ஆரியன் அதியா அருகே வந்து கேட்டை திறக்க, சுயம் வந்தவள் போல அவனை பார்த்தாள்.
“எவ்வளவு நேரம் இப்படியே நிற்க போற?”
“நான் திறக்கிறேன்” அவள் உதவ, “தேவையில்லை. என்னால என்னை பார்த்துக்க முடியும்” என முகத்தில் அறைந்தாற் போல கூறினான். அதியா வருத்தமுடன் அவனை பார்த்தாள்.
என்னால உனக்கு சப்போர்ட் பண்ண முடியாது. நீ தான் எல்லாரையும் சமாளிக்கணும் என ஆரியன் முன் செல்ல, அவனை பார்த்துக் கொண்டே அவன் பின் சென்றாள்.
அவன் கட்டுகளுடனும் பல காயத்துடன் இருக்க கண்ட, துருவினியும் உத்தமசீலனும் பதறினார்கள். பசங்களும் அவனிடம் ஓடி வந்தனர். அவர்கள் அதியாவை பார்க்கவும் கண்டுகொள்ளாதது போல் ஆரியனிடம் கேட்டனர்.
இப்பொழுதைக்கு பிரச்சனை இல்லை. எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. ஓய்வெடுக்கணும் என ஆரியன் சொல்லிக் கொண்டிருக்க, “சார்” என்று ஒருவர் சத்தம் கேட்டு துருவினி வெளியே சென்றாள்.
“யாரோ பைக்கை நிறுத்தீட்டு இதை கொடுக்க சொன்னாங்க” அவன் சொல்ல, “யாருன்னு உங்களுக்கு தெரியாதா?”
தெரியாது மேம். சும்மா ரோட்ல போனேன். பிடிச்சி கொடுக்க சொன்னாங்க.
“தேங்க்ஸ்” என்று துருவினி சொல்ல, அவன் சென்றான். அவள் வெளியே பார்த்து விட்டு ஆரியனிடம் சொல்லி கொடுத்தாள்.
பைக்கை நான் என அதியாவை பார்த்தான்.
அந்த பீச் ஹோட்டல்ல தான் நிறுத்தினேன். யாரு கொடுத்திருப்பாங்க சிந்தித்தான்.
ஆகர்ஷனாவும் தர்சனும் ஓடி வந்து ஆரியனை அணைத்து, “ரொம்ப வலிக்குதா?” என விசாரித்தனர்.
“ஆரு வலிக்காம இருக்கணும்ன்னா இப்படி அடிக்கடி ஊதுங்க” என அவனது காயமிட்ட கையை ஊதி காட்டினாள் ஆகர்ஷனா.
அவளை தூக்க முடியாததால் அவளை அணைத்த ஆரியன், “எனக்கு வலிக்கலை ஷனா. நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்று அவன் தந்தையை பார்த்தான். அவரோ அதியாவை தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தார்.
“நீ உன்னோட அதிம்மாட்ட பேசிட்டு வா” அவன் நகர்ந்தான்.
“ஆகு சாரிடா” அதியா சொல்ல, “என்னை விட்டு போக நினைச்சேல்ல போக வேண்டியது தான? எதுக்கு வந்த?” அழுதாள் ஆகர்ஷனா.
தர்சுவோ, “ஆகா வா நாம அப்பாகிட்ட போகலாம்” என சொல்ல, “தர்சு சாரிப்பா நான் உங்களுக்காக தான் போனேன்”. இருவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.
“எதுவாக இருந்தாலும் குடும்பத்தினர் சேர்ந்து போராடணும்” துருவினி சொல்ல, விரக்தியுடன் அவளை பார்த்த அதியா, “அவர்களை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்” என எண்ணி சோபாவில் சோர்வுடன் அமர்ந்தாள்.
உத்தமசீலனை பார்த்து, என்னோட குடும்பத்துல்ல யாரும் சேர்ந்து இருந்ததேயில்லை அங்கிள்..குடும்பமா சேர்ந்து வாழ்வதை நான் படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கேன். எங்களுக்கு நிறைய உறவுகள் இருங்காங்க. இருந்தும் என்ன பயன்? ஓரிடத்திற்கு சுதந்திரமாக செல்ல முடியாது. எல்லாரும் பணத்தின் பின்னால் தான் ஓடுறாங்க. அவங்களுக்கு நான் மனுசியா தெரியல. அதனால் தான் கல்லூரியை பாரின்ல்ல படிக்க எண்ணினேன். அப்பொழுது முடியாமல் போச்சு என அவரை பார்த்து, “சாரி அங்கிள்..என்னால தான் உங்க மகனுக்கு இப்படி ஆகிடுச்சு. சத்தியமா ஆரு வருவார்ன்னு நான் எண்ணலை”.
“அப்புறம் யாரு வருவான்னு நினைச்ச?” துருவினி பட்டென கேட்க, நினைக்கவே இல்லை. என் வாழ்க்கை இது தான்னு ஏற்கனவே வாழ்ந்தது தான. இப்பொழுதும் அதே போல் எண்ணினேன். ஆனால்..என்னால..என சொல்ல முடியாமல் அழுதாள்.
“அதிம்மா” என ஆகர்ஷனா அவளை பார்த்தாலும் அருகே செல்லவில்லை.
“சொல்லும்மா? காரணம் என்பது சமாளிக்க தானே!” கோபமாக அவர் உள்ளே செல்ல, தர்சனோ ஆரியன் அறைக்குள் சென்றான்.
எங்களை பற்றி சிந்தித்த உன்னால்.. உன்னோட பொண்ணை பற்றி நீ சிந்திக்கலை. ஆகா..நீ அண்ணா அறைக்கு போ என சொல்ல, அவள் அதியாவை பார்த்துக் கொண்டே சென்றாள்.
“எல்லாரும் போங்க. நீங்க என்னிடம் பேசும் வரை இதே ஹாலில் தான் இருப்பேன்” சோபாவில் அழுதவாறு அதியா படுத்துக் கொண்டாள். உத்தமசீலனோ சிந்தனையுடன் அறையில் நடந்து கொண்டிருந்தார்.
துருவினிக்கோ, “அதெப்படி பெத்த பிள்ளையை பிரிய மனம் வருது?” அதியாவை திட்டிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் அதியாவின் அழுகை சத்தம் இல்லாது போக, பசங்க தூங்கி விட்டார்கள் என்றவுடன் ஆரியன் அவனறையிலிருந்து வெளியே வந்தான்.
சமையலறையில் இருந்த துருவினியை அவன் கவனிக்கவில்லை. நேராக அதியாவிடம் வந்து, அவனறையிலிருந்து எடுத்து வந்த போர்வையை போர்த்தி விட்டு அவளது கண்ணீர் தடத்தை கவலையுடன் பார்த்தான். உள்ளிருந்து வந்த துருவினி ஆரியனை பார்த்து வேகமாக மறைந்து கொண்டாள்.
எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? நீயும் கஷ்டப்பட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்தி. அவ்வளவு உறுதியா ஷனாவை நான் பார்த்துப்பேன்னு சொல்லி விட்டு போயிருக்க? உன்னை அம்மா மிரட்டியதையோ.. இல்லை கிளம்புவதையோ சொல்லி இருக்கலாம். அவளை பார்த்துப்பேன்னு நம்புற. உன்னை விட்ருவேன்னு நினைச்சுட்டியா?
அந்த வருணை பார்க்க நல்லவனாக தெரியுறான். கேள்விபட்டிருக்கேன் திரிபில் ஆர் கம்பெனியை. அவனுக்கு எல்லாரிடமும் நல்ல பேரு இருக்கு. ஆனால் அவன் உன்னிடம் நடந்து கொண்டது என வருண் அதியாவை முத்தமிட வந்ததை எண்ணியனுக்கு சீற்றம் பெருகியது. கைகளை இறுக மடக்கினான்.
உன்னோட கண்ணுல நான் பயத்தை பார்த்தேன். ஆனால் அது என்னை பார்க்கும் போது என்றவுடன் எனக்கு ஏதோ சொல்ல முடியாத வலி. எனக்கு இது போல் அதிகம் வலிக்காது. பலமான காயம் கூட வலிக்கலை. ஆனால் நீ என்னை நம்பலைன்னு தான் வலிக்குது. எப்படியோ என் மீதுள்ள பயம் போனதே! என அவள் கண்ணீர் தடத்தை தொட்டு பார்த்தான்.
காயங்கள் ஆறும் வலிகள் ஆறாதுன்னு சொல்லுவாங்க. அது நம்ம இருவர் வாழ்க்கையிலும் இருக்கு. உன்னோட வலி உன் அக்காவின் இழப்பு. என்னோட வலி நம்பிக்கை.
“நம்பிக்கையா?” என்ன சொல்றான்? என துருவினி அதிர்ந்து கவனிக்க, அவளை போல தன் மகனை கவனித்த உத்தமசீலன், “தெரியும்டா. உனக்கு தெரியும்ன்னு தோணுச்சு. கண்டுபிடிச்சிட்டியா?” என மகனை வருத்தமுடன் பார்த்தார் அவர்.
ஆரியன் கண்ணீர் வடிய, துருவினியோ மனதினுள் “அண்ணா நீ அண்ணியை இழந்த போது கூட அழலை. அதான் எல்லாரும் உன்னை காரணம் சொல்றாங்க. அதிக்காக அழுறியா? அவளை காதலிக்கிறியா? நான் கூட சும்மா பிடிச்சிருக்கு போல. உங்களுக்கு செட் ஆகும்ன்னு தான் எண்ணினேன்” கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
கையை நீட்டியவாறு படுத்திருந்த அவளை பார்த்து, லோகு கையை பிடிக்கிறான். அவனை பற்றி தெரியாமல் குடுத்துட்டு இருக்க? இனி அவன் பிடிக்க மாட்டான் என ஆரியன் அவளது கையை பிடித்து லேசாக திருப்பி ஊதினான்.
“என்ன ஊதி விடுறான்?” துருவினி சிந்திக்க,
ஆகா சொன்னாலே.. அடப்பாவி..நான் உன்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பேன். அவளுக்கு மட்டும் ஊதி விடுற? பெரிய காயமா இருக்குமோ? இந்த லூசு அதி இதையும் கவனிக்காமல் விட்டுட்டாளோ!” அவளுக்கு அவளாக பேசினாள்.
ஆரியன் என்ன நினைத்தானோ வேகமாக எழுந்து அவனறைக்கு சென்றான்.
அவன் செல்லவும் துருவினி ஓடி வந்து அவள் கையை திருப்பி பார்த்து, கண்ணீருடன் அமர்ந்தாள்.
“என்னாச்சும்மா?” துருவினி அருகே சென்று அதியாவின் கையை பார்த்த உத்தமசீலன் இன்பமானார். துருவினியை தள்ளி அழைத்து சென்றார்.
அப்பா, அண்ணாவை பாருங்க. இந்த சின்ன அடிக்கு ஊதி விடுறான். நான் கேட்டாளும் அவன் செய்ததில்லை.
அவன் அப்பொழுது அப்படி இருந்தான். ஆனால் இப்ப மாறி இருக்கான்ம்மா. இனி பாரு..
“ஆனால் அப்பா, அதி விட்டு போயிட்டான்னா?”
அதான் யோசனையா இருக்கும்மா. அவ நம்ம ஆரியா பற்றி என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கணும்?
அண்ணாவை அவளுக்கு பிடிக்கலைன்னா..
பார்க்கலாம்மா. போ..காஃபி போடு என்றார்.
ம்ம்..என அவள் காஃபி போட்டு அவருக்கு கொண்டு வந்து கொடுத்தாள். அதியா படுத்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் தான் அமர்ந்திருந்தார்.
ஆரியன் வெளியே வந்து அவன் தந்தை அருகே அமர்ந்தான். அவனுக்கும் காஃபியை கொடுத்து துருவினியும் அவனை பார்த்துக் கொண்டே அமர்ந்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்திருக்கலாம்ல்லப்பா?” உத்தமசீலன் கேட்க, “தூங்க முடியலப்பா” என அதியா வீட்டிலிருந்து கிளம்பிய காரணத்தையும், அங்கு நடந்த அனைத்தையும் கூறினான். அவன் பேசும் சத்தம் கூட அவளை தாக்காது அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
ம்ம்..கண்டிப்பாக இரவு தூங்கி இருக்க மாட்டா. அவன் அடிக்கவும் செய்திருப்பான். அதி திருமண கோலத்தில் இருந்தாலும் அவள் முகத்தில் இருந்த காயத்தை மறைக்கவும் செய்திருக்கா என அவளை பார்த்தான்.
“அண்ணா, அதியா எப்போது அதி ஆனா?”
“கூப்பிட்டால் என்ன?” ஆரியன் கேட்க, “நீ பொண்ணுங்களிடம் பேசும் ரகம் இல்லையே!”
“அவளுக்கு பிரச்சனை இருக்குல்ல?”
பிரச்சனை எல்லாருக்கும் தான் இருக்கு.
காலிங் பெல் சத்தம் கேட்க, “யாருப்பா அது? சரியா பேசக் கூட விட மாட்டீங்களா?” எழுந்து கதவை திறந்தாள் துருவினி. அங்கே நின்றவனை பார்த்து, “நீங்க யாரு? யார் வேணும்?” கேட்டாள்.
பின் அவனை உற்று பார்த்து, “எங்கோ பார்த்திருக்கேனே!” தாடையில் கையை வைத்து துருவினி சிந்திக்க, அவளை உள்ளே தள்ளி கூலருடன் தன்னுடைய லக்கேஜை இழுத்துக் கொண்டு வந்தவனை பார்த்து ஆரியனும் உத்தமசீலனும் எழுந்தனர்.
“ஹலோ, நான் பேசிட்டு இருக்கேன். நீ நீ பாட்டுக்கு உள்ள போற?” ஏற்கனவே இருந்த கடுப்பை அவனிடம் துருவினி காட்ட, “யாருப்பா நீ?” என உத்தமசீலன் அவனை பார்த்து விட்டு தன் மகனை பார்த்தார்.
லக்கேஜை ஓரமாக வைத்து விட்டு, அருகே இருந்த ஜக்கை எடுத்து அவர்களை நெருங்கி வந்து உறங்கிக் கொண்டிருந்த அதியா மீது ஊற்றினான் வந்தவன்.
ஏய்..ஆரியன் சீற்றமுடன் சத்தம் போட, நீராலும் ஆரியன் சத்தத்தாலும் பட்டென விழித்து அவனை பார்த்தாள். அவன் அவளுக்கு பின்னால் இருப்பவனை பார்த்து, “யாருடா நீ? நீ பாட்டுக்கு உள்ள வர்ற? தண்ணீ ஊத்துற?” கேட்டான்.
திரும்பி அவனை பார்த்து அதிர்ந்து பின்னே வந்த அதியா ஆரியன் மீது இடித்து, அதை கூட உணராமல் இரு கைகளை வாயில் வைத்து கண்ணீர் வர வர அவனை பார்த்தாள்.
கூலரை அவன் கழற்ற துருவினி அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“ஏதோ உருப்படியா பேபிய பார்த்துப்பன்னு பார்த்தால் என்ன செஞ்சு வச்சிருக்க?” வந்தவன் அதியாவிடம் கத்தினான். ஆரியன் அவனை திட்ட வர, அவன் கையை உத்தமசீலன் பிடித்தார். ஆரியன் அவரை பார்த்தான்.
வந்தவன் பணக்காரனாகவும் அதியா குடும்பத்தினன் போல அவருக்கு தோன்றியது.
அத்து..நான்..அத்து..என சோபாவை சுற்றி வந்து அவனை அணைத்து அழுதாள் அதியா. திகைத்து ஆரியனை மற்றவர்கள் பார்க்க, அவனுக்கோ..இவன் யாரு? கணவன் இறந்துட்டான். காதலன் கைவிட்டுட்டான். இவன் யாராக இருப்பான்? என்று ஆரியன் மனம் போராட்டத்தில் சிக்கிக் கொண்டது.
எத்தனை வருசமாகிடுச்சி. நீ வந்துருக்கலாம்ல்ல? ஏன்டா போன?” விலகி அவனை அடித்தாள்.
“ஷ்ஆ அழுறதை நிறுத்துறீயா? இதை விட இன்னும் உனக்கு எதுவும் தெரிய மாட்டேங்குது” கத்தினான். அதியா மேலும் அழுதாள். துருவினி அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை.
அவன் திட்டுவது கேட்டாலும், “அத்து..அக்கா” அழுதாள் அதியா. கோபம் இறங்கி இப்பொழுது அவன் கண்ணீருடன் அவளை அணைத்தான். ஆரியனுக்கோ சினம் ஏறியது. அவன் ஓரக்கண்ணால் ஆரியனை பார்த்தான்.
“பேபி, எங்க?”
“ஆகு ஆகு..என்னிடம் பேச மாட்டேங்கிறா” மேலும் அவனை அணைத்து அழுதாள். அவன் மீண்டும் ஆரியனை பார்த்து விட்டு அவளை அணைத்துக் கொண்டே, “நீ செஞ்ச வேலைக்கு பாராட்டா தெரிவிப்பா? அவள விட்டு எப்படி நீ போகலாம்?”
அவனை தள்ளிய அதியா, “அப்ப இங்கிருந்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தீயா? அக்கா இறந்தும் நீ வரலைல்ல?”
“நான் சொன்னதை யாராவது காதில் வாங்குனீங்களா? இப்ப போயும் போயும் அவனிடம் மாட்டி இருக்க? நீ பாதுகாப்பா இங்க இருப்பன்னு தான் விட்டு வைத்தேன்..மெண்டல்…மெண்டல்..அரை மெண்டல் திட்டினான்” அவன்.
ஆரியன் அவனை சீற்றமுடனும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டிருப்பதை கண்ட அவனுக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவியது.
“மெண்டலா? நீ தான்டா மெண்டல்”. நாங்க இங்க இருப்பது தெரிந்து நீ வரலை.
“பாதுகாப்பாக தான இருக்கீங்க?”
“அதுக்கு? நீ வர முடியாதா?” அவனிடம் அதியா உரிமையுடன் வாதாடுவதை பொறுக்க முடியாமல் காலால் அவர்கள் முன்னிருந்த டீப்பாயை எட்டி உதைத்தான் ஆரியன்.
“ஆரியா” உத்தமசீலன் சத்தமிட, ஆரியன் அறையை நோக்கி சீற்றமுடன் நகர, “மாமா, எதுக்கு கோபப்படுறீங்க?” என அவன் கேட்க, ஆரியன் கால்கள் நின்றது. மற்றவர்கள் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
ஆகர்ஷனாவும் தர்சனும் வந்தனர். ஆகர்ஷனா அவனை பார்த்தவுடன் அழுது கொண்டே அவனிடம் ஓட, ஆரியன் சினமுடன் மேலும் நடக்க, “பேபி” என மண்டியிட்டான் அவன்.
“மாமா” சொல்லிக் கொண்டே அவன் மீது சென்று விழுந்தாள் ஆகர்ஷனா.
“அண்ணனா?” ஆவென துருவினி அவனை பார்த்து, சார்..ஐ அம் யுவர் பிக் ஃபேன் சார். ஒரு ஆட்டோகிராப் போடுங்க என அவசரமாக ஓடிச் சென்று அவளது நோட் பேடை எடுத்து வந்தாள்.
“ஃபே ன்னா? இவனா?” அதியா கேட்க, அதி, சார் பெரிய கேஸ்ல்ல வெற்றி பெற்று செம்ம ஃபேமஸ். என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இவர் ஃபேன் தான்.
“சார்” அவள் நீட்ட, “ஆன்ட்டி டிஸ்டர்ப் பண்ணாதீங்க” ஆகர்ஷனா அவனை அவள் பக்கம் திருப்பி, “ஏன் இத்தனை வரல. நாங்க எப்படி பயந்துட்டோம் தெரியுமா? அவங்க..” ஆகர்ஷனா அழ, “பேபி அவனை அழ விடலாம். நீ அழாத” என்றவன் துருவினியை பார்த்து, “எங்களுக்கு ஆட்டோகிராப் போட நேரமில்லை” எழுந்து ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு ஆரியனிடம் வந்தான்.
ஆரியனிடம் கையை நீட்டி, “ஐ அம் ஆத்விக்”. கிரிமினல் லாயர் ஆஃப் மும்பை. ஆதிரா என்னோட அக்கா. அதியா என்னோட தங்கை. அப்புறம் ஷனா..என அவனை பார்த்தான்.
“கிரிமினல் லாயரா?” அதியா கேட்க, யா..என ஆரியனை பார்க்க, அவன் ஆத்விக்கிற்கு கையை கொடுத்து விட்டு, அதியாவையும் அவன் ஷனாவையும் பார்த்தான்.
ஆகர்ஷனாவை இறக்கி விட்டு ஆரியனிடம் வந்து, அவங்களை அழைச்சிட்டு போக வரலை. நானும் இங்கே தான் தங்கப் போறேன் என்றான்.
“இங்கேயா?” துருவினி கேட்க, “அங்கிள், நீங்க சொல்லுங்க? உங்களுக்கு நான் இங்கே தங்குவதில் பிரச்சனையா?” உத்தமசீலனிடம் கேட்டான்.
“இல்லை” அவர் புன்னகைத்தார்.
“அங்கிள்” அதியா அழைக்க, இனி நீ இங்கிருந்து போக மாட்டன்னா நான் உன்னை மன்னிக்கிறேன்ம்மா.
ஆனால் அங்கிள், “அத்து..வந்துட்டான். நாங்க கிளம்புறோம். உங்களுக்கு எதுக்கு பிரச்சனை?” அவள் கேட்க, ஆரியன் அவளை முறைக்க, அவள் தரையை பார்த்தாள்.
“ஹலோ, உன்னை வச்சி என்னால பார்த்துக்க முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு” என சோபாவில் அமர்ந்து, “வினு ஒரு காஃபி” என்றான்.
அவளோ அவனை பார்த்து, “வினுவா? என்னையா?”
“இங்க வினு யாருப்பா? ஷனா பேபி..இங்க ஆடு மாடு கோழி ஏதும் வளர்க்கிறாங்களோ அதுக்கு வினுன்னு பேரு இருக்கா என்ன?” கேலியுடன் அவன் கேட்க, தர்சுனுக்கும் அவனை பிடித்து போனது.
நோ..அங்கிள். எங்க ஆன்ட்டி தான் வினு. அதிம்மா அப்படி தான் கூப்பிடுவாங்க என்றான் தர்சன்.
“ஓ அப்படியா? லிட்டில் சார்ம். இங்க வாங்க” அவனை தூக்கி மடியில் அமர வைக்க, தர்சன் அவன் கையை ஆத்விக் தோளில் அழுத்த, “ஷ்ஆ” சத்தமிட்டான்.
“டேய், என்னாச்சு?” அழுது கொண்டே அதியா அவனிடம் வர, இதுக்கு தான் சொல்லலை.
“சொல்லலையா? தர்சு இறங்கு” அவனை இறக்கி விட்டு சட்டை பொத்தானில் அதியா கையை வைக்க, “ஒழுங்கா நகர்ந்திடு. உன் மேல கொல காண்டுல்ல இருக்கேன்”.
“கொல்லனும்ன்னா கொன்னுக்கோ” அவன் சட்டையை கழற்றி அவன் காயத்தை பார்த்து மேலும் அழுதாள் அதியா.
“இது எப்படி ஆச்சுப்பா?” உத்தமசீலன் கேட்க, ஆத்விக் ஆரியனை பார்த்துக் கொண்டே, “இன்றாவது அந்த பொறம்போக்கை போட்றலாம்ன்னு நினைச்சேன். மிஸ் ஆகிட்டான்” என்றான்.
“யார சொல்ற?” அதியா கேட்க, புதுசா ஒருத்தன் மாட்டுனான் அவனை சொன்னேன்.
“அதுக்குள்ள வொர்க் போகப் போறீயா?”
போகணும்..ஏற்கனே நடப்பில் இருக்கும் ஆபிஸ்ஸை வாங்கணும்ன்னு சொல்லி வச்சிருக்கேன். நாளை பார்க்க போகணும். பின் இரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துட்டு போகணும் அவன் சொல்ல, யோசனையில் இருந்தான் ஆரியன்.
“ஓய், என்ன வேடிக்கை பாக்குற? காஃபி கேட்டேன்” ஆத்விக் துருவினியிடம் கேட்டான்.
“எங்க வீட்டுக்கு வந்து என்னை ஆர்டர் பண்றீங்க சார்?”
“நீயே வந்தவுடன் கொடுத்திருக்கணும். நீ கொடுக்கலை. அதான் கேட்டேன். ஏன் அங்கிள் கேட்கக்கூடாதா?” ஆத்விக் உத்தமசீலனை அழைத்தான்.
“கேட்கலாமே!” என மகளை பார்த்தாள். அவள் இடுப்பில் கையை வைத்து அவரை முறைத்து பார்த்தாள்.
“நானும் இங்கே தான் தங்குவேன். நீ உன்னோட அப்பாவையும் என்னையும் அப்புறம் முறைச்சுக்கோ. இப்ப எடுத்துட்டு வா” என்றான். அதியா மாடிக்கு சென்றாள்.
“வாரேன்” அவனை முறைத்து கூறி விட்டு உள்ளே சென்று காஃபி கலக்கி வந்து அவனிடம் நீட்டினாள். அவளை பார்த்துக் கொண்டே வாங்கிய ஆத்விக் காஃபியை அருந்திக் கொண்டே ஆகர்ஷனாவை பார்த்தான். அவள் ஆரியனிடம் அமர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஷனா பேபி, நாளைக்கு நாம மட்டும் வெளிய போகலாமா?” கேட்டான் ஆத்விக்.
எழுந்து அவனிடம் ஓடி வந்து, “எங்க போறோம் மாமா?”
ம்ம்..சிந்தனையுடன்..நீயே சொல்லேன்..
ஆடையை மாற்றி விட்டு தலையை களைத்து சிறிய கருப்பு பொட்டுடன் கீழே வந்த அதியா, “என்னை விட்டு எங்க போகப் போறீங்கடா?” ஆத்விக் அருகே வந்து அமர்ந்தாள்.
நானும் என் பேபியும் மட்டும் தான் போவோம்.
“அப்ப நானு?” அதியா பாவமாக கேட்க, மத்தவங்கள மாதிரி உன்னை பாவமாக நான் பார்க்க மாட்டேன். அப்புறம் என்னாவது?
“மாமா, உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என அதியாவை பார்த்துக் கொண்டே “எங்க அக்கா குழந்தை” என சொல்லிய ஆத்விக் வாயை அழுத்தி, அவனுக்கு காஃபி வேண்டாமாம் அதியா அவனை இழுக்க, அவளை வேகமாக தள்ளி விட்டு, “மாமா இவ உங்க எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கா” அவன் சொன்னான்.
“மாமா” ஆகர்ஷனாவும் அழைக்க, அதியா அவன் வாயை பொத்தி இழுக்க, அருகே வந்த ஆரியன் அதியாவை இழுத்தான். அவள் ஆத்விக்கிடமிருந்து ஆரியனிடம் வந்தாள்.
“சொல்லுன்னு சொன்னேன்” அவளது தோள்ப்பட்டையை பிடித்து உலுக்கினான்.
அவளுக்கு இன்னும் திருமணமாகலை. அவள் காதலித்த அந்த கேப்மாரி..பற்றி ஏற்கனவே நாங்க சொன்னோம். இவள் தான் கேட்காமல் அவனுடன் சுத்திட்டு இருந்தா. கார்ட்ஸ் உடன் இருப்பதால் அவன் அதியிடம் எல்லை மீறவில்லை. இல்லை என்ன ஆகி இருக்கும்? லூசு..லூசு..திட்டினான் ஆத்விக்.
“ஆரு, ஐ அம் சாரி”. நான் வேண்டுமென்றே செய்யவில்லை. முதலில் நானாக ஏதும் சொல்லலை. என்னையும் ஆகுவையும் பார்க்கும் அனைவரும் அம்மா, பொண்ணுன்னு பேசுனாங்க. அதை விட என்னோட பாதுகாப்புக்கு என்று ஆகு தான்..என அதியா அழுது கொண்டே ஆகர்ஷனாவை பார்த்தாள்.
ஆமா, ஆரு நான் தான் அதிம்மாவை என்னோட அம்மான்னு எல்லாரிடமும் சொல்ல சொன்னேன். நிராப்பா..என சொல்லி..பேச்சை ஆகர்ஷனா நிறுத்த, ஆரியன் அதிர்ந்து அவளை பார்த்தான்.
என்னோட அம்மா ஆதிரா. அப்பா வருண். எனக்கு நல்லா தெரியும்.
ஆனால் எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து எனக்கு அம்மா அதிம்மா தான். நான் அவங்களுடன் தான் எப்போதும் இருப்பேன். எங்க பாதுகாவலர் செல்வி அக்கா சொல்வாங்க..
அதிம்மா பள்ளியில் படிக்கும் போதே நான் பிறந்து விட்டேன். ஆனால் எங்க ஊர்ல நான் பிறக்கலைன்னு சொன்னாங்க. அப்புறம் என சிந்தித்த ஆகர்ஷனா, எங்க வீட்டுக்கு வரும் போது நான் அதிம்மா கையில தான் இருந்தேன்னு சொன்னாங்க. பள்ளிக்கும் போகும் வரையும், சென்று வந்த பின்னும் அதிம்மா தான் என்னை வளர்த்தாங்க. அப்பா என்னை தொடவே விட மாட்டார். அம்மா அழுவாங்க..
ஆரு, அவங்க சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க. அப்பா அம்மாவை ஒரு முறை அடிச்சப்ப. அம்மா மயங்கீட்டாங்க. ரொம்ப நேரம் எழவே இல்லை. அடுத்து இரு நாட்களுக்கு பின் தான் அவங்களை பார்த்தேன். அம்மாவை பார்க்க பாவமா இருக்கும். அம்மா..அழுதாங்க. நான் அவங்களிடம் போனாலும் அம்மாவை தான் அடிப்பாங்க அவள் சொல்ல சொல்ல அதியா அழுதாள். ஆத்விக்கும் கண்கலங்க கேட்டான்.
அதனால நான் அம்மாவிடம் செல்ல மாட்டேன். அதிம்மா கூடவே தான் இருந்தேன். அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு அடிக்கடி நிராப்பா வந்தாரு. அதிம்மாவும் அவங்களும் என்னோடவே இருந்தாங்க. ஆனால் ஆரு..அவங்க என ஆகர்ஷனா அந்த ஹோட்டல் நினைவில் ஏங்கி ஏங்கி அழ, ஆரியனோ அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
ஆரு, அப்பா அம்மாவை கொன்னாங்க. நான் பார்த்தேன். அம்மா ரொம்ப கத்துனாங்க. அழுதாங்க. வீட்டுக்கு வெளிய நிறைய பேர் இருந்தாங்க யாருமே வரலை என அவள் மீண்டும் தேம்பி தேம்பி அழுதாள். அதியாவும் நிறுத்தாமல் அழ, ஆத்விக் அவள் தோளை பற்றினான்.
“அத்து” என எழுந்து அவனை அணைத்து, நீ எங்களோட இருந்துருக்கலாம். அக்கா ரொம்ப கஷ்டப்பட்டா. என்னால எதுவுமே செய்ய முடியலை. கடைசி எங்க கண்ணு முன்னாடி செத்து போயிட்டா அழுதாள்.
“நீங்க எங்க போனீங்க சார்?” துருவினி ஆத்விக்கிடம் கேட்க, ஆரியன், ஆத்விக்கை விட்டு ஆகர்ஷனாவும் அதியா நகர்ந்து அவனை பார்த்தனர். ஆத்விக் பேசாமல் கலங்கிய மனதுடன் அமர்ந்தான்.
“ஆமா, நான் சுயநலவாதி தான்” கத்தினான் ஆத்விக். “நீ வீட்ல தான இருந்த? ஏதாவது மாறுச்சா? இல்லையே! அக்காவை கொல்லும் அளவிற்கு பிரச்சனை போயிருக்கு. அழுறத தவிர நீ என்னத்த கிழிச்ச?”
நீ சொன்னது போல் நான் உன்னுடன் நம் வீட்டில் இருந்தாலும் உன்னை போல தான் இருந்திருப்பேன். இல்லை..இல்லை..இருக்க வச்சிருப்பாங்க. உன்னை போல் கட்டாயப்படுத்தி தான் படிக்க வச்சிருப்பாங்க. அவங்க கை பொம்மையா நான் இருக்க விரும்பலை.
எனக்கு மத்த பசங்களை போல ப்ரெண்ட்ஸ் வேணும். நினைக்கும் போது வெளிய போகணும். சுதந்திரம் வேணும். அங்க கிடைச்சிருக்குமா சொல்லு?
“அதுக்காக ஓடியா போவ?”
வேற என்ன செய்யணும்ன்னு நினைக்கிற? அந்த வயசுல அம்மா, அப்பாகிட்ட எதிர்த்து பேசி ஜெயிக்க முடியுமா? முடியவே முடியாது. தேவையில்லாமல் அடிவாங்கி உடம்பை புண்ணாக்கிக்க நான் விரும்பலை. என்னை அவங்க பிள்ளையே இல்லைன்னு ஒதுக்கீட்டாங்க.
அப்பா..தெரியும். என்னை நினைத்து கவலையுடன் அவரும் போய் சேர்ந்துட்டார். ஆனால் அம்மா..அவங்க மாறலயே இப்ப கூட அவங்க சொல்றதை மட்டும் கேட்டு நடக்கும் நம்ம கம்பெனி சேர் பர்சன் மகனை உனக்கு திருமணம் செய்து வைக்க பார்த்தாங்க. ஆனால் அவனுக கணக்கு வேற. அது புரியாம அவனுகள நம்பீட்டு இருக்காங்க.
அக்கா இருந்தா தெளிவா முடிவெடுப்பா. எளிதாக கண்டுபிடிச்சிருவா. இப்ப நான் வந்தது கம்பெனிக்காக இல்லை. உனக்கும் ஷனாவுக்காக தான். அதுக்காக கம்பெனியையும் விட மாட்டேன். அக்கா கஷ்டப்பட்டு வளர்த்திருக்கா. அதை அப்படியே என்னால விட முடியாது.
“நீ கம்பெனியை எடுத்து நடத்தப் போறீயா?” சினம் குறைந்து அதியா கேட்க, நடத்த விட்டு தான் அம்மா மறு வேலை பார்ப்பாங்க. நீ தெரிஞ்சுக்கணும் தான். ஆனால் இப்ப இல்லை. நேரம் வரட்டும்.
படிப்பு, தங்க, சாப்பிட, தூங்க அப்பொழுது என்ன செஞ்சீங்க? உத்தமசீலன் கேட்டார்.
நான் பள்ளியில் படிக்கும் போது இவங்க அடைச்சி வைக்கிறாங்கன்னு வீட்டை விட்டு ஓடிட்டேன். ஆனால் அதே பள்ளியில் தான் படித்தேன். அதே ஊரில் தான் இருந்தேன். என்னோட அம்மா என்னை கண்டுகொள்ளவில்லை. எனக்கு படிக்க பணம் நண்பன் வீட்டில் தான் பார்த்துக்கிட்டாங்க. நான் பள்ளி முடிந்து வந்து சின்னசின்ன வேலை செய்து பணம் சேர்த்தேன்.
பசிக்கும். சரியாக உணவில்லாமல் இருந்தேன் என அதியாவை பார்த்து, உணவில்லை சந்தோசமா தான் இருந்தேன். ஆனால் எஞ்ஜாய் பண்ணலை.
என்னை நானே மாத்திக்கிட்டேன். நிறைய பேச ஆரம்பித்தேன். தெரிஞ்சுக்க ஆரம்பித்தேன் என ஆரியனை பார்த்து விட்டு, பள்ளி கடைசி வருடம் படிக்கும் போது ஒருவரை சந்தித்தேன். அவர் போல இருக்கணும்ன்னு தோணுச்சு. அதான் இப்ப இந்த இடத்துல்ல இருக்கேன்.
முதல் முறையாக தைரியமாக நல்ல முடிவு எடுத்தன்னு சந்தோசப்பட்டேன் அதி. ஆனால் அதை ஒரே நாளில் இல்லைன்னு காட்டிட்ட வெறுமையுடன் அதியாவை பார்த்தான்.
“அடுத்து வீட்டுக்கு வரவேயில்லையா?” துருவினி கேட்க, அவளை பார்த்து விட்டு, வீட்டுக்கு வர மாட்டேன். பள்ளி முடிந்து மும்பை சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். லாயர் ஆனேன். பெயர் வாங்கினேன்..என் குடும்பம் இது தான்னு எனக்கு சொல்ல விருப்பமில்லை. கல்லூரி சேர்ந்தவுடன் அக்கா, அதியிடம் மட்டும் பேசுவேன். கல்லூரி படிக்கும் போது அக்கா திருமணம் பற்றி அறிந்து வந்தேன்.
“வந்தீயா? நான் பார்க்கலை” அதியா கேட்க, திருமணத்தை நிறுத்த வந்தேன்.
அதான் உன்னோட பாசமிகு பொறுக்கி மாமா இருக்கானே! அவனிடம் அம்மா என்னை பற்றி சொல்லி இருந்திருக்காங்க. உள்ளேவே அவனுக விடலை. திருட்டுத்தனமாக உள்ளே வந்தேன். அக்காவிடம் சொன்ன போது வேற வழியில்லைன்னு ஏத்துக்கிட்டதா சொன்னாங்க. அவங்க கல்யாணம் விருப்பமில்லாமல் தான் செஞ்சாங்க. கம்பெனிக்காக வாழ்க்கையை கொடுத்தாங்க. இப்ப உயிரையும் கொடுத்துட்டா என சுரம் இல்லாமல் சொன்னான்.
உன்னை பார்க்க எண்ணிய போது நீ சந்தோசமா இருந்த? அதனால கெடுக்க வேண்டாம்ன்னு போயிட்டேன். அப்புறம் ஷனா பிறந்த அன்று அங்கே சென்றேன். அக்காவை பார்க்க சென்ற போது அவளருகே யாருமில்லை. எனக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. மறைந்திருந்து அக்கா அறையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வருண் மட்டும் தனியாக உள்ளே சென்றான். அப்பொழுது தான் குழந்தை பிறந்திருக்கும் போல. நான் குழந்தையை கூட பார்க்கலை. என்னோட சந்தேகத்திற்கு ஏற்றார்போல அக்கா கத்தும் சத்தம் கேட்டு உள்ளே சென்றேன். அவன் குழந்தையை கொல்ல முயன்று கொண்டிருந்தான். அக்கா தடுத்துக் கொண்டிருந்தாள்.
அவனை பிடித்து வேகமாக தள்ளி விட, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவன் என்னை பலமாக தாக்க கீழே விழுந்துட்டேன். அவன் குழந்தையை தூக்கும் போது தான் பார்த்தேன். நம்ம அக்காவுக்கு ட்வின்ஸ் பேபிஸ்ன்னு..
“அத்து, என்ன சொல்ற?”
ம்ம் ஷனா மட்டுமல்ல.. இன்னோர் பேபியும் இருக்கு. ஆனால் அது பொண்ணா ஆணான்னு எனக்கு தெரில. அந்த குழந்தையையும் அவன் தூக்கி செல்ல, அக்கா அவனை இரும்புக் கம்பியால் அடித்து விட்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினாள். அவளால் வெகுதூரம் செல்ல முடியவில்லை. குழந்தைகளை காப்பாற்ற அவளுக்கு உதவவென கடவுள் அனுப்பியது போல் ஒருவரை பார்த்தாள். அவர் குழந்தை இறந்து விட்டது என்று வேதனையுடன் மனைவியிடம் எப்படி சொல்வது என அமர்ந்திருந்தவரிடம் ஒரு குழந்தையை கொடுத்து விட்டு, அவர் உதவியுடன் மற்றொரு குழந்தையை பாதுகாத்து விட்டு அவள் ஹாஸ்பிட்டல் சென்றாள்.
நான் எழுந்து பார்த்த போது குழந்தையில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த ஆதிராவை தான். ஊர் முழுக்க தேடியும் குழந்தை வருணுக்கு கிடைக்கவில்லை. அவன் சென்றதும் என்னை ஓரிடத்திற்கு சென்று குழந்தையை தூக்கி வரச் சொன்னாள். நான் அக்காவிடம் கொடுத்து விட்டு, அவளோட மறுகுழந்தையை பார்க்க செல்லும் போது, அக்கா என்னை நிறுத்தி, அந்த குழந்தை அவங்களிடமே நல்லவனாக வளரட்டும்ன்னு சொன்னா. அப்பொழுது தான் அவள் கொடுத்தது ஆண் வாரிசு என புரிந்தது.
எங்க குடும்பத்துல்ல ஆண்வாரிசு பிறந்தால் அவன் தான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கணும்ன்னு எண்ணுவாங்க. ஆனால் வருண் குடும்பத்தில் சொத்து மொத்தமும் அவன் பெயருக்கு உடனே மாத்திடுவாங்க. அவன் அப்பா சும்மா மேனேஜ் பண்ணனும். அவ்வளவு தான். அதனால் தான் ஷனாவை அவன் ஏதும் செய்யல என ஆத்விக் கூறினான்.
அப்ப பையன் ஒருத்தன் இருக்கானா? உத்தமசீலன் கேட்க, எஸ் அங்கிள்..அவனை தேடியும் தான் வந்திருக்கேன். அவனை வைத்து தான் இந்த வருண் குடும்பம் மொத்தத்தையும் அழிக்கணும்.
“என்னடா சொல்ற?” அதியா தலையை பிடித்தாள்.
நீ வெளிய போகாம இரு போதும். வேலைக்கு போறேன். ஷாப்பிங் போறேன்னு எண்ணாத. அப்படி கண்டிப்பாக போகணும்ன்னா என்னையோ இல்லை மாமாவையோ அழைச்சுக்கோ..
“இப்ப தான் அண்ணாவை பார்த்தீங்க? அதுக்குள்ள என்ன மாமான்னு கூப்பிடுறீங்க?”
உன்னோட அண்ணாவுக்கு நியாபக மறதி அதிகமா இருக்கு. எனக்கு அவரை பள்ளியில் படிக்கும் போதே தெரியும் என சொல்லி, “வெட்டியா பேசாம வேலையை பாரு” துருவினியிடம் கூறி விட்டு, அதி நீ வீட்ல இருந்து காலை வெளியே வைக்கக் கூடாது.
தர்சு பள்ளியில் வைத்து ஷனா பேபியை பார்த்துக்கோ. “பேபி, இப்ப வா. நாம போகலாம்” ஆத்விக் அவளை தூக்க, “மாமா..எனக்கு தம்பி இருக்கானா?”
“தம்பி இல்ல அண்ணன்” என்று தூக்கி ஆரியனை பார்த்து, “நல்லா யோசிச்சு பாருங்க மாமா” என நகர்ந்தான்.
“இதுக்கு மேல யாரையும் ஏமாத்தாத” ஆரியன் அமைதியாக செல்ல, ஆரு என அதியா அவன் கையை பிடிக்க, அதை தட்டி விட்டு, “கால் ஆரியன்” என சொல்லி சென்றான். மற்றவர்கள் அவனை அதிர்ந்து பார்க்க, ஆத்விக் புன்னகையுடன் ஆரியனை பார்த்துக் கொண்டே சென்றான்.