வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-102
198
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ்.
இதோ..உங்களுக்கான எபிசோடு 102.
காலை உதயமாக பெற்றோர்களின் உடல்கள் எடுத்து புவனாவை வைத்தே சடங்கு நடத்தினார்கள். அவரது மகனை அழையுங்கள் என்று கூற, யாரும் முன் வரவில்லை. தீனா முன் செல்ல, அவரது அப்பா அவனது கையை பிடித்து தடுத்தார். அதனை பார்த்து பிரதீப் ஏளனமாக அவனது சித்தப்பாவை பார்த்து, அவங்களுக்கு செய்ய வேண்டியதை அவங்க பையனா நான் செய்கிறேன் என்று அனைத்தையும் செய்தான்.
அம்மா..அப்பா..எழுந்திருங்க..எழுந்திருங்க..எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று புவனா கதறிக் கொண்டு அவர்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்.அனைவரும் அவளை பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.
அவளை இதயாவும் இன்பாவும் பிடிக்க, அவர்களை தள்ளி விட்டு அவளது பெற்றோர்களிடம் சென்று வாங்க..வாங்க.. என்று கதறினாள். அவளுடைய இந்த செயல் அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.
ஜானு அவளை இழுத்து அவங்க இனி வர மாட்டாங்கடி..என்று கத்தி விட்டு அவளை அணைக்க, அவள் அங்கேயே துவண்டு கால்கள் வழுவிழந்து உட்கார்ந்தாள்.
ஜானு எனக்கு யாருமில்லை என்று அழுது கரைந்தாள். அவளது பெற்றோர் உடல் அங்கிருந்து செல்ல, ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் இறுதி மரியாதைக்காக சென்றனர்.பெண்கள் வீட்டில் திரும்பி வருவரோருக்காக செய்ய வேண்டிய சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். புவனா அவளது பெற்றோரின் புகைப்படத்தை பார்த்து அழுதவாறு அமர்ந்திருந்தாள்.
அவளால் தருணை கூட பார்க்க முடியாது. ஊர் வழக்கப்படி ஒரு மாதம் அவள் ஊரில் தான் இருக்க வேண்டும். ஊரை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று பேசினார்கள். ஆண்கள் அங்கு வரவே, தீனா உள்ளே சென்று அவளருகே அமர்ந்தான். அவரவர் வேலையை கவனித்தனர். அப்பொழுதே சாமி கும்பிட பொருட்களை ஒவ்வொருவராக அவரவர் வாங்கி வர, பாதி பேர் அவளுக்கும் தருணிற்கு துணிமணிகள் எடுத்து வந்தனர். அவள் அவ்விடத்தை விட்டு எழவும் இல்லை. யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பின் சாமி கும்பிட்டு எடுத்த துணிமணிகளை கொடுக்க, அழுது கொண்டே பெற்றவள் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் பழையபடி அமர்ந்தாள். அவள் உள்ளே இருந்து மற்றவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். தீனா வேலையாக வெளியே சென்று விட்டான்.
பொம்பள பிள்ளை எப்படி தனியா இருக்கும்? அந்த படுபாவி வந்தன்னா என்ன செய்றது?ஒரு பெண்மணி கேட்க,
மற்றவரோ..அதுக்கு அவளை நம்ம வீட்டுக்கா அழைத்து செல்ல முடியும்? உங்களால பார்த்துக்க முடியுமா? ஸ்கூல் கூட முடிக்கல?
நீங்க யாரும் பார்த்துக்க வேண்டாம்.நாங்க எங்க ஊருக்கு அழைத்து செல்கிறோம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இன்பா முன் வந்தாள்.
ஏம்மா..ஊர் கட்டுப்பாடு என்ன ஆறது?
ஊர் கட்டுப்பாடா? அதுக்காக அவளை தனியா விட முடியுமா?
ஊரை விட்டு அனுப்ப முடியாது? என்று ஒருவர் கூற,
தருணிற்கு சரியாகும் வரை..நீங்க சொன்ன ஒரு மாதம் உங்களில் யாராவது பார்த்துக்க முடியுமா? வினவினாள் இதயா.
அனைவரும் அமைதியாக, நான் இருக்கேன் என்னோட புவிக்கு என்று ஜானு பிரதீப்பை அழைத்துக் கொண்டு முன் வந்தாள். என் அண்ணா தான் மகனா இருந்து எல்லாமே செஞ்சாங்க. அதனால் அண்ணனா இருந்து அவளை பார்த்துக் கொள்வான்.
என்னம்மா பேசுற? உன்னோட அண்ணா, என்ன தான் மகனா எல்லாமே செஞ்சாலும்..அவளுக்கு வேரொருவன் தான். உடன் பிறந்தவன் போல் இருக்காதும்மா. அதுவும் நீங்க இரண்டு பேரு மட்டும் தனியா இருக்கீங்க.நீங்க உடன் பிறந்தவர்கள். உங்க வீட்ல பல பேர் இருந்தா ஒத்துக்கலாம். நம்ம பிரதீப் தம்பி தங்க கம்பி தான் இருந்தாலும் இது சரி வராது என்றனர்.
அந்த பொண்ண என்ன தான் பண்றது? என்று மற்றொருவர் கேட்க,எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்றார் தீனாவின் அம்மா.
அம்மா..உங்க வீட்டுக்கு இந்த பொண்ணையா?
ஏன்டா, உனக்கு என்னடா பிரச்சனை? என்று அப்பத்தா வந்து நின்றார்.
ஒரு மாதம் தானே? அந்த பொண்ணை தனியா விடணும்னு பேச்சு அடிபடுது. உங்க புள்ளங்களுக்கு இந்த நிலை வந்தா என்னடா செய்றது? தனியா விட்டுடலாமா? கேட்டார் தீனாவின் அம்மா காவேரி.
இல்லைம்மா..அய்யா, என்ன சொல்றாரோ? என்று ஒருவன் வினவ, அவன நான் பார்த்துக்குவேன் என்றார் அப்பத்தா.
புவனாவிற்கோ மனது திக்கென்றிருந்தது. அவளை துளசிக்கு பிடிக்கவே பிடிக்காது. அவளோ தீனாவின் உடன்பிறந்த தங்கை. அவன் வேறு அங்கிருப்பான். அவளுக்கு மேலும் பயம் தொற்றியது. ஆனால் அமைதியாக இருந்தாள். அவளுடைய பாதுகாப்பு முக்கியமல்லவா? அவர்களது வீட்டிற்கு வெளியே தெரியாதவர்கள் நிற்க கூட முடியாது.
அர்தீஸிடமிருந்து பாதுகாப்பு என்றால் சக்கரவர்த்தி அய்யா வீடு தான் சரி என்று மனதினுள் நினைத்தாள்.
இன்று மட்டும் பொண்ணு இங்கேயே இருக்கட்டும். நாளை காலையில் வந்து விட்டு விடுங்கள் என்றார்.
இன்பாவின் அம்மா தீனா அம்மா கையை பிடித்து, ரொம்ப நல்லதுங்க. உங்க உதவிக்கு நன்றிங்க என்றார். அனைவரும் கிளம்பினார்கள்.
அன்று மாலை இருக்கும். இன்பா தனியே ஓரிடத்தில் அமர்ந்திருக்க, அங்கே சென்று கொண்டிருந்த அபி அம்மா அவளை பார்த்து அருகே சென்றார்.
இன்பா அழுது கொண்டிருந்தாள். என்னம்மா எதுக்கு அழற? நீ வீரதமிழச்சின்னு நினைச்சேன் என்றார்.
எங்க அப்பா இறந்த அன்றும் புவியிடம் நடந்து கொண்டது போல் தான் எங்களிடம் ஒரு பணக்கார மனுசன் நடந்து கொண்டான். அன்று என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு திருப்பி கொடுத்ததை போல் இன்று உணர்ந்தேன். எனக்கு அப்பா மட்டும் இல்லாமலே ரொம்ப கஷ்டப்பட்டேன். புவியை நினைத்தால் கவலையாக உள்ளது. நான் கூட அழைத்து சென்று அவளுக்கு ஆறுதலாய் இருக்க நினைத்தேன். ஊரார் கெடுத்து விட்டனர். அவங்க வீட்ல அவளை நல்லா பார்த்துக்கிடுவாங்களான்னு தெரியல. அவ தவறான முடிவு எடுத்திருவாளோன்னு பயமா இருக்கு என்று யாரிடம் பேசுகிறோம் என்று கூட அறியாது புலம்பி தீர்த்தாள்.
நீ கவலைப்படாதேம்மா..காவேரி நல்லா பாத்துப்பா. எங்க வீட்டுக்கு எந்த பொண்ணு வந்தாலும் பாதுகாப்பா இருப்பாங்க. புவனாவும் பாதுகாப்பா இருப்பா. அவளை அம்மாவும், காவேரி அண்ணியும் நல்லா பாத்துப்பாங்க என்றார்.
நீங்க யாரு? கேட்டுக் கொண்டே தள்ளி அமர்ந்தாள் இன்பா.
நீ கடிச்சு வைச்சியே அவனோட அம்மா தான்.
அபியோட அம்மாவா.சாரி ஆன்ட்டி. நான் பேசும் போது இடையில வந்தானா? அதான் என்று அசடு வழிந்தாள். நான் மட்டும் அப்படி பேசலேன்னா..போலீஸ் சார் அவனுடன் சண்டை போட்டு விரட்டி இருக்க மாட்டார். அவங்கள விரட்ட தான் நானும் என்னுடைய தங்கையும் அவ்வாறு நடந்து கொண்டோம்.
நீ செஞ்சது சரி தான். ஆனா அவங்க பயங்கரமான ஆளுங்க. எங்க அண்ணாவே அவனுக கிட்ட பிரச்சனை வைச்சிக்க மாட்டார்.
அப்ப மத்த பொண்ணுங்களுக்கு என்ன ஆனாலும் வேடிக்கை பார்க்கலாமா ஆன்ட்டி?
அய்யோ அம்மா..தப்பு தான்மா. அண்ணா அமைதியா இருக்காரேம்மா.
சரிங்க ஆன்ட்டி.நான் கிளம்புறேன்.
நில்லும்மா.உன்னோட நம்பர் கொடேன்.
போனை வாங்கி இன்பா நம்பரை பதிந்து கொடுத்து விட்டு கிளம்பினாள். மெழுகு சிலையாட்டம் இருக்கா இந்த பொண்ணு என்று இன்பாவை புகழ்ந்தார் அபி அம்மா.
புவனாவிடம் தருண் அவ்வப்போது பேசினான். முதலில் புவனா அழுதாலும், தனக்கு அண்ணன் வேண்டும்.அவனுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று அமைதியாக பேசி போனை வைத்து விட்டு அழுவாள். இன்பா அம்மா மடியில் புவனா படுத்திருக்க,அங்கே வந்த தீனா அம்மா அவளருகே வந்து அவளது தலையை வருடி,
நீ எங்க வீட்டுக்கு வாரேலமா? அவள் எழுந்து அமர்ந்தாள். உனக்கு ஏதும் பிரச்சனையில்லையே?
அண்ணா சரின்னு சொல்லிட்டான்மா என்றாள்.
சரிம்மா. வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்துட்டு தயாரா இரும்மா. நான் வந்து அழைத்துச் செல்கிறேன்.
உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்? நானே வந்து விடுவேன் என்றாள்.
இல்லைம்மா.நான் தான் அழைத்து செல்வேன் என்றார்.
சரிம்மா என்றாள். அவர் கிளம்பினான்.
ஹாஸ்பிட்டலில் காலையில் எழுந்த தருணை கட்டுப்படுத்துவதற்குள் போதும்..போதும்..என்றானது அர்ஜூன் கைரவிற்கு.நிவாஸ் எழுந்து ஸ்ரீயை தேடினான்.அவள் குளித்து மருந்து போட்டு காயவைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கான மருந்தை பற்றி தாரிகா நிவாஸிடம் கூற, இதுவுமா? அவள் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறாள். எனக்கு தான் எதுவும் தெரியாது போனது. நானெல்லாம் நல்ல தம்பியே இல்லை. அந்த ஜிதினை கொல்லாம விட மாட்டேன் சத்தமிட்டான்.
அவள் தருணை பற்றி கூற,நிவாஸ் மெதுவாக தாரிகா உதவியுடன் வெளியே வந்து அவனை பார்க்க சென்றனர். தருணிற்கு மீண்டும் மருந்தை போட்டு தூங்க வைத்திருந்தனர்.
அர்ஜூனோ,புவி என்ன செய்கிறாளோ? என்று புலம்பிக் கொண்டிருந்தான். கைரவ் அவனை தேற்றிக் கொண்டிருந்தான்.
நிவியை பார்த்து, நீ எதுக்குடா அலையுற? நல்லா ஓய்வெடு போடா என்று அர்ஜூன் விரட்டினான்.அவனை புரிந்து கொண்ட நிவாஸும் அங்கிருந்து அவனது அறைக்கு சென்றான்.
மதிய வேலையில் வந்த ஸ்ரீயோ தருணை தான் சென்று பார்த்தாள். பின் நிவாஸ் அறைக்கு சென்றாள்.
மாலையில் தருண் விழிக்க, ஊரில் நடந்ததை கூறினார்கள். பின் புவனாவும் பேசினாள்.
பிரதீப், இன்பா,கேரி, அபியை அழைத்து அர்ஜூன் சொன்னதை கூறி ரெசார்ட் ஒன்று உள்ளது என்று அங்கே அழைத்து சென்றான். எல்லாரும் அதை பார்த்து ஓ.கே செய்து அர்ஜூனுக்கு விசயத்தை கூறினார்கள்.
நம்ம பார்த்த ரெசார்ட் ஏழு கோடி.அது நஷ்டத்தில் உள்ளதால் ஒரு கோடிக்கு தாராங்களாம் அர்ஜூன்.
வேரேதும் பிரச்சனை இருக்காதுல்ல அண்ணா? எல்லாவற்றை பற்றியும் விசாரிச்சுட்டீங்களா?
அவருக்கு அதை நடத்த பணமில்லை போல..அதுவுமில்லாது அர்ஜூன் இடமெல்லாம் ஓ.கே அதை வாங்கினா நிறைய அரேஞ்ச் பண்ணனும். இருபத்து நான்கு அறைகள் இருக்கு. காபி ஷாப், ரெஸ்டாரண்ட் உள்ளேயே இருக்கு. பக்கத்திலே படகு சவாரி, நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பாரா கிளைடிங் செய்யும் இடமும் உள்ளது.
நாம ரெசார்ட்க்குள்ள இன்னும் தயார் செய்யலாம். சில இடங்கள் வெறுமையாகவே உள்ளது. ஆட்களை வர வைக்க, விளம்பரம் தயார் செய்யணும்.சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஏற்ற அனைத்தும் ரெசார்ட்டுக்குள்ளவே தயார் செய்யலாம்.
அண்ணா..போதும் போதும்..ஒப்பந்தம் செய்து முடிவெடுங்கள். எல்லாமே சரி என்றால் பணத்தை கொடுக்கலாம் என்றான்.
அபி அந்த இடமும் அதை சுற்றியுள்ள அனைத்தையும் வீடியோவா எடுங்க. அந்த ஓனரிடம் நம்மை பற்றி அவர் வெளியே விடக் கூடாது என்று ஒப்பந்தததில் ஒரு கண்டிசன் இருக்கணும் என்றான்.கேரியின் பிசினஸ் சிந்தனை, பிரதீப்பின் ஐடியா என்று இனிதே ஆரம்பித்தனர்.பின் இரவு உணவை முடித்து விட்டு தூங்கினர்.
பொழுது புலர்ந்து அனைவரும் தயாரானார்கள். சென்னை செல்ல பசங்க, இன்பா குடும்பம், கேரி தயாராக இருக்க, புவனாவை அழைத்து செல்ல தீனாவின் தாயார் வந்து அவளை காரி ஏற்றினார்.
அம்மா..கொஞ்ச நாள் நல்லா பாத்துக்கோங்க..என்று கலங்கியவாறு இன்பா, அம்மாவும், இதயா இருக்க புவனா மீண்டும் அவர்களிடம் வந்து அண்ணாவை நல்லா பாத்திக்கோங்க என்று அழுது கொண்டே அனைவரையும் அணைத்துக் கொண்டாள்.
நீ தைரியமா இருக்கணும்டா புவி. நாங்க இருக்கோம்ல. தருணுக்கு ஒன்றுமில்லை. உன்னை பார்க்க அவனே வருவான்.நல்லா சாப்பிடணும். படிக்கணும். கவனமா இரு என்று இன்பா அறிவுரை கூற,காவேரி சிரித்தார்.
ஏம்மா..அவள் ஏதோ கல்யாணம் செய்து புகுந்த வீட்டுக்கு போற மாதிரி அறிவுரையெல்லாம் பலமா இருக்கே.புவனா திடுக்கிட்டு அவரை பார்த்தார்.
புவனாவை எங்களுக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். அவளை நாங்க நல்லா பாத்துப்போம் என்றார் உறுதியாக.அவளை அவர்களுடன் அனுப்பி விட்டு ஊருக்கு கிளம்பினார்கள் மற்றவர்கள்.
இங்கு நடந்த அனைத்தும் புதிதாக தெரிந்தது கேரிக்கு. தீனா வீட்டிற்கே வரவில்லை.வேலை விசயமா அவனும் ஊருக்கு சென்றதால் புவனா அவனது வீட்டிற்கு வந்தது கூட தெரியாது. அவள் காலையில் அவர்கள் வீட்டிற்குள் நுழைய, துளசி திருப்பிக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள்.
இன்று புவனா விடுப்பு எடுத்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவளுடைய பொருட்களை எடுத்து வைத்து விட்டு கண்ணயர்ந்தாள். காவேரி அவளை பார்த்து விட்டு வெளியே சென்றார்.
சென்னை சென்றவர்கள் நேராக தருண், நிவாஸை பார்த்து விட்டு அன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்து ஓய்வெடுத்தனர். இதயா மட்டும் தருண் அறையிலே ஓய்வெடுக்க அர்ஜூன், ஸ்ரீ, தாரிகா அவன் வீட்டிற்கு சென்றனர்.நிவாஸுடன் தாரிகா அம்மா இருந்தார்.தருண் யாரிடமும் சரியாக பேசவே இல்லை.அவன் நினைவு முழுவதும் வீடாக இருந்தது.
இதயா ஓய்வெடுத்தாலும், அவனுக்கான மருந்து எடுத்துக் கொடுப்பதும், அவனை மருத்துவர் பார்க்க வரும் போது, அவரிடம் அவன் உடல் நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்வதுமாக இருந்தாள்.