அத்தியாயம் 1

பப்ளி செல்லம்மா..உனக்காக தான் உன்னுடன் நேரம் செலவழிக்கவில்லை. கோபிச்சுக்காதடா.. மாமா பாவம்ல.. மாதவ் கொஞ்சி பேசினான்.

மாமாவா? போடா..எங்க கல்லூரி பிரசின்ட்டுக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் அவனுக்கு ஓ.கே சொல்லிக்கிறேன் என்று அழுது கொண்டே,.போ என்றாள் யாசு.

சைலேஷ் அருகே வந்த மாதவ், டேய்..உனக்கு தெரியும் தானே? எனக்கு எத்தனை பகைவர்கள் இருக்கிறார்கள்? சொல்லுடா என்று அவனை பார்க்க, சைலேஷ் ஸ்ரீ பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான் அவளை பார்த்தவாறு.

அவனை பார்த்த யாசு ஸ்ரீயை பார்த்தாள். அவள் வியர்வையில் குளித்தவாறிருக்க, அங்கிருந்த சிலர் யோசனையில் இருக்க, அர்ஜூன் முகம் கடுத்தவாறு இருந்தது.

ஸ்ரீ அருகே சென்று, என்ன ஆச்சு ஸ்ரீ? உனக்கு இப்படி வியர்க்கிறது? ஏதும் பிரச்சனையா? அவள் கேட்க, ஸ்ரீ, பிரதீப், கவினும் சுயம் வந்தனர்.

நித்தி சைலேஷை உலுக்க, அர்ஜூன் மட்டும் அவனறைக்குள் சென்றான். இரண்டே நிமிடத்தில் வெளியே வந்து ஸ்ரீயை பார்த்தான். அவள் வேகமாக எழுந்தாள். ஏதும் பேசாமல் தீனா, மாதவிடம் சென்று ,நான்  உங்களிடம் பேச வேண்டும் என்று அகிலிடம் திரும்பி நானே அதையும் பார்த்துக் கொள்கிறேன்.

நீ போனை ஆன் செய்ததால் எனக்கு அனைத்தும் தெரிந்து விட்டது.

செட்.. என்று அகில் அர்ஜூன் நானும் வாரேன் என்று அவன் பின் செல்ல, அர்ஜூன் அவனது லேப்பை எடுத்துக் கொண்டு அவர்களுடன் வெளியே வந்தான்.

மாதவோ யாசுவை பார்த்துக் கொண்டு அர்ஜூனிடம், என்ன பேசணும்? நாம் அப்புறம் பேசலாமா? முதலில் பப்ளியை சரி செய்து விட்டு வருகிறேனே?

அர்ஜூன் அவனுக்கு வழி விட, யாசு புரியாமல் இருந்தவள் மாதவை பார்த்து என்னருகே வந்த அவ்வளவு தான்? என்று கோபமாக அவளது மென்மையான உள்ளங்கையை வைத்து தடுத்தாள்.

டேய்..சொல்லுடா சைலு. என்னை சுற்றி நிறைய எதிரிகள் உள்ளனர். நான் பேசுவது தெரிந்தால் கூட உனக்கு ஆபத்து வரும் மாதவ் கூற,

சைலேஷ் கோபமாக, உன்னோட பப்ளியும் ஆபத்தில் தான் இருக்கிறாள். அவள் தனியே சென்றால் அவர்கள் கொல்லாமல் விட மாட்டார்கள்.

என்னடா சொல்ற? யார் அவளை கொல்லப் போகிறார்கள்? மாதவ் யாசுவை பார்க்க,

ஆமாம் சார். எங்க எல்லாரோட உயிருக்கும் ஆபத்து தான் ஆதேஷ் கூறினான். அவன் போலீஸ் உடையில் தான் வந்திருப்பான். தீனாவிற்கும் அவனை தெரிந்திருக்காது. யாசு அவன் மீது கோபப்படுவதை பார்த்து அறிந்து கொண்டான்.

சார், அதை நாங்க பார்த்துக் கொள்கிறோம் அர்ஜூன் கூற,

அப்ப..அதை கூற நீ என்னை அழைத்து வரவில்லை. அப்படி தானே? தீனா சினத்துடன் கேட்டான்.

ஆமாம் சார். நான் எங்க பிரச்சனைக்காக அழைக்கவில்லை என்று மாதவிடம் வினிதா அக்கா கணவர் இறப்பை பற்றி பேசினான். தன் லேப்பை எடுத்து, அதில் அவன் சேகரித்த விசயத்தை காட்ட, மாதவோ இதை விட வலிமையான சாட்சி வேண்டும். இதில் அவன் முகமே தெரியவில்லை.

ஆமாம் சார். சிசிடிவி பார்க்கலாமே?

அதை யாரோ திரும்பி எடுத்து பார்க்க முடியாத வண்ணம் முழுவதுமாக அழித்துள்ளான்.

சார்..கொலை செய்தவன் கண்டிப்பாக ஏதாவது தடயத்தை விட்டு தான் சென்றிருப்பான்.எனக்கு தெரிஞ்ச பசங்களை அனுப்புகிறேன்.சிசிடிவியை காட்டுங்க. அவங்க அதில் கில்லாடிகள். நாளை உங்களை பார்க்க வரச் சொல்கிறேன் அர்ஜூன் கூற, மாதவ் ஒத்துக் கொண்டான்.

அகில் மாதவிடம், நீங்க அவளுடன் இருப்பது பாதுகாப்பு தான். மற்ற நேரம் நண்பர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

யாசு அழுது கொண்டே வெளியே செல்ல, யாசு போகாதேன்னு அர்ஜூன் கத்த, அவள் வெளியே சென்று விட்டாள். அங்கே பைக்கில் வந்த ஒருவன் கத்தியை நீட்டிக் கொண்டே வந்தான். அது யாசு கழுத்தை பதம் பார்ப்பதற்குள் தீனா அவளை பிடித்து தள்ள அவள் பயந்து அம்மா..என்று கத்த, அவளை தாங்கினான் மாதவ்.

செட்..என்று வேகமாக அர்ஜூன் அவர்களருகே ஓடி வந்தான்.

தீனவோ புயலென அங்கிருந்த ஒரு பைக்கில் அவனை விரட்டி சென்றான். ஆனால் அவனோ தீனாவையே ஏமாற்றி ஓடி விட்டான்.

அண்ணா..நோ என்று அர்ஜூன் கத்த, யாரு அவன்? என்று சத்தமிட்டான் மாதவ். யாசு பயந்து அவனுள் ஒட்டி இருக்க, நித்தி ஸ்ரீ தாரிகா அவளிடம் ஓடி வந்து அவளை உள்ளே அழைத்து சென்றனர்.

கவின் கயலை பற்றி கூறித் தொடங்க அதற்குள் சென்ற தீனா அங்கே வந்து சேர்ந்தான். அவனும் கோபமாக அர்ஜூனிடம் கேட்க, கயலை பற்றி கவின் கூறினான்.

எப்படிடா? நீங்க சமாளிப்பீங்க? மாதவ் அவர்களிடம் கோபப்பட, தீனா பிரதீப்பை பார்த்து உனக்கு தெரிந்தும் கூறவில்லை என்று பல்லை கடித்தான்.

அர்ஜூன்..அபி இன்னும் கால் பண்ணலடா. அவங்க அப்பொழுதே கிளம்பினாங்க என்று கவின் கூற, மற்றவர்களை பயம் தொற்றிக் கொண்டது.

அபிக்கு அர்ஜூன் கால் பண்ண அவன் போனை எடுத்தான் முணங்கும் சத்தத்துடன்.

டேய்..என்னடா ஆச்சு? அர்ஜூன் பதற, மற்றவர்களையும் பயம் பிடித்து கொண்டது. பக்கத்தில் இன்பா அழும் சத்தம் கேட்டது.

அபி போனை மேம்மிடம் கொடு என்றான். இன்பா பதற்றத்துடன் அர்ஜூனா? அர்ஜூன்..அபியை கத்தியால் குத்திட்டாங்கடா என்று அழுதாள்.

அர்ஜூன் கண்கள் கலங்க, எங்க இருக்கீங்க மேம்?

ஹாஸ்பிட்டலுக்கு கொஞ்சம் தள்ளி தான்டா என்று அவளது நடனாலயாவில் அபியை சந்திந்த அந்த அண்ணன் தங்கை ஏதோ பிரச்சனையில் இருப்பதாக அவர்கள் மருத்துவமனை வந்தவுடனே இன்பாவிற்கு தெரிய வர இருவரும் கிளம்பினர்.

ஆனால் செல்லும் வழியில், யாரோ சிலர் அவர்களை மடிக்கி அபி இன்பாவை கொல்ல வந்தனர். அபி தடுத்து நன்றாக தான் சண்டையிட்டான். ஆனால் அவன் அசந்த நேரம் பார்த்து ஒருவன் அவனது வயிற்றை கிழித்து விட்டு சென்றான்.

அர்ஜூன் யாருமே கெல்ப் பண்ண மாட்டிக்கிறாங்கடா? அழுது கொண்டே அவள் கூற,

அபி போனை வாங்கி, எனக்கு ஒன்றுமில்லை அர்ஜூன்.. என்று அவன் எழ, இன்பா அவனது இடுப்பில் கையை போட்டு அவனது கையை அவளது தோளில் போட்டு, அபியிடம் போனை பறித்து, அர்ஜூன் அந்த பசங்களை மட்டும் பாரேன் என்று அழுது கொண்டே, அபி உன்னால நடக்க முடியும் தானே? என்று அவனை பார்த்தாள்.

அவன் அவளது கண்களை பார்த்து, உங்களுக்கு என் மீது காதல் உள்ளது தெளிவாக தெரிகிறது மனதில் நினைத்துக் கொண்டு ம்ம்..என்றான்.

ஆனால் அவனால் எட்டு வைக்க முடியவில்லை. குத்து பட்ட வலக்காலை அசைக்க முடியாது தடுமாறினான். அவள் அவனது அந்த காலை அவளது கால் மீது வைத்து மெதுவாக அவனை அழைத்துச் செல்ல, மேகம் திரண்டு மின்னல் வெட்ட, மழை பொழிய ஆரம்பித்தது.

இன்பாவிற்கு, மழை மின்னல் ஏதும் பெரியதாக படவில்லை. அபி அவளை ரசித்துக் கொண்டே நடக்க, அவள் அருகாமை அவனது வலியை குறைத்தது போல் ஆஸ்வாசப்பட்டான். இன்பாவின் மனமோ அடித்துக் கொண்டது. இன்பாவின் அவனுக்கான அழுகை கூட அபிக்கு பிடித்தமாயிற்று. எப்படியோ மருத்துவமனைக்குள் நுழைய, போலீஸ் கம்பிளைண்ட் இல்லாமல் அவரை பார்க்க மாட்டோம் என்று இன்பாவிடம் கூற,

அவள் கோபத்தில், என்ன மனுசங்க நீங்களாம் என்று அவளது சத்தம் மருத்துவமனை முழுவதும் எதிரொலிக்க, இதயா,அவளது அம்மா ஓடி வந்தனர்.

அபியை பார்த்த இதயா, அபி என்று கலங்கி அவனை பார்த்தால் அவன் சரிந்து அமர்ந்திருந்தான். அவர்களது அம்மா அவனருகே செல்ல, இதயா அவளது அக்கா அருகே சென்றாள்.

இதயாவை பார்த்து இன்பா, அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நிவாஸ் நொண்டிக் கொண்டே அங்கு வந்து, மேம் என்ன நடக்குது? கேட்டான். அவள் மேலும் அழுதாள்.

நிவாஸ் கோபமாக, உங்க டீன் எங்கே? என்று கத்தினான்.

அர்ஜூன் வீட்டில் அவன் அபிக்கு நடந்ததை கூற, பிரதீப் நான் மாப்பிள்ளைய பார்த்துக்கிறேன் பதட்டப்பட, நான் ஹாஸ்பிட்டல் செல்கிறேன் மாதவ் சொல்லி விட்டு அவனை சேர்க்க கண்டிப்பாக கம்பிளைண்ட் பைல் செய்ய சொல்வாங்க. நான் செல்கிறேன்.நானும் வருகிறேன் என்று பிரதீப் கூற,

நோ..அண்ணா. நீங்களும் தீனா அண்ணாவும் அந்த பசங்கள பார்க்க போங்க..சீக்கிரம் என்று அவர்களை அனுப்பி விட்டு, மாதவ் சாருடன் கவின் நீ போ. நான் இங்கே இருக்கிறேன் அர்ஜூன் திரும்பி ஸ்ரீயை பார்த்தான்.

எல்லாருக்கும் அர்ஜூன் செய்கை புரிய, ஸ்ரீயை கண்காணித்தனர். மாதவும் கவினும் செல்ல, அர்ஜூன் லாக்கை போட்டு விட்டு உள்ளே வந்தான்.

அர்ஜூன்..ஸ்ரீ..டா? நித்தி கேட்க, அவள் வீட்டினுள் இல்லை. அர்ஜூன் மீண்டும் கோபமாக ஸ்ரீ என்று கத்தினான்.

ஸ்ரீ அழுது கொண்டே, என்னால தான் இப்பொழுது கொல்லப்படுகிறார்கள். நான் அவர்களை சும்மா விடக் கூடாது என்று ஆட்டோ ஒன்றில் ஏறி, கயல் வீட்டை அடைந்தாள்.

இரவு ஏழு மணி. அவள் கயல் வீட்டை திறந்து கொண்டு, ஏய் வெளிய வாடி? கத்தினாள்.

கயலோ, என்னம்மா..மரியாதையெல்லாம் குறையுது? திண்ணக்கம்மாக பதில் வர, ஸ்ரீ கொதித்து போனாள்.

வேகமாக அவளருகே வந்து, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? எத்தனை பேர கொல்ற? நீ மனுசியா? ராட்சசியா? என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு ஏதாவது ஆச்சு உன்னை கொல்லாமல் விட மாட்டேன்.

நான் என்ன செய்தேன்? யாருக்கு என்ன? புரியாதது போல் கேட்க, என்னிடமே நடிக்கிறாயா?

நடிக்கிறேனா? இல்லையே? நான் ஏதும் செய்யவில்லை.

ஜிதின் ஸ்ரீயை பார்த்து, நம்ம வீட்டுக்கு வந்து விட்டாயா? அவளை அணைத்தான். அர்ஜூன் சரியாக அங்கே வந்து இருவரையும் பார்த்து கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

அமைதியாக அவன் அணைப்பை ஏற்ற ஸ்ரீ, சட்டென அவனை தள்ளி, அவனது கழுத்தை நெறித்தவாறு அப்படியே தூக்க, அர்ஜூனும் கயலும் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். ஜிதின் கதறியவாறு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

அர்ஜூன் வேகமாக உள்ளே வந்து, ஸ்ரீ..என்று கத்தினான். அவளை அவனால் அசைக்க கூட முடியவில்லை விட்டால் ஜிதின் செத்திருப்பான். ஏதோ உணர்ந்தவனாக, குட்டிம்மா..என்று அழைத்தான். அவள் மெதுவாக அவனை தளர்த்த,

அர்ஜூன் மீண்டும் அவள் அப்பா, அகில் அப்பா அழைப்பது போல் குட்டிம்மா..குட்டிம்மா..என்று அவளை உலுக்கினாள். அப்பா..என்று அவள் ஜிதினை விட்டு அழுதாள். பின் அர்ஜூனை பார்த்து,

ஏதோ கூற வந்து தலையை உலுக்கி, அ..அர்ஜூன் எனக்கு ஏதோ பண்ணுதுடா? எனக்கு என்ன ஆச்சுடா? என்னால முடியலடா..அர்ஜூன் ஏதோ பண்ணுது பயந்து ஸ்ரீ அர்ஜூன் மீது சரிய, அவளை தாங்கிய அர்ஜூன் அப்படியே மண்டியிட்டான்.

அவளை மடியில் போட்டு கைகளில் தாங்கியவாறு, உனக்கு ஒன்றுமில்லை ஸ்ரீ. நீ தேவையில்லாம எதையும் யோசிக்காத? உனக்கு நானிருக்கேன் என்றான்.

அவள் அவன் பேசியதை கேட்டுக் கொண்டே கண்ணை மூடி பேச முடியாமல் தட்டுத் தடுமாறி என்னை விட்டு எங்கேயும் போகாதேடா? நீ என் பக்கத்திலே இரு அர்ஜூன் என்று அவனது கைகளை பிடித்து தன் கைக்குள் கோர்த்துக் கொண்டாள்.

உன்னை விட்டு நான் எங்கே போவேன் ஸ்ரீ ? எங்கேயும் போக மாட்டேன் என்று ஸ்ரீ நம்ம வீட்டுக்கு போகலாமா? அர்ஜூன் கேட்க,..ம்ம் என்று ஒற்றை பதில் மட்டுமே அளித்தாள் ஸ்ரீ.

அவளை அவன் தூக்க, அவன் கைகளை விடுத்து அவனது கழுத்தை மாலையாய் கட்டிக் கொண்டு, அர்ஜூன் இங்கே பிடிக்கலை.எனக்கு வேண்டாம்.வீட்டுக்கு போகணும்.

அவளது பிறை நெற்றில் இதழ் பதித்து விட்டு, கயல் ஜிதினை முறைத்தான். உனக்கு என் கையால் சாவு என்று கயலை பார்த்து விட்டு, நீ இன்னும் திருந்தலேல? ஜிதினை பார்த்தான்.

கயல் அர்ஜூனிடம், ஸ்ரீ எப்படி? அதிர்ந்து கேட்க,

நீ பேசாத? என்று கத்திய அர்ஜூன், கயலை முறைக்க, நிஜமாகவே நான் ஏதும் செய்யவில்லை என்றாள் கயல்.

நீ இல்லேன்னா? உனக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கானே? அவனா தான் இருக்கும் என்று கூறி விட்டு ஸ்ரீயை கையில் ஏந்திக் கொண்டு வெளியே வர மழை அடித்து கொட்டியது. அவளை தூக்கிக் கொண்டே சற்று தூரம் நனைந்து கொண்டே நடந்தான். ஸ்ரீயின் திடீர் பிரவேகம் அவனுள் கேள்வியாய் விழுந்தது.

ஆதேஷ் காரில் அர்ஜூனை தேடி வந்தான். அண்ணா..என்று காரிலிருந்து இறங்கி அவன் பின் ஓடினான். பின் அர்ஜூன் காரில் ஏற, ஸ்ரீ அப்பொழுதும் அர்ஜூன் கழுத்தை விடுவதாக இல்லை.

ஆதேஷ் அவள் கையை எடுத்து விட முயன்றான். ஆனால் ஸ்ரீ விடாப்பிடியாய் அவனது கழுத்தை பிடித்திருக்க, இருக்கட்டும்டா. காரை எடு.வீட்டிற்கு போகலாம் என்று அர்ஜூன் கூற,காரை வேகமெடுத்தான்.

இருவரும் வீட்டிற்கு வந்தனர். இருவரது உடையும் நனைந்திருக்க, பொண்ணுங்க பதறி அவனிடம் வந்தனர்.

அர்ஜூன் ஸ்ரீக்கு என்னாச்சு? நித்தி பதற, கொஞ்ச நேரம் இருங்கள் என்று அவளது அறைக்கு சென்று அவளை படுக்க வைக்க முயல, அவளது கை அவனது கழுத்தை இறுக்கமாக பற்றியிருக்க,அவனை பிடித்து இழுக்க அவனும் படுக்கையில் விழுந்தான். பின் எழுந்து படுக்கையில் அமர்ந்து மடியில் அவளை போட்டுக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

தாரிகா அருகே வந்து, ரெண்டு பேரும் உடையை மாற்றுங்கள். காய்ச்சல் வந்து விடாமல் அக்கறையுடன் கூறினாள்.

அர்ஜூன் அவளை பார்த்து விட்டு ஸ்ரீயை தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.

டேய், என்ன பண்ற? யாசு ஓடி வந்தாள். ஹீட்டர் சவரை ஆன் செய்து அதன் கீழே நின்றான். ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக விழித்தாள்.அர்ஜூனை பார்த்து, அர்ஜூன் என்று அவனை கட்டிக் கொள்ள, அவன் அவனையே கட்டுப்படுத்திக் கொண்டு, அவளை பார்க்க, அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நனைந்தவாறே..

மற்ற அனைவரும் இருவரையும் பார்க்க, தாரிகாவும் ஆதேஷும் வெளியே வந்தனர்.நித்தி யாசு நகர, துகிரா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் அப்படியே நின்றனர்.அவளும் சென்று விட்டாள். அர்ஜூன் மெதுவாக ஸ்ரீ இதழ் அருகே குனிய, அவள் அவனது கழுத்தை விடாமல் அப்படியே அசையாது அவனையே பார்க்க, அவன் தொடர்ந்தான் கட்டுப்படுத்த முடியாமல்.

அவள் இதழ்களில் இதழ் பொருத்தி முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவனது கன்னத்தை வருடியவாறு அர்ஜூன்.. என்றாள் மெதுவாக.

அர்ஜூன் கண்கள் அவள் கண்களை பருக, அவன் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்தாள் ஸ்ரீ.அவளது தலை சரிய, சட்டென அவளது தலையை பிடித்தான்.அவன் நெருக்கம் தாளாது அவள் கண்களில் கண்ணீர். அவள் கண்ணீரை பார்த்து அவளை இறக்கி விட்டான்.

அர்ஜூன்..என்று கீழே நிற்க போனவள். அவனது சட்டையை பிடிக்க இருவரும் கீழே விழுந்தனர்.ஸ்ரீ மீது அவன் இருக்க, தேங்க்ஸ் அர்ஜூன்..என்று கண்களை மூடி திறந்தாள்.

உனக்கு கோபம் வரவில்லையா? எதுக்கு தேங்க்ஸ்?

எனக்கு கஷ்டமான சூழ்நிலையில் எப்பொழுதும் நீ தான் இருக்கிறாய்? தலையை திருப்பிக் கொண்டு சொன்னாள்.

தேங்க்ஸ்..இப்படி தான் முகத்தை திருப்பிக் கொண்டு சொல்வியா?

இல்ல அர்ஜூன் என்று அவனை பார்த்தால் அவனோ அவளை விழுங்குவது போல் பார்க்க, அர்ஜூன் நான் கொஞ்சம் ஓய்வெடுக்கவா?

அவன்,..ம்ம்..என்று அவளது இதழ்களை பார்வையால் வருட, அர்ஜூன் ப்ளீஸ்..கொஞ்சம் வழி விட்டேன்.

அர்ஜூன் எழுந்து கையை அவளுக்கு கொடுக்க, அவள் அவனது கையை பிடித்துக் கொண்டு எழுந்தாள். நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அர்ஜூன் அவளை தூக்க, நோ..அர்ஜூன். நானே செல்கிறேன் என்று சுவற்றை பிடித்துக் கொண்டு நடந்தாள். அர்ஜூன் அவள் பின்னே நடந்தான். அதற்கு மேல் முடியாமல் அவள் நிற்க, அவளை தூக்கிக் கொண்டு படுக்கை அருகே சென்று தாரி வா? என்று சத்தமாக அழைத்தான்.

பொண்ணுங்க உள்ளே வர, அனைவரையும் பார்த்து அவள் உடை மாற்றட்டும் என்று தாரிகா, நித்தியை மட்டும் அறையினுள் விட்டு அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.