அத்தியாயம் 20

கருப்பு வெள்ளை கலந்த ஆடையுடன் ஆட்கள் பள்ளியினுள் நுழைந்தனர். அவர்கள் ஆதேஷ் அம்மாவின் பிசினஸ் பாடி கார்ட்ஸ். அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைக்க, ராகுலையும் அவனது நண்பர்களையும் இழுத்து வந்து ஆதேஷ் முன் போட்டனர். ஆதேஷ் அப்பா அங்கே வந்தார்.

அங்கிள் என்று துகிரா அவரிடம் வர, தாரிகாவும் அவளுடன் வந்தாள். ஜானுவும் துருவனும் அவர்களை வியந்து பார்த்தனர்.

மரத்தை சுற்றியிருந்த மேடையில் அப்பாவும் மகனும் அமர்ந்தனர்.

என்ன தம்பி, நீங்க என்ன சொன்னீங்க? இப்ப என்ன செய்றீங்க? கேட்டான் ஆதேஷ்.

மகனே..இந்த பையனை என்ன செய்யலாம்? ஆதேஷ் அப்பா கேட்டார்.

அவனிடம் பேசிட்டு முடிவெடுப்போமே? என்றவன் சொல்லுடா என்றான் அதட்டலாக.

சார், நீங்க எல்லாரும் யார்? என்னோட அப்பா யாருன்னு தெரியாம இப்படி செய்யாதீங்க? ராகுல் கூறினான்.

ஏன் தெரியாது? நல்லா தெரியுமே என்று ஆதேஷ் அப்பா கீழே இறங்கி அவனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் கூறினார்.

அப்பா..இவங்களுக்கு நான் யாருன்னு தெரியணுமாம்? நீங்க சொல்றீங்களா? நான் சொல்லவா?

மை பாய்..உங்களிடம் தானே கேட்டாங்க. நீங்கள் கூறுவது தான் உசிதம் என்றார்.

ஆதேஷ் அவனை படிப்பை கூறி விட்டு அம்மா, அப்பா பிசினஸ் அனைத்தையும் கூறினான். பின் இவள் என் தங்கை என்று துகிராவையும் கூற, அவள் கண்கள் கலங்கியது.

ஜானு, துளசியை அழைத்தான் ஆதேஷ்.அவர்கள் வர, நான் அவர்களுடைய மாமா என்று கூறி விட்டு, எங்களுடைய முறையை பற்றி தெளிவாக ஒருவர் அறிமுகப்படுத்துவார் என்றான். இவங்க என்னோட தோழி என்று தாரிகாவை அறிமுகப்படுத்தி விட்டு, இனி ஏதாவது யாருக்காவது தெரியணுமா?

மாம்ஸ்..என்று சக்கரை அவன் முன் வந்து, ஏற்கனவே ஊர்ல எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடுச்சு. பிரதீப் அண்ணா பெரியவங்களிடம் சொல்லிட்டாங்களாம்.

நான் இல்லாமல் அவர் எப்படி சொன்னார்? துகிரா கேட்டாள்.

அண்ணி..அண்ணா அன்றைக்கே சொன்னார். ஆனால் யாரும் பெரிதாக எடுத்துக்கல.அண்ணாவுக்கு ஜானு தான் முக்கியம். அதனால் அதை பற்றி யோசிக்க மாட்டான்னு நினச்சுட்டாங்க. ஆனால் இன்று காலையில வேலை செய்றவங்க உங்கள குடும்பத்தோட பார்க்கவும். எல்லாருக்கும் விசயத்தை பரப்பி தெரிஞ்சு போச்சு என்றாள் துளசி.

ஜானு கண்ணை கசக்கி கசக்கி விழிக்க, தாரிகா அவளை பார்த்து ஜானு..என்று அழைத்தாள். அவளுக்கு கண்கள் மங்கலாக தெரிய அக்கா..எனக்கு ஏதோ செய்யுது.

மாமா..மாமா..எனக்கு..எனக்கு..என்று அவள் குரல் கலங்க ஜானு மயங்கி தாரிகா மீது சரிந்தாள்.

ஜானு..என்ன ஆச்சு?

மாமா..மாமா..சாரி..மாமா.. மயக்கத்தில் பேச, ஆதேஷ் மேடையிலிருந்து தவ்வி அவளருகே ஓடி வந்தான். துருவனும் பசங்களும் அவள் அருகே நின்று ஜானு..ஜானு..என்று பதறினர்.

அதற்கு முன் வந்த அவன் அப்பா..அவளது கன்னத்தில் தட்டினார். அவள் எழவில்லை. தண்ணீர் கொண்டு வாருங்கள் என்றார். ஆதேஷும் அவளிடம் வந்து, ஜானு..ஜானு..என்று அழைத்தான். அவர்களின் பாடி கார்டு ஒருவன் தண்ணீரை அவரிடம் கொடுக்க, அவர் அதை அவள் முகத்தில் தெளித்தார். அப்பொழுதும் அவள் எழவில்லை.

ஜானு..ஜானு..என்று துகிராவும் தாரிகாவும் அழைக்க, அவள் ஆனால் உதடுகள் அசைந்தது. ஆதேஷ் அப்பா அவனிடம் ஜானுவை விட்டு, ராகுலிடம் சென்று அவளுக்கு என்ன கொடுத்த? அவர் கேட்டுக் கொண்டிருக்க,

ஆதேஷ் அவள் உதடுகள் அசைவதை பார்த்து, என்னவென்று கவனிக்க அவள் முகத்தின் முன் குனிந்தான். துகிரா அவனை தள்ளி விட,

ஏய்,லூசு அவ ஏதோ சொல்றா? என்று மீண்டும் குனிந்து கவனித்தான் ஆதேஷ்.

மாமா..மாமா..சாரி..மாமா என்று திரும்ப திரும்ப அதையே சொன்னாள். ஆதேஷ் கண்கள் கலங்கியது.

ராகுல் ஆதேஷ் அப்பாவிடம் பயந்து அவன் கொடுத்த பானத்தில் போதை மருந்து கலந்ததை கூறினான்.

போதை மருந்தா? என்று தலைமை ஆசிரியர் அவனை அடித்தார். இந்த வயசுல என்னடா போதை மருந்து? இன்னும் வைச்சிருக்கீங்களா? என்று அவர் கேட்க, அவர்கள் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது.

அவர் அங்கு சென்று பார்க்க, நிறைய பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தனர். அவர் உடனே தீனாவிற்கு போன் செய்தார்.

மருத்துவரை அழைக்க சொன்னான் ஆதேஷ். இல்ல மகனே அதெல்லாம் தேவையில்லை. பொண்ணுக்கு வீரியம் மிகக் குறைவானது தான் கொடுத்திருக்கான். அதனால் தான் இவ்வளவு நேரம் நல்லா இருந்திருக்கா..

இங்க பக்கத்துல குளிக்க இடம் இருக்கா? அவர் கேட்டார்.

இங்க இல்லை அங்கிள். கொஞ்சம் தள்ளி ஆறு ஓடுது என்று துருவன் கூற, பொண்ணை தூக்குடா மகனே அங்க போங்க..என்று துருவனையும் அழைக்க அவர் வந்த காரில் ஆதேஷ், துருவன், தாரிகா, துகிரா ஏற அவரே வண்டியை ஓட்டினார். அங்கே வந்தவுடன் ஜானுவை தூக்கிக் கொண்டு ஆதேஷ் அப்பா அவளது தலையை தண்ணீரில் அமிழ்த்து அமிழ்த்து எடுத்தார். ஜானுவிற்கு தேவையான பொருட்களுடன் ஆதேஷ் அம்மா, துளசி அம்மா, அப்பத்தா அங்கே வந்தனர் .

அவளுக்கு மெதுவாக நினைவு திரும்ப, அம்மாடி உனக்கு ஒன்றுமில்லையே? அப்பத்தா பதறி அவளிடம் வந்தார். ஆனால் அவள் தேடியது தன் அண்ணனை.

அப்பத்தா..அண்ணா எங்கே?

வந்துருவான்டா என்றார்.

சித்தி, எனக்கு பயமா இருந்தது? எனக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு பயந்துட்டேன்.

ஆதேஷ் அம்மாவை பார்த்து, ஆன்ட்டி என்று கட்டிக் கொண்டு அழுதாள்.

ஜானு..உனக்கு ஒன்றுமில்லை. இங்க பாரேன் ஜானு என்று மாங்காயை காண்பித்தார்.

இது எனக்கு இல்லை. மாமாவுக்கு..என்று ஆதேஷை தேடினாள். அவன் அவள் பின் தான் கண்ணீருடன் நின்றான்.

மாமா..இது உங்களுக்கு சக்கர தான் தந்தான்.

இந்தாங்க என்றாள்.

நீ வைச்சுக்கோ..எனக்கு வேண்டாம் என்றான் நழுங்கிய குரலில். அனைவரும் ஆதேஷை பார்த்தனர்.

மாமா..இத வைச்சுக்கோங்க என்று குனிந்தவள் சாரி மாமா..எல்லார் முன்னாடியும் உங்களையும் அண்ணியையும் விருந்தாளின்னு சொல்லிட்டேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை துகிரா கூற ஆதேஷ் பேசாமல் நின்றான். மாமா..எனக்கு தூக்கம் வருது என்று ஜானு கண்ணை மூடினாள்.

தூங்காதடா..பாப்பா கொஞ்சநேரம் என்ற ஆதேஷ் அப்பா அவளது கன்னத்தை தட்டி அவளை விழித்திருக்க வைத்தார்.

சீக்கிரம்..சீக்கிரம் முதல்ல நான் சொன்னதை கொடுங்க என்று கொடுக்க வைத்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் டாக்டர் ஜானுவை பார்த்து விட்டு அவள் எழுந்தவுடன் வீட்டுக்கு செல்லலாம். உடலுக்கு ஏதும் பிரச்சனையில்லை என்று சென்றார்.

பிரதீப் பதறி ஜானு..ஜானு..என்று உள்ளே நுழைந்தான். அங்கிருந்தவர்கள் யாரும் அவன் கண்ணுக்கு படவில்லை துகிரா உட்பட. அவள் அவனை பார்த்து அவன் பின் சென்றாள்.

ஜானு அறையினுள் தூங்கிக் கொண்டிருக்க, பிரதீப் அவளை பார்த்து அழுதான். துகிரா அவனருகே வந்து அவனது தோளில் கை வைத்தாள். ஆதேஷும் மற்றவர்களும் உள்ளே வந்தனர்.

துகிரா கை பட்டவுடன் அவளை இடுப்போடு அணைத்து அழுதான். அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாமா..என்று ஆதேஷ் அழைக்க, சட்டென துகிராவை விட்டு விலகினான். அனைவரையும் பார்த்து நடந்ததை அறிந்து கொண்டு, உங்க எல்லாரோட உதவிக்கும் ரொம்ப நன்றி என்று கையெடுத்து கை கூப்பினான்.

என்னடா இதெல்லாம்? அவ எனக்கும் பெயர்த்தி. அப்பத்தா அவன் கையை தட்டி விட, மற்றவர்களும் உரிமையோடு கோபமாக பேசினார்கள்.

அப்பத்தா..இதுவரை அவளுக்குன்னு நான் மட்டும் தான் இருந்தேன். ஆனா..நீங்க எல்லாரும் இருக்கீங்கன்னு நிரூபிச்சுட்டீங்க? என்று ஆதேஷ் அப்பாவை பார்த்து,

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் என்றான்.

நம்ம ஒரே குடும்பமான பின் நம்ம பொண்ணுக்கு ஒண்ணுன்னா சும்மா விட்டுருவோமா? அவர் பேச,.அவர் கையை பிடித்தான் ஆறுதலாக.

பின் ஆதேஷை பார்த்து அவனை அணைத்துக் கொண்டு, தேங்க்ஸ்டா மாப்பிள்ள..என்று அழுதான்.

மாமா எதுக்கு அழறீங்க? நீங்க தனியா ஜானுவை எவ்வளவு நல்லா வளர்த்திருக்கீங்க. உங்க மாதிரியே மத்தவங்க பத்தி யோசித்து தான் சொல்லாம இருந்திருக்கா..என்றான்.

தேங்க்ஸ்டா..என்றான்.

மாமா..இத முதல்ல கண்டுபிடிச்சது தாரி தான் என்றான்.

அவளிடன் சென்று தேங்க்ஸ்மா..என்றான்.

மாமா..போதும். எத்தனை தேங்க்ஸ்..அழாதீங்க. ஜானு விழித்தவுடன் வீட்டுக்கு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க.அதனால அமைதியா இருங்க. ஜானு தூங்கிக்கிட்டு தான் இருக்கா.

தம்பி, நீங்க இன்னும் சாப்பிடலை. நீங்க மூணு பேரும் கிளம்புங்க. பாப்பாவை நாங்க பார்த்துகிறோம். பிரதீப்..போ..அவங்கள் வீட்டுல விட்டுட்டு வா  காவேரி கூற, அவன் ஜானுவை பார்த்தான்.

ஆன்ட்டி, நாங்களே போயிடுவோம். மாமாவை அப்பொழுதே தேடினாள். அவர் இருக்கட்டும் ஆதேஷ் கூறினான்.

தம்பி..துளசி நல்லா இருக்காலா? காவேரி ஆதேஷிடம் கேட்டார்.

நான் பள்ளிக்கு தான் செல்லப்போகிறேன். நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி என்று துருவன் கூற, ஏதும் பிரச்சனைன்னா சொல்லுடா..பிரதீப் கூறினார்.

ஓ.கே அண்ணா என்று நால்வரும் வெளியே வந்தனர். துகிரா பிரதீப்பை பார்த்தவாறு வெளியே வந்தாள்.

நீ மாமாவுடன் இருக்கிறாயா? ஆதேஷ் கேட்டான்.

இல்ல நாம போகலாம் என்று மூவரும் வீட்டிற்கு செல்ல, துருவன் பள்ளிக்கு சென்றான். ஆதேஷ் குளித்து விட்டு சன்னல் பக்கம் வந்து நின்றான்.  சாம்பல் கலந்த வெள்ளை நிற அழகு குட்டி முயலொன்று சோர்ந்து இருந்தது அச்சோலை பக்கத்தில்.

வேகமாக கீழே வந்த ஆதேஷ் இரு பெண்களையும் பார்த்து அசந்து நின்றான். பாவடை தாவணியில் அழகாய் இரட்டை சடையுடன் இருந்தனர் துகிராவும் தாரிகாவும்.

அவன் பார்த்தது ஒரு நொடி தான். பின் வேகமாக வெளியே செல்ல..ஜில்லா எப்படி இருக்குன்னு சொல்லுடா? எங்க போற? என்று அவர்களும் அவன் பின் சென்றனர்.

ஆதேஷ் அந்த முயல் குட்டியை எடுக்க சென்றான். அவனை தடுத்த தோட்டக்காரர்,

அவனை தொடாதீங்க தம்பி..சாம்சங் கடித்து விடுவான் என்றார்.

அண்ணா..அது சோர்வா இருக்கு.

ஆமாம் தம்பி, சின்னம்மா தான் இதை பார்த்துப்பாங்க. ஆனால் அவங்க ரெண்டு நாளா சரியில்லை. இவனை பார்க்க கூட வரல. அவங்க சாப்பிட கொடுத்தா தான் சாப்பிடுவான். வேற யாரிடமும் போகவும் மாட்டான். அவங்களும் இவனை யாரையும் தூக்கவும் விட மாட்டாங்க.

இருங்க அண்ணா..நான் பார்க்கிறேன் என்று முயலை தூக்க வந்தான்.

சாம்சங் அய்யா கூப்பிடுறாங்க..அவங்களிடம் போ என்றார் அவர்.

அது அதனுடைய புதருக்குள் சென்று மறைந்து கொண்டது.

சாம்சங்கா?..என்று சிரித்த ஆதேஷ். உங்க சின்னம்மா தான் இந்த பேர் வச்சாங்களோ?

ஆமா தம்பி. முதல்ல பேரே எங்க வாய்க்குள் நுழையல.. அவங்க எங்களுக்கு சொல்லிக் கொடுத்து அழைக்க சொன்னாங்க. தினமும் மாலையில் இதனுடன் தான் நேரம் செலவழிப்பாங்க. அவங்க ஏதோ வருத்தமா இருக்குற மாதிரி தான் இருந்தாங்க. அந்த பொண்ணை நினைச்சா இருக்கும்ன்னு நினைக்கிறேன். சின்ன வயசுல இருந்து பழகிய பழக்கமாச்சே. பாவம் அந்த புள்ளையும் என்று புவனாவை எண்ணி அவரும் வருந்தினார்.

இதை கேட்டுக் கொண்டே வந்த துகிரா, சாம்சங் எங்க இருக்கீங்க? வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தாள். அவளை தாவணியில் பார்த்த தோட்டக்காரர், அப்படியே சின்னம்மா மாதிரி இருக்கீங்க? அதான் தம்பிக்கு உங்களை பிடிச்சிருச்சு போல அவர் கூற, துகிரா முகம் மாறியது.

அவள் வெளியே செல்ல..தாரிகாவும் ஆதேஷும் அவள் பின் சென்றனர். நான் என்ன கூறினேன்? தவறாக ஏதும் கூறவில்லை தானே? அவர் சிந்தித்தபடி தன் வேலையை தொடர்ந்தார்.

தாரிகா துகிராவை நிறுத்தினாள். அவர்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். ஆதேஷ் இருவரையும் இழுத்து வந்து, துகி அவங்களுக்கு என்ன தெரியும்? அவங்க அங்க வேலை பாக்குறாங்க. அவ்வளவு தான். மாமா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க.

இப்ப நினைச்சா தான் என்ன? என்று தாரிகா கேட்டாள்.

அவளை பார்த்த துகிரா, அவர் தங்கை போல் என்னை நினைத்தால் இருவரையும் ஒரே போல் தானே பார்ப்பார்.

அதனால் என்ன?

சீனியர் அவங்க அக்காவுக்கு சமமா உன்னை கவனிச்சா உனக்கு எப்படி இருக்கும்?

அதனால் என்ன?

அய்யோ..தாரி, உனக்கு புரியலையா? உனக்கான தனி இடம் அவர் மனதில் இல்லாமல் போய்விடும் என்று வருத்தமாக துகிரா கூறினாள்.

தனி இடமா?

ம்ம்..காதல் இல்லாது போகும் என்றாள்.

அது எப்படி இல்லாமல் போகும்?

நீ பட்டு தெரிஞ்சுக்கோ என்றாள் துகிரா.

துகி, மாமா அப்படியெல்லாம் இல்லை. உன்னை காதலித்து தான் அழைத்து வந்திருக்கார்.

அவர்கள் பேசுவதை கேட்ட தாரிகா கண்ணில் நீர் சொட்டியது. கவின் அவளுக்கு கொடுத்த காயம் அவளை இம்சித்தது.

அவள் அழுவதை பார்த்த ஆதேஷ் துகிரா அவளிடம் வந்து அவளை சமாதானப்படுத்தினர்.

துகி அவளை கிச்சுகிச்சு மூட்ட ஆதேஷும் சேர்ந்து கொண்டான். மூவரும் விளையாண்டு கொண்டிருக்க, தாரிகா சிரித்துக் கொண்டிருந்தாள்.

தன் பைக்கில் ஒரு பொண்ணுடன் வந்த கவின் அவர்களை கடந்து சென்றான். அவன் பின் அமர்ந்திருந்த பொண்ணு,

டியர் இங்க பாருங்களேன் ரோடென்றும் பாராது ஒருவன் இரு பெண்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றாள்.

எங்க ஊர் பசங்க அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டே அவர்களை பார்த்து வண்டியை திருப்பினான் கவின்.

என்ன ஆச்சு டியர்? எதுக்கு வண்டிய திருப்புறீங்க?

கவின் முகம் முதலில் பிரகாசமானது. முதன் முறையாக தாரிகாவை தாவணியில் பார்க்கிறானே? ரசித்துக் கொண்டே அவளிடம் வந்தான். அந்த பொண்ணு சும்மா இல்லாம..

டியர் இவங்கள உங்களுக்கு தெரியுமா? எல்லார் முன்னாடியும் இப்படி நடந்துக்குறாங்க? கொஞ்சம் கூட கூச்சமே இல்லை என்று அவள் பேச, ஆதேஷ் தாரிகாவை தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சிந்தனையே இல்லை. அவனுக்கு தவறாகவே தோன்றியது.