அத்தியாயம் 36

லலிதா கமலி பேசி விட்டு வெளியே வர அனு அழும் சத்தம் கேட்டது.

தூக்கத்திலே அம்மா..அம்மா..என்று அழுது கொண்டிருந்தாள் அனு.

அவளது சத்தம் கேட்ட உடனே ஸ்ரீயும் அர்ஜூனும் எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டே அனு இருக்கும் அறைக்கு செல்ல, இருவரும்  பார்த்துக் கொண்டு அனுவை பார்த்தனர். அவள் விழித்து விட்டாள்.

தாரிகா அம்மா பேசியும் அனுவை சமாதனப்படுத்த முடியவில்லை. அர்ஜூன் அனுவிடம் வர, அவனிடம் தாவி அர்ஜூன் அம்மா.. அம்மா.. பூதமாகிட்டாங்களா?

என்ன? என்று அர்ஜூனும் ஸ்ரீயும் தாரிகா அம்மாவை பார்த்தனர்.

அர்ஜூன் இங்க வந்த ஒரு பொண்ணு போன்ல அந்த பொண்ணு செத்து போனதை இப்படி பேசிக் கொண்டே பாத்ரூமை உபயோகித்தது.

நான் கேட்டதற்கு உங்க வேலைய பாருங்கன்னு போயிருச்சு. அனு தூங்கினாலும் நடப்பதை கவனிக்கிறாள் அர்ஜூன்.

ஹே..செக்கண்டு ஏஞ்சல், நீங்க அழக் கூடாது. உங்க அர்ஜூன் ஸ்ட்ராங் தான? அழுது கொண்டே தலையசைத்தாள் அனு.

அப்ப நீங்களும் ஸ்ட்ராங்கா இருக்கணும். இதுக்கெல்லாமா அழுவாங்க?

ஸ்ரீ அனு கையை பிடித்து, அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க. சாமிகிட்ட இருந்து உனக்கு வேண்டிய எல்லாமே கொடுப்பாங்க.

அம்மாவை பார்க்க முடியாதா? என்று அனு அழ, அர்ஜூனிடமிருந்து ஸ்ரீ அனுவை வாங்கி வெளியே வந்தாள். வெளியே அவர்கள் நண்பர்களும் வேறு இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீ எங்க போற? அர்ஜூனும் அஞ்சனாம்மாவும் அவள் பின் ஓடி வந்தனர். வினிதா அம்மா, அப்பாவும் வந்தனர்.

அன்று வினிதாவும் ஸ்ரீயும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தில் வந்து அனுவை மடியில் வைத்து அமர்ந்து,

அங்க பாரேன் பாப்பா..இந்த நட்சத்திரங்களோடு தான் அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. அவங்க உன்னை பார்த்துக் கொண்டே இருக்காங்க. நீ அவங்கள பார்த்து என்ன கேட்கிறாயோ? செஞ்சு கொடுப்பாங்க.

ஆனா நம்ம பக்கத்துல மட்டும் வர மாட்டாங்க என்று ஸ்ரீ அனுவை கண்ணீருடன் அணைத்துக் கொண்டு,

உனக்கு என்ன வேண்டுமோ? இந்த நட்சத்திரங்களை பார்த்து கூறி விட்டு அர்ஜூனிடம் சொல்லு. அவனும் உன் அப்பா போல எல்லாமே செய்து தருவான்.

ஏஞ்சல், நீ எனக்கு எதுவும் வாங்கித் தர மாட்டாயா? அனு கேட்டாள்.

எனக்குன்னு ஏதுமில்லை. யாருமில்லை. என்னால் உனக்கு எதுவுமே வாங்கித் தர முடியாதே என்று ஸ்ரீ அழுதாள். அவள் கண்ணீரை துடைத்து அனு, அழாதே ஏஞ்சல். அர்ஜூன் அவர்களிடம் ஓடி வந்து இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டு நான் உயிரோட தான் இருக்கேன் ஸ்ரீ. போதும் இதுக்கு மேல யாருமில்லைன்னு சொல்லாதே என்று இருவர் கன்னத்திலும் முத்தமிட்டான்.

அம்மா..என்றாள் அனு.

அனு..என்ன சொன்ன? ஸ்ரீ கண்ணீருடன் கேட்க, உன்னை அம்மான்னு சொல்ல சொன்னாங்க என்றாள் அனு.

அர்ஜூன்..இது இரண்டாவது முறை. அனு என்னை அம்மான்னு சொல்றா? ஆனா அர்ஜூன் என்று ஸ்ரீ பேசுவதற்குள் அப்படி பேசாதே என்று வினிதா கூறுவது போல் தாரிகா அம்மா கூறினார்.

கண்கலங்க அவரை பார்த்து, அம்மா..பாப்பா என்னை..என்று பேச முடியாமல் அழுதாள் ஸ்ரீ.

போதும் ஸ்ரீ. வா போகலாம் என்று இருவரையும் அர்ஜூன் உள்ளே அழைத்து சென்றான். இதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் ஆதேஷ்.

எல்லாரும் அமைதியா இருங்க. யாரும் அழாதீங்க அர்ஜூன் கூற, மயான அமைதியை தழுவியது அவ்விடம். ஸ்ரீயிடமிருந்து அனுவை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்தான் அர்ஜூன் வினிதாவை வெறித்தவாறு.

பெரும்பாலானோர் அகல, கமலியும் லலிதாவும் அங்கே இருந்தனர். அர்ஜூனோ அவன் அம்மாவை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.

வெய்யோன் தன் கதிர்களை மீட்டெடுத்து வினிதா வீட்டிற்குள் தாக்க, அனு அறையினுள் தூங்க, அனைவரும் அழுது கொண்டிருந்தனர். வினிதாவை அடக்கம் செய்வதற்கான வேலைகள் நடக்க, அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீயிடம் பேசிய ராஜவேல்.

கொட்டு சத்தம் காதை கிழிக்க, வினிதா உடலை எடுத்து சென்றனர். வினிதாவின் அப்பா தன் மகளுக்கான காரியத்தை புலம்பிக் கொண்டே செய்து கொண்டிருந்தார்.

ஸ்ரீ அழுது அழுது மயங்கி விழுந்தாள். அனு சத்தம் கேட்டு விழித்து வெளியே வந்தாள். அவள் அம்மா வைத்திருந்த இடத்தை பார்த்து, அம்மா..அம்மா..என்று அழுதாள்.

தன் பெயர்த்தியை தூக்கிய வினிதாவின் அம்மா வெளியே வந்தார். அனு அவள் அம்மாவை பார்த்து, அம்மா…அம்மா..அம்மா..என்று கையை நீட்டி கண்கள் நீராக அழுதது குழந்தை. சத்தம் கேட்டு திரும்பிய அகிலிடம் ஒருவர், தம்பி..திரும்பி பார்க்க கூடாதுப்பா. நேரா பார்த்து நடங்க என்றார். அனுவின் சத்தம் அர்ஜூனிற்கும் கேட்டிருக்கும். அவன் கண்ணீருடன் சென்றான்.

நித்தி பாப்பாவை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று சமையற்கட்டுக்குள் சென்றாள். அவளை பார்த்து தாரிகாவும் உள்ளே செல்ல, நித்தி எதையோ தேட அனு அவளது தோளில் சாய்ந்திருந்தாள்.

சீனியர் நீங்க பாப்பாவை பார்த்துக்கோங்க. நான் தயார் செய்கிறேன் என்று பாலை அடிப்பில் வைத்து காய்ச்சி வந்து அனுவிற்கு கொடுத்தனர்.

ஸ்ரீ வெளியே ஓரமாக படுத்திருக்க இன்பாவும் இதயாவும் அவளுடன் இருந்தார்கள். உள்ளே வந்த தாரிகா அம்மா வீட்டை சுத்தம் செய்ய, திரும்பி வருபவர்களுக்காக செய்யும் சம்பிரதாயத்தை செய்தனர். வினிதாவின் அம்மா ஓரமாக அமர்ந்திருக்க இதயா அம்மா அவருக்கு துணையாக அமர்ந்திருந்தார்.

நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர் ஆதேஷ் அர்ஜூன் தாயார்கள். ஸ்ரீ எழுந்து அனுவை தேடினாள். அனுவுக்கு புரியுது ஸ்ரீ.. இன்பா கூற,

ஆமா மேம். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல?

அவளை அர்ஜூன் வீட்டுக்கே அழைத்து செல்வது தான் சரி என்று இன்பா கூற, இல்லம்மா..உடனே வீட்டை பூட்டிட்டு கிளம்பக் கூடாது. வீட்ல தான் இருக்கணும் என்று இதயா அம்மா கூற,

அம்மா..புவி வீட்ல?

புவி வீட்டை யாரும் பூட்டலை. அங்க ஒரு பாட்டியும் தாத்தாவும்  இருக்காங்க.

அவங்க சடங்குகளை ஒரே நாளிலே வைத்துக் கொண்டார்களே? அவ்வாறு செய்யலாமாம்மா? இன்பா வினவ,

செய்யக்கூடாது தான். ஆனால் அந்த பொண்ணை தான் ஒருவன் குறி வைத்து காத்திருக்கிறானே? எத்தனை பேர் அவளுடன் இருந்தாலும் நடக்கக்கூடாதது நடந்து விட்டால். உனக்கு புரியும்னு நினைக்கிறேன். அதனால் ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர். அனைத்து சடங்கும் ஒரே நாளில் செய்தாயிற்று. அடுத்து ஒரு மாதத்திற்கு பின் தான் சாமி கும்பிட போகணும். அதுவரை அந்த போலீஸ் தம்பி பாதுகாப்பில் இருக்கட்டும். எல்லாம் முடிந்து அவளையும் இங்கே அழைத்து வந்து விடுவோம் என்றார் அவர்.

தலையசைத்தாள் இன்பா.

அம்மா..அனு சின்னப் பொண்ணு. அவள் அவங்க அம்மா கூட இங்க தான் விளையாடி இருப்பா. நினைவு வருமே? அழுது கொண்டே ஸ்ரீ கேட்டாள்.

எல்லாரும் இங்கவே இருக்கலாம். அர்ஜூன் வீட்ல யாராவது இருக்கணும்னு நினைச்சா இருக்கட்டும். அதுவும் இல்லாம நீ இருக்கேலம்மா. கண்டிப்பா எல்லாம் மாறும். இரவு அவளுடனே இருந்து கொள். அவள் மனம் கொஞ்ச கொஞ்சமா மாறும்.

ஸ்ரீ அமைதியாக உள்ளே சென்றாள். அவளுக்கு வினிதா வைத்திருந்த இடத்தை பார்க்கவும் அவளை சந்தித்தது முதல் அனைத்தும் நினைவு வர, அங்கேயே கண்ணீருடன் அமர்ந்தாள். யாசு ஸ்ரீயை அணைக்க, பெருங்குரலோடு அழ ஆரம்பித்தாள்.

வா..ஸ்ரீ என்று அவளை அழைத்து செல்ல, அனு ஸ்ரீயிடம் தாவினாள். அவர்கள் அனைவரும் அறைக்குள் சென்றனர். அம்மாக்கள் அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

ஆண்கள் அனைவரும் வீட்டிற்கு வர, வாங்க போகலாம் இனி நமக்கு இங்கு என்ன வேலை? என்று வினிதாவின் சொந்தங்கள் கிளம்ப, ஒருவன் மட்டும் அர்ஜூனை முறைத்துக் கொண்டே சென்றான்.

பிசினஸ் ஆட்கள் அனைவரும் கிளம்பி இருந்தனர். அர்ஜூன் வீட்டிற்குள் வந்ததும் அனுவை தான் தேடினான். அவள் அறைக்குள் இருப்பது தெரிந்து கதவை பட்டென திறந்தான். அனைவரும் பயந்து பார்க்க,

அனு கண்ணீர் தடத்துடன் முகம் களையிழந்து சோர்வுடன் ஸ்ரீயின் மேல் சௌகர்யமாக படுத்து தூங்கினாள். ஸ்ரீ கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடியிருந்தாள். அவன் திறந்ததில் அவளும் பயந்து பார்க்க,

அர்ஜூன், எதற்கு இவ்வளவு வேகம்? நித்தி சத்தமிட்டாள்.

ஷ்.. பாப்பா தூங்குறா என்று கையை உதட்டில் வைத்து அமைதியா இரு என்று கூறி விட்டு ஸ்ரீயை பார்த்தான்.

தாரி நீ வா..என்று அனைவரையும் பார்த்தான். எல்லார் முகமும் சோர்வுடன் இருக்க, அடுத்தடுத்து பிரச்சனையை பார்த்தார்களே என்று எண்ணிய படி,

காலை உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். எல்லாரும் அறைக்கு சென்று ஓய்வெடுங்கள் என்று தாரிகா கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தான். அஞ்சனம்மாவை பார்த்து,

அஞ்சும்மா..நீங்களும் வாங்க என்று அவரது கையை பிடித்தான்.

எங்க போறோம் அர்ஜூன்? அவர் கேட்க, சொல்றேன் என்று ஓர் அடி எடுத்து வைக்க, குளிச்சா தலையை துவட்ட மாட்டாயா இரு நான் துவாலையை எடுத்து வாரேன் என்று அவர் திரும்ப, அறையிலிருந்து இதயா துவாலையுடன் வந்தாள்.

அர்ஜூனும் அஞ்சனாம்மாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, ஸ்ரீ கொடுக்க சொன்னால் அர்ஜூன் என்று இதயா கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.

அங்கிருந்தவர்கள் ஸ்ரீ இருக்கும் அறையை பார்க்க அர்ஜூனும் அறையை பார்த்துக் கொண்டே தலையை துவட்டி விட்டு,

இப்ப போகலாமாம்மா?

எங்கடா?

அர்ஜூன், நானும் வரவா? கவின் கேட்டான்.

தேவையில்லை. என்னோட குடும்பத்தை பார்த்துக்க எனக்கு தெரியும் என்று அவன் முன்னேற,

எங்க போற அர்ஜூன்?

நின்று கவினை பார்த்து, என்னோட எதிர்கால மச்சானை பார்க்க போறேன் என்றான்.

அஞ்சனாவும் தாரிகாவும் அர்ஜூனை பார்த்து விட்டு கவினை பார்த்தனர்.

அர்ஜூன்..யாரு?

அர்ஜூன் சினத்துடன், நான் சொன்னது உனக்கு புரியலையா? தாரிய கட்டிக்கப் போறவனை பார்க்க போறோம்.

அர்ஜூன்? என்று  கோபமும் கண்ணீருமாய் கவின் நின்றிருக்க, வெரி சாரிடா நண்பா என்று அர்ஜூன் அங்கிருந்தவர்களிடம் கொஞ்ச நேரத்திற்கு யாரும் வெளியே வர வேண்டாம் என்று ஆதேஷை பார்த்து எல்லாரும் ஆது என்று அவன் அம்மாவை பார்த்துக் கொண்டு அழுத்தமாக கூற,

ஏதும் பிரச்சனையா அண்ணா? அவன் வினவ, பெரிசா இல்லண்ணு தான் நினைக்கிறேன்.

அண்ணா, வீட்ல டாடும் ஜானுவும் தனியா இருக்காங்க. பிரச்சனை பெரிதில்லையே?

ஜானுவா? உன் வீட்டிலா? என்று அர்ஜூன் பிரதீப்பை பார்த்தான். அவன் முகம் வாட, ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.

டாடுக்கு போன் செய்து வெளியே வர வேண்டாம். கவனமா இருக்க சொல்லு என்று அவன் கிளம்ப, கவின் மறுபடியும் அர்ஜூனை அழைத்தான்.

புரிஞ்சுக்கோடா..நிறைய வேலை இருக்கு. என்னை தொந்தரவு செய்யாதே என்று கூறி விட்டு செல்ல,

அர்ஜூன், நாங்க ஊருக்கு போகணும்? புவி வேற கோபமா இருப்பா? தீனா கூற, தருண் அவனை முறைத்தான்.

அண்ணா, நான் சீக்கிரம் வந்து விடுவேன். தாரியையும் அம்மாவையும் பாதுகாப்பா விட்டுட்டு வாரேன். நீங்க அவ கூட சண்டை போட்டீங்களா?

நான் எங்க? என் மச்சான் தான் தீனா கூற, அர்ஜூன் தருணை பார்த்தான்.

அவன் கோபமாக, என்னை மச்சான்னு சொல்லாதீங்கன்னு சொல்றேன்ல? தீனா அருகே சினத்துடன் வந்தான்.

அர்ஜூன் இடையே வந்து, இந்த மாதிரி அவ முன்னே சண்டை போட்டீங்களா? இருவரும் அமைதியாக, அர்ஜூன் தருணிடம் ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமேடா.

அர்ஜூன் உனக்கு அவரை பற்றி தெரியாது? தருண் கூற,

ப்ளே பாய்க்கெல்லாம் நாங்க பொண்ணு கொடுக்க மாட்டோம்ப்பா..என்று இன்பா சொல்லிக் கொண்டே நானும் தருண் பக்கம் தான் என்று அவனருகே வந்து நின்றான்.

அப்படி சொல்லுங்க மேம் என்றான் தருண்.

எல்லாரும் உங்க முடிவை பாக்குறீங்க? புவிக்கும் இவரை பிடிச்சிருக்கு தானே? அர்ஜூன் கேட்க,

இல்லை. அது வெறும் ஈர்ப்பு தான்.

ஓ.கே தருண். உன்னோட முடிவ நீ மாத்திக்க வேண்டாம்.

அண்ணா..நீங்க மட்டும் இப்பொழுதே ஊருக்கு கிளம்புங்க என்று அர்ஜூன் கூற,

அண்ணா..இப்ப தான் யாரும் போக வேண்டாம்ன்னு தான சொன்னீங்க ஆதேஷ் கேட்டான்.

ஆமா..ஆது, இப்ப வெளிய சென்று அவன் ஆளிடம் மாட்டினால் அவ்வளவு தான். அவன் ஆட்கள் நம்மை சுற்றி இருப்பதால் தான் நான் வேண்டாம் என்றேன்.

இங்க தான் சிலருக்கு அண்ணா மீது கோபமாயிற்றே. இதுக்கு மேல இங்க இருந்தா உங்களுக்கும் தருணுக்கும் பிரச்சனை அதிகமாகி விடும். நீங்க தனியாவே ஊருக்கு கிளம்புங்க. நாங்களும் கிளம்புகிறோம்.

மாமா நீங்க போகவேண்டாம் என்று அபி கூற, ஆதேஷும் மாமா சார்.. நீங்க போகாதீங்க என்று தருணிடம் போக வேண்டாம் சொல்லுங்க சீனியர். ஏற்கனவே குண்டு அடிபட்டதோடு தான் வந்திருக்காரு. ஏதும் பிரச்சனையென்றால் சமாளிக்க கூட முடியாது.

தருண் அமைதியாகவே நின்றான்.

ஓ.கே அர்ஜூன், நான் கிளம்புகிறேன் என்று தீனா செல்ல, இன்பா, பிரதீப் மற்றவர்களும் அவனை தடுக்க, அவன் சென்று விட்டான். யாரும் வர வேண்டாம் என்று நிறுத்தி அர்ஜூன் மட்டும் வெளியே சென்று பார்த்தான்.

தீனாவும் வண்டியில் சுற்றிலும் கவனித்தவாறு செல்ல அர்ஜூன் நினைத்தது போல் தீனாவை சுற்றி வளைத்தனர். அர்ஜூனும் பைக்கில் வந்திருப்பான்.

தீனா சண்டை போட்டுக் கொண்டிருக்க, அவன் கண்ணில் பட்டவனை பார்த்து அதிர்ந்தான். இவன் இங்கு வந்திருக்கிறானா? அவனை கவனித்து தாக்குபவர்களை மறந்து அவன் அவனை சினத்துடன் பார்த்தான்.

தீனாவை ஒருவன் அடிக்க வர, தீனாவை விலக்குகிறேன் என்று அர்ஜூன் அவன் மீதே விழுந்தான்.

ஆ..என்று கத்திக் கொண்டே, அர்ஜூன் என்ன செய்ற? தீனா கேட்க, அண்ணா என்று அர்ஜூன் தீனா மீது இருப்பதை பார்த்து சிரித்தவாறு எழுந்தான்.

என்னடா சிரிப்பு வேண்டி இருக்கு. சரியா அடிபட்ட இடத்துலயே விழுந்துட்ட என்று தீனா எழ முடியாமல் இருக்க, மீண்டும் அவனை அடிக்க ஒருவன் வந்தான்.

டேய்..என்னை எழுந்திருக்க விடுங்கடா என்று தீனா படுத்துக் கொண்டே அவனை சமாளித்து எழுந்தான்.

அர்ஜூனும் வேலீஸ்வரை பார்த்து விட, அண்ணா என்று கண்ணை காட்டினான். அர்ஜூன் உன்னால சமாளிக்க முடியுமா?

நான் பார்த்துக்கிறேன் என்றான் அர்ஜூன். தீனா வேலீஸ்வரை துரத்திக் கொண்டு சென்றான். தருண் என்ன தான் தடுக்கவில்லை என்றாலும் புவிக்கு தீனாவை பிடிக்குமே? என்று எண்ணிய மறுநொடியே வெளியே செல்ல, அவனுடன் பிரதீப்பும் சென்றான்.

தருண் போகாதே என்று இதயா வெளியே வர, அவளை பிடித்த தாரிகா உள்ளே இழுத்து சென்றாள். ஆதேஷ் அபி அகில் கவினும் வெளியே வர, போகாதீங்கடா என்று இன்பாவும் வர, வீட்டு கேட்டை இழுத்து விட்டு யாரும் வராதீங்க என்று அபி கேட்டை பூட்டி விட்டு அர்ஜூனுக்கு உதவினார்கள்.

இன்பா மாதவிற்கு போன் செய்து உடனே வாடா என்று அழைக்க, சைலேஷ் போனை வாங்கி உன்னோட ஆட்களையும் அழைத்து வா. அவனும் வந்து கொண்டிருந்தான்.

தீனா வேலீஸ்வரை பிடிக்க, தீனாவை ஆட்கள் மறைந்திருந்து தாக்கினார்கள்.

மாமா..என்று அபி அவனிடம் செல்ல, அதற்கு முன் பிரதீப் அவனிடம் வந்து வேலீஸ்வரை இழுத்து சென்றான்.

அண்ணா..அவனை ஏதும் செய்து விடாதே என்று தீனா பிரதீப்பை தடுக்க, அவர்களுடைய ஆட்கள் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். அனைவரும் அங்கங்கு மறைந்து கொள்ள, துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் பயந்தனர். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கமலி எழுந்தார்.

நீங்க இருங்க மேம். நான் பார்க்கிறேன் என்று சைலேஷ் வெளியே செல்ல, மீண்டும் துப்பாக்கி சத்தம் கேட்டது. மாதவ் அவன் ஆட்களுடன் வந்து கொல்ல வந்த ஆட்களை பிடித்தனர். வேலீஸ்வரும் பிடிபட அனைவரும் அப்பாடா என்று கூடினர்.

தருணை எங்கடா? என்று அகில் கேட்டான்.

ஒருவன் மறைந்திருப்பதை பார்த்த தருண் அவனை பிடிக்க வந்தான். அவன் தருணை தள்ளி விட்டு தீனாவை குறி வைத்தான். தருண் அவன் கையை பிடித்து தடுக்க, குண்டு அனைத்து பக்கமும் செல்ல அவன் அதை தருண் பக்கம் திருப்பினான்.

தீனாவும் அர்ஜூனும் ஒருவாறு தருண் என்று கத்திக் கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த புல்லட் சத்தம் கேட்க அனைவரும் உறைந்தனர்.

தருணுக்கு ஒன்றுமாகவில்லை. துப்பாக்கி வைத்திருந்தவனையே புல்லட் தாக்கி இருந்தது. அர்ஜூனும் தீனாவும் கண்ணீருடன் அவணை அணைக்க, தருண் பெருமூச்செடுத்து விட்டான்.

வீட்டிற்கு சென்று அர்ஜூன், எல்லாருக்கும் இப்ப புரியுதா? நாம முதல்ல ஒத்துமையா இருக்கணும். தருண் நீ கண்டிப்பா அண்ணாவுக்கு வாய்ப்பு கொடுக்கணும். பிரதீப் அண்ணா, ஜானு எதுக்கு இங்க இருக்கா? சீக்கிரம் பிரச்சனைய முடிக்கணும்.

அர்ஜூன், அவளுக்கு அங்க இருக்க பிடிக்கலையாம் பிரதீப் கூற, தருண் இடைமறித்து, கண்டிப்பா அதுதான் காரணமா அண்ணா?

ஏன் சீனியர் இப்படி கேட்குறீங்க? ஆதேஷ் கேட்க,

அப்புறம் என்னடா, ஒரு அண்ணன் மாதிரியா நடந்துகிட்டாரு இவரு. சின்ன சண்டை, கோபம், சிரிப்பு, எல்லாமே இருக்கணும். அவளுடன் நேரத்தை செலவழிக்கணும். அவ தினமும் எங்க வீட்டுக்கு வராலே படிக்கவா? கண்டிப்பா இல்லை. அவளுக்கு ஏற்றவாறு பேச ஆள் இல்லை என்பதால்.

பிரதீப்பை பார்த்து, நீங்க அவளுக்கு அப்பா மாதிரி நடந்துக்கிறீங்க அண்ணா. ஆனால் அவள் எதிர்பார்ப்பது அண்ணனை. அவளுடன் விதன்டாவாதம் செய்து, அவளுடன் விளையாட்டு காட்ட, நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்க்கிறாள்.

நீங்க கல்யாணம் செய்தாலாவது மாறுவீங்கன்னு நினைச்சா. அது போல நீங்க துகிராவை பார்த்து மாறுனீங்க, பேசினீங்க, சிரிச்சீங்க. ஆனால் ஜானுவிடம் இல்லை. துகிராவிடம் மட்டுமே. அதை தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியல்லை. அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கு. ஆதேஷ் சொன்னதை வைத்து பார்த்தால் இது தான் காரணம். நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே பிரச்சனை சரியாகி விடும். அவள் மீதும் தப்பு உள்ளது. அவளும் அதிகமா தான் பேசிட்டா.

ஆமாம் மாமா..ஹாஸ்பிட்டல்ல வைச்சு நீங்க சிரிச்சப்ப ஜானு என்ன சொன்ன தெரியுமா மாமா? நீங்க மனசு விட்டு அப்பொழுது தான் சிரிச்சீங்களாம். என்னால் முடியாததை துகிரா செஞ்சுட்டான்னு வருத்தமா புவியிடம் சொன்னா. புரியுதா மாமா? ஜானு உங்கள சிரிக்க வைக்க ஏதேதோ முயற்சி செய்திருக்கிறால் என்று நினைக்கிறேன் ஆதேஷ் கூறினான். பிரதீப்பிற்கும் சில நினைவுகள் கண்முன் வந்து சென்றது.

நான் கூட துகி மீது பொறாமையாக இருக்குமோன்னு தான் நினைச்சேன் ஆதேஷ் கூறினான்.

லலிதா அவனிடம் வந்து, நீங்க தான் ஜானுவிடம் முதல் அடி எடுத்து வைக்கணும். அவ பிரச்சனை எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டா. ஆனால் உடனே பேச வேண்டாம். நல்லா யோசித்து பேசுங்க. நீங்க பேசுற ஒரு வார்த்தை கூட அவளை இனி காயப்படுத்தாம பார்த்துக்கோங்க. அவளும் நல்ல படியா உங்ககிட்ட பேசுவா? அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் லலிதா கூற,

தீனா தருணை பார்த்தான். சார் நான் ஒரே வாய்ப்பு தான் உங்களுக்கு தருவேன். பார்க்கலாம் என்றான். தீனா அவனை கட்டிக் கொள்ள,

இப்படியெல்லாம் செய்து ஏமாற்றக்கூடாது சார் என்றான். தீனா நகர்ந்து நின்றான்.

ரெண்டு ஓ.கேவாகிடுச்சு என்று எண்ணிய அர்ஜூன், கவின் நீ இனி தாரிகா அருகே வந்து அவளை தொந்தரவு செய்யக் கூடாது.

அர்ஜூன், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா?

கண்டிப்பா முடியாதுடா. நம்ம நட்பு தொடரணும்ன்னு நினைச்சேனா தாரியை விட்டுரு என்றான். அர்ஜூனுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் நட்பா? காதலா? பரீட்சை கவினுக்கு வைத்தான். கவின் ஏதும் பேசாமல் நட்பாது தொடரட்டும் என்று அமர்ந்தான்.

அர்ஜூன் தாரிகாவையும் அம்மாவையும் அழைத்து சென்று வீட்டை அடைந்தவுடன் ஒரு போன் செய்ய வேண்டும் என்று காரை எடுத்தான். தாரிகா காரினூடே கவினை பார்த்தவாறு இருக்க, கொஞ்ச நாள் தாரி. அவனுக்கு தெளிவாக புரியணும் என்றான் அர்ஜூன்.

அவள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். கவின் மனதினுள் எனக்கு நட்பு காதல் இரண்டும் ஒன்று தான். இரண்டையும் நான் அடைந்தே தீருவேன் எண்ணிக் கொண்டவனை ஊருக்கு செல்ல பிரதீப் அழைத்தான்.

பிரதீப், தீனா, கவின் ஊருக்கு கிளம்ப, ஆதேஷ் வீட்டினரும், கமலியும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். ஸ்ரீயும் நிவாஸூம் அர்ஜூன் செய்தவைகளை பார்த்து மெச்சிக் கொண்டனர்.