அத்தியாயம் 39

அர்ஜூன் தாரிகாவையும் அம்மாவையும் அழைத்து சென்ற பின் அகில் பவிக்கு போன் செய்தபடி ஓர் அறைக்கு சென்று பேசினான்.

பவி என்ன செஞ்சுகிட்டு இருக்க?

என்ன அகில் புதுசா என்னை பத்தி கேக்குற?

கேட்ககூடாதா?

ஏய்..என்ன வாய்சே சரியில்லை?

ஒன்றுமில்லை.

சிடுமூஞ்சி அகில் மாதிரி இல்லையே? ரொம்ப டல்லா பேசுற?

பவி..என்று சொல்ல நினைத்தவன்,..அம்மா, அப்பா பக்கத்துல இருக்காங்களா?

ஏன்டா?

குடு என்றான்.

குழந்தை அழும் சத்தம் கேட்டது.

அனு தூங்கும் அறையில் நின்று பேசிக் கொண்டிருந்தான். அனு அழுவதை பார்த்து, போனை அப்படியே வைத்து விட்டு அவளை தூக்க,

அனுவோ..அவன் கூறிய அம்மா, அப்பாவை கேட்டிருப்பாள்.

அம்மா..அம்மா..அம்மா..என்று கண் முழுவதும் கண்ணீருடன் அனுவை பார்க்க, அகிலும் அழ ஆரம்பித்தான்.

பவி, அகில் அழுறான். குழந்தை அழும் சத்தம் கேட்கிறது என்று பவி அப்பா கூற, போனை வாங்கி அவளும் கேட்டு விட்டு, அகில்..அகில்.. எதுக்குடா அழுற?

அவனுக்கு எங்கே கேட்கப் போகிறது? வேறு யாரும் பக்கத்தில் இல்லை. நிவாஸ் அப்பொழுது தான் அகில் உள்ளே செல்வதை பார்த்து, அவன் பார்த்துக் கொள்வான் என்று சென்றிருப்பான். ஆனால் அகில் அவனை கவனிக்க கூட இல்லை.

அழாதே அனு..அழாதே..கஷ்டமா இருக்கு என்று அகில் அழ, அப்பா அர்ஜூனுக்கு போன் செய்யுங்கள் பவி கூற, அவரும் போன் செய்து கூற,

என்ன சொல்றீங்க அங்கிள்? லைனில் இருங்க என்று அபிக்கு போன் செய்து கேட்க, அவன் உள்ளே சென்று அகில் என்ன பண்ற? கத்தினான்.

அனைவரும் அங்கே வந்தனர். ஸ்ரீ பதறி அகிலிடம் வந்து,

சீனியர் பாப்பா முன்னாடி ஏன் அழுறீங்க? அவ பயப்படுவால்ல என்று பொரிந்து தள்ளினாள். இதுவரை யாரும் அகிலை இப்படி அழுது பார்த்திருக்க மாட்டார்கள்.

அபி கோபமாக அகில் அருகே வர, நான் ரொம்ப மிஸ் பண்றேன்டா. அப்பாவை பார்க்கணும் போல இருக்கு. அவர் இருக்காரா? இல்லையான்னே தெரியலடா? அவன் அழ,

டேய்..என்ன பேசுற? அப்பா கண்டிப்பா எங்கையோ இருக்கார். பைத்தியம் மாதிரி பேசாத? அம்மாவிடம் இப்படி பேசித் தொலையாத என்று அபி திட்டி விட்டு அகிலை அணைத்துக் கொண்டான்.

பவி போன் செய்யும் போது அர்ஜூன் பைக்கில் தான் கைரவுடன் வந்து கொண்டிருப்பான். இப்பொழுது வீட்டினுள் நுழைந்தனர் இருவரும்.

அகில் அழுது கொண்டிருக்க, சீனியர் உங்க அப்பாவுக்கு ஒன்றுமில்லை என்றாள் ஸ்ரீ.

ஸ்ரீ என்ன சொன்ன? என்னோட அப்பாவை பார்த்தியா? எங்க பார்த்த? எப்படி இருக்கார்? அகில் வினவிக் கொண்டே சென்றான்.

சீனியர், நான் அப்படி சொல்லலை. உங்க அப்பாவுக்கு ஒன்றுமிருக்காதுன்னு தான் சொன்னேன்.

இல்ல..நீ உறுதியா தான் சொன்ன?

இல்ல சீனியர்.

ஆமா ஸ்ரீ. நீ அவன் அப்பா நல்லா இருக்கார்ன்னு உறுதியா தான் சொன்ன என்று அபி கூற,

சீனியர், நான் அந்த அர்த்தத்தில் கூறல. நான் சீனியர் அழுவதால் ஆறுதலுக்காக சொன்னேன்.

ஸ்ரீ மாத்தி பேசாத அபி கூற, சீனியர் நம்புங்க.

அர்ஜூன் உள்ளே வந்து ஸ்ரீயிடமிருந்து அனுவை தூக்கிக் கொண்டு, ஸ்ரீ..நீ இங்கேயே இரு என்று அகில் அபியை பார்த்து அவர்களையும் உள்ளிருக்குமாறு கையை அசைத்து விட்டு அனுவுடன் சென்றான்.

ஹே..ஏஞ்சல் சாப்பிடலாமா? இப்ப சாப்பாடு கொண்டு வந்துடுவாங்க. சாப்பிடலாம்..என்று அனு கன்னத்தில் முத்தமிட, அவளும் அர்ஜூனுக்கு முத்தமிட்டாள்.

நீ இவங்க எல்லாருடனும் விளையாண்டுட்டு இரு. நான் ஏஞ்சல் கிட்ட பேசிட்டு வந்துடுறேன் நித்தியிடம் பாப்பாவை கொடுத்து விட்டு, கைரவை பார்த்து விட்டு உள்ளே சென்று கதவை அடைத்தான்.

அர்ஜூன்..அனைவரும் சத்தமிட அவன் உள்ளே சென்றவுடன், சொல்லு ஸ்ரீ என்றான்.

என்ன சொல்ல சொல்ற அர்ஜூன்? ஸ்ரீ கேட்க,

சொல்லு..அவ்வளவு உறுதியா நீ எப்படி சொல்ற?

அர்ஜூன், நான் அகில் சீனியர் ஆறுதலுக்காக தான் சொன்னேன்.

எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்கும் போது, உனக்கு ஏன் சொல்ல தோணுச்சு?

கஷ்டப்படும் போது பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?

ஓ..அப்படியா? அவன் கஷ்டப்பட்டா..உனக்கு அவ்வளவு வலிக்குதா?

அர்ஜூன்..என்ன பேசுற? அகில் சத்தமிட, நான் ஸ்ரீயிடம் தான் பேசுகிறேன்.

சொல்லு ஸ்ரீ?

எதுக்கு இப்ப தேவையில்லாம பேசுற?

அவன் மீது தேவையில்லாம உனக்கு என்ன அக்கறை?

சீனியர் நம்ம ப்ரெண்டு தான அர்ஜூன்?

நித்தி, யாசுவும் அவனுக்கு ப்ரெண்டு தான? அவங்க உன்னை மாதிரி பேசலையே? சொல்லு. அதுக்கு மேல ஏதும் இருக்கா?

அர்ஜூன்..என்று அபியும் அகிலும் சத்தமிட, அவர்களை பார்த்து விட்டு ஸ்ரீயை பார்த்தான்.

உன்னால எப்படி இப்படி பேச முடியுது அர்ஜூன். எப்ப பாரு அகில்.. அகில்..அகில்ன்னு சாவடிக்குற?

ஸ்ரீ என்ன சொல்ற? அகில் அர்ஜூனை முறைத்துக் கொண்டு, அவளருகே வந்தான்.

வேண்டாம் சீனியர். நில்லுங்க.

சொல்லு ஸ்ரீ. அன்று அக்காவிடம் பேசியதை நாங்க ரெண்டு பேருமே கேட்டோம். எங்கள்ள யாரை நீ காதலிக்கிறாய்?

சொல்ல முடியாது..சொல்ல முடியாது..என்று தரையில் அமர்ந்து அழுதாள்.

இத சொல்ல உனக்கு என்ன கஷ்டமா இருக்கு? அர்ஜூன் கத்தினான்.

அர்ஜூன், எதுக்கு கத்துற? ஸ்ரீயை நீ கஷ்டப்படுத்துற? அபி ஸ்ரீ அருகே வந்தான்.

அபி உனக்கு தெரியல. அவ மனசுக்குள்ள காதலை மட்டும் மறைச்சு வைக்கல. அவங்க மேல இருக்குற கோபம். பெற்றோரை பிரிந்த வலி. அவளது நினைவுகளை கொண்டு வரும் முயற்சி என அனைத்தையும் மனசுக்குள்ள வச்சு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா என்று அர்ஜூன் அழுது கொண்டு, அன்று கயலை பார்க்க அவள் தனியே சென்ற போது, நானும் சென்றேன்.

அப்பொழுது அவள் ஜிதினை கழுத்தை பிடித்து தூக்கினாள். நானே பயந்து விட்டேன். அப்படி இருந்தாள். அவன் மீண்டும் ஏதும் செய்து விடுவானோ என்ற தாங்க முடியாமல் அவள் பயம், கோபம் அனைத்தும் அவளை அவ்வாறு செய்ய வச்சிருக்கு.

அவன் மீண்டும் செய்து விடுவானா? என்ன சொல்ற அர்ஜூன்? அகில் கேட்க, அர்ஜூன் வேண்டாம் என்று அபி தடுத்தான். அர்ஜூன் உடைந்து அழ, ஸ்ரீயும் அழுதாள்.

அகில் அர்ஜூனிடம் சொல்லுடா..சொல்லுடா..கேட்க,

அபி சினத்துடனும் அழுகையுடனும் அகில் அந்த ஜிதின் நம் ஸ்ரீயை..ஸ்ரீயை..என்று அவன் தயங்க, அகிலுக்கு புரிந்தது. ஸ்ரீ காதை மூடிக் கொண்டு அழுதாள். அர்ஜூன் அவளிடம் சென்று ஸ்ரீயை அணைக்க,

அவனை எப்படிடா உயிரோட விட்டீங்க? என்று வீறு கொண்டு நடந்தான். அபி அவனை தடுத்து அர்ஜூனை பார்த்தான். ஸ்ரீயை விட்டு எழுந்த அர்ஜூன்..அவனை செய்வதை விட காரணமானவங்களை குறி வைக்கிறது தான் புத்திசாலித்தனம்.

ஸ்ரீயை பார்த்து மீண்டும், சொல்லு? கேட்டான் அர்ஜூன்.

அர்ஜூன்..என்று நண்பர்கள் திகைக்க, இப்படியே இவளை விட்டால் பைத்தியமா தான் ஆவாள் என்று திட்டினான்.

பைத்தியமா அர்ஜூன்? நானா? என்று ஸ்ரீ எழுந்தாள்.

சொல்லு ஸ்ரீ?

எனக்கு இவங்க ரெண்டு பேரும் கல்லூரியில் வைத்து சீனியர் அப்பாவை பற்றி பேசியது போல் தோன்றியது.

தோன்றியதா? அதை வைத்து பேசுறியா? அர்ஜூன் கேட்டான்.

நாங்க அகில் அப்பா பற்றி பேசியே வெகுநாட்களாகிறது. அவன் கஷ்டப்படுவான்னு அவரை பற்றி பேசுவதையே நிறுத்திட்டோம் அபி கூற, அர்ஜூன் கையை கட்டிக் கொண்டு ஸ்ரீயை முறைத்தான்.

நிஜமா தான் சொல்றேன் அர்ஜூன்.

போதும் ஸ்ரீ. உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. அவன் தான் பேசலைன்னு சொல்றான். ஆனால் நீ நிஜம்ன்னு சொல்ற? தோன்றுதுன்னு சொல்ற?

அவனிடம் வந்த ஸ்ரீ, என்னை பைத்தியம்ன்னு சொல்றியாடா? அவனை அடித்துக் கொண்டே அழுதாள்.

நான் கோபத்தில் கூறினேன் ஸ்ரீ. நீ எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகுற?

நீ என்னை பைத்தியம்ன்னு சொல்லிட்ட போடா..என்று கதவை திறந்து அழுது கொண்டே வெளியே வந்தாள். அகில் அங்கேயே அமர, அர்ஜூனும் அபியும் அவள் பின் வந்தனர்.

அர்ஜூன் உள்ளே சென்றதும் அறையையே பார்த்துக் கொண்டிருந்த அனுவை தூக்கினார் அவளது தாத்தா. அவரிடம் சென்று அவரது மீசைய தொட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். பாட்டியும், இன்பா அம்மாவும் அவர்களுடன் சேர்ந்து அனுவிற்கு விளையாட்டு காட்டினார்கள். பின் ஒவ்வொருவராக அவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாட அனு சிரிக்க ஆரம்பித்தாள்.

சாப்பாடு வந்து விட, அதை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து கைரவும் நிவாஸூம் கொடுக்க, அதை வாங்கிய பாட்டியும், இன்பா அம்மாவும் எல்லாரையும் சாப்பிட அழைத்தார்கள்.

ஆனால் அனைவரும் அர்ஜூன், ஸ்ரீ, அகில், அபிக்காக காத்திருக்க, அனுவை மட்டும் சாப்பிட வைத்தனர்.

பின் மீண்டும் அவர்கள் விளையாடும் போது தான் ஸ்ரீ அழுது கொண்டே வந்திருப்பாள்.

ஸ்ரீயை பார்த்து அனு, அம்மா என்று ..ஸ்ரீயிடம் ஓடி வந்தாள். ஸ்ரீயின் கால்கள் நின்றது. அனைவரும் அதிர்ந்து அனுவை பார்த்தனர். அர்ஜூனும் நின்று அனுவை பார்க்க, ஸ்ரீ திரும்பி அனுவை பார்த்து மண்டியிட்டாள். ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் அனு. ஸ்ரீ கண்ணீரை துடைத்து விட்ட அனு..வா ஏஞ்சல் விளையாடலாம் என்று அழைக்க,

எனக்கு காய்ச்சலா இருக்குடா. நான் ஊசி போட்டு விட்டு வாரேன். விளையாடலாம் என்று அவளை அணைத்து முத்தமிட்டு அனுவை தூக்கி அவளது பாட்டியிடம் விட, நானும் வாரேன் என்று அனு அழுதாள்

பாப்பா வந்தா ஊசி போட்டிருவாங்களே? வாரீங்களா? கேட்டாள்.

நான் வரல. நீ போயிட்டு சீக்கிரம் வா.

அர்ஜூன் நீ வா விளையாடலாம்? அனு அழைக்க,

பாப்பா எனக்கு துணைக்கு அர்ஜூன் வருவான். அவன் வந்த பின் விளையாடு என்று ஸ்ரீ கூற, அபியும் அர்ஜூனும் புரியாமல் ஸ்ரீயை பார்த்தனர்.

கண்ணை துடைத்த ஸ்ரீ, நீ தான சொன்ன வா. நாம உன்னோட சந்தேகத்தை போக்கிடலாம் என்று அர்ஜூன் கையை பிடித்தாள்.

யாசு அவளிடம் வந்து, அர்ஜூனுக்கு சந்தேகமா? என்ன ஸ்ரீ?

ஸ்ரீ வேண்டாம் என்று அர்ஜூன் கையை உதற, பார்த்துட்டு வந்திடலாம் என்று ஸ்ரீ கூறினாள்.

ஸ்ரீ என்ன பேசுற? அபி கேட்க, நித்தி அர்ஜூனிடம் வந்து, உனக்கு ஸ்ரீ மீது சந்தேகமா? அவனிடம் கேட்க, அர்ஜூன் கோபம் அதிகமானது.

ஏய், தெளிவா பேசு. அவ என்ன கேக்குறா பாரு? என்று ஸ்ரீயை அர்ஜூன் திட்ட, அனு அழ ஆரம்பித்தாள். ஸ்ரீ அர்ஜூனை முறைத்தாள்.

நீ பேசிட்டு என்னை முறைக்கிறீயா? அர்ஜூன் கேட்டுக் கொண்டே அனுவிடம் சென்று அவளை தூக்க அவள் வரவேயில்லை.

ஸ்ரீ அனுவை தூக்கி சமாதானப்படுத்தி அர்ஜூனை வெளியே இழுத்து சென்று பைக்கை எடுக்க சொன்னாள்.

வா..உள்ளே போகலாம் என்று அவளது கையை இழுத்தான் அர்ஜூன். அவள் அவனை முறைத்துக் கொண்டு வா..நான் பைத்தியமான்னு பாக்கணும்ல.

அபி அங்கே வந்து, ஸ்ரீ போதும். அர்ஜூனை விடு. அவன் ரொம்ப டயர்டா இருக்கான்.

அப்படியா? அவன் வந்து ஓய்வெடுக்கட்டும்.

அபி நீ உள்ள போ என்று பைக்கை எடுத்தான்.

அர்ஜூன்..என்ன பண்ணப் போற? அபி கேட்க, அதான் பாக்கணும்னு சொல்றால. ஏறு பார்த்துட்டு வரலாம் என்றான். அவளுக்கு கஷ்டமா இருந்தாலும் ஏறினாள்.

டேய், அர்ஜூன் வேண்டாம் அபி அங்கேயே அமர, இன்பா இதயா யாசு அங்கு வந்தனர்.

என்ன நடக்குதுடா? அர்ஜூன் சந்தேகப்படுறானா? அபியிடம் யாசு கேட்க, இவங்களோட ஒரே தலவலியா இருக்கு. ரெண்டுமே சரியான பிடிவாதம் என்று அவர்களை அபி திட்டி விட்டு, பைத்தியம்ன்னு ஸ்ரீயை அர்ஜூன் திட்டியதன் விளைவு என்று எழுந்தான்.

அர்ஜூன் சற்று தூரம் வந்தவுடன் பைக்கை நிறுத்தினான். மழை கொட்ட ஆரம்பித்தது. மழையில் நனைந்து கொண்டே, ஸ்ரீ உனக்கு என்ன பிரச்சனை சொல்லு?

ஏன்டா, என்னை பைத்தியம்ன்னு சொல்ற?

கோபத்துல தான திட்டினேன். அதுக்கு இப்படியா செய்வ? கத்தினான்.

ஆமா..நீ சொல்லக் கூடாது.

நான் சொல்லக்கூடாதுன்னா என்ன அர்த்தம்?

அவள் எப்படி காதலை கூறுவாள்? அவன் ஆனால் இப்பொழுதாவது கூறு ஸ்ரீ என்று நினைத்தான்.

அதற்கு மாறாக அழ ஆரம்பித்தாள். நீ சொல்லாத அர்ஜூன். ப்ளீஸ்.. அர்ஜூன் சொல்லாத என்று அழுதாள். நிவாஸூம் அகிலும் அவர்கள் பின் வந்திருப்பர்.

அழாத ஸ்ரீ. நான் கோபத்துல தான் சொல்லிட்டேன் என்று அவன் அணைக்க அவளும் அணைத்துக் கொண்டிருந்தாள். அங்கே நால்வர் அவர்களை சூழ அகிலும் நிவாஸூம் அவர்களுடன் சண்டையில் ஈடுபட, அர்ஜூன் ஸ்ரீயை நிவாசிடம் விட்டு, நாங்க பார்த்துக்கிறோம் என்று அர்ஜூனும் அகிலும் அவர்களை அடித்து அனுப்பினர்.

ஸ்ரீ..ஸ்ரீ..இங்க பாரு..எழுந்திரு என்று நிவாஸ் தட்டிக் கொண்டிருக்க, அர்ஜூனும் அகிலும் அவளிடம் வந்தனர். தண்ணீர் தெளித்தும் அவள் எழாமல் இருக்க, நிவாஸ் அழுதான்.

அர்ஜூன் பயமா இருக்கு என்று நிவாஸ் கூற அர்ஜூன் பைக்கில் ஸ்ரீயை ஏற்றி நிவாஸ் அவன் மீது சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இருவரும் பைக்கில் பறந்தனர்.

ஸ்ரீக்கு வாரம் வாரம் வர சொன்ன மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அகில் ஸ்ரீக்கு ஆடை வாங்கி உள்ளே வந்து கொடுக்க, செவிலியர் அவளை துடைத்து ஆடை மாற்றி மருத்துவரிடம் காட்ட, அவளை பரிசோதனை இடத்திற்கு அழைத்து சென்று அவளை படுக்க வைத்து மருந்தை செலுத்தினார்.

சற்று நேரத்தில் அவள் விழித்து மருத்துவரால் வசிய நிலைக்கு சென்று, அவர் கேட்க அவள் பேசினாள்.

ஸ்ரீயை பற்றி ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வந்து, பைத்தியம்னு சொன்னதுக்காக ஏன் கோபப்படுறீங்க?

என்னை அவங்களும் அப்படி தான் சொன்னாங்க?

யாரு?

ஆன்ட்டி தான்.

எதற்கு?

என்னுடைய ரகசியத்தை வெளியிட்டால் நான் பைத்தியமாகி விடுவேன்னு அடிக்கடி சொல்வாங்க.

என்ன ரகசியம்?

அமைதியாக இருந்த ஸ்ரீ நான் பைத்தியம் இல்ல..எல்லாரும் என்னை நம்புவாங்க. இந்த தழும்பு தான் ஆதாரம். என்னை காயப்படுத்தி தான் என் கற்பை காப்பாற்றிக் கொண்டேன்னு சொன்னா என்னோட ப்ரெண்ட்ஸ் நம்புவாங்க. நான் சுத்தமானவன்னு நம்புவாங்க.

ஆன்ட்டி போதும். இதுக்கு மேல பேசாதீங்க. அவங்க என்னை நம்புவாங்க. நீ சொல்ற மாதிரி யாரும் என்னை விட்டு போக மாட்டாங்க.

ஆமா.. அவனை காதலிக்கிறேன். அர்ஜூன் நம்புவான். எனக்கு தெரியும் என்று அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது. அகிலும் நிவாஸூம் அர்ஜூனை பார்த்தனர்.

ஸ்ரீ என்னை தான் காதலிக்கிறால் என்று எனக்கு தெரியும். அவளை சொல்ல வைக்க தான் அகில் உன்னை வைத்து பேசிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அவள் சொல்ல மாட்டிக்கிறா? என்ன பிரச்சனைன்னு தெரியல.

அவளுக்கு நேர்ந்த சம்பவத்தினால் கூட சொல்லாமல் இருக்கலாம் அகில் கூற, எனக்கு அப்படி தோன்றவில்லை என்று அர்ஜூன் கூற,

எப்படி உறுதியா சொல்ற?

அவள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டேன்னு சொன்னா அர்ஜூன் கூற, பேச வந்த அகில் கையை பிடித்து அழுத்தி நிவாஸ் அமைதியாக்கினான்.

மெதுவாக அகிலிடம், அர்ஜூனுக்கு புரியுது. அவன் ஏத்துக்க மாட்டிங்கிறான். ஸ்ரீ சொல்லாததற்கு வேரொரு காரணமும் உள்ளது என்று நிவாஸ் அகிலிடம் கூறி விட்டு ஸ்ரீயை பார்த்தான்.

மருத்துவர் ஸ்ரீயிடம், நீ அர்ஜூனை தான் காதலிக்கிறாயா? உனக்கு எப்பொழுது அவனை பிடிக்க ஆரம்பித்தது?

என்னோட காதல் அர்ஜூன். அர்ஜூன் மட்டும் தான் என்று அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. நான் தான் முதலில் பார்த்தேன். என் மனது ஏதோ சொன்னது. ஆனால் எனக்கு புரியவில்லை. அன்று அவனால் கிடைத்த மிட்டாயை அவனிடமே கொடுத்து விட்டேன். பின் என்னோட ஆன்ட்டி என்றவள் முகம் வருத்தமானது.

அப்புறம் என்ன ஆச்சு?

அவன் மீண்டும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான். நான் தான் அதை மறுத்து விட்டேன்.

ஏன் உன் காதலை சொல்லி இருக்கலாமே?

அப்ப நான் ரொம்ப கஷ்டத்துல இருந்ததால என்னால சரியா முடிவெடுக்க முடியல.

உன்னோட காதலை சொல்லவே இல்லையா?

நான் ஆசையா சொல்ல போனேன். ஆனா சொல்லல?

ஏன்?

அவள் கண்ணீரை சுரக்க, பதிலளிக்காமல் இருந்தாள். அவர் அதிர்ந்து அர்ஜூனை பார்த்தார். மூவரும் விழித்தனர்.

அவர் மீண்டும் பேச அவளிடம் பதிளில்லை. அவர் விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்து அவர் அறைக்கு மூவரையும் அழைத்து சென்றார்.

ஏதும் பிரச்சனையா அங்கிள்? நிவாஸ் கேட்க, நிவி அவளை அவளே கட்டுப்படுத்துக்கிறாள். அவளால் எப்படி என் சிகிச்சையிலிருந்து வெளியே வர முடிந்ததென்று தெரியவில்லை. இதுவரை எந்த நோயாளியிடமும் இவ்வாறு நடந்ததில்லை.

அர்ஜூன் அவள் உன்னிடம் எதையோ மறைக்க போராடுகிறாள். அதனால் தான் முழுவதுமாக அவள் பேசவில்லை. அவள் ரொம்ப கஷ்டப்படுகிறாள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அது நடந்த விசயமா கூட இருக்கலாம் என்றவுடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இப்பொழுதைக்கு ஸ்ரீ விழிக்க மாட்டாள். அவள் விழிக்க நேரமாகும். அவள் இங்கேயே இருக்கட்டும்.

இல்ல சார், நாங்க வீட்டுக்கே கூட்டிட்டு போறோம் அகில் கூற அவனை கூர்ந்து பார்த்தவர், உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கே?

சிதம்பரம் அங்கிள் பையன் அவன் அர்ஜூன் கூறினான்.

அவர் மகனா நீ? அப்பா எப்படி இருக்கார்? அவர் விசாரிக்க, அவன் கோபமாக அவர் எங்க இருக்கார்ன்னு தெரியாம தான நாங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க என்று அகில் வெளியேறினான்.