அத்தியாயம் 4

அர்ஜூன் வேகமாக நிவாஸ் அருகே ஓடி வந்தான்.அர்ஜூனை பார்த்து நிவாஸ் கவினிடமிருந்து விலகி, ஏன் அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க அன்றே வந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காதுல? ஏன்டா நமக்கு மட்டும் இப்படி நடக்குது? தேம்பி தேம்பி அழுதான்.

சாரிடா. நான் தாமதமாக வந்து விட்டேன். ஆனால் அவள் மீது இனி எவனும் கை வைக்க முடியாது. நான் பார்த்துகிறேன். நீ கஷ்டப்படாதே? அவனும் அழுதான். கவினும் அவர்களை கட்டிக் கொண்டான்.

என்னடா இதெல்லாம்? தீனா பிரதீப்பை பார்க்க, அவனும் கண்கலங்க ஸ்ரீயை பார்த்தான். ஆருத்ரா அண்ணன் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தான். ஆனால் டீனுக்கு தான் ஏற்கனவே தெரிந்திருக்குமே? மாதவும் அவங்கள சும்மா விடக் கூடாது என்று கோபப்பட்டான். வெளியே அழுகுரல் கேட்டு வெளியே பிரதீப் வந்தான். சைலேஷும் நித்தியும் இருந்தனர்.

நித்தி அனைத்தையும் கேட்டு விட்டாள். சைலேஷை அணைத்துக் கொண்டு அழுதாள். பின் அவனை நிமிர்ந்து பார்த்து, உங்களுக்கு தெரியுமா? கேட்டாள். அவன் தலையசைக்க, அவள் மெதுவாக அந்த அறைக்கு முன் வந்தாள்.

ஸ்ரீ நித்தியை பார்த்து அழுதவாறு எழுந்தாள். ஸ்ரீ..என்று நித்தி அவளருகே வர, ஸ்ரீயும் அவளை நோக்கி ஓடி வந்து கட்டிக் கொண்டு, என்னை உயிரோட புதைச்சுட்டாங்க நித்து என்று அழுதாள்.

சிறு வயது ஸ்ரீ நித்தியை நித்து என்று தான் அழைப்பாள். ஆனால் நித்தியால் அதை கூட சரியாக கவனிக்க முடியவில்லை. இருவரும் கட்டிக் கொண்டு அழ ஸ்ரீக்கு ஆருத்ரா நினைவு வர நித்தியை பிரித்து,

சீனியர்..ஆரு..ஆரு..என்றாள்.

யாரு ஸ்ரீ ஆரு? நித்தி கண்ணை துடைத்துக் கொண்டு கேட்டாள்.

பேச நேரமில்லை என்று ஆருத்ராவின் அப்பாவிடம் சார்,..அந்த மூன்று இடமும் எங்கு இருக்கிறது? கேட்க, அவங்க தான் போகணும். நேரம் குறைவா இருக்கு என்று கம்மிய குரலில் அவர் கலங்கினார்.

இல்லை. அவளுக்கு ஒன்றும் ஆகாது என்று சிசிடிவியை பார்த்தால் ஸ்ரீ மூவரையும் பார்த்தாள்.அவள் கண்கள் கலங்கியது. கண்களை அவசரமாக துடைத்து அர்ஜூனிற்கு போன் செய்தாள். மூவரும் சுயம் வந்தனர்.

அர்ஜூன் நேரமில்லைடா..ஆருவை காப்பாற்றணும் அவரிடம் கேட்டு வைத்த இடத்தை மூவருக்கும் ஒவ்வொரு இடமாய் பிரித்து போகச் சொன்னாள்.

நாங்களும் செல்கிறோம் என்று பிரதீப் தீனாவும், சைலேஷ் மாதவும், ஆருத்ரா அண்ணனும் கிளம்பினார்கள்.

அர்ஜூன் ஸ்ரீ சொன்ன இடத்திற்கு சென்று பார்க்க, அங்கே ஆரு இல்லை. கவின் சென்ற இடத்திலும் ஆரு இல்லை. நிவாஸ் கதவை திறக்க உள்ளே ஒருவன் ஆக்சிஜன் மாஸ்க்கை போட்டவாறு இருந்தான். சற்று தள்ளி ஆருத்ரா மயங்கி இருந்தாள். அங்கு புகைமூட்டத்துடன் இருக்க அவள் முகம் தெளிவாக தெரியவில்லை.

நிவாஸை பார்த்தவன் வேகமாக ஆருத்ராவை கத்தி எடுத்து கொல்ல வந்தான். அவன் கையை பிடித்து தடுத்த நிவாஸை தள்ளினான் அவன். மீண்டும் கத்தியை அவளருகே கொண்டு செல்ல, நிவாஸ் மீண்டும் தடுக்க இம்முறை ஆருத்ரா கையில் கத்தி கிழித்து இரத்தம் வர, அவளும் விழித்தாள். நிவாஸ் பதறி அவனை அவளை விட்டு தள்ளி இழுத்தான். ஆனால் அந்த இளவட்ட பாடிபில்டரை சமாளிக்க அவனால் முடியவில்லை. ஸ்ரீ நினைவில் பேச்சும் வரவில்லை.

ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தவன், அவனை முழுமூச்சாய் பிடித்து தள்ளினான். அவள் நிவியை பார்த்து மயக்கத்தில் நிவியா? கேட்டாள்.

அவள் பக்கம் வந்து அவளை தூக்கி எழ வைத்தான். நிவி நீயா? என்று அவனது கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.

நான் தான். வா..என்று அவளை வெளியே அழைத்து செல்ல முற்பட்டான். அந்த பாடி பில்டர் அவனை தாக்க வர ஆருத்ராவை தன்னுள் இணைத்தவாறு அவனிடமிருந்து நம் மான் கராத்தே பீட்டர் போல் தப்பி தப்பி வெளியே வந்தான்.

ஆனால் நிவி எதிர்பாராத நேரத்தில் அவன் நிவியை அடிக்க ஒரு கை தடுத்தது. ஆருத்ராவின் அண்ணன் வந்தான்.

யார் மேல கை வைக்கிற? அவன் பாடி பில்டருக்கு இணையாக சண்டையிட, அர்ஜூனும் கவினும் ஒன்றாக வந்தனர்.

பாடி பில்டரோ சிரிப்புடன் தப்பிச்சுட்டான்னு சந்தோசமா? என்று அவன் அவள் அண்ணாவிடம் வினவ, ஆருத்ரா வாயிலிருந்து இரத்தம் வடிந்தது. மூச்சு விட சிரமப்பட்டாள்.

அர்ஜூன் அவனை அடித்து விட்டு, என்னடா செஞ்சீங்க?

வீரியம் அதிகமுள்ள ஹைட்ரோ குளோரிக் அசிட் கொடுத்திருக்கோம். இன்னும் பத்தே நிமிடம் தான். அவ சாகப் போறா? என்றான்.

டேய்..ராஸ்கல் ஆருத்ரா அண்ணன் அவனை அடிக்க, நிவாஸ் அவளை தூக்கிக் கொண்டு ஓடினான்.

நான் பார்த்துக்கிறேன் டா நிவி. உனக்கு  கை வலிக்கப்போகிறது. நேற்று தான் கட்டை பிரிச்சாங்கடா கவின் கத்த, அவன் கேட்பதாக இல்லை.

அவள் வாயிலிருந்து அதிக அளவு இரத்தம் வடிந்தது.

ஏய்..என்ன ஆச்சு? என்று பதறினான் நிவி.

நான் உன்கிட்ட பேசணும்டா. அதுவரை சாக மாட்டேன்டா என்று அவனை சந்தித்தது. அவளுக்கு அவன் மீது காதல் வந்தது. அவன் பின் சுற்றியது. மெசேஜ் செய்தது. கடைசியாக அர்ஜூனிடமும் அண்ணாவிடமும் மாட்டியது பற்றி கூறி விட்டு, நிவி என்னோட அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அண்ணாவுக்கும் உன்னை பிடித்து விட்டதுன்னு சொன்னாங்க. அப்பாவுக்கும் பிடிக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க. அதான் உன்னை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தேன். ஆனால் அதற்குள் அவன் என்னை கடத்திட்டான்.

நிவி அந்த அறையின் உள்ளிருக்கும் மற்றொரு அறையில் தான் அந்த கபாலீஸ்வர் டாக்டர் இருக்கார். முதல்ல அவரை பிடிக்க சொல்லுடா. அப்புறம் போகலாம் அவள் பேச, அங்கு வேலை செய்பவர்கள் தன் முதலாளியம்மா வாயில் இரத்தமுடன் ஒருவன் அவரை காப்பாற்ற செல்வதை பார்த்து கத்தினார்.

அனைவரும் நிவாஸிடம் சிகிச்சை செய்ய தயாராக இருக்கும் அறையை காட்டினார்கள். நிவி “ஐ லவ் யூ”டா. நான் தாமதமாக என் காதலை கூறி விட்டேன்.

உங்க பிரச்சனை முடிந்து தான் உன் முன் வந்து என் காதலை கூற நினைத்தேன். ஆனால் அதற்குள் கூறும்படி ஆகி விட்டதுடா.

ஸ்ரீயிடம் நடுஇரவில் பேசும் போது நீ அங்கே தானே இருந்தாய்? கேட்டான்.

ம்ம்..அப்பொழுது மட்டுமல்ல கார்டன் ரெஸ்டாரண்ட் அக்கா கீழ விழும் போது அர்ஜூன் அவங்கள பிடிச்சானே.. அப்பொழுதும், பின் நீங்க இருக்கும் எல்லா இடத்திலும் தாரிகா வீட்டிக்கு சென்ற போதும். வினிதா அக்கா பாப்பா பிறந்த நாள் விழா அவள் கூற, நிவிக்கு கண்ணீர் சுரந்தது.

நிவி எனக்கு முத்தம் தாரியா என்று நெற்றியை காட்டினாள். ஆழ்ந்து சுவாசித்தவன் அந்த அறைக்குள் சென்று ஆழ்ந்து சுவாசித்து அவளை படுக்கையில் போட்டு உனக்கு ஒன்றுமாகாது என்று அவளது நெற்றியில் முத்தமிட்டாள். அவளும் மயங்க,டாக்டர்..டாக்டர்..என்று கத்திக் கொண்டே வெளியே வந்தான்.

தம்பி டாக்டர் உள்ளே தான் இருக்காங்க.

உள்ளே வா? என்று எட்டிப் பார்த்தான். சுற்றியிருந்தவர்களை மறந்து அவளிடம் பேசி முத்தமும் கொடுத்ததை நினைத்தவன், பதட்டமுடன் அவளுக்காக அமர்ந்திருந்தான்.

ஆருத்ரா அண்ணன் போனில் தன் டாக்டர் நண்பனிடம் கூறி ஏற்கனவே அனைத்தையும் தயார் செய்து விட்டான்.அனைவரும் அங்கே வந்தனர். நிவாஸிற்கு அப்பொழுது தான் கையும் காலும் வலிக்க ஆரம்பித்தது. ஆருத்ரா கூறியது மட்டும் அவனுக்கு ஒலித்துக் கொண்டே இருந்தது.

மாதவ் கீழே வரும் முன் தன் போலீஸ் ஆட்களுக்கு விசயத்தை சொல்லி இருப்பான். அதே போல் கவின் நிவி பின்னே ஓடி வந்ததால் அந்த கபாலீஸ்வர் டாக்டர் இருப்பிடத்தை அர்ஜூனிடம் கவின் கூறினான். அதனால் அந்த பாடி பில்டரையும்,டாக்டரையும் கைது செய்தனர்.

மற்றவர்கள் ஆருத்ராவை பார்க்க வந்தனர்.நிவாஸ் இடிந்து அமர்ந்திருந்தான். ஸ்ரீயும் அவன் பக்கம் அமர்ந்தாள். நிவி அவள் பேசியதிலே சுழன்று கொண்டிருந்தான். அவன் மனதில் சூறாவளி அடித்தது. எனக்கும் அந்த பொண்ணை பிடித்து விட்டதோ?

ஆனால் அவள் அப்பா..அதெல்லாம் சமாளிக்கலாம் என்று மனது கூற,அவன் காதல் கண்ணீர் வடித்தான். டாக்டர் வெளியே வந்து, சாரி உங்க பொண்ணை காப்பாற்ற முடியல என்று சொல்ல, நிவி அழ ஆரம்பித்தான். சற்று முன் மலர்ந்த காதல் என்னை விட்டு சென்று விட்டதா? மனதில் நினைத்தாலும்..வெளியே நேரடியாக கூறாமல்,

நீ காதல்ல சொல்லி கொஞ்ச நேரம் கூட ஆகல. அதுக்குள்ள என்னை விட்டு போயிட்டியா? என்று கதறினான். ஆனால் யாருடைய சத்தமும் கேட்காது இருக்க நிமிர்ந்து பார்த்தான் நிவாஸ்.

ஸ்ரீ அவன் முன் கை கட்டியவாறு இருக்க, அர்ஜூன் ஸ்ரீ பின் நின்று நிவாஸை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வலப்புறம் ஆருத்ரா அம்மா, அப்பா இருக்க, அவர்கள் அருகே அவளுடைய அண்ணன் நிவாஸை பார்த்து கண்கள் மின்ன ஆச்சர்யத்தோடு நின்றான்.

இடப்புறம் கவின், ஆதேஷ் பொண்ணுங்க, தீனா, பிரதீப், மாதவ், யாசு எல்லாரும் இருக்க, நான் தான் செத்து போயிட்டேனா? நிவாஸ் கண்களை கசக்கினான்.

சிரிப்பலைகள் அங்கே பரவ,..தடிமாடு யாரும் சாகல? என்று தாரிகா நிவாஸை திட்ட, தாரி நீயா?அவன் தலையில் ஓங்கி ஓர் அடி போட்டாள் ஸ்ரீ.

அம்மா.. கத்தி விட்டு, கண்ணை கசக்கி எல்லாரும் நல்லா இருக்கீங்கள? கேட்டவன் பட்டென எழுந்து ஆருத்ராவை வைத்திருந்த அறைக்கு செல்ல, அவள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து இவனை தான் பார்த்து புன்னகையுடன் அமர்ந்திருப்பாள்.

அவன் ஓடி வந்து அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, அவளுக்கு ஒரே சந்தோசம்.” ஐ லவ் யூ” நிவி என்றாள். நான் என்று தடுமாறியவனுக்கு ஸ்ரீ நினைவு வர, சட்டென அவளை விடுத்து வெளியே வந்தான். அர்ஜூன் அவனை தடுத்து நிவி தோள் மீது கை போட்டுக் கொண்டு உள்ளே அழைத்துச் செல்ல, ஆருத்ரா கண்ணீருடன் இருந்தாள்.

நிவாஸ் அவள் கண்ணீரை பார்த்து, அவளருகே சென்று துடைக்க போனான்.

அர்ஜூன் அவனை தடுக்க உள்ளே வந்தார் ஆருத்ராவின் அப்பா.

நீ என் புள்ளைய நல்லா பார்த்துப்ப.ஆனால் உன் படிப்பும் சரியில்லை. நீ இருக்கும் இடமும் சரியில்லை. நீ உன் பிரச்சனையை முடிச்சுட்டு வா..அப்புறம் என் பொண்ணு பக்கம் வரலாம்.

அவன் அமைதியாக இருக்க, அப்பா..என்றாள் ஆருத்ரா.

அவர் சொல்றது சரி தானே நிவி அர்ஜூன் கேட்க, அவன் அர்ஜூனை பார்த்தான். உங்க ஆன்ட்டி பற்றி உனக்கே தெரியும். அவள் எதற்கு வீடியோ கால் செய்து ஸ்ரீக்கு நடந்ததை காட்டினால் என்று புரிந்ததா? நான் அவளை விட்டு செல்ல வேண்டும்.

நீங்க எப்பொழுதும் போல் இருங்க. பிரச்சனை முடிந்த பின் நீ ஆருத்ராவை சந்திக்கலாம். ஆரு உனக்கு உடல் சரியானால் எப்பொழுதும் போல் அவனை பின் தொடர்வது போல் நடி என்றான். நிவி நீயும் காட்டிக் கொள்ளக் கூடாது என்றான் அர்ஜூன்.

அவன் தலையசைத்து விட்டு கதவை திறக்க, அர்ஜூன் நாம வெளிய காத்திருப்போம்.அவங்க பேசிக்கட்டும் என்று நழுவினார் ஆருத்ராவின் தந்தை. அர்ஜூனும் வெளியே சென்றனர்.

நிவி என்று அழைத்துக் கொண்டே காலை கீழே வைத்தாள் ஆரு.

நிவி அவள் விழுந்து விடுவாளோ என்று அவளருகே வர, நீ வராதே. நானே வாரேன் என்று பொறுமையாக அவனருகே வந்து, நான் உன்னை ஒரு முறை கட்டிக் கொள்ளவா? கேட்டாள்.

அவன் கையை விரிக்க, தாவி அவனை அணைத்துக் கொண்டு, இன்னும் ஒரு வருசத்துக்கு இது போதும் நிவி என்றாள்.

எனக்கு எல்லாமே ஸ்ரீ தான். அவளுக்காக உன்னை பிடித்து விடலை. அந்நிலையில் நீ பேசியது என்னுள் காதலை வர வைத்து விட்டது. இப்பொழுது வரை உன்னுடைய அந்த பேச்சு இன்னும் கூட காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாங்க சீக்கிரம் எங்க பிரச்சனையை முடிச்சிட்டு வாரோம்.

உன்னிடம் ஒன்று கேட்கணும் அவள் கேட்க, அவன் அவளது கூந்தை ஒதுக்கிக் கொண்டே கேளு என்றான். உன் அக்காவிற்கு என்ன நடந்தது?

ப்ளீஸ் இதை மட்டும் கேட்காதே? என்னால முடியல என்றான். அவள் மேலும் அவனை அணைத்து, எல்லாமே சரியாகிடும் என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

நாம பார்க்கலாம் என்று அவன் அவளை விட்டு விலக, ஒரு நிமிடம் நில்லு நிவி என்று மீண்டும் மெதுவாக வந்து, அவனது இதழ்களில் மென்மையான தன் இதழ்களை ஒற்றி எடுத்து விட்டு, பின் திரும்பி அவள் படுக்கைக்கு சென்றாள்.

“லவ் யூ ஆரு” என்று வெளியே சென்றான்.

வெளியே அர்ஜூன் வர, கவின் அவனிடம் அகிலை இன்னும் காணோம் டா என்று கூற, அர்ஜூன் பதறி போன் செய்தான். பவி வீட்டில் அவனுக்கு விருந்தோம்பல் நடந்து கொண்டிருந்தது.

அர்ஜூன் போனை எடுத்து, சொல்லுடா என்றான் கூலாக.

எங்க இருக்க? என்ன பண்ற? அர்ஜூன் கோபமுடன் கேட்க, நான் பவி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்டா. நீயும் வாரியா அர்ஜூன்?

பைத்தியம் எருமை மாடே..மாடே..அர்ஜூன் திட்டி விட்டு, அபியை கொல்ல பார்த்தானுக..இங்க கலவரமே நடக்க, உனக்கு விருந்து கேட்குதோ? கத்தினான்.

அகிலுக்கு புரை ஏற பவி அம்மா அவன் தலையில் தட்டி விட்டு, சாப்பிடும் போது எதுக்கு போன்? கேட்க,

அச்சோ ஆன்ட்டி, அதை கொடுங்க..அபிக்கு என்ன ஆச்சுடா? பதறினான்.

நீ ரொம்ப லேட்டுடா..அவன் இப்பொழுது ஓ.கே என்றான். இருடா நான் வந்துடுறேன்.

அகில் நீ ரொம்ப சமத்தா பேசுற? கோபமா தானடா என்னிடம் பேசுவ? இப்ப என்ன ஆச்சு?

ரொம்ப முக்கியம். இப்பவே வந்துடுவேன் என்று கிளம்பினான். போனை துண்டித்த அர்ஜூன், என்னடா ஆச்சு இந்த அகிலுக்கு? எப்ப அவன் பவி வீட்டுக்கு போனான்.

பவி வீட்டுக்கா? அவன் என்னிடம் சொல்லவில்லை நித்தி கேட்க, யார் பவி? கேட்டாள் ஸ்ரீ.

அகிலோட ப்ரெண்டு. அவனோட ரசிகை என்றாள். நிவாஸ் அப்பொழுது தான் வெளியே வந்தான்.

என்னடா நிவி எல்லாருக்கும் பின்னே வந்து முன்னே ஆள பிடிச்சுட்ட? ஸ்ரீ கிண்டல் செய்ய, அவளை முறைத்து விட்டு அமர்ந்தான்.

சும்மா இரு ஸ்ரீ என்று அர்ஜூன் நிவாஸ் அருகே அமர்ந்தான்.

அர்ஜூன் உன்னோட திட்டம் சரியா நடக்குமா? கேட்டான்.

பிரதீப் நிவாஸிடம் வந்து, எல்லாமே ஆரம்பிக்கலாம் என்று அர்ஜூனை பார்த்து ரெசார்ட் பொறுப்பு நம்ம கைக்கு வந்தாச்சு. அர்ஜூன் நீயும் ஊருக்கு வந்து பார்த்தா நல்லா இருக்கும் என்றான்.

நான் எப்படி வர்றது?அர்ஜூன் தயங்கினான். ஸ்ரீ அர்ஜூனை பார்த்து, நீ போய்ட்டு வா..என்றாள்.

எதுக்கு திரும்ப அங்க ஓடிப் போக திட்டம் போட்டுருக்கிறாயா? அர்ஜூன் கேட்க, நிவாஸ் அர்ஜூனிடம் அவளையும் சேர்த்து கூட்டிட்டு போ.

முடியாது நிவி. அது கஷ்டம்..எல்லாரும் அவளை பார்த்தால் அவளது பெற்றோரை பற்றி கேட்பாங்க. சொன்னா எல்லாமே தெரிய வரும் அர்ஜூன் கூற,

தெரிஞ்சா உதவி செய்ய மாட்டாங்களா?

உதவியா? பிரதீப் பேச ஆரம்பிக்க, அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து விட்டு..நிவி அதை விடேன் என்றான் சலிப்பாக.

அர்ஜூன் தீனாவிடம், அண்ணா..நான் உங்களிடம் பேசணும் என்று எழுந்து சென்றான்.