு புரிந்தது.
ஏம்மா..உங்களுக்கு உங்க அண்ணாவை ரொம்ப பிடிக்கும் போல வசந்தி கேட்க,
ஆமா..அது எப்படி பிடிக்காமல் போகும். நான் அவனிடம் ரொம்ப கோபமா பேசிட்டேன். அண்ணா கஷ்டப்பட்டிருப்பான்.
அக்கா..உங்களுக்கு தெரியுமா? என்று எழுந்து அவரிடம் ஓடினாள். அவள் கொலுசொலி கேட்க, துகிராவும் பிரதீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அண்ணா தான் எனக்கு தினமும் ஊட்டி விடுவார். நான் போடும் ஆடை கூட அவர் தான் எடுத்து வைப்பார். எனக்கு எல்லாமே செய்வார் என்று பேச்சை நிறுத்தினாள். ஏதோ உள்ளது என்று புரிந்து கொண்ட வசந்தி,
பேசுங்கம்மா..இந்த வீட்ல பேச்சு சத்தமே இருக்காது. அம்மா வேலை வேலை என்று ஓடிவார்கள். தம்பி புத்தகமும் கையுமாகவும் போனுடனும் இருப்பாங்க. துகிராம்மா..வந்தா எப்பவாது சத்தம் கேட்கும். மற்றபடி சத்தமே இருக்காது வீட்ல. இப்ப தான் வீடு வீடாவே இருக்கு.
இப்ப அய்யா வந்ததும் எல்லாமே மாறிடுச்சு. அவரும் உங்கள மாதிரி பேசிக்கிட்டே இருக்காரு.
என்ன? லலிதா கேட்க,
ஏம்மா..என்ன பேசுறன்னு பார்த்து பேசும்மா. நான் ரொம்ப நல்லவன். நீ பேசியது தவறான அர்த்தத்தை கொடுக்குது அவர் கூற, லலிதா இருவரையும் முறைத்து பார்த்தான்.
அய்யோ..அம்மா..அய்யா..சின்னம்மா கிட்ட பேசியதை சொன்னேன். எனக்கு புள்ளகுட்டியெல்லாம் இருக்கும்மா. வேலைய விட்டு தூக்கிறாதீங்கம்மா என்று கெஞ்ச ஜானு அவர்களை பார்த்து சிரித்தார்.
ஆன்ட்டி..எதுக்கு கோபம்? அங்கிளுக்கு உங்கள விட்டா ஆளே கிடைக்காது. அதான் நீங்க பிரிஞ்சிருந்தும் அவருக்கு வேறு குடும்பம் இல்லை. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. வெளிநாட்டில இருந்து தனியா வந்திருக்காரு உங்களுக்காக. உங்க மேல எவ்வளவு காதல் இருந்தா இப்படி உங்களையே நினைச்சுகிட்டு இருப்பாரு.
என்ன அங்கிள்? ஜானு கேட்க, நல்லா சொல்லும்மா. எனக்கு பேச என்னோட மருமக இருக்கா என்று ஜானுவிடம் வந்தார்.
சரி..சரி..ரெண்டு பேரும் பேசுனா பேசிக்கிட்டே இருப்பீங்க..ஆமா ஜானு, நீ மட்டும் வந்து சொல்ற? அவன் என்ன செய்றான்?
ஆன்ட்டி..நீங்க, மாமா, அண்ணா எல்லாரும் யாரோ இறந்துட்டாங்கன்னு தான ஊருக்கே வந்தீங்க? ஆனா ஏதோ சரியில்லை. மாமா அண்ணா பத்தி பேசிக்கிட்டு இருந்தார். அழுதார்..நீங்க போன இடத்துல யாரெல்லாம் இருந்தாங்க? அண்ணாவுக்கு ஏதும் பிரச்சனையா? இல்ல தாரி அக்காவுக்கும் மாமாவுக்கும் பிரச்சனையா?
எத்தனை கேள்வி கேட்குற ஜானு? எனக்கே மூச்சு வாங்குது என்ற லலிதா..ஆதுவா அழுதான்?
ஆமா ஆன்ட்டி, நான் கேட்டால் மேலும் கஷ்டப்படுவாரோ என்று தான் நான் கேட்காமல் வந்து விட்டேன்.
லலிதாவிற்கும், பிரதீப்பிற்கும் நன்றாகவே புரிகிறது. லலிதா ஜானுவிடம், அவனுக்கு என் மீதுள்ள கோபம் தான்ம்மா.அதனால் தான் கோபத்தில் அழுதிருப்பான்.