வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-32
143
அத்தியாயம் 32
ஜானுவை மயக்கத்தில் இருக்கும் போதே தாலியை கட்ட நினைத்த அர்தீஸ் அவளை அந்த அறைக்கு தூக்கி சென்று அவளை கட்டிலில் கிடத்தினான். அவளது செழுமையான உடல் பாகங்கள் அவன் கண்ணுக்கு விருந்தாக தாலியை தவிர்த்து, அவளை முதலில் கண்களால் பருகினான்.
பின் அவளது புடவையை களைந்து அவள் மீது படர்ந்தான். ஜானுவை தேடி வந்த ஆதேஷிற்கு ஜானுவை அக்கோலத்தில் பார்த்து இரத்தம் கொதித்தது.
அவளிடமிருந்து அர்தீஸை பிரித்து எடுத்து வாயிலே குத்தினான். பின் இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட ஜானு விழித்து, தன் புடவை உடலில் இல்லாதிருப்பதை பார்த்து பதறினாள். பின் இருவரின் சண்டையையும் பார்த்து ஓரமாக உடலை குறுக்கி மேனியை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அங்கு மதுபாட்டிகள் உடைந்திருக்க ஆதேஷ் அதை எடுக்க சென்ற சமயம் அர்தீஸ் ஜானுவிடம் வந்து அவளை கட்டாயப்படுத்தினான். அவளை தள்ளி விட்டு அவள் மீது மீண்டும் படர, மாமா..மாமா..என்று கத்தினாள் ஜானு.
வேகமாக உடைந்த துண்டுகளை எடுத்து, அவளது புடவையில் போட்டு இறுக்கமாக சுற்றினான் ஆதேஷ்.
பின் அர்தீஸிடம் வந்து அவனது தலையில் சீற்றத்துடன் அடித்தான். அவன் தலையில் இரத்தம் சொட்டியது. ஜானு விரைவாக அவ்விடம் விட்டு ஒதுங்கி மறைந்தவாறு அமர்ந்தாள். அவள் உதடுகள் நடுங்க, கண்ணீர் நிற்காமல் அழுதாள். ஆதேஷ் கண்கள் சிவந்து..அவனை பிடித்து இழுக்க, அவன் தடுத்து ஆதேஷை அடித்தான். அவன் ஏற்கனவே வாங்கிய அடியில் முகத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இருவரும் அடித்துக் கொண்டிருக்க உள்ளே வந்தான் அந்த நெடியவன். அர்தீஸை பார்த்தவன் கோபமுடன் ஆதேஷிடம் வந்து அவனை அடித்தான். ஆதேஷ் கீழே விழுந்தான்.
அந்த நெடியவன் ஜானுவை பார்த்து சிரித்துக் கொண்டு அவளிடம் வர, அண்ணா..அவள் எனக்கு மட்டும் தான் என்று அர்தீஸ் அந்த வலியிலும் எழுந்து அவன் அண்ணனை எதிர்த்து நிற்க, முதலில் தம்பி என்று அமைதியாக இருந்தான் அந்த நெடியவன்.
அர்தீஸ் அந்த நெடியவனை அடிக்க, அவர்களுக்குள் சண்டை தொடங்கியது. ஆதேஷ் மெதுவாக ஜானுவிடம் நகர்ந்து வந்தான்.
மாமா..மாமா..என்று ஜானு அவனது முகத்தில் கை வைக்க, ஷ்ஆ..என்றான்.
சாரி மாமா. என்னால தான?
பேச முடியாமல் ஜானு..உன்னால இல்ல. நான்..என்று தயங்கி விட்டு, அவனது ஹுட்டி கோர்ட்டை கழற்றி அவளுக்கு போட்டு விட்டு,..போ..இங்கிருந்து போ ஜானு. இதுதான் சரியான நேரம் ஆதேஷ் கூற,
உங்கள விட்டுட்டு போகமாட்டேன். நீங்களும் வாங்க போகலாம் அவள் ஆதேஷை அழைத்தாள்.
ஜானு..புரிஞ்சுக்கோ. என்னால எழுந்திருக்க முடியல.
அர்தீஸை அடித்து மயக்கமாக்கி இவர்கள் முன் வந்தான் அந்த நெடியவன். ஆதேஷ் அவனை பார்த்து விட்டு, ஜானு போ..என்று கத்தினான்.
போவாலா? எப்படி போவாள்? என்னடா எல்லாரும் சேர்ந்து விளையாடுறீங்களா? அவளது முடியை பிடித்து இழுத்தான்.
மாமா..மாமா..என்று ஜானு கதறினாள். அர்தீஸுடன் சண்டை போடும் போது ஆதேஷ் போன் வெளியே விழுந்திருக்கும். அனைவரும் அதன் மூலம் அங்கு நடப்பதை பார்த்திருப்பார்கள். ஆதேஷ் அர்தீஸை அடித்தது. அடி வாங்கியதை பார்த்து பயந்து போயினர். அவர்கள் ஜானுவை பார்க்கவேயில்லை. இருவரும் பேசியதை வைத்து பிரச்சனை பெருகியதை உணர்ந்தனர். அதற்குள் நெடியவன் ஜானுவின் முடியை பிடித்து இழுத்த பின் தான் அவளை பார்த்தனர்.
அவள் புடவை அவிழ்ந்து அந்த கோலத்தில் ஜானுவை பார்த்த அபி, தருண், அர்ஜூன் கோபமாக எழுந்தனர். அபி கண்கள் கலங்க, நான் உடனே போகணும் என்று வெளியே செல்ல, அவனை தடுத்தார் இன்பாவின் அம்மா.
எப்படி இதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்? சீற்றத்துடன் பேசிக் கொண்டிருக்க,
அந்த நெடியவன் கத்தினான். எல்லாரும் அதை பார்க்க, ஆதேஷ் மது பாட்டில் சில்லை கட்டி வைத்திருந்தானே? கஷ்டப்பட்டு எழுந்து அதை எடுத்து அவனிடம் வந்து ஜானுவை அவன் பக்கம் இழுத்துக் கொண்டு மறு நொடியே கண்ணுமுன்னு தெரியாமல் அடித்தான். கட்டு அவிழ்ந்து கண்ணாடிசில்லின் பெரும்பகுதி அவன் கழுத்தில் பட, அவன் சரிந்தான். ஆதேஷும் கீழே விழுந்தான். அனைவரும் அதிர்ந்து ஆதேஷை பார்த்தனர்.
ஜானு அழுது கொண்டே அவனிடம் வந்து, மாமா..மாமா.. என்று அவனை பிடித்து உலுக்கி கொண்டே அழுதாள். அவன் ஏதும் பேசாமலிருக்க அவனை இழுத்து சுவற்றில் அமர வைத்து விட்டு அவளும் அவனருகே அமர்ந்து கொண்டு,
மாமா..மாமா..மாமா..எழுந்துருங்க..எழுந்துருங்க..என்னை பயமுறுத்தாதீங்க. எழுந்திருங்க..ப்ளீஸ் மாமா.. எழுந்திருங்க என்று கதறி அழுதாள்.
அவன் கண்ணை திறக்கவில்லை. ஆனால் அவளது கையை பிடித்தான்.
மாமா..மாமா..மாமா..உங்களுக்கு ஒன்றுமில்லையே? மாமா கண்ணை திறந்து என்னை பாருங்க என்று மீண்டும் அழுதாள். அவள் உதட்டு நடுக்கம், கைகள் குளிர்ந்து முகம் முழுவதும் பரிதவிப்பு நிறைந்து இருந்தது.
ஜானு என்று குறுஞ்சிரிப்புடன் அவன் கண்ணை திறக்க, மாமா..உங்களுக்கு ஒன்றுமில்லை என்று அவனை கட்டிக் கொண்டு அவனது காயம் மிகுந்த முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள். எல்லாரும் ஜானுவை அதிர்ந்து பார்த்தனர்.
ஜானு..இப்பவாது வெளியே போ. துருவன் வெளியே தான் இருப்பான். போ..ஆதேஷ் மெதுவாக பேச,
இல்ல மாமா..நான் உங்களை விட்டு போகமாட்டேன் என்று இரு கைகளையும் அவனது இடுப்பில் கோர்த்துக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்தாள்.
ஜானு..போம்மா. இந்த இடம் சரியில்லை. பாதுகாப்பு இல்லை. சீக்கிரம் நீ கிளம்பு என்றான்.
நீங்க வராம நான் எப்படி போவேன்? என்று எழுந்து அவனை பார்த்து அழுதாள். அவன் அவளையே பார்க்க கண்ணை துடைத்து விட்டு, திரைச்சீலைகளை இழுத்து கிழித்து அவன் முகத்தை துடைத்து விட்டு அவனுக்கு கட்டிட அவன் வலியில் கத்தினான். அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, அவனுக்கு அடிபட்ட இடத்தில் ஊதி ஊதி கட்டிட்டாள்.
ஜானு..இங்க உட்காரேன் என்று அவளை உட்கார வைத்தான்.
என்ன ஆச்சு மாமா?
எனக்கு மயக்கம் வருவது போல் உள்ளது என்று அவளது மடியில் தலை வைத்தான்.
இரு மாமா. நான் தண்ணீர் எடுத்து வாரேன்.
இது உன்னோட வீடுன்னு நினைச்சியா? அமைதியாக இரு ராட்ச்சசி என்று அவளது கையை பிடித்துக் கொண்டே மயங்கினான்.
மாமா..நீ எழுந்திரு. நாம போயிடலாம் என்று அவள் பேச, அவனுக்கு ஏதும் கேட்கவில்லை.
உனக்கு ஏதும் ஆகிவிடாமல் எழுந்துரு..இப்ப நீ மயங்கக் கூடாதுன்னு தோணுது? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மாமா..எழுந்திரு..மாமா.. எழுந்திரு என்று அழுதாள்.
அங்கே வந்தான் துருவன்.
ஜானுவை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றான்.
துருவா.. சீக்கிரம் வா. மாமா மயங்கிட்டாங்க. ஏதாவது செய்யுடா? என்று அழுதாள்.
அப்பொழுது தான் அர்தீஸையும் அவன் அண்ணனையும் பார்த்து விட்டு, அண்ணா..என்று ஆதேஷிடம் ஓடி வந்தான்.
துருவா..இங்கிருந்து போகணும். ஆனால் மாமாவை எப்படி வெளிய கொண்டு போறது?
வீடியோ காலை துண்டித்த தீனா, ஆதேஷ் போனிற்கு அழைக்க துருவன் அதை எடுத்து பேசினான். சரிங்க சார்..முடிச்சிடுறேன் என்று போனை அணைத்து விட்டு, ஜானு அமைதியா இரு என்று அர்தீஸிடம் சென்று அவனது சுவாசத்தை கவனித்தான். அது சீராக இருந்தது.
நெடியவனிடம் சென்று பார்த்தான். அவன் இறந்து விட்டான். பயந்த துருவன் ஓர் அடி பின் நகர்ந்தான். அர்ஜூன் வீடியோ கால் போட எடுத்தான் துருவன்.
போனை ஜானுவிடம் கொடுத்து விட்டு, தன் கைக்குட்டையை எடுத்து அர்தீஸின் கையை இழுத்து நெடியவன் கழுத்தில் சொருகி இருந்த பெரிய கண்ணாடி துண்டில் வைத்தான்.அர்தீஸூம் அவன் அண்ணனும் சண்டையிட்ட காட்சி அர்ஜூன் தீனா போனில் பதிவாகி இருக்கும். அதை வைத்து இருவரும் சண்டையிட்டு அர்தீஸ் அவன் அண்ணனை கொன்றான் என்று உள்ளே தள்ளலாம் என்று தன் திட்டத்தை தீனா கூற அதை முடித்து வைத்தான் துருவன். பின் ஆதேஷை ஜானுவும் துருவனும் சேர்ந்து வெளியே இழுத்து வந்தனர்.
பிரதீப், ஆதேஷ் அப்பா, கவின் அக்கட்டிடத்தினுள் நுழைந்தனர். வேலீஸ்வர் குரல் கொடுக்க, பிரதீப் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
நான் எங்கே அடைச்சு வைச்சிருக்கேன்? உன்னோட தங்கைகளுக்கும் என் இரு மகன்களுக்கும் திருமணமே முடிந்திருக்கும்.
ஏய்..என்ன சொல்ற? பிரதீப் கர்ஜிக்க,
பாவம் வேலீஸ்வர் அவருக்கு நடந்த ஏதும் தெரியலை போல. அந்த பொம்பள..பதட்டத்துல ஓடி வந்ததுல படியில் உருண்டு மண்டையில் அடிபட்டு இறந்திருப்பார்.
போ..நீயே போய் பாரு. இப்ப சாந்தி முகூர்த்தமே முடிந்திருக்கும்.
ஏய்..அப்படி ஏதாவது ஆனால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று ஜானு..ஜானு..துளசி..துளசி எங்க இருக்கீங்க? என்று கத்த, ஆது..என்று அவன் அப்பா கத்த, துருவா..துருவா..என்று கவின் கத்திக் கொண்டே முன்னேற, அவர்கள் மொட்டை மாடி அறையில் தான் உள்ளார்கள். போ..என்று ஏளனமாக அவர் கூற, வேகமாக படியில் ஏறி இடத்தை அடைந்ததும் அதிர்ந்தனர் மூவரும். ஜானுவின் அரைகுறை கோலம். ஆதேஷின் முகம் முழுவதும் காயமுடன் மயங்கிய நிலை, துருவனின் முகத்தில் இருந்த இரத்தம்.
மூவரும் ஒடி வந்தனர். ஜானு அப்பொழுது கூட ஆதேஷ் கையை விடவில்லை.
அண்ணா..மாமா என்று அழுதாள். அவள் நிலையை நினைத்து அழாமல் ஆதேஷை நினைத்து தங்கை அழுவதை பார்க்க பிரதீப்பிற்கு கஷ்டமாக இருந்தது.
துளசி எங்கடா? கவின் கேட்க. துளசி என்று ஆதேஷை விட்டு மேலிருந்து எட்டி பார்த்தான் துருவன்.
அவளை அங்கே தானே இருக்க சொன்னேன். எங்க போனா? என்று தலையில் கை வைத்துக் கொண்டு இறங்கினான். அந்த போலீஸ்காரன் அங்கு இல்லை.
அச்சோ..என்று அங்கிருந்து வேகமாக அவன் இறங்க, பிரதீப்பும் அவனுடன் இறங்கினான்.
யாராவது வாங்க..வாங்க..என்று அழுகையுடன் சத்தம் கேட்க, இருவரும் அவ்விடம் விரைந்தனர். அவளை பெரிய சங்கிலியால் இரு கையையும் கட்டி இருந்தான். அவளிடம் நெருங்கி அவனுக்கு வேண்டியதை நிறைவேற்ற முனைந்தான். அவளது கழுத்தை அவன் இதழ்களால் வருடியவன். அவள் மார்பு பக்கம் வரவும். பிரதீப் துருவன் அங்கே வந்தனர்.
பிரதீப் கோபமாக அவனை எத்தி தள்ளி விட்டு, அடிக்க இருவருக்கும் இடையில் மோதல் வேட்டையாக மாறியது. துருவன் அவளது கையிலிருந்த சங்கிலியை கழற்ற, அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.
பிரதீப் அவனை அதே சங்கிலியால் கட்டினான். ஆதேஷை அவன் அப்பா தூக்கிக் கொண்டு கீழே வந்தார். அவனுக்கு சுவாசம் நன்றாகவே இருந்தது. அங்கே போலீஸ் வந்தது. ஜானுவிற்கான ஆடையும் ஒரு போலீஸ்காரன் துருவனிடம் கொடுத்தான். அவள் மாற்றி விட்டு வந்தாள். ஆனால் வேலீஸ்வர் தப்பித்து விட்டான். அவர்களின் ஆட்களையும் அர்தீஸையும் அழைத்து சென்றனர். அவன் அம்மா, அண்ணன் பிணமாக இருந்தனர்.
கவினை தான் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்த நண்பர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் ஜானு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். கவின் தீனாவை பற்றி அறிந்து அவனை காண தான் ஹாஸ்பிட்டல் வந்திருப்பான். அவனை பார்க்கும் முன் பிரதீப்பை பார்த்து அவனுடன் வந்திருப்பான். அவனுக்கு இங்கு நடந்ததை விட ஆதேஷை தான் வியப்புடன் பார்த்தான். யாரிடமும் கை கூட ஓங்காதவன் ஜானுவிற்காக ஒருவனை கொலை செய்யும் அளவிற்கு போய்..அவனும் இவ்வளவு காயப்பட்டிருக்கானே? என்ற வியப்பில் அவனை பார்த்தான்.
அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவனை எழுப்ப, அனைவரையும் பார்த்து விட்டு ஜானுவை பார்த்தான். அவள் பாவடை சட்டையில் இருப்பதை பார்த்து அமைதியாக அவன் அப்பா, பிரதீப், கவினை பார்த்தான். பின் துளசியை பார்த்து,
உனக்கு ஒன்றுமில்லைல? என்று துருவனை பார்த்தான். அவனும் முகம் துடைத்து சோர்வுடன் பார்க்க, ஆதேஷ் அவனை அழைத்து அணைத்துக் கொண்டான். அவன் துளசியை முறைத்துக் கொண்டிருந்தான்.
பிரதீப் ஜானுவை பார்க்க, நீ பேசுடா. வீட்டுக்கு போயிட்டு பேசு.
இல்ல அங்கிள். நான் பேசணும்.
ஜானு..சொல்றேன்ல. வீட்டுக்கு போயிட்டு பார்த்துக்கலாம் ஆதேஷ் கூற, இல்ல மாமா. நான் இப்பவே பேசணும் என்று அழுதாள். பிரதீப் புரியாமல் ஜானும்மா..எதுக்கு அழுற? என்று அவளிடம் வந்தான்.
ஓ..உனக்கு நான் இப்பொழுது தான் கண்ணுக்கு தெரியுறேனா?
ஜானு வேண்டாம் என்று ஆதேஷ் தடுக்க, மாமா..ப்ளீஸ் இதுக்கு மேல பைத்தியக்காரி போல என்னால் சுத்த முடியாது.
என்னம்மா இப்படி பேசுற? என்று பிரதீப் அருகே வந்தான்.
போதுண்ணா..என்னால முடியல. எனக்கு தெரியும். உனக்கு நானென்றால் உயிர்ன்னு தெரியும்? எனக்காக தான் எல்லாமே செய்யுற. அதுவும் தெரியும்? ஆனால் எனக்கு தேவையான முக்கியமான நீ என்னுடன் ஒருநாள் முழுவதும் செலவழித்திருக்கிறாயா?
எனக்காக நீ செய்வது போல தானே உனக்காக நானும் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் உனக்கு உடல் நலமில்லாத போது என்னை உன் அருகில் விட்டது கூட இல்லை. அப்பொழுதெல்லாம் நான் எப்படி அழுதிருப்பேன் தெரியுமா? எனக்கு அறைக்கு வந்து காபி கொடுப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டும் வரை அனைத்தையும் செய்தாய். ஆனால் ஒரு வாய் சாப்பாடு உனக்கு எடுத்து வைக்க கூட விடவில்லை. எனக்கு உன்னுடைய பாசம் தெரிந்தாலும் வெறுமை தான். என்னை சுற்றி வெறுமையா தான் இருந்தது. எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருந்தது.
இது போல் தான் ஒரு நாள் அழுது கொண்டிருந்தேன். அப்பொழுது ஸ்ரீ அக்காவிடம் பேசினேன். அப்பொழுது ஐந்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். அவங்க தான் எனக்கு ஒரு யோசனை சொன்னாங்க. உனக்கு பிடிச்ச எல்லாமே செய். உனக்கு பிடிச்சது போல் நடந்து கொள். அண்ணாவிற்கு வேலை உள்ளதால் தான் உன்னை பார்க்க முடியவில்லை. உனக்கு ஏதும் பிரச்சனை என்றால் சொல்லு. உன்னை சுற்றி நிறைய நண்பர்களை வளர்த்துக் கொள். மற்றவர்களிடம் நிறைய பேசு என்று அவங்க சொல்லி தான் என்னை நானே மாற்றிக் கொண்டு, உன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தேன்.
அபி மாமா..என்று விரக்தியாக சிரித்த ஜானு, எனக்குள் நானே மாமாவை எனக்கு பிடிக்கும். மாமாவிற்கும் எனக்கு பிடிக்கும்ன்னு கற்பனையாக நினைத்து உண்மையா வாழ்ந்துகிட்டு இருந்தேன். மாமா விசயத்துல தெளிவாகிட்டேன். ஆனால் அண்ணா..உன் விசயம் என்று அழுதாள்.
என்னை ரொம்ப கஷ்டப்படுத்தீட்ட. நான் உனக்காக என்னவெல்லாம் செய்யணுன்னு நினைத்தேனோ இப்ப அண்ணியை மட்டும் செய்ய விடுற.
ஒரு நாள்..ஒரே ஒரு நாளாவது என்னுடன் சந்தோசமாக பேசி சிரித்திருப்பாயா? அன்று நான் பார்த்த போது முற்றிலும் உடைந்து விட்டேன். உன்னிடம் அவ்வளவு சந்தோசம். ஏதோ நான் உன்னை அடிமையாக வைத்திருந்ததை போல் உணர்ந்தேன். என்றாவது சாப்பாடு எடுத்து வரவான்னு கேட்டிருப்பாயாடா? ஆனால் நீ இன்னிக்கு கேட்ட?
நீ என்னோட அண்ணனாகவே தெரியல என்று தேம்பி தேம்பி அழுது மனதிலிருந்தவற்றை கொட்டி தீர்த்தாள்.
துளசி, துருவன், ஆதேஷ் அப்பா அனைவரும் ஜானுவிடம் வந்து அவளை அணைக்க, ஆதேஷ் அவளை பார்த்தவாறே நின்றான். ஜானுவிற்கு துகிரா மீது பொறாமை. அண்ணன் தன்னை கவனிக்கவில்லை என்று கோபம் என்று நினைத்திருந்திருந்த ஆதேஷிற்கு ஜானுவை பார்த்து, என்ன பேசவென்று தெரியாமல் விழித்தான்.
பிரதீப் கண்ணீருடன் அவளிடம் வந்தான். ஜானு..என்று அவன் அழைக்க, அவள் தேமலுடன் நிமிர்ந்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தது.
என்னை மன்னிச்சிருடா. நீ சந்தோசமா இருக்கணும். என்னால் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் என் வேலையை நானே பார்த்துக் கொண்டேன். என்னை மன்னிச்சிருவேல்ல ஜானும்மா? கேட்டான். அவள் ஆதேஷ் அப்பாவை பார்த்து,
பிரதீப் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அவள் கேள்வியில் அனைவரும் அதிர்ந்தனர்.
இல்லம்மா. அண்ணா புரிஞ்சுட்டான். இனி எப்பொழுதும் போல் அவனுடன் இருக்கலாம் என்றார்.
என்ன பேசுற ஜானு? நீ அண்ணாவை பார்க்காம இருந்துருவியா? இல்ல அண்ணாவால தான் இருக்க முடியுமா? என்று துருவன் கேட்டான்.
என்னால முடியாதுடா. அண்ணாவை பார்க்காம, பேசாம இருப்பது கஷ்டம் தான். அவன் இருப்பான் டா துரு. இதற்கு முன் அவனிடம் பேசுவதும் நான் மட்டும் தானே? அவன் அவனுக்கான கடமையை மட்டும் தான் செய்தான். அவன் கடமையை நானே முடித்து வைக்கிறேன். நான் செல்ல தான் போகிறேன்.
பைத்தியம் மாதிரி பேசாத ஜானு துளசி திட்டினாள். பிரதீப்பிற்கு ஜானுவின் பேச்சு அவனது உயிரையே உலுக்கியது.
ஜானு..நீ என்னை விட்டு போகப்போறீயா? என்று அழுது கொண்டே கேட்க, அவள் அமைதியாக இருந்தாள். ஜானு நீ மட்டும் தான் கஷ்டப்படுவியா? எனக்கும் மனசு இருக்கே ஜானும்மா. உன்னோட அண்ணன் உனக்கு என்ன சுயநலவாதியாக வா தெரிகிறேன்?
நீ இல்லாம என்னால இருக்க முடியாது ஜானு. நீ போகமாட்டேல ஜானு பிரதீப் ஜானு கையை பிடித்து கேட்டான். அவள் கண்ணில் கண்ணீருடன் நான் போகத்தான் போறேன்.
ப்ளீஸ் ஜானு..நீ போகக்கூடாது.
என்னை விட்டுரு அண்ணா. நீ என்னுடன் பேச மாட்டாய். சிரிக்க மாட்டாய். சொல்லப்போனால் ரோபோவாக தான் இருந்திருக்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீயும் ஒரு சராசரி மனுசனப்போல இரு. எனக்கு அதுவே போதும் என்று ஆதேஷை பார்த்தாள்.
மாமா..நான் உங்க வீட்டுக்கு வரதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?
இல்ல ஜானு. நீ தாரளமா வா..என்று மெதுவாக கூறி விட்டு எழுந்து துருவனின் உதவியோடு பிரதீப் அருகே வந்தான். அவனோ கவலையும் கண்ணீருமாக அமர்ந்துருக்க, ஜானு அவனை விட்டு எழுந்து ஆதேஷ் அப்பா அருகே சென்று நின்று கொண்டாள்.
ஆதேஷ் பிரதீப்பை அணைத்தவாறு, அவளுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க மாமா. அதுவரை அவள் எங்க வீட்ல இருக்கட்டும். நாங்க பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லைன்னா நான் விருந்தாளிகள் அறையில் தங்கிக் கொள்கிறேன்.
இல்ல மாப்பிள்ள..உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இருக்குமா? அவளுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க? அது பிரச்சனையில்லை என்று கண்கலங்க ஜானுவை பார்த்துக் கொண்டே, அவளை பார்க்காமல் நான் இருந்ததேயில்லை என்று ஆதேஷை இறுக அணைத்து அழுதான் பிரதீப். ஜானுவும் ஆதேஷ் அப்பா கையை இறுக பற்றிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
இது கண்டிப்பா அவசியம் தானா? கேட்டுக் கொண்டே வந்தான் தீனா. தீனாவை பார்த்த துளசி,..அண்ணா..உனக்கு ஒன்றுமில்லைல்ல.
அவங்களுக்கு மட்டும் தான் நடிக்கத் தெரியுமா?
உனக்கு அடிபடவே இல்லையா?
அடிபட்டது என்று சட்டையை கழற்றி காண்பித்தான். அவன் சுட்டது உண்மைதான். சீரியசாக நிலை என்றது தான் உண்மையில்லை. அவனது மார்பு, முதுகை சுற்றி கட்டிடப்பட்டிருந்தது.
ஏன் ஜானு? தீனா கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
விடு தீனா. அவள் போகட்டும். அவள் சந்தோசத்துக்காக இதையும் செஞ்சுடலாம் பிரதீப் கூற, ஜானு கண்ணீர் நிற்க மறுத்தது.
அவள் விறுவிறுவென வெளியே செல்ல துளசி, கவின், ஆதேஷ் அப்பா அவளுடன் சென்றனர்.
மாமா சார், எல்லா பிரச்சனையும் முடிஞ்சது தான? ஆதேஷ் கேட்க, தீனா அவனை பார்த்து சூப்பர் மாப்பிள்ள. என்னோட முதல் பாதையை கடந்து வந்துட்டீங்க.
ஆதேஷ், துருவன், பிரதீப் அவனை பார்க்க, ஆமாம் மாப்பிள்ள..நீங்க எப்படி எல்லாரையும் காப்பாத்துறீங்கன்னு பார்க்க தான் பெரியதாக ஆட்களை அனுப்பவில்லை. நீங்க எங்க குடும்பத்துல இருக்க இதெல்லாம் பண்ணனும்.
யோவ் மாமா..என்ன சொல்ற? உங்க தங்கை ரெண்டு பேரும் எந்த நிலையில் இருந்தாங்க? ஜானு எப்படி கஷ்டப்பட்டா தெரியுமா? ஆதேஷ் துருவனை விலக்கி தீனா சட்டையை பிடிக்க, பிரதீப்பிற்கோ யாரை வைச்சு விளையாடி இருக்க? என்று அவனும் சட்டையை பிடித்தான்.
என்னடா, நீ வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க? நீயும் என் சட்டையை பிடித்துக் கேட்க வேண்டாமா? துருவனிடம் கேட்க, எல்லாம் தெரிந்த வள்ளல் தானே என்று முணுமுணுத்துக் கொண்டே தீனாவை முறைத்தான்.
ஏன் மாப்பிள்ள, ஜானு அவனோட தங்கைச்சி. அதனால் கோபத்துல என் சட்டையை பிடிக்கிறான்? நீங்க எதுக்கு பிடிக்கிறீங்க? தீனா கேட்க, ஆதேஷ் அவனை விடுவித்து நகர்ந்து துருவனை பிடித்தான்.
உங்களுக்கு உதவியது தவறு தான் சார் என்று துருவன் கூற, பிரதீப் கையை எடுத்து விட்ட தீனா துருவனின் அருகே வந்து கையை ஓங்கினான். துருவன் அசையவேயில்லை. நேராக அவனை பார்த்தாள்.
நீ எப்படி துளசிக்கு முத்தம் கொடுக்கலாம்?
அதான் சாரி சொல்லிட்டேனே சார்.
அதை ஏத்துக்க முடியாது. எனக்கு கொடு பார்ப்போம் என்றான் தீனா.
ஹ..ஆ..என்று துருவன் நகர, டேய் பைத்தியம் மாதிரி பேசாத? பிரதீப் கூற, இன்னொரு அழகான காட்சிய பார்க்காம விட்டுட்ட அண்ணா..என்று தீனா ஆதேஷை பார்த்தான். துருவனுக்கு புரிந்தது. ஜானுவுக்கும் ஆதேஷிற்கும் இடையே இருந்த நெருக்கம். ஏதோ நடந்துள்ளது என்று கணித்த துருவன், பிரதீப்பிடம் போனை கேட்டான்.
எதுக்குடா? ஆதேஷ் கேட்க, இங்க சில பேருக்கு மந்திரிக்கணும். முன்பே சொன்னால் தான் அதற்கான அனைத்தையும் தயார் செய்வார்கள் என்று புவி..சாருக்கு முத்தம் வேண்டுமாம். இங்க பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு இருக்கார்.
அடப்பாவி..கொளுத்தி விட்டுட்டியே? என்று போனை பறித்து பார்த்து தீனா துருவனை விரட்ட, அவர்கள் முன் வந்து நின்றாள் துளசி.
டேய்..இங்க என்ன ஓடி பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கீங்க? சீக்கிரம் கிளம்பணும். மணிய பாருங்க என்று பிரதீப்பிடம் வந்தாள். பிரதீப் ஆதேஷை பிடித்துக் கொண்டு காருக்கு வர அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.