அத்தியாயம் 30
அர்ஜூன் நடந்ததை அறிந்து பதற்றத்துடன் தலையில் கை வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் ஆதேஷ் அபியிடம் போன் பேசிய போது, ஜானுவை மாருதியில் பார்த்து ஜானு என்று அழைத்தது. பின் ஆதேஷின் மூச்சு சத்தத்துடன் கூடிய ஜானு..ஜானு..என்ற பதற்றம். துருவன் வாங்க அண்ணா..என்று அவனை பைக்கில் ஏற்றிய சத்தம் வரை கவனித்தான் போனிலே.
அர்ஜூன் அவங்க ஜானுவை கடத்திடாங்கன்னு நினைக்கிறேன் என்று பதறி அவன் பிரதீப் மாமாவிற்கு போன் செய்ய அவனோ எடுக்கவில்லை.
அர்ஜூன் வா..கிளம்பலாம் என்று அபி பதறினான்.
கிளம்புங்க..தாராளமா போங்கடா என்று அவன் முன் வந்து நின்றாள் இன்பா.
அர்ஜூன் மூலம் இன்பாவை பற்றி அவர்கள் பேசியதை தெரிந்து அவர்களையும் அர்ஜூன் வீட்டிற்கே அழைத்து வந்தனர்.
மேம்..என்று அர்ஜூன் சத்தமிட, இப்ப கிளம்பி எப்ப போய் நீங்க காப்பாத்துவீங்க. அதெல்லாம் நடக்காது. அதை உங்க மாமா பார்த்துப்பார் என்று இன்பா சோபாவில் அமர்ந்து தேனீர் பருக, அபி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
என்னடா உனக்கும் வேண்டுமா? என்று தேனீரை நீட்ட, நீங்களே ஊத்திக்கோங்க சினத்துடன் சொல்லி விட்டு துகிராவை அழைத்தான். அவரும் அங்கிளும் கிளம்பி இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு சீனியர் என்று ஓவென்ரு துகிரா அழ, போனை வாங்கிய இன்பா..
ஏம்மா..இப்படி அழுற? ஒன்றுமே ஆகாது. பயப்படாதே.ஆமாம்..நீ யாரை நினைச்சு பயப்படுற?
உன்னோட அண்ணாவுக்காகவா? மாமாவுக்காகவா?
ஆமாம்..பட்டிமன்றம் நடத்துங்க என்று கோபமாக அவளிடமிருந்து போனை அபி பிடுங்கி துகிராவிடம் பேச சக்கர அங்க வந்து,
அழாதீங்க அண்ணி..அண்ணா ஜானு அக்கா இருக்கிற இடத்த கண்டுபிடிச்சிட்டாரு. மாம்ஸ் தான் அனுப்பினாரு. அங்க தான் எல்லாரும் போய்கிட்டு இருக்காங்க.
மாம்ஸ் பார்த்துப்பார் அவன் கூற, அபி கோபமாக..மாம்ஸா யாரு அது? துகிராவிடம் கேட்டான்.
ஆதுவை தான் அப்படி சொல்றான்?
அவனா? அவனுக்கு தான் சண்டையே வராதே? அவன் காப்பாற்றப் போறானாம்?ஏளனமாக கேட்டான்.
ஆதுவை சும்மா நினைக்காதீங்க. உங்கள மாதிரி சண்டை போட வராது தான். அவன் புத்திசாலி. கண்டிப்பா ஜானு துளசியை காப்பாத்தீடுவான்.
என்ன துளசியுமா?
ஆமாம் சீனியர். துளசியும் தான். ஜானுவின் தோழன் துருவனும் போயிருக்கான்.
தெரியும்.ஏதும் விசயம் தெரிந்தால் சொல்லுங்க என்று போனை வைத்தான்.
அர்ஜூன்..இந்த பையன் கிளம்புறேன்னு சொன்னான். போகலையா? அபியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள் இன்பா.
மேம்..போதும். நிறுத்துறீங்களா? அர்ஜூன் சினத்துடன் கூற, அதுக்கு ஏன்டா இப்படி கோபப்படுற?
மேம்..தீனா அண்ணா வீட்டுக்கு அவன் எதுக்கு வரணும்? அதுவும் ஸ்ரீ நிவாஸை கொல்ல நினைக்கும் ஆட்கள் அங்கு எப்படி? அதுவும் அர்தீசுடன் சேர்ந்து.
அர்ஜூன்… அர்தீஸ் குடும்பத்துக்கு ஏன் நம்மை கொல்ல நினைப்பவர்கள் பழக்கமாக இருக்கக் கூடாது?
ம்ம்.சரியா கேட்டீங்க மேம். அன்று ஸ்ரீயை ஆள் வைத்து கடத்தியவர் கூட அவராக இருக்கலாம். நம்மை கொல்ல நினைப்பவருடன் மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் பிரச்சனைக்கு உரியவர்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுவது போல் தெரிகிறது அர்ஜூன் கூற,
ஆமாம் அர்ஜூன்..அப்ப சைலூ சந்துரூ..இன்பா கேட்டாள்.
அவங்களும் கவனமா இருக்க சொல்லணும் என்று அகில் வந்தான்.
ஏன்டா அகில், உன்னோட தம்பி எவ்வளவு பெரிய ஆபத்துல இருக்கான். கொஞ்சமாவது அக்கறை இருக்கா? அபி திட்டினான்.
டேய்..உன்னோட மாமா இருக்கும் போது, எனக்கென்ன கவலை? அவன் கூலாக அமர்ந்தான். எனக்கு தான்டா டென்சனா இருக்கு.
அபி..டென்சனை குறைக்க டீ சாப்பிடலாமே? இந்தா என்று இதயா அவனிடம் நீட்டினாள்.
இதயாவை முறைத்த அபி, எங்க உன்னோட ஆளை காணோம். அவனுடைய எதிர்கால மாமனுக்கு என்னாச்சுன்னே தெரியல? அபி கவலையாக கூற,
அபி, உனக்கு பிரதீப் மாமா தான பிடிக்கும். தீனா மாமா தான ஹாஸ்பிட்டலில் இருக்கார் அகில் கூற
ரெண்டு பேருமே எனக்கு முக்கியம் தானே? என்று அழாத குறையாய் அமர்ந்தான்.
எல்லாரும் நிறுத்துறீங்களா? அங்க என்ன பிரச்சனை போய்கிட்டு இருக்கு. தீனா அண்ணாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. அந்த ஆளை பிரதீப் அண்ணாவால் சமாளிக்க முடியுமான்னு தெரியல. நானும் அபியும் பயந்து கிட்டு இருக்கோம். வேடிக்கை பண்ணிக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு அங்குள்ள சீரியஸ் புரியுதா? இல்லையா? அர்ஜூன் கத்தினான்.
அண்ணா…பிரதீப் அண்ணா தனியா போகலை. கூடவே கேங்க்ஸ்டர் லீடரும் போயிருக்கார் தெரியுதுல? தாரிகா கேட்டாள்.
ஆதேஷ் முன்னாடி இப்படி சொன்ன? நீ செத்த? இதயா கூற,
அவன் தான் இங்கு இல்லையே. அவனும் என்று..டேய்..அண்ணா..ஆதுக்கு சண்டை கூட போடத் தெரியாதுடா.போச்சி..போச்சி..தாரிகா பதறினாள்.
இப்ப புரியுதா? அர்ஜூன் கேட்டான்.
அர்ஜூன், நீயும் தருணும் ஹாஸ்பிட்டல்ல பிளான் போட்ட மாதிரி. அபியோட தீனா மாமாவுடனும் பிளான் தான் போட்டுருக்க? இன்பா கேட்க,
பிளானா? அய்யோ..மேம் என்ன நினைச்சீங்க? நாங்க தனியே பேசினோம் தான். இந்த மாதிரி பிளான்லாம் இல்லை என்று அர்ஜூன் கூற, இன்பா முகம் மாறியது.
மேம்..அப்ப நாங்க பிளான் பண்ணி இருக்கோம்ன்னு தான் இப்படி பேசிக்கிட்டு இருந்தீங்களா? அர்ஜூன் கேட்க,
நிஜமாகவே ரொம்ப சீரியசா இருக்காங்களா? அவள் கேட்க,
மேம்..அவர பற்றி எந்த செய்தியும் வரல..நாங்க பயந்துகிட்டு இருக்கோம்.
உங்க ஊர்ல வேற போலீஸ் மூலமா ஜானுவை பற்றி சொல்லி உதவி கேட்கலாமே?
செய்யலாமே? என்று அபி போனை எடுக்க, அவனுக்கு காவேரியிடமிருந்து போன் வந்தது.
அத்தை…மாமாவுக்கு என்னாச்சு? அபி பதற, அவனுக்கு அடி பலம் தான், பிழைச்சிட்டான். அவன் தான் பேசணும்னு சொல்றான் என்று தீனாவிடம் கொடுத்தார்.
மாமா..உங்களுக்கு ஒன்றுமில்லையே அபி பதற,
ஜானு துளசிய கடத்திட்டானுகளாமே அபி..போனை அர்ஜூனிடம் கொடு என்றான் தீனா.
அண்ணா..எப்படி இருக்கீங்க? சொல்றத மட்டும் கேளு..நீ மாப்பிள்ளைக்கு போன் செய்..செய்து அவருக்கு நான் கொடுத்த துப்பாக்கியை எங்க வைச்சிருக்காருன்னு கேளு. அவர் எந்த இடத்துல இருக்கார்ன்னு கேளு. அவரோட போன்ல டிராக்கிங் செட் பண்ணி இருக்கேன் தீனா கூற,
ஓ.கே அண்ணா..மாப்பிள்ளையா யாரு? அர்ஜூன் கேட்க,
டேய்..ஆதேஷ் மாப்பிள்ளடா..சீக்கிரம் நேரமில்லை. கான்பிரன்ஸ்ல போடு..என்று தீனா கூற,
அர்ஜூன் புன்னகையுடன் அபியை பார்த்து விட்டு, அவனுக்கு போனை போட்டு விட்டு ஸ்பீக்கரிலும் போட்டான்.
தீனா கேட்டவற்றை கேட்க, அவனும் பதிலளித்தான். அர்ஜூன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அங்கு வந்து போனை சுற்றி அமர்ந்தனர்.
மாப்பிள்ள..சரியா ஐந்து நிமிடம் மட்டும் அங்கேயே நில்லுங்க. ஒருவன் துப்பாக்கியை கொடுப்பான் வாங்கி விட்டு உள்ளே போங்க..என்றான் தீனா.
மாமா சார்..நீங்க நல்லா இருக்கீங்கள? பதட்டமாக ஆதேஷ் பேச, பதறாம அமைதியா இருங்க. நான் நல்லா இருக்கேன். பிரதீப்பும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்துடுவான்.
நம்பிக்கையான அவங்க ஊர்க்காரனிடம் துப்பாக்கி ஒன்றை கொடுத்து வைத்துள்ளேன். அவன் தான் கொண்டு வருவான். அவனுக்கு எந்த விசயமும் தெரியாது. அவனை பார்த்து பதட்டப்படாம ஒரு போலீஸ்காரன் போல் பேசுங்க..
மாமா சார்..நடிக்கணும்மா?
அவனுக்கு தெரிஞ்சா நீங்க யாருமே உயிரோட வர முடியாது. ஒரு கொலைகாரனை பிடிக்க வந்ததாக தான் சொல்லி இருக்கிறேன். பார்த்து வாங்கிட்டு உள்ள போங்க.
துருவன் எங்க இருக்கீங்க?
அவன் காட்டில் ஓர் இடத்தை கூறினான். உள்ளே செல்லுங்கள்..சரியாக வலப்புறம் திரும்பணும் பின்னும் வலப்புறம், பின் ஓர் இடது திரும்பினால் அங்கே ஓர் கட்டடம் இருக்கும். அங்க தான் இருப்பாங்க.
நீ வழிய சரியா காட்டி மாப்பிள்ளைய கூட்டிட்டு போ..அவங்க உள்ளே சென்றதும் அர்ஜூன் கண்டிப்பா அங்க கேமிரா மூலம் இருவரையும் கண்டிருவான் அந்த வேலீஸ்வர்.
துப்பாக்கியை எப்படி பயன்படுத்தணும்னு நீ மாப்பிள்ளைக்கு சொல்லு..அர்ஜூன்.
மாமா சார்..நான் சூட் பண்ணணுமா? ஆதேஷ் கேட்க, உள்ள ரெண்டு பொண்ணுங்க மட்டுமல்ல, என்னோட ஆள் ஒருவனும் கண்டிப்பா இருப்பான்.
உங்க ஆளா?
ஆமாம். எனக்காக அர்தீஸை சுட்டவன். அவனையும் தூக்கி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் அவனுக்கு உதவி கிடைத்தால் போதும். அவன் உங்கள் அனைவரையும் சேர்த்தே காப்பாற்றி விடுவான்.. இருந்தாலும் அவனையும் முழுதாக நம்ப வேண்டாம் என்று தீனா கூற,
மாமா சார்..என்னால முடியுமா? ஆதேஷ் பயந்தான்.
முடியும் ஆது என்று அர்ஜூன் முதல் முறையாக ஆதேஷ் பெயரை சுருக்கி அழைத்து கூப்பிட, அண்ணா..எனக்கு பயமா இருக்கு. ஜானுவும் துளசியும் என்னை பார்த்தப்ப அவங்க வாயிலிருந்து இரத்தம் வரும் வரை அடிச்சிட்டானுக..அந்த ஒரு நிமிஷ இடைவெளியிலே இப்படி அடிச்சிருக்காங்களே? அவங்கள என்ன செய்றானுகளே? பயமா இருக்கு.
நீ எதுக்கு பயப்படுற?..நீ எவ்வளவு தூரம் ஓடியிருக்க தெரியுமா? உன்னால கண்டிப்பா முடியும். துருவா..உனக்கு பயமா இருக்கா? தீனா கேட்க,
நோ..சார். நான் பயப்படல..அர்தீஸூடனே நிறைய முறை சண்டை போட்டிருக்கேன். நாங்க கண்டிப்பா காப்பாத்திடுவோம். என்ன அண்ணா? என்று ஆதேஷை கேட்க,
அண்ணாவா? டேய்..அவன் எப்ப உனக்கு அண்ணனான்? அகில் சினத்துடன் கேட்க,
அடேய்..உடன் பிறப்பே பேசுறத ஒட்டு கேக்குறியா? அம்மாவிடம் சொல்லாம வந்துட்டேன். நீ சொல்லிடு. புவனாவை பார்க்க போயிருக்கேன்னு சொல்லு. வேறேதையும் சொல்லி தொலைச்சுறாத? அம்மா பயப்படுவாங்க.
டேய்..எந்த நிலையில் இருந்துகிட்டுப் இப்படி வேடிக்கையா பேசுறீங்க? அபி திட்ட, அபி அண்ணா நீங்களுமா? இன்னும் எத்தனை பேர் தான் ஒட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க?
டேய்..என்று பலகுரல்கள் ஒலிக்க, ஆது அண்ணா..ஊரே கூடி இருக்கானுக போல அவர்கள் பேசிக் கொண்டிருக்க கார் சத்தம் கேட்டது.
மாப்பிள்ள.. உடலை விறைப்பாக நிமிர்வுடன் கைகளை இறுக்கமாக வைத்தவாறு அவனுடைய கைகளை குலுக்கி பேசுங்கள். அவனுக்கு சந்தேகமே வந்துடக்கூடாது.
ஓ.கே மாமா சார் என்று ஆதேஷ் நிமிர்வுடன் அவனிடம் சென்று குமாரவேல் ஹெட்காண்டபிள் சார்..என்று இறுக்கமுடன் கைகளை வைத்து குலுக்கி விட்டு, தீனா சார்..பொருளை உங்களிடம் வாங்கிக் கொள்ள சொன்னார் சார்.
ஹெட் கான்ஸ்டபுளுக்கெல்லாம் கொலைகாரனை பிடிக்கும் வேலையெல்லா?
ஏன் சார். நாங்கள் முன்னேற கூடாதா? எங்க சாரே அதுக்கு ஒத்துக்கிட்டார். உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? என்று மிடுக்காக ஆதேஷ் கேட்க,
அதெல்லாம் இல்லையே. தீனா முடிவுன்னா சரியா தான் இருக்கும். நான் உதவி ஏதும் செய்யவா?
சார்..எங்க சாருக்கு உரியவர் மட்டும் தான் அவர் வேலையை பார்க்கணும். வேறு யாரும் தலையிட்டால்..என்று இழுத்தான்.
நான் கிளம்புறேன். உங்க சார் வேலையை நீயே பார் என்று அவர் கிளம்பினான்.
அண்ணா செம்மையா பேசிட்டீங்க..துருவன் கூற, ஆதேஷ் சூப்பர்டா என்று விசிலடித்தாள் இன்பா. அனைவரும் அவளை பார்க்க அபி முறைத்தான்.
மேம்..என்ன பண்றீங்க? நானே டென்சன்ல இருக்கேன்.
டேய்..எருமை மாடே, இப்ப கூட அந்த பொறுக்கி பெயர் தான் உன் நினைவுக்கு வந்ததா? தாரிகா திட்டினாள்.
தாரி, சும்மா இரு. அவன் எவ்வளவு பெரிய விசயம் செஞ்சிருக்கான்? ஸ்ரீ கூற. இனி தான் அவன் கவனமா இருக்கணும் என்று அர்ஜூன் கூறினான்.
ஆமாம் மாப்பிள்ள கவனமா இருங்க. உள்ளே செல்லுங்கள் என்று தீனா கூற,இருவரும் பைக்கை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு தீனா கூறிய வழியில் சென்றனர். அவன் கூறிய கட்டிடத்தை அடைந்தனர்.