வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-22
148
அத்தியாயம் 22
தாரிகாவின் அம்மா அஞ்சனா அங்கே வந்தார். அவளை விடுத்து அவரிடம் சென்று, நீங்களாவது சொல்லுங்க ஆன்ட்டி என்று அவன் பேச, அர்ஜூன் அவன் முன் வந்தான்.
அர்ஜூன்..அர்ஜூன்..ப்ளீஸ்டா..நீயாவது அவளிடம் சொல்லுடா என்று கவின் கெஞ்ச, அர்ஜூன் அவனை முறைத்து தாரிகா கையை பிடித்து வா..போகலாம் என்று நடக்க,
நில்லு அர்ஜூன்..என்று தாரிகா அம்மா தடுத்து, கவினை ஒரு முறை பார்த்து விட்டு தாரிம்மா..நீ அவனை விட்டு முழுசா வரணும்? என்றார்.
அவள் விழிக்க, எனக்கு ஒரு அண்ணா இருந்தான். சொந்த அண்ணன் இல்லை. ஆனால் அவனுக்கு நான் என்றால் மிகவும் பிரியம் என்று கவினை பார்த்தார்.
பின் அவர் பையனை இன்னும் ஒரு மாதத்திற்குள் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீ சம்மதித்தால் நான் உன்னை அழைத்து செல்கிறேன் இல்லைன்னா நீ இங்க தான் இருக்கணும் என்றார்.
அம்மா..என்று அர்ஜூன் அதிர்ந்தான். தாரிகா கலங்கியவாறு கவினை பார்க்க அவன் போகாதே என்று தலையசைத்தான்.
ஆன்ட்டி..அவள் படிப்பு என்ன ஆவது? ஆதேஷ் கேட்டான்.
படிப்பு தானே..என் பொண்ணு மானமுடன் மனநிம்மதியுடன் வாழ்ந்தாலே எனக்கு போதும்.
அம்மா நீங்க அவசரப்படுறீங்க அர்ஜூன் கூற,
இல்ல அர்ஜூன். இப்ப தான் தெளிவா இருக்கேன். அவள் என்ன தான் நம்முடன் வந்தாலும் அவனை பார்க்காமல் அழுது கொண்டு தான் இருப்பாள்.
அவள் நம்முடன் இருந்தால் தானே அழுவாள். என் அண்ணா பையன் சாப்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். அதிக ஊதியமென்று கூற முடியாது. அது வெளியூராயிற்றே..
அம்மா..என்றான் அர்ஜூன்.
ஆமாம் அர்ஜூன். பிரான்சுல இருக்காங்க. ஏற்கனவே பேசினாங்க. என்ன யாழுவை கேட்டாங்க. அவ தான் எங்கள விட்டு ஒரேடியா போயிட்டாலே. எனக்கு என்னோட ரெண்டாவது பிள்ளையாவது உயிரோட இருக்கணும். அவளை இழந்து நான் இருக்க முடியாது.
நீ சொல்லு தாரி அவளை பார்க்க, கவின் அவளருகே வந்து நோ..சொல்லிடு. ப்ளீஸ் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது ஜில்லு..ப்ளீஸ்..ப்ளீஸ் கெஞ்சினான்.
அம்மா..என்று அவள் அனைவரையும் பார்த்தாள். நான் உன்னுடன் வாரேன்ம்மா என்றாள் கண்ணீருடன்.
தாரி வேண்டாம்..என்று கதறி அழுதான் கவின்.
என்னோட பொண்ணுங்க ரெண்டு பேருமே சந்தோசமா இருந்ததே இல்லை. அவள் தான் போய் சேர்ந்து விட்டாள். இவளாவது இருக்கட்டுமே என்று கண்ணீருடன் வா..போகலாம் என்று அவர் தாரிகா கையை பிடித்தார்.
கவின் தாரிகாவின் கையை பிடித்து இழுத்தான். அவள் அவனருகே வர, என்னை விட்டு போகாதன்னு சொல்றேன்ல என்று அவளது இதழ்களில் அனைவர் முன்னும் வன்முத்தம் கொடுத்தான். அவள் அவனை விட்டு விலக பார்க்க, அவளை தன் இரு கைகளாலும் அடக்கியவன் மீண்டும் முத்தமிட. மற்றவர்கள் அதிர்ந்தாலும் பெரியவர்கள் அவர்களை பிரித்து நிறுத்தினார்கள்.
தாரி, நீ போகாதே என்று அவன் மீண்டும் அவளருகே வர பார்க்க, அவன் கன்னத்தில் விழுந்தது ஓர் அறை. அவர் நம் அர்ஜூனின் பாட்டி.
எந்த மண்ணுல புறந்துட்டு என்ன காரியம் பண்ற? ஒரு பொண்ணை கட்டாயப்படுத்துற? யாரும்மா நீங்க? என்று அவர்களிடம் வந்தார்.
பாட்டி..என்று அர்ஜூன் அழைக்க, குரலை வைத்து உணர்ந்த அர்ஜூன் பாட்டி
அஜூ..என்று அவனை பார்த்து கண்கலங்கி பார்க்க அவனும் கண்கலங்கினான்.
அஜூ என்று அவனை நோக்கி வேக நடையிட்டு வந்தார். அவனும் பாட்டி என்று அவரை நோக்கி வந்தான். அருகே வந்ததும் சாரி..பாட்டி என்னை மன்னிச்சிடுங்க என்று அவன் அவரை அணைக்க, நீ ஏன் என்னை தனியா விட்டுட்டு போயிட்ட அஜூ என்று அழுதார்.
தாரிகா அம்மாவிற்கு புரிந்தது. தாரிகா இருவரையும் பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.
இனி என்னை விட்டு போகமாட்டேல அஜூ என்று பாட்டி கேட்டார்.
நான் சீக்கிரமே ஊருக்கு வாரேன். ஆனால் இப்பொழுது இங்கு தங்க முடியாது பாட்டி.
அவர் கோபித்துக் கொண்டு திரும்பி நின்றார்.
பாட்டி..உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு. அடுத்த முறை வரும் போது உனக்கே தெரியும்.
அப்படி என்னடா வைச்சிருக்க?
அது தான் ரகசியம்.
சரி..சரி.அம்மா..எங்கடா? எப்படி இருக்கா? அவளை அழைத்து வரலையா? என்று கேட்டார்.
பாட்டி..என்று சொல்ல நினைத்த அர்ஜூன், பாட்டிக்கு தெரிந்தால் வருத்தப்படுவாரே என்று அமைதியானான்.
கவின் அவரிடம் வந்து, பாட்டி அவளை போக வேண்டாம்ன்னு சொல்லுங்க.
யாரடா? எதுக்குடா?
பாட்டி நாங்க காதலிக்கிறோம். நான் தப்பு செய்திட்டேன். அவ கோபத்துல வேற ஒருத்தனை கட்டிக்க போறாலாம். நீங்க சொன்னா கேட்பா? ப்ளீஸ் சொல்லுங்க என்று அவர் கையை பிடித்து அழுதான்.
நான் சொல்றதை என் பிள்ளையே கேட்கலை. நீ வேற போடா என்று அவன் கையை உதறினார்.
ஏய் கிழவி,.அவ உன்னோட பெயர்த்தி தான். நீ சொன்னா கேட்பா என்று உடைத்தான் கவின்.
அவர்களை பார்த்துக் கொண்டே அர்ஜூனிடம், இவன் என்னடா சொல்றான்? என்னோட பெயர்த்தியா?
ஆமாம் பாட்டி. தாரிகா என்னுடைய தங்கை என்றான்.
ஆதேஷ் அம்மா அவனை பார்த்து, என்னடா சொல்றான்? என்று ஆதேஷிடம் கேட்டார்.
அர்ஜூன் தாரிகா அம்மா அப்பாவை பற்றி சொல்ல?
ஓ..உன்னால தான் என்னோட பொண்ணு அவளோட காதலை இழந்தாளா? என்று தாரிகா அம்மா அருகே சினத்துடன் வந்தார் பாட்டி.
தாரிகா அம்மா..அவருக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தெரியாது. எங்களுக்கு மூத்த பொண்ணு பிறந்த பின் தான் தெரியும்.
அப்ப உனக்கு தெரிஞ்சதுல..பாட்டி கனல் வீச அவரை பார்த்தார்.
பாட்டி..என்று அர்ஜூன் அவரிடம் வந்தான். நில்லு அஜூ..அவனை நிறுத்தி, என் பிள்ள வாழ்க்கைய கெடுத்த சிறுக்கி நீ. இப்ப எந்த உறவுக்காக இங்க வந்த? போ..அவனுடனே இருக்க வேண்டியது தானே? கடித்து துப்பினார். நடந்த ஏதும் தெரியாமல்.
பாட்டி..என்று தாரிகா அவர்கள் முன் வந்து, என் அம்மா யார் வாழ்க்கையையும் கெடுக்கல. எல்லாரும் சேர்ந்து எங்க அம்மாவை தான் ஏமாத்திட்டாங்க.
சின்ன பொண்ணா இருந்துட்டு எதிர்த்து பேசுற? அவளை அடிக்க கையை ஓங்கினார் பாட்டி.
கவின் ஒரு பக்கம் பாட்டி என்று கத்த, அர்ஜூன் ஒரு பக்கம் பாட்டி என்று கத்த, அத்தை என்று அதிரும்படி சத்தம் வந்தது அர்ஜூன் அருகே.
அர்ஜூன், தாரிகாவின் அப்பா அங்கே இருக்க, அவர் பின் வந்து நின்றார் அர்ஜூன் அம்மா.
நீ எதுக்குடா வந்த என்று அவர்கள் அப்பாவிடம் கோபத்துடன் சென்ற அர்ஜூன் பாட்டி முன் வந்து நின்றார் அர்ஜூன் அம்மா கமலி.
அர்ஜூன் பாட்டியிடம் வந்து நடந்ததை கூற, பாட்டிக்கு மோகன் மீது கோபம் எழுந்தது. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணது போதாது என்று இந்த பொண்ணையும் கஷ்டப்படுத்தி அப்படி என்ன பணம் என்று அவர் கோபத்துடன் அவரை அடிக்க வந்தார்.
அவரது கையை பிடித்த மோகன் முதல்ல இந்த அறைய உங்க பொண்ணுக்கு கொடுங்க. பிள்ளை தனியே விட்டு என்ன செய்றான்னு கேளுங்க என்று அவர் கூற, அப்பா என்று கத்தினான் அர்ஜூன்.
அஜூ..என்று கண்கலங்க நீ அம்மா கூட இல்லையா? நீ தனியாவா இருக்க? அவர் கேட்க, அர்ஜூன் அமைதியாக இருந்தான்.
சினத்துடன் கமலியிடம் சென்று, ஏன்டி உனக்கு பிள்ள அவ்வளவு தேவையில்லாதவன் ஆயிட்டானா? பிள்ளையை தனியா விட்டுருக்க? என் அஜூ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? அவர் கேட்க,
அவனை நானா போகச் சொன்னேன். அவனா தான் கிளம்பினான். அவனுக்கு தான் கொஞ்சமும் பொறுப்பே இல்லை என்று கமலி கத்த,
பொறுப்பில்லையா? யாருக்கு அர்ஜூனுக்கா? இல்லை உங்களுக்கா? என்று தாரிகா அம்மா கமலிடன் கோபமாக பேச ஆரம்பித்தார்.
அர்ஜூன் மாதிரி பொறுப்பா யாராலும் இருக்க முடியாது. அவனுக்கு பிரியமானவங்கல அப்படி பார்த்துப்பான்.
பாட்டியிடம் திரும்பிய அஞ்சனாம்மா..இரண்டு வாரமா தான் அர்ஜூனை எங்களுக்கு தெரியும். எனக்கு என்னோட பிள்ளை யாழு இருந்த இடத்தை நிரப்பிட்டான் என்று அழுதார்.
யாழுவா? உன் பிள்ளையா? எங்க? என்று கேட்டார் பாட்டி.
அவ..அவ..எங்களை விட்டு போயிட்டா என்று அழுதார். அர்ஜூன் அவரிடம் சென்று ஆதரவாக கையை பிடித்தான். அம்மா கண்ணை துடைத்து விட்டு,
உங்களுக்கு அம்மா என்பதை விட “தி கிரேட் பிசினஸ் விமனாக” தானே பிடிக்கும். அதுக்காக பிள்ளைய விட்டுட்டீங்க. அவன் யாருமில்லாது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான் தெரியுமா?
நானா அவனை கஷ்டப்பட சொன்னேன்?
அர்ஜூன் சீற்றத்துடன், ஆமா நீங்க வீட்ல இருந்து போக சொல்லல..நானா தான் போனேன். ஒரு நேரமாவது என்னுடன் சேர்ந்து சாப்பிடிருக்கீங்களா? நான் தூங்கிய பின் வருவீங்க..நான் எழுவதற்குள் கிளம்பிடுவீங்க.
இங்க பாட்டி மட்டும் தான் என்னை பார்த்துக் கொண்டாங்க. அவங்களுக்கும் தான் வேலை இருக்கும். அவங்க என்னை பார்த்துக் கொண்டது போல் அங்கே இல்லை. எதிராத தான் அங்க இருந்தது. நான் வீட்டில் இருப்பது போல் நீங்க நடந்து கொண்டதேயில்லை.
ஏதோ சுவற்றை போல் தான் பார்த்தீங்க. இரண்டு நாள் தான் இருந்தேன். உங்களது தவிர்ப்பு என்னால் தாங்க முடியல. நான் இங்கிருந்து உங்களிடம் வரும் போது மனக்கஷ்டத்தில் தான் இருந்தேன். உங்களது செயல்கள் எனக்கு உங்க மீது வெறுப்பை தான் தேடி தந்தது. இதற்கு மேல் முடியாது என்று தான் தனியே வாழ ஆரம்பித்தேன்.
எனக்கு பிடிச்ச எதுவுமே உங்களுக்கு பிடிக்காது. என்னோட காதல் பிடிக்கல. என்னோட கனவு பிடிக்கல..என் செயலுக்கு குறை சொல்வதே உங்களுக்கு வேலையாக போயிற்று. இப்ப எனக்கு பொறுப்பில்லைன்னு சொல்றீங்க? என்று கத்தினான்.
நான் அப்படி இருந்ததால் தான் கிரேட் பிசினஸ் வுமன்னு பேர் வந்திருக்கு. என்னை பணம் இல்லைன்னு தான் விட்டு போனார். ஆனால் இப்ப பார்த்தேல..என்று கமலி மோகனை பார்த்தார்.
என்ன சொல்ற? பணத்துக்காக உன்னிடம் வந்தேன்னு சொல்றியா?
இல்லை..நான் அஞ்சுக்காக தான் உன்னிடம் வந்தேன். என் காதல் நீ தான்னு அவள் என் மீதுள்ள காதலை கூற சொல்லாமல் இருந்திருக்கா. எனக்கு அடிப்பட்டது. பார்த்துக்கோன்னு தான உன்னிடம் சொல்லி விட்டு வந்தாள்.
அது காரணமில்லை. நானும் இல்லாமல் அர்ஜூனும் இல்லாமல் நீ கஷ்டப்படுவன்னு தான் என்னை உன் வீட்டில் விட்டுட்டு போனா?
எனக்கு பணம் முக்கியமாக பட்டது. அப்பொழுது புரியாத விசயத்தை அவள் காதல் புரிய வைத்தது. அஞ்சு வீட்டுக்கு வெளிய பசங்களோட பேசியது கேட்டு தான் என் மனம் மாறியது.
உன்னை விட்டு மட்டும் தான் போனேன். ஆனால் அவளை விட்டு சென்றதுமில்லாமல் என மூத்த பொண்ணு இறந்து அவள் கஷ்டப்படுவது தெரிந்தும் மேலும் நான் தொந்தரவு கொடுத்தேன்.
என் பிள்ள என்னை விவாகரத்து செய்ய சொன்னா? அப்ப கூட அஞ்சு எனக்காக பேசினா. நீ என்னை பழிவாங்க நினைச்சு உன் வாழ்க்கையையும் நம்ம அர்ஜூன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்ட. ஆனால் அவள் தன் பிள்ளைகளுக்காக தன் உடலை வருத்தி வேலை செய்து படிக்க வைத்து, என்னையும், என் தங்கையையும், அவள் பையனையும் சமாளித்து நல்ல படியா வளர்த்திருக்கா. இப்ப அர்ஜூனையும் சேர்த்து பார்த்துகிறா..என்று அஞ்சனாம்மாவை பற்றி பேசினார்.
உங்களுக்கு தெரியாத இன்னொன்றும் உள்ளது என்று அர்ஜூன் கூற, மோகன் அர்ஜூனையும் அஞ்சனம்மாவையும் பார்த்தார்.
உங்களுக்காக தன் கனவையும் இழந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் ஒரே கனவு என்றான்.
அண்ணா..என்ன சொல்ற? அம்மா படிச்சிருக்காங்களா?
ஆமாம்..அவங்க முதல் வருடம் கல்லூரியில் படிக்கும் போது தான் இவர் அம்மாவை பொண்ணு கேட்டு வந்தது. அம்மாவிற்கும் அவரை பிடித்ததால் தன் படிப்பை விட்டு கனவை துறந்து இவருடன் இல்லத்தரசியனார்.
அம்மாவிற்கும் என்னை போல் போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும் தாரி என்றான். அஞ்சனாம்மா அழ ஆரம்பித்தார்.
கமலியை பார்த்த அர்ஜூன், அம்மா எந்த கனவில்லாத நீங்க பணத்துக்காக உங்க புருஷன் விட்டுட்டு போயிட்டாருன்னு பிள்ளையை விட்டுட்டு அந்த பணத்தை தேடி போயிட்டீங்க. ஆனால் அவங்க காதலுக்காக தன் கணவனை இழந்து கனவை இழந்து கடைசியில கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளையை தன்னுள் வைத்து காத்துக் கொண்டிருக்காங்க.
இப்ப பேசுங்க? என்றான். அவன் போன் அழைக்க போனை பார்த்த அர்ஜூன் பாட்டியையும் அவன் அம்மாவையும் பார்த்து விட்டு எடுத்தான்.
சொல்லு..
அவ..நல்லா இல்லை. நான் அழைத்து வாரேன். இப்ப கிளம்பிடுவோம்.
சரி..சீக்கிரம் வாரோம்.
சொல்லுடா..அகில்.
இப்ப எதுவும் பேசும் நிலையில் நான் இல்லை. நீ எல்லாரையும் பார்த்துக் கொள். வந்துடுவோம். பிரச்சனை ஏதும் இல்லைல..
சரி..வந்திடுவோம் என்று போனை துண்டித்து, அவன் அம்மாவிடம் சென்று அவர் காதருகே சென்று, நான் சொன்னதை நீங்க மறக்கலைல்ல?
கண்ணீருடன் இருந்த அர்ஜூன் அம்மா..என்ன? அவனை பார்த்தார்.
ஸ்ரீயிடம் நீங்க பேசவே கூடாது. ஏதாவது செஞ்சீங்கன்னா? அவ்வளவு தான். நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்று மிரட்டும் தொனியில் பேசினான். அவன் பேசியது மோகனுக்கும் கேட்டது.
அவர் கமலியை பார்க்க அவர் முகமே மோகனுக்கு காட்டிக் கொடுத்தது. ஆனால் அவர் ஏதும் பேசவில்லை.
அம்மா..வாங்க கிளம்பலாம் என்று அர்ஜூன் தாரிகா கையை பிடிக்க கவின் அவளது மறுகையை பிடித்தான். அர்ஜூன் சினத்துடன் அவனை பார்க்க,
தாரி..ப்ளீஸ் ஒரே ஒரு வாய்ப்பு கொடு. இனி அது போல் பேச மாட்டேன் என்றான் கண்ணீருடன்.
என்னடா செஞ்ச என் பெயர்த்தியை? என்று அவன் கையிலே ஒரு போடு போட்டார் பாட்டி.
பாட்டி..என்று அவரை பார்த்து விட்டு அர்ஜூன் நில்லு.. நான் கோபத்துல தான் பேசிட்டேன். ப்ளீஸ்டா அவகிட்ட சொல்லுடா.
அர்ஜூன் கையை எடுத்த தாரிகா கவினிடம் வந்து, நீங்க உங்க கனவை நோக்கி செல்லலாம். நானும் என் அம்மாவை காயப்படுத்த விரும்பலை. அவங்க இஷ்டப்படி நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன். எங்கள விட்டுருங்க என்று அவளாகவே காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
நாங்க எல்லாரும் சீக்கிரம் வருவோம் என்று பாட்டியிடம் கூறி விட்டு அர்ஜூன் காரில் ஏற, தாரிகாவும் அஞ்சனாம்மாவும் பாட்டியிடம் தலையசைத்து விடை பெற்றனர். அவர்களுடன் மோகனும் ஏறினார்.